news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

வியாழன், 30 செப்டம்பர், 2010

அயோத்தி தீர்ப்பு !!!!!!!...........




லக்னெள: அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும்,

இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஆனால், ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்ப்பை வழங்கினர். மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து கோவில் கட்டிக் கொள்ள ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடமும், இன்னொரு பகுதியை அங்கு ஏற்கனவே கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை 3 நீதிபதிகளும் ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டனர்.

இதன் மூலம் பாபர் மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அந்த இடத்திலிருந்து ராமர் சிலை அகற்றக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், (இந்த நிலத்துக்கு உரிமை கோரும் இந்து அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அறக்கட்டளை அமைத்து இந்த நிலத்தைப் பெற்று கோவில் கட்டிக் கொள்ளலாம்)

மீதமுள்ள இடத்தை அங்கு ஏற்கனவே சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில், இந்த மசூதி கட்டப்பட்ட இடத்தில் கோவில் இருந்துள்ளது என்பதை இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு நிரூபித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதை இஸ்லாம் மதமே தவறு என்கிறது என்றார்.

நீதிபதி சிப்கத் உல்லா கான் தனது தீர்ப்பில், கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அந்த இடத்தில் கோவில் இருந்து, அது நெடுங்காலமாக சிதிலமடைந்து கிடந்தது. கோவில் முழுவதும் சிதிலமடைந்த பி்ன்னரே அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. இடிந்து கிடந்த கோவிலின் சில கட்டுமானப் பொருட்களும் மசூதி கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இவ்வாறு தனித்தனியே நீதிபதிகள் கருத்துத் தெரிவி்த்தாலும் மூவரும் மொத்தத்தில் அளித்த தீர்ப்பின்படி, இந்த இடத்தில் 3ல் 2 பங்கை இந்துக்களிடமும் (ராமர் கோவில் கட்டவும், நிர்மோகி அகராவிடமும்), 1 பங்கு இடத்தை பாபர் மசூதி கமிட்டியிடமும் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இந்த இடத்துக்கு உரிமை கோரி ராம ஜென்மபூமி நியாஸ், நிமோகி அகரா ஆகியவை 1950களில் வழக்குத் தொடர்ந்தன. 1961ம் ஆண்டில் சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் வழக்குத் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு கடந்த 60 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பையொட்டி நாடே பெரும் பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப் போவதாக சன்னி முஸ்லீம் வக்பு வாரியமும் இந்து மகா சபாவும் அறிவித்துள்ளன. இதனால் இந்தத் தீர்ப்பே இறுதியானதல்ல. உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் தீர்ப்பே இறுதியானதாகும்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவு விழா தொடங்கியது : தஞ்சை விழாக் கோலம்!

விழா நடத்தி என்ன பலன்...? கோவில்களையும், கோட்டைகளையும் கட்டிய சோழன் சிலை நாடு ரோட்டில் நிற்கிறது, காசுக்காக தமிழனை காட்டிகொடுத்தும், தஞ்சையை ஆங்கிலேயனுக்கு தாரைவார்த்தும கொடுத்த துரோகியின் சிலை அரண்மனை உள்ளே..!!! தமிழா... என்னே உனது பெருந்தன்மை... சிந்திக்க பழகு,
இப்படி நாளுக்கொரு விழா, அரசு பணத்தில் ( மக்கள் வரி பணத்தில் ) இவர்கள் அடிக்கும் லூட்டி தாங்கலட சாமீ !. நாள் விடிஇதோ இல்லையோ , முதல்வருக்கு பாராட்டு விழா , அல்லது எதாவது பிரம்மாண்ட விழா , இப்படியே ஒவ்வொரு நாளும் தமிழகத்துக்கு கழியிது, பத்தாததுக்கு நடுநடுவே இலவச அறிவிப்புக்கள் , உங்க கிட்ட யாரு கேட்டா இலவசங்களை ! , இலவசங்களை கொடுத்து உழைத்து சம்பாதித்து வாங்க வேண்டியது ( நோகாம நெம்பு கும்புடற ) மக்களை மூளை சலவை செய்து அவனை சோம்பேறியாக்கி , கோமாவில படுக்க வைக்காம விடறதில்ல பாருன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கு தமிழக அரசு ( தி .மு.க.) . தமிழ் நாட்டுல இருக்குற ஒவ்வொருத்தன் தலையிலையும் 10000 ரூபா கடன் ,அவனுக்கு தெரியாமலையே சுமத்தப்பட்டுள்ளது . இருந்தும் சந்தோசமா இருக்கானா அதுதான் இல்லை . இவங்களை தட்டி கேட்க ஆளே இல்ல , தட்டி கேட்க வேண்டிய ( அட கேட்கராங்கப்ப ஆட்சில பங்கு ஆனா, வழக்கம் போல அல்லதான் உங்களை கொள்ளை அடிக்க விட்டுடுவமா ! ) கூட்டணி வழக்கம் போல தூங்கிகிட்டு இருக்கு . ஆங்காங்கே மறியல் உடனோ எதாவது ஏமாற்று வேலை செய்து அதை மழுங்கடிப்பது
( கோரிக்கையை சரி செய்வதில்லை ) இதே வேலையாக அரசு அதிகாரிகள் . அதற்கு சன்மானமாக ஊதிய உயர்வு ( 2 லட்சம் பேருக்கு மட்டுமே , அவர்களை நம்பியே ஆட்சி ஓட்டிகிட்டு இருக்கேமில்ல , அடுத்த தேர்தல்ல நாங்க ஜெய்க்கனுமில்ல என்ன சின்ன புள்ள தனமா இருக்கு ,சின்ன மீனா போட்டு தான் பெரிய மீனா புடிக்கணும் அட போங்கப்பா ,நீங்க எப்பவுமே இப்படித்தான் ) மக்கள் எக்கேடு கெட்ட எனக்கென்ன என்மக்களுக்கு குடும்ப தலைவனா நான் செய்ய வேண்டிய கடமை ஒன்னு பாக்கி இருக்கு.

பாகபிரிவினை நடக்குதுங்கோ !!!!!!!

இந்த தேர்தல் குள்ள தென் தமிழ் நாட்ட ( மதுரைய தலைமை இடமாக ) என் மூத்த பிள்ளைக்கும் , மத்திய தமிழ்நாட்ட என் இரண்டாவது மணைவியின் ஒரே மகளுக்கும் ( திருச்சி தலைமை இடமா ) , வட தமிழ்நாட்ட ( நாட்டின் தலை நகரமான சென்னைய தலைமை இடமா )இனொரு பிள்ளைக்கும் , பிரிச்சி பட்ட போட்டு கொடுத்திட்டேனா , எதோ பாவம் அவங்க தலைமுறை நல்ல இருக்கும் ( அப்ப தமிழன், அப்படின்னா!! , புரியல என் குடுபத்துக்கு தலைமுறை தலைமுறையா தமிழன் அடிமை ) ஒரு நல்ல அப்பாவா நான் இத கூட செய்யலைன்ன ,என் தலை முறையே என்ன சபிக்காதா என்ன நான் சொல்றது. இதுல ஒன்னு குறையுதே தலைவரே ! உங்க பேரனுங்க ........ ஓஓஓஓ ... நல்ல வேலை ஞாபக படுத்தீநீங்க என்ன பண்ணலாம் சென்ரல கேக்கலாமுனா சட்ட சிக்கல் வரும் அது காங்கிரஸ் கூறு போட்டாலே பத்தாது , அதன் அமெரிக்க கிட்ட மொத்தமா பேசி வித்துட்ட , கரன்சியா பிரிக்கறது ஈசிய இருக்குமுன்னு பேசிக்கராங்கப்ப எனக்கு தெரியாது . தெளிவா சொல்லிட்டேன் , அப்படி வித்த தமிழ்நாட்ட மட்டும் நான் வாங்கிக்கறேன்னு . பாவம் அவங்களுக்கு தெரியாது தமிழ் நாட்ட எப்பயோ என் பேருக்கு மாத்தியாச்சின்னு . என் பேரங்களை பத்தி கேட்டீங்களா !
எங்க அவனுங்க நான் சொன்னத கேட்டிருந்தால் இந்நேரம் மேற்கு தமிழ்நாடு ( பேரனுங்க என் மகனுங்க மாதிரி மக்கு இல்ல அதான் தொழில் நகரான ,கோயம்பத்துர தலைமை இடமா ) அவனுங்களுக்கு தரலாமுந்தான் இருந்தேன் . இப்ப என் மகனுங்க பெத்த பேரனுங்க சண்டைக்கு வரான்னுங்க . எப்படியாவது பேசி பாக்கணும் முரசொலி மாறனுக்காவது எதாவது செய்யணும் பாப்போம் பக்கத்துல எதாவது பாண்டிச்சேரி, கேரளா , ஆந்தரா , கர்நாடகா மாட்டுதான்னு பாப்போம். இப்பதான் பிரச்சன அங்கெல்லாம் ஆரபிச்சிருக்கு , நல்ல புரோக்கர் இருந்த சொல்லுங்களேன் , பேசி முடிச்சிடலாம் . எதுக்கு அவங்க மட்டும் கஷ்ட படனும் பாவமில்ல . ......... என்ன பாக்கற தமிழா நீ என்னைக்கும் அடிமைதாண்ட விட்டுடுவோமா !! யாருகிட்ட .. .
ஒருநாள் நீ நாடிழந்து , உரிமை இழந்து ( அப்படி ஏதாவது இருக்குதா பெருசா சொல்ல வந்துட்டான் ) உடமை இழந்து , உறவிழத்து , நாடோடியாக உயிருக்கு பயந்து நாட்டை விட்டு அகதியாக ஓடப்போகிறாய் ( அகதி என்ன எங்களுக்கு புதுசா , இப்பதானே எங்க சகோதரர்களை கொன்று அகதிகளாக்கி உள்ளோம் , கொஞ்ச நாட்களின் நாங்களும் பின்னால வருவோமில்ல தமிழனா கொக்க , நாங்க எப்பவமே விட்டு அப்புறமா பிடிப்போம் நாங்க மாற தமிழர்கள் அல்லவோ ) . முழித்துக்கொள் அரசியல் வாதிகளிடமிருந்து ,
இலவசங்களை வாங்காதே , எந்நாளும் உன் உரிமையை விட்டு கொடுக்காதே , சிற்றிம்பதிற்கு ( உழைக்காமல் கிடைக்கும் இலவச பொருள் , பணம் , போலி வாக்குறுதிகளை நம்பாதே !!) அடிமை ஆகாதே !!! . உன் எதிர் காலம் உன் கையில் , உழைக்காமல் கிடைக்கும் எதுவும், உன்னை கூனி குறுக செய்யும் , மனம் எதிர்ப்பு சக்கியை இழந்து விடும் . அடிமை ஆகி விடுவாய் . இளம் தமிழ் தோழனே உன்னை மட்டுமே நினைக்காமல் நாட்டையும் , உன் உரிமைகளையும் எண்ணி புறப்பட்டு தமிழன் ஒருநாள் தலை நிமிர்வான் .........( விடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு கடக்கோடி தமிழனுங்கோ !!!!!)

