news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

செவ்வாய், 6 நவம்பர், 2012

வீடுகளில் ரூ. 1.70 லட்சத்தில் சூரிய சக்தி மின் திட்டம்

  இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டமே ! மாற்று கருத்தே இல்லை . ஆனால் பல சந்தேகங்கள்  இருக்கு பொது மக்களிடம் , அதாவது நடுத்தர வர்க்கத்திடம் அதிகமா இருக்கு . சந்தேகங்களை தீர்க்க ஒரு கட்டணம் இல்ல தொலைபேசி எண் கொடுத்திருக்கலாம் பலருக்கு உபயோகமாய் இருந்திருக்கும் அனைவருக்கும் முகவரை அணுகி விவரம் தெளிவு பெற நேரம் கிடைப்பதில்லை . இதில் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வரும், சிறந்த சந்தை படுத்தும் முறையும் கூட . 
 
 இதை கண்டிப்பாக உயர் வர்க்கதினர் வீடுகளில் உபயோகபடுத்த மாட்டார்கள் . காரணம் அவர்களுக்கு எப்படியும் மின்வெட்டு இருக்க போவதில்லை அதுமட்டும் இல்லாமல் அவர்கள் உபயோக படுத்தும் மின்சாதனங்கள் உபயோக படுத்த முடியாது என்பதும் திண்ணம் . ஆனால் நடுத்தர மக்களுக்கு மிகவும் உபயோகமானது . குறைத்த பச்ச போதுமானதும் கூட , இன்வேர்ட்டர் உபயோகிப்பார்கள் குறைந்த  பச்ச  தேவை பூர்த்தியாகும்.
இதனால் மின் தேவைகளும் கொஞ்சம் பூர்த்தியாகும் .
 
  பணத்தை பூட்டி வைபவர்களும் , ஆடம்பர செலவு செய்பவர்களும் கொஞ்சம் யோசிக்கலாம் . உங்கள் தேவையை பூர்த்தி நீங்களே ஓரளவுக்கு நிறைவு செய்து கொள்ளலாம் . வெளிசத்தில் வாழலாம் . அரசாங்கம் உங்கள் வாழ்கையை வெளிச்சம் ஆக்குன்னு நினச்சிட்டு இருந்தீங்கன்னா காலத்துக்கும் இருட்டில் தான் என்பது இப்போதைய நிலையும் வருங்காலம் சூரிய சக்தி மட்டுமே அழியாத சக்தியாகவும் விளங்கும் என்பதும் நிதர்சன உண்மை .
 
அரசாங்கத்தின் தீவிர நடவடிகைகளாலே மட்டுமே இந்த திட்டம் வெற்றி பெரும் . சில இடங்களுக்கு கட்டயமாக்கவேண்டும் தொகுப்பு வீடுகள் , அடுக்கு மாடி கட்டிடங்கள் , அரசு கட்டிடங்கள் , வணிக வளாகங்கள் ஒரு பகுதி என பல விதத்தில் நடைமுறை படுத்த வேண்டும் . அப்போது தான் இத்திட்டம் விரித்து செயல் வடிவமாகும் . பொறுத்திருந்து பார்ப்போம் ............. 
 
 ஒருமுறை நிறுவி விட்டால் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்னையும் இன்றி மின் உற்பத்தி செய்ய முடியும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். வேறு பராமரிப்புச் செலவு எதுவும் இருக்காது.
தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், பல்வேறு சலுகைகளுடன் "சூரிய சக்தி கொள்கையை' அரசு வெளியிட்டிருப்பது பொதுமக்களிடையேயும், பிற நிறுவனங்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டதற்குப் பிறகு வீடுகளில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவுவதற்கான ஆலோசனையைப் பெறுவதற்காக தினமும் 10-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) அலுவலகத்தை அணுகி வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனது வீட்டில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ திட்டமிட்டு ஆலோசனை பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன். இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஏனெனில், இதுவரை சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ பல லட்சங்கள் செலவாகும் என்றும், அதன் பிறகும் தொடர்ந்து பராமரிப்புச் செலவுகள் இருக்கும் எனவும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அரசு கொள்கையை வெளியிட்ட பிறகுதான், இந்தத் திட்டத்துக்கு ஒருமுறை செலவு செய்தால் போதும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன என "டெடா' அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த ஷெரிஃப் என்பவர் கூறினார்.
மானியம் மற்றும் ஊக்கத் தொகை: மக்களிடையே சூரிய சக்தி மின் உற்பத்திக்கான ஊக்குவிப்பை ஏற்படுத்தும் வகையில், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இத்திட்டத்தை நிறுவுபவர்களுக்கு மானியத்தை அரசு அளித்து வருகிறது.
அதிகபட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது திட்டச் செலவில் 30 சதவீதம் என்ற அளவில் மானியத்தை அரசு அளித்து வருகிறது.
இதுமட்டுமின்றி ஊக்கத் தொகையையும் அரசு இப்போது அறிவித்துள்ளது. அதாவது வீட்டுக் கூரைகளில் இத்திட்டத்தை நிறுவிய நாளிலிருந்து முதல் இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 (உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை) என்ற வீதத்திலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 1 என்ற அடிப்படையிலும், அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு 50 பைசா என்ற அடிப்படையிலும் ஊக்கத்தொகையை அரசு வழங்கும்.
2014 மார்ச் 31-ம் தேதிக்குள் இத்திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே இந்த ஊக்கத்தொகையை பெற முடியும். அதோடு, மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி அளவை கணக்கிடும் வகையில் தனிப்பட்ட மீட்டரை (நெட் மீட்டர்) பொருத்த வேண்டியதும் கட்டாயம்.
இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரி ஒருவர் கூறியது:
வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவித் தருவதற்கென தமிழகம் முழுவதும் ஏராளமான முகவர்கள் உள்ளனர். இவர்களில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையில் 112 முகவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பதிவு செய்துள்ள முகவர்கள் மூலம், சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே அரசின் மானியத்தைப் பெற முடியும். இந்த முகவர்கள் குறித்த விவரங்களை அறிவதற்கு முகமை அலுவலகத்தை மக்கள் அணுகலாம். மேலும் வீடுகளில் 1 கிலோ வாட் அளவு நிறுவு திறனுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கும்.
நிறுவனங்களைப் பொருத்தவரை 100 கிலோ வாட் நிறுவு திறன் வரை அரசு மானியம் கிடைக்கும். இத்திட்டத்தை நிறுவ வங்கிக் கடனும் கிடைக்கிறது.
15 ஆண்டுகளுக்குபிரச்னை இருக்காது: சூரிய சக்தி மின் திட்டம் என்பது ஒரு முறை செய்யப்படும் செலவு என்பதால், இப்போது நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
ஒருமுறை நிறுவி விட்டால் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்னையும் இன்றி மின் உற்பத்தி செய்ய முடியும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். வேறு பராமரிப்புச் செலவு எதுவும் இருக்காது.
அதே நேரம் அவ்வப்போது சூரிய தகடுகளைத் தூசுகள் படியாமல் துடைக்க வேண்டும். தூசுகள் படிந்தால் உற்பத்தித் திறன் குறையும்.
மானியத்தை கழித்துவிட்டு செலுத்தினால் போதுமானது...வீடுகளில் 1 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை செலவாகும். இதில் அதிகபட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது மொத்த திட்டச் செலவில் 30 சதவீத அளவு மானியத்தை அரசு வழங்கும்.
இந்த மானியத்தை கழித்துவிட்டு மீதித் தொகையை முகவரிடம் செலுத்தினால் போதுமானது.
இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1 கிலோ வாட் மின்சாரத்தில் 4 டியூப் லைட்டுகள், 3 மின் விசிறிகள், ஒரு டிவி அல்லது கம்ப்யூட்டரை இயக்க முடியும்.

வியாழன், 1 நவம்பர், 2012

மி‌‌ன்வெ‌ட்டால் ம‌க்களை‌விட ஆ‌யிர‌ம் மட‌ங்கு அரசு கவலை

மி‌‌ன்வெ‌ட்டால் ம‌க்களை‌விட ஆ‌யிர‌ம் மட‌ங்கு அரசு கவலை படு‌கிறது எ‌ன்‌கிறா‌ர் ஜெயல‌லிதா.

அப்ப இனி மெழுகு வத்தி தானா !!!!!


