news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

நான் உயிருடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஊழலுக்கு எதிரான இந்த நெருப்பு அணையாது.- ஹசாரே


புதுடெல்லி, ஆக. 19-

லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை ராம்லீலா மைதானத்தை விட்டு நகரமாட்டோம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

திகார் சிறையிலிருந்து வெளியே வந்த ஹசாரே, அங்கிருந்து காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு வந்தார். அங்கு அவர் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் இந்தியா கேட் அருகில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு சென்று, அங்கிருந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் ஹசாரேவை வாழ்த்தி கோசமிட்டனர். அவர்களிடையே உற்சாகமாக தேசியக்கொடியைப் பிடித்து ஆட்டி பாரத் மாதா கி ஜெய் என்று கோசமிட்டார் ஹசாரே. பின்னர் ஆதரவாளர்களிடையே அவர் பேசினார். கொட்டும் மழையில் நனைந்தபடி ஹசாரே பேசியதாவது:-

ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தொடங்கி விட்டது. நாட்டைப் பீடித்துள்ள ஊழலை விரட்டும் வரை நாம் ஓயக் கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். ஒட்டுமொத்த நாடும் முற்றிலும் மாற வேண்டும். சாதாரண மக்களுக்காக நாம் இன்று அமைதி வழியில் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம். அந்த இலக்கை அடையும் வரை நாம் போராடுவோம். இந்த நாட்டின் மிகப் பெரிய பலமே இளைஞர்கள்தான். அவர்கள் விழித்தெழுந்தால் ஊழலை எளிதில் விரட்டலாம். லோக்பாலுக்காக மட்டுமே நாங்கள் போராடவில்லை. நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்காவும் போராடுகிறோம். நான் உயிருடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஊழலுக்கு எதிரான இந்த நெருப்பு அணையாது.

கடந்த நான்கு நாட்களில் நான்கு மூன்று கிலோ எடை குறைந்து விட்டேன். நான்கு நாட்களாக உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறேன். இருந்தாலும் எனது தெம்பு போய் விடவில்லை. உங்களது ஆதரவுதான் எனது பலமே. நாட்டை களவாடி வரும் ஊழல்வாதிகளுக்கு இனியும் நாம் இடம்தரக் கூடாது. நாம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. ஆனால், நமது லட்சியத்தை அடையும் வரை போராடப் போகிறோம். ஜன் லோக்பால் மசோதாவை அரசு ஏற்கும் வரை நான் இந்த இடத்தை விட்டு அசையப் போவதில்லை. இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.புதன், 17 ஆகஸ்ட், 2011

மக்களின் எழிச்சி மண்டியிட்டது மத்திய காங்கிரஸ் அரசு


மக்களின் உரிமையை அடக்கும் விதமாக நடந்து கொண்டு வரும் மத்திய அரசு அன்னா ஹசாரேவை கைது செய்து விட்டால் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று நினைத்த மட மத்திய அரசு , இப்போது அதன் மூலம் மிக பெரிய பாடம் கற்று கொண்டிருகின்றது. இன்று அன்னா ஹசாரே கைது செய்தது குறித்து நேற்று நடந்து நாடாளுமன்ற அமளி காரணமாக இன்று பிரதமர் இறு அவைகளிலும் விளக்கம் அளித்தார் .

அதில் முன்னுக்கு பின் முரணான கருத்துகளையும் , டெல்லி போலீஸ்சார் நடந்து கொண்டது சரி என்ற போக்கிலும் பேசினார் . மீண்டும் எதிர் காட்சிகள் எதிர் குரல் கொடுத்தனர் . மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கின்றனர் என்றார் அருண் ஜேட்லி . உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னதாகவே கைது செய்தது மட்டுமல்லாமல் தேவை அற்ற நிபந்தனைகளை விதித்து முடக்க பாத்திருகின்றனர். ஆனால் மக்கள் இன்று தெருவில் இரங்கி போராட துவங்கி விட்டனர் . ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் அன்னா ஹசாரே ஆதாரவு என்று இந்தியா முழுக்க மட்டும் அல்ல அமெரிக்க லண்டன் வாழ் இந்தியர்கள் மாணவர்களிடமும் ஆதரவும் ஊழலுக்கு எதிரான கோஷங்களும் வெளிபடுகின்றன.

இன்று மாலை மத்திய அரசு டெல்லி போலீசார் மூலம் பலமுறை பேச்சு நடத்தியும் அன்னா ஹசாரே சிறையில் இருந்து விடுதலை ஆக மறுத்து விட்டார் . நிபந்தனை அற்ற உண்ணாவிரத அனுமதி அளித்தால் மட்டுமே வெளியில் செல்ல முடியும் என்று திட்ட வட்டமாக தெரிவித்து விட்டத்தாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர் .

மக்களின் எழுச்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது, இது ஒரு மாதிரிதான் ஆனால் உண்மையான ஆதரவு கட்டு கட்காத நாட்டு மக்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் அன்னா ஹசாரே பெற்றிருகின்றார் . காரணம் நாட்டில் பெருக்கி கிடைக்கும் சகித்து கொள்ள முடியாத அரசியல் ஊழல் , லஞ்சம் இதன் மூலம் மிக பெரிய அளவில் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருகின்றனர் அதன் வெளிப்பாடே இன்று அன்னா ஹசாரே அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிக பெரிய ஆதரவு . இனியும் மக்களை ஏமாற்ற நினைத்தால் கிடைக்க போடாது உங்களுக்கு அரசியலில் மிக பெரிய மரண அடி என்பதை எழுதி வைத்துகொள்ளுங்கள் .

