news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

திங்கள், 28 பிப்ரவரி, 2011

சென்னை: பிரபாகரன் தாயார் மறைந்த பார்வதி அம்மாளின் அஸ்தியை நாசமாக்கி அவமதித்த சிங்களர்களைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு, ராஜபக்சே கொடும்பாவியை எரித்த வைகோ, பழ நெடுமாறன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் அஸ்தியை நாசமாக்கியும், அவர் எரியூட்டப்பட்ட இடத்தில் நாய்களைக் கொன்று வீசியும் அவமதிப்பு செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழநெடுமாறன் தலைமையில் மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "அன்னை பார்வதி அம்மாள் சடலத்தை அவ மதிப்பு செய்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூரமான செயலுக்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம். முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயை அணைக்க கூடாது. தொடர்ந்து அதே வேகத்தில் செயல்பட வேண்டும்.

பார்வதி அம்மாள் சிதையை அவமதிப்பு செய்ததை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...", என்றார்.

பழ.நெடுமாறன் பேசுகையில், "மனித நேயம் ஈவு இரக்கம் இல்லாமல்
இலங்கை அதிபர் ராஜபக்சே இது போன்ற கொடூரச் செயலை செய்துள்ளார். காங்கிரஸ் அரசின் உதவியால் இதுபோன்ற இழிவான செயலை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கையை ஆதரித்து காங்கிரஸ் அரசு செய்து வரும் தவறை உணரும் காலம் விரைவில் வரும். இந்த கரையை துடைப்பதற்கு நம்மால் முடிந்ததை செய்வோம். இலங்கை தூதரகத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்..", என்றார்.

கொடும்பாவி எரிப்பு:

பின்னர் வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. இலங்கை அரசின் கொடியும் தீவைத்து கொளுத்தப்பட்டது. பின்னர் அணி அணியாக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது:
வைகோ, பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர்
தா.பாண்டியன், மகேந்திரன், மற்றும் புதிய பார்வை நடராஜன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டனர்.

புதன், 16 பிப்ரவரி, 2011

இதுவல்லவோ உச்சகட்ட காமெடி.. ஐயோ முடியல ......

இலங்கைத் தூதரகம் முற்றுகை: கனிமொழி ம்பி கைது!

நல்ல இருக்கா போஸ் , போராட்டம் பன்ன போறேன் ஒரு ரிகர்சல் பாத்துக்கலாமா ?
நல்ல வரணுமில்ல சீன் எல்லாம் ...... அங்க போய் சொதப்பிட கூடாது . அப்பாவுக்கு வயசாயிடுச்சி கதை வசனம் இயக்கம் எல்லாம் அப்பாதான் வேஷம் கட்டறது மட்டும் நானு . என்ன இந்த முறை காமெடி படம் பண்ணலாமுன்னு தான் ட்ரை பண்றோம் .கண்டிப்பா வெற்றி பெறும் . மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பாங்க அதற்கு நான் உத்தரவாதம் தரேன். நகைசுவைக்கு பஞ்சமே வைக்கல நல்லா வந்திருக்கிறதா அப்பாவே சொன்னாரு , அப்பாவாலே சிரிப்ப கண்ரோல் பன்ன முடியலன்னா பாருங்களேன் .......

பாவம் மக்கள் விலைவாசி உயர்வு , எல்லா கட்டணங்களும் உயர்வு , இதுல வருசையா ஊழல் , கைது , மீனவன் கொலை , கொள்ளை இப்படியே கேள்வி பட்டு நொந்து போய் இருக்காங்க . அதான் கொஞ்சம் காமெடி பண்ணலாமேன்னு .............

செய்தி :
சென்னை: தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இலங்கைக் கடற்படையின் இந்தச் செயலைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதே போல மாநிலத்திலுள்ள அனைத்துத் துறைமுகங்கள் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனே விடுவிக்கக் கோரி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். மைலாப்பூரில் இருந்து கனிமொழி தலைமையில் பேரணியாக புறப்பட்டு இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றபோது கனிமொழி எம்பி கைது செய்யப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி இலங்கை அரசை மட்டுமல்லாமல் மத்திய அரசையும் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், எங்களது போராட்டம் மேலும் தீவிரமடையும்," என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநிலங்களை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

அர்த்தம் விளங்கா (காதலர் தின) போராட்டம் .......

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம் நடத்திய இந்து முன்னணியினர்

எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல , இநது முன்னணி நண்பர்களே !
நீங்க என்ன சொல்லவரீங்க அல்லது எதை கண்டிச்சி ஆர்பாட்டம் நடத்தினீர்கள் ?
காதல் தினத்தை கண்டித்தா ?,
காதலை கண்டித்தா ?, காதல் என்ற பெயரில் முகம் சுளிக்கம் காம விளையாட்டையா ? அல்லது பெற்றோர்கள் பார்த்து , சொந்தங்களை அழைத்து மந்திரங்கள் ஓதி , இசை இசைத்து சாரட்டு வண்டியில் பவனி வந்து மணமுடிக்கும் திருமணத்தையா ? கொஞ்சம் புரியலபா எனக்கு ,

யாருக்காவது புரிந்தால் தயவு செய்து சொல்லவும் . உங்கள் எதிர்ப்பை சொல்லுங்கள் அதை தெளிவாக யாருக்கு , எதற்கு எதிராக என்று புரிந்து காட்சிகளை அரங்கேற்றுங்கள் . நீங்கள் செய்திருக்கும் செயல் யாரை புன்படுத்துகின்றீர்கள்( 2 நாய்களை அலங்கரித்து 2 குதிரைகளில் ஊர்வலமாக அழைத்து வந்து மந்திர முழக்கத்தோடு அவைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்). இத செயல் எதை சித்தரிக்கின்றது நீங்களே சொல்லுங்கள் .........

1. பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம் (காதல்) நாய் காதலுக்கு சமம் என்கின்றீர்களா ?

2. அடுத்து உங்கள் கருத்திற்கே வருகிறேன், நீங்கள் காதலர் தினம் கொண்டாடுவதை எதிர்கின்றீர்களா ? அல்லது அன்று அரங்கேறும் காம விளையாட்டை எதிர்கிறீர்களா ?

3. அப்படி என்றால் இநது மதமோ , இஸ்லாமிய மதமோ , கிருஸ்துவ மதமோ (நான் எந்த மதத்திற்குள்ளும் செல்ல வில்லை ) , உணர்வோ , நினைவோ , பிறந்த நாளோ அதை கொண்டாடுவதில் தவறில்லை என்பது என் வாதம் .
கொண்டாடும் முறை அடுத்தவர்களை முகம் சுழிக்க வைக்க கூடாது , இதை சுட்டி காட்டுங்கள் தவறில்லை ..... அதை விடுத்து ஒட்டு மொத்தமாக காதலர் தினம் கொண்டாடுவதே தவறென்பது ஏற்றுக்கொள்ளும் படிஇல்லை ......

4. எதிர்ப்பு என்ற பெயரில் உணர்வுகளிலும் அரசியல் செய்யாதீர்கள் . காதலர் தினம் கொண்டாடுவது தவறென்றால் , அனைத்து தினங்களும் தவறே ( எயிட்ஸ் தினம் , அன்னையர் தினம் , தலைவர்கள் தினம் , தந்தையர் தினம் இது நீண்டு கொண்டே போகும் ......)

5. காதல் என்ற பெயரில் கடை தெருவில் செய்யும் காமத்தை வன்மையாக கண்டிகின்றேன் . ஆனால் காதலர் தினத்தை ஆதரிகின்றேன் ........
இந்த கடைத்தெரு காம களியாட்டங்கள் தினம் தோறும் அரங்கேறிகொண்டிருகின்றன.. அன்று ஒரு நாள் மட்டுமே அல்ல .....

6. திரைப்படங்கள் சித்தரிக்கும் காதல் காட்சிகள் தான் இதற்கு முதற் காரணம் , காதல் என்றாலே கட்டிப்பிடிப்பதில் ஆரம்பமாவதாக சொல்ல படுகின்றது . பின்பு காமம் காதலில் ஒரு முக்கிய விசயமாக காட்சிகள் சித்தரிக்க படுகின்றது .( காமம் காதலில் ஒரு அங்கமே ஆனால் அது முறையானதாக இருக்க வேண்டும் )

7. இன்றைய இளைய சமுதாயத்தை குறை சொல்லி பயனில்லை .... வழி காட்டுதல் சரியாக அமைய வேண்டும் . நம் சமுதாயம் அதை செய்கின்றதா ?

8.இப்பொழுது திரை அரங்கம் சென்று இதை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை ,
பள்ளிகள் முதற் கொண்டு ( ஸ்கூல் டே என்ற பெயரில் நடை பெரும் திரை பட நடன நிகழ்ச்சிகள் ), வீட்டில் வரவேற்பரையில் அனுமதி இல்லாமல் வந்து விட்ட தொலைகாட்சி நிகழ்ச்சிகள் .... மானாட மயிலாடவே இதற்கு முதலிடம் .. மற்ற நிகழ்ச்சிகளும் இதை பின்பற்றியே ( கெட்டு குட்டிச் சுவரா போச்சி) வீட்டில் அனைத்து வயதினரும் அமர்ந்து பார்க்க முடிய வில்லை அல்லது பழகி போய் விடுகிறது . ஹோஓஒ இதுதான் சமுகம் போல என்று எண்ணத்தையும் , கூச்சத்தையும் விட்டு விலக்கி விட்டது இளைய சமூகத்திடம் ....

9. மாறி வரும் இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு சில விசயங்களை தவிர்த்து அனைத்தையும் காது கொடுத்து கேட்டு, நாசுக்காக நல்லது கெட்டதை சொல்லி வந்தால் பிள்ளைகள் உங்கள் உடனே நண்பனாக உணருகளை பகிந்து கொள்ளும்,
நீங்கள் முகம் சுளித்தாலூ அல்லது கடுமையாக தண்டிப்பதாலோ எல்லாம் மாறி விடாது . மாறாக அதை அறிந்து கொள்வதிலும் , உங்களை எதிர்பதாக நினைத்து தான் வாழ்க்கை பாதையை கெடுத்து கொள்ளதுமே நடக்கும் .........
யோசித்து எதிர்ப்பை காட்டுங்கள், உங்களுடன் குரல் கொடுக்க சமூக நல விரும்பிகளும் தயாராக இருப்பார்கள் ..................... சிந்தியுங்கள் ...

செய்தி :
சென்னை: இந்து முன்னணியினர் காதலர் தினத்தை கண்டிக்கும் வகையில் நாய்களை குதிரை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து திருமணம் நடத்தி வைத்தனர்.

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. சென்னையிலும் கொண்டாட்டத்திற்கு குறைவில்லை. ஒரு பக்கம் காதலர்கள் கொண்டாட்டம், மறுபக்கம் காதலர் தின எதிர்ப்பு போராட்டங்கள் என சென்னை மாநகரம் பரபரத்தது.