 ஆஆ என்ன ஒரு அற்புதம்  அம்மாவே கவலை படுகிறார்  . என்னமா இப்படி சொல்லிடீங்க நாங்க 24 மணிநேரமும் மின்சாரம்  இல்லை இன்னலும் பரவாஇல்லை நீங்க கவலை படாதீங்க . கட்சி தொண்டங்க கூட இப்படி சொல்ல மாட்டான் . அம்மாக்குகூட காமெடி எல்லாம் வருது ........ ஹ ஹ ஹ சிரிங்கப்பா !.

 மின்சாரபபற்றாக்குறை, மினஉற்பத்திககுறைவபோன்பிரச்னைகளசரி செய்வது, சீரசெய்வதஎன்றாலஅதஒரநாளிலோ, ஒரவாரத்திலோ, ஏனஒரஆண்டகாலத்திலுமமுடியாது.

சரி அப்புறம் எப்படி சொன்னீங்க 3 மாதத்தில் எல்லாம் சரி செய்து விடுவோமுன்னு . எல்லாம் அரசியலு ........................ 

எவ்வளவோ பொறுதுட்டோம்  .............

ஆனால் உங்க கட்சி மீட்டிங்கு  மட்டும் எப்படி 4 மணி லிருந்தே கட்டவுட்ட எரியுது , பாக்கும்போது எங்க வைரு எரியுது ..........


உங்க ஆடம்பர கட்டவுட்டு களுக்கு முதல்ல தடை போடுங்க அப்புறம் எதிர்க்கட்சி காரங்களுக்கும் தடா போட்டுடலாம் . முதல்ல நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க மேடம் .............


 செய்தி :
  தமிழகத்திலநிலவுகின்மினபற்றாக்குறநிலைமை பா‌ர்‌த்து பொதமக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களஅனைத்துத்  எப்படி கவலைப்படுகிறார்களோ, அதவிஆயிரமமடங்கத‌மிழக அரசகவலகொள்கிறது எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழகத்திலநிலவி வருமமின்வெட்டுபபிரசசனகுறித்து, சட்டபபேரவையிலமார்க்சிஸ்டகம்யூனிஸ்ட், இந்திகம்யூனிஸ்ட், காங்கிரஸ், புதிதமிழகமஉள்ளிட்கட்சிகளகொண்டவந்கவஈர்ப்புததீர்மானத்துக்கபதிலளித்தமுதல்வரஜெயலலிதேசுகை‌யி‌ல், தமிழகத்திலநிலவுகின்மினபற்றாக்குறநிலைமஅனைவருக்குமகவலஅளிப்பதாஇருக்கிறது. பொதமக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களஅனைத்துததரப்பினருமஎப்படி கவலைப்படுகிறார்களோ, அதவிஆயிரமமடங்கஇந்அரசகவலகொள்கிறது.

ஏனென்றாலஎங்களுக்குபபொறுப்பஇருக்கிறது. மின்சாரமவழங்வேண்டிகடமஇருக்கிறது. தமிழகத்திலஏற்பட்டுள்இந்நிலைமைக்கநிச்சயமநாங்களகாரணமஇல்லை. 2006-ஆமஆண்டநாங்களஆட்சியவிட்டுசசெல்லுமபோது, தமிழகமமின்சாரத்திலஉபரி மாநிலமாஇருந்தது. கடந்ஆண்டமீண்டுமமுதல்வராகபபொறுப்பேற்பிறகு, தமிழகமமினபற்றாக்குறமாநிலமாஇருந்தது.

மின்சாரபபற்றாக்குறை, மினஉற்பத்திககுறைவபோன்பிரச்னைகளசரி செய்வது, சீரசெய்வதஎன்றாலஅதஒரநாளிலோ, ஒரவாரத்திலோ, ஏனஒரஆண்டகாலத்திலுமமுடியாது. தமிழகத்துக்குபபோதிமின்வழிததடமஇல்லை. ஏனெனிலநமக்கமுன்னுரிமஇல்லை. நீண்காஒப்பந்தங்களைபபோடுபவர்களுக்கமட்டுமமுன்னுரிமஅளிக்கப்படுகிறது. அந்ஒப்பந்தங்களைபபோடததவறியதகடந்காி.ு.அரசு.

இந்தபபிரசசனையிலமத்திஅரசுமநமக்கஒத்துழைப்புததரவில்லை. தமிழகத்தைசசேர்ந்பலரமத்திஅமைச்சரவையிலஇடம்பெற்றுள்போதிலும், எந்நடவடிக்கையுமஎடுக்கவில்லை. புதிமினஉற்பத்திததிட்டத்துக்காஅனுமதிகளமத்திஅரசதரவேண்டியுள்ளது. இந்நிலையில், வேண்டுமென்றதமிழகத்திலசெயல்படுத்திட்டமிட்டிருக்குமபெரிமினஉற்பத்திததிட்டங்களுக்கமத்திஅரசஒப்புதலவழங்காமலகாலமதாழ்த்துகிறது. இதற்கயாரகாரணம்?

நமதமொத்தததேவையிலஏற்கெனவசெயல்பட்டுககொண்டிருக்குமமினநிலையங்களுக்கதேவைப்படுகின்நிலக்கரியில் 80 சதவீதம்தானகொடுக்கிறார்கள். ஆகவே, திமுஅரசகாட்டிஅலட்சியம், அக்கறையின்மை, நிர்வாகததிறமையின்மை, இன்னொருபுறமமத்திஅரசவேண்டுமென்றநம்மவஞ்சிக்கிறது. இருப்பினுமஇதனாலசோர்ந்தவிடவில்லை.

திமுஅரசஎன்தவறசெய்திருந்தாலுமஅதசரி செய்ததீருவோமஎன்வைராக்கியத்துடனசெயல்பட்டுககொண்டிருக்கிறோம். மத்திஅரசநம்மவஞ்சித்தாலுமவெற்றி பெற்றதீருவோம். வாழ்ந்தகாட்டுவோமஎன்வைராக்கியத்துடனசெயல்பட்டுககொண்டிருக்கிறோம்.

பொறுமகாட்டுங்கள்: தமிழகத்திலமோசமாமின்வெட்டஎன்நிலையகடந்தவிட்டோம். அதமுடிந்தவிட்டது. என்னைபபொருத்தவரதமிழமக்களநானவேண்டிககொள்வதெல்லாம், இத்தனகாலமபொறுத்தவிட்டீர்கள். இன்னுமஓராண்டகாலம். ஓராண்டஎன்றகூசொல்மாட்டேன்.

அடுத்ஜூனமாதமவரசற்றபொறுத்துககொள்ளுங்கள். படிப்படியாஇனிமேலமின்வெட்டசீரடையும். அடுத்ஆண்டு (2013) இறுதிக்குளஇந்மினவெட்டநிலைமஅறவநீக்கப்படும். தமிழகமமீண்டுமஒளிமயமாமாநிலமாகததிகழுமஎன்றஜெயலலிதா கூ‌றினா‌ர்.

சனி, 29 செப்டம்பர், 2012

எப்படி ஒரே நேரத்துல

இப்படி எல்லாம் நடக்குதா நாட்டுல ,  ஹயோ கண்ண கட்டுதுபா சாமி !
எப்படி இந்த முதலிரவு அப்படி எல்லாம் சொல்லுவாங்களே ! எப்படி , போதும் , போதும்  கற்பனை எல்லாம் வேண்டாம் விபரீதமா வருதுப்பா !

தமிழன் எப்படி எல்லாம் வளந்துட்டான் . ஒரு வேலை தலைவரோட உடன்பிறப்பா இருப்பானோ !.