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய தி.மு.க. எம்.பி . இளங்கோவனும் , திருச்சி சிவாவும் அன்னா ஹசரேவுக்கு எதிராக பேசினார் . நாடாளுமன்றத்தை வெளியில் இருப்பவர்கள் நிபந்திக்க முடியாது அதை அனுமதிக்க கூடாதாம் . எந்த ஒரு தனி மனிதனும் அதை செய்ய முடியாது . என்பதை அறியாத சிறு பிள்ளைகளை போல் பேசி திரிகின்றனர் இந்த ஊழல்வாதிகள். அன்னா ஹசாரே மட்டும் உங்களை எதிர்கவில்லை ஒட்டு பொத்த இந்தியாவே எதிர்க்கின்றது .

நாடாளுமன்றம் என்பது என்ன தெரியுமா உங்களுக்கு மீண்டும் ஞாபக படுத்துகின்றோம் மக்களாகிய நாங்கள் உங்களை ஒட்டு போட்டு எங்கள் பிரதநிதியாகவே அனுப்பிஉள்ளோம் என்னமோ நாட்டளுமன்ரம் உங்கள் பாட்டன் . சொத்தை போல பேசுகின்றீர்கள் வெட்கமாக இல்லை . அது இருந்தால் இப்படி எனலாம் பேசி இருக்க மாட்டீர்கள். மக்களுக்காகவே நாடாளுமன்றம் தவிர நீங்கள் கொள்ளை அடிக்க அல்லது கூடி குமியடிக்க அல்ல . நினைவில் வைத்துகொள்ளுங்கள் . அது நீதி துறையோ அல்லது அரசு துறையோ உங்களை நிர்வாகம் செய்யவே நாங்கள் உங்களை நியமித்துள்ளோம் . எங்கள் வரி பணமே உங்கள் சம்பளம் செலவு ஆடம்பர பங்களா என்ன அளித்துள்ளோம் , நீங்கள் மக்களின் வேலைக்காரர்களே ! . மக்கள் தான் உங்களுக்கு எஜமானர்கள் தெரியுமா ? முட்டாள்களே ! .

முன்பை போல் அல்லாமல் மக்கள் இல்லை, புரிந்து கொள்ளுங்கள் அரசியல் முட்டாள்களே !

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

காங்கிரஸ் கை கூலியாக மாறிய டெல்லி போலீசார்......


அன்னா ஹசாரே போராட்டத்தை ஒடுக்க என்ன வெல்லாம் செய்யலாம் என்று டெல்லி போலீசார் முயற்சி செய்து அதை வெறி கரமாக நிகழ்த்தியும் காட்டி உள்ளனர் . பினனால் இருந்து ஆட்டி வைப்பது காங்கிரஸ் அரசு இது அனைவருக்கும் தெரிந்த உண்மை . நெருப்பை அணைப்பதை விட்டு விட்டு ஊதி விட்டிருக்கின்றனர் . அது அனைவரிடமும் திப்பிழம்பாக மாற்றியுள்ளது . அது கண்கிரஷ்சை அழிக்காமல் விடாது ........... கர்வத்தின் உச்சத்தில் தலை கால் தெரியாமல் ஆட்டம் போட்டு கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் விரைவில் வீழ்த்த படுவது உறுதி .

டெல்லி: டெல்லியில் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதாக அன்னா ஹஸாரே அறிவித்திருந்த நிலையில் அதிகாலையிலேயே அவரையும், அவரது குழுவினரையும் டெல்லி போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட ஹசாரே டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

லோக்பால் வரைவு மசோதா விவகாரம் தொடர்பாக இன்று தனது 2வது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக ஹஸாரே அறிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசும், காங்கிரஸும், மத்திய அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவருக்கு ஜந்தர் மந்தர் பகுதியில் இடம் தர காவல்துறையும் மறுத்தது. கடைசியில் 20க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்து ஜெயப்பிரகாஷ் நாராயண் பார்க்கில் உண்ணாவிரதம் இருக்க அனுமதித்தது.

இருப்பினும் இவற்றில் 6 நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று அன்னா குழுவினர் அறிவித்தனர். அவற்றை ஏற்க மாட்டோம், மீறுவோம் என்று கூறியிருந்தனர்.

அனுமதி திடீர் வாபஸ்:

இதையடுத்து உண்ணாவிரதத்திற்குக் கொடுக்கப்பட்ட அனுமதியை டெல்லி காவல்துறை திரும்பப் பெற்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென அன்னா ஹஸாரே, அவரது குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி, வழக்கறிஞர் சாந்தி பூஷன் உள்ளிட்டோரை போலீஸார் திடீரென கைது செய்து அப்புறப்படுத்தி பெயர் குறிப்பிடாத இடத்திற்குக் கொண்டு சென்று விட்டனர்.

நிபந்தனைகளை ஏற்க மறுத்து சிறை சென்ற ஹசாரே:

பின்னர் அவரை சொந்த ஜாமீனில் செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால், அதற்கு சில நிபந்தனைகளை விதித்தனர். அதன்படி 144 தடை உத்தரவை மீற மாட்டேன், கூட்டம் கூட்ட மாட்டோம் என்று அவர் உத்தரவாதம் தர வேண்டும் என போலீசார் கூறினார். ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுத்துவிட்டார். இதையடுத்து சிறப்பு மாஜிஸ்திரேட் முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவரை 7 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜி்ஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கல்மாடி அடைபட்டுள்ள இடத்தில் ஹசாரே:

அதே போல அவரது குழுவைச் சேர்ந்த கிரண் பேடி, அரவிந்த் கெஜகிவார், மனோஜ் சிசோதா உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அன்னா ஹசாரே திகார் சிறையின் பிளாக் 4ல் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு தான் காமன்வெல்த் ஊழலில் கைதாகியுள்ள சுரேஷ் கல்மாடி, ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

ராசாவுடன் அரவிந்த் கெஜரிவால்:

அரவிந்த் கெஜரிவால் பிளாக் 1ல் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு தான் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, டிபி ரியாலிட்டி அதிபர் ஷாகித் உசேன் பல்வா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அரவிந்த் கேஜ்ரிவால் தொலைபேசி மூலம் நிருபர்களிடம் பேசுகையில், எங்களைக் கைது செய்துள்ளனர். எங்கு எங்களைக் கொண்டு செல்கின்றனர், அடைக்கப் போகின்றனர் என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. அதுகுறித்து போலீஸ் தரப்பில் எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றார்.

