news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

வெள்ளி, 25 டிசம்பர், 2015

தி இந்து வில் வந்திருக்கும் கட்டுரை :


அடுத்த முதல்வர் சகாயம்?
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தின் குறியீடே சகாயத்தை நோக்கி நீளும் அழைப்புகள்
எப்படி யோசித்தாலும் இப்படியொரு நிகழ்வு நினைவில் இல்லை; பணியிலிருக்கும் ஒரு அதிகாரியை அரசியலுக்கு அழைக்க மக்கள் கூட்டம் திரண்டதும் அதைத் தடுக்க அரசு இயந்திரம் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முயன்றதும்!
சமூக வலைதளங்களில் வசிப்பவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை முதல்வர் பதவிக்கு முன்னி றுத்தி நடந்துகொண்டிருக்கும் கோஷங்களும் பிரச் சாரங்களும் புதிதாக இருக்காது. பல்லாயிரக்கணக் கானோர் இந்த முழக்கங்களுடன் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றனர். இணையத்தில் இருந்தவர்கள் இப்படி ஒரு கோரிக்கையோடு வீதியில் இறங்குவது தமிழகத்தில் அநேகமாக இதுவே முதல் முறை.
நேரடித் தேர்தல் அரசியலில் சகாயத்துக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது; அவருக்கு அப்படியான கனவுகள், திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ‘அரசியலில் சகாயம்’ எனும் வார்த்தைகளே அரசியல்வாதிகள், கட்சி அரசியல் எழுத்தாளர்கள் மத்தியில் அமிலத்தைப் போன்ற எரிச்சலை உருவாக்குவதை உணர முடிகிறது.
அதற்குள்ளேயே சிலர் கேட்கிறார்கள், “நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா? சமூக நீதி தொடர்பாக சகாயத்தின் கருத்து என்ன, சமய நல்லிணக்கத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், தனியார்மயம் குறித்த அவருடைய கருத்து யாது?”
அது சரி, தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எத்தனை பேருக்கு இதுபற்றியெல்லாம் என்ன கருத்து இருக்கிறது என்று நமக்குத் தெரியும்? மேலும், இதுவரை இதுபற்றியெல்லாம் பேசாததாலேயே ஒருவருக்கு எதுவுமே தெரியாது என்று முடிவெடுக்க நாம் யார்? எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் அரங்கில் புதிதாக ஒருவர் பெயர் உச்சரிக்கப்பட்டால் ஏன் இவ்வளவு பதற்றம்?
உமாசங்கர் ஞாபகங்கள்
என்னுடைய பள்ளி நாட்களில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக உமாசங்கர் ஐஏஎஸ் பணியாற்றிய நாட்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. இளமைத் துடிப்போடு பணிக்கு வந்திருந்த உமாசங்கர் கலக்கிக்கொண்டிருந்தார். புது சினிமா வந்தால் டிக்கெட்டைப் பல மடங்கு உயர்த்தி விற்பது அங்குள்ள திரையரங்குகளின் வழக்கம் (மன்னார்குடி திரையரங்குகளில் அப்போது முதல் வகுப்புக் கட்டணம் ரூ.10 என்று நினைவு). ஒருநாள் இரவுக் காட்சியின்போது ஒரு திரையரங்கில் உள்ளூர் விவசாயிபோல, லுங்கி-முண்டாசோடு உள்ளே புகுந்தார் உமாசங்கர். ரூ.10 டிக்கெட்டை ரூ.100-க்கு விற்ற திரையரங்க சிப்பந்தியை கவுன்ட்டரிலேயே வைத்து கையும் டிக்கெட்டுமாகப் பிடித்தார். இன்னொரு நாள் இப்படித்தான். பெட்ரோல் நிலையங்களுக்கு மாறுவேஷத்தில் போன அவர், அளவு குறைவாக பெட்ரோல் நிரப்பியவர்களைக் கையும் பெட்ரோல் போத்தலுமாகப் பிடித்தார். இப்படி ஆற்றில் அத்துமீறி மணல் அள்ளியவர்களைப் பிடித்துவிட்டார், ரேஷன் அரிசி கடத்தியவர்களைப் பிடித்துவிட்டார் என்று ஏதாவது சேதிகள் வந்துகொண்டே இருக்கும். மக்கள் சதா பேசிக்கொண்டே இருப்பார்கள்.
தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக திருவாரூர் மாவட்டத்தை மின் ஆளுகை மாவட்டமாகக் கொண்டு வந்தவர் உமாசங்கர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நிறையப் பேச வருவார். எவரும் அவரை எளிதில் சந்திக்க முடியும். எங்களூர் பக்கம் பள்ளி மாணவ-மாணவியர் பலர் வெகுநாட்களுக்கு, “உமா சங்கர்போல நானும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாவேன்” என்று சொல்வதை சக மாணவனாகப் பார்த்திருக்கிறேன்.
தன்னுடைய பணிநாட்களில் சுழன்றடிக்க அனுமதிக்கப்பட்ட காலத்தைவிடவும் காற்றில்லா பிரதேசத்தில் தனித்துவிடப்பட்ட காலமே உமாசங்கருக்கு அதிகம். திமுக, அதிமுக இரு ஆட்சிக் காலங்களிலும் அவர் கொடூரமாகப் பந்தாடப்பட்டார்; பல சமயங்களில் அவருடைய நேர்மையான, துணிச்சலான செயல்பாடே அவருக்கு எதிரியாக அமைந்தது என்று அதிகார வட்டாரங்களில் பேசிக்கொண்டார்கள். இன்றைக்கு ஒரு மதகுருபோல, “பாவத்தின் சம்பளம் மரணம்; கடவுளின் வருகை சமீபத்துவிட்டது” என்று பிரசங்கம் செய்துகொண்டிருக்கும் உமாசங்கரைக் கிண்டலடிக்கும் தலைமுறையினர் பலருக்கு, அந்த நாள் உமாசங்கரைத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஒரு உமாசங்கரின் மனஅழுத்தத்துக்குப் பின்னிருக்கும் இந்த அரசியல் சமூகத்தின் குற்றங்கள் மிகக் குரூரமானவை; ரகசியமானவை. பல நேரங்களில் நான் எனக்குள் கேள்வி எழுப்பிக்கொள்வது உண்டு: உமாசங்கர் நிலைமையில் நான் இருந்தால் என்னவாகியிருப்பேன்? பைத்தியம் பிடித்துத் தெருத் தெருவாகத் திரிந்துகொண்டிருக்கலாம். அவர் அந்தப் பரிதாபத்துக்கு ஆளாக நேராமல், அவர் நம்பும் - நாம் கிண்டலடிக்கும் கடவுள்தான் காப்பாற்றியிருக்க வேண்டும்!
அற வறட்சி
இந்த வெள்ளத்திலும் இடையறாது ஓடிக்கொண்டிருந்த வர்களில் ஒருவரான அரசு பஸ் ஓட்டுநர் ஜெயராமனைச் சமீபத்தில் பேட்டியெடுத்தேன். “நீங்கள் எப்படி இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்றபோது ஜெயராமன் சொன்னார். “சின்ன வயசுல எங்க ஊர்ல பஸ் ஓட்டுன ஒரு அண்ணனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரு ரொம்ப நல்லவரு. யாராவது உடம்புக்கு முடியலைன்னு சொன்னா, அவங்க நிறுத்தச் சொல்ற எடத்துல வண்டியை நிறுத்துவாரு. பாதி வழியில பெரியவங்க கை நீட்டினாலும் வண்டியை நிறுத்தி ஏத்திக்குவாரு. பஸ்ல நாங்க பள்ளிக்கூட பசங்க நின்னுக்கிட்டு வந்தோம்னா, கூப்பிட்டு அவருக்குப் பின்னாடி உக்காரச் சொல்லுவாரு. அந்த அண்ணனப் பாக்கும்போதெல்லாம் நம்மளும் இப்படி வண்டி ஓட்டணும்னு தோணிக்கிட்டே இருக்கும்; அப்படியே ஓடியாந்துட்டேன்.”
