news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

செவ்வாய், 29 மார்ச், 2011

கருணாநிதியின் உண்மை முகம்
அடுத்த காமெடி ரிலாக்ஸ்


மு. .திருவிளையாடல் :

திங்கள், 28 மார்ச், 2011

சாதனை மன்னரை பாரீர் பாரீர் ............

கருணாநிதி அரசின் ஐந்தாண்டு சாதனைகள் :

1.ஸ்பெக்ட்ரம் மூலம் ஒருலட்சத்து எலுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் சுருட்டியது (அமெரிக்க பத்திரிக்கை வரை தமிழனை அறிமுகபடுத்தியது)

2.இரண்டு மகன்கள் ஒரு மகள் பேரன் முதலானோருக்கு பதவி

3.குடும்ப சண்டையில் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது

4.ஐந்தாண்டுகளில் 634 பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்கியது

6.ஐந்தாண்டுகளில் ஏழு உலக புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியது
7.ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது

8.கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்காமல் அடுத்த கட்சியினரை விலைக்கு வாங்கியது (மதிமுக கூட்டரத்தையே காலி பண்ணிய புண்ணியவான்) அல்லது கட்சியோ சாதி s

9.ஒட்டு மொத்த ஊடகத்தையும் (பத்திரிக்கை ,தொலைக்காட்சி உட்பட) தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள்
கொண்டு வந்தது

10.ஓட்டுக்கு பணம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கே அறிமுகபடுத்தியது
11.ஐந்தாண்டு காலம் தினம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் (சென்னையை தவிர) இதுதான் மிகப்பெரிய சாதனை

12.பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையற்ற மின்சாரம் ஓட்டு போட்ட மக்களுக்கு பரிசு இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு

13.அரைமணி
நேரம் உண்ணாவிரதம் (கின்னஸ் சாதனை இதுவரை யாரும் முறியடிக்க முடியாத

சாதனை) இருந்து இலங்கை போரை நிறுத்தியதாக நாடகம் ஆடியது

14.அரசு பணத்தை செலவு செய்து கோவையில் குடும்ப மாநாடு நடத்தியது(தனது குடும்பம் மட்டும் பார்த்து ரசிக்க தனி மேடை)

15.அரசு
பணத்தில் இலவச டிவி கொடுத்து கேபிள் இணைப்பை தனது பேரன்கள் மூலம் குடுத்து

(சுமங்கலி கேபிள், ராயல் கேபிள்) குடும்ப வருமானத்தை பெருக்கியது

16.மனைவி,
துணைவி, பெரியமகன், சின்னமகன், பேரன்கள், ஆகியோர் இடையே சண்டை சச்சரவுகள்
வராமல் தமிழ் நாட்டை தனித்தனி மண்டலங்களாக பிரித்து கொடுத்தது (ஐந்தாண்டு
காலம் இவர் இதற்க்கு தான் அதிக நேரம் செ
லவிட்டார்)

17.இலவசங்கள் கொடுத்து ஆட்சியை பிடிக்கலாம் என நிரூபித்த மேதை

18.
பேரன்களுடன் குடும்ப சண்டை வந்த உடனே அரசு செலவில் 400 கோடியில் அரசு கேபிள் டி.வி.ஆரம்பித்து பேரங்களை மிரட்டியது பணிந்த உடன் அனைத்து விதமான அரசு கேபிள் விவகாரத்தை குப்பையில் போட்டு , தட்டி கேட்ட ஐ .ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் மீது பழி போட்டது ................
இன்னும்
நிறைய சாதனைகள் செய்துள்ளார் எழுதிக்கொ
ண்டே போகலாம் தமிழக மக்களே மீண்டும்
இவரை ஆறாவது முறையாக முதல்வராக்கினால் இது போல் நிறைய சாதனை செய்வார்.
இன்னும் இன்னும் குடும்ப வாரிசுகளுக்கு தாத்தாவாக இருந்து கடமையை செவ்வனே செய்வார் . தன் குடுபத்திற்கு மந்திரி பதவி கிடைக்க வில்லைய தவந்து கிட்டே டெல்லி ஓடுவாரு . இங்க தமிழ் நாட்டு மக்கள் தினம் தினம் தண்ணி கிடைக்கமா செத்தாலும் , கடலுல பிணமா மிதந்தாலும் , தமிழன் இலட்ச கணக்குல பிணமா பாடையில் கூட போக முடியாத அளவிற்குகொடூரங்கள் நடந்தாலும் காது செவிடான பிரதமருக்கும்
, தவறுதலா பெண்ணாக பிறந்து விட்ட அன்னைக்கும் மானாட மயிலாடவை ஜொள்ளுவிட்டு கொண்டே (இந்த வயசுல அதமட்டும் தானே செய்யமுடியும் அவரால ) கடிதம் எழுதுவாரு .....கூடவே உடன் பிறப்புக்கும் கண்ணீர் மல்க இப்போது அவர கண்ணீர் விட வைக்க கூடாதாம் . அவர் எதற்கு கண்ணீர் விடுவாரு மக்களே ! சிந்திச்சி பாருங்க .

திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து தனது
சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் மீண்டும் திருவாரூக்கே போகிறார் மன்னனாக.
மன்னரின் சாம்ராஜிய உறுபினர்களை தெரியாதவர்களுக்காக:
முகத்தை பார்க்க மனமில்லாதவர்களுக்காக ( மறுப்பவர்களுக்காக) :

ஞாயிறு, 27 மார்ச், 2011

இப்பவே பாரு பலபேருக்கு கண்ண கட்டுது..

வாங்க வாங்க என் ரசிக கண்மணிங்களா எப்படி இருக்கீங்க ....
உங்களை பார்த்து கொஞ்சம் நாளாயிடுச்சி ........ வானம் படம் சூட்டிங் பிஸி யா இருந்துட்டேன் .சிம்பு வேற என்ன பிரியவே மாட்டேன்னு அடம் பிடிச்சாரு பாவம் ...... இப்பதான் ஒருவழியா கழட்டி விட்டு வந்தேன் . உங்களை எல்லாம் பாக்கலாமுன்னு . ஆனால் வந்த பிறகுதான் தெரியுது என்ன விட நீங்க தான் ரொம்ப ஏங்கி போயிருக்கீங்க . .........


அட போங்கப்பா நான் ஏதாவது நாலு வார்த்தை நல்லதா பேசலாமேன்னு வந்தா
எல்லாம் தேர்தல் முடிச்ச பின்னாடி பேசிக்கலாம் . இப்ப பேச வேனாம்முன்னு சொல்றாங்க ஏன் ?

நான் என்ன தப்பாவா சொல்ல போறேன்
ஏதோ எனக்கு தெரிஞ்ச (அனுபவத்தை ) நாலு விசயத்தை சொல்லலாமேன்னு .

என்னது அதுக்கு முன்னாடி போஸ் குடுக்கனுமா ?
என்ன எல்லாமே உங்களுக்காக தான் சாரி நடிக்கறது எல்லாமே உங்களுக்காகத்தான்னு சொல்ல வந்தேன் . அங்க பாருங்க அந்தாளு முழிக்கறத . சாரி சாரி யாரும் பேசறத கேக்கற மூடுல இல்ல சோ ..........
இந்த விசிட்டுக்கு போஸ் மட்டுமே ! ஓகே ரெடியா !

என்ன போதுமா இப்பவே பாரு பலபேருக்கு கண்ண கட்டுது. அதனால நான் வரேன்.....

வெள்ளி, 25 மார்ச், 2011

இன்றைய மெஹா காமெடிகள் ( அரசியல் தான் )


சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் அரசியலில் அண்ணன் அழகிரிதான் சூப்பர் ஸ்டாராக்கும் என்று நடிகை குஷ்பு பேசியுள்ளார்.


  • தி.மு.க. தலைவர் கருணாநிதி தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.44 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள், அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • இலவசங்கள் மூலம் மட்டுமே மக்களை கவரும் நிலையில் அ.தி.மு.க., இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

  • பிரதமர் மன்மோகன்சிங்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் பிருந்தா கரத் ஆகியோர் அளித்த வாக்குகளும் பதிவாக வில்லை. மொத்தம் 169 பேர் வாக்களித்து இருந்தனர். ஆனால் 147 பேர் மட்டுமே வாக்களித்ததாக எந்திரம் காட்டியது.


  • நாங்களும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம், என்று அறிவித்துள்ளார் லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர். ஏ டன்டனக்கா ,டனக்கனக்கா ......
  • திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரமாரியாக அறிவித்துள்ள இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
  • தென்காசி தொகுதியை மாற்றிக் காட்டுவார் சரத்குமார் என்று கூறி அவரது மனைவியும், நடிகையுமான ராதிகா பிரசாரம் செய்தார்.
இதுகொல்லம் நக்கல் பன்ன ஆரபிச்சா , அப்புறம் ஒரிஜினல் காமெடிக்கு மரியாதை இருக்காது . அதான் படிச்ச உடனே எப்படியும் சிரிப்பீங்க ......
அதனால நான் எஸ்கேப் ..........

