news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

வெள்ளி, 31 டிசம்பர், 2010

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..........

Orkut Scrap - New Year: 3Orkut Scrap - New Year: 3Orkut Scrap - New Year: 3

பிறக்கட்டு புது மகள் யுகத்தில்,
பூத்து குலுங்கட்டும் உள்ளங்கள் புன்னகையில் ....
உயர்வை எதிர்க்கும் வல்லோனை
வீழ்த்தட்டும் பிறந்து புது மகள் ......
வீழ்வோனை மிதிக்கும் கல்நெஞ்சங்களை
கனிந்து தான் களையட்டும் புதுமகள்...
நல்வேடம் வேய்க்கும் தீயோனை ,
தீயிட்டு மாயக்கட்டும் புதுமகள் ....
பழிவாங்கும் உள்ளங்களை ,
நல்விதை ஊன்றி திருத்தட்டும் புதுமகள் .......
ஊழலை சுவாசித்து உலகில்
ஏழ்மையை வளர்க்கும் ஏமாற்று அரசியலை
ஆணியடித்து விரட்டட்டும் புதுமகள் ........
நாவில் நல்வார்த்தை சுரந்திட,
நரர்களை நைய புடைக்கட்டும் புதுமகள் .....
கொலை குரூரம் பிடித்தவனை,
குடலுருவி போடட்டும் புதுமகள் .....
நம்பி வந்தோனை நரியாய் ஏயிப்பவரை ,
நடுவீதி நிறுத்தியே நறுக்கட்டும் புது மகள்...
2010 ஆண்டுகளை கொன்றேதான் பிறப்பவள் நீ,
விழி சுற்றி காத்திடுவாய் உலகில் வாழ்வோரை ,
அரக்கர்களை வீழ்த்தி நீ , அரியணையில் வீற்றிடுவாய் .........
புதுமகளை கையேந்த காத்திருக்கும் பலகோடியில் ...
விழி அகன்று என் கவிதை பூக்களோடு காத்திருக்கும் ,
- கவிதை பூக்கள் பாலா
........

வியாழன், 30 டிசம்பர், 2010

அனுஷ்கா சிறப்பு பதிவு ( இப்படியும் புத்தாண்டு வரவேற்கலாம் )

(எதுக்கெல்லாம் சிறப்பு பதிவுன்னு நீங்க கேட்கறது ........ கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னலானுதான் ...... )சிம்புவுடன் நடிக்க நான் எப்போதும் மறுக்கவில்லை என்றார் நடிகை அனுஷ்கா.

இவருதான் உதட்ட கடிக்கறதுல கைதேர்ந்தவராச்சி ( சாரி வாய் ஊறுனவர் ஆச்சே !!! அதனால தான் அனுஷ்கவிர்க்கும் பிடிக்குமாம் ......தமிழ்ப் படமும் வேண்டாம்... தமிழ் ஹீரோக்களும் வேண்டாம்! - அனுஷ்கா
ஆமாம் இவனுங்க ரொம்ப வேஸ்டு பையனுங்கப்பா
என்கிட்டே எவ்வளவு திறமை இருக்கு ......( -----------)
குள்ளம வேற இருக்கானுங்க, என்னை உயரம் அதிகன்னு ........ சொல்றனுங்க ( தொங்கன கொடுக்கா). மன வாடுங்க எப்படி இருந்தாலும் ஓகே ஒரே கண்டிசன் டிரஸ் போடகூடாது ( கர்சிப் மட்டும் )
நல்லா கிக்க நாலு டான்ஸ் போட்ட போதும் ............

