news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

செவ்வாய், 30 நவம்பர், 2010

பிடித்தது உங்களுக்காகமவ்ஸ் சை படத்தின் மீது வைத்து விளையாடி பாருங்கள் நல்லாவே நீங்க சொல்றத கேட்கும்

கரு.பழனியப்பனின் புதிய ஏற்பாடு வலைப்பூ எழுத்தாளர்க­ளுக்கு வரவேற்பு

மிகப்பெரும் புத்தக சந்தையாக மாறி வருகிறது வலைப்பூ தளங்கள்! அரசியல், Karu.Palaniyappanசினிமா, இலக்கியம், நகைச்சுவை, மருத்துவம் என்று இங்கு எழுதப்படாத விஷயங்களே இல்லை என்கிற அளவுக்கு இங்கு கொட்டிக்கிடக்கிறது அறிவும் சிந்தனையும் அனுபவங்களும்.

சமூகத்தின் மிகப்பெரும் எழுத்தாளர்களாக கருதப்படும் மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஞாநி, ஜெயமோகன், சாருநிவேதிதா உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களும் தங்களுக்கென்று வலைப்பூ வைத்திருக்கிறார்கள். வலைப்பூக்களில் எழுதப்படும் விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற அளவுக்கு வளர்ந்திருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

குறிப்பாக கேபிள் சங்கர், உண்மை தமிழன், அதிஷா, சிபிசெந்தில்குமார், தண்டோரா, பட்டர்ஃபிளை இன்னும் ஏராளமான வலைஞர்கள் எழுதுகிற விமர்சனங்களுக்கு பதிவுலகத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இவர்கள் ஒரு படத்தை 'மொக்கை' என்று எழுதிவிட்டால், 'நீங்க சொல்லிட்டீங்க... டிக்கெட்டையே கிழிச்சு போட்டுட்டேன்' என்று பின்னு£ட்டம் எழுதி டைரக்டரையும் தயாரிப்பாளரையும் அதிர வைக்கிறார்கள் வாசகர்கள்.

இந்த நிலையில் இந்த வலைஞர்களுக்காக தனி ஷோ ஏற்பாடு செய்து புதிய அத்தியாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். இவர் இயக்கிய 'மந்திரப்புன்னகை' படத்தின் பிரத்யேக காட்சி வலைப்பதிவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் திரண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வலைப்பூ எழுத்தாளர்களை முன்னதாக வந்திருந்து வரவேற்றிருக்கிறார் கரு.பழனியப்பன். இந்த ஐம்பது பேரில் மிக முக்கியமான ஒருவரும் வந்திருந்தார். அவர்... எழுத்தளார் ஞாநி!

ஓ போடுறாரா பார்க்கலாம்...

மைனா

மைனா திரைப்பட விமர்சனம்
Mynaa

லவ்வுக்கும் லாக்கப்புக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு அல்லாடும் ஒரு காதலின் கதை! கழுவி துடைத்து வைத்த ஆகாயத்தில், தன்னிச்சையாக சிறகடிக்கும் இந்த ஒரு ஜோடி மைனாவை மறக்க இன்னும் சில நாட்கள் பிடிக்கும். சுருக்கமாக சொன்னால் இந்த படம் சிலேட்டுகளுக்கு மத்தியில் ஒரு கல்வெட்டு!

மகிழ்ச்சி

மகிழ்ச்சி திரை விமர்சனம்
Magizhchi

கோடம்பாக்கத்தில் மழை மாதிரி கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது படங்கள். ஆனால் அவற்றில் சில படங்கள் தவிர, மற்றெல்லா படங்களும் மண்டைக்குள் இறங்கி மனசுக்குள் போவதில்லை. 'மகிழ்ச்சி' கண்களையும் மனசையும் பிழிய பிழிய நனைக்கிறது! படம் முடிந்து வெளியே வரும்போது கைகள் அனிச்சை செயலாக போன் செய்யும்.... அவரவர் அக்கா தங்கைகளுக்கு!

திங்கள், 29 நவம்பர், 2010

செய்திகள் ஒரு பார்வை (அரசியல் நையாண்டி)

தமிழர் கட்சிப் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை எஸ்.எம். கிருஷ்ணா
ஆமாம் ,சந்திச்சிட்டா மட்டும் என்னா நடந்திட போகுது ! , ஆவறு கல்லா கட்ட போனாரு முடிஞ்சது , எதுக்கு இவனுங்கள பாக்கானுன்னு நினச்சிருப்பரு விடுவீங்கால , இங்க இருந்தாலும் எதையாவது குடையரீங்க ....

விக்கிலீக்ஸ் விவகாரத்தில் பொறுத்திருந்து முடிவு: இந்தியா

அமெரிக்காவிடமிருந்து ( ஆணை )பேப்பர் வந்த உடனே நாங்க கூட படிக்கலப்பா அப்படியே பிரஸ்சுக்கு அனுப்பிடறோம் , சரிதானே ! . கொய்யால இவனுங்களா என்னைக்கு முடிவெடுத்தானுங்க உடனே சொல்ல , மன்மோகன் சிங் பாத்ரூம் போறதுக்கு கூட அமெரிக்கா , சோனியாவிடமிருந்து அனுமதி வாங்காம போறது இல்லையே பா ..........

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்: மீராகுமார் அழைப்பு

எங்க எல்லாருக்கும் MP வாரியா பிரிச்சி குடுக்கறதா இருந்த சொல்லுங்க மூடிக்கிட்டு ( வாய ) இருப்போம் . நீங்க அடிச்சி மொத்தமா வச்சுக்குவீங்க நாங்க என்ன இ. வா . யங்களா . எத்தன கோடி கொடுப்பீங்க பேசி முடிச்சிக்கலாம் . ( பிஜேபி எங்களுக்கு எல்லாம் இவ்வளவு திறமை இல்லைபா எதோ கொஞ்சமா ஆயிரகணக்கா (கோடிதாங்க ) அடிச்சிகிட்டு இருந்தோம் . )

போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல்-திமுகவின் தொமுச வெற்றி ...
உடன் பிறப்பே இது ஒரு சாம்பிள் தான் அடுக்கி வச்சிருக்கோம் இறக்கிட மாட்டோம் . இல்ல இருக்கவே இருக்கு ஓட்டு மெசுன்னு சும்மா பூந்து விளையாடுட மாட்டோம் . அறிவிச்சதையே மாத்திடுவோம் , அதனால பில்டப்பா மட்டும் விட்டுடாதீங்க .மீடியா எல்லாம் நம்ம கிட்ட தான் உடன்பிறப்பே !!!!!

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ஜாதி சாயம் பூச முயற்சி: கிருஷ்ணசாமி
என்ன சின்ன புள்ள தனமா இருக்கு , வேணுன்னா நாங்க 40 ஆண்டு கால நண்பர்கள்ளுன்னு சொல்லுவோம் , இல்லனா தேடி கண்டு பிடிச்சுடுவோம்மில்ல ஜாதிய ............

பசுமைப் புரட்சிக்கு முக்கியக் காரணம் 3 தமிழர்கள்: ப. சிதம்பரம்
அதான் மொத்தமா போட்டு தள்ளிட்டோம் , இனி எவன் எந்த புரட்சி பன்றானுங்கனு பாக்கறேன் . நான் பண்ணாத புரட்ச்சியா தோத்ததையே ஜெயச்சதா மத்தி காட்டி இருக்கேன் ............

வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் ஊழல்? ம.பு.க. விசாரணை

தாங்கலடா சாமீ , ஒரே காமெடியப்பா நாங்க தள்ளு படி பண்றதே அதுக்கு தானே ?
போய் பொழப்ப பாருங்க .............

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதி மன்றம் விதித்த உத்தரவு , தலை சுற்றும் ஜல்லிக்கட்டு நடத்தும் கிராமங்கள்


''ஜல்லிக்கட்டஒவ்வொரு இடத்திலும் நடத்துவதற்கூ. 2 லட்சத்துக்ககுறையாமலடெபாசிடசெய்வேண்டும். ஜல்லிக்கட்டநடத்துவோரபிராணிகளவாரியத்திடமஅனுமதி பெவேண்டும். அந்தந்மாவட்ஆட்சியரிடமசுமார் 2 மாதங்களுக்கமுன்னரஜல்லிக்கட்டநடத்அனுமதி பெவேண்டும். தமிழஅரசதேர்வசெய்யும் 129 இடங்களிலமட்டுமபோட்டி நடத்வேண்டும்'' என்ற நிபந்தனைகளவிதித்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற நீதிபதிகளஆர்.ி. ரவிச்சந்திரன், டத்தஆகியோரஅடங்கிய அம‌ர்வு கட‌ந்த 25ஆ‌ம் தே‌தி தீர்ப்பளித்தது.