வியாழன், 24 மார்ச், 2011

அடுத்த சூடான சுவையான அ .தி.மு.க.வின் இலவசங்கள் பட்டியல் ....(தேர்தல் அறிக்கை )

திருச்சி: திமுகவுக்குப் போட்டியாக அதிரடியான அறிவிப்புகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் இதிலும் உள்ளன. அதேசமயம், திமுக திட்டங்களின் விரிவாக்கமாக இவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில், இன்று காலை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலை செய்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் அவர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

- ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு ரூ. 1.80 லட்சம் மானியமாக அளிக்கப்படும்.

- ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசம்.

- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 லிட்டர் தண்ணீர் இலவசம்.

- குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

- நடமாடும் மருத்துவமனைகள் மூலம் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம்.

- வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம்.

- கிராம, நகர்ப்புறங்களில் 4 ஆண்டுகளில் மும்முனை மின் இணைப்பு வசதி தரப்படும்.

- நடுத்தர மக்களுக்கு ரூ. 1 லட்சம் மானியத்தில் 40 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

- +1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்கப்படும். அதேபோல அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.

- பத்து மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் அரசு, தனியார் மாணவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.

- பள்ளி மாணவ, மாணவியருக்கு வருடத்திற்கு 4 செட் சீருடை மற்றும் காலணிகள் இலவசமாக வழங்கப்படும்.

- தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.

- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதமாக நீட்டிக்கப்படும்.

- ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால உதவித் தொகை ரூ. 12,000 வழங்கப்படும்.

- 58 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கப்படும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களுக்கும் அவர்கள் இலவசமாக பஸ் பயணம் மேற்கொள்ளலாம்.

- முதியோர்கள், ஆதரவற்றோர், குழந்தைகளுக்கு சிறப்பு விடுதிகள் கட்டப்படும்.

- முதியோர் இல்லங்களில் இலவச மருத்துவ வசதி, உணவு வழங்கப்படும்.

- ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு ரூ. 25,000 நிதியுதவியுடன், அரை பவுன் தங்கம் இலவசமாக அளிக்கப்படும்.

ஆடு, மாடுகள் இலவசம்

- வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.

- 6 கிராமங்களில் 60 ஆயிரம் பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.

- கரும்பு கொள்முதல் விலையை ரூ. 2500 ஆக அதிகரிக்க நடவடிக்கை

- வறுமைக் கோட்டுக்கு் கீழ் உள்ள மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் இலவசம்

- கிராமப்புற தெரு விளக்களுக்கு சூரிய மின்சாரம்

- மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

- மீனவர்கள் நலனுக்காக கப்பல் பூங்கா அமைக்கப்படும்.

- மீனவர் குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.

- தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.

- சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். 25 சதவீதம் மானியமாக அளிக்கப்படும்.

- இலங்கை அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.

- இளநிலை அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை

- தமிழக நதிகளை நீர்வழிச்சாலைகள் மூலம் இணைக்க நடவடிக்கை

- 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் இயங்கும் தொலை மருத்துவ மையங்கள்

- அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்

- மின் திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்ட படை அமைக்கப்படும்.

- விவசாயிகளைப் பங்குதாரர்களைக் கொண்ட விவசாய நிறுவனங்கள் தொடங்கப்படும்.

- அனைத்து விவசாயிகளுக்கும் இலவச சொட்டு நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.

- திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் ஆராய்ந்து சரி செய்யப்படும்.

- கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன்கள் காக்கப்படும்.

என்னமோ போங்க என்னதான் நடக்குது இந்த நாட்டுல தெரியல ,
இதென்ன தேர்தல் தானா இல்ல தமிழ் நாட்டு மக்களை ஏலம் விடறாங்களா ? ........ தெரிஞ்சா சொல்லுங்க .........
இப்பவே கண்ண காட்டுது
இந்த திராவிட கட்சிகளின் ஆட்சி செய்யும் நிலைய கண்டு , அல்லது தமிழ் நாட்டு மக்கள் முட்டாள் தான்னு நினைசிட்டங்களா ?
வேலை வாய்ப்பை பத்தியோ அல்லது கல்லூரி , பள்ளி கட்டணங்கள் , பஸ் கட்டணம் விலைவாசி உயர்வு எதை பற்றியும் யாரும் கவலை பட்டதாக தெரிய வில்லை . இலங்கை தமிழர் நிலைய பற்றியும் (அட நீங்க வேற தமிழ் நாட்டு மக்கள் நிலையே இங்கு கவலை கிடமா இருக்கு இதுல ) எந்த அறிவிப்பும் இல்லை . ஆறுதலா இலங்கை அகதிகளின் வாழ்க்கைய பற்றி கொஞ்சம் கவலை பட்டிருக்காங்க பரவ இல்லை .
மொத்தத்தில் ஏட்டிக்கு போட்டி தேர்தல் அறிக்கை மட்டுமே !
அல்லது எங்க இலவசத்தை பார்த்து ஒட்டு போட்டுடுவாங்களோ அப்படீன்னு பயமா ? .

அட நம்புங்க நான்தான் தமிழன் தமிழ் நாட்டு குடிமகன் .............
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ....

புதன், 23 மார்ச், 2011

உண்மை உண்மை இது சத்தியம் ........ இது சத்தியம்


தனது 5 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனைகளையோ அல்லது தான் கண்டுள்ள வெற்றிக் கூட்டணியையோ நம்பவில்லை.
மாறாக....

இலவசத்தை மிகவும் நம்பியே
தனது ஆட்சிக் கனவை நனவாக்க முயற்சிக்கிறது
தி.மு.க.


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசப்பட்ட இலவசங்கள்
அதனை
ஆட்சிக் கட்டிலில் அமர்த்துமா என்பது
ஐயத்திற்குக்குரியதே..!


பொதுவாக நிலவிவரும் ஆட்சிக்கு எதிரான
அதிருப்தி 50 விழுக்காட்டிற்கும் அதிகமானது
என்பது தேர்தல் மதிப்பாளர்களின்
கருத்தாகும்.

மின் தடை பெருமளவிற்கு பாதித்தது விவசாயிகளைத்தான்.
அவர்களின் கோபத்திற்கு அரசிடமும் பதில் இல்லை,
தேர்தல் அறிக்கையிலும் பதில்
இல்லை. “

வெட் கிரைண்டர் அல்லது மிக்சி

எந்த அளவிற்கு விற்கும் என்பது ஐயத்திற்குரியதே.
ஏனெனில் இந்
5 ஆண்டுக் காலத்தில் மின் தடை என்பது
தி.மு.க. ஆட்சிக்கு மிகப் பெரிய அவப்பெயரை பெற்றுத் தந்துவிட்டது.


2ஜி அலைக்கற்றை ஊழலில்
அதன் கூட்டணிக் கட்சி
யான காங்கிரஸிற்கு பெரும் பங்கு உண்டென்றாலும்,
மத்திய ஆட்சி அதனிடம் உள்ளதால், தி.மு.க.வை தனித்துக் காட்டி,
தன்னை காங்கிரஸ் காப்
பாற்றிக்கொள்ளும்.
இந்த ஊழல் வழக்கில் வரும் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்
குற்றப்பத்திரிக்கை தி.மு.க.வின் தேர்தல் ‘வெற்ற
ி’க்கு வேட்டு வைப்பதாக இருக்கும்.

நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்ற ஒரு திட்டம்

செயல்படுத்தவில்லை


‘பலமான வெற்றிக் கூட்டி’ அமைத்தாலும்,
“ஐந்தாண்டுக் கா
ஆட்சியில் செய்த சாதனைகள்
தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது உறுதி”

என்று முழங்கினாலும், இவை யாவும் தங்களை ஆட்சியில் அமர்த்துமா
என்பதில் தி.மு.க. அணிக்கு உள்ள ஐயப்பாடே இந்த இலவச அறிவிப்புக்களு
க்குக் காரணம்
என்பதில் ஐயமேதுமில்லை.


இவை எல்லாம் தி.மு.க .வின் தோல்வி பயத்திற்கான காரணங்கள் .
தன் தன்மானத்தை இழந்து தான் . தி.மு. கூட்டணியும் அமைந்தது என்பது அனைவரும் அறிந்ததே !