அவர பார்த்த பிறகுமா திருந்தல , இதுல சட்டம் கிட்டம் ஏதும் செய்யாதா ?,

கனேஷ்ணு பேர  வச்சிக்கிட்டு , எதோ முருகன் அப்படின்னாலும் பரவா இல்ல , பேர  மதிடுட தம்பி . புராணம் காலத்தில அப்படின்னு சொன்ன கூட ,

இதுல என்ன அதிசயம் அப்படின்னு கேக்கிறீங்களா அவன் எத்தன பேர மனவியா துனைவியா வச்சிருக்கான் என்பதில்ல ஆச்சர்யம் , எப்படி ஒரே நேரத்துல மண்டபம் பிடிச்சி , பெயர் பலகை எல்லாம் வச்சி -.........................................
- பாலா


செவ்வாய், 18 செப்டம்பர், 2012

விலகுவதாக திரிணாமூல் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அப்பாடி ஒரு வழியாக மம்தா அறிவித்து விட்டார் . இது முடிவா இல்ல மறுபடியும் கல்லா  போட்டு   பாக்குறாங்களா ?. மத்திய அரசுக்கு ஊழல் அரசியல் வாதிகள் இருக்கும் வரை அவர்களை சிபி ஐ வச்சி மிரட்டியே ஆட்சிக்கு ஆதரவு தரத்துக்கு  பணிய வச்சிடுவாங்க. முலாம் சிங் யாதவ் , லல்லு பிரசாத் யாதவ் , மாயாவதி, திமுக போன்றோர் இருக்கும் வரை  காங்கிரஸ் கட்சி சில்றையா கொஞ்சத்த  கண்டுக்காம விட்டுட்டு கோடி கோடியா கொள்ளை அடிச்சிகிட்டே  தான்  இருக்க போறாங்க . எந்த காலத்திலையும் திமுக வெளிய  வர போறதில்லை . தன்மானம் உள்ள கட்சி அது . அடிச்சி துரத்தினாலும் வெளிய வரமாட்டோம் ஆ ஆ நாங்கெல்லாம்  யாரு ?. ஹி ஹி ஹி ......................

     மத்திய அரசு சமீபத்தில் டீசல் விலையேற்றம், சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்தது போன்ற முடிவுகளை எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசில் இருந்து விலகுவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மத்திய அரசில் இருந்து தமது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வெள்ளிக் கிழமை ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
டிசல் பொருட்களின் விலையேற்றம், சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது போன்ற முடிவுகளை மத்திய அரசு திரும்பப் பெறுவதுடன், மானிய விலையில் அளிக்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கைக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பை 6 இல் இருந்து 24 ஆக உயர்த்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
தனது கட்சி வெளியில் இருந்து மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடுமையான பொருளாதார சூழலை சமாளிக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று பிரதமரும், கடந்த வாரம் எடுக்கப்பட்ட முடிவுகளை திரும்பப் பெறும் உத்தேசம் இல்லை என்று நிதி அமைச்சரும் கூறியிருந்தனர்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஈழ தமிழனும் அவன் தலைமுறைகளும் ஆன்மாக்களும் மறவாது , மன்னிக்காது

இந்த தமிழக அரசியல்வாதிகளை  அப்பாவியாய் கொலையுண்ட தமிழ் ஈழ உயிர்கள் எந்த ஜென்மத்திலும் மன்னிக்காது . கொன்று குவித்து கொக்கலம் வெறியாட்டம்   போட்ட பின்பும் அவர்களின் பிணத்தின் மீது நின்றுக் கொண்டு
அரசியல் செய்துகொண்டிருக்கும்  இவர்களுக்கும் , ராஜபக்சேவுக்கும்   எந்த வித்தியாசம் இல்ல  ........


உங்களுக்கு மனசாட்சி இல்லன்னு தெரியும், மாநாடு நடத்தியும் , அதை  தடுத்தும் அரசியல் பண்ணும் பெரிய கட்சிகளும் , அவர்களுக்கு ஜால்ரா தட்டும் கொசுறு கட்சிகளும் , தமிழனை ஒழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி கொண்டு திரியும் காங்கிரஸ் கட்சியையும் தமிழக மக்களை ஏமாற்றி வோட்டு வாங்கி கொழுத்து திரிந்தாலும் , உங்களை ஒரு நாளும் ஈழ தமிழனும் அவன் தலைமுறைகளும் ஆன்மாக்களும் மறவாது , மன்னிக்காது
       - மனம்  வெறுத்து வேற ஏதும் சொல்ல முடியாத ஒரு தமிழன் பாலா 

சனி, 23 ஜூன், 2012

மனச்சாட்சி யோடு யோசித்து பார்த்திருப்பீர்கள் என்றால்

இது இட்லி வடை இருந்து எடுத்த மேட்டர் தான் மக்களே ! நான் நினைக்கும் நிலைபாடும் இதுதான் , காரணம் காலக்காலமா இப்படி மத சாயம் பூசி வெக்கமே இல்லாம முழுக்க மததத்தையே சார்ந்து  அரசியல் நடத்தும் அறிவிலிகள் கிருத்துவத்தையும் , முஸ்லிம்களின் வாக்குகளை ஏமாற்றி வாரி சுருட்டி எப்பமிட்டது தானே  மிச்சம் நண்பர்களே ! உண்மையான மனச்சாட்சி யோடு யோசித்து பார்த்திருப்பீர்கள் என்றால் காங்கிரஸ், தி மு க. கமினிஷ்டுகள் , இன்னும் சில கட்சிகள் அவர்களை வைத்து அரசியல் மட்டுமே நடத்துகின்றனர் , உண்மையில் அவர்களுக்கு எந்த முன்னேற்ற வழிகளையும் செய்தது கிடையாது . எல்லாம் ஏமாற்று வேலைகள் தான் . தமிழ்கள் நிலையிலும் கூட பி ஜே பி க்கு இருந்த அளவுக்கு கூட இந்த கேடு  கெட்ட காங்கிரஸ் காரனுகளுக்கு இருந்ததில்லை .   
உண்மையைச் சொல்லுங்க சார். பிரதமருக்கு உங்க சாய்ஸ் யார்? இது என்ன கேள்வி?

இட்லிவடை வாசகர்கள் கிட்டத்தட்ட 87% பேர் ( பார்க்க ஓட்டு பெட்டி) மோதி தான் பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மோதி ஹிந்துத்துவா வெறியர் ஆச்சே? அவர் வந்தால் உருப்படுமா?

எல்லோருக்கும் ஒரு மதம், ஜாதி இருக்க தான் செய்கிறது. அதை எல்லாம் கடந்தவன் என்று சொல்லுகிறவர்கள் எல்லாம் கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள். "செக்யூலரிஸம் - அதாவது மதச்சார்பின்மை" என்று பிதற்றுபவர்கள் கூட அந்த அந்த தொகுதிக்கு அந்த மதம்/ஜாதியை வேட்பாளர்களை தான் நிற்க வைக்கிறார்கள்!. நிதீஷ் இன்று ஆரம்பித்திருக்கும் இந்த "செக்யூலரிஸம்" பஜனை பிஹாரில் இருக்கும் முஸ்லீம், கிறுத்துவ ஓட்டுக்களை நம்பி தான்.


உண்மையான "செக்யூலரிஸம் - மதச்சார்பின்மை" என்றால் என்ன சார்? புரியும்படி விளக்கவும். ?

தச்சம்யோ ராவ்ருணீ மஹே! காதும் யஞ்யாய!
காதும் யஞ்ய பதயே: தைவீ ஸ்வஸ்திரஸ்துந:
ஸ்வஸ்திர் மானுஷ்யேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்:
சந்நோ அஸ்துத்விபதே: சம்சதுஷ்பதே!
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி!மனித சமுதாயம் நன்மை பெற வேண்டும்; செடி கொடிகளும், மூலிகைகளும் நன்கு வளர வேண்டும்; மரங்கள் ஆகாய மார்க்கமாக நெடிந்துயர்ந்து வளர வேண்டும்; இரண்டு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும்; நான்கு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும், எங்கும் அமைதி, அமைதி அமைதி என்பதே நிலவ வேண்டும்.

இதுவே மேற்கூறிய புருஷ ஸுக்த ஸ்லோகத்தின் தமிழாக்கம். ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால், “செக்யூலரிஸம்” அதாவது “மதச்சார்பின்மை” என்பதுதான் இதன் அர்த்தம்.

அப்படி என்றால் மதச்சார்பின்மை என்றால் மதவெறியர்கள் கிடையாதா ?

மேன்மையுடைய விஷயங்களை போதிக்கும் ஹிந்து ஸநாதன தர்மத்தைப் போற்றுபவர்களும், பரப்புபவர்களுக்கும் இன்றைய யுகத்தில் மதவெறியர்கள் என்றும் மதச்சார்புடையவர்கள் என்றும் பெயர் சூட்டப்படுகிறது. இத்தகைய திருப்பணியைச் செய்யும் மஹாகணம் பொருந்தியவர்கள் சாக்ஷாத் நமது அரசியல்வாதிகள்; இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திருப்பணியைச் செய்பவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் மீடியாக்கள். சுருக்கமாக மைனாரிட்டி மதங்களை (முஸ்லீம், கிறுஸ்துவர்களை) சப்போர்ட் செய்தால் அதுக்கு பெயர் மதசார்பின்மை.

நிதீஷ் குமார் - நரேந்திர மோதி பற்றி ஐந்து மார்க்கு ஒரு சிறு குறிப்பு?