செல்போன் மாதிரி காண்டமும் எப்போதும் பாக்கெட்ல இருக்கணும்! - அனுஷ்கா !!அப்புறம் என்ன இந்த மாதிரி பார்த்த பசங்க என்ன பண்ணுவானுங்க பாவம் அதான் ஒரு சேப்டிக்கு வச்சுக சொன்னேன் ............
எய்ட்ஸ் எல்லாம் வேற வராதாமே ...........
எல்லாத்துக்கும் தப்பு தப்பா அர்த்தம் கண்டு பிடிச்சா ?
அது சரி பசங்கள அதுக்காக செல்போனே மாதிரி வச்சுகன்னு சொன்னா நல்லவா இருக்கு !!!
பொண்ணுக பக்கத்துல வரவே பயபடுதுங்க பா ....அப்போ ஜோதிகா... இப்போ அனுஷ்கா..! - சிம்பு ஓபன் ஸ்டேட்மென்ட்

இது ரொம்ப அதிகம் .... என்ன தான் நீங்க ஓபன் டைப்ப இருந்தாலும் இப்படியா ? ஓபன் பண்றது மேட்டர .......
எதோ அனுபவிங்க வாழ்க்கைய .......
சிம்பு : அட நீங்க வே அவங்க ஆக்டிங் புடிக்குமுன்னு சொன்ன ....... விடுங்க .......................வேற மேட்டருக்கு வாங்க

வானம் பட இயக்குநரை லவ்வும் அனுஷ்கா!

அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல
லவர் டைரக்டர் என்றால் மட்டும் கொஞ்சம் படத்துல தூங்கலத்தான் ( வஞ்சனை பண்ணாம ) இருக்காங்க நடிகைங்க ...... அடி நீங்க வேற திறமைய காட்டுறாங்கன்னு சொன்னேன் ............

கழிவறையில் பள்ளி மாணவி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார்

எங்கே செல்கிறோம் ? , என்ன நடகின்றது என்று கூட அறியாத பெற்றோர்களா ? , ஆசிரியர்களா ? அல்லது பள்ளி தோழிகளா ? என்னே ஒரு கவனக்குறைவு எல்லோரிடமும் பிரதிபலிக்கின்றது .

+ 2 படிக்கும் ஒரு மாணவிக்கு என்ன நடந்தது , என்ன நடக்கும் என்று கூட அறியாதவளாக தான் இருந்தாளா ? அல்லது அறிந்தும் தவறு செய்தாலா ? எவ்வளவு கேள்விகள் மனதில் எழுகின்றது . காதல் என்ற மயக்கத்தில் ( இளம் வயது கேளாரில் ) நடந்தது என்ன ? . இதை முதலில் தடுத்திருக்க வேண்டும் , இல்லை பேசி மனம் முடித்திருக்க வேண்டும் , அல்லது குழந்தையை பெற்றெடுக்கும் தகுதியை பெற்றாளா என்பதை கூட பரிசோதிக்காமல் இருந்திருக்கும் அந்த பெண்ணின் குற்ற உணர்ச்சி , இவ்வளவு காலம் பட்ட வேதனை , நினைத்துப்பார்க்கவே கொடூரமாக இருக்கிறது .

இந்த
மன தைரியம் இருக்கும் பெண்ணிற்கு ஏன் ? திருமணம் முடிக்கும் தைரியம் இல்லாமல் போனது அல்லது போராட முடியாமல் போனது குற்ற உணர்ச்சி . புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே ! இனியாவது குழந்தைகளை அரவணையுங்கள் தேவையை பூர்த்தி செய்யுங்கள் , முடியவில்லை என்றால் புரிய வையுங்கள். முதலில் பிள்ளைகளிடம் மனவிட்டு பேசுங்கள் சில விசயங்கள் தவறாக கூட இருக்கும் , உடனே கண்டிப்பதை விடுத்து புரிய வையுங்கள் அதான் தீமைகளை . அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் முன்னோடியாக இருங்கள் ! . முடிந்த வரை பிள்ளைகள் முன் சண்டை போடுவது , போய் சொல்லுவது , சிகரெட் பிடிப்பது , தண்ணி( சரக்கு ) அடிப்பது , இன்னும் பல பல தவறுகளை தவிர்ருங்கள் . அதுவே ஒரு நல்ல ஆரோக்கியமான மனம் படைத்த, தைரியம் நிறைந்த குழந்தைகளாய் உருவாக்கும் ..............