உதாரணமா காங்கிரஸ் காலில் விழுந்தது, ராஜினமா நாடகம் நடத்தியும் நடக்காதது . இது வரை இல்லாமல் தான் மானம் இழந்து 119 தொகுதிகளில் மட்டும் தேர்தலில் நிற்பது . கடைசி நிமிடம் வரை சண்டை கோழியாக இருந்து விட்டு ப.ம.க.விற்கு 30 தொகுதிகள் அள்ளி கொடுத்தது .

திருடனுக்கு தேள் கொட்டினாமாதிரி ரெண்டு கூட்டு களவானி பயல்களும் ஒன்னா சேர்ந்து கிட்டு 2 ஜி மேட்டரை அமுக்க பார்த்தது . ரெண்டு பெரும் பிரிஞ்சிருந்தால் நாறி போய் இருக்கும் ஊழல் மேட்டர் இன்னும் வெளிவராத மேட்டர் எல்லாம் வெளிவந்திருக்கும் . அப்படி வெளி வராம இருக்க ரெண்டு திருடனுகளும் ஒன்னா சேர்ந்து அதில் அதிக லாப அடைந்தது என்னவோ காங்கிரஸ் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது .

இதையும் மீறி தி.மு.க மறுபடும் ஆட்சியில் அமைந்தால் . அதற்கு முழு காரணம் தேர்தல் அறிக்கையோ , அல்லது இலவச அறிவிப்புகளோ , அல்லது கூட்டணி பலமோ அல்ல . எல்லாம் அந்த அம்மாவின் கருணையே !( ஆணவம் , அகங்காரம் மட்டுமே ).

எவ்வளவு தான் கலைஞ்சரை திட்டினாலும் அவர் மேல ஒரு கருணை இருக்கத்தான் செய்யுது ஜெயலலித்தாவிற்கு . இல்லைன்னா தான் ஜெயிக்க எல்லாவிதமான வசதிகள் சந்தர்பங்கள் அமைச்சி குடுத்தாலும் ( அதுவா அமைஞ்சாலும் ) அதை பயன் படுத்த தெரியால அளவிற்கு முழுகி போய் இருக்கும் தான் என்ற அகங்காரம் , திமிர் , கூட ஜால்ரா போடும் ஒரு சிலரை மட்டுமே நம்பும் போக்கு , பொது மக்கள் நேரடி பரிச்சயம் இல்லாதது , யாரையும் எளிதில் நெருங்க விடாத அடங்க பிடாரி தனம் . இவைகள் தான் முக்கிய காரணங்களாக இருக்குமே தவிர வேறெதும் இல்லை பரா பரனே !

இல்லை என்றால் வைகோவை எந்த மடையனாவது வெளில் விடுவானா ?
ஜெயலலித்தா வெளியில விட்டாச்சி . ஜெயலலித்தா பேசுறத அல்லது சொல்றத எவன் நம்புறான் அவங்க டி. வி .மாதிரியே ( ஜெயா டி.வி. ) அல்லது நல்ல பேச்சாளர் இருக்கான அவங்க கட்சியில . காலுல விழுவது மட்டுமே தான் எல்லாருக்கும் ஞாபகம் வருது , அல்லது எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பினது ஞாபகம் வருது , ஜெயலலிதா சசிகலாவோடு சேர்ந்து போட்ட ஆட்டம் , ஆடம்பரம், ஞாபகம் வருது .

கூட்டணி இருக்கறவங்களுக்காவது ஜெயலலிதா மேல நம்பிக்கை இருக்கா அதுவும் இல்லா . இதுவும் பெரிய மைனஸ் இந்த கூட்டணிக்கு . கூட்டணி தலைவர்களிடமே நேரடியாக பேச மறுக்கும் ஜெயலலித்தாவின் போக்கு
அனைவரிடமும் வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது என்பதே நிதர்சன உண்மை.

இதை எல்லாம் மீறி ஒரு வேளை ஜெயலலித்தா ஆட்சியில அமர்ந்தால் அதற்கு முழு முதல் காரணம் தி.மு.க . வின் மீது இருக்கும் மக்களின் வெறுப்பே அன்றி வேரு ஒன்றும் இல்லை . இதும் நிதர்சன உண்மை ...........
எப்படியோ கலைஞ்சருக்கும் ஜெயலலிதாவிற்க்கும் மக்களிடம் மவுசு இல்லை என்பதே ! உண்மை உண்மை இது சத்தியம் ........ இது சத்தியம்
வேரு நல்ல தலைவன் அல்லது ஜெயிக்கும் தலைவன் இல்லாததே மற்றொரு காரணம் ......

ஏப்ரல் 13 மக்கள் என்ன நினைக்க போறாங்களே ! அல்லது மே 13 குள்ள என்னவெல்லாம் நடக்க போகுதே ! அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ..

செவ்வாய், 22 மார்ச், 2011

ஜுன் 29-க்குள் 25 பைசா நாணயங்களை மாற்றிக் கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சென்னை, மார்ச் 22 (டிஎன்எஸ்) 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புள்ள நாணயங்களை வைத்திருப்போர் அவற்றை ஜுன் 29ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் கே.ஆர்.ஆனந்தா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது;

மத்திய அரசு இதுவரை வெளியிட்ட 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புகள் கொண்ட நாணயங்களை வரும் ஜுன் 30-ம் தேதி முதல் புழக்கத்திலிருந்து அகற்றிட முடிவு செய்துள்ளது. அந்த தேதியில் இருந்து, இந்த நாணயங்கள் பண பரிமாற்றத்துக்கும், கணக்குக்கும் செல்லாததாகிவிடும். இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி அரசாணை மூலம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அரசின் இந்த முடிவையடுத்து, தற்போது இந்த நாணயங்களை வைத்திருப்போர், அவற்றை மாற்றிக் கொள்ள உரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி, இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நாணயங்களை மாற்றிக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து வழங்கல் அலுவலகங்களிலும், சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.

இதன்படி, நாணயங்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வங்கிகள் குறித்த விவரங்கள்:

அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அண்ட் ஜெய்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்.

ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, தனலட்சுமி வங்கி, பெடரல் வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, எச்.டி.எஃப்.சி.வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, ஐ.என்.ஜி. வங்கி, ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி, ப்ரதமா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கர்நாடகா வங்கி, திரிபுரா கிராமின் வங்கி, நைனிடால் வங்கி, ராஜஸ்தான் மாநில கூட்டுறவு வங்கி.

இந்த வங்கிகளின் கிளை அலுவலகங்களில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 25 பைசா மற்றும் அதற்குக் குறைவான நாணயங்களை ஜுன் 29-ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம். ஜுன் 30-ம் தேதியில் இருந்து நாணயங்கள் மாற்றித்தரப்பட மாட்டாது.

இந்த நாணயங்களும் செல்லாது என மண்டல இயக்குநர் கே.ஆர். ஆனந்தா தெரிவித்தார். (டிஎன்எஸ்)

1957-1960


Coins struck in nickel.
Weight 2.5 grams, diameter 19mm.
Denomination referred to as "naye paise".

1961-1963


Larger "25" on reverse.

1964-1968


Denomination referred to as "paise".

1972-1990


Coins struck in copper-nickel.

1980


Rural Women's Advancement.

1981


World Food Day.

1982


IX Asian Games.

1985


Forestry.

1988-2002


Coins struck in stainless-steel.
Reverse depicts a rhinoceros. Continue to India 50 Paise.

திங்கள், 21 மார்ச், 2011

மதுவினால் உறிஞ்சி, அதையே திருப்பிக் கொடுப்பது எவ்வகையில் சரி?

நான் நேற்று பதிவிட்ட பதிவை போலவே ! ( இன்னும் கொஞ்சம் தெளிவா ) தினமணி தலையங்கம் வெளிட்டிருக்கின்றது . இதையும் கொஞ்சம் படிச்சி பாருங்க ......