நாமெல்லாம் அப்படித்தானே வளர்ந்தோம்! ஒரு நல்ல ஆசிரியரைப் பார்த்து நாமும் ஆசிரியராக வேண்டும் என்று நினைப்பது, ஒரு நல்ல மருத்துவரைப் பார்த்து நாமும் நல்ல மருத்துவராக வேண்டும் என்று நினைப்பது, ஒரு நல்ல காவல் அதிகாரியைப் பார்த்து நாமும் காவல் அதிகாரியாக வேண்டும் என்று நினைப்பது! பல தலைமுறைகள் அப்படித்தானே உருவாயின? இன்றைய பிள்ளைகள் எடுத்த எடுப்பில் கண்ணுக்குத் தெரியாத லட்ச ரூபாய் வேலைகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றால், அதற்கான காரணங்களில் ஒன்று, நேர்மையான முன்னுதாரணங்களையும் விழுமியங்களைச் சுமந்த மனிதர்களையும் நாம் அழித்தொழித்ததும்கூட!
லோகநாதன் ஞாபகங்கள்
மொழிபெயர்ப்பாளரும் பேராசிரியருமான ஏ.வி.தனுஷ்கோடியின் தந்தை ஏ.வி.லோகநாதன். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். “அப்பா சொத்துன்னு எதுவும் எங்களுக்கு மிஞ்சலை. ரொம்ப சாதாரணப் பின்னணியிலதான் வாழ்ந்தோம். ஆனா, காமராஜரே அப்பாவை உயர்வா பேசுவார். ஒருமுறை காமராஜருக்கு மிக நெருக்கமான ஒருத்தர், தன் நெருக்கத்தைச் சொல்லி ஒரு காரியத்துக்காக அப்பாகிட்ட வந்திருக்கார். ‘விதிகளுக்குப் புறம்பா எதுவும் செய்ய மாட்டேன். நீங்கள் முதல்வர்கிட்டேயே வேணும்னாலும் சொல்லிக்குங்க’ என்று வழக்கம்போலச் சொல்லி அனுப்பியிருக்கார் அப்பா. விஷயம் காமராஜர் காதுக்குப் போயிருக்கு. ‘நான் நேர்மையானவன்னு சொல்லித்தானே என்னை இங்கெ உக்கார வெச்சிருக்கீங்க? எனக்குக் கீழ இருக்கவங்களையும் அப்படி நேர்மையானங்களாக இருக்க விட்டாத்தானே நிர்வாகம் நேர்மையா நடக்கும்? எனக்கு நெருக்கமானவங்களே அதைக் கெடுக்கலாமா? கலெக்டரு அப்படித்தான் இருப்பாரு. நீங்க செஞ்சதுதான் தப்பு!’ன்னு சொல்லி அந்த நண்பரைத் திருப்பி அனுப்பிச்சுட்டாராம் காமராஜர். நேர்மை தவறி எத்தனை வீடு வாங்கி வெச்சிட்டுப்போயிருந்தாலும், இந்தப் பெருமையை எங்களுக்கு எங்கப்பாவால கொடுத்திருக்க முடியாது” என்று அடிக்கடி சொல்வார் தனுஷ்கோடி.
ஏன் கூப்பிடுகிறார்கள்?
அன்றைக்கெல்லாம் யாரும் லோகநாதனை அரசியலுக்கு வா என்று கூப்பிட்டிருக்க மாட்டார்கள். களத்தில் காமராஜர்களும் கக்கன்களும் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிகளை அரசியலுக்குக் கூப்பிட மக்களுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது! இப்போது வீதிக்கு வந்து சகாயத்தைக் கூப்பிடுகிறார்கள் என்றால், என்ன அர்த்தம்? இன்றைய அரசியல் களத்தில் நிற்கும் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்; உங்களுடைய நம்பிக்கைத் துரோகங்களால் அவர்கள் வெறுத்துப்போயிருக்கிறார்கள் என்று அர்த்தம். அரசியலில் சூனியம் நிலைகொண்டிருக்கிறது என்று அர்த்தம்!
சகாயத்தின் மீதான கவர்ச்சி அல்ல; ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கான பசியே தமிழக மக்களை இப்போது வாட்டியெடுக்கிறது. முடிந்தால் அந்தப் பசியைப் போக்க மக்களுக்கு ஏற்ற செயல்திட்டங்களோடும் நல்ல தலைமையோடும் மக்களைச் சந்தியுங்கள்; இல்லையேல் வாயை மூடிக்கொள்ளுங்கள்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
சகாயத்தின் மீதான கவர்ச்சி அல்ல; ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கான பசியே தமிழக மக்களை இப்போது வாட்டியெடுக்கிறது.
m.tamil.thehindu.com