இந்தியாவின் இரு ஆகச் சிறந்த அரசியல்வாதிகள் என்று போற்றப்படுபவர்கள் இவ்விருவரும். ஆட்சி செலுத்தும் தத்தமது மாநிலத்தின் அபிவிருத்திக்காக அயராது உழைக்கும் நேர்மையான அரசியல்வாதிகள் என்று பெயரெடுத்திருப்பவர்கள். இந்திய அரசியல் பற்றித் தெரியாதவர்கள் கூட மேற்கூறிய இரு முதல்வர்களையும், அவர்களிடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒரு தலைபட்சமான பனிப்போரையும் அறிவார்கள். நிதீஷ் குமார் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் பெரும் தலைவர், பிஹார் மாநில முதல்வர்; நரேந்திர மோதி பாஜகவின் பெரும் தலைவர்களுள் ஒருவர், குஜராத் மாநில முதல்வர். மத்தியில் இவ்விரு கட்சிகளுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. வருகின்ற 2014 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இவ்விருவரில் யார் பிரதம வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணியால் முன்னிறுத்தப்படுவார்கள் என்று மீடியாக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளன. இது பற்றி அந்தந்தக் கட்சிகளே இன்னும் கவலைப்பட ஆரம்பிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

நிதிஷ் குமார் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்?
நிதிஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதச்சார்பற்ற மற்றும் க்ளீன் இமேஜுடைய” ஒருவரே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார், மேலும் தேர்தலுக்கு முன்னரே பிரதமர் வேட்பாளர் யாரென்று அறிவிக்க வேண்டுமென்றும் கருத்து கூறியுள்ளார். இதற்கு பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தரப்பிலிருந்து கடும் ஆட்சேபங்கள் கிளம்பியுள்ளன. இன்னும் ஒரு படி மேலே சென்று, மோதி பிரதமர் வேட்பாளரென்றால், தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயார் என்று அறிவித்துள்ளார். இதற்கு காரணம் தான் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, மோடி வர கூடாது என்று தமிழர்களிடம் உள்ள நல்ல குணம் போன்று இவரிடமும் இருப்பது தான் காரணம். இதற்கு இன்னொரு பெயர் வயிற்றிரிச்சல்.

மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ள நிதிஷ் பற்றி இப்படி கூறலாமா?
பிஜேபியுடன் கூட்டணி அமைத்து சென்ற பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தொண்ணூருக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றார். ஆனால் பிறகு மோதி பிரசாரத்திற்கு வரக் கூடாது என்று வெளிப்படையாகவே நிதிஷ் குமார் பாஜகவிற்கு நெருக்கடி கொடுத்தது. பிஹார் வெள்ள நிவாரணத்திற்கென்று குஜராத் அரசாங்கம் சார்பில் வழங்கிய நிதியுதவியையும் திருப்பியனுப்பிய ஈனத்தனமான வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு தரந்தாழ்ந்த அரசியல் நடத்தியவர் நிதிஷ் குமார். மக்களுக்கு அனுப்பிய பணத்தை இவர் யார் வேண்டாம் என்று சொல்லுவது?

பிஜேபி என்ன செய்ய வேண்டும்?
நிதிஷ் மற்றும் பாஜகவில் உள்ளிருப்பவர்களின் கருத்துகளுக்கும் மோதியின் கருத்து வெறும் மெளனம் மட்டுமே. இன்று செய்தியாளர்கள் இதனை வருந்தி வருந்தி கேட்ட பிறகும், நிதிஷ் பற்றிய கேள்விகளைத் தவிர்த்து விட்டார் மோதி. ஏமாந்த மீடியாக்கள், அவர் பதில் கூறாமல் தவிர்த்ததையே தலைப்புச் செய்தியாக்கிவிட்டனர், வேறு வழியில்லை பாவம்.

அப்படிச் செய்தால் பிஜேபிக்கு பிரச்னை வராதா?
பிஜேபிக்கு தைரியம் இருந்தால், எங்கள் வேட்பாளர் மோதிதான். ஹித்துதுவா சார்பு இருந்தால் தப்பில்லை. ஹிந்துத்துவா தீண்டத்தகாத விஷயம் இல்லை. ஹிந்துக்களுக்கு இருக்கும் சகிப்பு தன்மை மற்ற மதங்களில் கிடையாது. பார்க்கப்போனால் இவர்கள் தான் அதிக செக்யூலர் என்று சொல்லி மோடியை அறிவிக்க வேண்டும். தேச நலம் முக்கியம் என்றால் இதைச்செய்தாக வேண்டும்.
காங்கிரஸ் பிரணாப் தான் குடியரசு தலைவர் என்று சொன்ன மாதிரி மோதிதான் அடுத்த பிரதமர் என்று அறிவிக்க வேண்டும்.

பிஜேபிக்கு இப்போது இருக்கும் சப்போர்ட்டை விட இன்னும் அதிக சப்போர்ட் கிடைக்கும்.

செவ்வாய், 29 மே, 2012

 இ ப் ப டியும்  !!!
நடக்குதுங்கோ நாட்டுல நடக்குதுங்கோ பார்த்து நடதுகுங்கோ நண்பர்களே !

 
பேஸ்புக்கில் இணைவதை கவுரவமாக நினைத்து இணையும் பெண்கள் பலர் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து கண்ணீர் விடுகிறார்கள்.
 
பேஸ்புக்கில் அழகான பெண்களை பார்த்தால் இணையதளம் மூலம் அவர்களிடம் நைசாக பேசி ஆசை வலையில் வீழ்த்தி விடுகிறார்கள். ஆரம்பத்தில் நட்பில் தொடங்கும் இந்த பழக்கம் கடைசியில் கற்பில் சென்று முடிகிறது.
 
சென்னையைச் சேர்ந்த சுஜித்ரா என்ற பெண் வேலூரைச் சேர்ந்த ஆனந்த் பாபு என்பவருடன் பேஸ்புக் மூலம் நண்பரானார்.
 
ஆனந்த்பாபுவின் ஆசை வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவரது அழைப்பின் பேரில் வேலூருக்கு சென்று கற்பை பறி கொடுத்தார். இதுபற்றி சுஜித்ரா வேலூர் கூடுதல் எஸ்.பி.முருகேசனிடம் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி ஆனந்த் பாபு மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
 
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆனந்த்பாபுவின் நண்பர் திலீப். இவர் மரைன் என்ஜினீயரிங் படித்து விட்டு சிங்கப்பூரில் கப்பல் கம்பெனியில் வேலை பார்க்கிறார். விடுமுறையில் சொந்த ஊரான ராணிப்பேட்டைக்கு வந்தார். அப்போது ஆனந்த்பாபு பேஸ்புக் மூலம் பெண்களை வளைக்கும் வித்தையை சதீசுக்கு கற்றுக் கொடுத்தார்.
 
ஆனந்த்பாபு தான் ஏற்கனவே சுஜித்ரா என்ற பெண்ணை அழைத்து உல்லாசம் அனுபவித்து வருவது பற்றியும் தெரிவித்தார். அதன்படியே சதீசும் காயத்ரி என்ற பெண்ணை பேஸ்புக் மூலம் வீழ்த்தினார்.
 
காயத்ரி, சுஜித்ரா மட்டுமின்றி வேறு சில பெண்களையும் இந்த கும்பல் ருசித்தது. ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு கிழமை, நேரம் ஒதுக்கி ஊர் ஊராக வரவழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
 
இந்த கும்பல் பேஸ்புக் மூலம் பெண்களின் பொருளாதார பின்னணி உள்ளிட்ட முழு விவரங்களையும் பெற்ற பிறகே தங்கள் திட்டத்தை அரங்கேற்றுகிறார்கள்.
 
லாட்ஜுகளுக்கு அழைத்து செல்லும்போது அறை வாடகை, ஆடம்பர செலவு உள்பட அனைத்து செலவுகளுக்கும் சம்பந்தப்பட்ட பெண்களிடமே பணத்தை கறந்து விடுகிறார்கள்.
 
எல்லா செலவுகளையும் செய்து கற்பையும் பறி கொடுத்து செல்லும் பெண்கள் மோசம் போய் விட்டோம் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
ஆனால் அந்த கும்பல் விடுவதில்லை. உல்லாசம் அனுபவிக்கும்போது ரகசியமாக வீடியோ படம் எடுத்து விடுகிறார்கள். அந்த படத்தை காட்டி மிரட்டியே ஏமாந்த பெண்களை மீண்டும் மீண்டும் அழைத்து பணத்தையும் கறந்து கற்பையும் சூறையாடுகிறார்கள். காயத்ரியும், சுஜித்ராவும் இவ்வாறு பலமுறை ஏமாந்துள்ளார்கள்.
 
