news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

வெள்ளி, 29 அக்டோபர், 2010

'ஒருவனுக்கு ஒருத்தி ரொம்ப கஷ்டம்...!'-

என்ன பயபடாதீங்க !
வீட்டுல சொல்லி பாருங்க செம்பு பறக்குதா ?, செருப்போ அல்லது கையில கிடச்சது எதுவோ கண்டிப்பா பறக்கும் . ஆனால் நாம(ஆண்கள் ) கோவபடமாட்டோம் வாயில ஜொள்ளு வடிய ஆமாப்பா என்று நீங்க சொல்றது என் காதுக்கு கேட்குது ( உங்க வீட்டுல கேட்காம இருந்த தப்பிச்சீங்க ) .
மேட்டருக்கு வருவோம் .
-ஏதோ பிரபு தேவா - ரம்லத் கதையைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்.
இது திருட்டு சிறுக்கி படத்தோட கதை அவ்வளவே ! , மறுபடியும் ஒரு சர்சைக்குரிய கதைய கொண்ட படம் . ( திருட்டு தனமா போய் பாத்துடுவோம்மில ) சரி சரி .........

"உலகில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது ரொம்ப கஷ்டம். குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் கணவனுக்கும் மனைவிக்கும் வாழ்க்கை போரடித்துவிடுகிறது. வேறு துணை தேடுகிறது.."

இது மாதிரி எங்கையோ மறைவுல நடக்கும் விஷயத்த இப்படி பெரிய திரைல எடுக்கறாங்க சரி . நம்ம சீரியல் எல்லாம் இத தானே மெகா சீரியலா வந்துகிட்டு இருக்கு . ஒன்னு மட்டும் தான் கீழே பாக்குறா போடோஸ் மாதிரி சீனுதான் காட்டல, அதையும் டான்ஸ் என்ற பேருல ( மானாட மயிலாட ) கட்டுறாங்க , போத குறைக்கு சின்ன குழந்தைகளையும் விட்டு வைக்கல . ஓடிவிளையாடு பாப்பானு பாரதி சொன்னத இதற்க்கு டைட்டில் ஆ பயன்படுத்துறாங்க என்ன கொடுமா சார் இது . இவருக்கு ஏன் வைத்தெரிச்சல்னு கேட்கறது புரியது குழந்தைங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியல சாமீ .
எந்திரன்ல ரோபாட் பிரசவம் பாக்குறத பாத்துட்டு கேட்ட கேள்விக்கே இதுவரை என்னால பதில் சொல்ல முடியல .
ஏதே பெரிய திரை அப்படிங்கறதால கொஞ்சம் நிம்மதி ( தனியா போய் பாக்குலாமில ......)


வாயில வாடியது தொடச்சிக்கோங்க , என்ன போட்டோவ பார்த்து ஒரு முடிவுக்கு
வந்திருப்பீங்க ........

திருட்டுச் சிறுக்கி?

ஆம்.... தமிழில் தயாராகும் புதிய படம் ஒன்றின் கதைதான் இது. இந்தப் படத்தில் போஜ்புரி மொழிப் படங்களில் பிரபலமான நடிகை ராணி சதுர்வேதி நாயகியாக அறிமுகமாகிறார்.

எஸ்.எஸ்.எ ஆர்ட் மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.கே.நாயர் அதிக பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் இது.

விவின் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க, இவர்களுடன் அஜய், 'மலேசியா ஷகிலா' எனப்படும் ஜெனிபர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

"சமகால வாழ்க்கை முறையில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழும் கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது வெறும் பகல் கனவாகவே அமைகிறது. பணம்,காசு சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி குடும்ப பாசம், உறவுகள் இவைதான் ஒரு மனிதனுடைய முழுமையான வாழ்க்கையை முடிவு செய்கிறது" என்ற கருத்தை கவிதை மாதிரி சொல்லியிருக்கிறோம் என்கிறார் அறிமுக இயக்குநர் அகிலன்.

கொடைக்கானல்,சென்னை,பாண்டிச்சேரி ஆகிய நகரங்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய இனியவன் இசையமைக்க, பாடல்களை டாக்டர் கிருதயா எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பு வி கே சுந்தர்.
படம் வந்தா தனியா பாருங்க !!! என்ன நம்மனால முடியாதத திரையில பாக்குறது ஒரு அல்லப சந்தோசந்தேன் . மகளீர் மனசுக்குள்ள திட்டுறது கேக்கல ... ( காதுல பஞ்சி ).......வியாழன், 28 அக்டோபர், 2010

மகளிரை பலி கொண்ட மைக்ரோ ஃபைனான்ஸ் அழிச்சாட்டியம்

சோனியா & கோ மீது மைக்ரோ ஃபைனான்ஸ் சேறு


மத்திய அரசு தலையிடாது - மத்திய நிதி மந்திரி அறிவிப்பு
ஏற்கெனவே டிவிட்டர்ல அரை குறையா சொன்ன விஷயம் தான். மைக்ரோ ஃபைனான்ஸுங்கற பேர்ல தாய்குலத்தை ரீடெய்லாவும், ஹோல்சேலாவும் கடன் காரிகளாக்கி தூக்கு போட்டு சாக ,ஊரை விட்டு ஓட ,ஏன் ஊர் மேல போகக்கூட வச்சிட்டானுவ.இது கடந்த வாரம் பத்திக்கிச்சு.

எங்க ஊரு தாத்தா ரோசய்யா இந்த பேப்பர் காரவுக ரவுச பொறுக்க முடியாம தகிரியமா ஆர்டினென்ஸ் எல்லாம் கொண்டுவந்தாரு. (கட்டாய வசூல் கூடாது அது இதுன்னு) ஏதோ கொஞ்சம் போல லாந்தர் ஜோதி கணக்கா டப்பு டப்புனு அடிச்சிட்டிருந்த நம்பிக்கையை மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி உஃபுனு ஊதி அணைச்சுட்டாரு. இந்த மேட்டர்ல மத்திய அரசு தலையிடாது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களே விதிகளை உருவாக்கி சுயக்கட்டுப்பாடோட செயல்படனும்னு சொல்ட்டாரு. ( நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்னு சொல்வாய்ங்களே ஞா வருதா)

போறாததுக்கு தாத்தா கொண்டு வந்த உளுவுளா காட்டி ஆர்டினென்ஸுல கடுமையான நிபந்தனைகள் உள்ளதாவும் அதையெல்லாம் நீக்கனும்னு சொல்லியிருக்காரு.உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னா இதான் போலும்.

அது சரி பாஸ் இந்த பிஸ்கோத்து மேட்டர்ல் மத்திய நிதிமந்திரியே தலையிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களோட நாடு தழுவிய நெட் ஒர்க்கின் தலைவருக்கு சோனியா,ராகுலுக்கும் என்ன சம்பந்தம்னு ஃபோட்டோவோட பார்ப்போம்.


அதுக்கு மின்னாடி இந்த மைக்ரோ ஃபைனான்ஸுங்கற விஷ வலைய பத்தி சின்னதா அறிமுகம். மகளிர் சுய உதவிக்குழுன்னு அமைச்சாய்ங்க. தெரியும்ல. பெண்கள் ஒரு க்ரூப்பா சேர வங்கி க்ரூப்புக்கு கடன் தரும் ( மந்திரி சபை மாதிரி கூட்டு பொறுப்புங்கண்ணா. க்ரூப்ல ஒரு மெம்பர் திவாலாயிட்டாலோ, செத்துப்போனாலோ, காணாம போயிட்டாலோ வங்கிக்கு அதோட லின்க் கிடையாது. மத்த மெம்பர்ஸ் எல்லாம் சேர்ந்து வாங்கின கடனை கட்டித்தான் ஆகனும்.

இந்த ஃபார்முலா வங்கிகளோட பாதுகாப்புக்கு செமர்த்தியா ஒர்க் அவுட் ஆகவே தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் கஜானாவை திறந்து விட்டுது. க்ரூப் மெம்பர் செத்தா எவளோ செத்தா எனக்கின்னா போச்சுனு பல் குத்திட்டு இருக்கலாம்ல.

இதை பார்த்த சில வட்டி வியாபாரிங்க மைக்ரோ ஃபைனான்ஸுனு ஆரம்பிச்சாய்ங்க. மொதல்ல ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பதிவு பண்ண வேண்டியது. அதும் பேர்ல கடனை அள்ளிவிட வேண்டியது. என்ட் ரன்ஸ் ஃபீஸு, சப்ஸ்க்ரிப்ஷன், சங்கம் பதிவு, வங்கி கணக்கு துவங்க இப்படி பல செலவுகளை மெம்பர்ஸ் தலைமேல போட்டு கடனும் தருவாய்ங்க (வட்டியெல்லாம் வெண்ணை தடவி விட்டாப்ல தீட்டிப்புடுவாய்ங்க)

இன்னைக்கு கவர்மென்டு கன்செர்ன்னாலே மோசம்பா. பேசாம ப்ரைவைட்டைஸ் பண்ணிரனும்னு புலம்பறாய்ங்களே அவிகளுக்கு அசலான மேட்டர் தெரியாது. ப்ரைவேட் கன்செர்ன் வந்தா அவனோட நோக்கம் ஜஸ்ட் லாபம்தேன்.

நான் கூட சித்தூர் வேலூர் பஸ்ல செக்கிங்கா செய்திருக்கேன். தினசரி பத்தா பத்து ரூபா. சம்பளம் ரூ 200 (கிம்பளம் பெருசாவரும் அது வேற சங்கதி) ஆனால் அரசு போக்குவரத்து கழகத்துல நடத்துனர்,ஓட்டுனர்க்கு இன்னா சம்பளம்னு பார்க்க மாட்டாய்ங்க. கடேசி சிங்கிள்ளே ஒரு பல் போன பாட்டி, காலொடிஞ்ச ஆடு, மூக்குல ஒழுகுற குழந்தை மட்டும் ஏறினாலும் அரசு பஸ் போயே ஆகனும்.ப்ரைவேட்டுன்னா சிங்கிள் கேன்சல் நடந்து போன்னிருவான். நிற்க..