அமைதி காக்க அன்னா ஹஸாரே கோரிக்கை

கைது செய்யப்பட்ட அன்னா ஹஸாரே பேசுகையில், மக்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும். அமைதி காக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான நமது போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்னா ஹஸாரே தடையை மீறி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று அறிவித்ததால்தான் அவரையும், அவரது குழுவினரையும் போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று டெல்லியின் பல பகுதிகளில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை மீறி ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா பகுதியில் அன்னாவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அருகில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்திற்குக் கொண்டு சென்றனர்.

டெல்லியில் மகாத்மா காந்தி நி்னைவிடம் உள்ள ராஜ்காட், டெல்லி கேட் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் போலீஸார் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

அன்னா கைதைத் தொடர்ந்து டெல்லியில் பதட்டம் நிலவுகிறது. அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் பெருமளவில் குவிந்து வருகின்றனர். ஜெயப்பிரகாஷ் நாராயண் பார்க்கைச் சுற்றிலும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

என்னைக் கைது செய்தாலும், சிறையில் என்னுடைய உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தார் அண்ணா ஹசாரே. திட்டமிட்டபடி அவரது உண்ணாவிரதம் தொடருமா என்பது தெரியவில்லை.

இந் நிலையில் கைது செய்யப்பட்ட ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்னா போராட்டத்தை முறியடித்த டெல்லி காவல்துறையின் 'சிறப்பு' ஏற்பாடுகள்:

அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி காவல்துறையினர் மிகவும் விரிவான முறையில் திட்டமிட்டு முறியடித்துள்ளனர்.

அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்த போலீஸார் அவற்றை அன்னா ஏற்க மறுத்து விட்டதால் அதிகாலையில் வைத்துக் கைது செய்து விட்டனர்.

மேலும் ஹஸாரே குழுவினர் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா மட்டுமல்லாமல் டெல்லியின் பல முக்கிய இடங்களிலும் 144 தடையை விதித்துள்ளனர். இதனால் எங்குமே போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஷாஹீத் பூங்கா, சாந்திவன், ராஜ்காட், ஜவஹர் லால் நேரு மார்க், அருணா ஆசப் அலி மார்க், டெல்லி கேட், திலக் மார்க் என முக்கிய இடங்கள் அனைத்திலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

2 சிறப்பு நீதிபதிகள் நியமனம்:

மேலும் கைது செய்யப்படுவோரை கோர்ட்டுக்குக் கொண்டு சென்று ஆஜர்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்க இரண்டு சிறப்பு மாஜிஸ்திரேட்டுகளையும் டெல்லி போலீஸார், அரசிடமிருந்து கேட்டுப் பெற்றனர்.

இதுகுறித்து உள்துறை முதன்மைச் செயலாளருக்கு போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து 2 மாஜிஸ்திரேட்டுகள் இதற்காகவே ஒதுக்கப்பட்டனர்.

ஹஸாரே உள்பட போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் அனைவரும் இவர்கள் முன்புதான் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடை நடுங்கும் மத்திய காங்கிரஸ் அரசு . வீறு கொள்ளும் அன்னா ஹசாரே

நாம ஊர்ல பேச்சி வழக்குல தொடைநடுங்கி பயலுகளா அப்படின்னு கேலி பேசுவதை கேட்டிருகின்றோம் . ஆம் இன்று மத்திய காங்கிரஸ் அரசின் நிலையும் இதுதான் . மக்கள் வாய்விட்டு கைகொட்டி கேலி செய்கின்றனர் மத்திய அரசின் செயல் பாடுகளை நினைத்து .

அன்னா ஹசாரே என்றாலே அனைத்து காங்கிரஸ் காரனுகளுக்கும் உச்ச போவதாக கேள்வி . எதுக்கையா இப்படி நடுங்குகின்றீர்கள் மடியில் கனமிருந்தால் தானே உங்களுக்கு பயம் வரும் . மடியில் இல்ல தலையில் வைத்து கூட சுமக்க முடியாத அளவுக்கு ஊழல் ஊழல் எதை எடுத்தாலும் ஊழல் .

என்னய்யா உங்க கிட்ட கேட்டாங்க நீங்க கொண்டு வர மசோதா எங்களுக்கு உடன் பாடு இல்லை என்று பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் முடியாமல் போகவே உண்ணாவிரம் என்ற அகிம்சை வழியை கடை பிடித்தார்கள் . அதற்கு முறைப்படி அனுமதியும் கேட்டார்கள் . நீங்கள் அதை அனுமதிக்காமல் நிபந்தனை என்ற பெயரில் தடுக்க பாக்கிறீங்க .... எதற்கு பயம் மக்கள் விழித்து கொண்டார்கள் எங்கே நமது லப்பா டான்ஸ் ஆடுமோ ! என்ற பயத்தில் என்ன வெல்லாம் செய்றீங்க .. யாரவது ஊழல எதிர்த்தால் உடனே அவங்கள எப்படியாவது ஊழல் வாதியாக சித்தரிக்க முயல்வது . அது உங்களால் முடியாது என்பது வேரு கதை .