திங்கள், 20 செப்டம்பர், 2010

துஷ்டதெய் வங்களின் (காட்டுமிராண்டிகளின்) நிலையை நினைத்து என் உள்ளக்குமுறல்!

கிரி அவர்களுக்கு ,
அண்ணாத்த நானும் உங்களை மாதிரி தான் , இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை இத மாதிரி கூத்தெல்லேலாம் அரங்கேறும் , ஆங்கிலேயனுக்கு வரி கொடுக்க மாட்டேன் என்று சொன்னதற்கே (அதுவும் நாம நாட்ட சுரண்டிகிட்டே ) கட்ட பொம்பன தூக்குல போட்ட வரலாறு எல்லாம் இந்த தே. பசக்களுக்கு தொரியாது தல விடுங்க. எனக்கு உங்களை போலதான் பயங்கர கடுப்பு ,கோவம் , வெறுப்பு , வெறி எழுதின சத்தியமா லிமிடட தந்திடுவேன் இருந்தாலும் எழுத நேரம் கிடைக்கல ,
உங்க பதிவ பார்த்த உடனே உங்களை பாராட்டிட ஒண்ணுமில்ல, உங்களுக்கு தோல் கொடுக்கணும் நினைக்கறேன் தல. ஒரு விஷயம் மூணு பேரோ, முப்பது பேரோ அது மேட்டர் இல்ல அங்க நடந்தது என்ன காட்டு மிராண்டி தனம்முனு மிருகங்களா கொச்ச படுத்த விரும்பல , என்ன மிருகங்க கூட அதுங்களா தொல்ல கொடுத்த தான் கொல்லும் , இதுங்கள எந்த லிஸ்ட்ல சேர்திகறது கிரி . எனக்கு தெரிந்து இவனுங்களுக்கு தூக்கு கூட பத்தாது, உடனே உயிர் போயிடும் கஷ்டம் இல்லாம . இந்த காட்டு மிருகங்க கூட போககரத்துக்கு யோசிக்கும் இடமா பார்த்து கொண்டுபோய் தனியா தொலச்சிடனும் கூட்டமா இல்ல, அல்லது ராக்கெட்ல பயன்படுத்த ( அதாவது எலிய வச்சி சோதிப்பான்களே ! ) அந்த மாதிரி ராக்கெட்டேட ( நம்ம இந்திய ராக்கெட்டோட) சேத்தி அனுப்பிடணும் , என்ன ஒரு அப்பாவி எலியாவது மிஞ்சும். எனக்கு வார்த்தை விவகாரமா வந்து தொலைக்குது அதுனால முக்கியமான இன்னொரு விசயத்தையும் சொல்லிட்டு முடிக்கறேன் .
உங்களுக்கு பிரபகரன்னு ஒருத்தர் இருந்தார் ஞாபகம் இருக்கா, அவர பத்திய கதை எல்லாம் எழுதினால் நேர போதாது ஒரு நாலஞ்சி பதிவாத்தான் போடணும் , அதனால சுருக்கமா மேட்டருக்கு வந்துடறேன் . ஒரு கோவலமான விஷயம் ஒரு தலைவனை ஒருத்தன் கொன்னுட்டான் என்பதற்காக அவரை மட்டும் தண்டிக்காம ( அது சரியா தவறா என்பது இந்த பதிவுக்கு தேவை இல்லாதது ), ஒரு இனத்தையே அழிக்க சொன்னாகளே ! அது எந்த மிராண்டி தனம் எனக்கு புரியால,அப்ப இந்த தாய்மை உள்ளம் எங்க போனது தெரியல , இவனுங்க ,இவளுங்க பத்தி யோசிக்க கூட அறுவறுப்ப இருக்கு , பாவப்பட்ட( எந்த தவறு பாவமும் அறியாத ) இந்த மாணவிகள் கொல்லப்பட்டது மனித குலம் இந்த பூமியில் இருக்கும் மட்டும் மன்னிக்காது , அனால் சில துர்தெய்வங்கள் நாட்டுல இருக்குங்க கொலைகாரனையும் , கொள்ளகாரனையும் ,முடிசெரிக்கியையும் , மொள்ளமரியையும் காப்பாத்த ஆபத்தண்டவனுங்களா !! . அரசியல்வாதிகளும் , மனித உரிமைய தவறா புரிஞ்சிக்கிட்ட வங்களையும், எப்படி எந்த மொழில தீட்டினாலும் பத்தாது. குறைஞ்ச பட்சம் தூக்குல போட்டாலாவது ,அந்த உயிர்கள் சம்பந்த பட்டவங்களாவது ஒரு சதவீதமாவது ஆறுதல் அடைவாங்க , அது மட்டுமே நம்மளால தரமுடிந்த நிவாரணம் . கிரி சாருக்கு ஒரு விண்ணப்பம் உங்கள் அனுமதி இல்லாம உங்க பதிவ என் ப்ளாக் ல போடா போறேன் நீங்கள் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் . ஏன் என்றான் நான் எழுத நினைத்த பதிவு விட சிறப்பாக சுருக்கமாக உங்கள் பதிவும் இருப்பதால் உங்கள் பதிவையே உபயேகித்து கொள்கிறேன் . நன்றி
ஒரு காட்டுமிராண்டியின் உள்ளக்குமுறல்!

by கிரி on September 14, 2010

நான் இங்கு எழுதியதில் சில வார்த்தைகள் கடுமையாக இருக்கும் ஆனால் கண்டிப்பாக யாரையும் தனித்து குறிப்பிடுவன அல்ல. என் ஒட்டுமொத்த கோபமே இந்த இடுகை (Post). யாரையும் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் இதை விட நாகரீகமாக!! எனக்கு இந்த விஷயத்தை எழுதத் தோன்றவில்லை, முடியவில்லை.

தர்மபுரியில் கல்லூரி மாணவிகள் எரிக்கப்பட்டதற்கு குற்றவாளிகளுக்கு வழங்கிய தூக்குத்தண்டனையைப் பற்றி பலரும் விவாதித்து வருகிறார்கள். பெரும்பாலனவர்கள் தண்டனையை சரி என்றும் சிலர் அது தவறும் என்றும் மற்றும் இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று வர்ணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எப்போதும் ஒரு பிரச்சனை விவாதம் என்றால் அனைவரும் ஒரே மாதிரி பேச மாட்டார்கள் இரு வேறு கருத்துகள் இருந்தாக வேண்டும் காரணம் எளிது அனைவரும் ஒன்றுபோல சிந்திக்க முடியாது. எந்த விசயமாக இருந்தாலும் கண்டிப்பாக அதில் மாற்றுக்கருத்து இருக்கும் இருக்க வேண்டும். எனவே இதிலும் மாற்றுக்கருத்துகள் இருந்ததில் எனக்கு எந்தவித ஆச்சர்யமுமில்லை அதை தவறாக நினைக்கவுமில்லை. நம் கருத்தை சரி என்று நினைக்கும் போது மற்றவர்கள் அவர்கள் கருத்து சரி என்று ஏன் விவாதம் செய்யக்கூடாது? அவரவர்க்கு அவரவர் நியாயம். இருக்கட்டும்.

