news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

அது எப்ப எப்ப எப்படி தோணும்

ட இப்ப எல்லாம் எல் .கே .ஜி . படிக்கும் குழந்தைங்க   கூட பாய் பிரண்ட், கேர்ள் பிரண்ட் அப்படின்னு சொல்றாங்க  சத்தியமா அவங்களுக்கு செக்ஸ் பத்தி தெரியாது ,ஆனால் மாற்று இனம் என்பது மட்டும் தெரியுது. அவங்களுக்கு அந்த வயசுல தோணுவது அவ்வளவே ! அதே பையனும் பொண்ணும் ஹை ஸ்கூல் ,  காலேஜ் அப்படின்னு போகும் போது எண்ணங்கள் மாறு படுத்து ஹார்மோன் சுரக்கும் போதே இப்ப எல்லாம் மனசு துடிக்க ஆரம்பிச்சிடுது, எல்லாம் சினிமா, மீடியா  இன்டர்நெட் கொடுக்கும் மாற்றம் தான். அதுவும் காமசூத்ராவை   படைச்ச  நம்மாளுங்களுக்கு செக்ஸ் பத்தி சொல்லவே தேவை இல்லை, புரிதல் குறைவாக இருந்தாலும் ஆர்வம் அதிகம். 

    லை  மறைவு காய் மறைவு    என்று சொல்லும் அந்த சுகம் இந்தியாவில மட்டும் தான் கிடைக்கும் என்று சொல்லும் அளவிற்கு இந்தியர்கள் ரசனை அதிகம் உள்ளவர்கள், என்ன நான் சொல்றது . உடுத்தும் உடைய நன்றாக யோசிச்சி பாருங்க இந்தியன் ரசனையே ரசனை தான். கோவில் சிற்பங்களை பாருங்க, அந்த வெக்க படும் அழகே தனி சுகம் .  போங்கப்பா ..... எனக்கு என்னமோ ஆகுது சே ........ நாம சர்வே என்ன சொல்லுதுன்னு  பாக்கலாமா ?
Sex
பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மாறுபடுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஆர்வகோளாறால் ஏற்படும் ஆசையானது ஐம்பது வயதில் மருத்துவம் போல செயல்படுகிறது. எந்தெந்த வயதில் பாலுணர்வு எப்படி செயல்புரிகிறது என்பதை விலாவாரியாக எழுதியுள்ளார் டிரேஸி காக்ஸ். அவருடைய செக்டஸி என்ற நூலில் கூறப்பட்டுள்ளவைகளில் இருந்து சில பகுதிகள்

ஆர்வம் அதிகரிக்கும் இருபது

ருபது வயது என்பது டீன் ஏஜின் முடிவு. இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி உறவு குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம்.

20 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலுறவுப் பொசிசன்கள் குறித்து நிறைய ஆர்வம் இருக்குமாம். அதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருக்குமாம். 2006ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 20 வயதைக் கடந்த பெண்களுக்கு, சக பெண்களுடன் படுத்திருக்கும்போது ஆர்கசம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 76 சதவீதம் பெண்களுக்கு இப்படி ஆர்கசம் வருமாம்.

இதுவே இந்த வயதில் ஆண்களுடன் படுக்கும் பெண்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் ஆர்கசம் வருமாம். அதாவது நிஜத்தை விட நிழலில் தான் இந்த வயதுப் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் இருக்கும் என்கிறார் டிரேஸி.

பறக்கும் வயது முப்பது

வாழ்க்கையைப் பற்றிய அச்சம் அகன்று வேலை, திருமணம் என்று செட்டிலாகும் வயது முப்பது. இந்த வயதில் ஆண்களும், பெண்களும். வீட்டுக்குள் வைத்திருந்த செக்ஸை வெளியிலும் கொண்டு போகத் துடிப்பார்களாம். வித்தியாசமான சோதனைகளை செய்து பார்க்க விரும்புவார்களாம்

இந்த வயதில் பெரும்பாலானோருக்கு குழந்தைகள் வந்து விடும். எனவே அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் சற்று சுருங்கிப் போயிருக்குமாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது கணவனும், மனைவியும் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை கூட செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்களாம்.

