news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

செவ்வாய், 31 மே, 2011

ஏமாற்ற நினைப்பது வெட்ககேடு:


கனிமொழி ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு :

வாசகர் கருத்துக்கள் :

நீதிமன்றத்தை ஏமாற்ற நினைப்பது வெட்ககேடு , ஜெயிலில் இருப்பதுதான் இவர்களுக்கு நல்லது.

ஆந்திராவிலிருந்துகுச்சிப்புடி நடனமாடிக்கொண்டு, பிழைப்புத் தேடிநாகபட்டினத்துக்கு வந்தகுடுகுடுப்பைக்கூட்டத்தைச் சேர்ந்ததெலுங்கு மொழி பேசும்முத்துவேல், அஞ்சுகம்தம்பதிகளுக்குநாகபட்டினத்தில்திருக்குவளை என்றஊரில் 1924 ஜூன்மூன்றாந் திகதி பிறந்ததட்ஷணாமூர்த்தி பின்னர்தன் பெயரை கருணாநிதிஎன மாற்றிக் கொண்டதைமறக்க முடியுமா? முதன்முறையாகமுத்துவேல் கருணாநிதிமுதல்வர் பதவியில்அமர்ந்திருந்த போது, கருணாநிதிக்குபெருமளவில் உதவிசெய்தஎன்.கே.டி.சுபிரமணியம்வெளியிட்ட ஜவகரிஸ்ட்பத்திரிகையில்சென்னையில் உள்ளமருத்துவமனை ஒன்றில்ஜனவரி முதலாந்திகதி ராசாத்தி என்கிறதர்மாம்பாளுக்கு பிறந்தகனிமொழி என்ற பெண்குழந்தையின் பிறப்புபதிவேட்டில் அந்த பெண்குழந்தை கனிமொழியின்தந்தையின் பெயர்மு.கருணாநிதி என்றுகுறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு சிறியசெய்தியைவெளியிட்டிருந்ததைமறக்க முடியுமா? ராசாத்திஎன்றழைக்கப்படும்தர்மாம்பாள் யார் என்றேதனக்கு தெரியாது; தனக்குஅப்படி எந்த பெண்குழந்தையும் இல்லை; என்று முதல்வர்முத்துவேல் கருணாநிதிஅறிவித்தார்.

ஒரு அதிகாரி நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினான் ! இதனைக் கேள்விப் பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் பூந்து சோதனை பண்ணிக் கொண்டிருக்கும் போது அதிகாரி நூறு ரூபாயினை கையிலெடுத்து வாங்கியவனிடம் திருப்பிக் கொடுத்து மதியச் சாப்பாட்டிற்கு கடன் வாங்கியதாகவும் திரும்ப கடனை தீர்ப்பதாகவும் சொல்லிக் கொண்டு நின்றால் போலீஸ் என்ன செய்வான் ? நான் போலீசாக இருந்தால் பிடதியில் நாலு சாத்து சாத்தி கைகளில் விலங்கிட்டு போலீஸ் வேனில் தூக்கி விட்டெறிவேன் ! இவள் கருணாநிதி மகள் என்பதால் விசாரணை அமைப்புக்களை மேன்மையான நீதிமன்றத்தை படித்த இந் நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறாள் ! இவளுக்கு சிபிஐ விசாரணை சரிப்பட்டு வராது ! தமிழ்நாடு போலீசிடம் ஒப்படையுங்கள் ! 214 கோடிகளை மட்டும் கிடையாது தேசம் பறிகொடுத்த 176000000000000 லட்சம் கோடிகளையும் இவளிடமிருந்து வெளியே எடுக்க வைக்கிறோம் ! கம்ப்யூட்டர் நிறுவனம் கருவாட்டுக் கடைக்கு பணம் பரிமாற்றம் செய்ததாம் அதன் பின் கருவாட்டுக் கடை தொலைக் காட்சி நிறுவனத்திற்கு கடன் கொடுத்ததாம் ! என்ன கதை சொல்லுறா ?...இதை எப்படித்தான் படித்தவர்கள் காது கொடுத்து கேட்கிறார்களோ ?.... கருணாநிதி

ஆஹ்ஹா!!நல்லாபோத்திகிட்டுஉக்கந்திருக்காங்களே!!அடுத்துமுக்காடுதான்போடவேண்டும்.தீர்ப்பைசீக்கிரம் சொல்லிஅவர்கள் பீ பீ குறையுங்கள் கனம்கோர்ட்டார் அவர்களே!!!

ராஜாவை கைது செய்தவுடன், இனாமாக வாங்கிய 214C - க்கு, போலியாக கடன் வாங்கிய மாதிரி ஆவணங்கள்....... ஜகதல கில்லாடிகலப்பா.... வெட்கமே இல்லையா? கொஞ்சம் கூட மனசு உறுத்தல் இல்லை?....மானங்கெட்ட ஜென்மங்கள்.


இதெல்லாம் மாதிரிக்கு தான் இன்னும் நிறைய இருக்கு என்னத திட்டினாலும் அறிவிருக்க ( நூறு ருபாய் திருடுறவன் முகத்தை மறைக்கிறான் மானத்திற்கு பயந்து . இவங்க வெக்கமே இல்லமா பேட்டி வேற குடுக்குதுங்க என்ன கொடுமை சார் ........ ( அட அதொல்லாம் இருந்தா நானக்

செய்தி :
புது தில்லி, மே 30: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் இருவரும் ஏற்கெனவே தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மே 20-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை அடுத்து, இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி இருவர் சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 24-ம் தேதி நீதிபதி அஜித் பரிகோகே முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சிபிஐ பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை மீண்டும் மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.அதன்படி ஜாமீன் குறித்த மனு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அல்தாப் அகமது ஆஜரானார். "கனிமொழியும் சரத்குமாரும் விசாரணையின்போது முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்கள். கலைஞர் டி.வி.க்கு கடனாகத்தான் தொகை பெறப்பட்டது. அதற்கான ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை. எனவே நீதிமன்றக் காவலில் இருக்கவேண்டிய அவசியமில்லை" என்று அல்தாப் அகமது வாதாடினார்."பணப் பரிமாற்றத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளீர்கள். ஆனால் அவை அனைத்தும் ஜெராக்ஸ் பிரதிகளாக உள்ளன. அசல் ஆவணங்கள் எங்கே?" என்று நீதிபதி கேட்டார்.அதற்கு பதிலளித்த அல்தாப் அகமது, அசல் ஆவணங்களை சரிபார்த்து வருகிறோம் என்றும் விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உள்ளோம் என்றும் நீதிபதியிடம் கூறினார்.அதன் பிறகு சிபிஐ சார்பில் யு.யு.லலித் ஆஜரானார். நீதிபதி முன் அவர் வைத்த வாதம் வருமாறு:"டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து குசேகாவ்ன், சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணப் பரிமாற்றம் நடந்தது உண்மை. இதற்கு ஷாகித் பல்வாவும், வினோத் கோயங்காவும் உதவியாக இருந்திருக்கின்றனர். கைமாறிய பணம் லஞ்சப் பணம்தான். இந்தப் பணம் கொடுக்கப்பட்டபோது, அதற்கான ஆவணங்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட பிறகுதான், இந்தத் தொகையை திரும்பச் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்த பிறகுதான் கலைஞர் டிவி சார்பில் அவசர அவசரமாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தொகையை கடனாகப் பெற்றதாகவும் அதைத் திரும்ப செலுத்தியதாகவும் ஆவணங்களை அவர்கள் தயாரித்திருக்கின்றனர். கலைஞர் டி.வி.யில் கனிமொழியும், சரத்குமாரும் தலா 20 சதவீதப் பங்குகளை கைவசம் வைத்துள்ளனர். இந்த பணப் பரிமாற்றத்தில் இருவருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்களின் கட்டுப்பாட்டில்தான் கலைஞர் டி.வி. இயங்கி வருகிறது. அவர்களது ஜாமீன் மனுக்களை தில்லி சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது. எனவே அந்த உத்தரவை உறுதி செய்து, அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று லலித் கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜித் பரிகோகே, ஜாமீன் மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.கனிமொழியின் தாயார் ராஜாத்தி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக முன்னாள் அமைச்சர் பூங்கோதை, திமுக எம்.பி.க்கள் வசந்தி ஸ்டான்லி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

ஞாயிறு, 29 மே, 2011

அழகாகவும். , இளமையாகவும் காட்டி கொள்ள


பெரும்பாலும் பெண்ணோ ஆணோ வயது ஏற ஏற தான் தான் அழகாக இருக்க அதிகம் நேரம் செலவிடுகின்றனர் . அதற்கு இயற்கையும் ஒரு காரணகாக அமைத்து விடுகிறது . நரை , தோல் சுருக்கம் உடல் தளர்ச்சி , உடல் மாற்றம் போன்ற காரணங்கள் முக்கிய பங்குகாக அமையும் . இதனாலேயே தன்னை அழகாகவும். , இளமையாகவும் காட்டி கொள்ள முயற்சிக்கின்றனர் . ஒரு சிலர் அதில் வெற்றியும் பெறுகின்றனர் . விசயத்துக்கு வருவோம் .
குறிப்பாக பெண்களுக்கே இந்த பதிவு அதிகம் பயன்படும் . வாழ்க்கையில் செக்ஸ் என்பதும் ஒரு அங்கமாகி விடுகின்றது பருவமடைந்த அனைத்து
ஆண்களும் , பெண்களும் . இதை எப்படி வயது கூடும் போது பராமரித்து சந்தோசமாக வாழ்வது என்பது முக்கியம் ....

பெண்களின் உடல்நிலையில் பருவ வயதை எட்டியதில் இருந்து நாற்பது வயதுவரை எந்த பிரச்சினையும் இன்றி சகஜமாக தெளிந்த நீரோடை போல போய்க்கொண்டிருக்கும். திடீரென நாற்பது வயதுக்கு மேல், பெண்ணின் கருப்பையில் செயல்பாடு குறைந்து, மாதவிடாய் முறையற்றதாகி, கடைசியாக ஐம்பது வயதில் மாத விடாய் முற்றிலும் நின்று விடும். இதற்கு மெனோபாஸ் என்று பெயர். ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இது தேவையில்லாத பயம்.

குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவம் போல இதுவும் ஒரு பருவம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் நம்மில் பலருக்கு மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது.... ஏன் மாதவிடாய் நிற்கிறது? என்ற விவரங்கள் பெரும்பாலான பெண்களுக்குத் தெரிவதில்லை.

இரண்டுவகைப் பிரச்சினைகள்

மெனோபாஸ் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் இரண்டு வித பிரச்னைகள் ஏற்படும். மனரீதியாக, தாம்பத்யத்தின் மேல் ஒரு வெறுப்பு ஏற்படும். உடல் உறவின் மேல் அச்சம் கொண்டவர்கள் மெனோபாஸ் பருவத்தை தங்களின் விடுதலை காலமாக நினைக்கத் தொடங்குகின்றனர். இதையே சாக்காக வைத்து கணவரிடம் இருந்து விலகத் தொடங்குகின்றனர். இவர்களுக்கு தக்க மருத்துவ ஆலோசனை மூலம் சந்தோஷத்தை உணரச் செய்ய முடியும்.