ஆனந்த்பாபுவும், சதீசும் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு செகந்திராபாத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது போலீசில் சிக்கி ஜாமீனில் வெளி வந்துள்ளார்கள்.
 
காயத்ரி, சுஜித்ரா போன்று 16 பெண்கள் இந்த கும்பலிடம் சிக்கி கற்பை இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த லூயிஸ், சிங்கப்பூருக்கும், ஆனந்தராஜ் பெங்களூருக்கும் பெண்களை அழைத்து சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்களையும் மடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

காதலில் காமத்தை கலக்காதீர்கள்

 படித்ததில் பிடித்ததும் , தெரிந்துகொள்ள வேண்டியதும் , ஆம் வேண்டும் பல காலம் என் நினைக்கும் உறவுகள் மேன்பட கட்டு பாடுகள் மிக அவசியம்.........
 எதிர் பார்ப்பில்  கிடைக்கும் சுகம் மடியில் விழ்வதில் கிடைப்பதில்லை  ,  அருகில் இருப்பது பிடிப்பதில்லை( சுவைத்த அனைத்தும் அருமையாய் அமைவதில்லை )   , அதனால் மக்களே ! கொஞ்சம் அவசர படாதீங்க என்ன ? . அதிக நாள் உறவு நிலைக்க வேண்டுமானால் ..............காதலில் காமத்தை கலக்காதீர்கள் முழமையாக .......... ( கிளைமாக்ஸ் வரை ) ஓகே வா ........
  
திருமணமான தம்பதியரிடையே செக்ஸ் உறவு என்பது அவசியமான, மகிழ்ச்சி தரக்கூடிய விசயம்.ஆனால் காதல் பருவத்தில் காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது அவசியம் என்கின்றனர் காதல் பற்றிய ஆய்வாளர்கள். காதலிக்கும் போது உறவு அனுபவித்த உடன், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும்.
திருமணத்திற்கு முன் உறவில் ஈடுபடுவதில் தவறொன்றுமில்லை என்று கூறுபவர்கள் மேற்கொண்டு படித்து முடிவு செய்யுங்கள். வித்தியாசம் அதிகம் காதல் என்பது உணவை கண்டு ரசிப்பது. ஆனால் காமம் என்பது அந்த உணவை அனுபவித்து உண்பது என்கின்றனர் காதல் ஆய்வாளர்கள்.


ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது. தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.
பிரச்சினைகள் உருவாகும்
காதலர்கள் ஒருமுறை தவறு செய்துவிட்டால் அதுவே ஒரு தைரியத்தை ஏற்படுத்திவிடும். பின்னர் அடிக்கடி தவறு செய்யத் தூண்டும். மீண்டும் ஒருமுறை சம்மதிக்காவிட்டால், புதுசா என்ன என்பது போன்ற பேச்சுக்கள் வந்துவிட்டால் காதலில் மரியாதையும், அன்பும் காணாமல் போய்விடும்.
காதல் முறிந்து விடும்
காதலர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வருவது இயல்பானதுதான் அப்படிப்பட்ட நேரத்தில் உறவுக்கு சம்மதித்தது பற்றி கேவலமாக பேசப்பட்டுவிட்டால் காதல் முறிந்துபோய்விடும். பெண் யார் கேட்டாலும் உறவுக்க சம்மதிப்பவராக இருப்பார் என்ற எண்ணம் ஆணுக்கு வந்துவிடும்.
பிளாக்மெயில்
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம். ஒருவேளை காதலரை கைப்பிடிக்க முடியாமல் போய்விட்டால், வேறொருவரை திருமணம் செய்ய நேரும் பட்சத்தில் அந்த குற்ற உணர்வு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். பெண்ணை பிளாக்மெயில் செய்வதற்கு இந்த சம்பவம் வழிவகுத்துவிடும்.
குற்ற உணர்வு
திருமணத்திற்கு முன் உறவில் ஈடுபட்டவர்கள் ஏதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும். காதலர்கள் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும். ஆண், பெண் இருவரிடமும் ஒரு அவநம்பிக்கை வந்துவிடும். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். தேவையில்லாமல் அவசரப்பட்டுவிட்டோமே என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.
உறவுச் சிக்கல் ஏற்படும்
திருமணம் முடித்த பின்னர் அவர்களுக்குள் புதிதாக ஒன்றுமில்லை என்பதால் அதற்காக அவசரப்படுதல் நின்றுபோய்விடும். பெண் அதற்குப் பின் அதிகமாக அவசரப்படுபவளாகவும், ஆண் நழுவுபவனாகவும் இருப்பான். உறவு முழுமையானதாக இல்லாத பட்சத்தில் இருவருக்கும் பிறர் மீது சந்தேகம் வந்துவிடும்.
செக்ஸ் திருப்தி தர முடியாத இவருடன் எப்படி வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும். காதலிக்கும் போது காமத்தின் மீது ஆசை வைத்து உறவில் ஈடுபட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது பெரும் ஆர்வமும் இருக்காது. எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் அறிவுறுத்தலாகும்.

பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

   பயபுள்ள கடைசி வரை எவ்வளவு  பரிசோதனை கட்டணனு சொல்லவே இல்ல அப்புறம் என்னத்த புகார் தராது அப்படியே தந்துட்டாலும் நடவடிக்கை எடுக்காம தூங்க மாட்டாங்க வெங்காயங்களா ? ,
வர வர தமிழ் மக்களுக்கு காமெடிக்கு பஞ்சம் இல்லமா பாத்துகிறாங்க அரசியல் வியாதிங்க !!!!.
இந்த மாதிரி அறிவிப்பு வந்தாலே நீங்க எவ்வளவு வீனா கொள்ளை அடிச்சிகீங்க , மகனே பெட்டி மட்டும் வரலே எங்க கை புள்ளைங்கள வச்சி கேசு போட்டு வசூல் பண்ணிடிவோம் அப்படின்ற மிரட்டல் தான்னு அவங்களுக்கு தெரியாதா ?, இல்ல பாவம் எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் மக்களுக்கு தெரியாத ?.  அட பொய் பொழப்ப பாருக சார் அப்படின்னு நீங்க என் காத்து கிழிய சொல்றது கேக்குது . என்ன பண்ண மனசுன்னு சொன்னு இருக்கே அதற்கு கொஞ்சம் ஆறுதல் தேவைப்படுது எழுதியாவது தனிச்சிக்குவோம் . கோவப்பட்டு கோவப்பட்டு ரணகளம் ஆனது போதாதா ?...சென்னை: பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி இருந்தால் வழக்கமாக பாராசிட்டாமல் மாத்திரை சாப்பிடுவார்கள். அதில் குணமாகாமல் காய்ச்சல் இருந்தால் டாக்டரை பார்க்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பதாக டாக்டர் சந்தேகப்பட்டால் உடனே சம்பந்தப்பட்ட நபர் சளி மாதிரி எடுத்து ஆர்.டி.-பிசிஆர் என்ற பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கிண்டியில் உள்ள கிங் நிறுவனம் மற்றும் சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.

இதுதவிர தமிழ்நாடு முழுவதும் 12 தனியார் ஆய்வுக் கூடங்களில் இந்த பரிசோதனையை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 7 ஆய்வுக்கூடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தனியார் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்ய பணம் இல்லாதவர்கள் அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு அங்கீகாரம் அளிக்காத தனியார் ஆய்வுக் கூடங்களுக்கு பொதுமக்கள் சென்று பரிசோதனை செய்யக் கூடாது.

அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வுக்கூடங்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. இதில் சென்னையில்தான் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 27 பிப்ரவரி, 2012

மின்சாரம் தடை இல்ல மாநிலமாக தமிழகத்தை மூன்று மாதத்தில் மாற்றுவேன்

  அட தேர்தல் நேரத்துல்ல சொன்னதுதாங்க நமக்கு நாபகம் இருக்கு பாவம் அவங்களுக்கு தான் நேரம் இல்ல, இதை எல்லாம் கவனிக்க . இங்க சொன்னுத்தையும் கழட்ட முடியல அதுக்குள்ளே அல்ல கைங்க வருங்கள பிரதமர்ருன்னு கூவ ஆரமிச்சிட்டாங்க சாமியோ ...... இப்படி புலம்ப விட்டுடங்களே ........ 

  சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில்  2 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு முதல் மின்வெட்டு தொடங்கியது.

மொத்தம் 5 ஷிப்ட்களாக, மாலை 6 மணி வரை மின்வெட்டு அடுத்தடுத்து அமல்படுத்தப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் எந்த நேரத்தில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்பது குறித்த விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

8.00 - 10.00 மணி:

பெல்ஸ் சாலை மற்றும் சேப்பாக்கம் பகுதிகள், கீழ்ப்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டாஹன்ஸ் சாலை, எண்ணூர், உயர் நீதிமன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை, குறளகம், ஆர்மீனியன் சாலை, 2வது லைன் கடற்கரைச் சாலை, தம்பு செட்டி தெரு, காமராஜ் சாலை, ஏழு கிணறு மற்றும் மண்ணடி, தண்டையார்பேட்டை, மாத்தூர் பகுதிகள், சிட்கோ (வில்லிவாக்கம்) பகுதிகள், தண்டையார் பேட்டை (ஆர்.கே.நகர்) பகுதிகள், கிண்டி தொழிற்பேட்டை, கிண்டி, அண்ணா சாலை பகுதிகள், கோவூர், குன்றத்தூர், மாங்காடு, பெரிய பனிச்சேரி மற்றும் கிருகம்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, கோரிமேடு, பூந்தமல்லி டவுன், நோம்பல், காடுவெட்டி, புதுதாங்கல், ராஜ்பவன், செயின்ட் தாமஸ் மவுன்ட், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், துரைப்பாக்கம் பகுதி, டைடல் பார்க், ஸ்பாஸ்டிக் சொசைட்டி, ஆவடி, ஆவடி தொழிற்பேட்டை மற்றும் ஆயுத தொழிற்சாலை பகுதிகள், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), காமராஜ் நகர், அம்பத்தூர் மற்றும் பட்டரவாக்கம், அண்ணாநகர் - 4வது அவென்யு, 2வது அவின்யு, 7வது அவென்யு, தாஸ் காம்ப்ளக்ஸ், 5வது அவென்யு, அண்ணாநகர் (ஒரு பகுதி), அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், முகப்பேர் (ஒரு பகுதி) மற்றும் டி.ஐ. சைக்கிள் பகுதிகள்.

10.00 - 12.00:

சிந்தாதரிப்பேட்டை, அண்ணாசாலை (ஒரு பகுதி), புரசைவாக்கம் நெடுஞ்சாலை, செக்ரடேரியட் காலனி, டவுட்டன், ஹாம்ஸ் சாலை, பால்ஃபர் சாலை, டவர் ப்ளாக், பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), புதுப்பேட்டை, சிம்சன், எழும்பூர் (ஒரு பகுதி), எஸ்.எம். நகர், கே.பி.தாசன் ரோடு, தியாகராயர் நகர் (ஒரு பகுதி), எல்டம்ஸ் ரோடு, நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் பெரியமேடு சார்பு பகுதிகள், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), கதீட்ரல் சாலை, கே.என்.கே. சாலை, ஜி.என். செட்டி சாலை (ஒரு பகுதி), கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, மீர்சாகிப்பேட்டை, ஷேக் தாவூத் தெரு, பேகம் சாகிப் தெரு, அமீர் மகால், பெருமாள் முதலி தெரு, பாரதி சாலை, வடக்கு உஸ்மான் சாலை முழுவதும், தங்கசாலை, கொண்டித் தோப்பு, ஜாட்காபுரம், சின்னபுரம், எஸ்பிளனேடு (ஒரு பகுதி), அயனாவரம், வில்லிவாக்கம் மற்றும் ஐ.சி.எஃப், பெரம்பூர் (ஒரு பகுதி), காலடிப்பேட்டை, ராஜாகடை, ஸ்டான்லி, பாரக்ஸ் ரோடு, பழைய சிறைச்சாலை, ராயபுரம் (ஒரு பகுதி), கோபால் நாயக்கன் தெரு, மடுவன்கரை, ஆதம்பாக்கம், ஆலந்தூர், கே.கே.நகர், அழகிரி சாலை, கோவிந்தன் சாலை, கிண்டி (ஒரு பகுதி), பொன்னம்பலம் சாலை, ராமசாமி சாலை, எம்.ஜி.ஆர். நகர், பாரதிதாசன் காலனி, மேற்கு மாம்பலம், அசோக் நகர் (ஒரு பகுதி), குரோம்பேட்டை, பல்லாவரம், கடப்பேரி மற்றும் மெப்ஸ் பகுதி, பல்லாவரம், பெருங்குடி தொழிற்பேட்டை பகுதி, பெருங்குடி, தாம்பரம் பகுதி, பூந்தமல்லி (ஒரு பகுதி), நசரத்பேட்டை, நங்கநல்லூர், ஆதம்பாக்கம், இந்திரா நகர், கலாக்ஷேத்ரா காலனி, ஸீவேர்டு ரோடு, வால்மீகி நகர், ஒளவை நகர், கணபதி நகர், திருவள்ளுவர் நகர், வாசுதேவன் நகர், பாலவாக்கம், விருகம்பாக்கம், தசரதபுரம், வடபழனி, ஆற்காடு சாலை (ஒரு பகுதி), சத்யா கார்டன், அண்ணாசாலை, ஷெனாய் நகர், ஆர்.வி. நகர், டி.பி.சத்திரம், அயப்பாக்கம், மகாலிங்கபுரம், காம்தார் நகர், எஸ்.எ.எஃப். கேம்ஸ் வில்லேஜ், சின்மயா நகர், ஜகந்நாதன் நகர், 100 அடி சாலை (ஒரு பகுதி), கோயம்பேடு, அண்ணாநகர் (மேற்கு), அண்ணாநகர் மேற்கு விரிவு மற்றும் திருமங்கலம் முழுவதும்.

12.00 - 2.00:

ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை (ஒரு பகுதி), லஸ் (ஒரு பகுதி), இந்திரா நகர் (ஒரு பகுதி), மயிலாப்பூர் (ஒரு பகுதி), எழும்பூர் (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), புரசைவாக்கம் (ஒரு பகுதி), ஸ்பர்டாங்க் சாலை, எம்.எம்.டி.எ., என்.எஸ்.சி. போஸ் ரோடு, தம்பு செட்டி தெரு (ஒரு பகுதி), பட்டினப்பாக்கம், காமராஜர் சாலை, மந்தைவெளி (ஒரு பகுதி), தியாகராய நகர் (ஒரு பகுதி), பாண்டிபஜார், தெற்கு உஸ்மான் சாலை, அண்ணாசாலை (ஒரு பகுதி), ஆர்.கே.சாலை, டி.டி.கே. சாலை, சி.ஐ.டி. காலனி, கோபாலபுரம் (ஒரு பகுதி), பி.எஸ்.சிவசாமி, சென்ட்ரல் ரோடு, ஜாஃப்பர்கான் பேட்டை, கே.கே.நகர் (ஒரு பகுதி), போஸ்டல் காலனி (மேற்கு மாம்பலம்), சைதாப்பேட்டை மேற்கு, வி.எஸ்.எம். கார்டன், பெருமாள் கோவில் தெரு, ராயப்பேட்டை முழுவதும், லாய்ட்ஸ் ரோடு, பாலாஜி நகர், பீட்டர்ஸ் ரோடு, ஆயிரம் விளக்கு, ஒயிட்ஸ் ரோடு, ஸ்பென்சர், கொடுங்கையூர், எஸ்பிளனேடு (ஒரு பகுதி), கிழக்கு ஜார்ஜ் டவுன் பகுதி, ராயபுரம், செம்பியம், மாதவரம், திரு.வி.க. நகர், வியாசர்பாடி (ஒரு பகுதி), பெரம்பூர் (ஒரு பகுதி), டோல்கேட், செர்ரி ரோடு, ஆற்காடு சாலை, வளசரவாக்கம், இ.டி.எல்., ஈஞசம்பாக்கம், சேலையூர், தாம்பரம், சூளைமேடு, கோடம்பாக்கம், வடக்கு உஸ்மான் சாலை (ஒரு பகுதி), வடபழனி, அசோக் நகர், ட்ரஸ்ட் புரம், மடிப்பாக்கம், நங்கநல்லூர் (ஒரு பகுதி), நொளம்பூர் 110 கி.வோ., பாடி 110 கி.வோ., பெருங்களத்தூர் பகுதி, பாரதி சாலை, வள்ளுவர் சாலை, முகளிவாக்கம், மணப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஒரு பகுதி, ராமாபுரம், சிறுசேரி தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர் முழுவதும், திருமங்கலம் (ஒரு பகுதி).