இப்படிம் கேள்விகள் எழுப்புவோருக்கு :


# எதிர்ப்பு‘, ‘நேர்மை‘ பற்றி மட்டுமே பேசுபவர்களிடம் என்ன
கருத்து இருக்கிறது?
தமிழகத்துக்கு என்று சில தனித்துவமான பிரச்னைகள்
இருக்கின்றன. இட ஒதுக்கீடு, தமிழ்
ஆட்சிமொழி, காவிரிப் பிரச்னை, முல்லைப்
பெரியாறு பிரச்னை, ஈழப்பிரச்னை ஆகியவை குறித்து
‘ஊழல் எதிர்ப்பு’ பேசுபவர்களின் கருத்துகள் என்ன?
#:

இது தொடக்கமே நீங்கள் நியாயமான கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் பதிலாக இந்த குழு கட்சியாய் முழுமை பெரும் போது நிச்சியம் இருக்கும்.. இப்போதைய இலக்கு சகாயம் அவர்களை தலைமை ஏற்க வைப்பது இது தனிநபர் துதியோ விருப்பமோ அல்ல. எங்கள் இலக்கு தலைமை நேர்மையாய், திறமையாய், துணிவாய், அடிமக்களின் உணர்வுகள் உணர்தவராய், அரசு யந்திரத்தை பற்றிய அறிவும் துணிவும் நிறைந்தவற்றை மட்டுமே இப்போதைக்கு நமக்கு அதிகம் செயல்பாடுகள் வழியாக தெரிந்தவர் சகாயம். மேல்தட்டு அரசு எந்திரம் ஊழல் குறைத்தால் அது கீழ் மட்டம் வரை படிப்படியாய் குறையும்.. இது குறையும் போது மக்களும் தானாக உணவர்கள் தோழர்களே ! இது மிக பெரிய விவாதம்.. கண்காணிப்பவன் நேர்மையாய் இருந்தால் அவரிடம் புகார்களும் தைரியமாய் மக்கள் கொடுக்க தயங்க மாட்டார்கள். தட்டி கேட்பவனை தடியால் அடிபதால் தான் இந்த நிலை நாட்டில்... இப்படி ஒருவரையும் வேண்டாம் இரு சொல்லி கொண்டே இருந்தால் இதே இரண்டு கட்சிகள் மாறி மாறி நம் குரல்வளையை நெருக்கி அதில் கோட்டை மகராஜா குடும்பங்களாய், நாம் அவர்களின் அடிமையாய் என்றும் தொடரும் ... அரசியல் செய்ய தெரியாது இப்போதே எப்படி சொல்லி விட முடியும் , அந்த அரசியல் தெரிந்திருந்ததால் தான் இவ்வளவு நாள் இந்த இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் துணிவும் இருக்கும் அவர் அதிகாரிமட்டுமே என்று சொல்லி கொண்டிருந்தால் மாற்றம் நிகழாது... பொறுங்கள் கட்சியாய் உருவானால் நிச்சியம் அதைத்து கேள்விகளுக்கும் கொள்கை வெளியிடப்படும்..