உளுந்தூர்பேட்டையில் அரசு மருத்துவமனை கழிவறையில் பள்ளி மாணவி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் காலனியைச் சேர்ந்த 17 வயது பெண், உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கமாக வீட்டில் இருந்து பள்ளிக்கு பஸ்சில் வந்து செல்லும் இவர், புதன் கிழமை காலை பஸ்சில் உளுந்தூர்பேட்டைக்கு தோழிகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் பஸ்சில் வரும்போதே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் மயங்கி விழுந்தார்.

இதனால் ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வீட்டுக்குச் செல்லாமல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவருக்கு அளவுக்கு அதிகமான இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் உடனடியாக புறநோயாளிகள் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று உள்புறமாக தாழிட்டுக்கொண்டுள்ளார். இச்செய்தி அறிந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த கழிவறையின் முன் கூடினர். பின்னர் 30 நிமிடங்கள் கழித்து கழிவறையின் கதவை உடைத்தனர்.

அப்போது அவருக்கு கழிவறையின் உள்ளேயே பிரசவம் ஏற்பட்டதும் அதில் அழகான ஆண் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை மகப்பேறு அறைக்கு கொண்டு வந்தனர். அங்கு அந்தப் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுசம்பந்தமாக அந்தப் பெண்ணிடம் விசாரித்ததில் இவருக்கும், உறவுக்கார வாலிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டு அதன் மூலம் பரணி கர்ப்பமடைந்து குழந்தையை பெற்றெடுத்ததாக தெரிய வருகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி உத்தரவின் பேரில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

கொள்ளை கும்பல் "AMWAY"http://www.annoncevous.com/adpics/job_opening_for_direct_sale233.jpg

"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம்
மேலும் படிக்க சொடுக்கவும்

திங்கள், 27 டிசம்பர், 2010

செய்திகளும் நிஜங்களும்,

திமுகவுடன் கட்டாயமாகக் கூட்டணி இல்லை : சரத்குமார் பேட்டி
என்ன சொல்ல வரீங்க சரத் சார் , ஒரு கதவு மூடியாச்சு
அடுத்த கதவ தட்ட போறீங்களா ? . இதெல்லாமா வெளியில சொல்லுவாங்க , போங்க சார் உங்களுக்கு அரசியலே (இன்றைய )
தெரியல .........

பாம தலைமையில் கூட்டணி வர வாய்ப்பில்லை-ராமதாஸ் 'நம்பிக்கை'!

என்ன இன்னைக்கு எல்லாரும் உண்மையே பேசறதுன்னு முடிவு பண்ணிட்டாங்களா?. இப்படி போட்டு உடைக்கறாங்க .........
நாங்க தான் ரொம்ப நாளாவே சொல்றோமே .... என்னமோ போங்க உங்க காமெடிக்கு அளவே இல்லாம போச்சி ...............

தமிழீழம் அமைக்க உலக நாடுகள் உதவ வேண்டும்-விடுதலைச் சிறு

த்தைகள்

தமிழ் ஈழம் அமையும் கனவை அழிச்சி ஆட்டம் போட்ட கட்சிக்கு இன்னைக்கு வரை ஜால்ரா போட்டுக்கிட்டு இருத்துகிட்டே ........
கொஞ்சமும் கூட கூச்ச படாமா எப்படி? , இப்படி எல்லாம் அறிக்கை விடறீங்களோ சாமீ ... மக்கள் மறதுடுவாங்க என்ற நினைப்பா தெரியலா !!

வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டு வருவோம் பிரணாப் முகர்ஜி

போங்கையா வெங்காயங்களா ? உங்க கட்சியையே உங்களால கட்டுக்குள்ள வச்சிக்க முடியல , நீங்க தான் பணகாரங்க கட்டுகுள்ள இருக்கீங்களே ! , அப்புறம் எப்படி ? . எல்லாத்தையும் ஏத்திடுவாங்க அப்புறம் , ஏதோ பாத்து செய்யறோம்ப அப்படீன்னு ஒரு பல்டி . விளைச்சல் இல்லன்னு தெரியுது , அப்புறம் இவ்வளவு நாளா என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க ?.... எத்தும்போதே லாம்ப ஏத்திட்டு வேண்டியது , அப்புறம் இதே குறைச்சிட்டோம்முன்னு ஒன்னு ரெண்டா குறைகறது . இதே பார்முலாவ வச்சிருக்காங்க எல்லாத்துக்கும் . எவ்வளவு அடிக்க முடியுமோ அடிச்சிகுங்க ....அப்புறம் ராஜினாமா ... விசாரணை அப்படின்னு மொக்க போடுறது . போங்கையா நீங்களும் உங்க அரசியலும்............
ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக நேரில் ஆஜராகத் தயார்-மன்மோகன் கடிதம்

ஐயா எல்லாம் பாத்துங்குங்க இந்த பாவத்துக்கு எல்லாம் நான் ஆளாக மாட்டேன் . இவரு யோக்கியறாம் , அன்னோ நம்பிட்டகன்னோ !!!!!!!!!
ஹயோ , ஹயோ , அப்புறம் எம்ப jpc வேண்டான்னு சொல்றீங்க !!..
சீனு , என்னமோ நாங்க எல்லாம் ( மக்கள் ) கேனையனுங்க அப்படின்னு தானே நினசிட்டீங்க !!!!!,

சனி, 25 டிசம்பர், 2010

ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிடுவேன் அஜித் அறிவிப்பின் பின்னணி என்ன?


தலை
நிமிரும் தலையின் அறிவிப்பு ,இதிலும் தான் தலைதான் என்பதையும் நிருபித்துள்ளார் . ரசிகர்கள் என்பவர்கள் ரசிகர்களாக மட்டுமே இருக்க வேண்டும் .உண்மை ரசிகர்களின் மனதின் வெளிப்படும் இதுவே . தான் செல்வாக்கை வைத்து எப்படி சம்பாதிக்கலாம் என்பது இன்றைய தலைவர்களின் முதல் கோட்பாடாகவே இருக்கின்றது . எதற்கும் பயபடாமல் துனிச்சல்லுடம் செயல்படும் தலைக்கு வாழ்த்துக்கள் .

சென்னை: நடிகர் அஜித் தனது ரசிகர்கள் தன் கட்டளையை மீறி செயல்பட்டால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன் என்ற எச்சரிக்கையுடன் கூடிய மிரட்டல் விடுத்துள்ளார்.அதற்குப் பின்னணி என்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்ற செய்தி சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்கிற வரை நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகியுள்ளன.விஜய்க்கு நிகராக அஜித்துக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஓப்பனிங் வேறு எந்த நடிகருக்கும் கொடுக்க முடியாது.அந்த அளவுக்கு அஜித் மீது ரசிகர்கள் வெறியாக இருப்பார்கள்.தற்போது இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் மே 1ஆம் திகதி பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது.இதனால் அவரது ரசிகர்கள் ஏக குஷியாக உள்ளனர்.