30 வயதைத் தாண்டிய பெண்களில் 90 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம். அதேசமயம், 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு இது 23 சதவீதமாகவே உள்ளதாக கூறியுள்ளார் டிரேஸி காக்ஸ்.

இந்த வயதுக்காரர்கள் ஒருவரை ஒருவர் வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது, உள்ளிட்டவற்றை அதிகம் நாடுவார்களாம். குழந்தைச் செல்வங்கள் நடுவில் வந்து விட்டதால் சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது, பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு அவசர கதியில் செயல்படுவதும் உண்டாம். அதேபோல வார இறுதி நாட்களில் ஜோடியாக சுற்றுவது, கையைப் பிடித்தபடி உலா வருவது, நெருக்கமாக இருப்பது போன்றவற்றிலும் முப்பது வயதுக்காரர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்குமாம்.

நாலும் தெரிந்த வயது நாற்பது

நாற்பதை கடந்த ஆண்கள் நேரடி செக்ஸ் உறவை விட படம் பார்ப்பது, செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெளி வேலைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்களாம். ஆனால் பெண்களுக்கோ இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக்குமாம்.

மாதாந்திர உறவு எண்ணிக்கை இந்த வயதினர் மத்தியில் குறைவாக இருந்தாலும் மனசுக்குள் செக்ஸ் ஆசை நிறையவே இருக்குமாம். ஒரு தடவையாக இருந்தாலும் அதை நிறைவாக, நிதானமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்களாம்.

டிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவரது மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ள கருத்துக்களாகும். ஆனால் இது நம் இந்திய தேசத்திற்கு எந்த அளவிற்கு பொருந்தி வரும் என்பது தெரியவில்லை.

தமிழன் இன்னும் தலை சாயவில்லை


வீரம் கொண்டு எழுந்து நிற்கும் இளைய தலைமுறை 
அணைத்து வாழ்த்து  சொல்ல துடிக்கும் மனசு , தமிழனுக்கு வீரமும் தன்மானமும் என்றும் மாறது என்பதை வெளிப்படுத்திய மாணவனை  என்னவென்று பாராட்ட , புரியாத தமிழின விரோத ( தமிழனுக்குள்ளயே) மட சாம்ரானிகளை என்னவென்று சொல்ல ...............
 
கல்வி அமைச்சரின் காலில் விழுந்து வணங்க மறுத்த முல்லைத்தீவு தமிழ் மாணவன்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது அதிகூடிய புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களான ப.சேதுராகவன், ம. நிதர்ஷிகா ரமேஷ், சர்மிகா சர்வானந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது ஏனைய மாணவிகள் இருவரும் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும் சேதுராகவன் மாத்திரம் அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான்.
அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்திய போதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளான போதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை, தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்' என கூறினான்.
இவ்வைபவத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர். ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

யுத் பதிவர் சந்திப்பு ( என் அனுபவம் )