காதலர் தினத்தை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் சென்னை புளியந்தோப்பில் நாய்களுக்கு திருமணம் நடத்தும் நூதனப் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணியின் சென்னை மாவட்ட அமைப்பாளர் மனோகரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகுந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்து முன்னணியினர் முன்னிலை வகித்தனர். அவர்கள் 2 நாய்களை அலங்கரித்து 2 குதிரைகளில் ஊர்வலமாக அழைத்து வந்து மந்திர முழக்கத்தோடு அவைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.

இந்த நூதன திருமண விழாவில் கலந்து கொண்ட இந்து முன்னணியினர் காதலர் தினத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். காதலர் தினத்தை கொண்டாட தடைவிதிக்க வேண்டும் என்றனர்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

மக்களே எலக்சன் வேணான்னு மட்டும் சொல்லிடாதீங்கோ !

என்னமோ போடா மாதவா ! எப்படிடா உன்னால மட்டும் முடியுது எல்லாத்தையும் சகிச்சிக்க)... என்னமோ போடா .......... . மக்கா புரியலையா? இது ஜனகராஜ் அண்ணாநகர் முதல் தெரு படத்துல அடிக்கடி அவரு தனக்கு தானே பேசிக்குவாரு ..............
இந்த நிலைமைதான் இன்றைய நாட்டு மக்கள் நிலைமை .........
தீர்வு(நீதி தாங்கோ ) கேட்கும் ஆளுக்கு அதற்கு தகுதி இருக்கனுமில்ல, இது நாம துணை முதல்வர் கேள்வி , அதெல்லாம் சரிதான் . நாங்க ஊழல் பண்ணா உங்களை எதுவும் கேக்க கூடாதா ? இது நம்ம முன்னால் சி.எம்முங்கோ ....

வாதம் எல்லாம் சரிதான் , இந்த சின்ன ஊழல்( அரசியல்வாதிகளுக்கு ) கூட தீர்வு வராம எவ்வளவு நாளுதான் இழுத்தடிப்பீங்க . இது மக்கா நம்ம புலம்பல் ,
பாவம்
மேடம் கொஞ்சம் கலக்கத்துல தான் இருக்காங்க எலக்சன் வர இன்னும் ஒரு நாலு மாசந்தான் இருக்கு அதுக்குள்ளார ஏதாவது கேசுல தீர்ப்பு வந்து தொலைச்ச நிலைமை கஷ்ட காலமா மாறிடுமோ ? அப்படின்னு பாவம் பயபடுறாங்க .......

என்ன சொல்லி வோட்டு கேட்க முடியும் , இப்படி வச்சிக்குவோம் ..

1. 1.76 லட்சம் கோடி ஊழல் எங்கே ? சில நூறு கோடி எங்கே சிந்திப்பீர் வாக்கால பெருமக்களே ? வாக்களிப்பீர் !

2. பெரிய குடும்பத்தை பாரீர் ! என்னுடைய சிறிய ( சசிகலா மட்டும் ) குடும்பத்தை பாரீர் ! வாக்களிப்பீர் !

3. மனைவி, துணைவி , பிள்ளைகள் , பேரன்கள் ,பேத்திகள் , ............ இப்படியே நீண்ட பெரிய குடும்பம், எல்லாருக்கும் தனித்தனியே கோடிகணக்கில் (ஆட்டைய போட்ட) சொத்து என்னகில்ல , எதோ போயர்ஸ் காடன் , கொடைக்கானல் , ஹைதராபாத் , கர்நாடகா அப்படின்னு கொஞ்சபோல எனக்கும் , தோழிக்கும்
மட்டும் சொத்து இருக்கு , வாக்களிப்பீர் .

4 . எதை செஞ்சாலும்(ஊழல் , கொள்ளை) செஞ்சாலும் வெளிப்படையா தான் செய்வேன் எல்லா மந்திரிகளையும் கூட்டு சேத்துகுவேன். கொள்ளை அடிச்ச பிறகு, அதை தெரியாம பதுக்க தெரியாது ...சயன்டிபிக் ஊழல் எல்லாம் செய்ய தெரியாது வாக்களிப்பீர் .

5 எதோ எலக்சனுக்காக தமிழ் ஈழம் அப்படினாவது குரல் கொடுத்தேன். அதை கூட செய்யாத மைனாரிட்டிக்கா உங்கள் வாக்கு ............ வாக்களிப்பீர்

6. எதோ ஒருமுறை தெரியாம அரசு ஊழியர் மீதி நடவடிக்கைக்னு கொஞ்சம் விளையாடிட்டாத சொன்னாங்க .. இப்ப திருந்திட்டேன் . நீங்க தான் வோட்டு பூத்துல உட்காருவீங்கன்னு முன்னமே யாரவது சொல்லி இருந்த இப்படி எல்லாம் செய்திருப்பேனா ? வாக்களிப்பீர் !.
7. இனி என் பேர எல்லாத்துக்கும் வைக்க மாட்டேன் , நீங்களே பார்த்து ஏதாவது டெய்லி பாராட்டு விழா, பட்டமுன்னு குடுத்தீங்கன்னா போதும் . நானா கேட்க மாட்டேன் . வாக்களிப்பீர் !.