தமிழரின் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல்’ என்று என்று குறிப்பிடப்பட்டு, சித்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து தமிழரின் பாரம்பரிய விளையாட்டாக இருந்துவருவது ஜல்லிக்கட்டு. ஆ‌ண்டு தோறு‌ம் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பொ‌ங்கலை மு‌ன்‌னி‌ட்டு ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌‌ட்டிகள் நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது. ஜ‌‌ல்‌லி‌க்க‌‌ட்டு எ‌ன்றாலே அல‌ங்காந‌ல்லூ‌‌ர், பாலமேடு ஜ‌ல்‌லி‌க்க‌ட்டுப் போட்டிகள்தான் ந‌ம் ‌‌‌நினைவு‌க்கு வரு‌‌ம். ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு ‌எ‌ன்றாலே ‌கிராம‌ப்புற‌ங்க‌ளி‌ல் வீரத்துடன் கூடிய ரசனை பொங்கும். ஜல்லிக்கட்டைக் காண ஆ‌யிர‌க்கண‌க்கான ம‌க்க‌ள் கு‌வி‌ந்து ‌விடுவ‌ர்.

இத‌ற்காக மதுரை மாவட்டம் அல‌‌ங்காந‌ல்லூ‌ர், பாலமேடு, ‌தி‌ண்டு‌க்க‌ல், தே‌னி, அவ‌னியாபுர‌ம் என 25‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து ‌‌‌‌சீ‌றிபாயு‌ம் காளைக‌ள் கல‌ந்து கொள‌்ளு‌ம். காளைகளை அட‌க்க இள‌ம் காளைய‌ர்க‌ள் த‌ங்களை தயா‌ர் படு‌த்‌தி‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். அதுமட‌்டு‌மி‌ன்‌றி த‌ங்க‌ள் காளைகளை யாரு‌ம் அட‌க்‌‌‌கி ‌விட‌க்கூடாது எ‌ன்பத‌ற்காக அத‌ன் உ‌ரிமையாள‌ர்க‌ள் த‌‌ங்களது காளைக‌ளி‌ன் கொ‌ம்புகளை ‌‌‌‌சீ‌றி‌வி‌ட்டு பளபள‌ப்புட‌ன் வை‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள்.

எ‌ன்னதா‌ன் கொ‌‌ம்புகளை ‌‌‌‌‌சீ‌‌‌வி ‌வி‌ட்டு த‌ங்க‌ள் காளைகளை வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் போ‌ட்டி‌‌ப்போ‌ட்டு‌க் கொ‌ண்டு வா‌லிப‌ர்க‌ள் காளைகளை அட‌க்க பா‌யு‌ம் கா‌ட்‌சி மெ‌ய் ‌சி‌லி‌ர்‌க்க வை‌க்கு‌ம். இ‌தி‌ல் பல இளை‌‌‌ஞ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உ‌யி‌ர்களை இழ‌க்கு‌ம் அபாயமு‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் ‌இ‌ந்த ‌வீர ‌‌விளையா‌ட்டு‌க்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்தியாவின் உச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌ம் ‌சில க‌ட்டு‌ப்பாடுகளை ‌வி‌தி‌த்து போ‌ட்டியை நட‌த்த அனும‌தி அ‌ளி‌த்து வருகிறது.

த‌மிழக‌த்‌தி‌‌ன் ‌பல பகு‌திக‌ளி‌ல் ஆங்காங்குள்ள குல தெய்வங்களின் கோயில் விழாவோடு ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு‌ ‌நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌‌கி‌ன்றன. இப்போது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்றம் விதித்துள்ள ‌நிப‌ந்தனையா‌ல் ஜல்லிக்கட்டு மட்டுமின்றி அந்தக் கோ‌யி‌ல் ‌திரு‌விழா‌க்க‌ளும் ந‌ட‌த்‌த‌ப்படுமா எ‌ன்பது‌ம் ச‌ந்தேக‌ம்தான‌்.

ஜ‌‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌‌ட்டியை நட‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் விதித்துள்ள கடுமையாக ‌‌‌நிப‌ந்தனைகள்‌தமி‌ழ்நாடு ‌வீர‌விளையா‌ட்டு பாதுகா‌ப்பு சங்கத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

''கட‌ந்த ஆ‌ண்டு நடைபெ‌ற்ற ஜ‌ல்‌லி‌க்க‌ட்டி‌ன்போது ‌உச்ச நீ‌திம‌ன்றம் விதித்த ‌நிப‌ந்தனைக‌ள் முழுவதுமாக ‌பி‌ன்ப‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன. அதையும் மீறி காளைக‌ள் து‌ன்புறு‌த்த‌ப்ப‌ட்டதாக ‌பிரா‌ணிக‌ள் நலவா‌ரிய‌ம் கூறுவதை ஏ‌ற்க இயலாது'' எ‌ன்று ‌அ‌ந்த ச‌ங்க‌‌ம் கூ‌றியு‌ள்ளது.

2 ல‌ட்ச ரூபா‌ய் மு‌ன்பண‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம் எ‌‌ன்ற ‌நிப‌ந்தனையா‌ல் ப‌ல்வேறு ‌கிராம‌ங்க‌ள் கட‌ந்த ஆ‌ண்டு ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டிகளை நட‌த்‌த‌வி‌ல்லை. 129 இட‌ங்களு‌க்கு மே‌ல் த‌மிழக‌த்த‌ி‌ல் போ‌ட்டிகளை ந‌ட‌த்த‌க் கூடாது எ‌ன்ற பு‌திய ‌‌நிப‌‌ந்தனையா‌ல் எ‌தி‌‌ர்கால‌த்‌தி‌ல் ஜ‌ல்‌லி‌க்க‌ட்டே இ‌ல்லாம‌ல் போகு‌ம் ‌நிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது என்று அச்சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு தமிழரின் பண்பாட்டோடு இணைந்து ஒரு வீர விளையாட்டு. இதில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பிராணிகள் நல வாரியம் கூறுவதும், ஜல்லிக்கட்டு விளையாட்டின் நுணுக்கங்களைப் புரியாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிராணிகள் நல வாரியம் கூறுவதை ஏற்றுக்கொண்டு நிபந்தனை விதிப்பதும், தமிழரின் பண்பாட்டில் நீதிமன்றத்தின் அத்துமீறிய தலையீடாகவே தமிழக மக்கள் கருதுகின்றனர்.

கோயில்களில் பிராணிகள் உயிர் பலி கொடுப்பது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அது இந்திய மக்களில் பல்வேறு வகுப்பினரின் உணர்வு ரீதியிலான விடயம், அதில் தலையிட முடியாது என்று கூறிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டு பற்றி விவாதம் வந்தபோது மட்டும், அது 21வது நூற்றாண்டிற்கு ஒவ்வாத விளையாட்டு என்று கூறினார். அப்போதே தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், இது எங்களுடைய வீர பண்பாட்டின் வெளிப்பாடு, இதுவும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வோடு தொடர்புடைய ஒரு பாரம்பரியம்தான். எனவே இதில் மத்திய அரசு தலையிடுதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தால், அப்போதே மத்திய அமைச்சர் பின்வாங்கியிருப்பார். ஆனால் தமிழ்நாட்டின் மீனவர்களை சிங்கள கடற்படையினர் சுட்டுக்கொல்வதை தடுத்து நிறுத்த முடியாத தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நமது பண்பாட்டைக் காக்கவா போராடுவார்கள்?

இந்த நிலையை தமிழர்கள் ஒன்று சேர்ந்து தடுத்த நிறுத்த முற்பட வேண்டும். இல்லையெனில் தமிழரின் வீர விளையாட்டு இல்லாமல் போய்விடும்.

"விக்கிலீக்ஸ்' வெளியிட்ட யு.எஸ். வில்லங்கங்கள்!


டவுசர் கடைசில அமெரிக்காவுக்குதான் கிழிஞ்சிருக்கு ,

ஊருக்கு நாட்டாம பண்றேன்னு இப்படி அலுமல் பண்ணி தான் நாட்டமை பதவிய தக்க வாசிக்குது . எவ்வளவு நாள்தான் எல்லாம் தாங்கும் , தான் வீட்ட பாக்காம அடுத்தவன் வீட்ட பார்த்தா இப்படிதான் ( இப்போது இருக்கும் அமெரிக்க நிலைமை )ஆகும் . இன்னும் வடிவேலு மாதிர்யே பில்டப்பிலேயே காலத்த ஒட்டுறானுங்க . நம்ம ஒருகாரனுங்களுக்கு அவன் பாக்கெட்டுக்கு அவன் வீட்டுல இருந்து எடுத்து கொடுத்தாலும் கவலை இல்லை , ஆனால் அவனுங்க (அரசியல் வாதிகளுக்கும் ,அரசாங்க அதிகாரிகளுக்கும் )பக்கெட்டு மட்டும் எப்பவும் பிதிங்கிகிட்டே இருக்கனும் . இப்படி எல்லாம் வெளியில விஷயம் லீக்காகலன்ன நினைக்கவே பயமா இருக்கு , நம்மள ( பொது மக்களை ) செவ்வாய் கிரகத்துக்கு நாடு கடதிடுவானுங்க .

அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் ஏற்கனவே பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது பிரபல "விக்கிலீக்ஸ்" இணையதளம்.


இந்நிலையில் தற்போது ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் உளவாளிகளாக செயல்பட்டு தங்கள்நாட்டு தலைமைக்கு திரட்டி அனுப்பிய ரகசிய தகவல்களையும் அம்பலப்படுத்தி அமெரிக்காவை வெலவெலக்க வைத்துள்ளது.

பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைத்தது, பாகிஸ்தானின் அணு ஆயுத மூல‌ப்பொரு‌ட்களை கை‌ப்ப‌ற்ற மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சி படுதோல்வியில் முடிவடைந்தது என "விக்கிலீக்ஸ்" வெளியிட்டுள்ள வில்லங்கள் ஏராளமாக அணிவகுக்கின்றன.

சுமா‌ர் 150 உலக நாடுக‌ளி‌‌ல் செய‌ல்ப‌ட்டு வரு‌ம் அமெ‌ரி‌க்க தூதர‌க‌ங்க‌ள் நா‌‌ள்தோறு‌ம் வா‌‌ஷி‌ங்ட‌னி‌ல் உ‌ள்ள தலைமை அலுவலக‌த்‌தி‌ற்கு அ‌ளி‌த்து வரு‌ம் தகவ‌ல்களை கை‌ப்ப‌ற்‌றியே, ‌"வி‌க்‌கி‌லீ‌‌க்‌ஸ்" அவற்றை தமது இணையதள‌த்‌தி‌ல் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின்

ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.

உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது "விக்கிலீக்ஸ்"

அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.

அதேசமயம், அல் காய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக்கழித்ததாம்.

மேலும் பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்ட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் "விக்கிலீக்ஸ்" அம்பலப்படுத்தியுள்ள தகவலில் இடம்பெற்றுள்ளது.

சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம்." பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்" என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

வேலைக்கு ஆட்கள் தேவை!


We required MALE / FEMALE experienced Tally accountant for our Chennai Branch.
Capable to handle Tally accounts independently.
Salary Rs.6500.00 PF,ESIC,Bonus,Yearly increment as applicable.
Working hours 10.30 AM to 6.30 PM.
We are stationery distributor, having H.O. in Mumbai.
Interested candidates please mail your resume immediately to

sanghvichennai108@gmail.com

Contact info.
SANGHVI CORPORATION
Door No.2F, Second Floor, 6, Umpherson Street,
(Opp.Hotel Saravana Bhavan), N.S.C.Bose Road,
Chennai - 600 108.

Mr.K.Ramachandran
Manager
Mobile - 93835 12521.

சென்னை நண்பர்கள் உங்களது தளங்களில் பகிருமாறு கேட்டு கொள்கிறேன்!, ரீடரில் பகிருதலும் தேவைப்படுபவர்களுக்கு உதவலாம்!

தன்னம்பிக்கை அற்றவர்கள் தயவு செய்து இந்த விடியோவை பார்க்கவும் . உலகில் முடியாது என்பது எதுவும் இல்லை, விடா முயற்சி என்பது வேண்டும் ..............

அவலம் இன்னும் தீரல ......

புதுநகரில் தொடர்ந்து சீரழிந்த சாலை , சாக்கடை , கொசுக்கள் தொல்லை , செங்குன்றம் கழிவு நீர் ஓடிக்கொண்டிருக்கும் அவலம் இன்னும் தீரல ......

சனி, 27 நவம்பர், 2010

செய்திகள் ஒரு பார்வை

சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், விலகிக் கொள்கிறோம்-கருணாநிதி

நெஞ்சில் தில் இருந்த தனியா நில்லுங்களேன் பார்ப்பான் . டப்பா டான்ஸ் ஆடிடாது .!
எல்லாம் ஒரு பில்டப்பு தான் ( நாய் கொலைச்ச பதுலுக்கு கொலைக்கறது இல்ல அது போலத்தான் )

தேர்தல் கூட்டணி ஜனவரியில் அறிவிப்பு: ராமதாஸ்

இது வரைக்கும் எவனும் பக்கத்துல சேக்கல , கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் ! எவனாவது கடை நேரத்துல சிக்குரானான்னு , (ரொம்ப ரணகளமா ஆயீடுச்சிப்பா ! இப்பவே கண்ணா கட்டுதே ! )

அமெரிக்காவில் அட்டர்னி ஜெனரலாகும் தமிழ்ப்பெண்

கேட்கவே சந்தோசமா இருக்குபா ! எப்படியே இப்படியாவது தமிழன் முன்னேறினா சரி

வீட்டுக் கடன் வழங்கியதில் ரூ.42750 கோடி மோசடி கண்டுபிடிப்பு
கொய்யால நாட்டுல என்ன தாண்ட நடக்குது
தினம் ஒரு தகவல் மாதிரி , தினமும் ஒரு ஊழல் மோசடி , அதுவும் நினைக்க முடியாத சைபர்கள் போடற அளவுக்கு . நாம தாண்ட வல்லரசு
சத்தியமா இந்த தே பசங்க சரியா இருந்த இந்நேரம் நன்மை நாடு வல்லரசு தண்டா . இப்படியும் இந்த நாடு தாங்குதே ! ( ரொம்ப நல்லவங்கப்பா நாட்டு மக்கள் , நாங்களும் எவுவளவு நாளுக்கு தான் நல்லவங்க மாதிரியே நடிக்கறது )

குடும்பத்தில் சண்டை ஏன்? நடிகர் விஜயகுமார் பேட்டி
என்னத பெருசா இருக்க போகுது . கலை சேவை செய்து , சுருட்டின பணம் கஷ்ட பட்டவங்களுக்கு இல்லாம விளக்கு புடிச்சவங்களுக்கு போனா ( வயிறு எரியுது இல்ல , ஏங்ககொஞ்சம் பொறுங்க தல(கருணாநிதி )
மண்டைய போட்ட இருக்கு பாரு மெகா சிரியல் அத விடவா, மக்களுக்கு ரோபோவ விட பெரிய படம் காத்திருக்கு )

ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது ...- கருணாநிதி

( பாவம் அவருக்கு பயம் தலைக்கு மேல போய் ரொம்ப நாளாச்சி பாவம் அப்பப்ப அவருக்கே சந்தேகம் வருதாம் நாம எந்த கட்சில இருக்கோமுன்னு , அவருக்கு பழைய ஞாபகம் ''ஐயோ கொல்றங்கோ'' ( கனவு ) தான் அதிகம் வருத்தம் .

யாழ்பாணத்தில் தமிழர்களுக்கு புதிய வீடு: எஸ்.எம்.கிருஷ்ணா இன்று ...

இதுல எத்தன ஆயிரம் கோடி ( மன்னிக்கவும் லட்சம் கோடி ) கூட்டா அடிச்சீங்க அவனுங்களுக்கு எவன் செத்த என்ன கல்லறை கட்டியாவது பணம் பார்த்திடனும்.

சர்ச்சைக்குரிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிடக்கூடும் ...

எவன் எவனுக்கு டவுசர் கிழிய போகுதுதோ .......

போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை - தமிழீழ விடுதலைப்புலிகள்


நவ 26, 2010
மாவீரர்நாள் அறிக்கை
26-11-2010
தமிழீழம்

எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது.

சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர்புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழிமூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக்குழந்தையின் வழித்தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப்புதல்வர்களையும், வீரப்புதல்விகளையும் தமிழினம் ஆராதிக்கும் இந்த நாட்களில் தனியரசுப் பாதையில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை வேண்டி நாமனைவரும் உறுதிபூண்டு நிற்கின்றோம்.

மரணம் என்பது மாவீரர்களுக்கு உரித்தானதன்று. அக்கினிப் பிழம்பாக, தீமைகளைச் சுட்டெரிக்கும் எரிமலையாக தமிழீழ தேசம் முழுவதும் வியாபித்து நிற்கும் மாவீரர்களை சாவு தீண்டுவதில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், மண்ணுக்குள் விதையாகவும் நித்தியத் துயில் கொள்ளும் எங்கள் வீரமறவர்கள் சாவை வென்ற சரித்திரநாயகர்கள்.

எமது மாவீரர்களின் வாழ்வும், வரலாறும் வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டது. எமது மாவீரர்களின் அடியும், முடியும் எவராலும் அளவிட முடியாதது. எமது பெருந்தலைவனின் வழிகாட்டலில் களமாடி எமது மாவீரர்கள் புரிந்த சாதனைகள் எண்ணிலடங்காதது. அடங்கிக் கிடந்த தமிழினத்திற்கு முகவரியளித்த எமது தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து எமது மாவீரர்கள் புரிந்த ஈகங்களின் அர்த்தபரிமாணங்கள் மனிதகுல வரலாற்றில் என்றுமே நீடித்து நிலைத்துநிற்கும்.

காலநதியின் ஓட்டத்தில் உலக ஒழுங்கு கட்டவிழ்ந்து செல்கின்றது. புதுப்புது முடிச்சுக்களுடன் கட்டவிழும் உலக ஒழுங்கில் ஓயாத பயணமாக எமது விடுதலைப் போராட்டமும் முடிவின்றித் தொடர்கின்றது. எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் இருபது ஆண்டுகள் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசு எதிரியால் சிதைக்கப்பட்டு, இருண்ட பூமியாக இன்று எமது மண் மாற்றப்பட்டுள்ளது. அடங்காப்பற்றாக வணங்காது தலைநிமிர்ந்து நின்ற வன்னிமண் இன்று அந்நிய ஆக்கிரமிப்பின் உறை விடமாக அழிவுற்றுக் கிடக்கின்றது. ஈழத்தமிழினத்தின் வரலாற்றுப் பெருமைகூறும் யாழ்ப்பாணமும், திருகோணமலையும், மட்டக்களப்பும், அம்பாறையும் இன்று தமது வரலாற்றுப் பெருமைகளை இடிபாடுகளுக்குள் தொலைத்து நிற்கின்றன.