மேற்சொன்ன மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகளொட கிளைகளை தெருவுக்கு தெரு ஆரம்பிச்சுட்டாய்ங்க. இதுக்கெல்லாம் ஒரு நெட் ஒர்க். அதனோட அதிபதி நம்ம இளவரசரோட நெருங்கிய சினேகிதர். மேல் விவரம் மஸ்தா கீது.அதையும் தந்திருக்கேன். தொடர்ந்து படிங்க.


நம்முது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. ஏழை குடும்பங்கள்ள வேணம்னா "இன்னா சொம்மா பேசினிக்கினே போற .. நீ டைஃபாய்ட் வந்து நட்டுக்கினி கடந்தியே அப்போ நானு நாலு ஊட்ல பத்து பாத்திரம் தேச்சு கொண்டாந்த துட்ல வவுத்த கழுவனதெல்லாம் மறந்து போச்சானு" கேட்பா

மிடில் க்ளாஸுன்னாலே ரெண்டும் கெட்டான்.இதுல லோயர் மிடில் கிளாஸ் சனத்தோட நிலைம எப்படியிருக்கும்னு ரோசிங்க.லட்சம் சொன்னாலும் தாய்குலத்துக்கு மணி சீக்ரெட்ஸ் தெரியவே தெரியாது.

சித்தாளு 100 ரூக்கு மூக்குத்தி வாங்கி கஷ்டத்துக்கு 30 ரூ க்கு விப்பா. மிடில் க்ளாஸு நகைய மாத்தி செய்யனு போய் ஏமாறுவா. . எப்படியோ தாளி ஒரு பொம்பளையோட கப்பாசிட்டி 10 ஆயிரம்னா அவளுக்கு பத்து கம்பேனிக தலா பத்தாயிரம் கொடுத்து தொலைச்சிட்டானுவ.

தொழில்,முதலீடு,கொள்முதல்னு கணக்கா இருந்தவுக எஸ்கேப். கண்ணாலம், காட்சி,சீமந்தம், புருசனுக்கு டயாலிசிஸுனு கடன் வாங்கினவுக வசம்மா மாட்டினாய்ங்க.

க்ரூப் லீடருனு உள்ளவுகல்லாம் படாடோபத்தோட லீட் பண்ணிக்கிட்டே க்ரூப் மெம்பர்ஸுக்கு தெரியாம கடன் வாங்கி லம்பா அழுத்தி -மேனேஜ் பண்ணிக்கிட்டே வந்து ஒரு கட்டத்துல ஓடிப்போன கதையெல்லாம் மஸ்தா நடந்து கீது.

ஒவ்வொரு பொம்பளையும் ஏழு க்ரூப்ல மெம்பர்.ஏழு க்ரூப்லயும் கடன் வாங்கிருவா. தினசரி தவணை கட்டணும் (ஒவ்வொரு லோனுக்கு) இதில்லாம ஓடிப்போனவ செத்துப்போனவ பங்கை மத்த உறுப்பினர்கள் சேர்ந்து கட்டனும்.

தவணை நின்னா வங்கி கணக்கா ரெஜிஸ்டர் தபால் எல்லாம் வராது (அவிக கூட பழைய தமிழ் சினிமா கணக்கா அடியாட்களை அனுப்பறதா தகவல்.) க்ரூப் மெம்பர்ஸ் மொத்த பேரும் வீட்டாண்டை வந்துருவாய்ங்க. சரோஜா தேவி நாவல் எல்லாம் பிச்சை வாங்கனும்.

"எங்கனா போடி" " நான் அனுப்பறேன் வரியா" " நான் சொல்ற ஆள் கிட்டே படுத்துக்கோ" "பணத்தை நான் வாங்கிக்கறேன்" இதெல்லாம் ச்சொம்மா ஜுஜுபி. நேர்ல கேட்டா வா.வெ.

பாலியல் தொழிலுக்கு நான் எதிரி இல்லை.ஆனால் அது சட்டப்படி நடக்க சட்ட திருத்தம் வரனும்னு கேட்கிற சட்டத்தை மதிக்ககூடிய பிரஜை. ஆனால் பாருங்க ஒரு பொம்பள அவளுக்கு,அவளோட திருப்பித்தரும் தகுதியை மீறி திணிக்கப்பட்ட கடனுக்கான தவணைக்காக அட் லீஸ்ட் 200 ரூ 300 ரூ க்காக அவள் விருப்பத்துக்கு எதிரா பாலியல் தொழிலாளியா மாத்தப்படறத ஏத்துக்க நான் தயாரா இல்லை.

இந்த நாடகங்களையெல்லாம் அரங்கேத்திக்கிட்டிருக்கிற நெட் ஒர்க்கோட சி.இ.ஓ விக்ரம் சமீபகாலத்துல ஏறக்குறைய திவால் பார்ட்டி. ஆனால் இன்னைக்கு பல லட்சம் கோடிகள் புழங்குது எப்படி ? எப்படி? ( மேலதிக விவரங்களுக்கு -ஆங்கிலத்தில் இங்கேஅழுத்துங்க உபயம் வால் ஸ்ட் ரீட் ஜர்னல்)

விக்ரம் சார் இளவரசரோட நண்பர். ராஜ மாதாவுக்கு வேண்டப்பட்டவர். தாளி இந்த மேட்டர்ல தலையிடறதா இல்லைன்னு பிரணப் அறிவிக்கலைன்னா டங்குவார் அறுந்துராதா?

கர்நாடகால ரெட்டி ப்ரதர்ஸ் மேல ஒரே நேரத்துல 65 இடத்துல இன் கம் டேக்ஸ் ரெய்டு விட்டாய்ங்களே பார்க்கலை. பிரதர்ஸ் உத்தம சீலருங்கனு சொல்ல வரலை.
ஒய்.எஸ் சி.எம்மா இருந்தாரே 5 வருஷம் + 4 மாசம் அப்ப ஏன் ரெய்டு விடலை?

பா.ஜ.க மந்திரி சபைய கவிழ்க்க ஒர்க் அவுட் பண்ணாய்ங்களே அப்ப ஏன் ரெய்டு விடலை. நேத்திக்கு பா.ஜ.க அரசை காப்பாத்தினாய்ங்க.அந்த கடுப்புல கப்புனு
இப்ப ரெய்டு. கப்படிக்குதுப்பா..

தனக்கு வந்தாதான் தலைவலிங்கற ரேஞ்சுல சனம் வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க. ஒரு ஆட்டுமந்தைக்கு ஒரு புலி குறிவச்சதாம். ஒரேயடியா மந்தைல புகுந்தா தேவர் படம் மாதிரி முட்டி தள்ளீரும்னு தனி தனியா பிக் பண்ணி ஒவ்வொரு ஆட்டுக்கும் சொல்லுச்சாம் " நீ ஆடே இல்லை. நீயும் என்னை மாதிரி புலிதான். மத்ததெல்லாம் ஆடுங்கதேன்"

மோட்டிவேஷன் முடிஞ்ச பிற்பாடு தினசரி ஒரு ஆட்டை ஆட்டைய போட்டு தின்னு தீர்த்துருச்சாம் அப்படித்தான் இன்னைக்கு ஒவ்வொரு அமைப்பும் நம்மை தின்னு தீர்த்துக்கிட்டிருக்கு.

ஜெவும் கலைஞரும் பேசி ஒரு அண்டர் ஸ்டாண்டிங்குக்கு வந்து ரெண்டு பார்ட்டியும் காங்கிரஸை கழட்டி விட்டுரனும்பா.. இம்சை தாங்க முடியலை
மக்கள் முழிச்சிகிட்டா சரி இல்ல , முன்னாடி கிரிடிட் கார்டு, பர்சனல் லோன்கள் கொடுத்து நடுத்தர மக்களை அழிச்சனுன்களே அதே போல தான் இப்ப மகளீர் பக்கம் திரும்பி இருக்காங்க ......

ஸ்டாலின், மரியாதையாக பேசு –திருப்பூரில் விஜயகாந்த் கொதிப்பு

நீ ண்ட காலமாக க ட்டுக்கடங் காமல் விண்ணுக்கு எகி றிக்கொண் டிருக்கும் நூல் விலை ஏற்றத்தைக்கண்டித்து ,திருப்புரில் கடந்த 22ந்தேதி விஜயகாந்த தலமையில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்ட்த்தை நட்த்தியது தே.மு.தி.க!
-- மேலும் ........

புதன், 27 அக்டோபர், 2010

தமிழ் நூல்கள் இணைய தளத்தில் தமிழில் படிக்க ஒரு வாய்ப்பு

தமிழ் நூல்கள் இணைய தளத்தில் தமிழில் படிக்கா ஒரு வாய்ப்பு
தமிழ் ஆர்வலர்கள் இங்கு சென்று உங்கள் தமிழ் ஆர்வத்தை பூர்த்தி செய்யலாம்
தமிழ் நூல்கள் ........

செவ்வாய், 26 அக்டோபர், 2010

திங்கள், 25 அக்டோபர், 2010

பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : தமுஎகச கண்டனம்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

பத்திரிகைச்செய்தி 04-10-2010

சன் பிக்சர்ஸ் தயாரிப்பான எந்திரன் திரைப்படம் தயாரானது முதல் அக்கம்பெனியார் படத்துக்கான விளம்பரம் என்ற பெயரில் செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரையும் கவலை கொள்ளச்செய்வதாக உள்ளன. தங்கள் கையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதாலும் தாங்கள் போட்ட பணத்தைப்போல பல மடங்கு சம்பாதித்துவிட வேண்டும் என்கிற வியாபார வெறியுடனும் தமிழக இளைஞர்களைத் தவறான வழியில் திசைகாட்டும் வேலையை சன் குழுமம் செய்து வருகிறது.அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொட்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறது.தமிழகத்தின் பலமான ஒரு உழைப்புச் சக்தியை இவ்விதம் சிதைக்கும் பணியை சன் குழுமம் செய்கிறது.சன் குழுமம் செய்து வரும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு நடவடிக்கையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பும் மனச்சாட்சியும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதைக் கண்டனம் செய்ய வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.தாம் விரும்பும் திரைக்கலைஞரைக் கொண்டாடும் ரசிக மனநிலையை ஒரு பைத்திய மனநிலைக்கு வழிநடத்தி இட்டுச்செல்லும் சன் குழுமத்தின் வியாபார வலையில் விமர்சனமின்றி வீழ்ந்துவிட வேண்டாம் எனத் தமிழகத்து இளைஞர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கண்டன அறிக்கையை தங்கள் இதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.