இன்று தமி
ழகத்தின் இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் காட்டிலும், தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கு இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, வாக்குறுதிகளாக்குவதுதான் ஆளும் திமுகவின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது திமுகவின் தேர்தல் அறிக்கை. தேர்தல் ஆணையம் எதிர்க்க முடியாதபடி எவ்வாறு மக்கள் வரிப் பணத்தை இலவச நலத் திட்டங்கள் என்கிற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கலாம் என்பதை மட்டுமே திமுக யோசிக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை. தேர்தலுக்கு முன்பாக வீடு வீடாக, அவர்களது வாக்காளர் வரிசைஎண் சீட்டுடன் பணக்கட்டுகளை இணைத்து வீசிச் செல்வதற்கும், தேர்தலுக்குப் பிறகு குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசப் பொருள்களைக் கொடுப்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கமுடியும்? தேர்தல் அறிக்கை என்பது ஒரு மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை வெறும் இலவச ஆசைகளில் தள்ளி, காரியம் சாதிப்பதாக இருத்தல் கூடாது. அவர்களது எளிய பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்வது ஆட்சியைப் பிடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் பயன்படுமே தவிர, ஒரு மாநிலத்தின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவும்? இத்தகைய இலவசத் திட்டங்கள் அரசை கடனாளியாக்குவதோடு, அதைப் பெறும் மக்களையும் கடனாளியாக்கிவிடுகிறது. தற்போது திமுக இவ்வாறாக இலவசங்களை அறிவித்துள்ளதால், அதிமுகவும் போட்டிக்குச் சில இலவசங்களை அறிவிக்கக்கூடும். இதன் முடிவுதான் என்ன? குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்பட்டது. வசதி படைத்தவர்களும் இதை ஒரு விளையாட்டாக வாங்கி, குறைந்த விலையில் விற்றார்கள். தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் சிறிய தங்கும் விடுதிகளில் தமிழக அரசின் இலவச டிவி இருப்பதே இதற்கு சாட்சி. ÷மேலும் இந்த டிவியைப் பெற ரூ.100 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த டிவிக்களில் பல உயர்மின்அழுத்தம் தாளாமல் வெடித்தபோது, இந்த டிவி பார்க்கும் வழக்கத்துக்குப் பழகிப்போன ஏழைத் தொழிலாளி புதிதாக பல ஆயிரம் செலவில் மாதத் தவணையில் டிவி வாங்க வேண்டிய குடும்ப நெருக்கடிக்கு ஆளானார். மேலும் மாதம்தோறும் கேபிள் கட்டணம் ரூ.150 (அவருடைய ஒருநாள் கூலி) வழங்க வேண்டியிருந்தது. ÷இலவச டிவி கொடுத்த அரசு, கேபிள் கட்டணத்தையும் இலவசமாக்கியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியை அரசு கஜானாவில் கையை வைத்து விநியோகித்துத் தங்களது குடும்பக் கேபிள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க நடந்த அதிகாரபூர்வமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு நடந்த விஞ்ஞானபூர்வ முறைகேடுதானே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்? இதேபோன்று இலவச சமையல் எரிவாயு திட்டத்திலும், ஏழைக்கு தேவையில்லாத செலவை உண்டாக்கியதைத் தவிர வேறு என்ன பலன்? குடும்பத் தலைவர் இந்த இலவச எரிவாயுவை வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, பணத்தைக் குடித்துத் தீர்த்தார். பெண்கள் தங்களுக்குக் கிடைத்துவந்த மண்ணெண்ணெய் அளவும் குறைந்துபோனதால் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கும் கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தாமல், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை என்று அறிவிக்கப்பட்டாலும், இத்திட்டத்தில் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் சிகிச்சைகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. மேலும், நோய் கண்டறிதலுக்கான மருத்துவ சோதனைச் செலவுகளும், சிகிச்சைக்குப் பிந்தைய மருந்து மாத்திரைகளும் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வரை செலவு வைத்தது. இந்த மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் வாங்கவும் வழியில்லாமல் போனது. காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தொகையைக்கொண்டு மருத்துவமனைகளை மேம்படுத்தினால், அனைவருக்கும் அங்கே இலவச சிகிச்சை அளிக்க முடியும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை. அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இலவசக் கல்வி என்று அரசால் அறிவிக்க இயலுமா? ஏனென்றால் அத்தனை தனியார் கல்லூரிகளும் அரசியல்வாதிகளின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவே தமிழக அரசால் முடியவில்லை என்பதுதான் கடந்த இரு ஆண்டுகளாக எல்லோரும் கண்ட காட்சி. இலவசங்களையும் கடன்பட்டுத்தான் வழங்குகிறார்கள் என்பதோடு, இந்தச் செலவை ஈடுகட்ட மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக மதுவினால் வருவாய் கிடைக்கிறது. இந்த மது தயாரிப்பில் லாபம் அடைவோரும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளே. அண்மையில் ஒரு வாரஇதழில் எந்தெந்த அமைச்சருக்கு மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, புதிதாக அனுமதி பெற்றுள்ளார்கள் என்று பட்டியலே வெளியிடப்பட்டிருந்தது. மக்கள் பணத்தை இப்படியாக மதுவினால் உறிஞ்சி, அதையே திருப்பிக் கொடுப்பது எவ்வகையில் சரி? இந்தத் திட்டங்களை மிக நுட்பமாக ஆராய்ந்தால், இலவசங்கள் உண்மையில் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன என்பதும், இதைப் பெறும் மக்கள் ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் கூடுதல் செலவு செய்ய நேரிடும் அதே வேளையில், அரசியல்வாதிகள் ஒரு ரூபாய்க்கு 50 காசுகள் லாபம் அடைவது நடந்து கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும். நவராத்திரி கொலுவுக்கு ஆள் சேர்க்க நாள்தோறும் புதுப்புது சுண்டல் கொடுக்கப்படுவதைப் போல, அரியணையில் கொலுவீற்றிருக்க ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது இலவசங்களை அறிவித்து, மக்களைக் கவர்ந்து இழுக்கிறார்கள் அரசியல்வாதிகள். பாவம், வெறும் விட்டில்பூச்சிகள்தானா மக்கள்?
நன்றி : தினமணி

ஞாயிறு, 20 மார்ச், 2011

இலவசங்களை சுமத்து பொதி கழுதையாய் வெளிவந்திருக்கும் தி.மு.க .தேர்தல் அறிக்கை :

அட்ரா அட்ரா அடிச்சி விடுடா ....... அப்பா மூச்சி முட்டுது . தேர்தல் அறிக்கைய படிச்சி முடிக்கறதுக்குள்ள. நான் முதல் வேலையா என் வேலைய ராஜினமா பண்ணிடலானு நினைக்கிறேன் . எதுக்குங்க வேலை செய்யணும் அதான் நம்ம கலைஞ்சர் எல்லாமே இலவசமா தராரே ( அவரு அப்பன் முப்பட்டான் சம்பாதிச்ச சொத்துல இருந்து) நாட்டு மக்கள் நலன் கருதி பாவம் வேலை செய்து கலைச்சி போய் இருக்காங்க . இனி அந்த கஷ்டம் எல்லாம் குடுக்க கூடாது என்ற நல்ல எண்ணத்துல அள்ளி கொடுக்கிறாரையா .......

இனி சந்தோசமா டாஷ்மர்க்குல புல்லா ஏத்திகிட்டு , பாக்கெட்ட காலி பண்ணிட்டு தட்டு தடுமாறி வீட்டுக்கு போனோமுன்னா, நம்ம குலுக்கல் நாயகிகள் நமீதா , ரம்பா,குஷ்பு , கலா எல்லாம் சேர்ந்து குத்தாட்டம் போடும் மானட மையிலாட பலான நிகழ்ச்சிய நம்ம கலைஞ்சர் குடுத்த டி .வி .யில பார்த்துகிட்டே . இலவசமா கொடுக்கும் அரிசில கஞ்சி காச்சி குடிச்சிகிட்டே என்னமா ஜாலியா இருக்கலாம் தெரியுமா! . ஏதோ மூடாயி புள்ள குட்டி பெத்துகிட்ட அதுக்கு நிதி தராங்கலாம் . அப்புறம் எதுக்கு வேலைக்கு போகணும் . ஒரே குஜால கஞ்சிய குடிச்சிக்கிட்டு காலத்த அப்படியே அடிமையா ( ஏழ்மையிலே ) ஓட்டிடலாம் .

நாம தலைமுறை தலைமுறையா நம்ம மண்டை குடுபத்துக்கு அடிமையா இருந்து ஜெயிக்க வச்சோமுன்னா அவரு குடுப்பம் உலகத்துலையே முதல் பணக்காரரா ஆயிடுவ்ர்று . மக்கா நாம உலகத்துலையே ஏழ்மை நாடா( உகாண்டா ) மாதிரி சோத்துக்கு ஒரு நாள் வழி இல்லாம பிச்சைகாரனா ரோட்டுல அலைய விட மிக பெரிய சதி நடகின்றது .

இலவசம் என்ற பெயரே தவறு யாருடைய பணத்தில் நீங்கள் இந்த இலவசங்களை தறீங்க . எதுக்கு அதற்கு இலவசமுன்னு பெயரு . நாங்கள் தரும் வரி பணம் , எங்களை அடமானம் வைத்து உலக வாங்கி இடம் வாங்கும் கடன் , குடித்து குடித்து குடும்பத்தை அழித்து , தன் எதிர்காலத்தை தொலைத்து டாஸ்மார்க் கடையே கதி என்று மாறி இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தின் உடலில் இருந்து உருச்சிய இரத்தம் .
இவைகளை வைத்து இலவசம் என்ற பெயரில் நீங்கள் போடும் ஆட்டம் தாங்கலடா சாமீ .........