அதேநேரம் விஜய்யைப் போலவே அஜித்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமீப காலமாகக் கூறி வருகிறார்கள்.இதனை வலியுறுத்தும் வகையில் சென்னை பல்லாவரத்தில் கூட்டம் நடத்தப்போவதாக அஜித் ரசிகர்கள் அறிவித்தனர்.இது பற்றி நடிகர் அஜித்துக்கு தகவல் கிடைத்ததும் ரொம்பவே கடுப்பாகிப்போனார்.தனக்கு அரசியல் பிடிக்காது;நடிப்புதான் என் தொழில்,கார் ரேஸ் என் பொழுதுபோக்கு... இந்த இரண்டையும் தவிர எனக்கென்று குடும்பம் இருக்கிறது. அவர்களுடன் செலவிடவே நேரம் போதவில்லை என்று அடிக்கடி கூறும் அஜீத்,தனது ரசிகர்கள் தேவையில்லாமல் அரசியல் ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டாமென நினைத்தார்.அதன் விளைவாகவே பரபரப்பான எச்சரிக்கை மிரட்டல் அறிக்கை வெளியாகியிருப்பதாக விபரமறிந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி அந்த அறிக்கையில் அஜித் என்னதான் சொல்லியிருக்கிறார்.ரசிகர்களைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நான் எனது 50 ஆவது படமான மங்காத்தா படப்பிடிப்பில் இரவுபகலாக மும்முரமாக ஈடுபட்டுவரும் நேரத்தில் ஒரு சில கசப்பான செய்திகள் என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள்,என்றுமே என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற என் கணிப்பிற்கு மாறாக,எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எனது தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையையும் மீறி சுயவிளம்பரத்துக்காக ஒரு சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும் அதற்கு ஆதரவு வேண்டி எனது இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

மாறிவரும் காலகட்டத்தில் பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.நான் என்றுமே அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்.எந்தவிதமான நிர்ப்பந்தத்திற்கும் அடிப்பணியமாட்டேன் என்பதை எனது உண்மையான ரசிகர்கள் அறிவார்கள்.இனிமேல் மேற்கண்ட இத்தகைய செயல்களில் ஈடுபட்டு,சட்டம்,ஒழுங்கு சீர்கெடுதல்,பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளையை மீறி செயல்பட்டால் என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தைக் கலைக்கவும் தயங்கமாட்டேன்.இவ்வாறு அஜித் கூறியுள்ளார்.

அஜித்தின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அதேநேரம் ஒருவேளை அஜித் ரசிகர் மன்றங்களைக் கலைத்து விடுவாரோ என்ற அச்சமும் ரசிகர்களை தொற்றிக்கொண்டுள்ளது.


சங்கமம் 2010 மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள் மனநிறையோடு....... - பாலா

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களின் தொடர் உழைப்பில், பதிவுலக நட்புகளின் ஆலோசனைகளோடு சங்கமம் 2010 நிகழ்ச்சிகளின் திட்டமிடல் கிட்டத்தட்ட நிறைவடைந்து பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.
இடம்:
டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

நிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
நிகழ்ச்சி நிரல்
காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ்
வணக்கம்
*வரவேற்புரை

*பதிவர்கள்
அறிமுகம்
*கூட்ட
துவக்க உரை

முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)
*சிறுகதைகளை உருவாக்குவோம் -
எழுத்தாளர். பெருமாள் முருகன்
*உலக
மொக்கையர்களே ஒன்று படுங்கள் -
எழுத்தாளர். பாமரன்
*குறும்படம்
எடுக்கலாம் வாங்க -
அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
*நிழற்படங்களில்
நேர்த்தி -
கருவாயன்’ - சுரேஷ்பாபு
*உலகத்திரைப்படங்கள்
ஒரு பார்வை -
சிதம்பரன்.கி

மதியம்
01-30 – 02.30 மதிய உணவு
இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)
*இன்றைய இணையமும் வலைப்பூக்களும் -
ஓசை செல்லா
*
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் -
லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)
மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)
*பதிவர்கள் கலந்துரையாடல் -
ஒருங்கிணைப்பு “சேர்தளம்”

நன்றியுரை

மாலை
05.00 மணி நிகழ்ச்சி நிறைவு


வெள்ளி, 24 டிசம்பர், 2010

செய்திகளும் நிஜங்களும்,

கருணாகரன் உடலுக்கு சோனியா நேரில் அஞ்சலி

நாமளும் அஞ்சலி செலுத்துவோம் மனதில் இறுக்கத்தோடு,
இதுக்கு கூட வரைவில்லை என்றால் என்ன சொல்றது .....