தமிழினத்தின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் பௌத்த விகாரைகளும், சிங்களப் பண்பாட்டுச் சின்னங்களும் முளைவிடுகின்றன. தமிழ் நிலங்களை புத்தர் சிலைகளும், அந்நிய ஆக்கிரமிப்புச் சின்னங்களும் ஆட்சிசெய்கின்றன. எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், வளங்களும் அந்நியர்களிடம் விலைபேசப்படுகின்றன. பேச்சுரிமை இழந்து, உயிர்வாழும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய இனம் என்ற வரையறைக்குள் ஈழத்தமிழினத்தை சிங்களம் பகுத்துள்ளது.

யுத்த வெற்றிக் களிப்பில் திளைத்து நிற்கும் சிங்களம், ஆணவத்தின் உச்சத்தில் ஏறிநின்று தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும், தமிழ் மொழியையும் துடைத்தழிக்கும் வெறிகொண்டு இனவழிப்பை அரங்கேற்றுகின்றது. தென்னிலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் காட்டாட்சி நர்த்தனமாட, தமிழீழ தாயகத்தில் சிங்களத்தின் பேயாட்சி தலைவிரித்தாடுகின்றது.

அதியுச்ச படைவலிமையுடனும், ஈவிரக்கமற்ற படைக்கலப் பிரயோகத்துடனும் எமது மக்களைக் கொன்றுகுவித்து எமது தாய்மண்ணை ஆக்கிரமித்த சிங்களம், எமது மாவீரர்கள் நித்தியத் துயில் கொள்ளும் கல்லறைகளையும் விட்டுவைக்கவில்லை. மாவீரர் நினைவாலயங்களை இடித்து வீழ்த்திய சிங்களம், மாவீரர் துயிலும் இல்லங்களை உழுதெறிந்து மாவீரர்களின் உறைவிடங்கள் மீது படைத்தளங்களையும், விமான ஓடுபாதைகளையும் நிறுவிக் குரூரத் திருப்தியடைந்துள்ளது.

துட்டகாமினியின் மறுபிறப்பாக தன்னை முன்னிறுத்தி மகாவம்ச மனவுலகில் முடிசூடியிருக்கும் சிங்கள அதிபர் ராஜபக்ச, தனது மூதாதையரை விஞ்சிய இனவெறியராகத் தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். அன்று எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றிகொண்ட துட்டகாமினிகூட எல்லாளனுக்கு சமாதியமைத்து தமிழ் மன்னனின் வீரத்திற்கு மதிப்பளித்து நற்பெயர் தேடினான். ஆனால் துட்டகாமினியின் இரத்தவாரிசாகத் தன்னை அடையாளப்படுத்தும் ராஜபக்சவோ மாவீரர்களின் உறைவிடங்களை உழுதெறிந்து பௌத்தத்தின் காவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இனவெறிகொண்டு மாவீரர்களின் உறைவிடங்களை சிங்களம் உழுதெறிந்தாலும்கூட, எமது மண்ணுக்குள்ளேயே அந்த வீரமறவர்கள் நித்தியத்துயில் கொள்வதை சிங்களத்தால் தடுக்க முடியவில்லை. எமது தேசத்தை ஆகர்சித்து நிற்கும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமையை முடக்கவும் இயலவில்லை. கல்லறைகளில் கண்ணீர் சொரிந்து, வாசமலர்களைப் பொழிந்து, மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றும் எமது மக்களின் உரிமையை ஆயுதவலிமையால் இன்று சிங்களம் தடுத்து நிறுத்தினாலும், தமது இதயங்களில் மாவீரர்களுக்கு எமது மக்கள் அகச்சுடரேற்றுவதை சிங்களத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகெங்கும் ஒரேநேரத்தில் தமிழினம் அணிதிரண்டு அக்கினிப்பிழம்பாக மாவீரர்களைத் தரிசிப்பதையும் சிங்களத்தால் முடக்க இயலவில்லை.

எமது அன்பார்ந்த மக்களே,


வரலாறு காணாத மிகப் பெரும் சோதனையை இன்று ஈழத்தமிழினம் சந்தித்து நிற்கின்றது. போரை வெற்றிகொண்டு அமைதியை நிலைநாட்டியிருப்பதாக உலகிற்குப் பிரகடனம் செய்திருக்கும் சிங்களம், கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் எமது மண் மீதும், மக்கள் மீதும் புதிய வடிவில் போர்தொடுத்துள்ளது.
படைக்கல வலிமையில் கடந்த ஆறு தசாப்தங்களாக வெளிப்படையாக சிங்களம் அரங்கேற்றிய தமிழின அழிப்பு என்பது இன்று சத்தம்சந்தடியின்றி நிகழ்ந்தேறுகின்றது. அபிவிருத்தியின் பெயரால் எமது வளங்கள் அந்நியர்களிடம் தாரைவார்க்கப்படுகின்றன. மீள்குடியேற்றத்தின் பெயரால் எமது மண் கபளீகரம் செய்யப்படுகின்றது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் பெயரால் எமது குடிநிலங்கள் வல்வளைப்புச் செய்யப்படுகின்றன. இன நல்லிணக்கத்தின் பெயரால் கடுகதியில் எமது மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் வேரூன்றுகின்றன. பௌத்த தர்மத்தின் பெயரால் எமது மக்களின் பண்பாட்டு வாழ்வு சிதைக்கப்படுகின்றது. தன்னாட்சியுரிமைக்கும், அதனடிப்படையிலான தனியரசுக்கும் உரித்தான எமது இனம், சிறுபான்மையினமாக சிறுமைப்படுத்தப்பட்டு எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், உரி மைகளும் பறிக்கப்படுகின்றன.
மறுபுறத்தில் தனது ஆயுதப் படைகளின் ஆட்பலத்தைப் பெருக்குவதிலும், படைக்கல வலிமையை தக்கவைப்பதிலும் கவனம்செலுத்தித் தனது யுத்தப்பாதீட்டிற்குப் பெரும்தொகையில் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கும் சிங்களம், தமிழீழ தாயகப் பகுதிகளை முழுஅளவில் படைவலயங்களாகக் கட்டமைத்து வருகின்றது.

இருந்த பொழுதும் தமிழினத்தின் இதயங்களில் தணியாத தாகமாக, அணையாத தீயாகக் கொழுந்துவிட்டெரியும் தமிழீழ தனியரசுக்கான இலட்சியக் கனலை சிங்களத்தால் அணைத்துவிட முடியவில்லை.

எமது பாசத்துக்குரிய மக்களே,

சிங்களம் எக்காளமிடுவது போன்று நாம் அழிந்துவிடவில்லை. எமது இலட்சியப் பயணம் ஓய்வுக்கு வந்துவிடவுமில்லை. காலநதியின் ஓட்டத்திற்கேற்ப, வரலாற்றின் வழிகாட்டலுக்கு இணங்க எமது போராட்ட வடிவம் புதுமெருகூட்டப்பட்டுப் பரிணமித்துள்ளதே தவிர எமது இலட்சியம் மாறிவிட வில்லை.
நாம் போர் வெறியர்கள் அல்ல. நாம் அமைதியை விரும்பும் ஒரு தேசிய இனம். எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியையும், பண்பாட்டையும், பொருண்மிய வாழ்வையும் பேணி உலகின் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணி சகவாழ்வு புரிவதற்கே நாம் விரும்புகின்றோம். காலனித்துவ ஏகாதிபத்தியத்திடம் பறிபோய், இன்று சிங்களம் ஆக்கிரமித்திருக்கும் எமது இறையாண்மையை நிலைநாட்டி, எமது சொந்தமண்ணில் தனியரசு அமைத்து எம்மை நாமே ஆட்சிசெய்வதற்கே நாம் விரும்புகின்றோம்.

ஆயுதத்தின் மீது அலாதிப்பிரியம் கொண்டு எமது இனம் ஆயுதப் போர்புரியவில்லை. தந்தை செல்வாவின் வழிகாட்டலில் அறவழி தழுவி அன்று எமது மக்கள் போராடினார்கள். அன்று சமவுரிமை கோரிய எமது மக்கள் மீது குண்டர்களின் அடக்குமுறையை ஏவிச் சிங்களம் கலகம்புரிந்தது. பின்னர் சுயாட்சி கோரி அறப்போரை தீவிரப்படுத்திய எமது மக்கள் மீது ஆயுத அடக்குமுறையை ஏவி அரச பயங்கரவாதத்தை சிங்களம் கட்டவிழ்த்து விட்டது. அறவழியில் எமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே அன்றைய எமது இளைய தலைமுறை ஆயுதமேந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்திற்கான புறச்சூழலை நாம் தோற்றுவிக்கவில்லை. எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட சிங்கள ஆயுத அடக்குமுறையே எமது இளைய தலைமுறையை தற்காப்புப் பாதையில் ஆயுத மேந்துவதற்கு நிர்ப்பந்தித்தது. எமது தேசத்தின் மீது சிங்களம் ஏவிய வன்முறைப் புயலே எமது விடுதலை இயக்கத்தின் தோற்றத்திற்கும், எழுச்சிக்கும் காலாக அமைந்தது.