என்னோட பார்வையில் தூக்குத்தண்டனை சரி! கண்டிப்பாக வேண்டும்!! என்ற என் கருத்தை முன் வைக்கிறேன். எனக்கு எப்போதுமே சமுதாயத்தின் மீது கோபங்கள் உண்டு. எனவே என்னை தொடர அழைத்த “தேவதை” டென்ஷன் ஆகாம இருந்தா சரி! பதிவில் கூட என் கோபத்தை ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பேன்.

இதிலும் என் கோபங்களை ஆதங்கத்தை கொட்டப்போகிறேன். இதனால் ஒரு வெங்காயமும் ஆகப்போவதில்லை என்று உறுதியாக தெரிந்தாலும் கூறக்காரணம் குறைந்தது மனதில் உள்ளதை கொட்டினால் மன அழுத்தமாவது குறையுமே என்ற என்ற எண்ணம் தான். பதிவுலகில் வெட்டி விவாதம், அரசியல் செய்வதை விட இதைப்போல உருப்படியான விசயத்தில் என் கருத்தை கூற முடிகிறதே! என்பது இங்கே வந்ததற்கு திருப்தி அளிக்கிறது.

கடுமையான தண்டனைகளால் குற்றங்கள் நின்று விடுமா?

justice ஒரு காட்டுமிராண்டியின் உள்ளக்குமுறல்!பொறுமையாக யோசித்தால் குற்றங்கள் கடுமையான சட்டங்களால் நிற்பதில்லை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. கடுமையான சட்டங்கள் இருக்கும் சவுதி மற்றும் அதைவிட கொஞ்சம் படி குறைவாக இருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடுமையான சட்டங்கள் இருந்தும் பல குற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன. அப்புறம் என்ன உங்க பிரச்சனை? என்று அவசரப்படாதீர்கள்!

இந்த சட்டங்களால் 10 தவறு நடக்க வேண்டிய இடத்தில் 10 யையும் குறைக்க (முடியாது) முடியவில்லை என்றாலும் ஒரு நான்கையாவது குறைக்கலாம். அந்த நான்கைத்தான் என்னைப்போன்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். குறைந்த பட்சம் அந்த நான்கு பேர் தவறு செய்யாமல் இருந்தால் கூட அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் குறைவார்களே என்ற ஆதங்கம் தான்.

ஒரு ஊரில் பத்து பெண்கள் வன்புணர்வு (தயவு செய்து கற்பழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள் ரொம்பக் கேவலமாக உள்ளது) செய்யப்படுகிறார்கள் என்றால் கடுமையான சட்டங்களால் பத்து பேரும் திருந்தவில்லை என்றாலும் ஒரு நான்கு பேராவது அதற்கு பயந்து அந்த எண்ணத்தை கை விட்டால் அந்த நான்கு பெண்களின் வாழ்க்கையாவது தப்பிக்குமே என்பது தான் பலரின் எண்ணம். எங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு இந்த நான்கு அல்லது மூன்று பேர் தான் அனைவரும் இல்லை என்றாலும்.

காட்டுமிராண்டித்தனம்

தூக்குதண்டனை தவறு என்று கூறுபவர்கள் பெரும்பாலும் கூறும் வார்த்தை “இது காட்டுமிராண்டித்தனம்” என்று. எதுய்யா காட்டுமிராண்டித்தனம்? மூன்று பெண்களை கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் அனைவரின் முன்பும் பெட்ரோலை ஊற்றி எரிக்கிறார்கள் அது காட்டுமிராண்டித்தனமா இல்லை இந்த கொடுமையான செயலை செய்தவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுபவர்கள் காட்டுமிராண்டிகளா!

அந்தப்பெண்ணின் பெற்றோரை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்! குழந்தை பிறந்து கொஞ்ச நாளில் இறந்தால் கூட மனதை தேற்றிக்கொள்ளலாம் 22 வயது வரை வளர்த்து அதுவும் இயற்கை மரணம் என்றால் என்றால் கூட மனதை தேற்றலாம் இந்த மாதிரி தன் பெண் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டால் அந்தப்பெண்ணின் பெற்றோரின் மனம் எப்படி துன்பப்படும் என்று அவர்கள் நிலையில் இருந்து யோசித்துப்பாருங்கள்.

தூக்கில் போடுவதால் இறந்த பெண் வந்து விடப்போகிறாரா?

நல்லா கேட்டீங்க.. நறுக்குன்னு! பகுத்தறிவா யோசித்து புத்திசாலித்தனமா கேட்டீங்க! பொட்டில் அடிச்ச மாதிரி கேட்டீங்க. எங்களுக்கும் தெரியும் இறந்தவங்க வரமாட்டாங்க என்று ஆனால் பாதிக்கப்பட்டவங்களுக்கு என்ன சொல்வீர்கள்? அவர்கள் அடைந்த துன்பம், மன உளைச்சல்களை எப்படி திரும்பப் பெறுவீர்கள்?

இந்தப் பெண்ணை கொன்றவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை தாமதத்தால் ஒரு பெண்ணின் தந்தை அந்த மன உளைச்சலிலே இறந்து விட்டார். அது தெரியுமா உங்களுக்கு? நியாயமே தெரியாமல் இறந்து போன இந்த காட்டுமிராண்டித் தந்தைக்கு எங்க இருந்து பதில் கூறுவீர்கள்? தன் மகளை எரித்தவர்களை எதுவுமே செய்ய முடியாமல் இவ்வளோ நாளாக மனம் புழுங்கி இறந்து போன இவருக்கு காட்டுமிராண்டியாக இல்லாத நீங்கள் என்ன வானுலகம் சென்று பதில் தருவீர்களா?

உணர்ச்சி வேகத்தில் பேசாதீர்கள்?

சிரிப்பு தான்யா வருகிறது இதை கேட்டு. உணர்ச்சி இருப்பதால் தான்யா நாங்க இதைப்போல பேசுகிறோம். இந்தக்கோபம் இந்தப்பெண்களை எரித்ததால் மட்டுமே வருவதல்ல காலம் காலமாக நியாயம் கிடைக்காமல் தவறு செய்பவர்கள் ஜாலியாக வெளியே சுற்றிக்கொண்டு இருப்பதை தினம் தினம் பார்த்து புழுங்கி வெறுத்து போய் வரும் வார்த்தைகள். இப்போது மட்டுமல்ல எப்போது கேட்டாலும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தூக்கு தண்டனை வேண்டும் என்று தான் கூறுவார்கள். அப்போது பேசி மறந்தால் மட்டும் தான் உணர்ச்சி வேகத்தில் பேசுவது இவை எல்லாம் காலம் காலமாக மனதில் இருந்து வரும் வார்த்தைகள் தானே ஒழிய உணர்ச்சிவசப்படுவதால் வருவதல்ல.

காட்டுமிராண்டித்தனம் பற்றி எங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தண்டனைகளின் வீரியம் புரியும். தற்போது ஈரானில் தன் முகத்தை காட்டியதற்காக ஒரு பெண்ணிற்கு 99 கசையடி கொடுத்தார்களே அதன் பெயர் தான் காட்டுமிராண்டித்தனம். நாங்கள் ஒன்றும் பிக்பாக்கெட் அடித்தவனை கொண்டு போய் தூக்கில் போடக்கூறவில்லை. குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்.

தனக்கு ஏற்பட்ட இழப்பை ஒருவரால் மீண்டும் பெற முடியாது என்றாலும் குறைந்த பட்சம் குற்றம் செய்தவருக்கு சரியான தண்டனை கிடைத்தால் மன திருப்தியும் ஆறுதலுமாவது பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்கும். இதைத்தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இதில் என்ன தவறு கண்டீர்கள்? அனைவரும் உங்களைப்போல மன்னித்து விட காந்தி அல்ல.

மனித உரிமை

இதற்கு பதிலாக *** உரிமை என்று வைத்து இருக்கலாம். மனித உணர்வுகளை புரிந்து கொண்டால் ஏன்யா நீங்கள் எல்லாம் இப்படி பேசப்போகிறீர்கள். ஒரு குற்றவாளிக்கு காட்டும் மனித உரிமையையும் அக்கறையையும் பாதிக்கப்பட்டவருக்கு ஏன் காட்ட மறுக்கிறீர்கள்? நான்கு பேரை வன்புணர்வு செய்து இருப்பான் அவனை தூக்கில் போடாதே! என்று சொம்பை தூக்கிக் கொண்டு வந்து விடுகிறீர்கள். அந்த பொறம்போக்கை எல்லாம் என்ன அழைத்து கொஞ்ச சொல்கிறீர்களா? அவனை வெளியில் விட்டால் இன்னும் இரண்டு பேரை இதே நிலைக்கு ஆளாக்குவான். அப்போது என்ன சொல்வீர்கள்? அப்போதும் கருணை காட்ட வேண்டுமா?