ஏன் இந்த கொடூர புத்தி மக்களை யோசிக்க விடாமல் புத்தியை மழுங்கடிக்க பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை சுயபுத்தி இல்லாமல் போதை பொருளுக்கு(இலவசம்) அடிமை ஆனவர்கள் போல் மாற்றி , இப்படி இலவசம் என்ற பெயரில் கொள்ளை அடித்து மக்களின் வரி பணத்தை நாசம் செய்து கொள்ளை கொள்ளை அடிக்கும் இந்த நாசகார குடுபத்திடம் இருந்து இந்த தமிழன் , தமிழ் நாடு என்று விடுதலை ஆகுமோ !.

மீண்டும் மீண்டும் மக்கள் ஏமாற்றபடுகின்றனர் . யார் உங்களிடம் இலவசமா மிக்சியும் கிரைண்டரையும் கேட்டது . அல்லது இப்போது யார் வீட்டுலயும் இல்லையா . இந்த இலவசங்கள் நாட்டு மக்களை உச்சத்துல வைக்க போகுதா ?
எதுக்கு இந்த ஏமாற்று வேலை , உங்களுக்கெல்லாம் வெட்கமா ? இல்லை .
மக்கள் திருந்தாத வரை ஏதும் நடக்காது . ஏமாற்றுபவன் எங்கிருந்து வருகிறான் .
நாம் தன் உருவாக்குகின்றோம் . மக்களே! நீங்க ஏமாந்தது போதும் இனியும் இலவசத்தை கண்டு ஏமாறாதீர்கள் . உங்கள் பாதங்களை தொட்டு
கேட்டுக் கொள்கிறேன் .
இல்ல இல்ல நாங்க அப்படித்தான் எதை வாங்கிலானும் கூட இலவசமா கொடுத்த தான், பத்து ரூபாய் பொருளையும் 100 ரூபாய் கொடுத்து வாங்க தயாரா இருக்கோம். வாங்குவோம் அப்படின்னு அடம்புடிச்சீன்கன்னா. எங்களுக்கு இலவசம் தான் முக்கியம் அப்படின்னு முடிவெடுத்தீங்கன்னா , மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன், அந்த படைச்சவன் இல்லா அவனுக்கு அப்பன் வந்தாலும் இந்த நாட்ட காப்பாத்த முடியாது .

காங்கிரஸ்சுக்கு மறுபடியும் ஓட்டு போட்டீங்க அதனுடைய பலன
நல்லாவே அனுபவிக்கின்றோம் . தினம் தினம் ஊழல் ஊழல் , அதும் லட்ச கணக்கான கோடிகளில் ....... அது எந்த துறையாக இருந்தாலும் ஊழல் .
இன்று வெட்கி தலை குனியும் அளவுக்கு உலக நாடுகளிடம் இந்தியாவின் மதிப்பு தரம் தாழ்ந்து போய்விட்டது .

இலவசத்தை கண்டு மயங்காமல் தன் பிள்ளைகள் , தன் சந்ததிகளின் எதிர்காலம் , நம் வாழ்க்கை , அனைத்தையும் மனதில் நிறுத்தி தி.மு.க. கூட்டணியை தோற்கடியுங்கள் ......நாடு அழிவது கொஞ்ச காலம் தள்ளி போகும் ........
நல்லது நடக்கவும் கொஞ்சம் அவகாசம் வேண்டும் அதை நிறைவேற்றுங்கள் ...


செய்தி :
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பெண்கள் அனைவருக்கும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் றிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடு தேடி வரும் டாக்டர்:

மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவர்களே வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை சிகிச்சை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லாத இலவச பயணம்,

தனியார் நிறுவனஙகளில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு:

குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை, தனியார் நிறுவனங்களில் தலித் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர நடவடிக்கை, இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டு அளவை மேலும் உயர்த்த பரிசீலனை, தலித் கிறிஸ்தவர்களும் இட ஒதுக்கீடு பெற நடவடிக்கை,

30 கிலோ அரிசியும் இலவசம்:

பரம ஏழைகளுக்கு ரேசன் கடைகளில் மாதந்தோறும் கிலோ 1 ரூபாய் வீதம் வழங்கப்படும் 30 கிலோ அரிசி இனி இலவசமாக வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவர்களே வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை சிகிச்சை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும்,

இலவச டயாலிசிஸ் சிகிச்சை:

சிறுநீரக பாதிப்புக்குள்ளான ஏழை மக்களுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை, அரசுப் பணிகளில் உள்ள மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களில் இருந்து 4 மாதங்களாக அதிகரிக்கப்படும்,

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் மானியம்:

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். அதில் ரூ. 2 லட்சம் மானியமாக வழங்கப்படும்,
மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்றுக் கொள்ளும்

மதுரை-கோவையில் மெட்ரோ ரயில்:

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் போல, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் தொடங்க நடவடிக்கை, சென்னையிலிருந்து மதுரை, கோவைக்கு புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை என்பது உள்பட ஏராளமான திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் தவிர எதிர்க் கட்சிகளும் மிக ஆர்வமாக எதிர்பார்த்த திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

அதன் முழு விவரம்:

- ஏழை எளிய மாணவர்களை பாதிக்கும் நுழைவுத் தேர்வுகள் எப்போதும் வேண்டாம் என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

- நதி நீர் இணைப்பை தொடர்ந்து வலியுறுத்துவோம். முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசை தொடர்நது வலியுறுத்துவோம்.

- செம்மொழியாம் தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்துவோம்

-உயர்நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களில் நீதிமன்ற மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுப்போம்.

- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பாடுபடுவோம்

- மத்திய தேர்வாணைய தேர்வுகள் அனைத்தையும் தமிழிலும் எழுத நடவடிக்கை எடுப்போம்.

- ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான நிலையை ஏற்படுத்தி, அரசியல் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும். ஈழத் தமிழர்கள் அமைதியான சூழலில் வாழ தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுக்க வலியுறுத்துவோம்.

- தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் தோறும் வேளாண் உற்பத்திச் சாதனங்கள் நியாயமான வாடகையில் விவசாயிகளுக்குக் கிடைக்க ஏற்பாடு.

- இலவச மின்சாரத் திட்டத்தை தென்னை வளர்ப்பு உள்ளிட்ட தோட்டக்கலை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்துவோம்

- நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை மூலம் காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

- படித்த இளைஞர்களுக்காக மாவட்டந்தோறும் சிறப்புத் திறன் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.

- மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழங்கப்படும் கடன் நிதி, ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். அதில் 2 லட்சத்தை மானியமாக வழங்குவோம்.

- வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு உடை, உணவு, சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்வதோடு, வருமானத்திற்கும் வழி காணக் கூடிய பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் அனைத்து சேவைகளையும் பல்வேறு திட்டங்கள் மூலம் ஒருங்கிணைத்து அவர்களின் பொருளாதார வளர்ச்சி உறுதியாக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவர்களை வறுமையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தரப்படும்

- டெல்டா மாவட்டங்களில் வைக்கோலைப் பயன்படுத்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காளாண் வளர்ப்பு செயல் திட்டம் நடைமுறைப்படுத்துவோம்.

- சொட்டு நீர்ப்பாசனத்துக்காக, விவசாயிகளுக்கு தற்போது அளிக்கப்படும் 65 சதவீத மானியம் சிறு குறு விவசாயிகளுக்கு 90 சதவீதமாக உயர்த்தப்படும்.

- சூரிய மின்சாரத்தை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்போம்.

- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தி வேளாண் உற்பத்திப் பணிகளுக்கும் விரிவுபடுத்துவோம்.

- பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது போல, மீன்பிடியின்போது பாதிப்புக்குள்ளாகும் ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தி மீனவர்நலனைப் பாதுகாப்போம்.

- விசைப் படகுகளுக்கு மாதந்தோறம் வழங்கப்படும் 1500 லிட்டர் டீசல் மானியம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு 300 லிட்டர் மானியம் என்பதை முறையே, 2000 லிட்டர் டீசல், 500 லிட்டர் டீசலாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

- கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்போம்.

- சென்னை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை போல திருச்சியிலும், மதுரையிலும் மன நல மருத்துவமனைகள் அமைப்போம்.

- தாம்பரம் போல மதுரையில் காச நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

- சிறுநீரக பாதிப்புக்குள்ளான ஏழை மக்களுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க ஏற்பாடு.

- பச்சிளம் குழந்தகளைத் தாக்கும் மூளைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றுக்கு மாநில அரசின் சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

- மாவட்ட மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை மையங்களை அமைப்போம்.

- மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்போம்.

