news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

திங்கள், 28 நவம்பர், 2011

நீங்களும் இந்த மண்ணுல தானே பிறந்தீங்க!!

அந்நிய நேரடி முதலீட்டினால் வேலை வாய்ப்பு பெருகும் – மத்திய அரசு பிரச்சாரம்
ஏன் ? பன்ன மாட்டனுங்க , வாங்கினாக , வாங்குற காசுக்குகூவதானே செய்யணும் (விளம்பரம் ) . நாட்டை வளர்ச்சி அடைய செய்யவும் , மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தவும் காங்கிரஸ் மட்டுமே பாடு படுகின்றது . மக்களும் அடுத்தவங்களும்e நாட்டை சூன்னியமாக்க துடிக்கின்றனர் .
என்னே ஒரு தொலைநோக்கு திட்டம் . இப்படி சொல்லி சொல்லி தானே டா என்னைக்கோ வளர்ந்திருக்க வேண்டிய நாட்டை அமெரிக்காவிடம் அடமானம் வச்சீங்க . இப்ப மொத்தமா வித்துடலாமுன்னு சஊன்னய் இத்தாலிகாரியும் , அவளுக்கு வெஞ்சாமரம் வீசும் சூடு சொரணை என்பது என்னவென்றே தெரியாதா காங்கிரஸ்காரங்களும் ( இதில் மட மன்மோகன் சிங் முதல் சூன்னியகரன் பிரணாப், இன்னும் திக்கு தெரியாது எதையாவது திக் திக் என உளரும் திக்விஜய் ,என ,நிறைய பேறு இருக்காங்க, அட நம்ம சிதம்பரம் இல்லாமலா , நாட்டுக்கு எவ்வளவு தியாகம் செய்து மக்களின் ஆதரவில் பல லட்சம் வோட்டு வித்தியாசத்துல ஜெயச்சவரு இல்ல மந்திரியா இருக்காரு .

அட பாவி பாயளுங்களா எப்படி டா நீங்களும் இந்த மண்ணுல தானே பிறந்தீங்க . ஹோ உங்க தலைவி அம்மா சாரி அன்னை இத்தாலிகாரி இல்ல, அப்ப சரி உங்க கிட்ட நாட்டு பற்று , மண்ணை பத்தி எல்லாம் பேச கூடாது . உங்கள என்னைக்கு இந்த நாட்ட விட்டு துரதுரமோ அன்னைக்குதான் இந்தியா வளரும், நாட்டு மக்களுக்கு பிடிச்சா சனி எல்லாம் விலகும் .

அமெரிக்க காரனே எந்த நாட்டு கிட்ட பிச்சை எடுக்கலான்னு அலையறான் . நீங்க ஏன்டா அவன புடிச்சி தொங்கறீங்க . நாம எந்த சனி பயலும் வேண்டாம் தன்மானத்தோட வாழணுன்னு நினைகுறோம் . வளருகிறோம் அப்படின்னு மாய தோற்றத்த உருவாக்கி நம்மள மொத்தமா விக்க பாக்குறானுங்க இந்த காங்கிரஸ்காரனுங்க . கை நீட்டி வாங்கிட்டனுங்க இல்ல அத எப்படி திருப்பி குடுப்பானுங்க .

விருப்பம் இல்லாத மாநிலத்தில வேண்டாமாம் . டேய் நாய் பயலுங்களா உங்க ஈன புத்தி எங்களுக்கு தெரியாது . நாலு பசு கதைய நாங்க சின்ன வயசுலையே படிச்சிட்டோம் . பிரித்தாளும் மனப்பான்மை கொண்ட சின்ன புத்திகாங்களா? உங்க எண்ணம் ஈடேற கூடாது . அப்படி நடந்தால் மீண்டும் ஒரு சுதந்திர யுத்தம் நடக்கும் என்பதை மறவாதீர்கள் . அது அந்நியனை மட்டும் அல்ல , இந்த நாட்டை மதிக்காதவானை , பற்று இல்லாதவனை எல்லாம் அடியோட நாட்டை விட்டு விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை .

வியாழன், 17 நவம்பர், 2011

தலையில குண்ட துக்கி போட்டுட்டாங்க சாமியோ !


  ஏறி போச்சி ஏறிபோச்சி, எல்லா விலையும் ஏறி போச்சி , அதான் ஒட்டு  போட்டுட்டீங்க இல்ல இனி நாங்க எல்லாம் பாத்துகிறோம்,    நீங்க போய் உங்க பொழப்ப பாருங்க என்று அறிவித்து விட்டது ஜெயா அரசு.  இது எதிர் பார்த்தது தான் என்றாலும், என்ன இப்ப மத்திய அரசை கை நீட்டி காரணம் சொல்ல முடிகின்றது . அவ்வளவே ! தி.மு.க . அரசு நிர்வாக சீர்கேடு என்பது முற்றிலும் உண்மைதான் ஏற்று கொள்கின்றோம் . இந்த நிலையில் இருக்கும் அரசுக்கு எதற்கு வேண்டாத வேலை அத மாத்துறேன் இத மாத்துறேன் என்று . சும்மா இருக்க முடியாதா, இப்படியா ?அரசு மக்கள் பணத்தை சீர்ழழிக்க  வேண்டும்.