அருணன் ச.தமிழ்ச்செல்வன்

மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்

அந்த ஆண்டவன் கையில் இருக்கு!


சனிக்கிழமை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவில் அவர் இதைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு இயக்குநரும் தாங்கள் அறிமுகப்படுத்திய மாணவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தது போல அமைந்தது குரு கே.பாலச்சந்தர் - மாணவர் ரஜினி நேர்காணல் [^] .

நிகழ்ச்சியை கே.பி இப்படி ஆரம்பித்தார்:

"ரஜினி இன்றைக்கு உலக சினிமாவுக்குப் போய்விட்டார். இந்திய சினிமாவின் உச்ச நடிகர். எவ்வளவோ வளர்ந்து விட்ட நிலையிலும் இன்றும் எனக்கு அவர் மாணவன்தான். என்னை எப்போதும் குருவாகவே மதிக்கிறார். அவரிடம் கேட்க ஏராளமான கேள்விகளை வைத்திருக்கிறேன். இந்த விழா மேடையில் கேட்டுவிடப் போகிறேன்... இந்த மேடையைப் பொறுத்தவரை என்னை குருன்னு நினைக்காம ஒரு பிரஸ்காரனா அவர் நெனச்சிக்க வேண்டியதுதான். அவருக்கு பதில் சொல்ல தயக்கமா இருக்கிற கேள்விகளுக்கு தாராளமா நோ கமெண்ட்ஸ்னு சொல்லிடலாம்..."

கேபியின் கேள்விகளும் ரஜினி தந்த பதில்களும்:

கேபி: எந்திரனுக்குப் பிறகு, நினைத்துப் பார்க்க முடியாத பெரிய உயரத்தில் நீ இருக்கிறாய். இப்போ மீண்டும் உன்னால் பழைய சிவாஜி ராவாக முடியுமா?

ரஜினி: நான் இன்னும் சிவாஜி ராவாகவே இருக்கிறதாலதான் ரஜினிகாந்த்தா இருக்க முடியுது. இந்த பேர், புகழெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை!

கேபி: இன்னைக்கு உன்னால நினைச்சமாதிரி எங்கும் போக முடியாது. ஊரில் உள்ள சரவண பவனையெல்லாம் விலைக்கு வாங்கும் அளவுக்கு நீ இருந்தாலும், அதே ஹோட்டலில் போய் உன்னால உட்கார்ந்து சாப்பிட முடியாது. நடிகரான பிறகு நிறைய இழந்துட்டோமேங்கிற வருத்தம் உண்டா?

ரஜினி: சாதாரண மனிதர்களைப் போல எனக்கும் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை இழந்துவிட்டேன். சில நேரங்கள்ல நிம்மதியை இழந்திருக்கிறேன். சூழ்நிலை கைதியாக இருக்க வேண்டியும் உள்ளது. இவைகளை தியாகம் செய்துதான் இந்தப் புகழை அடைந்திருக்கிறேன்.

கேபி: உன்னோட வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதலாமே...?

ரஜினி: சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனசு கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் எனக்கும் வரும்போது எழுதுவேன்.

கேபி: உன்னை தூக்கி வைத்துள்ள சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறாய்?

ரஜினி: நிச்சயம் நல்லது செய்வேன். தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப் படுகிற மாதிரி ஒண்ணை நிச்சயம் செய்வேன் (விசில் - கைதட்டல் பறக்கிறது).

கேபி: இன்னிக்கு நீதான் இந்தியாவின் உச்ச நட்சத்திரம். வட இந்திய மீடியாவே சொல்லுது. டிவியில பார்த்தேன். இந்த நிலையை தக்க வைக்க என்ன பண்ணப் போறே?

ரஜினி: இதை எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்யல. அதனால காப்பாத்திக்கவும் முயற்சி பண்ணலை. நான் என் வேலையை செய்துட்டு இருக்கேன். இப்போ இருக்கிற நிலை ஒரு எந்திரனால மட்டும் வந்ததில்லை. அதுக்கு முன்ன நான் பண்ண நிறைய படங்களும் காரணம். அதேநேரம், இந்த நிலையை எப்படி தக்க வச்சிக்கப் போறோம்ங்கிற பயம் இருக்கத்தான் செய்யுது.

கேபி: சில்வர்ஸ்டர் ஸ்டெலோன் மாதிரி ஒரு ஒன்மேன் ஆர்மி நீ. உன்னோட பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் அளவு படம் எடுக்க இனி யாராலும் முடியாதுன்னு நினைக்கிறேன். நீயே ஏன் ஒரு படத்தை இயக்கக் கூடாது?

ரஜினி: படங்களை டைரக்டு செய்யற ஐடியா எதுவுமில்லை. அது எனக்குத் தெரியாதது. நிறைய பொறுப்புமிக்கது.

கேபி: ஒருவேளை நீ படம் டைரக்ட் பண்ணா என்னை உதவியாளரா சேர்த்துக்குவியா?

ரஜினி: நிச்சயம் உங்களை உட்கார வச்சி வணங்கி, நீங்க சொல்ற வேலையை செய்வேன்.

கே பி: இதுவரை எத்தனை படங்கள் நடிச்சிருப்பே?

ரஜினி: (சற்றும் யோசிக்காமல்) 154 படங்களில் நடித்துள்ளேன்.

கேபி: இந்தப் படங்களில் நாம நடிக்காம போயிட்டோமேன்னு நினைச்சுதுண்டா..?

ரஜினி: ஓரிரு படங்கள் உண்டு.

கேபி: என்னென்ன படங்கள்னு சொல்ல முடியுமா?

ரஜினி: இல்லே... இப்போ சொல்றது சரியா இருக்காது. நான் சொல்லவும் விரும்பல.

கேபி: வீரபாண்டிய கட்ட பொம்மன், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் இப்போதும் பேசப்படுகிறது. அதுபோல் 50 ஆண்டுகளை தாண்டியும் நிற்கிற உன்னோட படங்கள்ன்னு எதைச் சொல்லுவே?

ரஜினி: ராகவேந்திரா, பாட்ஷா, எந்திரன்.

கேபி: நீ மிகச் சிறந்த நடிகன். ஆனா தேசிய விருது கிடைக்கலேன்னு ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ஏக்கம் உண்டு. எப்போது தேசிய விருது பெறுவாய்?

ரஜினி: அது டைரக்டர் கையில் இருக்கு!

கேபி: நாடகங்களில் நடிக்கணும் என்ற ஆர்வம் உனக்கு உண்டு. நீயே பல முறை சொல்லியிருக்கே. இப்போது நாடகங்கள் போட்டால் நடிப்பியா?

ரஜினி: கண்டிப்பா நடிப்பேன்.

கேபி: மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை ஏப்ரல் 15-ந் தேதி போடப்போறேன். அதில் நடிப்பியா?

ரஜினி: நீங்க சொன்னா, நீங்க டைரக்ட் பண்ணா, நானும் நடிக்கிறேன்.

கேபி: சினிமாவுக்கு வந்த புதிதில் சிகரெட்டை தூக்கி போட்டு ஸ்டைல் காட்டினே. சிகரெட்டும் அதிகமா பிடிப்பே. இப்போ குறைச்சிட்டியா?

ரஜினி: சிகரெட் பிடிப்பதை இப்போது நிறையவே குறைச்சிட்டேன்.

கேபி: சரி.. நான் இயக்கிய படங்களில் உனக்குப் பிடிச்ச படங்கள் என்னென்ன?

ரஜினி: 2 படங்கள் ரொம்ப பிடிக்கும். ஒண்ணு, அவள் ஒரு தொடர்கதை. அதை 8 முறை பார்த்தேன். இன்னொன்னு அரங்கேற்றம். 12 தடவை பார்த்தேன்.

கேபி: அரசியலில் உனக்குப் பிடித்த தலைவர் யார்?

ரஜினி: லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கிய தலைவர்.

கேபி: வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப் பட்டிருக்கியா?

பதில்: இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப் பட்டிருக்கிறேன்.

கேபி: உனக்குப் பிடிச்ச இயக்குனர் [^] யார்... தயங்காம சொல்லு!

ரஜினி: மகேந்திரன்.

கேபி: நீ விரும்பிச் சாப்பிடற உணவு [^] எது?

ரஜினி: சிக்கன்.

கேபி: வாழ்க்கையில் நீ நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பது எல்லோருக்கும் தெரியும். உனக்கு நெருங்கிய நண்பர் யார்?

ரஜினி: ராவ்பகதூர்.

கேபி: என்கிட்டே உனக்குப் பிடிக்காத விஷயம் எது?

ரஜினி: நீங்கள் கோபப்படுவதைக் குறைச்சிக்கணும்!

கேபி: எல்லோரும் கேட்கணும்னு நினைக்கிற கேள்வி இது. நீ அரசியலுக்கு வருவியா மாட்டியா?

ரஜினி: அது அந்த ஆண்டவன் கையில் இருக்கு!

சனி, 23 அக்டோபர், 2010

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா !!!


"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'


"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'


"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.