- பச்சிளம் குழந்தகளைத் தாக்கும் மூளைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றுக்கு மாநில அரசின் சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

- மாவட்ட மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை மையங்களை அமைப்போம்.

- மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்போம்.

- வட்டார மருத்துவமனைகளில் எய்ட்ஸ் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.

- வரும் முன் காப்போம் திட்டம் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு விரிவுபடுத்துவோம்.

- கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக தொடர்ந்து செயல்படுத்துவதோடு, சாலை விபத்துகளுக்கும் இந்தத் திட்டத்தில் உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்வோம்.

- மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவர்களே வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை சிகிச்சை செய்யும் முறையை சிறப்பாக செயல்படுத்துவோம்.

- அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இனி ஆண்டுதோறும் இலவசமாக 3 சீருடை வழங்கப்படும்.

- பல்கலைக்கழகங்கள் இல்லாத மாவட்டங்களே கிடையாது என்ற நோக்கத்தோடு அனைத்து மாவட்டங்களிலும் புதிய பல்கலைக்கழகங்கள் அமைப்போம்.

- அரசுக் கல்லூரிகளிலும், தொழில்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு, முதலாவது ஆண்டிலேயே இலவசமாக லேப்டாப் வழங்கப்படும்.

- மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்றுக் கொள்ளும்

- மாவட்டந்தோறும் செவிலியர் பயிற்சிக் கல்லூரி அமைக்கப்படும்.

- பின் தங்கிய மாவட்டங்களில் சிறு குறு தொழிலகள் தொடங்க ஊக்கத்திட்டம் தொடங்கப்படும்.

- மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மெட்ரோ ரயில் திட்டம் போல, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- மதுரை, கோவைக்கு அதி விரைவு தொடர் வண்டி - புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை எடுப்போம்.

- மூத்த குடிமக்களுக்கு இலவசப் பேருந்து. 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லாத இலவச பயணம்.

- முதியோர், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் ஓய்வதியம் ரூ. 500 என்பதிலிருந்து ரூ. 750 ஆக அதிகரிக்கப்படும்.

- மினி பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை.

- நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் ரூ. 600 ஆக அதிகரிக்கப்படும்.

- 60 வயதைத் தாண்டிய நெசவாளர்களுக்கு ஓய்வூதியம்.

- கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 200 யூனிட்டாக அதிகரிக்கப்படும்.

- சாயக்கழிவுகளால் ஏற்படும் பிரச்சினைக்கு இயற்கை முறையை கையாண்டு தீர்வு காண முயற்சிப்போம்.

- தலித் கிறிஸ்தவர்களும் இட ஒதுக்கீடு பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

- சிறுபான்மை சமூக பெண்களுக்கு சிறப்புச் சலுகைகளோடு கல்வி மேம்பாட்டுத் திட்டம்

- சிறுபான்மை சமூக கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு தேவையான பாதுகாப்பு.

- இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டு அளவை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலனை.

- தனியார் நிறுவனங்களில் ஆதி திராவிடர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர நடவடிக்கை.

- மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை மாற்றும் வகையில் நவீன இயந்திரங்களை அறிமுகப்படுத்துவோம்.

- திருநங்கையர்களுக்கு தனியாக சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்

- வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை.

- கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தற்போது வழங்கப்படும், உதவி மானியம் ரூ. 75 ஆயிரம் என்பதிலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.

- அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் உடனடியாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்.

- குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

- சென்னை அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும்.

- சென்னை உள்பட பெரிய நகரங்களில் புதிய ஏரிகளை உருவாக்கி குடிநீர் ஆதாரங்களை அதிகரிப்போம்.

- சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பிற மாநகராட்சிப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்துவோம்.

- கந்து வட்டிக் கொடுமையை நீக்க வழி வகை காணப்படும்.

- திருக்கோவில் காலி நிலங்களை பாதுகாக்க, வருவாயைப் பெருக்கும் வகையில், நிலவங்கி ஒன்று நிறுவப்படும்.

- அரசு சான்றிதழ்களை ஒரே இடத்தில் பெற பொதுமக்கள் சேவை மையம் தொடங்கப்படும்.

- அரசுப் பணிகளில் உள்ள மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களாக உள்ளது என்பதை 4 மாதங்களாக அதிகரிப்போம்.

- பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் கிலோ 1 ரூபாய் வீதம் வழங்கப்படும் 30 கிலோ அரிசி இனி இலவசமாக வழங்கப்படும்.

- ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.

- குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்கப்படும்.

- இலவச எரிவாயு அடுப்புத் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

- இலவச டிவி திட்டம் தொடரும்.

- ஏழைப் பெண்களுக்கான திருமண நிதியுதவி ரூ. 25,000 என்பது 30,000 ஆயிரமாக உயர்த்தப்படும்.

- கர்ப்பிணிப் பெணக்ளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 6000 என்பதிலிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்துவோம்.

- பெண்களுக்கு இலவச கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும். பெண்கள் எதைக் கோருகிறார்களோ அதைப் பொறுத்து கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும்.

இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 18 மார்ச், 2011

கலைஞ்சர் ஆட்சியை ஒருவர் பாராட்டுகிறார்.....

நண்பர்களே ! ஒரு விஷயத்தை யாரும் மறுக்க முடியாது ( கட்சி அடிமைகளை தவிர்த்து ) நீங்கள் உங்கள் ஆதங்கத்தை எழுதுங்கள் , தயவு செய்து யாரையும் குறை சொல்ல வேண்டாம் உங்கள் கோவம் நாயமானதாகவே இருக்கட்டும் , ஆனால் கலைஞ்சரை ஆதரிப்பவர்களையும் மதியுங்கள் . இப்படியும் கொஞ்சம் பேர் இருக்க வேண்டுமே . மாட்டுக்கு கடிவாளம் மாதிரி ....... கலைஞ்சர் ஆட்சியை ஒருவர் பாராட்டுகிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு பொறுமை(எருமை ) சாலி.


மன்னிக்கவும் கலைஞ்சரை நான் குறை சொல்லவில்லை தமிழ்நாட்டை சுடுகாடா மாற்றாம விட மாட்டேன் அப்படின்னு கங்கணம் கட்டி கொண்டிருக்கும் கலைஞ்சர் ஆட்சியை தான் குறை சொல்லுகின்றோம் . நாட்டு மக்கள் குடலை பிடுங்கி தான் குடும்ப வாரிசுகளுக்கு மாலை அணிவித்து அரியணை அமர்த்த துடிக்கும் கலைஞ்சரை தான் குறை சொல்லுகின்றோம். இந்த ஆட்சியை பாராட்டும் மன பக்குவம் என்னகில்லை ஒருவேளை பாராட்டுபவர்கள் பாராட்டட்டும் அவர்களும் அவரால் ஆதாயம் அடைதிருப்பர்களோ என்னவோ தெரியவில்லை ( தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற மனப்பான்மை உள்ளவர்களாக இருக்கும் ) .

இன்றைய நிலையில் யாரும் பொதுவானவர்கள் ( அவர்கள் கட்சிகாரர்கள் கூட) ஜெயலலிததாவை ஆதரிக்கவில்லை, இருந்தாலும் ஆதரிப்பதற்கு காரணம் என்ன ?, இந்த ஆட்சி போகவேண்டும் அது மட்டுமே அனைவரது ( பொதுவானவர்கள் எண்ணம் ) விருப்பமாக உள்ளது. பெட்ரோல் ஊத்தி எரிக்கரவனை விட மெதுவா கொல்லும் விஷம் பரவயில்லை தப்பிக்க ஒரு வாய்ப்பு இருக்கு யாராவது நல்லவங்க பார்த்துட்டாங்கன்னா உயிர் பிழைக்க வாய்ப்பாவது கிடைக்கும் அப்படின்னு தான் நினைக்குறோம். இதுல யாரு எந்த வகை என்பதை நீங்களே முடிவு பண்ணிக்குங்க .

அடுத்தது இரண்டு நாளா நடப்பது நாடகமாகவே இருக்கட்டும், முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும். அதுவே அனைவரது ஆசை விருப்பம் .

நிம்மதியா மூச்சி கூட விட முடியல மத்திய மாநில அரசுகளின் அடாவடிதனம். தலையில உக்காதுகிட்டு தறுதலையா அலையறானுங்க . காரணம் உருப்படியான தலைவன் ( அல்லது எதிர்கட்சி இல்லாததுவே காரணம் ) . ரஜினி முன்னாடி ஜெயலலித்தாவின் ஊழல் , ஆணவ ஆட்சி நடந்த பொழுது அதை தடுக்க சொன்ன வார்த்தை இன்னொரு முறை ஜெயலலித்தா ஆட்சிக்கு வந்தா யாராலையும் தமிழ் நாட்டை காப்பாத்த முடியாது அப்படின்னு குரல் கொடுத்தாரு , அதும் ஒரு காரணமா இருந்தது அப்ப ஆட்சி மாற்றத்திற்கு . ஆனால் இன்று இந்த கலைஞ்சர் ஆட்சி தொடர்ந்தால் தமிழ் நாட்டை அல்ல தமிழனை , தமிழ் நாட்டு மக்களை யாராலும் காப்பாத்த முடியாது.