உண்மையில் உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் நிர்வாக  சீர்கேட்டை சரி செய்து நிர்வாகத்தை  சரி செய்தாலே பல ஆயிரம்  கோடி மிச்ச படுத்தலாம் . புதிதாக கட்டிடம் கட்டி அதில் நீங்க என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் . அதை விடுத்து  இருக்கும் நூலகம் , அரசு கட்டிடங்களை மாற்றுகிறேன் அன்று ஆரம்பித்து வீண் செலவுகளை செய்து பெயரை மீண்டும் கொடுத்துக்கொள்ள ஆரம்பித்து  விட்டார் ஜெயா (அவருடைய குணாதிசயம் எவன் என்ன சொல்ல என்ன எக்கேடு கேட்ட என்ன தான் நினைத்ததை முடிக்க வேண்டும் ) .

 இவனுங்க பண்ண அனைத்து கொள்ளை சீர்கேடுகள் விளைவு  இப்போது மக்கள் தலையில் தான் எல்லாம் விடிகின்றது. ஏன்டா?  எங்களுக்கு  சம்பளம் உயரல, கூலி உயரல , விவசாயிக்கு உரிய விலை கிடைக்கல  ஆனால் தினமும்  பொருட்கள் விலை மட்டும்  ஏறிகிட்டே போகுது . எங்க தான்  போகுது பணமெல்லாம் . அடிச்ச பணத்தை கொண்டு வாங்கடா  மட பயலுங்களா !. அரசு அதிகாரிகள் அடிச்ச கொள்ளை , அரசியல் வாதிகள் அடிச்ச கொள்ளை , பெரும்  முதலாளிகள் அடிச்ச வரி ஏயப்பு கொள்ளை . மின்சார திருட்டு , டெண்டர்  விட்டு அடிச்ச கொள்ளை எல்லாத்தை வசூலிச்சா  நாம மத்திய அரசுக்கு கடன் கொடுக்கலாம் . நடக்குமா ? அதுதான் நடக்காதே ! . இளிச்ச வாயன் மக்கள் தானே ! . அடுத்து யாருகிட்ட கடன் வாங்குறது என்று யோசிக்க ஆரபித்து விட்டனர் தமிழ் நாட்டு மக்கள் . இலவசம் எவன் கேட்டான் உங்ககிட்ட நீங்களா போட்டி போட்டு அறிவிச்சிட்டு , இப்ப நீங்க  தான்   பணம் கொடுக்கணும் அப்படின்னு சொன்ன என்ன அர்த்தம் ஜெயலலிதா அவர்களே !

மானங்கெட்ட மத்திய அரசு எதையும் தரமா ட்டான்னு தான் உங்களுக்கு தெரியுமே ! அப்புறம் எப்படி அறிவிச்சீங்க மேடம் . மக்கள் மீது இருக்கும் அபரிதமான நம்பிக்கை, எத செஞ்சாலும் கேக்க மாட்டான் அப்படின்னு தானே ! .
பெரிய தலைங்க கிட்ட கை வையுங்க . வருமான வரிய ஒழுங்க வசுல்பன்னுங்க. முதலாளிங்க அடிக்கும் கொள்ளைய தடுத்து நிறுத்துங்க . ஏன்? மீண்டும் மீண்டும்  அடிமட்ட நடுத்தர மக்களின் வைத்துலயே மாறி மாறி அடிக்கிறீங்க .இப்ப
 எதிர் கட்சிகளுக்கு அல்வாவ மொத்தமா சாப்பிட்ட திருப்தி . இவனுங்க பண்ண கொள்ளை தான், இதற்க்கு முதற்காரணம்  என்பது  மக்களுக்கு தெரியும் . இருந்தாலும் வெட்கமே  இல்லாம அரசியல்  பண்ண போறான்னுங்க .........    மாட்டிகிட்டு முழிக்கிறது என்னமோ மக்கள் தான் ........ஐயோ தாங்கல தாங்கல தலை பாரம் தாங்கல    
         
 சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து  24 ரூபாயாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 42 பைசா என்றும்; விரைவு, மற்றும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 32 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 56 பைசா என்றும்; சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 38 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 60 பைசா என்றும்; அல்ட்ரா டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 52 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 70 பைசா என்றும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக, இதர பகுதிகளில் தற்போதுள்ள குறைந்த பட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும்; சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 


மிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரையில், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியமே மின்சார உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை மாற்றியமைப்பது பற்றி ஆய்வு செய்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை வைத்து, அந்த ஆணையம் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து முடிவுகளை அறிவிக்கும்.

இவ்வாறாக தலையில குண்ட துக்கி போட்டுட்டாங்க சாமியோ !!!!!! திங்கள், 14 நவம்பர், 2011

முருகதாஸ் (ஏழாம் அறிவு) அவர்களே !