யுத் பதிவர் சந்திப்பு :
சென்னை, கே.கே.நகர் , முனுசாமி சாலையில் டிஸ்கவரி புக் சென்டர் முதல் மாடியில் 04.09 .2011 ஞாயிறு அன்று மாலை 6 .00 மணிக்கு நடைபெற்றது( அட நான் அப்பதான்பா போனேன் )..
நான் முதல் முறையா பதிவர் சந்திப்புக்கு போய் இருக்கேன் அப்பின்னு என்னாலையே நம்ப முடியல காரணம் பல வேலைகளுக்கு இடையில் கண்டிப்பாக போய்யே ஆகவேண்டும் என்ற முடிவோடு போய் சேர்ந்தேன் . முதலில் தயக்கமா தான் படி ஏறினேன் காரணம்துவரை யாருடனும் அறிமுகம் இல்லை , பேசியது , சாட் பண்ணது கூட இல்லை கமென்ட் போட்டிருப்பேன் அவ்வளவே !. பதிவுலகில் எனக்கு அறிந்த நபர் வால்பையனும் , ஈரோடு சசிகுமாரும் தான் . ஆனால் பாருங்க கதவை திறந்து உள்ளே போன உடனே பிலாசபி பிரபாகர் கண்டுபிடித்து விட்டார் வாங்க நீங்க ரெட்ஹில்ஸ் பாலா தானே! என்று கேட்டவுடன் ஒரு இன்ப அதிர்ச்சியோட கலந்த சந்தோசம் . உடன் என்னை சந்திப்புக்கு அழைப்பு விடுத்த சிவகுமாரும் புன்னகையுடன் உடன் இருந்தார் . பிறகுதான் பார்த்தேன் எதிர் பார்த்ததை விட அதிகமாகவே பதிவர்கள் வந்திருந்தனர் .

எல்லோரையும்
அறிமுகம் செய்து கொள்ள ஒவ்வொருவராக சென்று அவர்களுக்கு தோன்றியதையும் அவர்களை பற்றியும் சொல்லி வந்தமர்ந்தனர் . அனைத்தையும் என்னால் கேட்க முடிய வில்லை காரணம் அனைத்து பதிவர்களையும் ராகிங் செய்துகொண்டிருந்தனர் ....... என்முறை வந்த போது தயக்கம் ஏதும் இல்லை பதிவர்களை நினைத்துதான் பயம் காரணம் முதல் சந்திப்பு , பேச ஆரபித்தால் மனதில் தோன்றுவதை பேசி விடுவேன் . அதனால் பலமுறை பலசந்தர்பங்கள் தந்த பாடம் அதிகம் கொஞ்சபேருக்கு பிடிக்காம போய்டும் உண்மை சுடும் என்பது போல, அதிகம் பேசாதே! இந்த முறை என்ற எண்ணத்தோடு பேச சென்று என்னை பற்றியும் என் பதிவுகள் பற்றியோ யார் மனதிலும் பதிய வாய்ப்பே இருந்திருக்காது காரணம் என் மனதில் ஓடிய எண்ணங்கள் . வந்தமர்த்தவுடன் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தேன் .

பேச்சுகள்
மிகவும் ஜாலியாகவும் , விமர்சனம் , நையாண்டி , நக்கல்ஸ்சோட நகர்ந்தது , பிரபல பதிவர்கள் ( சீனியர் ஜூனியர் என்ற வேறுபாடு எல்லாம் வேண்டாம் என்று சொன்னார்கள் அதனால் ) பேசினார்கள் குறிப்பாக கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , சுரேகா , யுவகிருஷ்ணன் மற்றவர்கள் மன்னிக்கவும் பேசியவை அனைத்தும் ஞாபகம் இருக்கு ஆனால் அவர்கள் பெயர்கள் ஞாபகம் இல்லை . நன்றாகவும் , நம்பிக்கையாகவும், நம்பும்படியும் , சில யதார்த்தங்களையும் அலசி ஆராய்ந்தனர். இப்போதைய பதிவர்கள் நிலை என்ன எப்படி போய்கொண்டிருகின்றது என்றொல்லாம் பேசப்பட்டது , நான் பேசி இருந்தாலும் பலபேர் பேசியதை தொகுத்ததாக இருந்திருக்கும் காரணம் அவ்வளவு ஆதங்கம் மனதில் ஓடிகொண்டிருந்தது . பிலாசபி பிரபாகர் , சிவகுமாரும் பேசும் படி சொன்னார்கள் ( கொஞ்சம் வற்புறுத்தவும் செய்தார்கள் ) மறுத்து விட்டேன் காரணம் அறிமுகமே இல்லாத நான் எதையாவது சொல்லி வைக்க அது பதிவர்கள் மனம் நோக செய்யுமோ என்ற எண்ணம் தான் . ஆனால் பிறகுதான் தெரிந்தது அவர் பிரபலமாவது புதியவராவது அனைவரையும் கலாயித்து கொண்டிருந்தனர்.