8. கொள்ளை அடிக்கும் போது கண்டிப்பா இனி மத்திய அரச கூட்டு சேத்துகுவேன்!
தனியா கொள்ளை அடிச்சி மாட்டிக்க மாட்டேன். அப்படியே கொள்ளை அடிச்சாலும் வேலில தெரியாம பாத்துகிறேன் வாக்களிப்பீர் !
9. குறிப்பா இனி டெல்லிக்கு போகவே மாட்டேன் லெட்டர் மட்டும் எழுதுவேன் .
எதுக்கும் தோழி சசிகலா விடம் கேட்டுட்டு மறுபடியும் சொல்றேன் .
இல்ல இல்ல அவங்களா வீட்டுல விட்டுட்டு வரேன் நம்புங்க, வாக்களிப்பீர் !

இப்படியும் கூட வாக்கு கேட்க தோணலாம் ( எல்லாம் என் கற்பனையே )இப்படி அடிக்கி கொண்டே போகலாம் !. பாவம் நாம்தான் ,கொள்ளைல எந்த கொள்ளை கம்மியா இருக்குனா ? கணக்கு போட முடியும் !

மொத்ததுல இன்றைய நிலையில எந்த அரசியல் கட்சியும் யோக்கியம் இல்லை என்பது தான் எதார்த்த உண்மை . சிலருக்கு வாய்ப்பு கிடைச்சி இருக்கு , சிலருக்கு வாய்ப்பு கிடைக்கல அவ்வளவு தான் ,அதுனால மத்தவங்களுக்கு(ஜெலிசில்) தான். அட வைத்தெரிச்சல் தான் . யாரு வந்தாலும் கொள்ளை கொள்ளையா தான் போக போகுது . ஒன்னுவேணா செய்யலாம், யாரு கம்மியா கொள்ளை அடிச்சி , கொஞ்சமாவது அதுல நல திட்டம் செய்யறாங்க அப்படின்னு பாக்கலாம் .

இல்ல யாருக்கும் மொத்தமா டெண்டர் விடமா ? . மாத்தி, மாத்தி வோட்டு போடலாம் . என்ன ? அவங்க அடிச்ச கொள்ளையாவது மக்களுக்கு தெரிய வரும் .
மக்கள் ஆட்சி போய் மன்னர் ஆட்சிக்கு வழி விடாம ஆட்சி மாற்றம் செய்துகிட்டே இருக்கலாம் . மக்கள் கிட்ட இருக்கிற வோட்டு போடுற உரிமையையாவது தக்க வச்சிக்கலாம் . அட நீங்க வேற சின்ன புள்ள தனமா பேசிகிட்டு (அப்படின்னு நீங்க சொல்றது என் காதுக்கு கோக்குது) . அட அப்பயாவது எதோ கொஞ்சம் கருப்பு எல்லாம் வெளுக்கறாங்க . வோட்டுக்கு காசாவது கிடைக்குது யாரு சும்மா குடுப்பாங்க , யோசிச்சி பாருங்க எலக்சன் மட்டும் இல்லாம இருந்துதுன்னா ? . ஹயோ ! நாம எல்லாம் இந்நேரம் அவங்க (அரசியல் மாமன்னர்கள் அதாவது திறமைய கொள்ளை அடிக்க தெரிஞ்சவங்க) கொத்தடிமைய , எல்லாத்தையும் இழந்து ஜால்ரா போட்ட மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலைமைக்கு ஆளாயிடுவோம். எதிர்த்து பேசினா இல்ல உண்மைய சொன்ன உடனே தூக்கு தான் ( விக்கி லீக்ஸ் நிறுவனர் நிலைமை இன்று இதுதான் ) .

அதனால மக்களே எலக்சன் வேணான்னு மட்டும் சொல்லிடாதீங்கோ !
அரசியல்வாதிங்க குஷி ஆயடுவங்க . அடிச்ச கொள்ளை எல்லாம் அப்படியே சொத்தாயிடும். நாம தலைய பிச்சிகிட்டு நிக்க வேண்டியதுதான்.
எல்லாரும் வோட்டு போடுங்க சிந்திச்சி ( இத நானே சிந்திச்சேன்) அதுக்காக நீங்க ரூம் போட்டெல்லாம் சிந்திக்க வேணாம் . பார்த்து குத்துங்க வோட்ட சாரி இப்ப அழுத்துங்க ( வோட்டு மெசின் தானே)

படிச்சிட்டு டென்ஷன் ஆனவங்க எல்லாம் வோட்டு போட்டுட்டு வாங்க ரூம்போட்டு எப்படிஎல்லாம் அடிக்கலாமுன்னு யோசிச்சி முடிவு பண்ணிக்கலாம். அங்க எதோஆட்டோ வராமாதிரி தெரியுது விடு ஜூட் ........
..

செய்தி : குவிப்பு வழக்கு-ஒரு பாராவை திருத்த 6 மாதம் அவசாகம் கோரிய ஜெ!


பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்துக் குவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவை விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

ஆனால், அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரால் நேரில் ஆஜராக முடியாது என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனா கூறுகையில், தேவைப்படும்போது ஜெயலலிதா விசாரணைக்கு நேரில் அழைக்கப்படுவார் என்றார்.

இதையடுத்து ஒரு சாட்சியின் வாக்குமூலத்தை மொழி பெயர்த்ததில் ஒரு பாராவில் தவறு இருப்பதாகவும், அதை சரி செய்ய 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இந்தத் தவறை ஓரிரு நாளில் சரி செய்துவிட முடியும் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி ஆகியோர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை ஜெயலலிதா இழுத்தடித்து வருவதாக திமுக புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெ.வுக்கு உடல்நிலை சரியில்லை என சட்டசபையில் தீர்மானம்:

முன்னதாக நேற்று சட்டசபையில் அதிமுக சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் சட்டமன்ற விதி 20(1)ன் படி இந்த கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்ற சபாநாயகர் தீர்மானத்தை கொண்டு வர சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளித்தார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே இந்த கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ள இயலாததற்கு காரணமாக இந்த தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்று நான் முன் மொழிகிறேன் என்றார்.

அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் இதை வழி மொழிந்தார். இதையடுத்து இந்த கூட்டத் தொடருக்கு ஜெயலலிதா வராமல் இருப்பதற்கான அனுமதி வழங்கும் தீர்மானம் ஏகமதான குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந் நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின்போது, உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஜெயலலிதாவை நேரில் ஆஜராகுமாறு ௧ கூடாது என்று நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

'கொழுப்பு கூடிப் போச்சு...' - அனுஷ்கா!


தமிழ், தெலுங்கு ரசிகர்களை நினைத்த மாத்திரத்தில் சூடேற்றும் கவர்ச்சி நடிகையாக மாறியிருப்பவர் இப்போதைக்கு அனுஷ்காதான். இரண்டு மொழிகளிலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்தத் தயாராக உள்ளனர் அம்மணிக்கு.

கமல் முன் கூட்டியே அவரது கால்ஷீட்டை ரிசர்வ் செய்து வைத்துவிட்டார். சம்பளம் கோடிகளில்!

இதற்கு முக்கியக் காரணம் அனுஷ்காவின் அசத்தும் உடல் அமைப்புதான். அடிப்படையில் இவர் ஒரு யோகா டீச்சர் என்பதால், மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்கு உடலைப் பராமரித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான 'ரகடா' என்ற தெலுங்கு படத்தில் இவரின் தோற்றம் சற்றே குண்டானது போல் தெரிந்தது, இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதற்கான காரணம்அவர் முகத்தில் அதிகமாக கொழுப்பு சேர்ந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக அவரின் உதடுகள் தாறுமாறாக வீங்கியதுபோல தோற்றமளிக்கின்றனவாம். எனவே உதட்டில் உள்ள கொழுப்பினை குறைக்க லிப்போசெக்ஷன் எனும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளாராம் அனுஷ்கா.

நயன்தாரா,சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் போன்றவர்கள் இந்த சிகிச்சையை செய்து நல்ல பலன் கிடைத்திருப்பதாக கூறியிருப்பதால், தானும் அந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம் என அனுஷ்கா முடிவு செய்துள்ளாராம்!
..

விருப்ப செக்ஸுக்கான தகுதி வயதை 12 ஆக குறைப்பு இல்லை-அரசு முடிவு


விருப்பத்துடன் கூடிய செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதற்கான தகுதி வயதை 16 என்பதிலிருந்து 12 ஆக குறைக்க வகை செய்யும் சட்ட அம்சத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.

செக்ஸ் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. இதில் விருப்பத்துடன் கூடிய செக்ஸ் உறவில் ஈடுபடுவோருக்கு தற்போது குறைந்தபட்ச வயதாக 16 என்று உள்ளதை 12 ஆகக் குறைக்கும் அம்சமும் இடம் பெற்றிருந்தது.

12 வயது மற்றும் அதைத் தாண்டியவர்கள் விருப்பத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வது சட்டவிரோதமானதல்ல என்று இந்த சட்டப் பிரிவு கூறுகிறது. அதேசமயம், தற்போது குறைந்தபட்ச வயது 16 என்று இருப்பதையும் குறைக்கவும் சட்ட அம்சம் வகை செய்கிறது. இருப்பினும், தற்போது இந்த அம்சத்தை அரசு நீக்கி விட்டது.

வரைவு சட்டத்தின் நகலை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அனுப்பி கருத்து கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 12 வயது என்ற அம்சத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. அதேசமயம், தற்போது உள்ளபடியே குறைந்தபட்ச வயது 16 ஆக நீடிக்கும் என்று மத்திய மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்தார்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த தரங்கெட்ட நிகழுவுகள் நடக்கையிலே ....

தொடரும் அவமான தற்கொலை நிகழ்வுகள் :
எழுத முயன்று யாரோ நெஞ்சில் சம்பட்டியால் அடித்தது போல் ஒரு வலி. என்ன நடக்குது இந்த நாட்டுல மனிதம் செத்து போனதோ ?.
அப்படி என்றால் என்ன ? என்று கேட்கும் நிலையில் நாம் அனைவரும் இருக்கிறோமோ என்ற அச்சம் நிலவுகிறது .

பணம் திருடப்பட்டதோ இல்லையோ அதற்குள் நான் பயணிக்கவில்லை .
ஒரு ரூ. 4000 காணவில்லை அல்லது களவாடப்பட்டது என்பற்காக இத்தகைய நடவடிக்கை எடுத்த ஆசிரியர் பெருந்தகையர் ( ஆசிரியைகள் ) , மாணவர்களிடமிருந்தும் , பெற்றவர்களிடம் இருந்தும், அவர்கள் இரத்தத்தை(பணத்தை) பள்ளி கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடித்த போது எங்கே போனீர்கள் . திருட்டு செய்தவர் யாராக இருந்தாலும் திருடர் தான் அதில் மாற்று கருத்தே இல்லை . ஆனால் விசாரணை என்ற பெயரில் அரசாங்கமும் , காவல்துறையும் , நிர்வாகங்களும் , பேங்க் அதிகாரிகள் , தனியார் நிறுவனங்கள்
செய்யும் மனித மீறல்கள் சகித்துக்கொள்ள முடியவில்லை.