ஏற்கனவே அனைத்து துறையையும் கலைஞ்சர் குடும்பம் புடிகிட்டாங்க (அனைத்து மீடியா, தொழில் துறை , காலை துறை , தகவல் தொழிநுட்பம் , கட்டிடத் துறை , கல்வித்துறை , டாஸ்மார்க் , இயற்கை வளம் , கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி ,விளையாட்டு துறை , மருத்துவ துறை இப்படி அனைத்து துறைகளிலும் கலைஞ்சர் குடும்பம் தான் துரை ( முதலாளி ) .
தமிழன் தமிழன் என்று சொல்லியே ! தம்மிழனை கொன்று குவிக்கும் தலைவன் தேவையா ? . தினம் தினம் அன்றாட வாழ்க்கையை நகற்ற முடியாமல் தவிக்கும் ஏழையின் நிலை தொடர வேண்டுமா ? .

காசு வாங்கி ஒட்டு போடுராங்கோ அப்படீனு கூப்பாடு போடும் வர்க்கமே அன்றாடம் அம்பதுக்கும் நூறுக்கும் தான் தன் மானத்தை அடகு வைத்து வாழ்க்கை ஓட்டுகிறான். அவனுக்கு உங்கள் அரசியல் தெரியாதய்யா . அவனுக்கு அவன் வயிறு காஞ்சி போயிருக்கும் போது நீங்க எந்த கூப்பாடு போட்டாலும் கேட்காது . அவங்களுக்கு மட்டும் என்ன அப்படியே வாழனுன்னா ஆசை . அவனை வாழ விடுவதில்லை உங்கள் அரசியல் வர்க்கம் .

கொள்ளை அடித்து அதில் சிறு துளியை நாக்கில் நக்க கொடுக்கும் தலைவர்கள் தானே இன்று ஆட்சி நடத்தராங்கோ. இந்த கேடுக்கெட்ட தேர்தல் துறை இப்பயாவது கருப்பு பணம் கொஞ்சம் வெளிய வரும் அதையும் தடுத்துட்டாங்க . அப்புறம் என்னமோ இவங்க கருப்பு பணத்தை எடுத்து நாட்டு மக்களுக்கு கொடுத்திடறா மாதிரிதான் . 50,000 கோடி வரி ஏய்ப்பு செய்யரவனுக்கு ஜாமீன் தரும் நீதி துறை, கஷ்ட்டதுல நஷ்டத்துல லோன் பணம் 10 .000 - ஒரு லட்சம் கூட இருக்காது அதை கட்ட தவரியவனை அவன் நாணயம் தவறிவன் என்று பேப்பர்ல விளம்பரம் தர அனுமதி தந்து ,மிச்ச மீதிய பிடிங்கி நாடு தெருவுல நிக்க வைக்கும் நீதி துறை உள்ள நாடு தானே! இந்த எழவெடுத்த இந்தியா நாடு ........

எது எப்படியோ இந்த கலைஞ்சர் ஆட்சி தொடர்ந்தால் தமிழன் நாடு கடத்தப்படுவான் அல்லது தாய் நாட்டிலேயே குடிஉரிமை இழந்து அனாதையாக அலைந்து கொண்டிருப்பான் . தமிழ் நாடு கலைஞ்சர் நாடாக உருமாறும் . தனி சட்ட திட்டங்கள் தீட்டப்படும் . கொத்தடிமைகள் மட்டுமே வாழும் அவலம் உருவாகும் . வாழ்பவனுக்கு இயற்கையே உத்தரவாதம் கொடுத்தாலும் , இவர்கள் ஆட்சியில் உத்தரவாதம் இருக்காது . காது கிழிய ஜால்ரா சத்தமும் , மானாட மயிலாட என்ன மயங்கும் மங்கைகளின் போதையில் டாஸ்மார்க் குடித்து விட்டு ஒரு ரூபாய் அரிசியை கொதிக்க வைத்து தண்ணிக்கு பதில் குடித்து 30 வயதிலேயே மயானத்தில் இடம் வாங்கலாம் . ஒரு குடும்பம் மட்டும் பல நூற்றாண்டுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் ........

நிதானமாக யோசித்து தெளிவான முடிவெடுங்கள் இந்த ஆட்சி தொடர கூடாது, தொடர்ந்தால் ........................................
சொல்வதற்கும், கற்பனை செய்வதற்கும், எழுதுவதற்கும் கூட முடியவில்லை..... சீட்டு பேரம் நடந்து கொண்டிருக்கும் நேரம் இது அடுத்து என்ன வேணாலும் நடக்கும் .......... நடப்பவை நல்லவையாகவே நடக்கட்டு. வருத்தபடமட்டுமே நம்மால் முடியும் என்ற மன வருத்தத்தோடு முடிக்கும் .
அடிமை ஆகிவிடுவோமோ என் அச்சத்தில் இருக்கும் ஒரு தமிழன் ...........

கொசுறு :

ஏதோ நம்மளால முடிஞ்சது .........

புதன், 16 மார்ச், 2011

ம.தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., கூட்டணியில் இடமில்லை

ஜெயலலித்தாவின் கோர முகம் தெரிந்தும் சகோதரி சகோதரி என்ற வைகோ விற்கு கிடைத்ததோ பெரிய ஆப்பு . பாவம் அவரால் அதை ஜீரணிக்க சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் ஆகலாம் ....... நம்பியவர் ழுத்தருப்பதில் கைதேர்ந்தவர் ஜெயலலித்தா என்று கண்டிப்பாக சொல்லமாட்டேன் . கணக்கு போட்டு கழுத்தருதிருக்கிறார் ஜெயலலித்தா . கனவிலே மிதககும் ஜெயலளித்தாவிடம் இருந்து
தப்பித்தவர்கள் மற்றவர்கள் . ஜெ. கனவு சறுக்குமா ? .தி.மு..வின் வெளியேற்றல் .

வைகோ
தன் சுய முகத்தை இழந்து விட்டது தான் காரணமோ ! தெரியவில்லை . எப்படியோ அரசியலில் அவருக்கு தொடர்ந்து சரிவுகளாகவே அமைந்து விட்டது . அவர் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றதும் ஒரு காரணமே ! . அவர் தனது கட்சியை பலப்டுத்த மறந்து விட்டாரோ ! என்பதும் ஒரு காரணம் . வைகோ இப்படி செய்திருக்கலாமோ ? ஜெயலலித்தாவை போலவே ஒரு பத்து சீட்டு வாங்கிகிட்டு ஜெய்ச்சி பின்னாடி அம்மாவிற்கு அல்லவே கிண்டி குடுத்திருக்கலாமோன்னு கூட தோனுது ....... தனிச்சி நின்னு டெபாசிட் போறதா விட இது பெட்டர் தான்னு எனக்கு தோனுது . கட்சியாவது கொஞ்சம் நிலைக்கும் ......... என்ன நான் சொல்றது ..... என்னமோ நடந்தது நடந்து போச்சி ........ நடக்கறத வேடிக்கை பார்ப்போம் ........

நமக்கு வாய்த்த தலைவர்கள் மிகவும் கொடூரமானவர்கள் ,
எல்லாம் இந்த (நாம்தான் ) அடிமைகளின் சொரணை இல்லாதது தானே !

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல், இரவு வெளியிடப்பட்டது. 160 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. ம.தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., கூட்டணியில் இடமில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, முதல் முறையாக போட்டியிடுகிறார். நாளை (18ம் தேதி) மதுரையில் இருந்து ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.

அடுத்த மாதம் 13ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 17ம் தேதி வெளியிடப்படுகிறது. அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.ஸ்ரீரங்கம் தொகுதியில் முதன் முறையாக ஜெயலலிதா போட்டியிடுகிறார். 2006 சட்டசபை தேர்தலில், ஆண்டிபட்டியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஸ்ரீரங்கம் தொகுதி, ஜெயலலிதாவின் பூர்வீக ஊர் என்பதாலும், அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதாலும் அத்தொகுதியை ஜெயலலிதா தேர்ந்தெடுத்துள்ளார்.