இருந்த பொழுதும் அமைதிவழியில் எமது உரிமைகளையும், தேசிய விடுதலையையும் வென்றெடுப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், ஒவ்வொரு இடைவழியையும் நாம் தவறவிட வில்லை. திம்புவில் இருந்து ஜெனீவா வரை நிகழ்ந்தேறிய ஒவ்வொரு அமைதி முயற்சிகளிலும் நாம் பங்குபற்றினோம். போருக்கு ஓய்வு கொடுத்து அமைதிவழியில் தீர்வு காண்பதற்கு முன்னர் இந்தியப் பேரரசும், பின்னர் நோர்வேயும், இணைத்தலைமை நாடுகளும் அளித்த ஒவ்வொரு வாய்ப்புக்களையும் இதயசுத்தியுடன் நாம் அணுகினோம். இறுதியாக நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல விட்டுக்கொடுப்புக்களை எமது மக்களும், நாமும் புரிந்தோம். எமது இலட்சியத்தில் உறுதியாக நாம் நின்ற பொழுதும், உலகின் வேண்டுகைக்கு செவிசாய்த்தும், மதிப்பளித்தும் நெகிழ்வுப் போக்குடன் நாம் நடந்து கொண்டோம்.

எனினும் எமது மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு என்ற மாயைக்குள் எமது போராட்டத்தை மழுங்கடிப்பதிலேயே சிங்களம் குறியாக நின்றது. போர்நிறுத்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறி எம்மை சீண்டியிழுப்பதற்கு சிங்களம் முற்பட்டது. அரசியலமைப்பு என்ற சட்டகத்திற்குள் நின்றவாறு கடும்போக்கைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளுக்கான புறச்சூழலை படிப்படியாக சிங்களம் இல்லாதொழித்த பொழுதுகூட நாம் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் புரிந்திராத புதுமையாக நாமேயொரு இடைக்கால நிர்வாக வரைபைத் தயாரித்து உலகிற்கும், சிங்கள தேசத்திற்கும் முன்வைத்தோம்.

எமது நெகிழ்வுப் போக்கை தவறாகப் புரிந்து கொண்ட சிங்களம் எம்மால் சமர்பிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிப் பேச மறுத்தது. ஒட்டுக்குழுக்களைக் கட்டமைத்து எமக்கு எதிராக நிழல் யுத்தத்தை தொடுத்தது. இருந்த பொழுதும் போர்நிறுத்த உடன்படிக்கையை நாம் முறித்துக் கொள்ளவில்லை. சமாதானத்தின் மீது கொண்ட எமது பற்றுறுதியை வெளிப்படுத்தும் நிமித்தம் உலகின் அழைப்பிற்கு மதிப்பளித்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றினோம்.

எனினும் பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு முரணாக எமது தேசத்தின் மீது அறி விக்கப்படாத யுத்தத்தை சிங்களம் தொடுத்தது. பேசித்தீர்க்க வேண்டிய மாவிலாறு நீர்ப் பிரச்சினையைப் பூதாகரப்படுத்தி எமது மண் மீது நில ஆக்கிரமிப்புப் போரை சிங்களம் ஏவிவிட்டது. ஈற்றில் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் சிங்களம் கிழித்தெறிந்தது.

ஆயுதப் போராட்டமும், போரும் நாம் விரும்பியேற்ற தெரிவுகளல்ல. இவையிரண்டும் எம்மீது திணிக்கப்பட்டவை. வன்னிப் போர் உக்கிரமடைந்த பொழுதுகூட போர்நிறுத்தம் செய்வதற்கான பற்றுறுதியை மீண்டும் மீண்டும் நாம் வெளிப்படுத்தினோம். எமது மக்களுக்காகத் தமது உயிரை வேலியாக்கிக் களமாடிய எமது வீரர்கள், மக்களுக்காக எந்தவொரு அதியுச்ச ஈகத்தையும் புரிவதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்நிய ஆக்கிரமிப்பால் எமது நிலப்பரப்பு சுருங்கிய பொழுதுகூட மக்களைக் காத்து, மக்களின் துயர்துடைப்பதற்காகவே எமது வீரர்கள் அரும்பணி புரிந்தார்கள். எமது மக்களுக்காக உயிரையே ஈகம்செய்யத் துணியும் எமது விடுதலை இயக்கம், எமது மக்களின் பாதுகாப்பை உலகம் பொறுப்பெடுக்கும் என்ற நம்பிக்கையில் முள்ளிவாய்க்காலில் அதியுயர் ஈகங்களைப் புரிந்தார்கள்.

எமது அன்பார்ந்த மக்களே,


போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை. எமது மக்களின் உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு சலுகைகளுக்காக சிங்களத்தை நாம் யாசிக்கவுமில்லை. மென்வழி தழுவி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உலக சமூகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தே கடந்த ஒன்றரை ஆண்டாக ஒருதலைப்பட்சமான முறையில் நாம் அமைதியைப் பேணி வருகின்றோம்.

நாம் எடுத்திருக்கும் இந்தத் தெரிவு மிகவும் கடினமானது. நோர்வே அரசின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நாம் புரிந்த விட்டுக்கொடுப்புக்களை விட இது உன்னதமானது. அக்காலப் பகுதியில் நாம் சந்தித்த இழப்புக்களை விட இது அதிக அளவிலானது.

முள்ளிவாய்க்கால் போரில் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நிராயுதபாணிகளாகப் பேசச் சென்ற எமது அரசியல் போராளிகளை நயவஞ்சகமான முறையில் சிங்களம் படுகொலை செய்தது. களத்தில் விழுப்புண்ணெய்தி குற்றுயிராகத் துடித்த எமது போராளிகளை சிங்களம் சிறைப்பிடித்தது. உலகை நம்பி முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் காத்துநின்ற எமது மக்களை வகைதொகையின்றி சிங்களம் நரபலிவேட்டையாடியது. எஞ்சிய மக்களை விலங்குகளை விடக் கேவலமான முறையில் வதைமுகாம்களில் அடைத்துக் கொடும்வதை புரிந்தது. எமது பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏவிவிடப்பட்டது. முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் சந்தித்த துயரங்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாதவை. அவலங்கள் அளவிட முடியாதவை. உலகின் மனச்சாட்சி மீது நம்பிக்கை கொண்டு, மென்வழி தழுவி நின்ற எமது மக்களுக்கு சன்மானமாக சாவையே சிங்களம் பரிசளித்தது.
இருந்த பொழுதும் உலகின் மனச்சாட்சி மீதும், தர்மத்தின் மீது நாம் நம்பிக்கை இழந்து விடவில்லை. எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது சொந்த மண்ணில் தமிழீழத் தனியரசை அமைத்து நாம் வாழ்வதற்கும் உலகம் வழிசமைக்கும் என்று நாம் நம்புகின்றோம். பொறுமையின் எல்லைக்கு இன்று எமது தேசத்தை சிங்களம் இட்டுச்சென்றாலும்கூட உலகின் நீதியான அணுகுமுறை மீதான எமது நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை.

எமது தேசத்தின் தனியரசு உரிமையை உலக சமூகம் பகிரங்கமாக ஏற்க மறுத்தாலும்கூட, எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அடிக்கடி உலகத் தலைவர்கள் குரல்கொடுப்பது எமக்கு ஆறுதலை அளிக்கின்றது. எமது தேசத்தின் மீது இனவழிப்பை சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருப்பதை ஒப்புக்கொள்வதற்கு உலக சமூகம் பின்னடித்தாலும்கூட, போர்க்குற்றங்கள் பற்றி உலகத் தலைவர்கள் பேசுவது எமக்குத் தென்பூட்டுகின்றது. இந்த வகையில் ஈழத்தீவில் தமிழினத்தை வேரோடு துடைத்தழிக்கும் இனவழித்தொழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆறு தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தி வரும் சிங்களத்திடமிருந்து இனியும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழினம் எதிர்பார்ப்பது அபத்தமானது என்பதைப் புரிந்து கொண்டு, நீதியின்பால் நின்று எமது தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு உலகத் தலைவர்கள் வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

சிங்கள தேசத்திற்கு உரித்தான மண்ணைப் பிரித்தெடுத்து அரசமைப்பதற்கு நாம் முற்படவில்லை. அன்றி பயங்கரவாத வெறிகொண்டு நாம் பிரிவினைவாதம் பேசவுமில்லை. நாம் பயங்கரவாதிகளோ அன்றி இனச்சுத்திகரிப்பை சித்தாந்தமாகக் கொண்ட பிரிவினைவாதிகளோ அல்லர். நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அரசியல் சுதந்திரத்திற்காக, ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் வளர்ச்சியடைந்த தாராண்மைத்துவ நாடுகளும் போற்றிப்பேணும் தேசிய தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் எமது தேசத்தின் இறைமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் ஒரு தேசிய விடுதலை இயக்கம்.

இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதேநேரத்தில் எமது மக்கள் மீது இனவழிப்புப் போரைத் திணித்த சிங்கள ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகளாக்கித் தண்டிக்குமாறும் உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.

முள்ளிவாய்க்கால் போரில் நயவஞ்சகமான முறையில் சிறைப்பிடிக்கப்பட்ட எமது போராளிகளையும், எமது விடுதலை இயக்கத்திற்கு உறுதுணை நின்ற மக்களையும் கண்காணாத இடங்களில் சிங்களம் சிறைவைத்துள்ளது. இதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால நடைமுறை யின் கீழும் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்ட எமது மக்களை நீதிவிசாரணைகள் இன்றி சிங்களம் சிறைவைத்துள்ளது. நீதிக்குப் புறம்பான முறையில் சிங்களம் சிறைவைத்துள்ள போர்க்கைதிகளையும், அரசியல்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்தை நாம் வேண்டி நிற்கின்றோம்.

உலக சமூகத்தின் நீதியான அணுகுமுறை மீது நம்பிக்கை கொண்டு நிற்கும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காலம் தாழ்த்தாது எமது தேசத்தின் அரசியல், சமூக, மனித உரிமைகளை உறுதிசெய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை உலகத் தலைவர்கள் எடுப்பார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையுண்டு.
இத்தருணத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும்தூணாக விளங்கும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை தமது தேசியப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு உரிமையுடன் நாம் கோருகின்றோம்.

தாய்மண்ணை விட்டுத் தொலைதூரம் புலம்பெயர்ந்தாலும், தமிழீழ தாயகத்திலேயே ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழர்களின் வேரும் ஆழப்பதிந்து நிற்கின்றது. தாயக மண்ணைவிட்டுப் பிரிந்த வலியை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில், தமிழீழ தேச விடுதலைக்காக ஓயாது குரலெழுப்பி உலக சமூகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பித் தேச விடுதலையை வென்றெடுக்கும் பொறுப்பு இன்று ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழரையும் சார்ந்துள்ளது.

இதுவரை காலமும் எமது விடுதலைப் போராட்டத்தையும், மக்களையும் தாங்கிநின்ற புலம்பெயர்வாழ் உறவுகள், தொடர்ந்தும் எமது தாயக உறவுகளுக்கான மனிதநேய உதவிகளை வழங்கி, அவர்களின் அவலங்களைத் துடைத்து, இயல்புவாழ்வை தோற்றுவிப்பதற்கான பணிகளை தொடருமாறு வேண்டுகின்றோம்.

சோதனைகள் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் புகலிட உறவுகளைப் போன்று எமது மக்களின் விடிவிற்காக அயராது குரலெழுப்பும் தமிழகத் தலைவர்களுக்கும், எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். காலத்தின் தேவையறிந்து காலம்காலமாக எமது தொப்புள்கொடி உறவுகள் புரியும் தார்மீக உதவி தமிழீழ தேசத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியது. எமது போராட்டத்திற்கான இந்தியப் பேரரசின் தார்மீக ஆதரவைப் பெற்றுத்தரும் பணியை தமிழக உறவுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று நாம் உரிமையுடன் கோருகின்றோம்.

சத்திய இலட்சியத்தை உயிர்மூச்சாக வரித்துக் கொண்ட எமது மாவீரர்களின் ஆன்மீக வல்லமை மகத்தானது. அந்த சரித்திரநாயகர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளாக முகிழ்க்கும் தமிழீழ தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27ஆம் நாளன்று உலகத் தமிழினத்தை அணிதிரண்டு மாவீ ரர்களுக்கு ஈகைச்சுடரேற்றுமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம். அன்றைய நாளில் அந்நிய ஆக்கிரமிப்பில் சுடரேற்றும் வாய்ப்புக்கள் மறுதலிக்கப்பட்ட எமது உறவுகளை தமது இதயங்களில் அகச்சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், எத்தனை இடர்களுக்கு ஆளானாலும் எம்தலைவனின் வழிகாட்டலில், மாவீரர்களின் இலட்சியப் பாதையில் பயணித்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என உறுதிபூணுவோமாக.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.


SANGATHIE

செவ்வாய், 23 நவம்பர், 2010

உங்க சொத்து பாகப்பிரிவினை நடக்குதுங்கோ .............

நாள் விடிஇதோ இல்லையோ , முதல்வருக்கு பாராட்டு விழா , அல்லது எதாவது பிரம்மாண்ட விழா , இப்படியே ஒவ்வொரு நாளும் தமிழகத்துக்கு கழியிது, பத்தாததுக்கு நடுநடுவே இலவச அறிவிப்புக்கள் , உங்க கிட்ட யாரு கேட்டா இலவசங்களை ! , இலவசங்களை கொடுத்து உழைத்து சம்பாதித்து வாங்க வேண்டியது ( நோகாம நெம்பு கும்புடற ) மக்களை மூளை சலவை செய்து அவனை சோம்பேறியாக்கி , கோமாவில படுக்க வைக்காம விடறதில்ல பாருன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கு தமிழக அரசு ( தி .மு.க.) . தமிழ் நாட்டுல இருக்குற ஒவ்வொருத்தன் தலையிலையும் 10000 ரூபா கடன் ,அவனுக்கு தெரியாமலையே சுமத்தப்பட்டுள்ளது . இருந்தும் சந்தோசமா இருக்கானா அதுதான் இல்லை . இவங்களை தட்டி கேட்க ஆளே இல்ல , தட்டி கேட்க வேண்டிய ( அட கேட்கராங்கப்ப ஆட்சில பங்கு ஆனா, வழக்கம் போல அல்லதான் உங்களை கொள்ளை அடிக்க விட்டுடுவமா ! ) கூட்டணி வழக்கம் போல தூங்கிகிட்டு இருக்கு . ஆங்காங்கே மறியல் உடனோ எதாவது ஏமாற்று வேலை செய்து அதை மழுங்கடிப்பது
( கோரிக்கையை சரி செய்வதில்லை ) இதே வேலையாக அரசு அதிகாரிகள் . அதற்கு சன்மானமாக ஊதிய உயர்வு ( 2 லட்சம் பேருக்கு மட்டுமே , அவர்களை நம்பியே ஆட்சி ஓட்டிகிட்டு இருக்கேமில்ல , அடுத்த தேர்தல்ல நாங்க ஜெய்க்கனுமில்ல என்ன சின்ன புள்ள தனமா இருக்கு ,சின்ன மீனா போட்டு தான் பெரிய மீனா புடிக்கணும் அட போங்கப்பா ,நீங்க எப்பவுமே இப்படித்தான் ) மக்கள் எக்கேடு கெட்ட எனக்கென்ன என்மக்களுக்கு குடும்ப தலைவனா நான் செய்ய வேண்டிய கடமை ஒன்னு பாக்கி இருக்கு.

பாகபிரிவினை நடக்குதுங்கோ !!!!!!!