சிந்திப்போம் . வருகால சந்ததியை காப்போம் . இலவசம் என்ற நோயை நாட்டை விட்டு அகற்றுவோம் !. இலவசங்களை நிறுத்தி அந்த பணத்தில் தொழில் சாலைகள் அமைத்திருந்தால் இப்படி நாட்டை அந்நியனுக்கு அட்டைக்கு வைத்து தொழில் புரட்சி என்று கூஜா தூக்க வேண்டி வந்திருக்காது . இலவசங்களை கொடுத்து அதான் மூலம் பணம் கொள்ளை அடித்து தான் குடும்பம் மட்டுமே செழிக்க வைக்கும் அரசாங்கம் நமக்கு வேணுமா ? .... சிந்தியுங்கள் ...... நல்ல தலைவர்களை அரவணையுங்கள் ....... இலவசம் எல்லாம் இலவசம் இல்லை . நாம் கட்டும் வரி பணம் . இப்படி வினாடிக்க படுகிறது ......... புரிந்து விழித்திடு தமிழா !! . உன் பெயரை சொல்லி உனக்கு தெரியாமலே பல வகையில் ஏமாற்றப்படுகிறாய் .............. மக்களின் கருத்துகள் அறிய ...இங்கே சொடுக்கவும்

ரெட்ஹில்ஸ் பகுதி தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்

Dist. No./ District Name /Type of School School /
No. NAME OF THE SCHOOL / LKG, UKG, I Std, II Std, III Std, IV Std, V Std, VI Std, VII Std ,VIII Std, IX Std, X Std, XI Std, XII Std

இந்த வருசை படி கட்டணங்களை பாக்கவும்30 TIRUVALLUR HR.SEC 242 KENNEDY MATRIC.HR.SEC.SCHOOL, 4/210 V.O.C STREET, MA NAGAR
REDHILLS, PADIYANALLUR CHENNAI-52 2385 2700 3110 3270 3590 4060 4580 5120 5960 6435 6510 7485 9385 ௧0௭௧0

30 TIRUVALLUR HR.SEC 249 ELITE MAT.HR.SEC.SCHOOL, 2/220 THILAGAR STREET, M.A. NAGAR,
REDHILLS, CHENNAI-52. 1470 2530 3300 3620 3920 4180 4470 5460 5780 6025 6940 9675 10150 10560

30 TIRUVALLUR HR.SEC 255 CHILDREN'S PARADISE MAT.HR.SEC.SCHOOL, 3/127A KAMBAR
STREET, M.A. NAGAR. CHENNAI-52., 2805 3045 3480 3655 3655 3895 4035 4675 4925 4925 5205 7125 7035 5275

30 TIRUVALLUR HR.SEC 261 ALPHA MATRIC HR.SEC. SCHOOL, JEEVA STREET,, M.A. NAGAR.
REDHILLS, CHENNAI-52. 1570 1920 2520 2950 3670 4370 4770 5570 5470 5770 6070 8870 10320 10670

30 TIRUVALLUR HR.SEC 267 ST.MARY'S MATRIC.HR.SEC.SCHOOL, 2/537 THIRUVALLUR KOOTU
ROAD, REDHILLS,CHENNAI-52, 3000 3000 3500 3500 3500 4000 4000 4500 5000 5500 6000 6500 7000 8000

30 TIRUVALLUR SECONDARY 272 AYISHA MATRICULATION SCHOOL, 8,BAJANAI KOIL STREET,
REDHILLS, CHENNAI-52 2175 975 1295 1415 1585 1585 1705 1995 1995 1995- - - -

30 TIRUVALLUR HR.SEC 274 ST PAULS MAT HR SEC SCHOOL, 16 DR AMBEDKAR ST, PUZHAL,
CHENNAI-66 510 1510 2010 2760 3010 3510 3510 4010 4210 4410 5010 5510 7660 8510


30 TIRUVALLUR SECONDARY 277 ILAHI MATRICULATION SCHOOL, 124 TVK STRET, REDHILLS CHENNAI-
52, 1585 1720 1460 1560 1370 1580 1570 1910 1910 2010 2180 2920

30 TIRUVALLUR HR.SEC 279 ST ANTHONY MAT HR SEC SCHOOL, ST ANTHONIYAR NAGAR,
PUZHAL, CHENNAI-66 - - - - - - - 2870 2810 3250 3700 5880 7330 8780

30 TIRUVALLUR SECONDARY 282 DONBOSCO MATRICULATION SCHOOL, DONBOSCO WISDOM TOWN,
M.H. ROAD GRANT LYON, REDHILLS-CHENNAI-52 4100 4350 4735 4735 5160 5160 5160 5930 5930 5930 6030


30 TIRUVALLUR SECONDARY 287 M.S.MATRICULATION SCHOOL, M.S.MATRICULATION SCHOOL,
EDAPALAYAM,C.C.B.F.POST, CHENNAI-52 1320 1430 1540 1650 1760 1870 1980 1980 -

30 TIRUVALLUR HR.SEC 292 NATIONAL LOTUS MATRIC.HR.SEC.SCHOOL, NATIONAL LOTUS
MAT.HR.SEC.SCH, REDHILLS., NARAVARIKUPPM 1110 1610 2710 2910 3310 3410 4230 4670 4770 5210 6610 8810 8810 11000
30 TIRUVALLUR SECONDARY 297
GREEN FIELD CONVENT MATRICULATION SCHOOL, GREEN FIELD
CONVENT MAT. SCH, PUDHUPAKKAM ARUMANTHAI JUNC., CHENNAI-
67
2590 3030 3650 3990 4230 4570 4910 5690 6340 6940 7540 9040

30 TIRUVALLUR SECONDARY 307
VIVEKANANDA MATRICULATION SCOOL, NO. 1/1899, SOLAIAMMAN
KOVIL, MAIN ST ARIGNAR ANNA NAGAT, ATTANTHANGAL, REDHILLS,
CH -52
3090 2980 3640 3780 4020 4160 4300 5200 5850 6200 8570

30 TIRUVALLUR HR.SEC 312 HOLY CHILD MATRIC. HR. SEC. SCHOOL, NARAVARIKUPPAM,
REDHILLS, CHENNAI - 52, 1270 2070 3670 3670 4170 4170 4170 5370 5370 5370 6470 6470 8220 8970

30 TIRUVALLUR SECONDARY 317 ST. JOSEPH MATRICULATION SCHOOL, 2/415, JEEVA STREET,
MUNDIAMMAN NAGAR REDHILLS, CHENNAI -52 1605 1605 2000 2240 2480 2720 2920 3400 3640 3880 4320 4440

30 TIRUVALLUR NURSERY 328 ST.JOHNS NURSERY & PRIMARY SCHOOL, 15,VISHNU NAGAR,V.O.C
STREET,, PUZHAL, 1510 1570 1770 1770 2050 2220 2390 - -

30 TIRUVALLUR NURSERY 342 ST ANTHONYS NURSERY & PRIMARY SCHOOL, PUZHAL, , 2580 1620 1740 1860 1970 2100 2220 -


30 TIRUVALLUR NURSERY 358 NETAJI NURSERY & PRIMARY SCHOOL, NETAJI NURSERY &
PRIMARY, PUZHAL, 1720 1720 1940 1940 2120 2280 2280 -30 TIRUVALLUR NURSERY 416 ALPHA OMEGA NURSERY AND PRIMARY SCHOOL, SCHOOL STREET
VADAGARI, CHENNAI 600052, 880 1410 1800 2200 2330 2560 2690 -

30 TIRUVALLUR NURSERY 421 SRI AYYAPPA N & PRIMARY SCHOOL, ANNA STREET, REDHILS,
CHENNAI 600052 1690 1690 1910 1910 2110 2110 2270 -


30 TIRUVALLUR NURSERY 422 KING MAKER VIDYALAYA NUR & PRI SCHOOL, MADAVARAM HIGH
ROAD, VADAKARAI, REDHILLS CHENNAI600 052 1670 3066 3315 3560 3810 4050 4240


30 TIRUVALLUR SECONDARY 455 JAIN VIDYAASHRAM, 150, OTHAVADAI STREET, PUZHAL, CHENNAI
600 066 770 770 3420 3420 5320 5320 5320 6120 6520 6820 8220 8820

30 TIRUVALLUR NURSERY 493 SUBHASHINI KALVI NILAYAM NUR&PRI SCHOOL, 1/173
THULUKANATHAMMAN KOIL ST, SURAPET,CHENNAI - 66, 2150 2350 - 2750 2800 3000 - - -

30 TIRUVALLUR SECONDARY 643 DR. SIVANTHI ADITHANAR MATRICULATION SCH, THANDAL KAZHANI
VILLAGE, PUZHAL, CHENNAI 600066 3880 4230 4880 4880 5530 5530 5530 6580 6580 6580 6930 7280

30 TIRUVALLUR NURSERY 657 DR.KOTHANDAPANI SRI VAISHNAVI N&P SCHOOL, 233/2
PAMMADUKULAM, POTHUR, CHENNAI 600052 3100 3632 4461 5140 5722 6251 683030 TIRUVALLUR NURSERY 684 NETHAJI NURSERY & PRIMARY SCHOOL, 32, YACOOB PLOT,
K.S.NAGAR, KAVANGARAI, CHENNAI 600 066 1590 1590 1810 1810 1990 2150 2150

30 TIRUVALLUR NURSERY 704 CHRIST NURSERY & PRIMARY SCHOOL, 32, ANNA NINAIVU NAGAR,
PUZHAL, CHENNAI 600 066 1315 1435 1535 1655 1775 2015 201530 TIRUVALLUR NURSERY 710 SRIRAM N & P S,REDHILLS, NO.7,BIG STREET,, VILANGADUPAKKAM,,
REDHILLS, CHENNAI-52 1525 2350 2900 3100 3300 3550 3700

30 TIRUVALLUR NURSERY 738 NETHAJI SUBASH CHANDRA BOSE N&P SCHHOL, SHOLAVARAM, , 1500 2000 3000 3500 3500 4000 4500 5000 5500 5500 6000 6500 7000 8000


30 TIRUVALLUR HR.SEC 27 ST. ANTONY'S MHSS, PUZHAL 1500 2000 3000 3500 3500 4000 4500 5000 5500 5500 6000 6500 7000 800030 TIRUVALLUR NURSERY 46 GREEM FIELD NURSERY AND PRIMARY SCHOOL SHOLAVARAM 1500 2000 3000 3500 3500 4000 4500 5000 5500 5500 6000 6500 7000 8000

30 TIRUVALLUR NURSERY 49 INFANT JESUS NURSERY AND PRIMARY SCHOOL, SHOLAVARAM 1500 2000 3000 3500 3500 4000 4500 5000 5500 5500 6000 6500 7000 8000