காங்கிரஸ் அரசே ஒரு எச்சரிக்கை உங்களுக்கு . நீங்கள் போடும் ஒவ்வொரு முட்டு கட்டையும் மிக பெரிய எழுச்சியை தான் கொடுக்க போகின்றது . நாடு தெருவில் இறங்க இன்னும் பல பேர் தயங்குகின்றனர் . அவர்கள் தாயகத்தை நீங்கள் விரைவில் போக்கி அவர்களையும் நாடு தெருவில் இரங்கி உங்களை அடியோடு இல்லாமல் செய்ய போகின்றதா இல்லையா பாருங்கள் .

இன்று தொடங்கும் உன்ன விரதம் ஏதோ அன்னா ஹசாரே அவருக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கும் இடையில் நடக்கும் தெரு சண்டை அல்ல . நமது நாட்டை அடியோடு சுரண்ட துடிக்கும் காங்கிரஸ்சுக்கும் அதை எதிர் கொண்டு தடுக்க முயலும் இந்தியர்களின் முயற்சி உங்கள்ளல் முடியாததை ஒருவர் முன்னின்று நடத்துகின்றார் என்றால் அதற்கு நீங்கள் கை கோர்த்து வலு சேர்த்து . ஊழலிலே மலிந்து நாட்டை தவறான திசையில் கொண்டு செண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் சுக்கு அடிக்கும் எச்சரிக்கை ஒலியாகவும் . மக்களின் குரல் வலையை நெரிக்க துடிக்கும் கரங்களை ஒடிக்கும் இயக்கமாகவும் வீறு கொண்டு எழ அன்னா ஹசாரே அவர்கள் கரங்களோடு இணைந்து நாட்டை காப்பாற்ற முயல்வோம் துடித்து துள்ளல் போட்டு வாரீர் வாரீர் !!! .


அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு :
நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டதால், அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு டெல்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வற்புறுத்தி காந்தியவாதியும்,சமூக ஆர்வலருமான அண்ணா ஹசாரே நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்.

டெல்லியில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஹசாரேவின் இந்த போராட்டம் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியதால், இந்த போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் 3 நாட்கள் மட்டுமே அனுமதி என்பது உள்பட 22 நிபந்தனைகளை டெல்லி காவல்துறையினர் அன்னா ஹசாரே குழுவிற்கு விதித்த னர்.

5
ஆயிரம் பேர் மட்டுமே உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும்; 3 நாட்கள் மட்டும்தான் அனுமதி அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனைகளை ஹசாரே குழுவினர் ஏற்கவில்லை.

இந்த 6 நிபந்தனைகளை ஏற்காததால் டெல்லி காவல்துறையினர் உண்ணா விரத போராட்டத்துக்கு இன்று அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் தடையை மீறி அன்னா ஹசாரே குழுவினர் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஹசாரே குழுவினர் ஏற்கனவே டெல்லியில் குவிந்துள்ளனர்.

இதனிடையே இன்று டெல்லியில் சுதந்திர தினக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மன்மோகன் சிங்,ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் தீர்வாகாது என்றும், அதனால் ஊழல் ஒழிந்து விடாது என்றும் கூறினார்.

இதற்கு ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள கிரண்பேடி பலடி கொடுத்துள்ளார்.

"
பிரதமர் உணர்வற்றவர் என்று தாக்கியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகிறது.ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை கொண்டு வர இந்த அரசு தவறிவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வாய்ப்பை செய்ய தவறிவிட்டது. இனியும் இந்த அரசை நம்ப நாங்கள் தயாரில்லை.

இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.பிரதமரின் பேச்சு இறுதியான தீர்ப்பு போல் இருக்கிறது.அவரது லோக்பால் மசோதா மக்களுக்கு எதிரானது. பிரதமர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர். அரசின் லோக்பால் மசோதாவை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை" என்றார்.

புதன், 10 ஆகஸ்ட், 2011

கொலைகார இரத்த கட்டேரிக்கு கடும் கண்டனம்
அரசியல் பாகு படு மறந்து ஒட்டு மொத்தமாக கொலை காரனை கண்டிப்போம் . எதற்கும் தகுதியற்ற கொலைகார மிருகம் தமிழ் மக்களின் முதன்மை பிரத நிதியாக நியமிக்க பட்டுள்ள முதல்வரை விமர்சிப்பது மிகவும் கண்டிக்க தக்கது . ஏன் மவுனம் சாதிக்கின்றனர் தமிழர் அமைப்புகள் தெரிய வில்லை . ஒரு வெறி பிடித்த சொறி நாய் பார்த்து கொக்கரித்து கொண்டிருகின்றது அதை பார்த்து இந்தியா வேடிக்கை பார்க்கும் என்றால் தமிழகத்தில் இருக்கும் ஏழு கோடி தமிழ் மக்களுக்கு என்ன மரியாதை. குறைத்த பட்சம் தமிழகமாவது பொங்கி எழுந்திருக்க வேண்டாமா ? அவர்கள் கட்சிகாரர்கள் மிக பெரிய ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்ய வேண்டாமா ? . ஏதோ ஒரு சில இடங்களில் உருவ பொம்மை எதித்தோம் என்று இருப்பது இழுக்கு . ஒரு சுண்டக்காய் நாடு நமக்கு அறிவுரை சொல்லிகொண்டிருக்கு . செவுட்டு வட இந்தியா அரசியல் வாதிகளும் பப்பூன் பிரதமரும் வாய் மூடி மவுனம் சாதிக்கிறனர் . நான் என் தமிழினம் சார்பாக அந்த இரத்த வெறி பிடித்த இந்த காட்டேரி கொத்த பச்சே நாயை வன்மையாக கண்டிக்கின்றேன் . தமிழ் வலை தள நண்பர்களே ! இது தமிழனுக்காக தன்மானத்திற்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் தயங்காதீர்கள் .கண்டன பதிவுகளை போடுங்கள் என்று உங்களை தயவு கூர்ந்து வாஞ்சையுடன் கேட்டு கொள்கிறேன் . நாடு பிடிக்க நய வஞ்சர்கள் போடும் போட்டியில் மஞ்ச குளிக்கும் கோமாளி பயல்கள் எல்லாம் நம் தமிழினத்தை இழித்து பேசுவது மிக பெரிய அவமானம் . இவனை பேச விட்டு வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் அரசு இதன் பலனை மெகா கடுமையாக அனுபவிக்க வேண்டும் . மறந்து விடாதே ! தமிழா ! வருகின்றது ஒரு வாய்ப்பு மனதில் நிறுத்தி தண்டிக்க தயாராகி விடு .