இந்த தேர்தல் குள்ள தென் தமிழ் நாட்ட ( மதுரைய தலைமை இடமாக ) என் மூத்த பிள்ளைக்கும் , மத்திய தமிழ்நாட்ட என் இரண்டாவது மணைவியின் ஒரே மகளுக்கும் ( திருச்சி தலைமை இடமா ) , வட தமிழ்நாட்ட ( நாட்டின் தலை நகரமான சென்னைய தலைமை இடமா )இனொரு பிள்ளைக்கும் , பிரிச்சி பட்ட போட்டு கொடுத்திட்டேனா , எதோ பாவம் அவங்க தலைமுறை நல்ல இருக்கும் ( அப்ப தமிழன், அப்படின்னா!! , புரியல என் குடுபத்துக்கு தலைமுறை தலைமுறையா தமிழன் அடிமை ) ஒரு நல்ல அப்பாவா நான் இத கூட செய்யலைன்ன ,என் தலை முறையே என்ன சபிக்காதா என்ன நான் சொல்றது. இதுல ஒன்னு குறையுதே தலைவரே ! உங்க பேரனுங்க ........ ஓஓஓஓ ... நல்ல வேலை ஞாபக படுத்தீநீங்க என்ன பண்ணலாம் சென்ரல கேக்கலாமுனா சட்ட சிக்கல் வரும் அது காங்கிரஸ் கூறு போட்டாலே பத்தாது , அதன் அமெரிக்க கிட்ட மொத்தமா பேசி வித்துட்ட , கரன்சியா பிரிக்கறது ஈசிய இருக்குமுன்னு பேசிக்கராங்கப்ப எனக்கு தெரியாது . தெளிவா சொல்லிட்டேன் , அப்படி வித்த தமிழ்நாட்ட மட்டும் நான் வாங்கிக்கறேன்னு . பாவம் அவங்களுக்கு தெரியாது தமிழ் நாட்ட எப்பயோ என் பேருக்கு மாத்தியாச்சின்னு . என் பேரங்களை பத்தி கேட்டீங்களா !
எங்க அவனுங்க நான் சொன்னத கேட்டிருந்தால் இந்நேரம் மேற்கு தமிழ்நாடு ( பேரனுங்க என் மகனுங்க மாதிரி மக்கு இல்ல அதான் தொழில் நகரான ,கோயம்பத்துர தலைமை இடமா ) அவனுங்களுக்கு தரலாமுந்தான் இருந்தேன் . இப்ப என் மகனுங்க பெத்த பேரனுங்க சண்டைக்கு வரான்னுங்க . எப்படியாவது பேசி பாக்கணும் முரசொலி மாறனுக்காவது எதாவது செய்யணும் பாப்போம் பக்கத்துல எதாவது பாண்டிச்சேரி, கேரளா , ஆந்தரா , கர்நாடகா மாட்டுதான்னு பாப்போம். இப்பதான் பிரச்சன அங்கெல்லாம் ஆரபிச்சிருக்கு , நல்ல புரோக்கர் இருந்த சொல்லுங்களேன் , பேசி முடிச்சிடலாம் . எதுக்கு அவங்க மட்டும் கஷ்ட படனும் பாவமில்ல . ......... என்ன பாக்கற தமிழா நீ என்னைக்கும் அடிமைதாண்ட விட்டுடுவோமா !! யாருகிட்ட .. .
ஒருநாள் நீ நாடிழந்து , உரிமை இழந்து ( அப்படி ஏதாவது இருக்குதா பெருசா சொல்ல வந்துட்டான் ) உடமை இழந்து , உறவிழத்து , நாடோடியாக உயிருக்கு பயந்து நாட்டை விட்டு அகதியாக ஓடப்போகிறாய் ( அகதி என்ன எங்களுக்கு புதுசா , இப்பதானே எங்க சகோதரர்களை கொன்று அகதிகளாக்கி உள்ளோம் , கொஞ்ச நாட்களின் நாங்களும் பின்னால வருவோமில்ல தமிழனா கொக்க , நாங்க எப்பவமே விட்டு அப்புறமா பிடிப்போம் நாங்க மாற தமிழர்கள் அல்லவோ ) . முழித்துக்கொள் அரசியல் வாதிகளிடமிருந்து ,
இலவசங்களை வாங்காதே , எந்நாளும் உன் உரிமையை விட்டு கொடுக்காதே , சிற்றிம்பதிற்கு ( உழைக்காமல் கிடைக்கும் இலவச பொருள் , பணம் , போலி வாக்குறுதிகளை நம்பாதே !!) அடிமை ஆகாதே !!! . உன் எதிர் காலம் உன் கையில் , உழைக்காமல் கிடைக்கும் எதுவும், உன்னை கூனி குறுக செய்யும் , மனம் எதிர்ப்பு சக்கியை இழந்து விடும் . அடிமை ஆகி விடுவாய் . இளம் தமிழ் தோழனே உன்னை மட்டுமே நினைக்காமல் நாட்டையும் , உன் உரிமைகளையும் எண்ணி புறப்பட்டு தமிழன் ஒருநாள் தலை நிமிர்வான் .........( விடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு கடக்கோடி தமிழனுங்கோ !!!!!)

செவ்வாய், 9 நவம்பர், 2010

இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி:


ஐயா மனித நேயம் பேசறவங்களே ! மறுபடியும் கொடிய தூக்கிடாதீங்க !

ரத்தத்திற்கு ரத்தம் என்பதல்ல என் வாதம் இது போல் சில உருப்படியான என்கௌன்ட்டர் கள் நடக்க வேண்டும் . அதாவது போலி என்கவுண்டர்கள் அல்ல (உண்மையான அதிபயங்கர, ஈவு இறக்கம் அற்ற குற்றவாளிகளை மட்டும் ) . அரசியல் வாதிகளின் எதிரிகள் போலீஸ் காரர்களின் பிடிக்காதவர்களை இதே பாணியில் விளையாடாதீங்க ! .

குழந்தைகளை பற்றி கேள்வி பட்ட நமக்கே இப்படி இருந்தால் , பெற்றவர்களின் மன குமுறலை யாரால் ஈடுகட்ட முடியும் நினைத்து பார்க்க முடியல கண்களில் நீர் கசியுது . இதைபோல் உடனடி தீர்ப்புகள் ( தண்டனைகள் ) கிடைத்தால் , அடுத்து இதை போல் யாருக்கும் இந்த எண்ணம் வராது அல்லது பெருவாரியாக குறையும் .

குழந்தைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்ப முடிய வில்லை. இப்பொழுது , குழந்தைகளை பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக தினமும் ஒரு சில வந்துகொண்டிருக்கிறது . பெற்றோர்களின் கவலையை கவலையை அதிக படுத்தி உள்ளது . நம் நாட்டில் இப்பொழுது அதிகரித்திருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்திஉள்ளது .

அரசும், போலீஸ் துறையும் , பள்ளிகளும் பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் . குழந்தைகளுக்கு இப்பொழது கல்வியோடு ஒழுக்கத்தை போதிப்பதில்லை . பணமட்டுமே குறிகோளாக தனியார் பள்ளிகள் , குழந்தைகளின் நல்லொழுக்கத்தை மறந்து பெற்றோர்களும் அவர்கள் செய்யும் சில செயல்களை அங்கீகரிப்பதால் அது பிற்காலத்தில் அவர்களுக்கு கேடு விளைவிக்கின்றது .

மீடியா சொல்லவே தேவை இல்ல உலகத்துல என்ன என்ன கெட்டது இருக்கே அதை எல்லாம் தான் காட்டுது . பெரிய திரை ரவுடியையும் , திருடனையும் , அராஜகம் பண்றவனையும் ஹீரோவா கட்டுறாங்க . பொண்ணுகளும் அவங்களையே காதலிக்கறதா காதலையும் காட்டி, சமுதாயத்தை எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளத்தையும் செய்யறாங்க . இளைய நம்ம சமுதாயத்துக்கு மேல இருக்கறவன பார்த்து சூடு போட்டுகறான் . ஒரு கட்டத்துக்கு மேல திருட வழிப்பறி செய்யறானுங்க. என்ன காரணம் வெளிநாட்டு மோகம் அதிகரித்திருப்பதாலும் ,பகட்டு வாழ்க்கை , ஈசியா பணம் ( நோகாம ) சம்பாதிக்க நினைக்கருதுமே. இதுல முக்கியமா கல்லூரி பசங்க ஈடுபடறதா சமிபத்திய தகவல்கள் சொல்லுது .

எப்படியோ குழந்தைகளை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு சமாதனம் சொல்லியோ , அறுதல் சொல்லியோ , அந்த குழந்தைகளின் ஆன்மாவிற்கு சாந்தம் உண்டாக்க முடியாது என்பது நிதர்சனம் .

அதோட என்கவுண்டர்ல செத்தவன் குடும்பம் இதோட அம்பேல் தான் ( சொல்ல முடியல வார்த்தை இல்ல ) ஒருத்தன் செய்த தவறால் எத்தனை பேர் பாதிக்க படுகின்றனர் . இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா ?.

கோவை பெற்றோர்கள் பேட்டி: குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர். இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது:


எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி. கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். குற்றவாளிக்கு சரியான தண்டவை வழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

சனி, 6 நவம்பர், 2010

கொசுக்கள் கூடி மாநாடு நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றின !!
எந்திரன்
படம் புகழ் ரோபோட் கொசு தலைமையில் கொசுக்கள் கூடி மாநாடு நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றின !!
சென்னை கூவம் ஆற்றில் பிரமாண்ட மேடை அமைத்து ( சென்னை வாசிகளின் உதவியால் ) நல்ல திகட்ட திகட்ட பல விதமான ரத்தம் குடித்து மயக்கத்திலேயே தீர்மானங்கள் நிறைவேற்றினர் .
தீர்மானங்கள் :
1. எங்கள் வாழ்விடங்கள் ஆனா கூவம் , சாக்கடை , சாலையோர குப்பை , குட்டைகள் , கழிவிடங்கள் அனைத்தும் தற்போது உள்ளது போலவே எப்போதும் இருக்க வேண்டும் . கூவத்தை சுத்தபடுத்துறோம் , அழகு படுத்துரோமுன்னு எங்களை வாழ்விடங்களை காலி செய்ய சொல்ல கூடாது . மீறினால் சென்னை முற்றுகை இட்டு போராட்டம் நடத்துவோம் .
2. முதல் காரியமா எங்கள் உயிரை குடிக்கும் all out , martin , goodnight இன்னும் பல தொழிச்சாலைகளை மூடி , அவர்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் .
3. எங்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்க வேண்டும் . எங்கள் ஆயுளை அதிகரிக்க எங்கள் தலைவர்கள் தலைமையில் ஆராச்சி குழு அமைக்க வேண்டும் .
4. எங்களின் சில இடங்கள் சுத்தம் என்ற பெயரில் அழித்து மனித இனங்கள் ஆட்டைய போடுறாங்க அதை தடுக்க வேண்டும் .
5. எங்களுக்கு எதிரான கழிவு நீர் அகற்று வாரியத்தை உடனடியாக கலைக்க வேண்டும் .
6.எங்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும்
7. பிறக்க இடம் , குடிக்க( மனித இரத்தம்) , நோய் பரப்ப நல்ல போக்குவரத்து வசதி ( எங்கும் கூவம் , கிளை கூவம்) ஊர் முழுக்க அமைத்தது, தவிக்கும் எங்கள் கொசு இனத்தை காப்பற்ற வழி செய்ய வேண்டும் .
8. எங்கள் இனத்திற்கு தனியாக அனைத்து ( துறைகளிலும் ) இடங்களிலும் இட ஒதுக்கீடு தரவேண்டும்
9. எங்கள் இனம் காக்க நலவாரியம் அமைக்க வேண்டும் .
10. மனிதர்களுக்கு அளிக்கும் நோய் எதிர்ப்பு மாதிரிகளை தடை செய்ய வேண்டும் .
முக்கிய குறிப்பு : தேர்தலுக்குள் எங்கள் கோரிக்கையை நிறைவேறாவிட்டால்
தற்கொலை படைகளை உருவாக்கி மனிதர்களை கூட்டம் கூடமாக கொல்லுவோம் . எங்களுக்கு நேசக்கரம் நீட்ட பல வல்லரசுகள் காத்திருகின்றன ,
என்று மிகவும் கண்டிப்புடன் செய்தியாளர்களிடம் ரோபோட் கொசு கூறினார்

ரஹ்மான் செய்தது தவறு தங்கர் பச்சான் பாய்ச்சல்! தங்கர் பச்சானுக்கு எதற்கு இந்த வேலை ?