வெள்ளி, 22 அக்டோபர், 2010

நீதிபதி கோவிந்தராஜன் கல்விக் கட்டணம் இணையதளத்தில் வெளியீடு

சென்னை, அக். 21: தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் தமிழக அரசின் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும்இந்தக் கட்டண விவரங்களை பள்ளி நிர்வாகங்களோ, அரசோ வெளியிடவில்லை.இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.உயர் நீதிமன்ற உத்தரவின் படி, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் அரசுக்கு நோட்டீஸýம் அனுப்பப்பட்டது.இதைத் தொடர்ந்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.10 கட்டணம்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் 10 முதல் 11 ஆயிரம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் உள்ள இந்து நாடார் உறவின்முறை நடுநிலைப் பள்ளிக்கு ஆண்டுக் கட்டணமாக 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் சமர்ப்பித்த லாப, நஷ்ட கணக்கு விவரங்களின் அடிப்படையிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கு மேல்முறையீட்டில் கட்டணத்தை மறுசீரமைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாதுஅதேபோல், கல்விக் கட்டணம் தொடர்பான விவரத்தை தெரிவிக்காத 532 பள்ளிகளும் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளின் பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.கல்விக் கட்டண விவரங்களை தெரிவிக்காத பள்ளிகள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்தப் பள்ளிகள் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புகார் அளிக்கலாம்நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை பள்ளிகள் வசூலித்திருந்தால், அதை தனி வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி குழுவின் இறுதி முடிவுக்கு இது கட்டுப்பட்டது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீது 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்யாத 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க உரிமை கிடையாது என உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால், பெற்றோர்கள் இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கலாம்.பெற்றோர்கள் மகிழ்ச்சி: தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தை வெளியிட்டிருப்பதால், மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எங்களது பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இந்த விவரத்தைக் கொண்டு பள்ளி நிர்வாகத்திடம் நாங்கள் கேள்வி எழுப்பலாம் என்று சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சாலமன் தெரிவித்தார்.தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு என்பதே இதுவரை தெரியாத ஒன்றாக இருந்தது. இந்தக் கட்டண நிர்ணயம் தொடர்பாக நீதிபதி குழு இறுதி முடிவு எடுக்கும் வரை பள்ளிகள் கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது. இதுதொடர்பாக, பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு விளம்பரப்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் தொடர்பாக வரும் புகார்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
அனைத்து பள்ளிகளின் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
ரெட்ஹில்ஸ் பகுதி
தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டண த்திற்கு
இங்கே சொடுக்கவும்

சனி, 16 அக்டோபர், 2010

எந்திரன் .... என் பார்வை ( மட்டுமே ) .....


படத்தை பார்த்தாலே தெரியும் என்ன சொல்ல வருகிறேன் என்று . ஆம் . படம் முழுக்க ஆக்கரமிக்கறது ரஜினி மட்டுமே !
இதுவும் ரஜினி படமே !
என்ன பன்ச் டைலாக் இல்ல , அறிமுக பாடல் இல்ல , ஆனால் முழுக்க ரஜினியின் ஆதிக்கமே படத்தை கொண்டு செல்கிறது .
படம் முழுக்க சங்கரை காணோம் .
காரணம் ரஜினின் ஆளுமையே ! முதல்
அழகு பதுமையாக ஐஸ்வர்யா ராய் ( சில இடங்களில் வயது தெரிந்தாலும் அழகு பதுமையே ) தமிழ் படங்களில் தவறாமல் நடிகைகள் செய்யும் வேலையை செய்துவிட்டு போகிறார் கொஞ்சம் அழகாக எல்லோரும் சொல்வதுபோல் பிரமாண்டமாக . இசை புயல் பாவம அவரும் ஏமாற்றி உள்ளார் ( பாடல்களில் ) எ சென்டர் மட்டுமே ஒரு வேலை விரும்பலாம் . இதுதான் ஆஸ்கர் ஹலிவுட் லெவல் என்கிறார்களே ! நான் நினைச்சேன் ( இந்தியாவுல ) தமிழ் நாட்டுல தரத்தில் ஹலிவுட் லெவல் என்று சொன்னார்களோ என்று . அந்த தரத்திலும் இல்ல என்பது வேறு கதை .
ஒன்று மட்டும் புரிய வில்லை, எதற்காக இந்த ஆர்பாட்டம் பில்டப்புன்னு தெரியல . தமிழ்ல ஒரு படம் எடுத்தாங்க , எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்று மறுபடியும் சங்கர் யிடம் கேட்டு பாருங்கள் ! சரியான பதில் வராது காரணம் ஏன் என்று அவருக்கே தெரியும் . இந்த கதைக்கு இவ்வளவு செலவு தேவையா என்று அவர் மனசாட்சிக்கே விட்டு விடுவோம். படத்தில் போர் என்று எதை சொல்லலாம் விணான கிராபிக்ஸ் ஓவர் டோஸ் காட்சிகளே !!. திரை கதையில் சிறிய சிறிய ஓட்டை ( சிட்டி ஒரு ரோபோ ஓகே , அதற்கு கட்டளை இடும் சிப் வைக்கப்படுகிறது அதாவது ரோபோக்கு செய்முறை கட்டளை ஓகே , யோசிப்பதற்காக மேலும் ப்ரோக்ராம் மட்டுமே எழுதி இருக்கும், காதலிப்பது தெரிந்தால் அதை அகற்றி விடலாம் அல்லவா , பிறகு எதற்காக அதை அழிக்க நினைக்கிறார் ப்ரோபெர்சர் ரஜினி , அப்படி இல்லை தானாகவே யோசிக்கிறது என்றால் எதற்காக கடைசியில் ரெட் சிப் எடுத்து அதை நார்மல் ஆக்குகிறார் . கடைசி காட்சி ரொம்ப அபத்தம் , கிராபிக்ஸ் கட்சிகள் புரிந்து கொள்ளும் அறிவு ஜீவிகளாலே புரிந்து கொள்வது கடினம்( புரிதல் இல்லாத கிராபிக்ஸ் ). இன்னும் திரைகதையில் கவனம் சொலுத்தி இருக்கணும் . எதையும் யோசிக்காமல் பார்த்தால் முதல் பாதி ஓகே .இரண்டாவது சிட்டிய ( ரஜினி நடிப்பு ) தவிர அனைத்தும் என்ன சொல்ல டைரக்டர் சங்கரின் தீவிர ரசிகன் நான் என்னாலையே முடியல , அவருடை படங்கள் கண்டிப்பாக ஒரு மெசேஜ் சொல்லும் இப்படி நடந்தால் எப்படி இருக்கும் ( நன்றாக இருக்கும் ) என்று மக்களை யோசிக்க வைப்பார் . இந்த படத்தில் அனைத்தும் மிஸ்ஸிங் .
ரஜினியின் அசத்தலான நடிப்பு மட்டுமே படத்தை காப்பற்றி இருக்கு . யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலை இல்லை கண்ணை மூடிக்கொண்டு பாராட்ட முடியாது . எதற்காக இந்த ஆர்பாட்டம் பில்டப்புன்னு தெரியல . தமிழ்ல ஒரு படம் எடுத்தாங்க , எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்று மறுபடியும் சங்கர் யிடம் கேட்டு பாருங்கள் ! சரியான பதில் வராது. ......
இதனால் பலனடைந்தது என்னவோ சன் குடும்பம் மட்டுமே ! தமிழர்கள் விதத்தில் ஏமாற்றப் பட்டிருக்கின்றனர் . ஒன்று டிக்கெட் என்ற விதத்தில் , இதை கூட மன்னித்து விடலாம் . வரி சலுகை ( தமிழில் பெயர் வைத்தால் ) என்ற பெயரில் பல கோடி வரி ஏய்ப்பு ( பாவம் நலிந்த குடும்பத்தில் இருந்து தமிழ காபத்துறாங்க ) . நீயோ நானோ பத்து வரி கட்டலனாலும் கழுத்த நெறிச்சி வசூலிக்கும் அரசாங்கம் இப்படி கலை சேவை செய்கிறார்கள் ( இப்பொழுது சினிமா துறையில் ஆக்கிரமித்து உள்ளவர்கள் எல்லாம் சன்னும் , கலைஞ்சர் குடும்பம் மட்டுமே என்பது கூடுதல் தகவல் ).
நல்லது எதுவாக இருந்தாலும் பாராட்டுவோம் . தவறு என்றால் தைரியமாக வெளிபடுத்துவோம் , காரணம் அடுத்த முறை இதே தவறு செய்யாமல் இருக்க உதவும் ...........
----- பாலா மேலும்

வியாழன், 14 அக்டோபர், 2010

என் பெயரில் மோசடி வெப்சைட்! - அசின் புலம்பல்


எனக்கே தெரியாமல் என்பெயரில் மோசடி [^]யாக ட்விட்டர் வெப்சைட் ஆரம்பித்து, எனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்கள். இதனை நம்ப வேண்டாம், என்று கூறியுள்ளார் அசின்.

விஜய் ஜோடியாக அசின் நடிக்கும் காவலன் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் அசின் பெயரில் இன்டர்நெட்டில் போலி வெப்சைட்கள் துவங்கி மோசடி நடக்கும் தகவல் அம்பலமாகியுள்ளது.

யாரோ சிலர் அசின் பெயரில் வெப்சைட்கள் துவக்கி, ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனராம். அதில் அசினின் கவர்ச்சிப் படங்களையும் போட்டு வைத்துள்ளனராம். மேலும் 'என்னுடன் லைவாக சாட் பண்ணுங்கள்' என்று அசினே கூறுவது போல் அறிவிப்பு வெளியிட்டுள்ளனராம். இதை நம்பி ஏராளமான ரசிகர்கள் [^] தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.

மேலும் ட்விட்டரிலும் அசின் பெயரில் தளம் ஒன்று இயங்கி வருகிறதாம். இதற்கு ஏராளமான பாலோயர்கள் குவிந்துள்ளனராம்.

இந்த மோசடி அசினுக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தார். ரசிகர்கள் போலியை உண்மை என்று நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது:

டுவிட்டர் இணையதளத்தில் நான் இல்லை. ஆனால் எனது பெயரை போலியாக சிலர் அதில் உருவாக்கியுள்ளனர். ரசிகர்கள் அதை உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது நான் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் டுவிட்டரிலோ, ஆர்குட்டிலோ அல்லது வேறு எந்த வெப்சைட்டிலும் இல்லை. எதிர்காலத்தில் ஒருவேளை துவங்கலாம். ஆனால் இப்போது இல்லை. இணைய தளங்களில் எனது பெயரை யாரும் பயன்படுத்த வேண்டாம்..." என்று கூறியுள்ளார்.