ஏழாம் அறிவு படத்திற்கு மீண்டும் ஒரு சர்ச்சை தான் தான் மறந்து போன போதி தர்மர்ரை அதாவது  தமிழரை   வரலாற்றில் பதிவிட்டிருக்கின்றேன் என்ற கூற்று பொய்யாகி போனது . முன்னமே சீனர்கள் போதி தர்மர் பற்றிய முழு நீள   திரைப்படம் எடுத்துள்ளனர் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது .

முருகதாஸ் அவர்களே !   இது தேவா காலம் இல்லை ஆங்கில மெட்டில் அப்படியே உல்டா செய்து ( காப்பி அடித்து ) சம்பாதித்தது முடிவுக்கு வந்து விட்டது . நீங்களும் காப்பி அடியுங்கள் . அல்லது நாங்களும் தமிழில் அதை விட அருமையாக எடுத்துள்ளோம்  என்று கூட சொல்லுங்கள் .இன்று 
உலகம் நம் உள்ளங்கையில்  கொடுத்துள்ளது இணையதளம் . அதனால யாரும் பார்க்க மாட்டாங்க அப்படின்னு நினைக்க வேண்டாம் ( அட எங்களுக்கும் சேர்த்தேதான் ) .

"முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்." என்று பல தமிழர்கள் பெருமைப்படுகின்றனர்.

"போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக" கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர்.
 
அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது.
விடியோ :முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்கள் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
தகவல்(மின்னஞ்சல் வழி):   malathi.arulmani


வியாழன், 3 நவம்பர், 2011

நீதி துறையின் நேர்கொண்ட நடை, நம்பிக்கையின் பிடிப்பில் இந்தியர்

  வாழ்க நீதித்துறை , வீழ்ந்த மரியாதையை மீட்டெடுக்கும் இந்தியா என்ற நம்பிக்கை கொஞ்சம் பிறந்திருக்கின்றது . அனைவரும் ஆவலாக எதிர் பார்த்திருந்த 2 ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்ட அனைவருக்குமோ அல்லது கனிமொழிக்காவது ஜாமீன் கிடைத்து விடும் என்ற மிக பெரிய நம்பிக்கையில் தி.மு.க . வும் , கலைஞ்சர்  குடும்பமும்  காத்திருந்தனர் . முடிவு வேறு விதமாக அமைந்ததுள்ளது . ஆம் அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது . தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் மிக முக்கியமானது . 

தேச துரோகம் என்று கூறப்பட்டு இருக்கும் இவர்கள் நம்பிக்கை துரோகம் செய்துள்ள இவர்களுக்கு யார் எதிர்காவிட்டாலும் ஜாமீன் தர இயலாது என கூறிய சிறப்பு நீதி மன்றத்திற்கு தலை வணங்கியே தீர வேண்டும் .
தவறு செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் , பாடமாகவும் இருக்க வேண்டும் . அதே போல் விசாரணையை  விரைந்து முடித்து அவர்கள் சொத்துக்கள் முடக்கப்பட்டு இழந்த இழப்பீட்டை வசூலிப்பது மட்டு அல்லாமல் தகுந்த கடுமையான தண்டனை தரவேண்டும் .

அரசியல் வாதிகள் இதில் அனைவருமே ஒன்றாகத்தான் இருகின்றனர் . எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க . விசாரணை என்று வந்தால் அது முடியறதுக்குள்ள ஆயசும் முடிஞ்சிடும் , தியாகி பட்டம் எல்லாம் அதற்குள்ள கொடுத்துடுவாங்க . நம் குடும்பம் அதுக்குள்ள உலகத்துல பணக்காரர்கள் லிஸ்ட்ல வந்டுதுவாங்க. அப்புறம் என்ன ரெண்டு தலைமுறை மாறினா எவனுக்கு தெரியும் கொள்ளைகார குடும்பன்னு . பரம்பரை பணகாரன்னு அல்லவா சொல்லுவானுங்க . யோசிச்சி பாருங்க கணக்கு சரியாய் வரும் . நீயும் நானும் எந்தனை தலைமுறை மாறினாலும் இப்படியே ஏங்கியே சாகவேண்டியது தான்.       

கனிமொழி தாய் கண் கலங்கினார் என்று செய்திகள் வேறு என்ன தியாக  செம்மலையா  சீரில போட்டாங்க . இங்க பேட்டரி வாங்கி கொடுத்தான்னு   தூக்குல போடா சொல்லுறாங்க . ஆயுள் போதாதாம் . அப்புறம் இவங்களுக்கு என்ன கொடுக்கலாம் 121 மக்களுக்கு அல்வா ( நம்பிக்கை துரோகம் ) செய்த இவங்களுக்கு வெண்சாமரமா வீச முடியும் . லட்ச கனக தமிழன் சேத்துகிட்டு இருந்தப்ப கலங்காத உங்க மனசு இப்ப மட்டும் எப்படி கலங்குது . லாஜிக் உதைக்குதே !.

வாழ்க    நீதித் துறை     ஒளிரட்டும் இந்தியனின் மானம் உலக அரங்கில் , ஒழியட்டும் அரக்க குணம் கொண்ட அரசியல் வாதிகளின் கொட்டங்கள்.