செய்தி :
டெல்லிச ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்று சர்வாதிகாரி ராஜபக்சேவின் தம்பியும், ஈழ மக்களை சரமாரியாக சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டவருமான கோத்தபயா ராஜபக்சே விஷமத்தனமாக கூறியுள்ளான் .

இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே டிவிக்கு அவன் அளித்துள்ள பேட்டியில்,

தமிழக மீனவர்களுக்கு முதலில் அட்வைஸ் கூறட்டும்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் ஜெயலலிதா கூறியுள்ள கருத்துக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. இது காரணமே இல்லாதது. இலங்கையில் வசிக்கும் மக்கள் அவர்கள், சிங்களர்களோ அல்லது தமிழர்களோ, அவர்கள் இலங்கையர்கள். எங்களது மக்களைப் பற்றி மற்றவர்களை விட நாங்கள்தான் அதிகம் கவலைப்படுகிறோம்.

உண்மை ரியாமல் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இலங்கைத் தமிழர்களின் நலன் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால், முதலில் அவர் தனது மாநில மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுறுவக் கூடாது என்று தடை செய்ய வேண்டும். இலங்கை கடற்பகுதியில் ஊடுறுவி பெருமளவில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்கள்தான். இலங்கைத் தமிழ் மீனவர்களின் உரிமைகளை அவர்கள் தட்டிப் பறித்து வருகிறார்கள்.

எனவே முதலில் தமிழக மீனவர்களை ஜெயலலிதா தடுத்து நிறுத்த வேண்டும். தனது பகுதிக்குட்பட்ட தமிழர்கள் குறித்து அவர் கவலைப்படட்டும். இதைத்தான் அவர் முதலில் செய்ய வேண்டும்.

தனது வேலையை ஜெயலலிதா கவனிக்கட்டும்

தனது வேலையை ஜெயலலிதா முதலில் கவனமாக செய்யட்டும். இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் தமிழ் மக்களின் நிலைமை குறித்து அவர் கவலைப்படத் தேவையில்லை.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு குறித்து நாங்கள் உண்மையான கவலையில் உள்ளோம். அதுகுறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இவர்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், சர்வதேச விசாரணையை அவர் கோரக் கூடாது. அதனால் என்ன பயன் கிடைத்து விடும்?

சர்வதேச விசாரணையைக் கோருவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. சர்வசே தலையீடால் இந்தப் பிரச்சினை எப்படித் தீரும். இது இறையாண்மை மிகக நாடு.நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. சர்வதேச சமுதாயத்திற்கு இங்கு வேலையில்லை. அப்படி ஒரு தலையீடு தேவை என்பது தவறான எண்ணமாகும்.

உலகில் சில நாடுகள் வேண்டுமானால் இந்தக் கோரிக்கையுடன் வலம் வருபவர்களுக்கு ஆதரவாக செயல்படலாம். ஆனால் பிற நாடுகள் அனைத்தும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளன. ரஷ்யா முதல் சீனா வரை, ஏன், இந்தியாவே கூட எங்களுக்குத்தான் ஆதரவாக உள்ளன. பாகிஸ்தானும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் எங்களுக்கு உதவி வருகின்றன. அதுதான் உண்மையான சர்வதேச சமுதாயம். உலகில் உள்ள சிலர் கூடி பேசிவிட்டால் அது சர்வதேச சமுதாயமாக மாறி விடாது.

தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க முடியாது

தமிழ் மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்கள் வழங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் கூறலாம்.

தற்போது உள்ள இலங்கை அரசியல் சட்டம், அனைவரும் இணைந்து வாழத் தேவையான அம்சங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது. இதை விட அதில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றே நான் கருதுகிறேன். இப்போது விடுதலைப் புலிகள் இல்லை, எனவே வேறு எந்த மாற்றமும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.

இதை விட இவர்களுக்கு (தமிழர்களுக்கு) வேறு என்ன செய்து விட முடியும். இப்போதும் கூட நாங்கள் உள்ளாட்சித் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். விரைவில் மாகாணத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. புதிய முதல்வர்கள் வரவுள்ளனர். அமைச்சர்கள் வரவுள்ளனர். எனவே இதைத் தாண்டி வேறு எந்த அதிகாரமும் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.

தமிழர்களுக்கு நிறைய செய்து விட்டோம்

நாங்கள் தமிழ் மக்களுக்கு நிறையச் செய்து விட்டோம். எனவே இதற்கு மேலும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார் கோத்தபயா.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

மறு பிறவி எடுத்த சமச்சீர் கல்வி


ஒரு வழியாக சமச்சீர் பல பாடுபட்டு மிதிபட்டு வெற்றிகரமாக வென்றிருகின்றது.

மாற்று கருத்தில்லாமல் அரசியல் காரணத்தால் தான் இவ்வளவு இழுபறி நடைபெற்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது

ஜெயலலிதாவின் பிடிவாதம் அரசுக்கு நிறைய கெட்ட பெயரை வாங்கி கொடுத்தது . அதை மேலும் கெடுத்து கொள்ளாமல் ஜெயலலித்தா சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல் படுத்துவதாக அறிவித்துள்ளது கொஞ்சம் நிம்மதியை கொடுக்கின்றது .