தகவல் சரிபார்ப்புக்குப் பின் 30 லட்சம் மொபைல் போன் இணைப்புகள் துண்டிப்பு


டெல்லி: பாதுகாப்பு [^] காரணங்களுக்காக நடந்து வரும் மொபைல் போன் தகவல் சரிபார்ப்புப் பணியின்போது இதுவரை 30 லட்சம் மொபைல் போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனவாம். தகவல்கள் முறையாக இல்லாத காரணத்தால் இவை துண்டிக்கப்பட்டுள்ளன.

சரியான தகவல்களைத் தராதது, தகவல் சரி பார்ப்புக்கு தேவையானவற்றை சமர்ப்பிக்காதது ஆகிய காரணங்களுக்காக இவை துண்டிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாநிலங்களிலும் தற்போது செல்போன் வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை சரிபார்ப்புக்காக தாங்கள் பயன்படுத்தி வரும் செல்போன் சேவை நிறுவனத்தின் கிளைகளில் கொடுக்குமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் தரும் தகவல்களும், ஏற்கனவே கொடுத்த தகவல்களும் சரியாக உள்ளதா என்பது ஒப்பிடப்பட்டு வருகிறது. தகவல்கள் சரியாக இல்லாவிட்டால் மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும்.

இந்த நடவடிக்கையில் இதுவரை 30 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனவாம்.

காமன்வெல்த் போட்டியில் 38 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 101 பதக்கங்களுடன் 2வது இடத்தைப் பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.


கடந்த மெல்போர்ன் போட்டியில் 4வது இடத்தைப் பிடித்திருந்தது இந்தியா. இந்த முறை அது 2வது இடத்தைப் பிடித்து அசத்தி விட்டது.

பதக்கப் பட்டியல் - முதல் 5 இடங்கள்

ஆஸ்திரேலியா - 74 தங்கம், 55 வெள்ளி, 48 வெண்கலம் - மொத்தம் 177
இந்தியா - 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் - மொத்தம் 101
இங்கிலாந்து - 37 தங்கம், 59 வெள்ளி, 46 வெண்கலம் - மொத்தம் 142
கனடா - 26 தங்கம், 17 வெள்ளி, 32 வெண்கலம் - மொத்தம் 75
தென் ஆப்பிரிக்கா - 12 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் - 33

புதன், 13 அக்டோபர், 2010

15 வயது சிறார்களுடன் உடலுறவு வைத்த இந்திய ஆசிரியை கைது

பயப்படாதீங்க நம்ம ஊர்ல இல்லைங்க ! ஆறுதலான செய்தி. நாம ஊர்ல எல்லாம் இப்ப ஒரு சில ஆண் வாத்திங்க தான் இப்படி நடந்துகிறதா செய்திகள் வந்துடிருக்கு செய்யும் தொழிலுக்கு துரோகம் செய்யும் இந்த மனுசங்களா என்ன சொல்ல ( யாரும் தவறா என்ன நினைக்க வேண்டாம் உங்க ஆசைகளை தணிக்க எவ்வளவோ வழிகள் இருக்க, ஏன் மாணவ மாணவிகளை தவறான இந்த நிலைக்கு தள்ளுகிறீர்கள். இதனால் அவர்கள் எதிர்காலமே கேள்வி குறியாக மாறுகிறது) . தயவு செய்து உங்கள் தவறை திருத்திக்கொள்ளுங்கள் இல்லையே ஒதுங்கிக்கொள்ளுங்கள் . இளமையில் கல்வி கற்க வழி விடுங்கள் !!.
ஒரு பெண் இப்படி நடந்து கொண்டாள் அதுவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியை என்பதால் வெக்கி தலை குனிய வேண்டிஉள்ளது . இதிலும் ஆண் பெண் சமமென்பதை நிருபிக்கிறார்களோ !! ( தவறான பெண்களை மட்டுமே இது சாரும் )

லண்டன்: 15 வயதேயான இரு மாணவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இரு மாணவர்களுடனும் தான் முழு அளவிலான உறவை வைத்துக் கொண்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்த ஆசிரியையின் பெயர் ஹீனா படேல். வயது 37. செளத்போர்ட் அருகே உள்ல பர்க்டேல் ஹைஸ்கூலில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அப்பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாககுற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஹீனா கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது தான் இரு மாணவர்களுடனும் முழு அளவிலான உடலுறவை வைத்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டார் ஹீனா.

இந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதியிலான காலகட்டத்தில் ஹைடவுனில் உள்ள தனது வீட்டுக்கு இந்த இரு மாணவர்களையும் வர வைத்து பலமுறை உறவு கொண்டுள்ளார் ஹீனா என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தனது குற்றத்தை கோர்ட்டில் ஒப்புக் கொண்டார் ஹீனா. சம்பந்தப்பட்ட இரு மாணவர்கள் யார் என்ற விவரத்தை போலீஸ் தரப்பு வெளியிடவில்லை.

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஹீனா பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்.

தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ளார் ஹீனா. அவருக்கு நவம்பர் 22ம் தேதி லிவர்பூல் கிரவுன் கோர்ட்டில் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

காமன்வெல்த் கேம்ஸ் வில்லேஜில் ஆணுறைகள்-'நல்லதுதான்' என்கிறார் பென்னல்


தப்பாக யாரும் நினைக்க வேண்டாம், காமன்வெல்த் கேம்ஸ் என்றால் காமம் இல்லாமலா என்பது போல் இருக்கிறது இந்த செய்தி . இன்றைய
எதார்த்த விளையாட்டு சுழல் இதுதான் என்பது மீண்டும் நிருபனமாகயுள்ளது.
ஒன்று மிரட்டி பணிய வைப்பது அல்லது ஆசை வார்த்தை காட்டி செக்ஸ் வைத்து கொள்வது.
இது ஒருபுறம் இருக்க விளையாட்டு வீரர்களோ சக நண்பிகளுடனோ , செக்ஸ் வொர்க்ஸ் உடனோ அல்லது வெற்றி கொண்டால் நிறுவனங்களே செக்ஸ் பார்டிக்கு ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். இதுவரை இலை மறைவு காய் மறைவாக நடந்து வந்த விவகாரம் சமீபமாக அதிகளவு வெளிவர தொடக்கி உள்ளது . இது அனைத்து விளையாட்டுக்கும் பொருந்தும்.
நல்ல வேலை யாரும் காம விளையாட்டை காமன்வெல்த் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள கேட்க வில்லை. பிற்காலத்தில் கோரிக்கை வைத்தாலும் ஆச்சரிய பட ஒன்னுமில்லை. இதெல்லாம் இப்ப சாதாரணமப்பா ( உயர் தட்டு மக்களுக்கு ) ......

டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான கேம்ஸ் வில்லேஜில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் வில்லேஜ் அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலமாக சாக்கடைகளில் வந்து சேர ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து காமன்வெல்த் போட்டி அமைப்பின் தலைவர் [^] மைக்கேல் பென்னலிடம் கேட்டபோது நல்ல செய்தி [^]தான் என்று கூறியுள்ளார்.

காமன்வெல்த் போட்டிக்காக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த அணிகள் டெல்லி [^]யில் குவிந்துள்ளன.அனைத்து வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகள் கேம்ஸ் வில்லேஜில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலம் ஏராளமான ஆணுறைகள் வந்து குவியத் தொடங்கியுள்ளனவாம். ஆணுறைகளைப் பயன்படுத்தி விட்டு அவற்றை பயன்படுத்தியோர், அதை டாய்லெட்டுகளில் போட்டு ஃபிளஸ் அவுட் செய்து விடுகின்றனர். இதனால் கழிப்பறைகளில் அடைப்பு ஏற்படுகிறது. அடைப்பை சரி செய்யப் போனபோதுதான் டாய்லெட்டுகளில் ஆணுறைகள் போடப்பட்டதே தெரிய வந்தது.

இது லேசான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆனால் பென்னலோ இதை நல்ல செய்திதானே என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது வாய் விட்டுச் சிரித்த அவர், இதைப் போய் கவலையுடன் கேட்கிறீர்களே. உண்மையில் இது நல்ல செய்தி. பாதுகாப்பான செக்ஸ் உறவு மேற்கொள்ளப்படுகிறது என்பது நல்ல செய்திதானே.

பாதுகாப்பான முறையில் எல்லாம் இருந்தால்தான் வீரர்கள், வீராங்கனைகளால் போட்டியில் சிறப்பாக பங்கேற்க முடியும்.அந்த வகையில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் பென்னல்.

அத்தோடு நிற்காத பென்னல் மேலும் சிரித்தபடி, அதை விட முக்கியமாக அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் டாய்லெட்களை சுத்தப்படுத்துகிறார்கள் என்பதும் இதன் மூலம் தெரிகிறது. அதுவும் நல்லதுதான் என்றார்.

பின்னர் சற்று சீரியஸாக அவர் மாறி, பல ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு சர்ச்சையான விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயம்தான் என்றார்.

திங்கள், 11 அக்டோபர், 2010

லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதே இல்லை: உச்ச நீதிமன்றம் வேதனை


ரொம்ப லேட் உச்ச நீதிமன்றம் நீதிபதிகளே !!!
எந்த நாட்டுல இருக்கோமுன்னு ஞாபகம் இருந்தால் சரி, என்ன பண்றது நீங்க தீர்ப்பு
எழுதினாலும் நாங்க தானே அமுல் படுத்தனும் என்ன நான் சொல்றது ( அரசியல்வாதிகள் ).
போங்கையா போய் பொழப்ப பாருங்க. சும்மா காமெடி பண்ணாதீங்க ...
சிப்பு வருது ....... சிப்பு வருது ........
பொதுமக்கள் இத சொல்லவாவது தைரியம் இருக்கே நமது நீதிபதிகளுக்கு சபாஷ் ...
நம்ம ஆளுங்க(அரசியல்வாதிகள்) எத சொன்னாலும் கேக்க மாட்டனுன்களே !!!!
புதுதில்லி,அக்.10: ""லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலையே நடப்பதில்லை, எனவே ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவுதான் லஞ்சம் என்று நிர்ணயித்துவிட்டால் பொதுமக்களுக்கும் தாங்கள் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று தெரிந்துவிடும், அதிகாரிகளுக்கும் வீணாக பேரம் பேசி தங்களுடைய வேலைநேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இருக்காது'' என்று உச்ச நீதிமன்ற "பெஞ்ச்' வேதனையாகவும் வேடிக்கையாகவும் கருத்து தெரிவித்தது.