Rahman
தங்கர்பச்சன் அவர்களே , எதற்கு இந்த வேலை ?
இவ்வளவு நாளா ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ !!!
எதுலதான்
குறை கண்டு பிடிக்கறது என்பதில் வெவஷ்தையே இல்லையா ? தங்கர் . உங்களை விட பல மடங்கு தமிழ் பற்று மிக்கவர் ரகுமான் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் . யார் தமிழுக்கு கௌரவம் சேர்த்தாலும் அதை பாராட்ட கற்றுகொள்ளுங்கள் . காரணம் நீ யார் என்பதை உலகிற்கு பறை சற்று முதலில் உன் ஆளுமையை மெருகேற்று, தானாக உன்னை இந்த உலகம் தேடி வரும் .
நீங்கள் ஒருவேளை ஆஸ்கர் வாங்கி இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ?
உங்கள் மனசாட்சியை கேட்டு சொல்லுங்கள் !
ரகுமான் தமிழனை உலகிற்கு இசையில் அடையாளம் காட்டி உள்ளார் . அது இசையால் அவரால் முடிந்தது செய்தார். மற்றும் ஒரு தமிழன் சங்கர் எந்திரன் படம் மூலம் உலகிற்கு அடையாளம் காட்டினார் . இப்படி ஒவ்வொரு துறையாக வளர்ந்து தமிழனை அடையாளம் காட்டும் அனைவரையும் பாராட்டுங்கள் .
குறை இருந்தால் சுட்டி காட்டுங்கள், அதற்காக கிடைத்த அங்கீகாரத்தை வாங்காதே என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை .
ஒரு வேலை இலங்கை அரசு விருது கொடுத்திருந்தால் அவராகவே மறுத்திருப்பார் நினைவில் கொள்ளவும் .
நீங்கள் தமிழுக்காக என்ன செய்தீர்கள் ?
ஈழத்தை ( இலங்கை) விடுங்கள் தாய் தமிழ் நாட்டிற்கு மக்களுக்கு அல்லது இங்கே இருக்கும் தமிழ் ஈழ அகதிகளுக்கு ஏதாவது செய்தீர்களா ?
அல்லது என் தமிழ் இனத்தை காப்பாற்றாத
மத்திய
, மாநில அரசுகள் வழங்கிய விருதுகளை திருப்பி கொடுத்தீர்களா ?
எதற்க்காக இந்த அரசியல் உங்களுக்கு ......
ரகுமான் பல முறை தமிழுக்காக , இந்தியாவிற்காக இசையால் புகழ் சேர்த்திருக்கிறார் . இனியாவது விமர்சிப்பதற்கு முன் அவர்கள் முழு விவரம் அறிந்து பேசுங்கள் ...
எனக்கும் ரகுமானிடம் சிறிது கோவம் உண்டு .
தமிழ் வார்த்தைகளை கொல்லாமல் இசை அமைத்தால் நன்றாக இருக்கும் . நீங்கள் முன்பு இசை அமைத்த பாடல்கள் (மெலோடி) இன்றும் மனதில் இதமாய் ஒலிக்கிறது . முன்பு வளர்ச்சி கருதி சில இயக்குனர்கள் செய்த ( கொடுத்த இம்சைகள் ) சதி . ஆனால் இன்று நீங்கள் சொன்னால் கேட்கும் அளவிற்கு முன்னியில் இருக்கின்றீகள் .முயற்சி செய்யுங்கள் என் போலே தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக எடுத்துகொள்ளவும் .
உங்கள் இசை பயணம் விண்னை தொட என்றும் வாழுத்தும் ஒரு தமிழ் உள்ளம் .

செய்தி ; தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் யாரெல்லாம் எதற்கெல்லாம் ஆத்திரப்படுவார்களோ தெரியாது. ஒரு மாபெரும் இளைஞர் பட்டாளத்தை திரட்டப் போகிறேன் என்று களத்தில் இறங்கியிருக்கிறார் தங்கர்பச்சான். நல்ல விஷயம். செய்யட்டும். ஆனால் அவர் கூறியிருக்கும் சில கருத்துக்கள் ரஹ்மான் ரசிகர்கள் மனசில் கொள்ளிக் கட்டையை வைத்து தேய்க்காத குறை.

மக்கள் பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைக்கிறார்கள் திரையுலகத்தினர். விருது வாங்குவதுதான் பெரிய அங்கீகாரமா? அந்த விருதை வைத்துக் கொண்டு நாக்கு வழிக்க போகிறீர்களா? ஆஸ்கர் விருது கொடுக்கும் போது, ஈழத்தமிழர் வதை படும்போது இதை நான் வாங்க மாட்டேன் என்று சொல்லியிருந்தால் தமிழனின் பிரச்சனை உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் என்கிறார் தங்கர் பச்சான்.

ஈழத்தமிழர் வேதனையை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்தான். ரஹ்மான் பெற்ற ஆஸ்கர் விருதை புலம் பெயர்ந்த தமிழர்களே பெருமையோடு நினைக்கும் போது இடையில் தங்கர் ஏன் குழப்பியடிக்கிறாரோ, அவருக்கே வெளிச்சம்! - நன்றி www.tamilcinema.com

விளையாட்டு

இந்திய நியூஸ்லேன்ட் கிரிக்கெட் லைவ் ஸ்கோர் கார்டு

வியாழன், 4 நவம்பர், 2010

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்www.scraps99.com ([b][i][red]Click for more Diwali Flash Crackers scraps)

திங்கள், 1 நவம்பர், 2010

கலைஞர் கருணாநிதியின் அரசியல் நாகரீகம் ..........


கலைஞர் கருணாநிதியின் அரசியல் தரம் தாழ்ந்து போய் வெகு நாட்களாகிறது...
அவரை யாராவது கேள்வி கேட்டால் அவருக்கு பிடிக்காது... அவர்களை பற்றி அசிங்கமாக பேசியும், எழுதியும் ஒரு வழி செய்து விடுவார்..

இன்று அது எந்தளவுக்கு போயிருக்கிறது என்றால், அவரை கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைக்கக்கூடாது என்றளவில்... அவரை கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி... மேலும் முரசொலி செய்தி அறிய

வெச்ச பேர கூட சொல்ல கூடாதாமாம்.. வெளங்கிடும்யா....

உண்மை ! , அவருடைய அரசியல் நாகரீகம் ஊரறிந்த ஒன்று. ( கேவலமான மட்டமான குறுக்கு புத்தி உள்ள சூன்னியகாரர் ) .
மக்கள் தான் பாவம் இப்பவே ஆரபிச்சிட்டாங்க இலவச வெளியீடுகளை (அறிவிப்புமட்டுமே என்பது எந்தனை பேருக்கு தெரியும் ) அடி மட்ட , நடுத்தர மக்கள் எண்ண செய்ய காத்திருக்கான்களோ !!!!!!
குனிஞ்சி தலைய காட்ட போறாங்களோ அல்லது எதிர்த்து தன்னையும் நாட்டையும் காப்பாற்றுவார்களா !!
அடுத்தவங்க மட்டும் எண்ண செய்ய போறாங்கோ அப்படின்னு கேட்கறவங்களுக்கு ( ஒன்னும் செய்ய மாட்டாங்க தெரிஞ்சதுதான் ), கண்டிப்பா அடுத்த வருசமே பட்டா போடறத ஒரு ஐந்து வருடம் தள்ளி போடலாம், எப்படி பட்டா போடுவாங்கோ அப்படின்னு தெரிஞ்சிக்க ........சொடுக்கவும்

இனி நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் இலவச அறிவிப்புகள் தேர்தல் வரை ஜெட் வேகத்துல வரும், சில அறிவிப்புகளும் , இலவசங்களும் கூட வழங்கப்படும் தேர்தல் வரை மட்டுமே ! என்பது தெரிஞ்சிகோங்கோ மக்கா .........
இல்ல தொழுவத்துல மாட்ட அடைக்கறா மாதிரி தமிழ் நாட்ட அகதிகள் மாநிலமா மாத்திடுவாங்க பார்த்துகோங்கோ அம்புட்டுதே !!!!!!!!!!!!!