கேபிள்
சங்கர் அவர்களும் , ஜாக்கி சேகர் அவர்களும் உண்மையிலேயே ஜாலியான பதிவர்கள் தான் . இதில் கொஞ்சம் மாற்று கருத்தோடு சிவகுமார் மட்டும் பேசினார் ஆனால் கவனிக்கவேண்டிய கருத்தும் கூட , தனது சொந்த அனுபவத்தையும் சேர்த்தே சொன்னார். அவர் ஆதங்கம் புரிந்தது அதற்கும் பதிலும் அளிக்கப்பட்டது தாயகத்தை மறந்து விட்டு இலங்கையை பிரச்சணையை மட்டும் பெரிதாக எடுத்துகொள்வதை தான் ஆதங்கமாக வெளிபடுத்தினார்.


இடையே குடிக்க தண்ணீர் பாட்டல் தரப்பட்டது பிறகு சூடாக டீ கூட தந்தார்கள் பாவம் எந்த புள்ள செலவு செஞ்சுதோ தெரியல அவர்களுக்கு நன்றி ........ கடைசியாக அனைவரும் கலந்துரையாடல் போல் நடந்தது அதில் என் ஆதங்கத்தையும் அரசு அறிவித்த கல்வி கட்டணத்தை எந்த தனியார் பள்ளிகளும் வாங்குவதில்லை என்ற ஆதங்கமும் வெளிபடுத்தினேன் , பதிவர்கள் அதை அதிகம் கண்டுகொள்வதில்லை என்று பேசிகொண்டிருக்கும் போதே சபை வேக வேகமாக கலைந்தது நேரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். அதன் பிறகும் சென்னை உயர் நீதிமன்ற அட்வகேட் ( அட அவரும் பதிவர் தாங்க ) அவர்களுடனும் பேசினேன் கேபிள் சங்கர் , ஜாக்கி சேகர் , சிவகுமார் , இன்னும் சில நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் . மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது சென்னை பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டது . ...

பிலாசபி பிரபா கூட தான் போட்டோ எடுத்துகல ( அப்ப அவர் இல்லப்பா )

குறிப்பு : இரண்டு பெண் பதிவர்களும் கலந்து கொண்டனர் என்பது விசேஷம். அடுத்து யார்கிட்டையும் சொல்லிடாதீங்க பிலாசபி பிரபாகர் ஒரு சந்தேகத்தை என்னிடம் கேட்டார் நான் உங்களை எங்க வயது காரராக இருப்பீங்கன்னு நினைச்சேன்னு சொன்னாரு ( அட 25 வயசுக்குள்ள ) அட நானும் யுத் தாங்க அப்படின்னு சொல்லி சமாளிச்சிட்டேன் . என்ன பிலாசபி பிரபாகர் கிட்ட சொல்லிட்டு கிளம்ப முடியல ( அட அவர அங்க காணோம் ) சிவகுமார் மற்றும் சில பதிவர்கள் இடமும் அடுத்த பதிவர் சந்திப்புல சந்திக்கலாமுன்னு சொல்லிட்டு கிழ இறங்கினா புக் செண்டர்ல இன்ப அதிர்ச்சி கேபிள் சங்கர் சார் அன்பா பிஸ்கட்டு சாப்பிட கொடுத்தாரு. அவருக்கும் நன்றி , இப்படியாக என் முதல் பதிவர் சந்துப்பு முடிந்து வீட்டுக்கு கிளப்பினேன் ........................ மக்கா ... .