இன்னொரு விதத்தினர், மனதில் ஆர்வமிருந்தாலும் பல வருடங்களாகி விட்டதால் ஒரே மாதிரியான விதத்தில் தாம்பத்தியம் இருப்பதால் போரடித்துப் போய் சுவாரஸ்யம் காட்ட மாட்டார்கள். இத்தகையவர்களை வருடம் ஒருமுறை வெளியூருக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துவதன் மூலம் கடைசி வரைக்கும் சந்தோஷமான தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடச் செய்யலாம்.

வறட்சியினால் பாதிப்பு

மெனோபாஸ் காரணமாக பெண்ணுறுப்பு வறண்டு போவதால் தாம்பத்தியத்தின்போது திடீரென்று பயங்கர வலி ஏற்படும். இதனால் எழும் அச்ச உணர்வு, உறவின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். கை வலி, கால் வலி என்றால் மருத்துவரிடம் போகிறவர்கள் இதற்கும் மருத்துவரிடம் சென்று தக்க ஆலோசனை பெறுவதில் தவறில்லை.

ஆர்காஸ்மிக் டிஸ்ஃபங்ஷன் எனப்படும் பெண் உச்ச நிலையை அடையாதிருக்கும் பிரச்னை. இது பொதுவாக நிறையப் பெண்களுக்கு ஏற்படுவதுதான். இதனை தவிர்க்க வறட்சியினால் சோர்வுற்றிருக்கும் பெண்ணுறுப்புப் பகுதியில் செயற்கையான வழவழப்புத் தன்மையைத் தருகிற ஜெல் தடவ வேண்டும். சுயமருத்துவம் செய்ய வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

வலிகளால் ஆர்வமின்மை

உடல் வலி, மூட்டு வலி என்று சிரமப்படுகிறவர்களுக்கு மனதில்ஆர்வம் இருந்தாலும் வலிகளால் உடலில் ஆர்வம் இருக்காது. இப்படியே ஈடுபடாமல் விடும்போது பெண்ணுறுப்பு சுருங்கிப் போகும். பிறகு, நினைத்தால்கூட தாம்பத்தியத்தில் ஈடுபடவே முடியாமல் போகலாம். இந்த நிலைவரை விடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

தாம்பத்தியத்திற்கு முற்றுப்புள்ளியா?

மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர, தாம்பத்தியத்திற்கானதல்ல. மெனோபாஸக்குப் பிறகு முன்னைவிடவும் அதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும் உண்டு.

நடைப் பயிற்சி, முறையான யோகா, சரிவிகித உணவு சாப்பிடுவதுபோன்றவை உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும். தவிர எந்த வலியையும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக உடலுக்குமுக்கியத்துவம் தருவது, முழு உடல் பரிசோதனைகளைச் செய்வது என கடைசி வரையிலும் இயல்பாக இருப்பதே சந்தோஷமான தாம்பத்திற்கான வழிமுறைகள் என்கின்றனர் மருத்துவர்கள்.

டிஸ்கி :
எல்லாம் சாரி இதுக்கும் நடிகைகளுக்கும் என்ன சம்பத்தமுன்னு கேட்டீங்கன்னா
ஹி... ஹி ... ஹி .. அவங்க அந்த வயசு தானே அதான் "ஞாபக படுத்தலாமேன்னு . இந்த லிஸ்ட்ல எதுக்கு அனுஷ்கா போடவா முதல்ல போட்டேன்னு கேட்கும் ரசிக மக்கா ! அவங்களும் அந்த வயருக்கு வருவாங்க அப்ப அவங்களுக்கு உதவியா இருக்குமே ! அப்படின்னு ஒரு நல்ல மனசாலே தான் .......... மத்த படி நீங்க நினைக்கிற மாதிரி எந்த உள்குத்தும் இல்லப்பா ......... பதிவுக்கு கொஞ்சம் என்ஜர்ஜி பூஸ்ட் கொடுக்கலாமேன்னு தான் .......... ஹி ....... ஹி..... ஹி...

வியாழன், 26 மே, 2011

சமச்சீர் கல்வி வரும் ஆனால் வராது ....

அரசின் அதிரடி முடிவு குழப்பத்தில் மக்கள் ஓர் ஆண்டாக முயற்சித்து அமல் படுத்த இருந்த சமச்சீர் கல்வி கைவிட பட்டதா ? அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டதா ? தெளிவில்லாத அரசு அறிக்கை முதல்வர் பேட்டி . சமசீர் கல்வி பற்றி பதில் அளிக்கும் போது முதல்வர் ஜெயலலிதா சொல்கிறார் . இதற்கொல்லாம் கால நிர்ணயம் செய்ய முடியாதாம் . அப்படி என்றால் சமச்சீர் கல்வி வரும் ஆனால் வராது .... அப்படிதானே அர்த்தம் . மாற்றமுடன் மேன்படுத்த பட்ட சமசீர் கல்வி அடுத்தாண்டு வரும் என்று அறிவிக்கை வெளியிடுங்களேன் ஏன் தயக்கம் ........
இதில் தான் சந்தேகம் வருகின்றது .


மெட்ரிக் பள்ளிகளின் தரம் ஆங்கிலம் மட்டுமே சிறந்ததாக இருக்கிறது காரணம் அவன் pre kg இருந்து ஆங்கிலம் படிக்கின்றான். அதில் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை ஆணித்தரமாக சொல்லுவேன் அரசு பள்ளிகளில் ஆங்கில அறிவும் சேர்த்து வளர்த்தால் கண்டிப்பாக எந்த சோர்வும் அரசு பள்ளி மாணவன் அட்டைய மாட்டான் . நீங்கள் அரசு பள்ளியில் படித்தவனிடம் வினவி பாருங்கள் அவன் தடு மாற்றமே ஆங்கிலம் தான் , அது மட்டுமே சரளமாக ஆங்கிலம் பேச முடியாததால் தான் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் தாழ்வு மனப்பான்மை பெறுகின்றான் . மாணவனை விடுங்கள் பெற்றோர்களை எடுத்து கொள்ளுங்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் ஆங்கிலம் சரளமாக பேசுவான் என்ற நிலை ஏற்பட்டால் தானாக அரசு பள்ளிகளை நோக்கி மக்கள் பயண படுவார்கள் .


அனைவரும் சிந்தித்து பாருங்கள் அரசு ஆசிரியர்கள் தரத்தை குறை கூறும் முன் தனியார் ( ஒரு சில அதும் ஆரம்பம் இப்படித்தான்) பள்ளியில் படிக்கும் ஆசிரியர்கள் இடம் கேட்டு பாருங்கள் அரசு வேலை கொடுக்குறோம் வாருங்கள் என்று அடித்து பிடித்து ஓடுவார்கள் உண்மை காரணம் பணம் , அங்கே ஹயோ மெட்ரிக் பள்ளியில் தரம் தான் உயர்ந்தது இங்கேயே இருந்து விடுகிறேன் என்று யாரும் சொல்ல போவதில்லை . இன்றும் அர்பணிப்பு தன்மையோடு படம் நடத்தும் அரசு பள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றது . ஆசிரியர்களும் பயிற்சி முடித்தல் தான் அரசு பள்ளியில் வேலை அனால் பெருபான்மையான மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களின் கல்வி தகுதி என்ன என்று தெரியுமா ? அனைவரும் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் .

அதற்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் உண்மையாக நடந்து கொள்கின்றனர் என்ற அர்த்தம் இல்லை . தவறுகள் அதிகம் நடகின்றது எப்படி அரசு நிர்வாகம் சீரழிந்து உள்ளதோ அதேபோல் தான் கல்வி துறையும் . சீரான கண்காணிப்பு இல்லாததே முக்கி காரணம் , அடுத்து அவர்கள் செய்யும் தவறுகளை கண்டு பிடித்து பள்ளியின் தரன் குறைந்தால் சம்பள குறைப்பு , தகுதி உயர்வு தள்ளி போடுவது என்று கண்கானித்தால் கண்டிப்பாக சிறந்த கல்வியை தர முடியும் . வளரும் பருவத்திலிலேயே குழந்தைகளிடம் என்ற தாழ்வு வளர்க்கும் உங்கள் கல்வி முறையை மாற்றி ஒரே கல்வி முறையை அமல் படுத்துங்கள் சமசீர் கல்வி அது கடினமோ அல்லது தகுதியானதோ( குழந்தைகளுக்கு என்றதோ ) .

முதலில் மாற்றங்கள் வரும் போது பல இடர்பாடுகள் இருக்கத்தான் செய்யும் மனப்பாடம் செய்யும் கல்வியை தவிர்ருங்கள் புரிந்து படிக்கும் கல்வி முறையை அமல் படுத்துங்கள் . தனியார் எப்பட எதாவது காரணம் கிடைக்கும் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று யோசித்து கொண்டே இருகின்றனர் . அவர்களை பொறுத்தவரை தனது கல்விதான் உயர்ந்தது கார்பரேட் கம்பனிகளை போல வியாபாரம் தான் 100 % செய்கின்றனர் . யாரும் கல்வி சேவை செய்ய அவர்கள் வரவில்லை என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் .


மீண்டும் ஞாபக படுத்துகின்றேன் நீங்கள் என்னதான் கூப்பாடு போட்டாலும் ஜெயலலிதா அவர்கள் முடிவில் மாறமாட்டார்கள் அவர்கள் குணம் அப்படி . இப்போதும் நாங்கள் கேட்பது ஒன்று மட்டுமே பிள்ளைகளின் கல்வி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று இருதிருக்காது . எதற்கு தயக்கம் இதை மேன்படுத்தி அடுத்த கல்வி ஆண்டில் மேன்படுத்த பட்ட சமசீர் கல்வி முறை அமல் படுத்துவோம் என்ற ஆணித்தரமான வாக்குறுதி கொடுங்கள் . சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆடரை வெளியிடுங்கள் நாங்கள் உங்களை நம்புகின்றோம் அதை விடுத்து மழுப்பலான பதிலை தரும் உங்களை பெற்றோர்கள் நம்ப தயாராக இல்லை . ஒட்டு போட்ட மக்களை பத்து தினங்களில் திணறடித்த பொறுமை ஜெயலலித்தாவையே சாரும் ........