இதில் ஒரு சில பெண்கள் கூட இந்த பன்னாடைகளுக்கு பரிந்து பேசுகிறார்கள் அது தான் இன்னும் கடுப்பை கிளப்புது. அம்மாமார்களே! ஒரு பெண்ணின் மனது, உணர்வுகள் மற்றொரு பெண்ணிற்கு தான் தெரியும் என்பார்கள்…. உங்களைப் போன்றவர்களைப் பற்றி எல்லாம் தெரியாமல் இந்த வசனத்தை கூறி விட்டார்கள் போல உள்ளது. இப்படி பேசுற உங்களையெல்லாம் எவனாவது…… சரி விடுங்க! ஏதாவது அசிங்கமா சொல்லிடப்போறேன். நல்லா இருங்க!

மனித உரிமை மனித உரிமை என்று பேசிப்பேசியே தூக்குத்தண்டனை ஏற்கனவே இல்லாம பண்ணிட்டீங்க! கடைசியா தூக்குல போட்டது குறைந்தது பதினைந்து வருடம் முன்பாவது இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால திருட்டுத்தனம் கேப்புமாரித்தனம் பண்ணுற மொள்ளமாறிக எல்லாம் எப்படி இருந்தாலும் வெளியே வந்துடலாம் என்று தைரியமா தப்பு பண்ணிட்டு இருக்கானுக. யோவ்! குழந்தைகளை கடத்தி கை காலை எல்லாம் உடைத்து, கண்ணை குருடாக்கி பிச்சை எடுக்க வைக்கறானுகய்யா!

இவனுகளை எல்லாம் எப்படியா மன்னித்து விடச்சொல்றீங்க? “இவங்க எல்லாம் தெரியாம பண்ணிட்டாங்க… எதுவும் திட்டம் போட்டு செய்யவில்லை அவர்களுடைய சூழ்நிலையால் அப்படி செய்துட்டாங்க” அப்படின்னு மட்டும் சொன்னீங்கன்னு வைங்க… ஊர்ல இருக்கிற அத்தனை கெட்ட வார்த்தையிலும் உங்களை நான் திட்டுனதா வைத்துக்குங்க. இவங்க மேல விட இவனுங்களுக்கு பரிந்து பேசும் உங்க மேலதான் அதிக ஆத்திரமாக வருகிறது.

திரைப்படத்தில் எல்லாம் கதாநாயகன் இதைப்போல தவறு செய்தவர்களை தண்டிக்கும் போது ஏன் விசிலடித்து வரவேற்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? தன்னால் செய்ய முடியாததை தன் பிம்பமாக இன்னொருவன் செய்யும் போது கிடைக்கும் மனத் திருப்திக்காகவும் ஆறுதலுக்காகவும் தான். அதனால் தான் நம்ம ஊர்ல எல்லாம் இதைப்போல படங்கள் வெற்றி பெறுகிறது. தானே தண்டித்ததாக நினைக்கிறார்கள். நிஜத்தில் தான் எதுவும் செய்ய முடியவில்லை இப்படியாவது ஆறுதல் பட்டுக்கொள்வோம் என்ற எண்ணம் தான்.

வன்புணர்வு

உலகிலேயே கொலையை விட மிகவும் கொடுமையான செயல் என்று நான் நினைப்பது வன்புணர்வு. ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தினாலே தாங்க முடியாது ஒருவன் வன்புணர்வு செய்து விட்டான் என்றால் அந்தப்பெண்ணின் நிலையை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். அந்தப்பெண்ணுக்கு தன் உடலே அருவருப்பாகி விடாதா! ஐயோ! என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை கொடூரமாக இருக்கிறது. இதைப்போல பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சென்று கூறுங்கள் “தூக்கில் போடச்சொல்லும் நீ ஒரு காட்டுமிராண்டி” என்று! செருப்பைக் கழட்டி அடிப்பார். இதையும் மீறி ஒருவர் மன்னிக்கிறார் என்றால் அவரை கடவுள் லிஸ்ட்ல் சேர்த்து விடலாம்.

உண்மைச்சம்பவம்

எங்கு நடந்தது என்று நினைவில்லை ஆனால் சம்பவம் மட்டும் நினைவில் உள்ளது. ஒரு கர்ப்பிணி பெண் தன் தங்கையுடன் பூங்காவிற்கோ அல்லது எங்கயோ வந்த போது அங்கு இருந்த ஒரு காட்டான் துப்பாக்கியை கர்ப்பிணியின் வயிற்றில் வைத்து மிரட்டி உடன் வந்த தங்கையை தன் அக்காவின் முன்னாலே வன்புணர்வு செய்து விட்டான் அதாவது உடன் படவில்லை என்றால் வயிற்றில் சுட்டு விடுவேன் என்று! இவனை என்ன பண்ணலாம்? என்று சொல்லுங்கள். மன்னித்து விடலாமா! நியாயமா இவன் *** நறுக்கி காக்காய்க்கு போடணும்! நாங்க இவனைப் போல பரதேசிப் பயலை எல்லாம் தூக்கில் தானே போடச்சொல்கிறோம்.

மனித உரிமை பேசும் நல்லவர்களே! நீங்கள் கேட்பது சரி என்று வைத்துக்கொண்டாலும் இவனை மனிதன் லிஸ்ட்லையே சேர்க்க முடியாதே! சரி விலங்குகள் லிஸ்ட்ல சேர்க்கலாம் என்றாலும் அவை நம்மை கேவலமாக பார்க்கும். அப்புறம் இவனை எல்லாம் எந்த லிஸ்ட்ல தான் சேர்க்கிறது.. எந்த லிஸ்ட்ல சேர்க்கிறதுன்னு தெரியாத இந்த பன்னிப்பயலுக்கு எல்லாம் பரிந்து பேச வருவீர்கள்.. ஆனால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி யோசிக்க மாட்டீர்கள். நல்லா இருக்குயா உங்க மனித உரிமை நியாயம்!!!

நோகாம நோன்பு கும்பிடுற உங்களுக்கு என்னையா தெரியும் உணர்ச்சிகளைப் பற்றி? இதைப்போல நடந்த பெண்ணிற்கு தன் இழப்பை இந்த தண்டனை கொடுப்பதன் மூலம் ஈடு செய்ய முடியாது ஆனால் குறைந்த பட்சம் அந்த கம்முனாட்டிக்கு கொடுக்கப்படும் தண்டனை மூலம் ஒரு ஆத்மா திருப்தியாவது கிடைக்குமே. அதைக்கூட “முடியாது! நாங்க சொம்பை தூக்குனா கீழே வைக்க மாட்டோம்” என்று கூறினீர்கள் என்றால் என்னையா அர்த்தம்?

மனித உரிமையைப் பற்றி எங்களிடம் கூறாதீர்கள். உங்களைவிட நாங்கள் நன்கு தெரிந்து வைத்து இருக்கிறோம் அதனால் தான் எங்கள் உரிமைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்காதா! நியாயம் கிடைக்காதா!! என்று எதிர்பார்க்கிறோம். மனித உரிமைக்காக போராட வேண்டும் என்றால் முதலில் நீங்கள் எல்லாம் எங்களுக்காகத்தான் போராட வேண்டும்.

கொள்ளை அடித்தவனும் ஊரை எமாத்துறவனும் வன்புணர்வு செய்தவனும் கொலை செய்தவனும் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அப்படியே சிறையில் போட்டாலும் ஏதாவது அரசியல் தலைவர் பிறந்த நாள் இறந்த நாள் என்று தண்டனையை குறைத்து வெளியே விட்டு விடுகிறார்கள். வெளியே வந்து பாதிக்கப்பட்டவங்க கிட்டே வந்து “பார்த்தியா! நான் வெளியே வந்துட்டேன்.. நீ என்ன மயிரை புடுங்க முடிந்தது? என்று கேட்பான். நாக்கை புடிங்கிட்டு சாகலாம் போல இருக்கும். ஏன் என்றால் மனித உரிமை பற்றி தெரியாத எங்களைப்போன்ற காட்டுமிராண்டிகளால் அதை மட்டும் தானே பண்ண முடியும்.

இந்தப்பெண்களை எரித்தவர்களுக்கு தூக்குத்தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதிப்படுத்தி இருந்தாலும் இன்னும் கருணை உள்ளம் ஜனாதிபதி அம்மா பிரதீபா இருக்காங்க.. அவங்க கருணை பொங்கி இவர்களுக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்யலாம்… பின்ன அத்தனை பேரை கொன்ற தீவிரவாதிக்கே யோசித்துட்டு இருக்காங்க!! இவர்கள் என்ன மூன்று பேரைத்தானே எரித்தாங்க… சின்னப் பிரச்சனை தானே! மனித உரிமை பாதிக்கப்படக்கூடாதல்லவா!

இந்த வெண்ணைகளுக்கு எல்லாம் அப்பவே தண்டனை கொடுத்தால் இனி யாரையாவது எரிக்க வேண்டும் என்று நினைப்பவன் ஒரு கணம் யோசிக்க மாட்டானா! ஐயோ! நம்மை தூக்கில் போட்டுவிட்டால் என்ன செய்வது என்று! இவர்களையும் மனித உரிமை மண்ணாங்கட்டி உரிமை என்று விட்டு விடுங்கள் இனி மற்றவர்களும் அட்வான்ஸ் புக்கிங்கில் எரிப்பார்கள். அப்போதும் மனித உரிமையைப் பற்றி லபோ லபோ என்று அடித்துக்கொண்டிருங்கள் அப்போது நீங்கள் கூறுவதை கேட்க உங்கள் வீட்டில் கூட யாரும் இருக்க மாட்டார்கள்.