சிம்பு, அனுரூத்தை மட்டும் இப்படி விமர்சிப்பது ஏன் ?:   தப்புன்னு உணராத ஜென்மங்கள் ... அந்த புள்ள என்ன தப்பு பண்ணுச்சி... ஆவேசமாய் அம்மா.. என் உயிரை எடுத்துக்கோங்க அழுகாச்சி...
உஷா மேடம் பிள்ளைக்கு அறிவுரை சொல்லுங்க முதல்லையே மன்னிப்பு கேட்டிருந்தா, இல்லை போலீஸி கமிஷனரிடம் விளக்கம் சொல்லி இருக்கலாம்... தப்பி ஏன் ? ஓட்டம்..
இதுவரை அவர் நாட்டுக்கு சிறந்த பாடல்களைத்தான் கொடுத்து கொண்டிருந்தாரா அதையும் சிந்தியுங்கள்...

சிம்பு, அனுரூத்தை மட்டும் இப்படி விமர்சிப்பது ஏன் ? மற்றவர்கள் எல்லாம் இப்படி எழுதலையா ?..
எல்லாரையும் நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் அதே நிலைப்பாடுதான் வேறென்ன?
தினம் தினம் வன்புனச்சி சம்பவங்கள் கொடுமைகளும் நடக்குது ஆனால் நிருபையா விஷயம் மட்டுமே வெளியில் வந்தது.. மதத்தவங்களை ஏன் ? விட்டீர்கள் என்று கேட்பது நியாயம்தான்.. ஆனால் மீடியா பவர் அப்படி, மக்கள் ஒருசில நேரங்களில் வெடிக்கின்றனர் அது ஒட்டுமொத்த சகிப்பின் கலவையே ஒட்டுமொத்தமாய் மாட்டும் ஒரு சிலரிடமே காட்டமுடிகின்றது..
மக்கள் ஒட்டுமொத்தமா பொங்குறது காரணம் இதில் மட்டுமில்லை, இதிலும் கூட வாய்ப்பு கிடைத்தால் யார் முன்னெடுப்பது.. மக்களுக்கு வெறுப்பு மொத்தமாய் ஒருசில எக்டீம் நிலையில் தான்...
பெண்கள் மீது நேரடி தாக்குதல் இது .. பெண் அமைப்புகள் அணைத்து டிவி விளம்பரங்களுக்கும் பெண்கள் குழந்தைகள் சீரழிக்கப்படும் போதும் நீங்கள் இதே போல் போராடினால் நல்லது நாங்களும் துணை நிற்கின்றோம்... நீங்கள் அதையும் இந்த அளவுக்கு வீரியமாய் கொண்டு சென்றால் பெண்கள் மீதான தாக்குதல்கள் குறையும்...
( நம்ம பங்குக்கு சினிமா செய்திகள் போட்டாச்சி இல்லனா போராளின்னு ஒத்துக்மாட்டாங்களோ)
- கவிதை பூக்கள் பாலா

நாட்டைவிட்டு போறது தவிர வேறு வழி

நாட்டைவிட்டு போறது தவிர வேறு வழியில்லையின்னு கூவரவக யாரும் போகமாட்டேங்குறாங்களே ! ....
நாலுபேர அனுப்பி வையுங்கப்பா நாடாவது நிம்மதியா இருக்கடும்..
வெள்ள பாதிப்பை அழகா திசை திருப்பியாச்சி..
அய் டண்டனக்கா, டனக்கனக்கா... வாழ்க சனநாயகம்..

பாரதி கண்ட புதுமை பெண்களை உருவாக்குவோம் ...