இதில் ஆனந்த கூத்தாடுவது தனியார் மெட்ரிக் பள்ளி நிவாகிகள் . என்ன ஒரு அடாவடி தனமாக கல்வி கட்டணத்தை இப்பொழது வசுலிக்கின்றனர் . அவர்களுக்கு தெரியும் கழிவி கட்டணமும் குப்பை தொட்டிகுதான் போகும் என்று . ஒட்டு போட்ட அத்தனை பெற்றோர்களும் மனம் குமுறி வேதனையை அனுபவிக்க தொடக்கி விட்டனர் . நீங்கள் எந்த இலவசத்தை கொடுத்தான் இதை ஏமாற்ற முடியாது என்பதை அரசு நினைவில் கொள்ளவும் . பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை என்று உலரும் நீங்கள் கட்டண விவரம் தெரியாமல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என்று ஏன் அறிவிக்க முடியவில்லை . ஏன் என்றால் அதில் உங்களுக்கு உடன் பாடு இல்லை தனியார் அடிக்கும் கொள்ளையை ஊக்கபடுத்தவே செய்துள்ளது உங்கள் நடவடிக்கை . நீவீர் வாழ்க . உமது அரசு வாழ்க . போட்டதின் பலனை அனுபவிக்க ஆரபித்து விட்டோம் . எங்கள் தலை எழுத்து ஒவ்வொரு முறையும் ஏமாற்ற படுகின்றோம் ..

கல்வி கட்டணத்தை முறை படுத்த ஏன் உங்களால் முடிய வில்லை . குறைத்த பட்சம் உயர்கல்விகளை போல்ளாவது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரே கட்டணம் அமல் படுத்துங்கள் அவர்களுக்கு என்று 10 20 % சேர்க்கையை ஒதுக்குங்கள் . அரசு மனது வைத்தால் எந்த மாற்றமும் வரும் கல்வி மேன்படும் . ஆங்கில கல்வி அறிவு குறைவாலே மட்டும் தான் கிராம மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை அடைகின்றனர் என்பதை அனைவரும் மனதில் கொள்ளவும்

புதன், 25 மே, 2011

இணைய தளங்களுக்கு ஒரு ஆபத்து .......


கருத்து கட்டு பாடு என்பது கண்டிப்பாக துதி பாடாக தான் இருக்கும் இனி , பத்திரிகைகளும் இனி ஆவர்களை எதிர்க்கும் அல்லது விமர்சிக்கும் கருத்துக்களை அகற்றி விடலாம் . அரசை விமர்சிக்க முடியாது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தான் இது சாதகமாக அமையும் . அருவருக்க தக்க வாசகங்கள் ஒரு சிலர் மட்டுமே பயன் படுத்துகின்றனர் . அதை தடுக்குறோம் என்ற பெயரில் கருத்து சுதந்திரத்தை நெரிக்க முயல்கின்றனரோ என்ற ஐயம் தோன்றுகின்றது .

அரசை எதிர்த்து எழுதினால் எதாவது சப்பகட்டு ( உப்புக்கு பெறாத) காரணம் சொல்லி இனி தடுக்கலாம் , என்னே மக்களாட்சி . அரசுக்கு எதிராக உண்மையை வெளிபடுத்தும் திரை படங்களை சென்சார் என்ற ஆயுதம் கொண்டு ஒடுக்குகின்றனர் . விரசமான , ரத்த ஆறு ஓடும் மசாலா படங்களுக்கு அனுமதி என்னே மக்களாட்சி . கொசுவ அழிக்கிரோமுன்னு சொல்லி மக்களை அழிக்கற மாதிரி தான். இன்னொரு உதாரணம் பிரபாகரன அழிக்கிரோமுன்னு சொல்லியே தமிழினத்தையே அழிக்க துணிந்த அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்க முடியாது இனி கண்காணிக்க படுவர் . என்ன கொடுமை !

உடனே தீவிரவாதி ஆதரவு என்று சொல்லி முடக்க பார்ப்பது . மக்களின் மனசாட்சியை இனி எங்கே பார்ப்பது . தான் நினைக்கும் அல்லது அவன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க இணைய தளம் இருக்கிறது என்ற நம்பிக்கை பொய்த்து போகின்றது . இனி வாய் மூடி கைகட்டி அரசு சொல்வதையே வேத வாக்காக எடுத்து கொள்ள வேண்டும் அதை தானே விரும்புகின்றது இந்த சட்ட திருத்தம் .

இன்றைய நிலையில் மிக விரைவில் காட்சி ஊடகங்களை தவிர்த்து மிக விரைவாக முடிந்த வரை உண்மையை வெளி வருவதற்கு இணைய தளங்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர் . படித்தவர்கள் மத்தியில் அரசியல் பரவ அல்லது ஈடுபாடு காட்டுவதற்கு இணைய தளங்களே முக்கிய காரணங்கள் இதை எல்லாம் கணக்கில் கொண்டுதான் கருத்து சுதந்திரம் முடக்கம் நடத்த பார்கின்றனர் . ஆபாச வசனம் என்ற நோக்கில் ஒரு சிலரே ஈடு படுகின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் . இது நீங்கள் என்ன சட்டம் போட்டாலும் நடந்து கொண்டுதான் இருக்கும் .கொஞ்சம் குறைய வாய்ப்புண்டு தவிர முழுக்க தடுக்க முடியாது .

ஆனால் மிக மிக அதிகமானவர்களின் கருத்து சுதந்திரம் பயம் காரணமாக (அனைவரும் வேலை செய்து பிழைப்பை ஓட்டுகின்றவர்கள் ) எதற்கு நமக்கு வம்பு எதையாவது எழுதி அது நம்மை பாதித்தால் என்ற மன போக்கு ஏற்படும் . யாரும் தனிமனித விமர்சனங்கள் அதிகளவில் பதிவிடுவதில்லை , பொது மேடைகளை விட இங்கே குறைவு தான் என்பதை ஆணித்தரமாக சொல்ல முடியும் . இந்த போக்கு அரசியல்வாதிகளிடமே அதிகம் காணப்படுகின்றது அதற்கு கட்டுபாடு போடுங்கள் , அல்லது எப்படி பொது மேடையில் பேசவேண்டும் என்ற நாகரீகத்தை அரசியவாதிகளுக்கும் ,மேடை பேச்சாளர்களுக்கும் சொல்லி கொடுங்கள் அதை விடுத்தது .

காமெடி என்ற பெயரில் சினிமாவில் நடத்தும் கொடுமைகளை , சின்ன திரையில் மெகா தொடர்கள் என்ற போர்வையில் பெண்களை சிந்தரிக்கும் விதங்களையும் , தவறான உறவு முறைகளை அரகேற்றி கொண்டிருக்கும் அவர்களுக்கு வேண்டும் தணிக்கை , கண்காணிப்பு , ஒருதலை பட்சமாக செய்து வெளியிடும் செய்தி ஊடகங்களை கண்காணியுங்கள் , விளம்பரம் என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்கள் ஆன்லைன் வியாபாரம், வன்கொடுமை ,ஆபாச காட்சிகள், தவறான விளம்பர யுக்தி , தவறான பொருள்கள் மற்றும் நம்பக தன்மை அற்ற பெருட்களை கூவி கூவி விளம்பரம் என்ற பெயரில் நடக்கும் அட்டூழியத்தை கண்காணியுங்கள் , தடை செய்யுங்கள் , சோதிடம் மருத்துவம் , கடவுள் என்ற பெயரில் நம்பிக்கையை தகர்த்து மக்களை பயமுறுத்தி சம்பாதிக்கும் கொடியவர்களை தடை செய்யுங்கள் . நாட்டிற்கு ஊரு விளைவிக்கும் தேச நலளில் அக்கறை இல்லாமல் பாதுகாப்பு துறையில் அந்நியனையும் தனியாரையும் அனுமதிக்கும் போக்கை நிறுத்துங்கள் , அல்லது தொடர்ச்சியாக கண்காணியுங்கள் . தொலை தொடர்பு துறையை அன்னியதுக்கு விலை போசுவது அடிய்யோடு நிறுத்துங்கள் குறித்த பட்சம் இந்தியனுக்காவது டெண்டர் விடுங்கள் நேர்மையாக .

இதை எல்லாம் கோட்டை விட்டு விட்டு இணைய தளங்களில் பதியும் கருத்துக்களுக்கு தடை போட்டீர்கள் ( கண்கநிக்கின்றோம் என்ற பெயரில் மிரட்டினீர்கள்) என்று சொன்னால் , நாங்கள் சொல்லுவது தான் செய்தி என்று கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் ஊடகங்கள் போல் ஆகிவிடும் நாட்டில் கருத்து சுதந்திராம் . இப்பொழுதே கிராமங்களிலும் , இணைய இணைப்பு இல்லாத வர்களிடமும் பேசிப் பாருங்கள் ஊடகங்களின் தாக்கம் தான் தெரியும் உண்மைகளை அறிய முடிவதில்லை . ஊழலுக்கு எதிரா எதையும் சொல்ல முடியாது , அவர்கள் அடிக்கும் கொள்ளையை யாரும் தட்டி கேக்க முடியாது .

உதாரனத்திற்க்கு விக்கி லீக்ஸ் என்ற இணைய தளம் ஒரு முன்னுதாரணம் , பல இணைய தளங்களில் கருத்துக்களை வெளியிட முடிகின்றது புரட்சி வெடிக்கின்றது என்ற பயம் தான் ஆட்சி ஆளர்களிடம் இன்று மேலோங்கி விட்டது அதன் வெளிபாடே இந்த சட்ட திருத்தம் ............

தீவிரவாத இணைய தளங்களை மட்டும் அல்லது அனைத்து இணைய தளங்களையும் கூட கண்காணியுங்கள் அது தவறில்லை . ஆனால் கருத்திடுவதை கண்கானிக்கின்றோம், நடவடிக்கை எடுக்கின்றோம் என்ற ரீதில் ஆரபித்தீர்கள் என்றால் நாட்டில் கருத்து சுதந்திரம் பறிபோகும் ... என்ற ஆதங்கத்தின் வெளிபாடே இந்த பதிவு .
டிஸ்கி :
குறுகிய காலகட்டத்தில் மக்கள் அரசியல் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும்கூட பரபரப்பாக இணையத்தளம் மூலமாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.உதாரணம் அன்னா ஹசரேக்குஆதரவும் எழுச்சியும்.இதை தடுக்க அரசு முயற்சிக்கிறது என்று கூட சொல்ல தோன்றுகிறது .