தூக்குதண்டனையை நிறைவேற்றினால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படமாட்டார்களா?

ங்கொய்யாலே! புல்லரிக்குதுய்யா! நல்லவேளை மாடு பக்கத்துல இல்லை. என்னய்யா உங்கள் கேவலமான லாஜிக்! பாதிக்கப்பட்டவனை பற்றி மயிரைக்கூட நினைத்து பார்க்க மாட்டேன் என்கிறீர்கள் அனைத்தையும் தப்பு செய்தவனுக்காகவே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அவர்களுக்கு மட்டும் தான் குடும்பம் குட்டி எல்லாம் இருக்கா பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்ன அநாதை(நா)யா! இந்த மாதிரி ஒரு பொறம்போக்கை பெற்றதற்கு வளர்த்ததற்கு குற்றம் செய்தவனின் அம்மா அப்பா வெட்கப்பட வேண்டும்.

அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும் என்று நினைப்பது அந்தக் கடவுளால் கூட முடியாது? அப்படி இருக்கும் போது குற்றம் செய்தவனின் குடும்பத்தை நினைக்க சொல்கிறீர்கள். ஏன்யா! உங்க கண்ணுக்கெல்லாம் இவர்கள் மட்டும் தான் தெரிவார்களா! பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் உங்கள் மனித உரிமை லிஸ்ட்ல வரவே மாட்டாங்களா!

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்…. தூக்குத்தண்டனையை விட சிறைத்தண்டனை ரொம்பக் கொடுமையானது அதனால் தூக்குத்தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை தரச்சொல்கிறீர்கள், நியாயமான பேச்சுத்தான் ஏற்றுக்கொள்கிறேன். சரி! உங்கள் வழிக்கே வருகிறேன்… சிறைத்தண்டனை என்றால் அந்த தண்டனையை முழுவதுமாக அனுபவிக்க அனுமதிப்பீர்களா! கஞ்சா, சிக்கன், மட்டன், தம்மு, அபின், சரக்கு, குட்டி, செல் போன் இதெல்லாம் இல்லாமல் உண்மையான முழுமையான தண்டனையை அனுபவிக்க உறுதி தருவீர்களா! ம்ம்ம் முடியாதுல்ல. அப்ப என்ன பண்ணனும்…. அதே தான்.

இந்த இடுகை (Post) உணர்ச்சி வேகத்தில் எழுதிய இடுகையல்ல… இன்றல்ல எப்போது கேட்டாலும் இதுவே என் கருத்து. அதெல்லாம் முடியாது! அதெப்படி! மனித உரிமைன்னு…. மறுபடியும் ஆரம்பித்தால்….. ஐயா! சாமி ஆளை விடுங்க. உங்க அளவிற்கு நான் நல்லவனல்ல அதே போல உங்களைப்போல நல்லவனாக இருக்க விருப்பமும் இல்லை. உங்கள் வாதப்படி காட்டுமிராண்டியாக இருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் அவமானமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 18 செப்டம்பர், 2010

தமிழக அரசின் குட்டைய குழப்பும் கொள்கை அற்ற அறிவிப்புகள் ( பில்டிங்கு ஸ்டாங், பேஷ் வீக்கு )

தமிழக அரசின் குட்டைய குழப்பும் கொள்கை ( தெளிவற்ற )அறிவிப்புகள் :
( பில்டிங்கு ஸ்டாங், பேஸ்மட்டம் வீக்கு ) . கல்வி துறை ஆகட்டும் , நிதித்துறை ஆகட்டும் , கூட்டணி ஆகட்டும் , இலவச அறிப்புகள் , இப்படி எதை எடுத்தாலும் குழப்பமான அறிவிப்புகள் ,திட்டங்கள் ஏன் ? இந்த தடுமாற்றம் கலைஞ்சருக்கு தெரியவில்லை . குழம்பிய அல்லது குழப்பிய குட்டையில் மீன் பிடிக்கலாமுன்னு நினைக்கறாரோ ? அது அவருக்கும் , அவர் சகாக்களுக்கும் தான் வெளிச்சம் . அவங்க கூட்டணின்னு ஒன்னு இருக்கே ! அதன் தலைவருக்கு அரசுக்கு ஆமாம் போடமட்டுமே ! பழகி போன பூம்பூம் மாட்டு மாதிரிதான் அவரு , அதுக்கு மேல அவர பற்றி சொல்ல ஒண்ணுமில்ல . மற்ற தலைங்க ஆட்சில பங்கு கேட்டு பங்காளி சண்டை போடறதுக்கே வீளை சரியா இருக்காங்க !. அதிருப்தி தலைங்க வெளியில சீட்டு பேரம் பேசுதுங்க . நம்ம இளிச்ச வாய் தமிழன் தேமேன்னுன் முழி பிதுங்கி , காதல் பட நாயகன் மாதிரி இறுதில முடிய பிச்சிகிராமாதிரி ( பைத்தியம்) , நாள கடத்திக்கிட்டு இருக்கிறான் .
ஏன் இந்த தடுமாற்றம் இந்த தமிழக அரசுக்கு ! கொஞ்சம் அலசி பார்க்கலாம் ஒரு பாமரனாக .

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

FILE'S மற்றும் FOLDER களை PASSWORD மூலம் LOCK செய்யலாம்

நீங்கள் கணினியில் முக்கியமான FILE'S களை சேமித்து வைத்திருக்கலாம் .அதை மற்றவர்கள் திறப்பதை நீங்கள் இந்த வழிமுறை மூலம் தவிர்க்கமுடியும் .

1. உங்களின் முக்கியமான FILES அனைத்தையும் ஒரே FOLDER இல் சேமித்து
வைத்துக்கொள்ளவும் .இங்கே நீங்கள் MOVE OPTION ஐ பயன்படுத்தலாம் .

நீங்கள் WinRar மென்பொருளை INSTALL செய்யாமல் இருந்தால் DOWNLOAD செய்து கொள்ளவும் நண்பரே ..
2.நீங்கள் LOCK செய்ய விரும்பும் FOLDER இல் CURSOR ஐ வைத்து RIGHT CLICK செய்து Add to archive செய்யுங்கள் .
3.Go to Advanced tab and then click Set Password.
உங்களின் PASSWORD இபோழுது SET செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..
How to Set Password to Protect Files or Folders in Windows 7 Vista or XP
இப்ப நீங்க முயற்சி பண்ணி பாருங்க அந்த FILE களை OPEN பண்ணமுடியாது PASSWORD கேட்கும் .நன்றி -
நன்றி - http://www.raghuvarman.co.cc

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை



உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .
இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக பிடிக்கலாம் .
இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும்
முதலாவது முறை :.
send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:

இரண்டாவது முறையில் GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும் .
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள் நண்பரே ..
GUARDIAN software ஐ தரவிறக்கம் செய்ய இங்கே CLICK செய்யுங்கள் .
இன்றைய தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .நன்றி வணக்கம் !
நன்றி -
http://www.raghuvarman.co.cc
குறிப்பு:உங்களின் வருகைக்கு மிக்க நன்றிநண்பரே ! .உங்களின் ஆதரவுதான் எனது படைப்புகளை தொடர்ந்து எழுதுவதற்கு தூண்டுகோலாக இருக்கும் என்பதினை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் . நன்றி! வணக்கம் !

நாதி அற்ற நாட்டில் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பும் நடுத்தர ஏழை மக்களுக்கு கிடைத்திருக்கும் அதிர்ச்சி !!!