  இன்று பெண்களுக்கு நாம் சொல்லவருவது அனைத்திலும் ஓடி ஒளிந்தால் தான் இந்த உலகம் நம்மை விரட்டுது.. எதையும் எதிர்க்கொள்ளும் மனம் வேண்டும் என்ற கொள்கையோடு இருக்கவேண்டும் பெண்கள் .. அப்படியோ வளர்க்கவும் முயசிக்கவேண்டும்.
காரணம் இன்றைய நவீன தொழிநுட்ப உலகில் நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. நம் அனுமதி இன்றியே அணைத்து இடங்களிலும் நாம் கண்காணிக்க படுகின்றோம் புகைப்படமாகவும் வீடியோ பதிவாகவும் பதிவாகிக்விடுகின்றது..
மேடைகளில் சாதிக்கும், பரிசு வாங்குபவர்களும், சமூக நற்பணியில் ஈடுபடுயோர்களும், அனைத்திற்கும் கேட்கும் ஆதாரங்களும் , கேளிக்கைகள் , ரோட்டில் எப்போது யார் படம்பிடித்தார் என்றே தெரியாது அது பத்திரிகையிலே, ஊடகங்களிலோ வரும் போதே நாம் தெரிந்து கொள்கின்றோம். இதில் ஆண் என்றால் கொண்டாடுவதும், பெண் என்றால் தவிர்க்க சொல்வது சரியா ?
பயந்து ஒதுங்கும் பிள்ளைகளையே இந்த சமூகம் துரத்துகின்றது.. . இன்றைய தேவை எதையும் எதிர்க்கொள்ளும் தைரியம்.. யாரை இன்று விட்டு வைத்திருக்கு இந்த உலகம்.. சில நண்பர்கள், உறவினர்களே சுற்றி இருக்கும் சுற்றமும் கூட இன்று சரி இல்லை. அதற்காய் ஓடி ஒளிந்துக்கொள்ளமுடியுமா? இல்லை வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா ? ..
ஒருவேளை அவர் பொதுமேடைகள், பொதுவாழ்கையில் பரிச்சியமானவர் என்றால் எப்படி தவிர்க்க முடியும். விமர்சனங்களை தாண்டி தான் இன்று சாதிக்கும் நிலையில் உலகம், சமூக நிலை. அதற்கான மனநிலையோடு பெண்களை வளர்தெடுக்க வேண்டாமா? மாற்றாக ஓடி ஒளிந்துகொள் என்று வளர்தோம் என்றால் என்ன நடக்கும். பெண்கள் மீதான வன்முறைகள் வசை பேச்சுக்கள், பெண்ணடிமைத்தனம், தைரியமற்று யார் பின்னாடி ஒளிந்துக்கொள்ள தானே தோன்றும். மற்றும் இந்த நிலையும் தானே தொடரும் ...
என் கவிதைகளும் அப்படியே தான் இருக்கும்.. இனி பெண்கள் துணிந்து நின்றால் ஒழிய இதற்கு விடிவு இல்லை.. பெண்கள் கொஞ்சம் தமாதமாகவோ, ஏன்? பணி உயர்வு, அழகாக உடை உடுத்தினாலே, கொஞ்சம் வாய் பேசினாலே கூட தவறாகவும் எண்ணத்தில் சித்தரித்து நோக்கம் கற்பிக்கும் உலகம்..
இன்று எண்ணங்கள் மாறி இருக்கிறது, மாறவும் வேண்டும், தன்னை பற்றிய விமர்சனம் வரும் போது, தான் தெளிவாகவும், எதிர்த்து தைரியமாக பயணிக்கும் மனோ திடமும் இருக்க வேண்டும்.. அந்த குணம் வளர்ந்தால் தான் பெண்கள் தலைமை பொறுப்புக்கும், முன்னேற்றத்திற்கும் தைரியமாய் வர முடியும்..
இனி நம் வேலையே பெண்களிடம் தன்னம்பிக்கையும், தைரியத்தையும் வளர்தெடுப்பதே, ஓடி ஒளிவதை அல்ல தன்னை காத்துக்கொள்ளும் தைரியம் வளர்த்தெடுப்போம்.. பாரதி கண்ட புதுமை பெண்களை உருவாக்குவோம் ...... வன்கொடுமைகளை ஒழிக்க சமூகத்தை நல்ல விதமாய் சமத்துவத்தோடு கூடியதாய் படைக்க முயற்சிப்போம்..
ஆண் பெண் பேதத்தை தவிர்ப்போம் ..
வாழ்க பாரதம்...
- கவிதை பூக்கள் பாலா