தலையங்கம்:நமக்கும் தேவை அக்கறை - தின மணி ( நன்றி )

இணையதளப் பயன்பாடு தொடர்பாக அரசு விதித்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது எதிர்பார்த்ததே. ஆனால், இந்த விஷயத்தில் தவறு முழுக்க முழுக்க அரசின் தரப்பில் மட்டும் அல்ல என்பது தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர். சந்திரசேகரின் விளக்கத்திலிருந்து தெரிகிறது. மக்களாகிய நாம் உரிய காலத்தில் அரசின் உத்தேச யோசனைகளைப் படித்துப்பார்த்து கருத்துத் தெரிவிக்கத் தவறிவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்திரிகை வாசகர்கள் எண்ணிக்கைக்கு நிகராக உயர்ந்து வருவதாக சமீபத்திய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளைக் கண்காணிப்பதும், பொது நலனுக்கும் சில வேளைகளில் தனி நபர்களுக்கும் எதிராக ஒருதலைப்பட்சமாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளைப் படித்துப் பார்த்து உடனுக்குடன் அகற்ற வேண்டியதும் சமுதாயக் கடமையாகும். ஆபாசமான, அருவருக்கத்தக்க வர்ணனைகள், உரையாடல்கள், கருத்துகள் போன்றவற்றையும் அழிக்க வேண்டியது அவசியம். எனவே இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டும் இந்த விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்துவிட்டதாக அரசைக் குற்றம்சாட்டுவது ஒருதலைப்பட்சமானது என்பதில் சந்தேகமே இல்லை. அதே வேளையில் அரசின் சில கட்டுப்பாடுகள் தேவைக்கு அதிகமாகவோ, அதன் உள்நோக்கத்தைச் சந்தேகிப்பதாகவோ இருப்பதை மறுக்க முடியாது. ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு எப்படிக் கையாள்கிறது என்று பார்த்து எதிர்காலத்தில் அவற்றைத் திருத்துவதும் மேம்படுத்துவதும் சாத்தியமே. எனவே, ஒரேயடியாக இதை எதிர்ப்பதும் கண்டிப்பதும் இப்போதைக்கு அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. அதற்கும் முன்னதாக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ள சில கருத்துகள் அனைவரும் கவனிக்கத்தக்கவை. இணையதளப் பயன்பாட்டாளர்களைக் கண்காணிக்கவும், சட்டவிரோதமான செயல்களுக்கு அதைப் பயன்படுத்துகிறவர்களை அடையாளம் காணவும், அவர்கள் மீது நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் அவசியமானவை என்பதால் இதைச் சட்டத்தின் மூலமாகவே அமல்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அரசின் ஒப்புதலுடனோ அல்லது நீதிமன்றங்களிடம் தெரிவித்து அவற்றின் ஆணைப்படியோதான் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிடுகிறார். இணையதளத்தைத் தவறான செயல்களுக்கு அல்லது தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவோர் யார், அவர்களுடைய பாஸ்வேர்டு, பாலினம், கல்வி, வயது, தொழில், முகவரி போன்ற தகவல்களைத் திரட்டவும் அவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவும், அவர்களுடைய செய்கை தேச விரோதமாகவோ சமூகத்தில் பதற்றத்தையும் பகைமையையும் ஏற்படுத்தும் விதத்திலோ இருந்தால் உரிய போலீஸ் அமைப்புகள் மூலம் விசாரிக்கவும் இந்த விதிகளும் வழிகாட்டு நெறிகளும் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். புதிய விதிகளை அமல் செய்வதற்கு முன்னால் நாடு முழுவதும் உள்ள மக்கள் அறியவும், அதைப்பற்றி விவாதிக்கவும், உரிய திருத்தங்களைக் கூறவும், ஆட்சேபங்கள் இருந்தால் உரிய வகையில் தெரிவிக்கவும் வரைவு வாசகங்களை வெளியிட்டிருந்ததாகவும், 2 மாதங்கள் கால அவகாசம் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கிறார் சந்திரசேகர். இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் நம் நாட்டில் படித்தவர்களும் அமைப்பு ரீதியாகத் திரண்டவர்களும் பொது விஷயத்தில் அக்கறையோடு செயல்படுவது இல்லை என்பதில் உண்மை இருக்கிறது என்பதுதான். எல்லோருமே சுயநலவாதிகளாக இல்லை என்றாலும் பொதுநலன் பேசுகிறவர்களும் செயல்பாடு என்று வரும்போது சோம்பல் மிகுந்தவர்களாகவோ, அதிகாரிகளிடம் பேச அச்சமோ, கூச்சமோ உள்ளவர்களாகவோ இருந்து விடுகிறார்கள். இப்படி ""திண்ணைப் பேச்சு வீரர்களாகவே'' பெரும்பாலானவர்கள் இருப்பதால் மக்களைப் பாதிக்கும் பல சட்டங்கள் போதுமான விவாதம் இல்லாமல் - மாற்றுக்கருத்துகள் கூறப்படாமல் - அரசின் நோக்கத்துக்கேற்பவே தயாராகின்றன. சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள ஆய்வுக்குழுக்கள் அல்லது ஆலோசனைக் குழுக்கள் இந்தச் சட்டங்களை உரிய வகையில் ஆய்வு செய்கின்றனவா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் நடைபெறும் விவாதங்களைக் கவனிக்கும்போது முக்கியமான அம்சங்கள் குறித்து ஆளும் தரப்பிலும் எதிர் தரப்பிலும் ஆழ்ந்த கவனத்துடன் விவாதிப்பது இல்லை என்பதை நேரிலேயே பார்க்கிறோம். இன்னும் பல சந்தர்ப்பங்களில் விவாதமே இல்லாமல் ""கில்லட்டின்'' என்ற முறையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 40 அல்லது 50 மசோதாக்களை மின்னல் வேகத்தில் நிறைவேற்றுவதையும் பார்க்கிறோம். அவ்வளவு ஏன், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜயந்தி போன்ற நாள்களில் எல்லா ஊர்களிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அரசியல் கட்சி அதிலும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்பதையும், அதிகாரிகள் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் தீர்மானங்களை வாசித்து, உரிய விவாதம் இன்றி ஏற்பதையும் பெரும்பாலான ஊர்களில் பார்க்கிறோம். இதெல்லாம் அரசியல்வாதிகளின் வேலை என்று விட்டுவிடாமல் நமக்குள் ஓர் அமைப்பை உருவாக்கி விவாதித்து, அரசுக்கு ஆலோசனை கூறி, கண்காணிப்பதையும் ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். தவறான சட்டங்கள் அமலுக்கு வராமல் தடுப்பதில் நமக்கல்லவோ அக்கறை தேவை? அதற்குப் பெயர்தானே மக்களாட்சி?

செவ்வாய், 24 மே, 2011

"இது முழுக்க முழுக்க உண்மையே, துளியும் கற்பனை கிடையாது!"


"இது முழுக்க முழுக்க உண்மையே, துளியும் கற்பனை கிடையாது!" என்ற தைரிய அறிவிப்போடு வெளியாகத் தயாராக உள்ள, ஈழ யுத்தத்தையும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளையும் விளக்க முயற்சிக்கும் படமான செங்கடலுக்கு சென்னை சென்சார் குழு தடை விதித்துள்ளது.

ஒரு கரையில் ரத்தம் வடிக்கும் இலங்கைத் தமிழன், மறுகரையில் கண்ணீர் வடிக்கும் தமி்ழக தமிழன், இடைப்பட்ட நீர்ப்பரப்பில் மீன் பிடிக்கப் போய் உயிரை விடும் தமிழ் மீனவன்... இந்த மூன்று சமூகங்களின் துன்பங்களையும் அதற்குக் காரணமான காரணிகளையும் அடிப்படையாக வைத்து செங்கடல் திரைப்படம் தயாராகியுள்ளது.

லீனா மணிமேகலை உருவாக்கியுள்ள இந்தப் படம், விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்போடு தயாராகியுள்ளது. ஆனாலும் இந்தப் படம் புலிகள் மீதான வழக்கமான விமர்சனமாக இல்லாமல், சிங்களப் பேரினவாதம் மற்றும் அதற்கு துணை நிற்கும் சக்திகளால் தமிழர் பட்ட / படும் துயரங்களின் தொகுப்பாக வந்துள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு அனுமதி கோரி தணிக்கைக் குழுவுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த குழுவினர், உடனே அனுமதி மறுத்துவிட்டதோடு, படத்தை திரையிடவும் தடைவிதித்துள்ளனர்.

காரணம்...?

இந்த படத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரம் லட்சம் என அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து, சர்வதேச அரங்கில் போர்க்குற்றவாளியாக நிற்கும் சிங்கள அரசை விமர்சிப்பது போல வசனங்கள் உள்ளனவாம். சிங்கள இனவாதத்துக்கு தமிழக - இந்திய அரசுகள் துணை நின்றதாக வசனங்கள் சித்தரிக்கின்றனவாம்.

இதனாலேயே அனுமதி மறுப்பதாகக் கூறியுள்ளனர்!

"இந்திய தணிக்கைக் குழுவின் கெடுபிடிகள், கட்டுத் திட்டங்களைப் பார்க்கையில் நாம் வாழ்வது சுதந்திர நாட்டிலா, காலணி ஆதிக்கத்திலா என்றே தெரியவில்லை. அரசுக்கு எதிரான விமர்சனமே இருக்கக் கூடாதாம்... அதுவும் இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனையே விதிக்கும் அளவுக்கு மோசமான நிலைமைக்குள் படைப்பாளிகளை சிறைப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு", என்கிறார் செங்கடல் படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை.

துயரத்தில் தவிக்கும் இலங்கை தமிழர், இந்திய தமிழ் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை, இந்திய, தமிழக அரசுகளின் நிலைப்பாட்டை விமர்சிப்பதால் செங்கடல் படத்துக்கு தடை விதித்துள்ளது சென்னை தணிக்கைக் குழு. இப்போது படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார் லீனா.

இந்தத் தடை குறித்து 'தட்ஸ்தமிழு'க்கு அவர் அளித்த பேட்டி:

"தணிக்கைக் குழு என்ற ஒன்றே தேவையா என்ற கேள்வி பல காலம் இருந்துவருகிறது. அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தைப் புரிய வைத்துள்ளது 'செங்கடலு'க்கு தணிக்கைக் குழு விதித்துள்ள தடை. 1885-ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு எப்படி 2011-லிருக்கும் படைப்பெல்லையைக் கட்டுப்படுத்த அல்லது தணிக்கை செய்ய முடியும் என்று தெரியவில்லை.

எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு?

வெளிநாடுகளில் தணிக்கைக் குழு என்ற ஒன்றே இல்லை. இங்கே படங்களுக்கு தணிக்கை என்கிறார்கள்... ஆனால் தொலைக்காட்சிகளில் பேஷன் டிவியில் நிர்வாணத்தை அனுமதிக்கிறார்கள், கடுமையான - மோசமான விமர்சனங்களை அனுமதிக்கிறார்கள். இது எந்த வகைக் கட்டுப்பாடு... அதுவும் சினிமாவுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு?

இன்னொன்று பாருங்கள்... இங்கு பட விழாக்களில் பங்கேற்கும் வெளிநாட்டுப் படங்களுக்கு தணிக்கை இல்லை. ஆனால் இந்தியப் படம் என்றால் தணிக்கை உண்டு. எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு?

அரசை விமர்சிக்கக் கூடாதாம்... இந்த நாட்டில் அரசை விமர்சிக்காமலா இருக்கிறார்கள்? அரசியல்வாதிகள், பத்திரிகைகளை எல்லாரும்தானே விமர்சிக்கிறார்கள்... அந்த விமர்சனத்தை ஒரு படைப்பாளி முன் வைத்தால் தவறா.. படைப்பாளிக்கு அந்த சுதந்திரம் கிடையாதா?