இனியும் இதை போன்ற இக்கட்டான விசயங்களில் நிதானமாக யோசித்து நல்ல நடுநிலையாளர்களின் ஆலோசனை பெற்று தலை இடவேண்டும் . எவ்வளவு இழப்பு . எவ்வளவு நேர, பணம் விரையம் .

கலைஞ்சர் இதை தனக்கு கிடைத்த வெற்றியாக பாவித்து ,அவர்கள் கட்சிகாரகள்

அரசியல் பண்ணி கொண்டிருகின்றனர் . பாவம் அவர்களும் என்ன செய்வார்கள் . தினம் தினம் யார் யாரு உள்ள போவோமோ என்ற பீதியிலையே காலத்தை ஓட்டுகின்றனர் .

அரசு இதுவரை ஏற்பட்ட கால தாமதத்தை எப்படி ஈடு செய்ய போகின்றது என்று தெரியவில்லை . சிலர் சொல்வதை போல் கால நாட்களை நீட்டிப்பதால் அடுத்த கல்வி ஆண்டு வழக்கங்கள் பாதிப்படையும் . அதை விட சிலபஸ் சில குறைத்து மாணவர்களுக்கும் சுமை ஏற்றாமல் முடிந்த வரை இந்த ஆண்டு காலத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் .

இதை போலவே . தனியார் கல்வி கட்டண கொள்ளை தடுக்கவும் பொது நல வழக்குதான் போட வேண்டும் போல . அதை எந்த அரசும் கண்டு கொள்வதாக தெரிய வில்லை . அதேபோல் தனியார் பள்ளிகள் சில மத்திய பட திட்டத்திற்கு கட்டாய படுத்து பெற்றவர்களை ஏமாற்றி மாற்றுகின்றனர் . இதையும் கருத்தில் கொள்ள வேண்டும் . முக்கியமாக கல்வி தரத்தை மேன்படுத்தி . பள்ளிக்கூடங்களின் தரங்களை சீர் படுத்தி . ஆசிரியர்களையும் , பள்ளிக்கூடங்கள் நடக்கும் முறைகளையும் முறையாக கண்காணித்து . ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் அதிகமாக மேன்பட்ட தரத்தில் கட்டிட வசதிகளை ஏற்ப்படுத்தி , அரசு கல்வியில் தனது கவனத்தை முறையாக செலுத்தினால் முதல்வரை மக்கள் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் .


தமிழ்நாட்டில் உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், பி.எஸ். செளஹான் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் கொண்ட பெஞ்ச் செவ்வாய்க்கிழமை இதுதொடர்பான தீர்ப்பை வழங்கியது.

தமிழக அரசு இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

25 காரணங்கள்

மூன்று நீதிபதிகளின் சார்பில், தீர்ப்பை வாசித்த நீதிபதி பி.எஸ். செளஹான், உயர்நீதிமன்ற உத்தரவு சரியானதுதான் என்பதை விளக்கி, 25 காரணங்களை தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிமன்றம், இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

"மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது அடிப்படைக் கல்வி. இன்று அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அதில் தலையிடுவது தவறு"

இந்திய உச்சநீதிமன்றம்

நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 25 காரணங்களில், எந்தச் சட்டத்தையும், அதன் விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல், வெறும் ஆட்சி மாற்றம் காரணமாக மாற்றக் கூடாது என்றும்,

அரசியல் கட்சிகள் விருப்பு, வெறுப்புடன் செயல்படக்கூடாது என்றும் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது அடிப்படைக் கல்வி. இன்று அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அதில் தலையிடுவது தவறு என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேல்முறையீடுகள்

முந்தை திமுக அரசால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றதாக இருப்பதால், அதை இந்த ஆண்டு அமல்படுத்துவதை ஒத்திவைக்கும் வகையில், புதிதாகப் பொறுப்பேற்ற அதிமுக அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது.

அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக, தனியார் பள்ளிகளும் முறையீடு செய்தன. அதற்கு எதிராக, மாணவர் மற்றும் பெற்றோர் சார்பில் பல்வேறு கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அரசியல் போட்டி

சமச்சீர் கல்வித் திட்டம் அவசர கோலத்தில் கொண்டுவரப்பட்டிருப்பதால், அதில் பல குளறுபடிகள் உள்ளதாகவும், பாடங்களில் தரமில்லை என்றும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத்தான் அந்தச் சட்டமே கொண்டுவரப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த அரசு சமச்சீர் கல்விக்கு எதிரானதல்ல என்றும், அதில் உள்ள தவறுகளைக் களைந்து அமல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், சமச்சீர் கல்வித் திட்டத்தில், 9 கோடி பாடப்புத்தகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, அரசுக் கிடங்குகளில் கிடப்பதாகவும், முந்தைய அரசால் கொண்டுவரப்படது என்ற அரசியல் காரணத்துக்காகவே அரசு அந்தத் திட்டத்தை எதிர்ப்பதாகவும் மாணவர் மற்றும் பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாட்டில், மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிகுலேஷன் உள்பட நான்கு வகையான கல்வித் திட்டங்கள் உள்ளன. அவரை அனைத்தையும் ஒரே பாடத்திட்டமாக்கி, அதன் தரத்தை உயர்த்தி, சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டதாக, முந்தைய அரசு அறிவித்திருந்தது.

ஜெயலலிதா அறிவி்ப்பு

<span title=

தீர்ப்பை ஏற்கிறோம்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, இந்தக் கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு, இடதுசாரிக் கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளன. பல இடங்களில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்ததாக செய்திகள் வந்துள்ளன.