திமுகவுடன் தர்ம யுத்தம்: ஜெயலலிதா ஆவேசம்

அப்ப பலியாவது யாரு , மறுபடியும் அப்பாவி மக்கள் தானா ? உங்க யுத்தர்த்திர்க்கெல்லாம் நாங்க தான் பலி கடாவா.............

உண்ணாவிரதத்தை கைவிட்டார் சந்திரபாபு நாயுடு

வேற என்ன நடக்கும் , இவரு ஒருத்தர் சாபிடமட்டேன்னு சொன்னதால எத்தன பஸ் , எத்தன போது சொத்துக்கள் சேதம் ........ மக்கள் எதாவது சாப்பிட குடுங்கையானு கேட்டாலும் இவனுங்க கொடுக்க மாட்டங்க, கடலுல கொட்டினாலும் கொட்டுவோம் , யாருக்கும் குடுக்க மாட்டோம் .......... என்னே அரசியல் .... புல்லரிக்குதுப்பா ( கொசுரு என்ன இருந்தாலும் நாம தலைவரு மாதிரி எல்லாம் உங்களால இருக்க முடியாது, காலை மத்தியம் இடைவெளி நேரம் எங்க உண்ணாவிரதம் அம்புட்டுதேன் ...... அசிங்கமா ஆறுநாளாவா..)

ராசாவிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

என்ன புரியாம .....எட்டு மணி நேரம் என்ன? எட்டு வருஷம் வேணுமாலும் கேளுங்க ... கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்கா ........ ஒன்னும் நடக்க போறதில்ல .. பாவம் அப்பாவி மக்கள் மேலும் பல ஆயிரம் கோடி விசாரணை என்ற பேருல கொள்ளை போகுது ....... வேர்வை சிந்தி வேலை செய்த ஏழைகளின் இரத்தம் விரையமா ................. போகுது ........

திங்கள், 20 டிசம்பர், 2010

14 வயதில் குழந்தை பெற்றுள்ள பிரிட்டன் காதலர்கள்

இந்த செய்தி நம் நாட்டு செய்தி அல்ல ஆனால் யோசிக்க வைக்கும் செய்தி,
நடந்தது என்னவோ பிரித்தானியவில் தான் , ஆனால் இந்த விபரீதம் நம் நாட்டில் நடக்கவும் இன்று வாய்ப்புகள் அதிகரித்துள்ளது . இதற்கு முதல் காரணம் தொழில் நுட்ப வளர்ச்சி தான் காரணம் , சரி தொழில்நுட்பத்தை விட்டு விடலாமா ? அது முடியாது கூடவும் கூடாது . வளர்ச்சிகள் அதிகரிக்கும்போதே இந்த மாதிரி சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றது . பிள்ளைகளை தோழமையாய் பார்த்தால் இந்த பிரச்சனைகளை ஓரளவுக்கு களையலாம் , இதன் விபரீதம் என்னவென்றே தெரியாமலே நடக்கும் சம்பவங்கள் , தவறான கருத்துகள் பரவிகிடப்பதாலும் , தொலைக்காட்சி கார்டூன் சேன்னல்களின் தரம் தாழ்ந்த கதை வசனங்களின் தாக்கமே பெரும் காரணமாக இருக்கின்றது , பாடல்களின் வரும் மோசமான அங்க அசைவுகள் குழந்தைகளின் மனதில் தெரிந்து கொள்ளும்
ஆர்வம் அதிகரிக்கின்றது . சிறுவர்கள் ஒரு கட்டத்தில் தவறு என்று தெரியாமலே அதற்கு அடிமை ஆகி போகின்றனர். முடிந்த வரை பிள்ளைகளை அரவணைத்து அவர்கள் சொல்வதை கேட்டு , சிலவற்றை புரிய வைத்தால் முழுமையாக முடியவில்லை என்றாலும் குழந்தை தவறுகளை குறைக்கலாம் .........
முயல்வோமா ?????????????/. முயற்சி செய்து பாருங்கள் . முழுமையாக இன்னொரு பதிவில் பேசுகிறேன்