2.00-4.00:

புரசைவாக்கம் (ஒரு பகுதி), டவுட்டன் (ஒரு பகுதி), தேனாம்பேட்டை (ஒரு பகுதி), அண்ணாசாலை (ஒரு பகுதி), கதீட்ரல் ரோடு (ஒரு பகுதி), கல்லூரி சாலை, கிரீம்ஸ் ரோடு, பூக்கடை, பாரிமுனை, பிராட்வே, எஸ்பிளனேடு (ஒரு பகுதி), மயிலாப்பூர் (ஒரு சில பகுதிகள்), லஸ் (சில பகுதிகள்), குடியிருப்பு வாரியம், லோட்டஸ் காலனி, டவர் ப்ளாக், செனடாப் ரோடு, சேமியர்ஸ் ரோடு, சாதுல்லா தெரு, தியாகராய நகர் (ஒரு பகுதி), சி.ஐ.டி.நகர், மோதிலால் தெரு, ராமேஸ்வரம் சாலை, நடேசன் சாலை, எம்.ஆர்.சி. நகர், கற்பகம் அவென்யு, கிரீன்வேஸ் லேன், ராணிமெய்யம்மை டவர், கே.வி.பி. கார்டன், ஸ்ரீநிவாசா அவென்யு, ஒயிட்ஸ் ரோடு-அண்ணா சாலை (ஒரு பகுதி), ருக்மிணி லட்சுமிபதி சாலை, எதிராஜ் சாலை, ரஹேஜா காம்ப்ளக்ஸ், ஸ்பர்டாங்க் சாலை, மான்டியத் சாலை, காசாமேஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), எ.சி. சாலை, ரெட் க்ராஸ் சொசைட்டி, ஃபெüன்டன் ப்ளாசா, எல்.என்.டி. கோவில் தெரு, கெங்குரெட்டி கோவில் தெரு, டி.வி.நாயுடு தெரு, மயிலாப்பூர் (ஒரு பகுதி), மேற்கு மாம்பலம் (ஒரு பகுதி), மேட்லி ரோடு, ஜூபிலி ரோடு, பிருந்தாவன் தெரு, அசோக் நகர் (ஒரு பகுதி), கே.கே.நகர் (ஒரு பகுதி), அண்ணா பூங்கா, மூலக்கடை, முத்தமிழ் நகர், கொளத்தூர், லக்ஷ்மி நகர், செம்பியம் (ஒரு பகுதி), மணலி, ஜி.கே.எம்.காலனி, எஸ்.ஆர்.பி. காலனி, வியாசர்பாடி தொழிற்பேட்டை, ஜி.எஸ்.டி. ரோடு (ஒரு பகுதி), நேரு நகர், கடப்பேரி, மெப்ஸ் பகுதி, கிழக்கு கடற்சாலை சாலை, எம்.ஜி.ஆர். சாலை, வி.ஜி.பி., ஸீவேர்டு ரோடு, போரூர், ஆற்காடு சாலை (ஒரு பகுதி), சோழிங்கநல்லூர், தரமணி தொழிற்பேட்டை, என்.எம்.எம். ரோடு, அரும்பாக்கம், எம்.எம்.டி.எ. காலனி, 100 அடி சாலை (ஒரு பகுதி), பாடி, கொரட்டூர், கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நடேசன் நகர், பான்டேஸ்வரம், புழல் மற்றும் ரெட்ஹில்ஸ் (ஒரு பகுதி), சோத்துபெரும்பேடு மற்றும் அலமாதி

4.00-6.00

அண்ணாசாலை (ஒரு பகுதி), ஜி.பி.ரோடு, ஒமந்தூர் அரசினர் தோட்டம், பாரதி சாலை, திருவல்லிகேணி, தாஹிர் சாகிப் தெரு, பெரிய தெரு, வாலாஜா ரோடு, சைதாப் பேட்டை, சி.ஐ.டி. காலனி, புரூசி மில் பகுதி, புளியந்தோப்பு பகுதி, மகாலிங்கபுரம் முழுவதும், காம்தார் நகர், நுங்கம்பாக்கம் (ஒரு பகுதி), திருமலைப்பிள்ளை சாலை, டாக்டர் நாயர் சாலை, தியாகராய சாலை (ஒரு பகுதி), மணலி மற்றும் நாப்பாளையம் பகுதி, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை (ஒரு பகுதி), ஜி.எ.ரோடு, கே.எ.கோவில் தெரு, தண்டவராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை பகுதி, திருவொற்றியூர் பகுதி, பெசன்ட் நகர், ஜெ.ஆர்.நகர், மாளவியா காலனி, கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காடுதாங்கல், கலைமகள் நகர், அண்ணாசாலை மற்றும் ஒரு பகுதி, கோட்டூர்புரம், டேர்ன்புல்ஸ் சாலை, கஸ்தூரிபா நகர், தாம்பரம் (ஒரு பகுதி), பம்மல், ராதா நகர், கடப்பேரி, குரோம்பேட்டை, பல்லாவரம், கே.கே.நகர் (ஒரு பகுதி), ராமசாமி சாலை, பார்க் வியு சாலை, போரூர் (ஒரு பகுதி), எஸ்.எம்.ஆர்.சி., பெரும்பாக்கம் பகுதி, திருமுடிவாக்கம் பகுதி, விஜயநகரம், வேளச்சேரி நெடுஞ்சாலை, தண்டீஸ்வரம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கே.ஜி. ரோடு, ராஜீவ் நாயக்கன் தெரு, புது ஆவடி சாலை, மேடவாக்கம் குளச்சாலை, வானகரம், மதுரவாயல், முகப்பேர் (கிழக்கு), பட்டாபிராம், திருநின்றவூர் (ஒரு பகுதி), திருவள்ளூர் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), ரெட்ஹில்ஸ் முழுவதும், அண்ணாநகர் (ஒரு பகுதி) மற்றும் திருவேற்காடு.

இந்த மின்தடை நேரமானது மாதம் ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்படும்.
அடுத்தது நன்கு மணிநேரமாக இந்த மின்வெட்டு உயர்த்துவதை பற்றி யோசிக்கிராங்கலாமாம் .................

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

இப்ப குத்துதே குடையுதே

  வாங்கினவனுங்க  எல்லாருக்கும் தான் இப்ப குடையுமே தவிர அடுத்தவனுங்க ஏன் பயப்படனும் . இப்ப குத்துதே குடையுதே அப்படின்னு அலருரானுங்க  
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை அடுத்து, 122 உரிமங்களை ரத்து செய்யுமாறு இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில், அந்தத் தீர்ப்பின் தாக்கம் மற்றும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் ஆகியோர் அதில் பங்கேற்றார்கள். அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வஹன்வதி, தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சந்திரசேகர் ஆகியோரும் அதில் பங்கேற்றனர்.
நீதிமன்றத் தீர்ப்பினால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் என்ன என்பதை மூத்த அமைச்சர்களுக்கு விளக்குவதற்காகத்தான் இன்றைய கூட்டம் நடந்ததாகவும், எந்த ஒரு முடிவும் எடுப்பதற்காகவும் அல்ல என்றும் அமைச்சர் கபில் சிபல் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அன்னிய நேரடி முதலீட்டைக் கடுமையாக பாதிக்கும் என்று தொழில்துறையினர் கருத்துத் தெரிவித்து வரும் வேளையில், அந்தத் தீர்ப்பின் முழு விவரங்கள், அது எத்தகைய நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற விவரங்களை தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சந்திரசேகர் கூட்டத்தில் விளக்கியதாக, கபில் சிபல் தெரிவித்தார்.
அரசு இந்த விடயத்தில் என்ன முடிவெடுப்பதாக இருந்தாலும், அது அமைச்சரவையில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் சிபல் சுட்டிக்காட்டினார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்று அந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும், அட்டார்னி ஜெனரல் ஒரு வாரத்தில் அறிக்கை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரத்து செய்யப்பட்ட 122 உரிமங்களை அடுத்து, ஏலத்துக்குத் தயாராக உள்ள 546 மெகாஹெட்ஸ் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை உரிமஙகளை ஏலம் விடுவது தொடர்பான நடைமுறைகள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், உரிமங்களை ஏலம் விடுவதற்கான வழிகாட்டு நெறிகளை உருவாக்கும் பணியில் டிராய் எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டுள்ளது.
ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமங்கள், முதலி்ல் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டன. அது சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால்தான் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களில், நார்வே, ரஷ்யா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் நலனைப் பாதுகாக்குமாறு அந்த அரசுகள் இந்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகின்றன. கடந்த வாரம், நார்வே அமைச்சர் டெல்லி வந்து கபில் சிபலிடம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

புதன், 18 ஜனவரி, 2012

காதலில் உறுதி இருந்தால் ......