கடைசி 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள்-சாந்திபூஷன்
இந்த செய்திய படிச்ச உடனே எனக்கு நினைவுக்கு வந்தது ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மீது வழக்கு தொடர நீதி மன்றம் இருக்கு நீதிபதி ஊழல் செய்தல் எங்கே முறை இடுவது . ஞாபகம் வந்துடுச்ச அதேதான் அந்த வசணமே தான் (வற்றாத ).
என்ன அவங்களும் இந்தியர்கள் தானே அவர்களுக்கும் நாட்டு பற்று (பண பற்று ) இருக்கத்தானே செய்யும் , இந்த மாதிரி நீதிபதிகள் இருந்தால் எப்படியா? நீதி கிடைக்கும், பணத்துக்கு சலாம் தான் போடா சொல்லும் .
இவர்களை நம்பி கடன வாங்கி , நிலத்த வித்து , நாயம் கிடைக்குமுன்னு நினைச்சி , நீதி மன்றம் போகும் சுப்பனும் , குப்பனும் என்னடா ஆவனுங்க , அங்கேயும் பணம் தாண்ட சுத்தியால் தட்டி நாயம் சொல்லுது . எப்படி? நீதிய ,நாயத சொல்லும் ! ஆமா சொல்லிபுட்டேன் . பாவி பயலுகளே ! நீங்களுமாட இளைத்தவனை எட்டி உதைப்பது . நீங்க தூக்கி நிறுத்தட்டியும் பரவா இல்லை , மேலும், மேலும் அவனை தலையில அடிச்சி படுக்க வச்சிடாதீங்க !!. உங்களை நம்பி வரவங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதிங்க !. அது அவனை மட்டும் இல்ல அவன் சமூகத்தையே அழிச்சிடும் . அப்புறம் யாருக்கு நீதி சொல்ல போறீங்க !!!!!
யோசிங்க ! உங்களை தெய்வங்களா பாக்கும் இந்த நீதிக்காக போராடும் அப்பாவிகள முடமாகிடாதீங்க !. அது அவனை அழித்து பின் உங்களையும் ஒருநாள் அழிக்கும் மறந்திடாதீங்க ! ஆறுதலான ஒரு விஷயம் 6 பேர் நல்லவங்களா இருக்கறதா பார்த்து என் மனம் சொல்லுது , இன்னும் நீதி சகலைடா !!!!!!! . அது கொஞ்சம் ஆபத்தான கட்டத்துல இருக்கு தகுந்த மருந்து கொடுத்த குணமாகும் . நீதியும் பிழக்கும் , நம்புவோம் !!!!!!!!!

செய்தி :
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை வகித்த கடைசி 16 பேரில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள் ஆவர். 6 பேர் மிகவும் நேர்மையானவர்கள். 2 பேர் எப்படிப்பட்டவர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் சட்ட அமைச்சரும், சட்ட நிபுணருமான சாந்திபூஷன்.

சில வருடங்களுக்கு முன்பு டெஹல்கா இதழுக்கு சாந்திபூஷனின் மகனும், சட்ட வல்லுநருமான பிரஷாந்த் பூஷன் அளித்த ஒரு பேட்டியில், இந்தியாவின் கடைசி 16 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளில் பாதிப்பேர் ஊழல் கறை படிந்தவர்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவர் மீது உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தன்னையும் ஒரு பிரதிவாதியாக சேர்க்கக் கோரி சாந்தி பூஷன் மனு செய்துள்ளார். அத்தோடு தனது மகன் சொன்னது அப்பட்டமான உண்மை. அதற்கான ஆதாரங்களையும் தான் தாக்கல் செய்வதாக கூறி சம்பந்தப்பட்ட நீதிபதிகள் குறித்த விவரங்களையும் ஆதாரங்களையும் மனுவுடன் சேர்த்து சமர்ப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக சாந்திபூஷன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடைசி 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள், அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அதேசமயம், 6 பேர் மிக மிக நேர்மையானவர்கள். 2 பேர் எப்பட்டிப்பட்டவர்கள் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

டெஹல்கா இதழில் இதுதொடர்பான பிரஷாந்த் பூஷனின் பேட்டி வந்திருந்த சமயத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த 16 பேர் விவரம்...

ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்.கனியா, எல்.எம்.சர்மா, எம்.என்.வெங்கடாச்சலய்யா, ஏ.எம்.அகமதி, ஜே.எஸ்.வர்மா, எம்.என்.பன்ச்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி.பரூச்சா, பி.என்.கிர்பால், ஜி.பி.பட்நாயக், ராஜேந்திரபாபு, ஆர்.சி.லஹோத்தி, வி.என்.காரே, ஒய்.கே.சபர்வால் ஆகியோர்.

சாந்தி பூஷன் தனது மேலும் கூறுகையில், இந்த மனுவை ஒரு 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரிப்பது கேலிக்கூத்தாக இருக்கும். மாறாக, ஒட்டுமொத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் சேர்ந்து இந்த மனுவை விசாரிக்க வேண்டும். காரணம், இதன் மூலம் இந்திய நீதித்துறையை முற்றிலுமாக சுத்தப்படுத்த வழி பிறக்கும் என்பதால் என்று தெரிவித்துள்ளார் சாந்தி பூஷன். நன்றி தட்ஸ்தமிழ்

திங்கள், 13 செப்டம்பர், 2010

சிங்கர் ஸ்வர்ணலதா திடீர் மறைவு !!! மனதை கவ்வி இழுக்கும் குரலுக்கு சொந்தகாரர் என் மனதை உலுக்கிய செய்தி , அன்னாரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் .

சிங்கர் ஸ்வர்ணலதா திடீர் மறைவு | ஸ்வர்ணலதா 12th செப்டம்பர் 2010 | சிங்கர் ஸ்வர்ணலதா | சவுத் இந்தியன் பின்னணி பாடகி ஸ்வர்ணலதா மரணமடைந்தார் | K.C.செருகுட்டி மகள் ஸ்வர்ணலதா | கருத்தமா பாடல்கள் பாடியவர் |

Swarnalatha died today due to illness in a Private hospital. Hospital reported that singer died due to illness in her liver issues.

Playback Singer Swarnalatha was from Palakad , Kerala. She knows to play harmonium and Keyboard. She won the National Film Award for Best Female Playback Singer for her rendition of the famous song Porale Ponnuthayi from the film Karuththamma. The song was composed by A.R.Rahman, with whom she has given lot of memorable songs. She is one of the 'melodious' (eg. Maalayil Yaaro Manathodu Pesa from Chatriyan) as well as 'experimenting' singer (eg. Mukkabla of Kadhalan) of her times.

எ .அர்ரகுமான் இசையில் பாடிய பாடல்கள் :

Song Movie Year
எவனோ ஒருவன் அலைபாயுதே 2000
சொல்லையோ சோலை கிளி அள்ளி அர்ஜுன 2001
ஒருநாள் ஒரு பொழுது அந்திமந்தாரை 1995
குச்சி குச்சி பாம்பாய் 1995
உசிலம்பட்டி பெண்குட்டி ஜென்டில்மேன் 1993
அக்கடானு நாங்க இந்தியன் 1996
மாயா மாசின்ற இந்தியன் 1996
முன்னேறு தான் இந்திரா 1995
அஞ்சதியா ஜீவா ஜோடி 1999
அன்ன உன் தொழில் ஜோடி 1999
சொல்லு அன்பே ஜோடி 1999
எந்தன் வான்இல் காதல் வைரஸ் 2002
முக்கால முக்காபல காதலன் 1994
காதலெனும் காதலர் தினம் 1999
சின்கோரே சின்கோரே கன்னத்தில் முத்தமிட்டால் 2002
போராளே பொன்னுதாயி (sad) கருத்தம்மா 1993
மதரச சுத்தி மே மதம் 1994
மெல் இசையே Mr. ரோமியோ 1996
உளுந்து விதைகயிலே முதல்வன் 1999
சிட்டுகுருவி பரசுராம் 2003
மொட்டு விட்டதா பவித்ரா 1994
ஹே ராம ரங்கீலா 1995
லக்கி லக்கி ரட்சகன் 1997
மெர்குரி பூக்கள் ரட்சகன் 1997
கும்மி அடி சில்லுனு ஒரு காதல் 2006
காதல் யோகி தாளம் 1999
குளிருது குளிருது தாஜ் மஹால் 1999
பூங்காற்றிலே உயிரே 1998
ராக்கோழி ரெண்டு உழவன் 1993
ஏ முது பாப வண்டிசோலை சின்ராசு 1994



நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!

இந்த பதிவு நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்
ஆனால் , யோசிக்கவும் சிந்திக்கவும் வைத்த மின்னஞ்சல் அதலால் இங்கே பதிவு செய்ய விரும்பினேன் !!!.

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்
!

வாழ்த்துகள் !!

ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு. இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!'' தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!'' கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது. மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான். படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''
தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''
அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''
தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''
பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''
அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை? பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம். ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது. இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!

சனி, 11 செப்டம்பர், 2010

ஒரு வலைதள நண்பரின் டைரக்டர் சங்கர் பாணியில் கனவு ( நாயமான கனவும் கூட )

என் நாட்டைக் குறித்த கனவு ( இந்திய வல்லரசு கனவுகள்....சித்தூர் முருகேசன் சிறப்பு கட்டுரை...!)

என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல். மேலும் .........

பார்வதி அம்மாளைப் பார்த்து காலில் விழுந்து வணங்கும் சிங்களர்கள்!