பிரித்தானிய செய்தி :
பிரிட்டனில் பாடசாலை சிறுவர்கள் இருவருக்கு 14 வயதில் குழந்தை பிறந்துள்ளது. நாட்டிலேயே மிகவும் இளவயதில் குழந்தை பெற்றுள்ள தம்பதியினராக இவர்கள் கருதப்படுகின்றனர்.

ஜெமி என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சிறுமி ஏப்ரல் வெப்ஸ்டருக்கு இன்னமும் முகத்தில் குழந்தைத்தனம் மாறவில்லை.

சிறுமி 13 வயதாக இருந்த போது தன்னுடைய காதலன் நாதனுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால் கருவுற்றிருக்கிறாள். தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்து 4 வாரங்கள் ஆகியுள்ளது. குழந்தையை நன்றாக வளர்ப்பது குறித்து பெற்றோர் இருவரும் இணைந்து ஆலோசித்தும் வருகின்றனர். தற்போது குழந்தை சிறுமியுடனும் அவர்தம் தாய் தந்தையரிடத்திலும் வளர்ந்து வருகிறது.

ஆனால் வார இறுதி நாட்களில் குழந்தையை தான் வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் மீதமுள்ள 5 நாட்களிலும் ஏப்ரல் வெப்ஸ்டர் குழந்தையை பராமரித்தால் போதும் என 14 வயதாகும் குழந்தையின் தந்தை நாதன் கூறுகிறார். இருவருமே தெற்கு வேல்ஸ் பகுதியிலேயே வசித்து வருகின்றனர் என்ற போதிலும் கூட இன்னும் தங்களுக்கு வயது இருப்பதால் எதிர்காலம் குறித்த முடிவெதையும் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர்.


ஞாயிறு, 19 டிசம்பர், 2010

செய்திகளும் நிஜங்களும் ................

சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
அவரு அங்க அரசியல் பண்றாரு , நீங்க இங்க அரசியல் பண்றீங்க , இதை தவிர்த்து என்ன நடந்துட போகுது சம்மந்த பட்ட வங்களுக்கு

இன்றும் இளைஞராக நிகழும் அன்பழகன்-கருணாநிதி
நீங்க கூட இளமையா இருக்கறதா சொல்றங்க ( நிறைய மானட மயிலாட பாக்கிறீங்கலாமே !) கேள்வி பட்டோம் அம்புட்டுதேன் .

ரஜினியுடன் நடித்தது வாழ்நாள் பெருமை-ஐஸ்வர்யா ராய்
அப்புறம் ஏம்மா எத்தனையோ முறை அலையவிட்டீங்க ...... (இப்பதான் புரிஞ்சது போல ரொம்ப தொல்லை குடுக்காம அதிகமா சில்ற குடுத்தாங்கோ .
அரசியலுக்கு வர மாட்டேன், ஆனால் பிரசாரம் செய்வேன்' - நடிகர் விஜய்
ஒரே குஷ்டம்மப்ப இவர யாரு கூப்பிட்ட , எல்லா இடத்துலையும் ஒன்னும் வேகல , கடைசில எதாவது எலக்சன் டைம்ல சில்ற தேறுமான்னு அப்பனும் மகனுமா அலையுராங்கோ ....... ஒழுங்க பேசவே தெரியாது இவரு வந்து என்னத்த ஹயோ ....... ஹயோ . ஒரே காமெடி யா போச்சு ........அரசியல் ....