நாளை திருமணம் நடக்க இருந்த சென்னை கல்லூரி ஆசிரியையின் என்ஜினீயர் மாப்பிள்ளை கைது

இது மாதிரியான செய்திகள் நாம் அடிக்கடி படிப்பதும் , காண்பதும் , கேள்விபடுவதும் இப்போது சகஜமாகிவிட்டது . இப்ப ஒரு கலாசாரம் பெருகி போச்சி , அதாவது யாரையாவது காதலிக்க வேண்டியது அப்புறம் யாருகூடவாவது நிச்சயம் பண்ண வேண்டியது , அப்புறம் ஏதாவது கரணம் சொல்லி திருமணத்தை நிறுத்தவேண்டியது , இதில் ஒன்று பையனோ , பொண்ணோ மட்டும் பாதிக்கிறதில்லை , குடும்பம் , சுற்றம் , சகோதரர்கள் , சகோதரிகள் , இப்படி எதுக்கு உங்களுக்கு இந்த கோல வெறி , காதலிக்கிறீங்க சரி ஒன்னு தைரியமா பெத்தவங்க சம்மதத்தோடு பேசி திருமணம் முடிக்கலாம் , இல்ல துணிஞ்சி எதிர்த்தும் திருமணம் செய்யலாம் அது அவர்கள் காதலில் ஆழத்தை பொறுத்தது . எதற்கு இப்படி சம்பந்தம் இல்லாத பையனையோ , பொண்ணையோ பதிக்க நீங்க காரணமா இருக்கீங்க . 

உங்கள பெத்து வளர்த்த பாவத்துக்காக உங்க பெற்றோர் வருத்த படுவதோ அல்லது பாதிக்க படுவதையோ கூட ஒரு விதத்துல ஏத்துக்கலாம். ஆனால் உங்க குடுபத்துக்கு சம்பந்தம்  இல்லாத , ஒரு குடும்பம்  அது பையனோ , பொண்ணோ , உங்க கூட சம்பந்தம் வச்சிக்க நினச்ச பாவம் மட்டுமே.  இதில் அவர்களும் பாதிப்புக்குள்ளாவது எந்த விதத்தில் நாயம்    என்று விளங்க வில்லை. எதையும் முன்பே முடிவு செய்து விட்டால் எதற்கு இந்த வீண் வேலைகள் , அவமானங்கள் . 

பெத்தவங்களும் கொஞ்சம் காலத்துக்கு தகுந்தா மாதிரி உங்கள மாத்திக்க முயற்சி பண்ணுங்க . பிள்ளைங்க என்ன செய்யறாங்க அப்படின்னு கவனிங்க , இன்றைய நாட்களில் காதல் என்பது பெரிய குற்றம்  எதுவும் இல்ல அவமான செயலும் இல்ல, நல்ல விதமா இரண்டு வீட்டாரும் பேசி  நீங்களாகவே முன்வந்து திருமணம் செய்து வைத்தால் இந்த மாதிரியான நிகழ்வுகள் குறையும். நாளடைவில் எல்லாம் சரியாக விடும் . பிள்ளைகளின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைத்து எந்த போலியான   கெளரவத்தை  காப்பத்த போறீங்க என்று விளங்க வில்லை . நீங்க பார்த்து பார்த்து வர்த்த பிள்ளைகளின் கனவுகளை ஆசைகளை சரியாக இருந்தால் தயவு செய்து நிறைவேற்றி வையுங்கள். 

பிள்ளைகளும் பெத்தவங்க சம்மதம் யாரு வாங்கிட்டு காதலிக்க முடியாது தான். ஆனால் காதலில் உறுதி இருந்தால் பெற்றவர்களுக்கு புரிய வையுங்கள் முடியாத பச்சத்தல் அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் பதிவு திருமாணம் செய்து கொள்ளுங்கள் . பெற்றவர்களுக்காக செய்கின்றோம் என்ற தவறான எண்ணத்தில் உங்களுக்கும் , உங்கள் நம்பி திருமண ஏற்பாடுகளை செய்யும் மாப்பிள்ளை, பெண் வீட்டார்களை சோதிக்காதீர்கள். அது பாவம் .

உண்மையில் பெண்ணை பாராட்டியே தீர வேண்டும் . என்ன ஒரு துணிவு ,   இந்த திருமணம் நடந்திருந்தால் இரண்டு பேருக்குமே சங்கடங்கள் , சந்தோசமான வாழ்கை   வீணடிக்க பட்டிருக்கும் . இப்போது நிறைய ஆண்களும் இதுபோல பாதிப்புககுள்ளாகி கொண்டிருகின்றார்கள்  என்பதும் கவனிக்கவேண்டிய விசயமே !

நிச்சயிக்க பட்ட பின்பு திருமணம் நின்று விட்டால் எப்படியும் காதலனுக்கோ , அல்லது காதலிக்கே தான்  மறுபடியும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அல்லது கைகழுவி விடுவார்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் ஒன்று சேர்ந்து விடலாம் என்ற சுயநலத்தோடு கூடிய குறுக்கு புத்திகள் இப்போது மலிந்து விட்டது என்பது வருத்ததுதோடு கூடிய உண்மை ...............

செய்தி :

 ஸ்ரீரங்கம், ஜன. 18-

சென்னை கல்லூரி ஆசிரியையுடன் நாளை திருமணம் நடக்க இருந்த என்ஜினீயர் மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். ஆசிரியையுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு தனது காதலியை அவர் பதிவுத்திருமணம் செய்து கொண்டதால் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வாசுதேவன். தனியார் நிறுவன மேலாளர். இவரது மகள் சுபா (வயது 24). எம்.இ. படித்து உள்ள சுபா சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
மதுரை வடக்கு ஆவணி மூலவீதி ராமன் செட்டி சந்து தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் ராஜேஷ் (28). என்ஜினீயர் ஆன இவர் சென்னையில் உள்ள ஒரு காற்றாலை மின் நிலையத்தில் முது நிலை பொறியாளராக வேலை செய்து வருகிறார். ராஜேசுக்கும் - சுபாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த 11-9-2011 அன்று 'நிச்சயம்' செய்யப்பட்டது.
சுபாவின் சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் என்பதாலும், அவரது சித்தப்பா உள்பட உறவினர்கள் ஸ்ரீரங்கத்தில் வசிப்பதாலும் திருமணத்தை ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) நடத்துவது என முடிவு செய்து இருந்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் இருந்தே ராஜேசும், சுபாவும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
மணமகன் ராஜேசும் இடையில் ஒரு முறை திருச்சிக்கு வந்து, தங்களுக்கு தேவையான கட்டில், மெத்தை உள்பட சீர்வரிசை பொருட்களை தேர்வு செய்து மணமகள் வீட்டாரிடம் வாங்கி கொடுக்கும்படி கூறி இருக்கிறார்.
இந்நிலையில் சுபா நேற்று முன்தினம் இரவு திடீர் என ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
"எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராஜேஷ் போனில் பேசும்போது, தான் சென்னையை சேர்ந்த சுஜிதா என்ற பெண்ணை கடந்த 31-10-2011 அன்று சாலவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வியாழக்கிழமை (நாளை) ராஜேசுடன் எனக்கு நடைபெற இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும், என்னை திருமணம் செய்துகொள்வதாக நிச்சயம் செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து மோசடி செய்த அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரகதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ராஜேஷ் சென்னையை சேர்ந்த சுஜிதாவை 6 ஆண்டுகளாக பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து வந்ததும், காதலியை மறக்க முடியாமல், பின்னர் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
சுபாவுடன் திருமண நிச்சயம் நடந்த பின்னர் தான் அவர் சுஜிதாவை திருமணம் செய்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து ராஜேசை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை திருச்சி 3-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த புகார் தொடர்பாக ராஜேசின் தம்பி யஷ்வந்த் (24), தந்தை ராமசாமி (60), தாயார் கண்ணம்மாள் (56) ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.