சனி, 6 ஆகஸ்ட், 2011

எடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும்

முயற்சி செய்து பாருங்க , எடை குறையலனா என்ன கேக்க படாது ...............
எப்படியோ இப்படி எல்லாம் யேசிக்க வேண்டி இருக்கு ........ நல்லாத்தான் யோசிக்கராங்கையா ......
செக்ஸ் விரும்பிகளுக்கு இனி இதை சொல்லியே காலாத்தை ஓட்டலாம் .....

வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதோ, டிரெட்மில்களில் ஏறி கால் வலிக்க வலிக்க ஓடுவதோ தேவையே இல்லை. உங்களது உடலில் கூடிப் போய் விட்ட கூடுதல் எடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும்- செக்ஸ் உறவுக்காக.

'எக்சர்ஸைஸை' விட 'செக்ஸர்ஸைஸ்' சிறந்த உடற் பயிற்சி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உடல் எடையைக் குறைக்க உடல் உறவே சிறந்த வழி என்ற எண்ணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருக்கிறதாம். நாள் முழுக்க கடுமையான வேலை பார்த்து விட்டு வந்தாலும் இரவில் உறவு கொள்வதற்கு பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக இருக்கிறார்களாம்- அது உடல் எடையைக் குறைத்து, மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் என்பதால்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 76 சதவீத பெண்கள், உடல் எடைக் குறைப்புக்கு செக்ஸர்ஸைஸ் சிறந்த வழி என்று கருதுகிறார்களாம்.

மூன்றில் இரண்டு பங்குப் பெண்கள், ஜிம்முக்குப் போய் உடற் பயிற்சி செய்வதை விட சிறந்தது செக்ஸ் உறவு என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக தினசரி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தாங்கள் தயார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கெர்ரி மெக்லோஸ்கி என்பவர் எழுதியுள்ள 'The Ultimate Sex Diet' என்ற புத்தகத்தில், அரை மணி நேர உடல் உறவின் மூலம் 150 முதல் 250 கலோரிகள் வரைக் குறைவதாக கூறியுள்ளார். உறவில் ஈடுபடுவோரின் செயல்பாடுகளைப் பொறுத்து சில நேரங்களில் இது 350 கலோரிகள் வரை கூட கூடுகிறதாம்.

முத்தமிடுவதன் மூலம் 200 கலோரிகள் வரை குறைகிறது என்ற தகவலையும் கெர்ரி தெரிவித்துள்ளார்.

எந்த ஜிம்முக்கும் போகாமலேயே இயற்கையான முறையிலேயே நமது உடல் எடையைக் குறைத்து நம்மை டிரிம்மாக வைத்துக் கொள்ள முடியும். செக்ஸ் என்பது உடல் ரீதியான இன்பத்துக்கு மட்டும் நமக்கு உதவுவதில்லை. மாறாக நம்மை புத்துணர்ச்சியுடனும், இளமையுடனும், வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது. எனவே செக்ஸ் என்பதை உடல் மகிழ்ச்சிக்கான விஷயமாக மட்டும் கருதாமல் அதை பல விதங்களிலும் நமக்கு உதவும் ஆசானாக கருதி அணுகினால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை என்பது கெர்ரியின் கருத்து.

'அதை' அறுத்து வந்த பெண்!

டாக்கா: பங்காளதேஷில் கற்பழிக்க முயன்றவனின் மர்மஉறுப்பை அறுத்து, கையில் எடுத்து, போலீசாரிடம் புகார் அளித்த பெண்ணால், பரபரப்பு ஏற்பட்டது.

பங்காளதேஷ் நாட்டின், டாக்காவில் உள்ள ஜஹலாகத்தி என்ற புறநகர் பகுதியை சேர்ந்த 40 வயதுள்ள பெண், அவரது வீட்டில் இரவில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை 40 வயது உள்ள ஒருவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை கற்பழிக்க முயன்றுள்ளார்.

அப்போது, வீரமாக செயல்பட்ட அப்பெண் கையில் கிடைத்த கத்தியை கொண்டு, கற்பழிக்க வந்த நபரின் மர்மஉறுப்பை அறுத்துவிட்டார். இதில் வலிதாங்க முடியாத அந்த நபர் ஒடிவி்ட்டார். தான் அறுத்த உறுப்பை பிளாட்டிக் பையில் சுற்றிய அந்த பெண், ஜஹலாகத்தி போலீஸ் நிலையத்திற்கு சென்று, உறுப்பை காட்டி புகார் அளித்தார்.

மர்மஉறுப்பு அறுக்க நபர் 5 குழந்தைகளுக்கு தகப்பன், அறுத்த பெண் 3 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. கற்பழிக்க முயன்ற நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டார். குற்றவாளியின் காயம் குணமடைந்து, அவன் உடல்நலம் தேறிய உடன் கைது செய்யப்படுவான், என போலீசார் தெரிவித்தனர்.

ஊழலுக்கு எதிரான இந்தியா, விழிப்புணர்வு


பாட்னா : பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதா பலவீனமாக இருப்பதாகக் கூறி, காந்தியவாதி அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் அதன் நகல்களை, பீகார் மாநிலம், பாட்னா ஐகோர்ட் எதிரே நேற்று எரித்து போராட்டம் நடத்தினர். லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வகை செய்யும், லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வர வேண்டும் என, அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினர் பல மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த மசோதா வரம்பிற்குள் பிரதமர், நீதித் துறையில் உயர் பதவி வகிப்போர், எம்.பி.,க்கள் ஆகியோரையும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.