சட்டமும் , நீதியும் ,தண்டனையும் , அவமானங்கள் , அசிங்கமும் , கெளரவம், கொள்கை , கோட்பாடு, சத்தியம் , தர்மம் , தன்மானம் , தலைகுனிவு , நெஞ்சு ஈரம் , இரக்கம் , மனிதாபிமானம் , கலாச்சாரம் , கட்டுப்பாடு, மனசாட்சி , மண்ணாங்கட்டி,
வாக்குறுதி , வாக்கு , நாக்கு , உறுதிமொழி ஹயோ !!! முச்சு திணறுது . இவைகள் எல்லாம் நடுத்தர மற்றும் ஏழைகளுக்காகவே பிறந்து வளர்ந்தவை(வளர்த்தவை).

விசாரணை என்ற பெயரில் நீங்கள் செய்யும் பாராபட்சம் , இதுவே ஒரு பணம் படைத்தவம் அதிகாரத்தில் இருப்பவன் பிள்ளை என்றால் இந்த இழி செயலை செய்திருப்பீர்களா ? .உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன் (உங்களுக்கெங்கே மனசாட்சி என்று ஒன்று இருந்திருத்தால் உங்கள் பிள்ளைகளாக நினைத்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா ?). வக்கர புத்தி எப்படி இன்று தாய்க்குலதிடம் வந்தது தாய்மை எங்கே போனது ! , கடவுளுக்கு ஈடான குரு(ஆசிரியர் ) எங்கே தொலைந்து போனார் . உங்களை நம்பி அனுப்பும் எங்கள் பிள்ளைகளின் நிலை என்ன ? .
அன்று
இலவச பள்ளிகள் நடத்தி நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் தந்தனர் . இன்று தலை கீழ் கொள்ளை அடிக்கும் கூடாரமாக கல்வி நிறுவனங்கள் மாறிய பிறகே இந்த விதமான கீழ்த்தர வக்கர புத்திகளும் அதிகரித்துள்ளது . பணம் ஒன்றே குறிக்கோள் , அப்புறம் எப்படி? உங்ககிட்ட படிக்கும் பிள்ளைக்கு உங்கள் மீதி மரியாதை வரும் .
கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் அரசு அதிகாரிகளும் , அரசியல் வாதிகளும் மேல் சொன்ன எதுவும் இருப்பதாக தெரியவில்லை . அங்கேயும் 1000,
2000 லஞ்சம் வாங்குரவங்கத் தான் முகத்த மூடிகிட்டு அவமானப்பட்டு போறாங்க ( இதனால நான் லஞ்சம் வாங்குறது சரின்னு சொல்ல வரல) , மானம் அவமானம் இந்த எல்லாமே நடுத்தர ஏழைகளுக்கு மட்டுமே என்று எழுத படாத சட்டமாக இருக்கின்றது ( அவங்க மனசுல எழுதி வச்சிகிட்டாங்க ) .
தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும் என்பதே என் விருப்பம் . சமமாக நடத்த வேண்டும் என்ற சமூக சிந்தனை வளர வேண்டும் .

அவமானம் என்ற ஒன்று ஒரு மாணவியின் உயிர் பலி வாங்கி இருக்கிறது. கொலை செய்பவனை விட அதற்கு தூண்டுபவனுக்கு தண்டனை அதிகம் என்று சட்டம் சொல்கிறது . ஆனால் அதே சட்டம் பணம் படைத்தவனுக்கு ஒன்றும் இல்லாதவனுக்கு ஒன்றுமாக நீதி வழங்குகின்றது . அவமானம் என்ற வார்த்தை பல உயிர்களை ( நடுத்தர & ஏழைகளின் ) பல நேரங்களில் பலி வாங்கி உள்ளது .
இதற்கு இயலாமையும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது . விதியே என் செய்வாய் ......... என்று மாறும் இந்த சமூகம் அவலங்கள் .
பாதிக்க ப்பட்ட ஆன்மாவிற்கும் , மாணவியை இழந்து வாடும் உறவுகளுக்கும்
ஆறுதலை மட்டுமே நம்மால் சொல்ல முடியும் .

sசென்னைei: சக மாணவியிடமிருந்து ரூ. 4000 பணத்தைத் திருடியதாக கூறி மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியின் உடைகளைக் களைந்து சோனையிட்டதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் நான்கு பேருக்கும் ஒரே நேரத்தில் நெஞ்சு வலி வந்ததால் நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தனர் போலீஸார்.

சென்னை பெசன்ட்நகர், ஆல்காட்குப்பத்தை சேர்ந்தவர் கனகலிங்கம் (55). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் சாந்தி (50). இவர் பெசன்ட்நகர் ராஜாஜிபவன் மத்திய அரசு அலுவலகத்தில் துப்புறவுத் தொழிலாளியாக பணியாற்றினார். இவர்களது மூத்த மகள் திவ்யா (20).

தி்வ்யா, அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி (முன்னாள் சத்யா ஸ்டூடியோ வளாகத்தில் உள்ளது) மகளிர் கல்லூரியில் பிகாம் 2வது ஆண்டு படித்து வந்தார். மிக மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் திவ்யா. குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