நான் பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி விமர்சிக்கவில்லை. ஈழ யுத்தத்தின் இறுதி தருணங்கள்... அந்தக் கரையில் இலங்கை யுத்தம் நடக்கிறது... இந்தக் கரையில் 'அரசியல்' நடக்கிறது... இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சிக்கிச் சீரழிந்த தமிழரின் வாழ்க்கையை படமாக்கியிருக்கிறோம். அதில் எள்ளளவும் கற்பனை இல்லை. நடந்த உண்மைகளை மட்டுமே எந்த சினிமா பூச்சுமின்றி திரைப்படமாக்கியுள்ளேன். இதை அனுமதிக்க மறுப்பது உண்மையிலேயே ஜனநாயகப் படுகொலைதான். ஒரு படைப்பாளியின் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதுதான். ஆட்சியாளர்களின் விக்டோரியா அடிமை மனோபாவத்தின் எதிரொலி இது.

அரசை விமர்சிக்கும் உரிமை அதன் மக்களுக்கு இருக்கிறது. அதுதானே ஜனநாயகம். அதுவும் இந்தப் படம் மக்களுக்கானது. மக்கள் பிரச்சினையைப் பேசுவது. அதில் அரசுகள் செய்த தவறை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளோம். இதிலிருந்து நான் பின்வாங்க முடியாது.

தணிக்கைக் குழுவினர் இலங்கை அரசை விமர்சிக்கவே கூடாது என்கிறார்கள். இலங்கைத் தமிழரும், இந்திய தமிழ் மீனவர்களும் இன்று படும் துன்பங்களுக்கு யார் காரணம்... இலங்கை அரசை விட்டுவிட்டு யாரை காரணம் என்று காட்ட முடியும்? இந்தக் கொடுமைகளுக்குத் துணை நின்றவர்களைக் கொண்டாட வேண்டுமா?

விடுதலைப் புலிகள் பற்றி விமர்சனங்கள் இந்தப் படத்தில் உள்ளதா...?

இந்தப் படம், யுத்தம் நடந்த அந்த காலகட்டத்தில் மக்கள் பட்ட வேதனைகள், அதன் பாதிப்புகளைச் சொல்லும் படம். அன்றைக்கு என்னென்ன நிகழ்வுகள் அரங்கேறினவோ அவற்றை அப்படியே பதிவு செய்துள்ளோம். 100 சதவீதம் நடந்தவற்றை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். படம் பார்க்கும் முன்பே, இது புலிகளுக்கு எதிரான படம் என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இனவழிப்புக்கு துணை நின்றவர்களை விமர்சித்துள்ளோம். மக்கள் படும் துன்பங்ளை படம் பிடித்துள்ளோம்... அவ்வளவுதான்.

தமிழக அரசியல்வாதிகளின் பங்கு குறித்த விமர்சனமும் உண்டா....?

நிச்சயமாக. இதில் அவர்களுக்கும் பங்கில்லாமலா இருக்கிறது. படம் பார்த்துவிட்டு அதிலுள்ள நியாயங்களைச் சொல்லுங்கள்", என்றார் லீனா.

விரைவில் டெல்லி நடுவர் தீர்ப்பாயத்தில் செங்கடலுக்கு அனுமதி வாங்கும் முயற்சியில் உள்ள லீனா, இன்று படத்தை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக் காட்டுகிறார்.

திங்கள், 23 மே, 2011

அடுத்த ஆப்பு கலைஞ்சருக்கு ரெடி ...


அடுத்த ஆப்பு கலைஞ்சருக்கு ரெடி விக்கி லீக்ஸ் மூலமாக , அட நம்ம மாறன் சகோதரர்களுக்கும் தான் . இப்ப தயாநிதி என்ன சொல்ல போறாரு , பீட்டர் அல்போன்ஸ் என்ன சொல்லுவாரு . நாங்க தமிழன கொல்லல அவங்களா தற்கொலை பன்னிகிட்டங்கன்னுனா சொல்ல போறிங்க , சொன்னாலும் சொல்லுவானுங்க . இது தயாநிதி மாறன் சொன்னும் புதுசா சொல்லல மக்களுக்கே எல்லாம் தெரியும் பன்ன நாடகமெல்லாம் . எல்லாத்துக்கும் கடிதம் எழுதியே காலத்த கடத்திய தாத்தா . இப்ப சேர தள்ளிகிட்டு பொண்ண பாக்க போய் இருக்காரு , அப்ப ராசாவ ஏன் பாக்க போகல , இப்பயாவது புரியுதா மக்களே ! கலந்ஜரோட தன்னலம் இல்லா மக்கள் உழைப்பு ( தன் மக்கள் ) . இன்னும் அந்த கட்சில பாவப்பட்ட தொண்டனுங்க இருக்க தான் செய்யறாங்க ..........
உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதியே அல்வா கிண்டி கொடுக்கும் தாத்தா . சம்பாதித்து கொடுத்த ராசாவ கூட பாக்க போகல இப்ப அடிச்சி புடிச்சு ஓடுறாரு திகார் ஜெயில் . அடுத்த இடத்த ரெடி பண்ணுங்க அடுத்து வருவாங்க தயாளம்மா
தாத்தாவ அங்கே ரூம் போட்டு தங்க சொல்லுங்க அடிக்கடி டெல்லி போக கஷ்ட்டமா இருக்கும் இல்ல. ஜெயில்ல தனியா ப்ளாக் ஓபன் பண்ணி அதுக்கு 2 ஜி பெயர் வைக்கலாம் இன்னும் நிறைய ரூம் தேவைப்படும் .

சென்னை: ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கூறியதாக பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, அமெரிக்க துணைத் தூதர்ஆண்ட்ரூ சிம்கின் பெயரில் ஒரு கடிதம் போனது. அதில் தயாநிதி மாறனுடன், அமெரிக்க அதிகாரிகள் பேசிய விவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் பேசியதை குறிப்பிட்டுள்ளார் சிம்கின்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தனது கட்சி மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்பதாக காட்டிக் கொள்ளும் நாடகமே இது. தானும் இதில் பங்கேற்று ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது.

மேலும் கருணாநிதி அரசு இதுவரை எந்த அரசு மீதும் இல்லாத அளவுக்கு மக்கள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.

ஆனால் கருணாநிதி நடத்திய நாடகத்தால், திமுகவிடமிருந்து காங்கிரஸ் குறிப்பாக சோனியா காந்தி விலகத் தொடங்கினார். கருணாநிதியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சரியான பதிலடியை பொருத்தமான நேரத்தில் கொடுக்கும். அது உறுதி.

பிரபாகரனைக் கொல்லத் துடித்த ராகுல் காந்தி

கருணாநிதியின் மகள் கனிமொழியை சமீபத்தில் சந்திக்க மறுத்தார் சோனியா. இதற்கு திமுக மீதான சோனியா காந்தியின் அதிருப்தி அதிகரித்ததே காரணம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.

திமுக தோற்கும்-தயாநிதி மாறன்

அதேபோல திமுக மீது ஊழல் கறை படிந்து விட்டது. இதை அகற்றாவிட்டால் திமுக பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் அப்போது கூறியுள்ளார் தயாநிதி மாறன்.

இதன் மூலம் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்வியை அன்றே கணித்துள்ளார் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்.கைவிட்டால் திமுகவுக்கு வழியில்லை-பீட்டர்

பீ்ட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை வாபஸ் பெற மாட்டார் கருணாநிதி என்று உறுதிபடக் கூறியிருந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தான் வலுவாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே இவ்வாறு அறிவித்தார் (எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக) கருணாநிதி. மற்றபடி, அனைத்துக் கட்சிக் கூட்டம், தீர்மானம் என்பதெல்லாம் சப்பைக் கட்டுதான்.

காங்கிரஸுடனும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனும் இணைந்து இருப்பது ஒன்றுதான் திமுகவுக்கு உள்ள ஒரே வழி என்று கூறியிருந்தார் பீட்டர்.

ஆனால் தாங்கள் ராஜினாமா செய்யப் போவதாக திமுக கூறியது காங்கிரஸ் மேலிடத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது உண்மை. மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாதையில் திமுக திரும்புகிறதோ என்று காங்கிரஸ் கருதியது என்று கூறியுள்ளார் பீட்டர்.

'திமுக, காங்கிரஸின் சுய நல உறவு'

இந்த இருவரின் பேச்சுக்களையும் வைத்துப் பார்க்கும்போது இரு கட்சிகளுமே ஒரு சுயநலத்தோடுதான் உறவு வைத்துள்ளன என்பது தெரிய வருகிறது. முதல்வர் பதவியில் நீடிக்க காங்கிரஸின் தயவு கருணாநிதிக்குத் தேவை. அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு டெல்லியில் நீடிக்க கருணாநிதியின் தயவு காங்கிரஸுக்குத் தேவை.

இதன் விளைவாகவே இந்த அரசியல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது.

கருணாநிதியின் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் போதிய அவகாசம் கொடுத்ததால் தனது நாடகங்களை முடித்துக் கொண்டார் கருணாநிதி என்று அந்த கேபிளில் சிம்கின் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

ஈழப் பிரச்சினையை வைத்து கருணாநிதி நாடகமாடினார் என்று தயாநிதி மாறனே அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 22 மே, 2011

ஜூன் 15 -யில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதைகளும் அவரைப்பற்றிய குறிப்புகளும் சமச்சீர் கல்விதிட்ட பாட நூற்களில் இடம்பெற்றிருப்பதால், அவற்றை எல்லாம் நீக்கி புதிய புத்தகங்களை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் பழைய பாட புத்தகங்களையே பின்பற்றுவது என்றும்,புதிய பாட புத்தகங்களை அச்சிட சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால் ஜூன் 15 ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:


தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் ஒட்டுமொத்த கல்வித் தரத்தையும் உயர்த்த வழிவகை செய்யாது என்பதால் அதை உயர்த்துவது குறித்து ஆய்வுசெய்வதற்கு வல்லுநர் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.எனவே இந்த கலவியாண்டில் பழைய பாடபுத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், புதிய பாட புத்தகங்களை அச்சிடுவதற்கு காலஅவகாசம் தேவை என்பதால் பள்ளிகளை ஜூன் 15 ஆம் தேதி திறக்கவும் அமைச்சரவை முடிவெடுத்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 21 மே, 2011

பல கோடி தமிழர்களில் நானும் ஒருவன் .....

ஐயா நீதிபதி ரவிராஜ் பாண்டியன் அவர்களே !
ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் , நீங்களும் பிள்ளை பெற்றிருப்பீர்கள் பள்ளிக்கு அனுப்பி இருப்பீர்கள் , தனியார் பள்ளிகள் செய்யும் கொள்ளை கட்டணம் கட்டி இருப்பீர்கள் . நான் அதை பற்றி எல்லாம் சொல்ல வரலை .