இப்படி எல்லாம் கதை விட்டோ அல்லது நாடகம் நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது . என்னத்த சொல்ல , இது எப்படி இருக்கு தெரியுமா ? , ஆள வச்சி இவனுங்களே கொள்ளுவான்கலாம். பிறகு துக்கம் தொண்டைய அடைக்குது என்று நீலி கண்ணீர் வடிக்கும் கூட்டம் தான் நினைவுக்கு வருது . எதுக்கு சுத்தி வளச்சி பேசிகிட்டு பளிச்சுன்னு ஒரு உதாரணம் . நம்ம மு. . எம் .ஜி. ஆர் .இறந்தப்ப இப்படித்தான் நீலி கண்ணீர் வடிச்சாரு (ஆனால் மக்கள் அதை எல்லாம் நம்பள என்பது வேற விஷயம் ). உயிர்ரோடு இருக்கும் போது கண்ட மேனிக்கு திட்டினாரு , ஐஸ் பெட்டியில வச்சிட்டாங்க மருத்துவ மனையில பொணத்த படுக்க வச்சி ஆட்சி நடத்துராங்கோ எல்லாம் பேசினாரு , இறந்த செய்திய கேட்ட உடனே அப்படியே பிளேட்ட மாத்தி நாங்கள் இருவரும் நட்பின் அடையாளம் என்றெல்லாம் கதைவிட்டது தான் எனக்கு நாபகம் வருது . இந்த இளிச்சவாய் பய தமிழன் இதையும் நம்பத்தான் போறான் . என்னத்த சொல்ல , ஒன்று மட்டும் ஆணித்தரமாக சொல்ல முடியும் , அந்த வயதான தாய் உள்ளம் ஒரு நாளும் சிங்களவனையும் , மு.கவையும் மன்னிக்காது . காரணம் இவள் பிரபாகரன் ஒருவருக்கு மட்டுமே தாய் அல்ல வீரம் விளைந்த ஒவ்வொரு தமிழனுக்கும் வீரத்தாய் . இழந்தது ஒரு மகனல்ல ஒரு குடும்பம் அல்ல ,ஒரு இனம் !!!! .அந்த தாய்க்கு
மரணம் என்பதொல்லாம் ஒரு பொருட்டே அல்ல !. வீரம் என்றும் தோற்றது இல்லை . கோழை என்றும் நலமாக வாழ்ந்ததில்லை . ஒரு சில சிங்களவர்களை தவிர்த்து அனைத்து சிங்களவனும் அப்படியே ! வெறிபிடித்த கோழைகள் .

கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] [^] இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை மருத்துவமனை [^]க்கு வந்து பார்த்து சிங்களர்கள் காலில் விழுந்து வணங்கிச் செல்வதாக செய்திகள் [^] கூறுகின்றன.

இலங்கை வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்வதியம்மாள், தற்போது நீராகாரம் மற்றும் திட ஆகாரம் உட்கொள்வதாக அவரது உறவினரும் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

இந்நிலையில், வடமராட்சி பகுதிக்கு சுற்றுலா வருபவர்களில் ஏராளமானோர் பார்வதியம்மாளை பார்க்க வருவதாக இலங்கை தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு கூட, வட இலங்கைக்குக்கு சுற்றுலா வந்த 100 சிங்களவர்கள், வல்வெட்டித் துறை மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பிரபாகரனின் தாயாரைப் பார்க்க விரும்புவதாகக் கூறிய அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளித்தது. அந்த சிங்களவர்களில் பலர் பார்வதியம்மாளைப் பார்த்ததும், காலில் விழுந்து வணங்கியதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன், உடல் நிலை சீர்குலைந்து, நினைவு தப்பிய நிலையில் மலேசியாவிலிருந்து சென்னை வந்த பார்வதி அம்மாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. அவரை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பினர் போலீசார்.

இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்த நிலையில் சிகிச்சை அளிக்க நிபந்தனையுடன் முன்வந்தன தமிழக - இந்திய அரசுகள். ஆனால் இதனை மறுத்துவிட்ட பார்வதி அம்மாள், மீண்டும் தன் சொந்த மண்ணுக்கே திரும்பினார். வல்வை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

புதன், 8 செப்டம்பர், 2010

கோடியில் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் !!!

சாதாரணமா , பொண்ணு பாக்கும் போது மாப்பிள்ளை சம்பளம் எவ்வளவு வாங்குராருன்னு கோப்பங்க, நாமலும் பாந்தவ மாப்பிள்ளை IT ல வேலை பாக்கராருனு சொல்லி பண்ற லொள்ளு இருக்கே அப்பா சாமி தங்க முடியாது . ஒரு மூன்று லட்சம் வருடத்திற்கு வாங்கினாலே தல கால் புரியாது , அவன் பண்ற அலும்பல், காரணம் திடீர்னு அவனுக்கு எந்த கஷ்டமும் இல்லாம ( உடல் உழைப்பு இல்லாமல், மூளையை மட்டும் உபயோகித்து ) பணம் பார்ப்பதால் அவனுக்கு அப்படி ஒரு தலைகணன்னு தலைக்கு மேல புதுசா ஒன்னு முளைக்கும் , அவன் சம்பாதிக்கக அடிப்படையான கல்விய வேர்வ சிந்தி அவனுக்கு கொடுத்த பெற்றோர் அவனுக்கு இப்ப ரொம்ப ஏளனம தெரியுது , காரணம் திடீர் சம்பள பணம் இந்த எலவ எல்லாம் பெத்தவங்க சகிசிகிட்டு
( கவுரவத விட்டு கொடுக்காம!! அப்படின்னு நினைசிகிட்டு ) மாப்பிளைய வேலை பேசுவாங்க , எப்படி பொண்ணு வேலை பாக்கணும் , சம்பளம் என்கிட்டே கொடுத்திடனும் , காரு வேணும் , வீடு வேணும் , நகை கிலோ கணக்குல கேட்கறது . தயவு செய்து இந்த செய்தியை படித்து விட்டு உங்கள் சம்பளங்களை விகிதாச்சசம் பண்ணி பார்க்கவும் . உங்களுக்கே தலை சுற்றும் , பிறகு உங்கள் வரதச்சணை பட்டியலை தயார் செய்யவும் .
( நீங்க புலம்புவது புரிவுது மந்திரிங்க அவங்களுக்கு சம்பளம் அவங்களே உயர்த்தனாமாதிரி தான் இதுவும் அப்படினும் தானே எனக்கும் புரியுது ) தான் தான் அதிகம் சம்பதிக்கரோமுன்னு நினைக்கரவங்களுக்காக மட்டுமே ! இந்த பதிவு .

டெல்லி: அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்கள் வரிசையில், சன்டிவி தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோரை சத்தமின்றி முந்தியுள்ளார் ஜின்டால் ஸ்டீல் அன்ட் பவர் குழும துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான நவீன் ஜின்டால்.

நடப்பு நிதியாண்டில் தலைமை செயலதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்டோரின் சம்பளம் 80 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக நாட்டின் 25 முன்னணி தொழிலதிபர்களின் சம்பளம் பெருமளவில் உயர்ந்துள்ளது.

சிஇஓக்கள் எனப்படும் தலைமை செயலதிகாரிகளின் சம்பளமாக, ஒட்டுமொத்த லாபத்தில் 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிஇஓக்களுக்கு பெருமளவில் சம்பளம் தருவதை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் [^] மன்மோகன் சிங் [^] முன்பு கூறியிருந்தார். இருப்பினும் நாட்டின் முன்னணி சிஇஓக்களுக்கு பெருமளவிலான ஊதிய உயர்வை அவர்களது நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

2009ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், 25 முன்னணி சிஓஓக்களுக்கும் கிட்டத்தட்ட ரூ. 442 கோடியை சம்பளமாக மட்டும் வழங்கியுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 9 சதவீதம் அதிகமாகும். அதேசமயம், அந்த நிறுவனங்களின் மொத்த லாப அளவு 6 சதவீதம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பொருளாதார சீர்குலைவுக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து சிஇஓக்களுக்கு கணிசமான உயர்வை அவர்களின் நிறுவனங்கள் வழஹ்கியுள்ளன. இவர்களில் பாதிப்பேர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆவர்.

நவீன் ஜின்டால் முதலிடம்:

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 வயதாகும் இளம் எம்.பியான நவீன் ஜின்டால் 2009-10ம் ஆண்டில் சம்பளம், இதர சலுகைகள் போக ரூ. 39.7 கோடியை கமிஷன் என்ற பெயரில் பெற்றுள்ளார். அவர் கடந்த ஆண்டு சம்பளம் உள்பட மொத்தமாக பெற்றதொகை எவ்வளவு என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் அவர் அதற்கு முந்தைய ஆண்டு ரூ. 48.6 கோடியைப் பெற்றார் என்பதால், அதை விட அதிகமாகவே கடந்த ஆண்டு அவர் பெற்றிருப்பார் என்பது உறுதி.

2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார் கலாநிதி:

கலாநிதி மாறன் பெற்ற சம்பளம் ரூ. 37.08 கோடியாகும். அவரது மனைவி காவேரி மாறனும் இதேதொகையை ஊதியமாக பெற்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே கலாநிதி மாறன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம். அவருக்கு முன்பு ரிலையன்ஸ் அதிபர் [^] முகேஷ் அம்பானிதான் முதலிடத்தில் இருந்து வந்தார்.

முகேஷ் அம்பானி ரூ. 15 கோடி மட்டுமே:

2007-08ம் ஆண்டில் ரூ. 44 கோடி சம்பளம் மற்றும் இதர சலுகைகளாக தரப்பட்டது. ஆனால் அதன் பின்னர் சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட முகேஷ், ஆண்டுக்கு ரூ. 15 கோடியை மட்டுமே தற்போது சம்பளமாக பெற்று வருகிறார்.