ஆனால், பார்லிமென்டில் நேற்று முன்தினம் அரசு தாக்கல் செய்த லோக்பால் மசோதாவில், பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான விதிமுறைகளுடன் கூடிய லோக்பால் மசோதாவை அரசு தாக்கல் செய்யாமல், பலவீனமான மசோதாவை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மகாராஷ்டிர மாநிலம், ரலோகான் சித்தியில், அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும், லோக்பால் மசோதாவின் நகலை நேற்று முன்தினம் தீ வைத்து எரித்தனர். இதேபோல், நாட்டின் பல இடங்களிலும் லோக்பால் மசோதாவின் நகல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில், பீகார் மாநிலம், பாட்னா ஐகோர்ட் அருகே, அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் லோக்பால் மசோதாவின் நகல்களை எரித்து நேற்று போராட்டம் நடத்தினர்.


அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஏராளமானோர், "ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற பதாகைகளை கையில் ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு பாட்னா ஐகோர்ட் அருகே வந்தனர். ஐகோர்ட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலவீனமான லோக்பால் மசோதா மீது தங்களுக்கு உள்ள எதிர்ப்பை காட்டும் வகையில், எதிர்ப்பாளர்கள், அதன் நகல்களுக்கு தீ வைத்து எரித்து, கோஷங்கள் போட்டு போராட்டம் நடத்தினர்.


"ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் குமார் கூறுகையில், "பலவீனமான லோக்பால் மசோதாவை மத்திய அரசு பார்லிமென்டில் தாக்கல் செய்ததன் மூலம், பொது வாழ்வில் தற்போதுள்ள ஊழலை ஒழிக்க முடியாது. கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, பலமான லோக்பால் மசோதாவால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்' என்றார்.


மற்றொரு ஒருங்கிணைப்பாளர் ரத்னேஷ் சவுத்ரி கூறுகையில், "ஹசாரேவின் ஆதரவாளர்கள் நாளை(இன்று) மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு சென்று, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை மாணவர்களிடம் செய்வர்' என்றார்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

வெட்கம் , வெட்கம் இனியும் நீ காங்கிரஸ்சை ஆதரிக்கின்றாயா ? தமிழா


நெஞ்சு கொதிக்குது , கைகள் துடிக்கின்றது ஏதாவது செய்வோமா குறைந்த பட்சம் இரண்டு அடியாவது கன்னத்தில் ஓங்கி அடிக்கலாமா ? . முடியவில்லை என்ன செய்ய அதிகாரம் கையில் இருக்கும் மமதை, திமிர் , ஆணவம் , ஈனத்தனம் , தமிழனை இழிச்சவைதனமாய் நினைக் வைத்த பேடித்தனம் . இன்னும் எந்தனை கெட்ட வார்த்தைகள் உலக மொழிகளில் இருக்குமோ அத்தனையும் இந்த மனகொட்ட மன்மோகன் சிங் தலைமையிலான கேடுகெட்ட அரசு . தமிழனை மட்டுமா ? சீரழித்தது இந்தியாவை அனைத்து நாடுகளிலும் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறது .

கோமாளி என்று நினைத்த கருங்காலி மன்மோகன் சிங் இப்போது தான் தான் சுய முகத்தை வெளி காட்டு கின்றார். வாழ்க இந்தியா ஜனநாயகாம் , என்று ஒழியுமோ காங்கிரஸ் கட்சி . உலகமே இலங்கையை கண்டித்தும் , ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்க சொல்லி கொண்டு இருக்கும் போது இந்த கருகாளி பயல்கள் மட்டும் எப்படி வெண்சாமரம் வீசுரானுங்க அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் ( அது சாரி கடவுள் அப்படின்னு ஒருத்தர் இருந்த இப்படி நடந்திருக்குமா ? ) கமல் தசாவதாரத்தில் கடைசியில் இதை தான் அழகாக சொல்லி இருப்பார் . கடவுள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று .

எப்படி இந்த கொடுங்கோலன், கொலை வெறியன் , இரத்த காட்டேரி ராஜபக்சே வை மறந்தும் மன்னிக்கின்றனர் . இறந்தவனை தமிழன் என்று கூட நீங்கள் பார்க்க வேண்டாம், ஒரு மனித இனமாக கூட பார்க்கவில்லை . என்பதே அனைவரது ஆதங்கம் . அவர்கள் நாட்டு முன்னாள் அதிபரே ! கண்ணீர் விடும் அவலம் நடந்திருகின்றது என்றால் கொடுமையின் உச்சத்தை அனைவரும் உணர வேண்டும் . நாடாளுமன்றத்தில் இரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு நடகின்றது . இதை விட வெட்ககேடு என்ன வேண்டும் தமிழகம் இதுவரை தான் எதற்கும் குரல் கொடுக்க வில்லை கொடுமையின் தாக்கத்தை விடியோக்கள் மூலம் கண்ட பிறகுமா தயங்குகின்றது இந்த குள்ளநரி கூட்டம் .

ஸ்டாலின் கைது நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் . மறியல் , கண்ணாடி உடைப்பு , நிலா அபகரிப்பு செய்தவனை கைது செய்தால் அதற்கும் துடிக்கும் உடன்பிறப்புகளே ! உங்கள் தொப்புள் கொடிகள் அறுத்து சின்ன பின்னமாக்க பட்ட போடும் , பின்பும் என்ன செய்து கொண்டிருகிண்றீர்கள் . நாடு அறியும் உலகம் அறியும் . உங்கள் கிழட்டு தலைவன் தினமும் இன்னும் அறிக்கை ( தானே எழுதி வடிக்கும் காவியங்கள் ) விட்டுக்கொண்டு தான் குடுபத்தை மட்டுமே இன்னமும் எண்ணி கொண்டிருக்கும் தலைவன் என்ன செய்து கொண்டிருக்கின்றான் . யோசித்து வெட்கப்பட்டு ........................ இது அனைத்து தமிழின விரேதிகளுக்கும் பொருந்தும் .