முன்பு கல்வியின் முக்கியத்தோம் தெரிந்து பணக்காரரங்க ( கொடை உள்ளம் படைத்தவர்கள் சேர்ந்து அன்ன தானம் மற்ற தானத்தை போல் கல்வி தானம் என்று குழுவாக ஆரபித்தார்கள் . பின்பு அது படி படியாக தனியார் வசம் வந்து இன்று கல்வியிலும் ஏற்ற தாழ்வு , மாணவன் கற்கும் திறனில் மாறுபட்டால் ஏற்று கொள்ளலாம் . பயிற்று விக்கும் கல்வி முறைகள் மாறு படுவதுடன் . பணம் படைந்தவன் நல்ல கல்வி படிக்கலாம் . இல்லாவிட்டால் என்றும் அடிமைபட்டே வாழலாம் என்று வளரும் பருவத்திலேயே பிள்ளைகள் மனதில் நஞ்சு விதைக்கப்படுகின்றது .

இது நாளடைவில் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நல்ல பள்ளி , பிறகு அதுவே ஒரு கௌரவமாக பார்க்கப்பட்டது குறிப்பிட்ட பள்ளியில் படித்தால் அவர்கள் நாகரீகமானவர்கள் என்ற தவறான எண்ணத்தை கொள்ளை அடிக்கும் எண்ணம் கொண்ட பள்ளி முதலாளிகளும் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இன்றுவரை கொள்ளை கொள்ளையாய் அடித்து தனது செல்வங்களை ( சொத்துக்களை )பெருக்கிக்கொண்டு செல்வா சீமான்களாக மாறி உள்ளனர் .


இது ஒரு எல்லை இல்லாமல் போன போதும் தட்டி கேட்க ஆளில்லாமல் நூல் அறுந்த பட்டம் போல் வானில் பறந்து கொண்டிருக்கின்றது . மக்களும் தனக்கு ஏற்ற கொள்ளைக் கூட்டத்தை தேர்ந்தெடுத்து அடுத்த தலைமுறையை இப்போதே கொள்ள அடிக்கும் கூட்டங்களாக மாற்றிக்கொண்டிருகின்றோம் . இன்னும் ஒரு படி மேலே சென்று இன்று பள்ளி கூடங்கள் சிறைச்சாலைகளை போல ( சீர்திருத்த பள்ளிகளை போல) மாணவர்களை நடத்துகின்றனர் . பெற்றவர்களிடம் பலமுனை தாக்குதல் நடத்தி தனது கல்வி கட்டம் என்ற பெயரில் வசூல்வேட்டை நடத்திகொண்டிருகின்றனர் .

இவர்களை யாருமே கேட்க ஆளில்லையே என்று நினைத்த போது சென்ற ஆண்டு தனது சுயநலத்திற்காக மக்கள் நலம் என்ற பெயரில் கல்வி கட்டண முறைபடுத்தும் திட்டத்தை கையில் எடுத்தது அன்றைய தி.மு.க அரசு . மக்கள் எல்லாம் சந்தோஷ பட்டனர் நமது துயர் தீரப்போகிறது என்று நினைத்த நேரத்தில் அரசு திட்டத்தில் தீவிரம் காட்டாமல் , பள்ளிகளின் பக்கம் திரும்பியது . அந்த நேரத்தில் கொதித்த ஒரு சில மக்கள் நீதி மன்றம் சென்றனர் . நீதி மன்றமும் மக்களுக்கு சாதகமாகவே தீர்பளித்தது . ஆனால் அதை நடை முறை படுத்த வேண்டிய அரசு வேடிக்கை பார்த்தது . பதிலாக போராடும் மக்களை களைத்தும் மிரட்டியும் மேலும் போராட்டம் தீவிரம் அடையாமல் காவல் துறையும் பார்த்துகொண்டது அரசின் மறைமுக ஆணையை பெற்று .

பள்ளி நிர்வாகத்தை பற்றி சொல்லவே வேண்டாம் ஒரு சில பள்ளிகளை தவிர மற்ற அனைத்து தனியார் பள்ளிகளுமே நீதிபதி கோவிந்த ராஜன் கமுட்டி நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வில்லை . பள்ளிகள் மேல் முறையிடு செய்யலாம் என்று அரசு அறிவித்த உடன் 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்தனர் . இதில் மனவருத்தம் அடைந்த நீதிபதி தனது உடல்நிலையை காரணம் காட்டி ராஜினமா செய்தார் . பின்பு தான் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.


ஏப்ரல் 30 குள் மாற்றி அமைத்த புதிய கட்டணத்தை அறிவிக்க வேண்டும் என்று நீதி துறை சொல்லியது . ஆனால் இதுவரை அறிவிக்கவில்லை . இன்னும் ஒருசில நாட்களில் பள்ளிகள் துவங்க இருக்கும் நிலையில் மானவ்வர்களும் பெற்றவர்களும் முழி பிதிங்கி நிற்கின்றனர் என்ன செய்வது என்று . பள்ளி நிர்வாகங்களோ பழைய படி அதே திமிரோடு ( ஆணவத்தோடு ) பெற்றவர்களிடம் நடந்து கொண்டு வருகின்றனர் அவர்கள் சொல்லும் கட்டணத்தை காட்டும் படி வற்புறுத்தி வருகின்றனர் .

ஏன் இந்த குளறு படி எதற்காக மக்களை தண்டிக்கிண்றீர்கள் . முடிந்தால் சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்துங்கள் , இல்லை என்றால் மக்கள் எப்பாடு பட்டாலும் பராவா இல்லை எங்களுக்கு முதலிகள் தான் முக்கியம் என்றால் திட்டம் ரத்து செய்யப்பட்டது என்ற ஒற்றை வரி அறிவிப்பை அறிவித்து விடுங்கள் தனியார் பள்ளிகளின் கொள்ளை வெகு விமர்சியாக நடக்கட்டும் .......

மக்கள் எப்படி போன உங்களுகென்ன . புதியதாக பொருபேற்றிருக்கும் அ.தி.மு.க. அரசு . பாட புத்தகங்களில் வேகம் கட்டியது போல் , பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பலாம் . கட்டண விவரம் அறிவித்த பின்பு தான் கல்வி கட்டம் வசூலிக்க வேண்டும் என்றும் . நீதிபதி ரவிராஜ் பாண்டியன் அவர்களையும் விரைந்து வெளியிட செய்தால் மக்கள் நிம்மதி பெருமூச்சி விடுவார்கள் .

பிறகு அறிவித்த கட்டணத்தை தான் பள்ளிகள் வசூளிக்கின்றனர்ரா என்று ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் . செய்யுமா முதல்வர் ஜெயலலிதா அரசு ......... செய்வார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் பல கோடி தமிழர்களில் நானும் ஒருவன் .....


தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளிடம் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே கல்விக்கட்டணம் நிர்ணயித்து அரசுக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணம் போதாது என்று சொல்லி சுமார் 6,400 பள்ளிகள் கோவிந்தராஜன் கமிட்டியிடம் மேல்முறையீடு செய்தன. இதைத்தொடர்ந்து, ஐகோர்ட்டு உத்தரவின்படி, மேல்முறையீடு செய்த பள்ளிகளில் ஆய்வு செய்து புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். ரவிராஜபாண்டியன் கமிட்டி கடந்த 3 மாதங்களாக 6,400 பள்ளிகளின் நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தியது.
இந்த சூழ்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பழைய கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுமா? அல்லது புதிய கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுமா? என்பது தெரியாமல் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகிகளும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், கல்விக்கட்டணம் குறித்து நீதிபதி ரவிராஜபாண்டியனிடம் கேட்டதற்கு, பள்ளி நிர்வாகிகளுடன் நடத்தப்பட்டு வந்த விசாரணை கடந்த 5-ந் தேதி முடிவடைந்தது.
புதிய கல்விக்கட்டணம் எவ்வளவு என்பது பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பாக எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

வெள்ளி, 20 மே, 2011

கனிமொழியும் , சரத்குமாரும் கைது , அடுத்தது என்ன ?

எதிர் பார்த்து எதிர்பார்த்து அப்பா ஒருவழியா இன்று கனிமொழியும் , சரத்குமாரும் கைது செய்யப்பட்டனர் . இந்த கைது தொடர்ந்து தி.மு.க . அமைச்சரவை லிருந்து வெளியேறும் என்று யாரவது நினைத்தால் அது முட்டாள் தனமே !.


ஸ்பெக்ரம்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார் இருவரது ஜாமீன் மனுக்களும் நிரகாரிக்கப்பட்டுள்ளதுடன், உடனடியாக இருவரையும் கைது செய்யும் படி டில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தி.மு.க .மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுமா ! அப்படின்னு யாராவது கேட்டீங்கன்னா , அவங்களுக்கு நம்ம வடிவேளு பதில் சொல்லுவாரு எப்படி என்ன சின்ன புள்ள தனமா இருக்கு ? அட எங்க பில்டிங் அடிவாரமே இல்லாம இருக்குது . ஏதோ அத வச்சாவது கொஞ்சம் வீரப்ப இருப்போமில்ல !
தமிழகத்தில் மண்ணை கவ்வியதும் , எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காததால் ஏற்கனவே செத்த பாம்பான தி.மு.க . விடம் இருக்கும் ஒரே பிடிப்பு மத்திய அமைச்சர் பதவிகள் மட்டுமே !. அதையும் இழக்க தயாராக இருக்காது . காங்கிரஸ் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் துடைத்து விட்டு இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா என்று பேசும் .

தி.மு.காவின் பல்லை மட்டும் அல்ல அனைத்து வழிகளிலும் தப்பிக்க முடியாத அளவிற்கு தமிழக மக்கள் பெரிய ஆப்பு வைத்திருகின்றனர். அடுத்து தயாளம்மாள் , நீரா ராடிய எப்ப கைது என்ற பேச்சு இப்பொழுதே எழ ஆரபித்துள்ளது . நீதி மன்றமும் எந்த மட்டத்தில் இருந்தாலும் அவர்களை விசாரித்து நீதி மன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று கண்டிப்புடன் சாடியுள்ளது

கனிமொழி கைது பற்றி கலைஞ்சரிடம் கேட்டதற்கு மறுபடியும் பிஞ்ச முகத்த வச்சிக்கிட்டு சொன்னாரு பாருங்க ஒரு டைலாக் “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்”எங்க வீட்டு பொண்ணுகளா கோடி கோடியா கொள்ளை அடிச்சாங்க, என்னய்யா சொல்றாரு அப்படின்னா ? அவரு கொஞ்சம் ஆடி தான் போய் இருக்காரு அடுத்து தயாளு , அடுத்து கொலை வழக்குல நாம அஞ்சா நெஞ்சன் அழகிரி , சட்ட மன்ற கட்டிட ஊழல்ல ஸ்டாலின் , இப்படி குடும்பமே கைது ஜெயல்லு அப்படின்னு இருக்கும் போல .