வருமானவரித்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் மோகன் சர்மா என்பவர், வருமான வரி செலுத்த வேண்டிய ஒருவர் அந்தத் தொகையைக் கணிசமாகக் குறைக்க ""ரூ.25,000 லஞ்சம் தர வேண்டும்'' என்று கோரினாராம். அவ்வளவு தொகையைத் தர முடியாது என்று அந்த நபர் கூறினாராம். இறுதியில் நீண்ட பேரத்துக்குப் பிறகு ""10 ஆயிரம் ரூபாய் தந்தால் போதும்'' என்று முடிவானதாம். அந்தப் பணத்தை சர்மா பெற முற்பட்டபோது சி.பி.ஐ. போலீஸôர் அவரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம், ""போதிய ஆதாரம் இல்லை'' என்று கூறி சர்மாவை விடுவித்துவிட்டது. ஆனால் சி.பி.ஐ. மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, டி.எஸ். தாக்குர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. சி.பி.ஐ. சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.பி. மல்ஹோத்ரா வாதிட்டார்.

இந்த லஞ்ச வழக்கை முதலில் விசாரித்த நீதிமன்றம் எதிரிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது, ஆனால் உயர் நீதிமன்றம், வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்துவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். தான் அப்பாவி என்றும் வேண்டும் என்றே தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி சர்மா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

அப்போது அந்த நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலும் இருந்தார்.

அவரைப் பார்த்த நீதிபதிகள், "வருமான வரித்துறை, சுங்கத்துறை, விற்பனை வரித்துறை போன்றவை லஞ்சம் வாங்குவதில் புகழ்பெற்று விளங்குகின்றன; இதைப்போல வழக்குகள் வருவதைத் தடுக்க என்னென்ன வேலைக்கு எவ்வளவு லஞ்சம் என்று மத்திய அரசே நிர்ணயம் செய்து அறிவித்துவிட்டால், பொதுமக்களுக்கும் லஞ்ச அளவு தெரியும், அதிகாரிகளும் பேரம் பேசி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல் அடுத்தடுத்து லஞ்சம் வாங்கி வேலைகளை மடமடவென முடித்துக் கொடுக்கமுடியும் அல்லவா, நீங்கள் ஏன் இந்த யோசனையை அரசுக்குத் தெரிவிக்கக்கூடாது' என்று கேலியும் குத்தலுமாகக் கேட்டனர் நீதிபதிகள்.

""அதிகாரிகள் இப்படி லஞ்சம் வாங்குகிறார்களே என்று நாம் கோபிக்க முடியாது; அவர்கள் என்ன செய்வார்கள் - பாவம், விலைவாசி வேறு கடுமையாக உயர்ந்து வருகிறது'' என்று குறிப்பிட்டு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினர். "லஞ்சம் வாங்குவது தவறு என்று பள்ளிக்கூடத்திலேயே சொல்லித்தர ஏற்பாடு செய்தால்தான் இந்தப் பழக்கம் குறையும்' என்று வேணுகோபால் அவர்களுக்குப் பதில் அளித்தார்.

காசோலை வழக்கு: அடுத்தபடியாக, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திருப்பிவிடப்பட்ட வழக்கில் மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார். அப்போது நீதிபதிகள் இருவரும் அவரைப் பார்த்து, ""உங்களுடைய அனுபவம், திறமை, தகுதிக்கு இந்த மாதிரியான அற்ப வழக்குகளில் எல்லாம் ஆஜராகலாமா; மகாத்மா காந்திஜியும் வழக்கறிஞர்தான், இந்த மாதிரியான (மோசடி) வழக்குகளில் அவர் ஆஜரானதாக வரலாறே இல்லையே?'' என்றனர்.

""நீங்கள் சொல்வது சரிதான், அதற்காக நான் இந்த மாதிரி (மோசடி) வழக்குகளில் ஆஜராவதில்லை என்று தீர்மானித்துவிட்டால் பெரும்பாலான வழக்குகள் என் கையைவிட்டுப் போய்விடுமே'' என்று வேணுகோபால் பதில் சொன்னபோது நீதிமன்றமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

மகாத்மாவுக்குப் பிறகு சோனியாதான் பிரதமர் பதவியை உதறியவர்-திருநாவுக்கரசர்

இந்த செய்தியையும் கண்டிப்பாக இதன் பின்னூடங்களையும் படிக்கவும்
நெறிகெட்ட அரசியல் பச்சோந்திகளை பற்றி மக்களின் கருத்துக்களை தெரிந்துகொள்ளலாம்
மேலும் ...........
படித்துவிட்டு நீங்களும் கொஞ்சம் வாசிக்கலாம்( திட்டலாம் , அர்ச்சனை செய்யலாம் )

சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்!


வாஷிங்டன்: சந்திரனில் பனிக்கட்டி படிமங்கள் உள்ளதை, இந்தியாவின் சந்திராயன் திட்டத்தின் மூலம் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சந்திரனில் தண்ணீர் மூலக்கூறு இருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு சந்திரன் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய விண்கலமான சந்திராயன் செலுத்தப்பட்டது.

சந்திராயன்-1 என்ற திட்டத்தின் படி சந்திராயன் விண்கலத்துடன் வெவேறு ஆராய்ச்சிக்காக 11 ஆய்வு உபகரணங்கள் பொருத்தி அனுப்பப்பட்டன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மினி-சார் என்ற ரேடார் கருவி உள்ளிட்டவை இதில் பொருத்தப்பட்டிருந்தன.

இத்திட்டத்தின் மூலம் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி சந்திரனின் பரப்பை சந்திராயனில் இருந்த பல்வேறு கருவிகள் பலதரப்பட்ட கோணங்களில் படம் [^] படித்து பதிவு செய்தன.

நிலவின் மேற்பரப்பில் உள்ள மணல் துகள்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதில் தண்ணீர் மூலக் கூறுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில், சந்திராயனில் இணைக்கப்பட்டிருந்த நாசாவின் ரேடார் மேப்பிங் கருவியில் பதிவான படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.

அதில், நிலவின் வடக்குப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட சிறிய ஐஸ் கட்டி படிமங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த ஐஸ் கட்டிகள் இரண்டு முதல் 15 கி.மீ விட்ட அளவில் காணப்படுகின்றன. இதன்மூலம், நிலவில் தண்ணீர் உள்ளது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிலவில் உள்ள இந்த பனிக் கட்டி படிமங்களில் 60 கோடி மெட்ரிக் டன் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அந்த நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நதிகள் இணைப்பு அவசியம்: தண்ணீருக்காக போர் மூளும்-கலாம் எச்சரிக்கை!


கோவை: நதிகளை இணைக்க வேண்டியது அவசியம், அவசரம். எதிர்காலத்தில் தண்ணீருக்காக உலக அளவில் போரே மூளும் வாய்ப்பு உள்ளது. தமிழகமும், இந்தியாவும் தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து விடபட நதிகளை இணைக்க வேண்டியது அவசியமாகும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

கோவையில் சிறு துளி பெருவெள்ளம், அன்றும்...இன்றும் என்ற தலைப்பில் மழை நீர் சேகரிப்பு முறைகள் பற்றிய கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நதிகள் இணைப்பின் அவசரம், அவசியம் குறித்து அவர் விரிவாகப் பேசினார். நதிகளை இணைப்பது தமிழகத்திற்கு மிகவும் அவசியம் என்ற கலாம், எதிர்காலத்தில் தண்ணீருக்காக போர்கள் மூளும் அபாயமும் இருப்பதாகவும் எச்சரித்தார்.

கலாமின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

எனக்கு ஒரு கனவு உள்ளது. தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி போன்ற நதிகளை பிற நதிகளுடன் இணைத்து அதை ஏரிகள், நீர்நிலைகள், கண்மாய்களை இணைக்க வேண்டும். இது முடியுமா? என்றால் முடியும். கரிகாலன் முடியாது என்று நினைத்து இருந்தால் தமிழகத்தில் கல்லணை அமைந்திருக்காது.

இஸ்ரோ போன்ற தொழில்நுட்ப அமைப்புகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இதுகுறித்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நீராதாரங்களை இணைக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.

தாமிரபரணி, காவிரி, பாலாறு, வைகை போன்றவற்றை இணைத்தால் தமிழகத்தின் நீர்த் தேவைகளை தாராளமாக நிறைவேற்ற முடியும்.

சோழர் காலத்து நொய்யல் ஆறு இன்று எந்த நிலையில் இருக்கிறது?. பாழ்பட்டு, மாசுபட்டு வீணாகிக் கிடக்கிறது. தேம்ஸ் நதியை சீர்படுத்தியது போல இதையும் சீர் செய்ய வேண்டியது அவசியம்.

3-வது உலகப் போர் மூளும்

உத்தரபிரதேசம், கேரளா, ஆந்திராவில் நதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. 3-வது உலகப்போர் என்று ஒன்று நிகழ்ந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அது நிஜம்தான்.

இந்தியாவை சுற்றி உள்ள சீனா, நேபாளம், மியான்மர், வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் மக்கள் தொகை அதிகம் கொண்ட, தண்ணீர் பிரச்சினைகள் அதிகம் உள்ள நாடுகள். இவற்றில் பல ஆயுத பலங்களையும் கொண்டவை. நாளை இவை தண்ணீருக்காக இந்தியாவுக்கு தொல்லை கொடுக்காது என்பது நிச்சயம் இல்லை.

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலும், பாட்டில்களிலும் எதிர்காலத்தில் அடைத்து வைப்பார்கள். அதை காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்பதை நாம் கற்பனை கூட செய்திருக்கமாட்டோம். ஆனால் அது இன்று நடைமுறை ஆகிவிட்டது.

இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் விற்பனை 10 ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கிறார்கள். மிகப்பெரும் கம்பெனிகள் எல்லாம் இந்த தண்ணீர் விற்பனையில் குதித்திருக்கின்றன. வெளிநாட்டு கம்பெனிகளும் இந்தியாவில் குடிநீரை பாட்டிலில் அடைக்கும் தொழிற்சாலை தொடங்கி தண்ணீர் விற்பனைகளை ஆரம்பித்து இருக்கின்றன.

யுத்தம் ஏற்படக் கூடாது என்றால்..

இது பெரும் ஆபத்து. தண்ணீருக்காக அடிதடியும், கலவரமும், யுத்தமும் ஏற்படக் கூடாது என்றால் அதற்கு தேவை தீர்க்க தரிசனம் கொண்ட ஒரு தலைமை. இளைஞர்களில் இருந்துதான் தண்ணீருக்கான அந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கும் ஒருவர் வரவேண்டும். எதிர்கால தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடியாக செய்யவேண்டியது நதிநீர் இணைப்பு திட்டம்தான், என்பதை புரிந்து கொண்டு அந்த இயக்கம் அதற்கான முன்முயற்சிகளை ஆரம்பித்தாக வேண்டிய கால கட்டம்தான் இது.

நமது நாடு தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நதி நீர் இணைப்பு மிக மிக அவசியம்.

மாணவர்கள் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரைப் பாதுகாப்போம், சேமிப்போம், அதன் நீராதாரங்களை பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் கலாம்.

கடந்த தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நதி நீர் இணைப்பு குறித்து திட்டமிடப்பட்டது. பின்னர் ஆட்சி போன பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வந்தது. ஆனால் இந்த ஆட்சியில் நதி நீர் இணைப்பு குறித்து கவலையே படவில்லை. மாறாக இதெல்லாம் சரிப்படாது, நடைமுறைக்கு சாத்தியமற்றது, அறிவுப்பூர்மானதல்ல என்று ராகுல் காந்தி சொன்னார். அதைத் தொடர்ந்து அரசும் கூட இது சரிவராது என்று கூறி கிடப்பில் போட்டு விட்டது நினைவிருக்கலாம்.

வேண்டாம் வெள்ளையர் உடை!-பட்டமளிப்பு விழாவில் கலாம் பேச்சு


லக்னோ: இந்திய பட்டமளிப்பு விழாக்களில் பயன்படுத்தப்படும் கவுன்கள் வெள்ளையர் காலத்திய மிச்சங்கள். இனி அவை வேண்டாம். இந்தியாவுக்கேற்ற எளிய ஆடைகளை பட்டமளிப்பு விழாக்களில் பயன்படுத்த வேண்டும், என்றார் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்.

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் பட்டம் வழங்கும் முக்கிய பிரமுகர்களும், பட்டம் பெறும் மாணவ-மாணவிகளும், முந்திய ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த நீண்ட கவுன் மற்றும் தொப்பியைத்தான் இப்போதும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கவுன்கள் கனமானவை, செலவுமிக்கவை, பயன்படுத்த கடினமானவையும் கூட.

இந்த உடைகளைப் பயன்படுத்துவது குறித்து ஏற்கெனவே சில இந்திய அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு [^] தெரிவித்திருந்தனர்.

மத்திய அமைச்சர் [^] ஜெய்ராம் ரமேஷ் ஒருமுறை பட்டமளிப்பு விழாவுக்கு வந்தபோது இந்த கவுனை அணிய மறுத்துவிட்டார். இன்னொரு விழாவில் திரிபுரா முதல்வர் [^] மாணிக் சர்க்கார் இந்த கவுன் பிரிட்டிஷ் அடிமைத்தனத்தின் மிச்சம். இதை அணியமாட்டேன் என்று கடுப்பாகவே சில மாதங்களுக்கு முன் சொன்னது நினைவிருக்கலாம்.

ஆனால், லக்னோவில் உள்ள பாபா சாகிப் பீம்ராவ் அம்பேத்கார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த டாக்டர் கலாம், விழாவில் தனக்குத் தந்த பட்டமளிப்பு கவுனை வாங்கி அணிந்து கொண்டார்.

அதேநேரம் இந்த கவுன் குறித்த தனது கருத்துக்களை, தனது சிறப்புரையின் போது குறிப்பிடத் தவறவில்லை.

அவர் கூறுகையில், "ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த கவுனைத்தான் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பது அல்ல. கவுன் மிகவும் எடையுள்ளது. அதற்கு பதிலாக எடை குறைந்த இந்திய ஆடையை பயன்படுத்தலாம். அங்கவஸ்திரம் போல ஒரு ஆடையைப் பயன்படுத்தலாம். அல்லது அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய ஆடையை அணியலாம்.

இது பற்றி பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் துணை வேந்தர்கள் கூடி ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் மிச்ச நினைவுச் சின்னமாக உள்ள இந்த கவுன்கள் வேண்டாம்'' என்றார்.

ஒரிஜினல் ப்ளாக்கர்!


இந்த பேப்பரை எழுதியவன் மட்டும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சான், நாமெல்லாம் இழுத்து மூடிகிட்டு போக வேண்டியது தான்! மேலும் ....

வியாழன், 7 அக்டோபர், 2010

‘எங்கள் கிணறு காணவில்லை’ - வினோத வழக்குப் பதிவு!


'கண்ணும் கண்ணும்' என்ற தமிழ்த் திரைப்படத்தில் “எனது கிணற்றை காணவில்லை, அதை கண்டுபிடித்து தாருங்கள்” என்று காவல்துறையில் புகார் செய்வார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ள சிரிப்பு நடிகர் நெல்லை சிவா, “என்னல இது, கிணறு எப்படில காணாம போகும்” என்று கூறிவிட்டு, கண்ணீர் விட்டுக் கொண்டே, வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக மேல் அதிகாரிகளிடம் கூறுமாறு சொல்லிவிட்டு, தனது காவல் சீருடையையும் கழற்றி கொடுத்துவிட்டு, உள்ளாடையுடன் நடையைக் கட்டுவார். நகைக்சுவைக்காக எடுக்கப்பட்ட இந்த காமெடியை உண்மையாக்கும் வகையில் ஒரு கிராமத்தில் இதுபோன்று நடந்துள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் கிணற்றை காணவில்லை என்றும், அந்த கிணற்றை கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கு ஒன்றுத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தொடர்ந்துள்ளார்.

பாஸ்கரன் தொடர்ந்துள்ள மனுவின் விவரம்:

நிலக்கோட்டை தாலுகா கோம்பைப் பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னுப்பட்டியில் 39 சென்டு இடத்தில் பொதுகுடிநீர் கிணறு ஒன்று இருந்துள்ளது. இந்த கிணற்று தண்ணீரை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் அதே பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக கல், குப்பைகளை போட்டு கிணற்றை மூடிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டிவிட்டனர். அதோடு அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தங்கள் சொந்த தேவைக்குத் தண்ணீர் எடுத்து பயன்படுத்தியும் வருகின்றனர்.

அதோடு விட்டுவிடாமல் அதே நபர்கள் 49 சென்டு பொது நடைபாதையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டவிரோத செயலை மறைப்பதற்காக, அதிகாரிகள் துணையுடன் வருவாய் ஆவணங்களைத் திருத்தவும் முயன்று வருகிறார்கள் அந்த நபர்கள்.

கிணற்றை காணவில்லை என்றும், பொது நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்படுதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன் என்று தனது மனுவில் கூறியுள்ளார் பாஸ்கரன்.

''பொது குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். பொது குடிநீர் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பொது பாதையை மக்கள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்'' என்றும் மனு தாக்கல் செய்துள்ளார்.

நிலப்பிரச்சனை, வரதட்சணை, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட எத்தனையோ வழக்குகளை நாம் பார்த்திருப்போம். தற்போது தங்கள் ஊரில் உள்ள பொது கிணற்றைக் காணவில்லை என்று கூறி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது விசித்திரமான வழக்குதான்.

சினிமாவுக்காக அந்த காட்சி உருவாக்கப்பட்ட போதிலும், உண்மையிலேயே ஒரு கிராமத்தில் குடிநீர் கிணற்றைக் காணவில்லை என்றும், அதை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றும், பொது நலத்தோடு வழக்கு தொடர்ந்தவரை பாராட்டத்தான் வேண்டும். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

எனவே, இதற்குமேல் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சி வரும்போது அதில் நம்ப முடியாத அளவிற்கு ஒரு விடயத்தைச் சொன்னால் சிரித்துவிட்டு சும்மா இருந்துவிடாதீர்கள். அது உங்கள் ஊரில் நடக்க வாய்ப்புள்ளதா என்று எண்ணியும் பாருங்கள்.

உங்கள் ஊரில் தூர்ந்து கிடக்கும் கிணறுகளையும் உடனடியாக தூர் வாரி பயன்படுத்திப் பொதுச் சொத்தாக்குங்கள். இல்லையென்றால் வடிவேல் கதை அங்கும் நடக்கும்.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் கல்வி கட்டணம் செல்லும்: உயர்நீதிமன்றம்


சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்தது.

தனியார் பள்ளிகளில் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கல்விக் கொள்ளையைத் தடுக்கும் நோக்கில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிட்டி பள்ளிகளில் ஆய்வு செய்து கல்வி கட்டணத்தை நிர்ணயித்தது. பள்ளிகளின் கருத்தைக் கேட்டறிந்த பிறகே இந்தக் கட்டணத்தை நிர்ணயித்ததாக தமிழக அரசும் விளக்கம் அளித்தது.

ஆனால் கோவிந்தராஜன் கமிட்டியின் கல்வி கட்டணத்தை ஏற்க தனியார் பள்ளிகள் மறுத்தன.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கல்வி கட்டணத்துக்கு இடைக்கால தடை விதித்தது. உடனே பெரும்பாலான தனியார் பள்ளிகள் கட்டணத்தை கடுமையாக உயர்த்திவிட்டன. இதனை எதிர்த்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இடைக்கால தடையை நீக்ககோரி பெற்றோர் சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் அப்பீல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம், "நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் செல்லும்" என்று அறிவித்துள்ளது.

"தனியார் பள்ளிகள் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது", என்றும் அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.