news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

வியாழன், 21 மார்ச், 2013

தீயின் பிள்ளைகள் நாங்கள்...!

தீயின் பிள்ளைகள் நாங்கள்...!
வெடித்துச் சிதறும் ஒவ்வொரு கங்கிலும்...
ஓராயிரம் தீச்சுவாளைகள் உருவாகும்...!!

தகப்பனுக்கு முன்பு நிர்வாணமாக பெண்பிள்ளைகளும்...
பெற்ற பிள்ளைகளுக்கு முன்பு நிர்வாணமாக தாய்களையும்...
நடந்து வந்து சரணடையச் சொன்ன இலங்கை நட்பு நாடா?

ஏய் காங்கிரஸ்-ஸே ஒன்றைப்புரிந்து கொள்... உலகை உலுக்கிய ஹிட்லரையும் இந்த காலம் கெட்டவன் என்று தான் கிரகித்து வைத்து இருக்கின்றது.

மானுட வரலாற்றிலே மண்ணிக்க இயலாத தவறிழைக்க ராசபக்சேவுக்கு உதவிய நீங்கள் வீழும் காலம் விரைவில் வரும்....!

நெஞ்சை உறைய வைக்கும் இது போன்ற படங்களைப்பார்தபின்னும் தி.மு.க வின் தலைமைக்கு எதுவும் வரவேண்டாம்... கோகுல் போன்ற இளைஞர்களுக்குமா எதுவும் வரவில்லை...

அய்யகோ... பேருந்துப்பயணத்தின் போது பாதிக்கப்படுவர்களுக்காககூட நெஞ்சு கனத்து கண்ணீர் வடிக்கும் தமிழா... நம் ரத்த சொந்தங்களுக்கு ஈழத்தில் நடத்ததைப் பார்த்த பின்புமா அமைதி. காக்கின்றாய்?

காங்கிரஸ்ஸையும் அதன் கூட்டணிகளையும் தமிழகத்தில் வேரருப்போம்...!

செவ்வாய், 5 மார்ச், 2013

ஆண்கள் ஏன் அடிக்கடி "ஐ லவ் யூ" சொல்லமாட்ராங்க

* ஆண்களுக்கு பெண்களைப் போன்று எதையும் சரியாக வெளிப்படுத்த தெரியாது. உண்மையில் சில ஆண்களுக்கு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது. ஆனால் பெண்கள் கேட்காமலேயே நிறைய வெளிப்படுத்துவதால், அவர்கள் ஆண்களிடம் நிறைய எதிர்பார்ப்பதோடு, அவை நடக்கவில்லை என்றதும், உடனே கோபப்பட்டு சண்டைப் போடுகிறார்கள். * ஆண்களைப் பொறுத்த வரை, அடிக்கடி "ஐ லவ் யூ" என்று சொன்னால் மட்டும் தான், காதல் உள்ளதாக அர்த்தமா என்று எண்ணுவார்கள். ஆண்களைப் பொறுத்த வரை, ஒரு முறை அந்த மூன்று வார்த்தையை சொன்னாலும், இதயத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே தான் அவர்கள் அடிக்கடி சொல்வதில்லை. * அடிக்கடி "ஐ லவ் யூ" என்று சொல்வது எரிச்சலை உண்டாக்கும். உதாரணமாக, ஆண்கள் குடும்பத்தை நல்லப்படியாக பார்த்துக் கொள்ளவும், எதிர்காலம் நன்கு சந்தோஷமாக அமையவும் வேலைக்கு செல்கிறார்கள். அவ்வாறு வேலை செய்யும் இடத்தில் அளவுக்கு அதிகமாக வேலைப் பளுவினால், டென்சனாக இருக்கும் போது, எப்படி "ஐ லவ் யூ" என்று சொல்லத் தோன்றும். அவ்வாறு சொன்னாலும், அது வெறும் வார்த்தையாகத் தான் இருக்கும். எனவே இதனைப் புரிந்து கொண்டு, பெண்கள் நடப்பது, உறவை மேலும் வலுப்படுத்தும். * ஒருவேளை உங்கள் துணை அடிக்கடி, இந்த மூன்று வார்த்தையை சொல்லாவிட்டால், அவர்களுக்கு உணர்ச்சியை சரியாக வெளிப்படுத்த தெரியவில்லை என்று அர்த்தம். மேலும் அவர்கள் காதலை சொன்னால், "அத்திப் பூத்தாற் போல்" எப்போதாவது ஒரு முறை மட்டும் தான், மனிதல் இருக்கும் அனைத்து உணர்ச்சிகளும் சரியாக வெளிப்படும் படி சொல்வார்கள். * சில ஆண்களுக்கு ஈகோ அதிகம் இருக்கும். அதிலும் அடிக்கடி "ஐ லவ் யூ" சொன்னால், எங்கு பெண்கள் தம்மை இழிவாக நினைப்பார்களோ என்று நினைத்து, தன்னை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு, சொல்லாமல் மறுப்பார்கள். அத்தகைய ஈகோவானது, அவர்களது நடவடிக்கைகளிலேயே நன்கு தெரியும். பெரும்பாலான காதல், இந்த ஒரு காரணத்திற்கு தான் பிரிகிறது. எனவே காதலில் ஈகோ இல்லாமல் இருந்தால், காதலானது நீண்ட நாட்கள் நிலைக்கும். இவையே ஆண்கள் அடிக்கடி "ஐ லவ் யூ" என்று சொல்லாமல் இருப்பதற்கான காரணம். என்ன நண்பர்களே! ஒப்புக் கொள்கிறீர்களா?