குடிசைவாசிகளை மட்டுமே குறிவைக்கும் ஆளும் அரசுகளுக்கு :

தந்தி பாண்டே நீங்க எப்போது ஆளும்கட்சிக்கு ஜால்ரா தட்ட ஆரம்பிச்சீங்க.. என்ன நிர்பந்தம்....
குடிசைவாசிகளை மட்டுமே குறிவைக்கும் ஆளும் அரசுகளுக்கு கார்பரேட்டுகளை இடம் மாற்ற சொல்லாதது ஏன் ?
அடிமட்ட மக்களின் அவர்கள் வாழும் வாழ்வாதாரம் அருகாமையில் நீங்கள் மாற்று இடம் தாருங்கள்.. விடுத்து அவர்களை இடம்மாற்றம் என்றபெயரில் 40, 5௦ கிலோமீட்டர் தள்ளும்போது அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆகும்...
ஆக்கிரமிப்பு அகற்றியே தீருவோம் என்று உண்மையான நிலைபாடாக இருந்தால் முதலில் பெரிய பெரிய கார்பரேட்டுகளை அகற்றுங்கள்.. அவர்கள் அகன்றால் சாமன்னியன் தானாக மனம் மாறுவான் வாழ்வாதரதோடு கூடிய இடம்மாற்று செய்யுங்க


ள் அனைவரும் உங்களுக்கு துணை இருப்பார்கள்.....

அறிவிருக்கா உனக்கு ?


அரசியல் வாதிகள் குறிப்பாய் ஜெயலலிதாவை பார்த்து கேட்க முடியாதவர்கள் வெட்கி தலைகுனியுங்கள்... தன் மனிதநேயத்தால் இறங்கிவந்து களத்தில் இறங்கிய இளையராஜாவை நீங்கள் பாராட்டவேண்டாம், தொல்லைகொடுத்து, மன உளைச்சல் கொடுக்காதீர்கள்.... அவர் இசை மேடைகளிலே கூட கோவப்படுபவர் ... அவர் சமூகத்தை பார்த்து கோவபடதான் செய்வார், வேஷம் போடதெரியாதவர். காரணம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை அரசியல் ஆதாயம் இல்லை... திறமை, தன்னம்பிக்கை உள்ளவர்களை கையாளும் விதம் தெரிந்திருக்கவேண்டும்... எல்லோரும் சகிப்புத்தன்மையோடு இருக்கவேண்டும் என்றே எதிர்ப்பார்ப்பது என்னை பொறுத்தவரை தவறே.... ஆராதிக்கவேண்டியவர்ககள் இக்கட்டில் மாட்டிவிட்டு விவாதிக்க விமர்சிக்க நினைப்பது அவர்களை சமூகத்தில் பங்கேற்க விடாமல் முடக்கிவைக்க முயற்சிக்கும் முயற்சியாய் நினைக்க தோன்றுகிறது...பத்திரிகை நண்பர்கள் இதோடு இந்த நிகழ்வை விடுவதுதான் சரியாக் இருக்கும்... நாம் நினைத்தால் இந்த சமூகத்தை மாற்றமுடியும் முயற்சிக்கிறோமா ? கண்முன் நடக்கும் அநீதிகளை எதிர்த்து பேராடியதுண்டா ? எத்தனை எத்தனை சட்டவிரோத நிகழ்வுகள் கண்டும் காணமல். மனசாட்சியோடுதான் அணைத்து பத்திரிகையாளரும் நடந்துக் கொள்கின்றனரா?...