தற்போது 3வது இடத்தில் ஹீரோ ஹோண்டா சிஇஓ பவன் முஞ்சால் இருக்கிறார். அவர் பெற்ற சம்பளம் ரூ. 30.88 கோடியாகும்.

மெட்ராஸ் சிமென்ட்ஸின் பி.ஆர்.ஆர் ராஜா பெற்ற சம்பளம் ரூ. 27.91கோடியாகும்.

சிங்காரச் சென்னை தற்கொலை நகரமாக மாறி வருகிறது

சென்னை: தமிழ் நாட்டின் தலைநகரமான சிங்காரச் சென்னை, திகிலூட்டும் தற்கொலை [^] நகரமாக மாறி வருகிறது. கடந்த 8 மாதத்தில் மட்டும் சுமார் 640 பேர் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.

எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம் பேர் சென்னையில் உள்ளனர். வாத்தியார் திட்டினால் தற்கொலை, டிவி பார்ப்பதை அம்மா தடுத்தால் தற்கொலை, காதலி திட்டினால் தற்கொலை, காதலி பேசாமல் போனால் தற்கொலை, வேலையில் பிரச்சனை ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என்று நினைக்காமல் தற்கொலை என காரணமே இல்லாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இதில் விந்தை என்னவென்றால் தற்கொலை செய்பவர்களில் அதிகமானோர் ஆண்கள் தான்.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 837 ஆகும். இறந்தவர்களில் 557 பேர் ஆண்கள்.

2010-ம் ஆண்டு தொடங்கி 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த 8 மாத காலத்தில் 640 பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு திருமணமாகி மனைவி, மக்கள் [^] இருக்கின்றார்கள்.

வேகத்தில், விரக்தியில், கோபத்தில் தன்னை நம்பி இருப்பவர்களைப் பற்றி சிந்திக்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்கள் போன பிறகு அவர்கள் குடும்பத்தாரின் வாழ்க்கை சூனியமாகி விடுகிறது. இதை தற்கொலை செய்து கொள்ளும் புண்ணியவாண்கள் யோசித்துப் பார்ப்பதே இல்லை.

சென்னையில் அதிகரித்து வரும் குடும்ப பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி தற்கொலைக்கும் போலீசார் கவுன்சிலிங் அளிக்கின்றனர். ஆனால், இரண்டு பிரச்சனைகளும் குறைந்தபாடில்லை.

இது குறித்து மனோதத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில்,

மனிதனின் வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படத் தான் செய்யும். அதற்குத் தீர்வு உண்டு. தற்போது மனதின் சுமையை இறக்கி வைப்பதற்கு நண்பன் இல்லாமல் நிறைய பேர் இருக்கின்றனர். நல்ல நண்பன் இருந்தால் ஒரு போதும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமே வராது என்று அவர் கூறினார்.

மனச் சுமையை எந்த வகையிலாவது இறக்கி வைத்து, மனதை லேசாக்கி, பிரச்சினைகளை உணர்ச்சி்வசப்படாமல் ஆராய்ந்து, ஆற அமர ஒரு நொடி யோசித்தால் கூட போதும், தற்கொலையை நினைத்தால் பயம்தான் வருமே, தவிர வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணம் நிச்சயம் மறைந்து போகும்.

வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல, வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் வீட்டில் உள்ள அத்தனை பேரும் உட்கார்ந்து அதுகுறித்து மனம் விட்டுப் பேசினால், பிரச்சினை முழுவதும் காணாமல் போய், கலகலப்பு கூடும். செய்து பாருங்களேன், செத்துப் போவது விவேகமல்ல என்பதை உணர்வீர்கள்.

அதாச்சு 5000 பேர், இன்னும் முடியல!! ( நம்ம ஊர்ல இல்லைங்க !! )



வயது ஜஸ்ட் 25தான். ஆனால் இதுவரை 5000 பேருடன் உறவு கொண்டு புதிய சாதனை படைத்துள்ளார் இந்த இங்கிலாந்து [^] அழகி. இது இன்னும் முடியவில்லையாம், நீண்டு கொண்டிருக்கிறதாம். போகும் வரை போகட்டும், பார்க்கலாம் என்கிறார் கண்களை சிமிட்டியபடி.

லண்டனைச் சேர்ந்த நிக்கி லீதான் அந்த சாதனைப் பெண். இவருக்கு வயிற்றுப் பசிக்கு சாப்பாடு தேவையோ இல்லையோ, கண்டிப்பாக செக்ஸ் பசிக்கு ஆண் துணை அவசியம் வேண்டுமாம். எப்போதெல்லாம் செக்ஸ் உணர்வு வருகிறதோ, அப்போதெல்லாம் உறவு கொண்டு விடுகிறாராம்.

அது நைட் கிளப்பாகட்டும், பார்க் ஆகட்டும், சினிமா [^] தியேட்டராகட்டும், டிஸ்கோ கிளப்பாகட்டும், எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் உறவு வைத்துக் கொண்டு விடுவாராம். காரணம், தன்னால் செக்ஸ் பசியை ஒரு விநாடி கூட தாங்க முடியாது என்கிறார் லீ.

சமயங்களில் மொட்டை மாடி பால்கனியில் கூட உறவு வைத்துக் கொள்வதுண்டாம். மேலேயிருந்து கீழே இறங்குவதற்கு ஆகும் நேரத்தைக் கூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது, எனவேதான் எந்த இடத்தில் தோன்றுகிறதோ, அதே இடத்தில் இச்சையைத் தணித்துக் கொள்கிறேன் என்கிறார்.

எப்போதும் செக்ஸ் உணர்வுடனேயே இருப்பதால் இவரை தனியாகவே காண முடியாதாம். எப்போதும் யாராவது ஒரு பாய் பிரண்டுடன்தான் காணப்படுகிறார்.

சரி உங்களுக்கு செக்ஸ் வியாதி இருக்கிறதா என்று கேட்டால், தெரியவில்லை, அப்படியே இருந்தாலும் கூட அதை குணப்படுத்த நான் விரும்பவில்லை. இப்படியே இருக்கவே விருப்பம் என்கிறார்.

தான் உறவு கொள்ளும் நபர்கள் குறித்தும், எத்தனை முறை உறவு வைத்துக் கொண்டோம் என்பதையும் ஒரு சிறிய நோட்டை போட்டு அதில் எழுதி வைத்து வருகிறாராம் லீ. அவரது கணக்குப்படி இதுவரை 5000 ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளாராம். இந்த கணக்கு மட்டுமல்லாமல், தான் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மார்க்கும் போட்டு வைத்துள்ளார். அதிகபட்ச மார்க் 10, குறைந்தபட்சம் ஒன்று என கூறுகிறார் சிரித்தபடி.

இதுகுறித்து அவர் கூறுகையில், மிகச் சிறப்பான முறையில் என்னை சந்தோஷப்படுத்தியவரின் பெயருக்கு அருகே ஸ்டார் மார்க்கும் போட்டு வைத்திருக்கிறேன். எனக்கு 18 வயதானபோது நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் வந்தது. நான் செக்ஸ் உறவு வைக்காத நாளே இல்லை என்கிறார்.

லீக்கு 21 வயதானபோது 2289 பேருடன் உறவு வைத்து முடித்திருந்தாராம்.

ஒருமுறை இபிஸா என்ற இடத்திற்கு விடுமுறைக்காகப் போயிருந்தபோது ஒரு நாள் இரவு மொத்தம் நான்கு பேருடன் அடுத்தடுத்து உறவு கொண்டாராம். அந்த இரவை என்னால் மறக்க முடியாது என்கிறார்.

இப்படி அன் லிமிட்டெட் செக்ஸ் பசியோடு லீ இருந்தாலும் சில கொள்கைளையும் வைத்துள்ளார். அதாவது இன்னொரு பெண்ணின் காதலர் அல்லது கணவருடன் உறவு வைத்துக்கொள்ள மாட்டாராம். அதேபோல பாதுகாப்பான உடலுறவை மட்டுமே வைத்துக் கொள்வாராம்.

இதுவரை 5000 பேருடன் படுத்து விட்டேன். இந்தக் கதை தொடர்கிறது. என் மீது சிலர் பரிதாபப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளேன் என்கிறார்கள். ஆனால் நான் செக்ஸ் அடிமை அல்ல, அப்படியே இருந்தாலும் கூட சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இதை நான் அனுபவிக்கிறேன், ரசிக்கிறேன், இது இப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்கிறார்.

இதுகுறித்து செக்ஸ் தெரப்பி நிபுணரான பாம் ஸ்பர் என்பவர் கூறுகையில், இது கேட்கவே அதிர்ச்சியாகவும், சிலிர்ப்பாகவும் இருக்கிறது. டெக்னிக்கலாக இது சாத்தியம்தான். ஆனால், எமோஷனலாக இது ஆபத்தானது. இஷ்டத்திற்கு கண்டவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதால் நமது மன நிலை பாதிக்கப்படும். எனவே லீயின் பயணம் எங்கு போய் முடியுமோ என்று கவலைப்படுகிறேன் என்றார்.