இதில் பெண்களே முதலிடத்தில் இருப்பது வியப்பான ஒன்று

அழகான பெண் எதிரே வந்தால் அவர்களை ஆண்கள் பார்ப்பது சகஜம்தான். அதேபோலத்தான் பெண்களும். ஆனால் தங்களது ஜோடிகளுடன் போகும்போது எதிர்பாலினர் மீது பார்வையை ஓட விடுவதில் பெண்கள்தான் லீடிங்கில் இருக்கிறார்களாம்.
இதை ஒரு ஆய்வு நடத்திக் கண்டுபிடித்துள்ளனர் – வேற யாரு, வழக்கம் போல வெளிநாட்டுக்காரங்கதான். சுற்றுலாத் தலங்களுக்கு ஜாலியாக டிரிப் வந்த ஜோடிகளைப் பிடித்து கருத்துக் கேட்டுள்ளனர். அதில் 56 சதவீத ஆண்கள், தங்களை கிராஸ் செய்த, தங்கள் கண்ணில் பட்ட அழகான பெண்களை சைட் அடித்ததாக ஒத்துக் கொண்டனராம்.
அதேசமயம், கிட்டத்தட்ட 74 சதவீத பெண்கள், ஆமா, சைட் அடிச்சேன் என்று ஒத்துக் கொண்டார்களாம்.
இப்படி சைட் அடித்ததாக ஒத்துக் கொண்ட பெண்களில் 77 சதவீத பெண்கள், தாங்கள் அடுத்த ஆணை சைட் அடித்ததை கணவர் பார்த்து விடாதவாறு மறைக்க முயற்சி செய்ததாக கூறினராம். இவர்கள் இதற்காக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ‘பாதுகாப்பாக’ சைட் அடித்தார்களாம். அதேபோல கணவர் ஏதாவது பொருள் வாங்க ‘அந்தாண்டை’ நகர்ந்ததும், இவர்கள் ‘இந்தாண்டை’ சைட் அடித்தார்களாம்.
சில பெண்கள், தங்களை விட அழகாக இருந்த பெண்கள் மீது பார்வையை ஓட விட்டனராம். நம்ம ஆள் அவளைப் பார்த்தாரா என்றும் வேவு பார்த்துக் கொண்டார்களாம்.
இந்த கருத்துக் கணிப்பு குறித்து அதை நடத்தி நிறுவனத்தின் இணை உரிமையாளர் கிறிஸ் கிளார்க்சன் கூறுகையில், ஆணோ, பெண்ணோ, வெளியிடத்திற்குச் ஜோடியாக போகும்போது இருவருமே எதிர்பாலினரைப் பார்க்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் இதில் பெண்களே முதலிடத்தில் இருப்பது வியப்பான ஒன்று என்றார்.
இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது. இரு பாலினருக்கும் உணர்வுகள் ஒன்றுதானே…!