நன்கு படிக்கக் கூடிய மாணவியான அவர் வகுப்பில் முதல் மாணவியாகவும் திகழ்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி அன்று திவ்யாவோடு படிக்கும் சக மாணவியின் ரூ.4 ஆயிரம் பணம் திருட்டு போய்விட்டது. வகுப்பறையிலேயே இந்த திருட்டு நடந்ததால் ஆசிரியைகள் விசாரணை நடத்தினார்கள். மாணவி திவ்யா மீதும் சந்தேகப்பட்டு, ஆசிரியைகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து அன்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய திவ்யா, தனது தாயாரிடம் கதறி அழுதுள்ளார். ரூ.4 ஆயிரம் பணம் திருடியதாக திருட்டு பட்டம் கட்டி, எனது ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி, ஆசிரியைகள் கல்லூரியில் அவமானப்படுத்திவிட்டார்கள். மற்ற மாணவிகள் என்னை கேலியாக பார்க்கிறார்கள். இனிமேல் எந்த முகத்தோடு நான் கல்லூரிக்கு போவேன் என்று கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த திவ்யாவின் தாயார், மகளைத் தேற்றி ஆறுதல் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தினரும் ஆறுதல் கூறியுள்ளனர். கல்லூரிக்கு வந்து நியாயம் கேட்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் அதை நிராகரித்த திவ்யா, யாரும் கல்லூரிக்கு வர வேண்டாம். மார்க்கில் கை வைத்து விடுவார்கள் என்று கூறி பயந்துள்ளார். இந்த நிலையில், திங்கள்கிழமை கல்லூரிக்கு வழக்கம் போல போனார் திவ்யா. அன்றும் அழுதபடி திரும்பினார்.

இந்த நிலையில், திவ்யாவின் தந்தை கனகலிங்கத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பார்த்துக் கொள்ள மனைவி சாந்தி உடன் இருந்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரியிலிருந்து திவ்யா தனது வீட்டுக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையிலிருந்து இரவு வீடு ன் சாந்தி இதைப் பார்த்து அலறினார். அக்கம்பக்கத்தினர் திரண்டனர். குப்பமே அதிர்ச்சியில் மூழ்கியது.

போலீஸார் விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பரிசோதனைக்குப் பின்னர் மாணவியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்போடு உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக திவ்யாவின் குடும்பத்தார், உறவினர்கள், ஆல்காட் குப்பத்தில் வசிக்கும் மீனவ சமுதாயத்தினர் திரண்டு வந்து கல்லூரியை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் வேடும். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆசிரியைகளைக் கைது செய்யக் கோரி அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மாணவி திவ்யா படித்து வந்த வகுப்பு மாணவிகளும் விசாரிக்கப்பட்டனர். அதன் பின்னர் பேராசிரியை ஜெயலட்சுமி, உதவி பேராசிரியைகள் விஜயலட்சுமி, சுதா, செல்வி ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் நிறுத்தினர். நால்வரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து நால்வரையும் கோர்ட்டுக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அப்போது நான்கு பேரும் நெஞ்சு வலிப்பதாக கூறவே உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கல்லூரியில் பதட்டம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது மேலும் 2 நாட்களுக்கு அதாவது நாளை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதன், 2 பிப்ரவரி, 2011

ஏட்டுல இருக்கும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன ஆச்சு?கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் துவக்கப்படவே இல்லை. பல திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளன.தமிழக அரசு, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த மார்ச் 19ம் தேதி தாக்கல் செய்தது. இதில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் உள்ள முக்கிய திட்டங்கள் வருமாறு:

* நவீன முறையில் தூய்மையாகவும், துரிதமாகவும் பாலை பதப்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்யவும், கோவை ஆவின் நிறுவனம், 27 கோடி ரூபாயில், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் உதவியோடு நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் துவக்கப்படவில்லை.
* தஞ்சை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில், கொள்ளிடம் வெள்ளத் தடுப்புத் திட்டம், 376 கோடியிலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 164 கோடியிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 69 கோடி ரூபாயிலும் என, மொத்தம், 609 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே போன்ற அறிவிப்பு, இந்த ஆண்டு கவர்னர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. பணிகள் துவக்கப்படவில்லை.
* இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வீடுகள் கட்டிக் கொடுக்கவும், 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
* மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிளில் படிக்கும், 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவசமாக, "ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி', வரும் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து. ஆனால், இதுவரை ஒரு மாணவருக்கு கூட வழங்கவில்லை.
* மத்திய அரசின் நிதி உதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் துவக்கப்படும். மத்திய அரசு நிதி உதவியுடன், ஏழு புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலிடெக்னிக் கூட புதிதாக துவக்கப்படவில்லை.
* திருவண்ணாமலையில், ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை இதற்கான கட்டுமானப் பணிகளை துவக்கவில்லை.
* வரும் நிதியாண்டில், தமிழக மின்வாரியம், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி திட்டங்கள் மூலம், 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என வழக்கம் போல அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாக மின் உற்பத்தித் திட்டங்கள் ஏதும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
* வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப் பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கும் திட்டம், 1,800 கோடி ரூபாயில், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டியதோடு சரி. பணிகள் துவக்கப்படவில்லை.
* யானைக்கால் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்றவற்றை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத உதவித் தொகையாக, 400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கும் பணி ஏதும் துவக்கப்படவில்லை.இதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

எங்க தெளிவு படுத்தறது என்ன ஆச்சின்னு இப்ப பார்ப்போமா மக்கா ! -------------------------------------------------------------------------------------------------

தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது.ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு செலவிடாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.


மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம், 6,000 கோடி ரூபாய் உள்பட வணிகவரி வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதுதவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும்.


இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய்.மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.


இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

முழிச்சி இப்பவாவது பொழச்சிக்கோ தமிழா:

-------------------------------------------------------

நான் முன்னமே சொன்னது போல தான் நம்மள மொத்தமா IPL ஏலம் மாதிரி நடத்தி தமிழன மொத்தமா நல்ல விலைக்கு அடி மாடா எந்த நாட்டுக்கு விக்க போறாங்களோ தெரியல . அதுலயும் கருணா குடும்பம் பினாமி மூலமா முயற்சி செஞ்சாலும் செய்வாங்க . தமிழ் நாட்ட கருணா குடுபத்துக்கு ஏற்கனவே பாகப்பிரிவினை பண்ணிட்டாரு . இப்ப மிச்ச மீதி இருக்கறது மக்கள் மட்டுமே நம்மளையும் விலை பேசி வித்துடுவாங்க. முழிச்சி இப்பவாவது பொழச்சிக்கோ தமிழா அம்புட்டுதேன்

.......

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது


பெரம்பலூர், பிப்.2: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் பெரம்பலூரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியாவும் கைது செய்யப்பட்டனர்.இந்தச் செய்தி பரவியதும் ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரில் அவரது ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதைத் தடுக்க வந்த போலீஸார் மீது வன்முறைக் கும்பல் கற்களை வீசித் தாக்கியது.இந்த வன்முறையை அடுத்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வன்முறைக் கும்பல் டயர்களைப் போட்டு தீவைத்துக் கொளுத்தியதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை: முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ராசா கைது விவகாரம் திமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது ராசாவின் திடீர் கைது திமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2ஜி அலைகற்றை விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ராசாவை தற்காத்து பேசி வந்த கருனாநிதி, அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் திமுகவிலிருந்து நீக்கப்படுவார் என கூறியிருந்தார். தற்போது ராசா கைது செய்யப்பட்டுள்ளதால், திமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

சில நாட்களுக்கு முன் டில்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேசி சென்னை திரும்பிய முதல்வர் கருனாநிதி, வரும் தேர்தலில் காங்கிரஸூடனான கூட்டனி சுமூகமாக அமையும் என்ற நம்பிக்கை தெரிவித்து இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டதை சிபிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2008ல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சில நிறுவனங்களுக்கு சாதகமாக ராசா செயல்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் படி ராசா மீது வழக்கு தொடரப்படும். ராசா உள்ளிட்ட 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

உசுப்பேத்தி உசுப்பேத்தி மக்களை ரணகளமாக்காதீர்கள் !!!.


இந்த மாதிரியான எழவெடுத்த விளம்பரங்கள் காட்சி ஊடகங்கள் , கமர்சியல் வெப் சைட்கள் தான் செய்யறாங்கன்னு பார்த்த , இந்த வியாதி ப்ளோக்ல நுழைந்திருக்கு ( ஒரு ப்ளோக்ல பார்த்தேன் , மன்னிக்கவும் ப்ளாக் பெயர்போட விரும்பல ) .

எல்லாத்துக்கும் சக்கரை போதுமென்றால் எதுக்கு உழைக்கணும் , எதுக்கு அரசாங்கம் , எதுக்கு கடவுள் கண்றாவி , ராணுவம் , வயதுக்கு சோறு , குழந்தை வேற கிடைக்குமாம் எச்சரிக்கை நண்பர்களே , இவர ராஜபக்சேவுக்கு
வசிய சக்கரை குடுத்து தமிழன காப்பாற்ற சொல்லுங்க, தமிழன் அவருக்கு கோயில் கட்டி கொண்டாடுவான் . எதுக்கு அடுத்த நாடு விசா பிரச்சணை இருக்க போகுது (அட அதுக்கும் ஏதாவது சக்கரை இருக்கும் கொஞ்சம் காசு அதிகமா இருக்குமோ) நம்ம நாட்டு மீனவன காப்பாத்துங்க .இல்ல தமிழன இலவசத்தில் இருந்து காப்பாற்றுங்கள் (கலைஞ்சர் குடும்பதுகிட்ட இருந்து தமிழ் நாட்ட). எதுக்குங்க அவ்வளவு பெருசா , விவாகரத்து நடக்காம , புரியாத நோய்களிலிருந்து, அட்லீஸ்ட் கொசுகளிடம் இருந்தாவது காப்பாற்றுங்கள்(சக்கரை கொடுத்துதான்) .........

கல்லு போட்டாங்க , வாஸ்து , ஜோசியம் , தாயத்து , இப்ப சாமி படம் போட்ட டாலர் , இப்படி மக்களின் நம்பிக்கையோட விளையாடும் கிழ்த்தரமான வியாபாரங்களை (பணம் சம்பாதிக்கும் உத்திகளை ) தயவு செய்து விடுங்கள் .
ஏற்கனவே இலவசம் , இலவசமுன்னு பாதி மயக்கம் , சரக்கு தட்டு பாடு இல்லாம குடிக்க , அட குடிச்சிட்டு ரோட்டுல விழுந்த கூட தவந்துகிட்டே போய் மட்டையாகும் வரை குடிக்கலாம் கடைஎல்லா இடங்களிலும் திறதிருக்கு . நிறைய பேர் பல மயக்கத்துல இருக்காங்க இதுல சக்கரை வேறவா பாஸ் .
ஏற்கனவே நிறைய பேர் இந்த வேலைய செய்யராங்கோ . பதிவுல போட்டு உசுப்பேத்தி உசுப்பேத்தி மக்களை ரணகளமாக்காதீர்கள் ..
நான் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன் ........

வாந்தி : மக்கள் யோசிக்காத வரை இந்த மாதிரி விளம்பரங்களும் , அதை நம்பிஏமாறும் மக்களும் இருக்கத்தான் செய்வார்கள்....
...

தமிழக மீனவர் பற்றிய குறும் படம் ( video )

Towards Dawn - English (26 Minutes) from வினவு on Vimeo.