ஆனால் பேரனுங்க கொஞ்சம் சந்தோசமாத்தான் இருக்காங்க போல , அவனுகளையும் எப்படியாவது இழுத்து விட்டுடனுன்னு கலைஞ்சர் குடும்பம் யோசிக்கராங்கலாம். முதல்ல 2 ஜி மேட்டர கின்டி விட்டதே முன்னாள் முதல்வர் பேரன்கள் மாறன் பிரதர்ஸ் தானே கேவம் இருக்கத்தானே செய்யும் ........

எல்லாதுக்கு முதல்ல பிளாஷ் நியூஸ் போடும் நாம மூடுவிழா காண போகும் கலைஞ்சர் டி.வியும் , சன் டி.வியும் . ஒரு நியூஸ் சையும் போடல அட என்ன ஒரு நேர்மை


இன்று நண்பகல், வெளியிடப்பட்ட இத்தீர்ப்பில், இருவரையும் கைது செய்து கஸ்டடியில் வைக்கும் படியும், நாளை காலை 10 மணிக்கு முன்பதாக மீண்டும் ஆஜர்படுத்தும் படி சி.பி.ஐ தலைமை நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.

எனினும் இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

வியாழன், 19 மே, 2011

14 விருதுகளை தட்டிச் சென்றது தமிழ் சினிமா


58 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 14 விருதுகளை தட்டிச் சென்றது தமிழ் சினிமா58 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்.

அதேபோல தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.

58 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அவர் நடிகர் சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து பெறுகிறார். இதேபோல சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் மித்தாலி என்ற மராத்தி நடிகையுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.

சிறந்த இயக்குநருக்கான விருது வெற்றி மாறனுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான தங்கத் தாமரை விருதை அவர் பெறுகிறார். சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வெற்றி மாறனே தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்குக் கிடைத்துள்ளது. கொமெடியனாக, இயக்குநராக அறியப்பட்ட தம்பி ராமையா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த படம் மைனா. இந்தப் படத்துக்காக தம்பி ராமையா, சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. நம் கிராமம் என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார். சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவரைத் தேடி வந்துள்ளது. தமிழில் சிறந்த படமாக தென் மேற்குப் பருவக் காற்று திரைப்படம் தேர்வாகியுள்ளது. ஆடுகளம் படத்தில் நடன வடிவமைப்பு செய்திருந்த தினேஷுக்கு சிறந்த நடன அமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ் மோகன் விருது பெறுகிறார். சிறந்த கலை - தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.

ஆடுகளம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடன வடிவமைப்பு, சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது ஆகியவை ஆடுகளம் படத்துக்குக் கிடைத்துள்ளது. அதேபோல சிறந்த எடிட்டிங்குக்கான விருதும் ஆடுகளம் படத்திற்காக கிஷோருக்குக் கிடைத்துள்ளது. ஈழக் கவிஞருக்கு சிறப்பு விருது ஆடுகளத்தில் தனுஷின் குருவாக நடித்தவரான ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 18 மே, 2011

சமச்சீர் பாட‌ப்பு‌த்தக‌ங்க‌ளி‌ன் ‌‌வி‌நியோக‌ம் த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.


சம‌ச்‌‌சீ‌ர் க‌ல்‌வி பாட‌‌‌த்‌தி‌ட்ட த‌மி‌ழ் பு‌த்தக‌ங்க‌ளி‌ல் சில ப‌க்க‌ங்களை ‌‌நீ‌க்க த‌‌‌மிழக அரசு முடிவு செ‌ய்து‌ள்ளது. இதனா‌ல் பாட‌ப்பு‌த்தக‌ங்க‌ளி‌ன் ‌‌வி‌நியோக‌ம் த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

திமுக அரசு கடந்த ஆண்டு 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. இணையதளங்களிலும் புத்தகங்கள் வெளியாகி உள்ளன.

6 முத‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு வரை‌யிலான த‌மி‌ழ் பாடநூ‌ல் பு‌த்த‌க‌ங்க‌ளி‌ல் இட‌‌ம் பெ‌ற்று‌ள்ள செ‌ம்மொ‌ழி வா‌ழ்‌த்து‌ப்பாட‌ல் உ‌ள்‌‌ளி‌ட்ட ‌சில பாட‌ங்களை ‌நீ‌க்குவத‌ற்கு ப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறை முடிவு செ‌ய்து‌ள்ளது.

கு‌றி‌ப்‌பி‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ள் ‌( தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் செம்மொழி மாநாடு மற்றும் முதல் அமைச்சராக இருந்த கலைஞரின் வாழ்க்கை வரலாறு ) நீ‌க்க‌ப்ப‌ட்ட‌ ‌‌பி‌ன்ன‌ர் பு‌த்தக‌ம் ‌‌வி‌நியோக‌ம் தொட‌ங்க உ‌ள்ளது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ப‌ள்‌ளி க‌ல்‌வி‌‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌சி.‌வி.ச‌ண்முக‌ம், செ‌ன்னை‌‌யி‌ல் பாடநூ‌ல் கழக அலுவலக‌த்‌தி‌ற்கு வ‌ந்த அ‌திகா‌ரிக‌ளிட‌ம் ஆலோசனை நட‌த்‌தின‌ா‌ர்.

பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ப‌ள்‌ளி‌க் கூட‌ம் ‌‌திற‌க்க‌ப்படுவத‌ற்கு மு‌ன் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி பாட‌த்‌தி‌ட்ட‌ பு‌த்தக‌ங்க‌ள் ‌‌வி‌நியோ‌கி‌க்க‌ப்ப‌ட்டு ‌விடு‌ம் எ‌ன்றா‌ர்.

திருமண உதவி திட்டம் யாருக்கொல்லம் கிடைக்கும்

|
திருமண உதவி திட்டம் யாருக்கொல்லம் கிடைக்கும் :

இரண்டு குழந்தைகள்
என்ற நிபந்தனையுடன் அரசு பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு அளித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நாளிலே ரேஷனில் 20 கிலோ அரிசி இலவசம் உள்பட 7 திட்டங்களை நிறைவேற்றும் வகையில் அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதில், ரேஷனில் 20 கிலோ இலவச அரிசி மற்றும் அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு சலுகை 6 மாதமாக உயர்வு ஆகிய திட்டங்களுக்கான அரசாணைகள் நேற்று வெளியிடப்பட்டன.

அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாதம் காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து 2 குழந்தைகள் என்ற நிபந்தனையுடன் அரசு பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவதாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன் நேற்று வெளியிட்ட அரசாணையில் தெரிவித்துள்ளார்.


படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இந்த திட்டத்தின்படி படித்த ஏழைப் பெண்களைப் பொருத்தவரை, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5-ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும்.

மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். இவர்களின் தந்தைக்கு ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்தைத் தாண்டக்கூடாது. இந்த தகுதியுடைய ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம் நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.


இதுபோல இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரின் ஆண்டு வருமானமும் ரூ.24 ஆயிரத்திற்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு திருமண உதவித் திட்டங்களின் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள். அதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.290 கோடி கூடுதலாக செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.செவ்வாய், 17 மே, 2011

இத இத தான் எதிர் பார்த்தோம் ........

இத இத தான் எதிர் பார்த்தோம் ..................
ரௌடி யாராக இருந்தாலும் , அடங்குங்க இல்லாவிட்டால் ,
அடக்கப்படுவீர்கள் அல்லது அடைக்கப்படுவீர்கள் என்பது தான் இதன் அர்த்தம் ........
ஆரம்பமே அமர்களமா தான் இருக்கு .

ரௌடிகளுக்கு நேற்றிலிருந்து வைத்தால போறதா கேள்வி .........
நாய் சேகர் மாதிரியான ரௌடிகள் எல்லாம் குகைக்குள்ள போய் பதுங்குவதை கேள்வி படுறோம் ....
ஆள் கடத்துறவங்களை பற்றி முதல்ல ஒரு சர்வே பண்ணி டாப் லிஸ்ட்ல இருக்கறவன முதல்ல போட்டா , அடுத்தவனுங்க தன்னால அடங்குவானுங்க ...

ஜெயின் அறுக்குறதுல , மொபைல் திருடறது சொல்லவே கூச்சமா இருக்கு, நாம வெட்கப்பட்டே ஆகனும் , காரணம் கல்லூரி பசங்க கொஞ்ச பேர் ஜாலியா வாழ்க்கைய அனுபவிக்க இந்த வேலைகல செய்யறதா கேள்வி பட்டோம் .......
காவலர்கள் சரியாக நடந்து கொண்டால் இந்த சின்ன பயலுங்க எல்லாம் ஏன் தைரியமா இப்படி இறங்குறானுங்க ..............

உடனே மனித உரிமை மீறல் அப்படின்னு யாராவது ஆரபிச்சீங்கன்னா !
அவங்க அவங்க வீட்டுல அல்லது அவங்களுக்கு நடந்தா என்ன பேசுவாங்க அப்படின்னு தான் கேட்க சொல்லுது என் மனசு .............
நல்லவன எதுக்கையா என்கவுண்டர்ல போட போறாங்க .........
இருந்தாலும் கொஞ்சம் கவனமா தான் காவல் துறை செயல் படனும் .
அதை விட முக்கியம் காவல் துறைக்குள்லாற இருக்குற கருப்பாடுகளை முதல்ல பல்ல புடுங்கி வைக்கனும் .

மக்கள் நிம்மதியா வெளியில போக முடியல ..............
அறிவிப்பே மனதிற்கு கொஞ்சம் நம்பிக்கை பிறக்கின்றது ....
நல்லது நடக்க என்றும் வாழ்த்தி துணை இருப்போம் .....


சென்னை: சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.கே.திரிபாதி 3 ஆண்டுகள் தென் சென்னை இணை போலீஸ் கமிஷனராக பணியாற்றியபோது தான் பிரபல தாதா அயோத்திகுப்பம் வீரமணி உள்பட 12 ரெளடிகள் `என்கெளண்டரில்' போலீசாரால் போட்டுத் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இவரே கமிஷ்னராகியுள்ளதால் சென்னை ரெளடிக் கும்பல்களிடையே பெரும் அச்சம் நிலவுவதாகத் தெரிகிறது.

அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமாரின் பக்கபலத்தோடு ரெளடிகளை வேட்டையாடினார் திரிபாதி. இதனால் பல ரெளடிகள் சென்னை நகரை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்ததும் நடந்தது.

இந் நிலையில் சென்னை போலீஸ் கமிஷ்னராக பதவியேற்ற திரிபாதி அளித்த பேட்டி:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து அரசு கடமையாற்றும் என்று முதல்வர் கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, சென்னை நகரில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து போலீசார் பணியாற்றுவார்கள்.

ரெளடிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அனைத்து குற்றங்களையும் குறைப்பதற்கு உரிய வழிவகை காணப்படும். செயின் பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி, திருட்டு போன்ற எல்லாவித குற்றங்களையும் தடுப்பதற்கும், நடந்தவற்றை கண்டுபிடிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 10 ரூபாய் கூட மக்களுக்கு இழப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் சென்னை போலீசாரின் செயல்பாடு இருக்கும்.

மக்கள் இரவு நிம்மதியாக தூங்கிவிட்டு, காலையில் நல்லபடியாக எழுந்து சூரிய உதயத்தை பார்க்கவேண்டும். அதற்கேற்ற வகையில் போலீசாரின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அது நிறைவேற்றப்படும். குழந்தைகள் நல்லபடியாக பள்ளிக்கு போய்விட்டு சந்தோஷமாக பயமில்லாமல் வீடு திரும்பிவர வேண்டும். பெற்றோர்களுக்கு, நமது குழந்தைக்கு என்ன ஆனதோ? என்ற பயம் இருக்கக்கூடாது.
அதுபோல வீடுகளில் பெண்களும், முதியோர்களும் தனியாக பயமில்லாமல் இருக்கும் வகையில் ஒரு நல்ல சூழ்நிலை உருவாக வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னை போலீசார் இதை ஒரு சவாலாக ஏற்று வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

ரவுடிகள் மீது `என்கெளண்டர்' நடவடிக்கைகள் மீண்டும் எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, `என்கெளண்டர்' என்பது போலீசாரின் கொள்கையல்ல. குற்றவாளிகளை பிடிக்கும்போது மோதல் ஏற்பட்டால், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள போலீசார் பயன்படுத்தும் கடைசி ஆயுதம்தான் அது என்றார்.

புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாரங்கியைப் போல இவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவரே என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 16 மே, 2011

7 நலத்திட்டங்களில் இன்று கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா


சென்னை, மே 16- தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, இன்று மாலை புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்று முதல்வர் பணிகளை கவனிக்கத் தொடங்கினார். ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் உட்பட 7 கோப்புகளில் அவர் இன்று கையெழுத்திட்டார்.

ஏழைகளுக்கு
20 கிலோ இலவச அரிசி மற்றும் பரம ஏழைகளுக்கு 35 கிலோ இலவச அரிசி,

அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 6 மாதங்களாக அதிகரிப்பு,

பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ. 50,000 ஆக உயர்வு,

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் இலவசத் தங்கம்,

மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ. 2000 ஆக உயர்வு,

முதியோர் உதவித்தொகை ரூ. 1000 ஆக உயர்வு

ஆகிய 7 உத்தரவுகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.தமிழகத்தை இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா தெரிவித்தார்.

அமைச்சர்கள் இலாக்கா முழு விவரம்


1. ஜெயலலிதா (ஸ்ரீரங்கம்) & முதல்வர் (பொதுத்துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., பொது நிர்வாகம், டிஆர்ஓ, லஞ்ச ஒழிப்பு, காவல்துறை, உள்துறை).
2. ஓ.பன்னீர்செல்வம் (போடி நாயக்கனூர்) & நிதியமைச்சர்(நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் பாஸ்போர்ட்).
3. கே.ஏ.செங்கோட்டையன் (கோபிச் செட்டிபாளையம்)&வேளாண்துறை அமைச்சர் (விவசாயம், விவசாய பொறியியல், வேளாண் சேவை கூட்டுறவு, தோட்டக்கலை, சர்க்கரை அபிவிருத்தி மற்றும் தரிசு நில மேம்பாடு).
4. நத்தம் ஆர்.விஸ்வநாதன் (நத்தம்) & மின்துறை (மின்சாரம், முறைசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மொலாசஸ்).
5. கே.பி.முனுசாமி (கிருஷ்ணகிரி) & உள்ளாட்சி துறை அமைச்சர்(நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள் மற்றும் பஞ்சாயத்து யூனியன்கள், வறுமை ஒழிப்பு திட்டம், நகர்புறம் மற்றும் ஊரக குடிநீர் வழங்கல்).
6. சி.சண்முகவேலு (மடத்துகுளம்) & தொழில்துறை அமைச்சர் (தொழில்துறை, இரும்பு கட்டுப்பாடு, சுரங்கங்கள்&கனிமங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகள்).
7. ஆர்.வைத்திலிங்கம் (ஓரத்தநாடு) & வீட்டுவசதித் துறை அமைச்சர்(வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம், இடம் கட்டுப்பாடு, நகர திட்டம், நகரப்புற மேம்பாடு மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்).
8. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கலசப்பாக்கம்) & உணவுத்துறை அமைச்சர்(உணவு, சிவில் சப்ளை, நுகர்வோர் பாதுபாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாடு).
9. சி.கருப்பசாமி (சங்கரன்கோவில்) & கால்நடைத்துறை அமைச்சர்(கால்நடை, பால்வளம்).
10. பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி) & உயர்கல்வி துறை அமைச்சர் (உயர்கல்வி, தொழில்கல்வி, மின்னணு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்).
11. சி.வி.சண்முகம் (விழுப்புரம்) & பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் (பள்ளிக்கல்வி மற்றும் தொல்லியல்).
12. செல்லூர் கே.ராஜு (மதுரை மேற்கு) & கூட்டுறவுத்துறை அமைச்சர்(கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவவீரர் நலன்)
13. கே.டி.பச்சமால் (கன்னியாகுமரி) & வனத்துறை அமைச்சர் (வனங்கள், வனம் மற்றும் சின்கோனா).
14. எடப்பாடி கே.பழனிச்சாமி (எடப்பாடி) & நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்(நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங் கள்).
15. எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்) & அறநிலையத்துறை அமைச்சர் (இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் கலாச்சாரம்)
16. கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு) & பொதுப்பணித் துறை, (பொதுப் பணி, நீர்பாசனம், சிறு பாசனம், திட்டப் பணிகள்).
17. எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்)& சிறப்பு திட்ட அமலாக்க துறை அமைச்சர் (சிறப்பு திட்ட அமலாக்கம் மற்றும் தேர்தல் வாக்குறுதி அமலாக்கம்)
18. டி.கே.எம்.சின்னையா (தாம்பரம்) &பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்(பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர் மரபினர், அயல்நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அகதிகள்).
19. எம்.சி. சம்பத் (கடலூர்) & ஊரக தொழில்துறை அமைச்சர்(ஊரக தொழில்துறை, குடிசை தொழில்கள், சிறு தொழில்கள்).
20. பி.தங்கமணி (குமாரப்பாளையம்) & வருவாய்துறை அமைச்சர்(வருவாய்துறை, மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடை மற்றும் அளவு, சீட்டு கம்பெனிகள் பதிவு).
21. ஜி.செந்தமிழன் (சைதாப்பேட்டை)& செய்திதுறை அமைச்சர் (தகவல் மற்றும் விளம்பரம், திரைப்பட தொழில்நுட்பம், எழுதுபொருள் மற்றும் அச்சு, அரசு அச்சகம்).
22. எஸ். கோகுலஇந்திரா (அண்ணாநகர்)& வணிகவரித் துறை அமைச்சர்(வணிகவரி, முத்திரை தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு)
23. செல்வி ராமஜெயம் (புவனகிரி) & சமூக நலத்துறை அமைச்சர்(சமூக நலம், குழந்தைகள் நலன், மதிய சத்துணவு, ஆதரவற்றவர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, ஆதரவற்றோர் இல்லம், மாற்று திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம்).
24. பி.வி.ரமணா (திருவள்ளூர்) & கைத்தறித் துறை அமைச்சர்(கைத்தறி மற்றும் துணி நூல், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்).
25. ஆர்.பி.உதயக்குமார் (சாத்தூர்) & தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்( தகவல் தொழில்நுட்பம்).
26. என்.சுப்பிரமணியன் (கந்தர்வக்கோட்டை) ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்(ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் மக்கள், கொத்தடிமை).
27. வி.செந்தில்பாலாஜி (கரூர்)& போக்குவரத் துறை அமைச்சர்(போக்குவரத்து, தேசிய போக்குவரத்து இயக்க ஊர்திகள் வாகனங்கள் சட்டம்).
28. மரியம்பிச்சை (திருச்சி மேற்கு) & சுற்றுச்சூழல் துறை அமைச்சர்(சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, சிறுபான்மையினர் நலன், வஃக் வாரியம்)
29. கே.ஏ.ஜெயபால் (நாகை) & மீன்வளத் துறை அமைச்சர்(மீன் வளம் மற்றும் மீன் வளர்ச்சி கழகம்).
30. இ.சுப்பையா (அம்பாசமுத்திரம்) & சட்டத்துறை அமைச்சர்(சட்டம் மற்றும் நீதிமன்றங் கள் மற்றும் சிறைத்துறை, பணியாளர் நிர்வாக சீர்திருத்தம்).
31. புத்தி சந்திரன் (உதகமண்டலம்) & சுற்றுலாத் துறை அமைச்சர்(சுற்றுலா, சுற்றுலா வளர்ச்சி கழகம்).
32. எஸ்.டி. செல்லப்பாண்டியன் (தூத்துக்குடி)& தொழிலாளர் நலத்துறை அமைச்சர் (தொ ழிலாளர், மக்கள் தொ கை கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, செய்தித்தாள் கட்டுப்பாடு, நகர்புறம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு).
33. டாக்டர் வி.எஸ்.விஜய் (வேலூர்) & சுகாதாரத் துறை அமைச்சர்(சுகாதாரம் மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலன்).
34. என்.ஆர்.சிவபதி (முசிறி) & விளையாட்டுத்துறை அமைச்சர் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை).

ஞாயிறு, 15 மே, 2011

34 அமைச்சர்களுடன் ஜெயலலிதா நாளை பதவி ஏற்ப்பு


34 அமைச்சர்களுடன் ஜெயலலிதா நாளை பதவி ஏற்ப்பு விழா பகல் 12. 15 மணிக்கு முதல்வராக பதவி ஏற்கின்றார் .
சென்னை: 3வது முறையாக முதல்வராகும் ஜெயலலிதா தலைமையில் நாளை அதிமுக அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அதிமுக நாளை ஆட்சியமைக்கிறது. மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல்வராகிறார். இதையடுத்து அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். பதவியேற்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஜெ. ஜெயலலிதா - முதல்வர்,
ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்,
கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்,
நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்,
கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை,
அமைச்சர் சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்,
ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்,
அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்,
சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்,
பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர்,
சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்,
செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை,
அமைச்சர் கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்,
எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்,
கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்,
எஸ்.பி. வேலுமணி - சிறப்புத்திட்டத்துறை அமைச்சர்,
டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்,
எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்,
பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்,
ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர், எஸ்.
கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்,
செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்,
பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்,
ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,
என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்,
வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்,
என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்,
கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்,
இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்
புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்,
எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,
வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்,
என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்
காவல்துறை ஜெயலளித்தவிடமே இருக்கும் என்று எதிர்பாக்கலாம்