1.ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
2.கும்மிடிபூண்டி - வி.கோபால்நாயுடு
3.பொன்னேரி (தனி) - பொன். ராஜா
4.திருவள்ளூர் - பி.வி. ரமணா
5.பூந்தமல்லி(தனி) என்.எஸ்.ஏ. ஆர். மணிமாறன்
6.ஆவடி - அப்துல் ரகீம்
7.அம்பத்தூர் - வேதாசலம்
8.மாதவரம் - வி.மூர்த்தி
9.திருவொற்றியூர் -கே.குப்பன்
10.ஆர்.கே.நகர் - வி.மதுசூதனன்
11.பெரம்பூர் - பி.வெற்றிவேல்
12.வில்லிவாக்கம் - ஜெ.சி.டி.பிரபாகரன்
13.திரு.வி.க.நகர்(தனி) - வ. நீலகண்டன்
14.ராயபுரம் - டி.ஜெயக்குமார்
15. துறைமுகம் - பழ.கருப்பையா
16.ஆயிரம்விளக்கு - பா. வளர்மதி
17.அண்ணாநகர் -எஸ்.கோகுல இந்திரா
18.விருகம்பாக்கம் - ஆர்.கமலகண்ணன்
19.சைதாப்பேட்டை - ஜி.செந்தமிழன்
20.தி.நகர் - வி.பி.கலைராஜன்
21.மயிலாப்பூர் -ஆர்.ஜானகி
22.வேளச்சேரி - எம்.கே.அசோக்
23.சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
24.ஆலந்தூர் - வி.என்.பி.வெங்கட்ராமன்
25.ஸ்ரீபெரும்புதூர் - மௌச்சூர் இரா. பெருமாள்
26. பல்லாவரம் - ப.தன்சிங்
27. தாம்பரம் - டி.கே.சின்னையா
28. செங்கல்பட்டு - கே.என்.ராமச்சந்திரன்
29. திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
30. செய்யூர்(தனி) - வி.எஸ்.ராஜி
31. மதுராந்தகம்(தனி) - எஸ்.கணிதா சம்பத்
32. உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா. கணேசன்
33. காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
34. காட்பாடி - எஸ்.ஆர்.கே. அப்பு(எ) ராதாகிருஷ்ணன்
35. ராணிப்பேட்டை - அ.முகமதுஜான்
36. வேலூர் - டாக்டர் வி.எஸ்.விஜய்
37. ஜோலார்பேட்டை -கே.சி.வீரமணி
38. ஊத்தங்கரை(தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்
39. பர்கூர் - கே.இ.கிருஷ்ணமூர்த்தி
40. கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி
41. பாலக்கோடு - கே.பி.அன்பழகன்
42. அரூர் - ஆர்.ஆர்.முருகன்
43. கலசப்பாக்கம் - அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி
44. செஞ்சி - தமிழ்மொழி ராஜதத்தன்
45. மயிலம் - கே.பி.நாகராஜன்
46. திண்டிவனம்(தனி) - டாக்டர் த.அரிதாஸ்
47. விழுப்புரம் - சி.வி.சண்முகம்
48. விக்கிரவாண்டி - சிந்தாமணி ஆர்.வேலு
49. உளுந்தூர்பேட்டை - ரா.குமரகுரு
50. சங்கராபுரம் -பா. மோகன்
51. கள்ளகுறிச்சி(தனி) - அழகுவேல் பாபு
52. ஏற்காடு(எஸ்டி) - செ.பெருமாள்
53. ஓமலூர் - பல்பாக்கி சி.கிருஷ்ணன்
54. எடப்பாடி - கே.பழனிசாமி
55. சேலம் மேற்கு - ஜி.வெங்கடாசலம்
56. சேலம் வடக்கு - விஜயலட்சுமி பழனிச்சாமி
57. சேலம் தெற்கு - என்.கே.செல்வராஜ்
58. வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
59. ராசிபுரம்(தனி) - பா.தனபால்
60. குமாரபாளையம் - பி.தங்கமணி
61.ஈரோடு கிழக்கு - ஆர்.மனோகரன்
62. ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்
63.மொடக்குறிச்சி - ஆர்.என்.கிட்டுசாமி
64.தாராபுரம்(தனி) - கே. பொன்னுசாமி
65.காங்கயம் - என்.எஸ்.என். நடராஜ்
66.பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாசலம்
67.பவானி - எம்.ஆர்.துரை
68.அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணிதரன்
69.கோபிசெட்டிபாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
70.ஊட்டி - புத்தி சந்திரன்
71.மேட்டுப்பாளையம் - ஓ.கே. சின்னராஜ்
72.அவினாசி(தனி) - ஏ.ஏ.கருப்புசாமி
73.திருப்பூர் வடக்கு -எம்.எஸ்.எம். ஆனந்தன்
74.திருப்பூர் தெற்கு - ஏ.விசாலாட்சி
75. பல்லடம் - கே.பி.பரமசிவம்
76. சூலூர் - செ.ம.வேலுசாமி
77. கவுண்டம்பாளையம் - வி.சி.ஆறுக்குட்டி
78. கோவை வடக்கு - தா.மலரவன்
79. தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி
80. கோவை தெற்கு - சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி
81. சிங்காநல்லூர் - ஆர்.சின்னசாமி
82. கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
83. பொள்ளாச்சி - எம்.கே.முத்துகருப்பண்ணசாமி
84. உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி வி.ஜெயராமன்
85. மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
86. பழனி - கே.எஸ்.வேணுகோபாலு
87. ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்ரமணி
88. நத்தம் - ரா.விசுவநாதன்
89. திண்டுக்கல் - பி.ராமுதேவர்
90.வேடசந்தூர் - சா. பழனிசாமி
91. அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
92. கரூர் - வி.செந்தில் பாலாஜி
93. கிருஷ்ணராயபுரம்(தனி) - எஸ்.காமராஜ்
94. குளித்தலை - ஏ.பாப்பாசுந்தரம்
95. மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
96. திருச்சி மேற்கு - என்.மரியம்பிச்சை
97. திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
98. திருவெறும்பூர் - டாக்டர் சி. விஜயபாஸ்கர்
99. முசிறி - என்.ஆர்.சிவபதி
100 பெரம்பலூர்(தனி) - இளம்பை ரா. தமிழ்செல்வன்
101 .கடலூர் - எம்.சி.சம்பத்
102. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ரா. ராஜேந்திரன்
103. சீர்காழி(தனி) - திருமதி மா. சக்தி
104. பூம்புகார் - எஸ்.பவுன்ராஜ்
105. நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்
106. கீழ்வேளூர்(தனி) - திருவாரூர் அசோகன்
107. திருத்துறைபூண்டி(தனி) - டாக்டர் கே. கோபால்
108. மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்
109. திருவாரூர் - குடவாசல் எம்.ராஜேந்திரன்
110. நன்னிலம் - ஆர்.காமராஜ்
111. கும்பகோணம் - ராம.ராமநாதன்
112. பாபநாசம் - ரா. துரைகண்ணு
113. திருவையாறு - எம்.ரங்கசாமி
114. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
115. கந்தர்வக்கோட்டை(தனி) - நா.சுப்ரமணியன்
116. விராலிமலை - வி.சி.ராமையா
117. புதுக்கோட்டை - டி.கருப்பையா
118. திருமயம் - பி.கே.வைரமுத்து
119. ஆலங்குடி - கு.பா.கிருஷ்ணன்
120. காரைக்குடி - சோழன். சித. பழனிசாமி
121. திருப்பத்தூர் - ஆர்.எஸ்.ராஜ. கண்ணப்பன்
122. சிவகங்கை - கே.ஆர்.முருகானந்தம்
123. மானாமதுரை(தனி) - ம.குணசேகரன்
124. சோழவந்தான்(தனி) - எம்.வி.கருப்பையா
125. மதுரை தெற்கு - செல்லூர் கே. ராஜூ
126. மதுரை மத்தி - வி.வி.ராஜன் செல்லப்பா
127. மதுரை மேற்கு - கே.சாலைமுத்து
128. திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ்
129. திருமங்கலம் - மா. முத்துராமலிங்கம்
130. உசிலம்பட்டி - பா.நீதிபதி
131. ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்வன்
132. பெரியகுளம்(தனி) - கே. இளமுருகன்
133. போடி நாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
134. கம்பம் - கே.சந்தனகுமார்
135. ராஜபாளையம் - கே.கோபால்சாமி
136. ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) - கே.சீனிவாசன்
137. சாத்தூர் - ஆர்.பி.உதயகுமார்
138. சிவகாசி - கே.டி.ராஜேந்திர பாலாஜி
139. விருதுநகர் - எம்.எஸ்.வி.பி.ரவி
140. அருப்புக்கோட்டை - வைகைசெல்வன்
141. பரமகுடி(தனி) - எஸ்.சுந்தர்ராஜ்
142. முதுகுளத்தூர் - மு.முருகன்
143. விளாத்திகுளம் -ஜி.வி.மணிகண்டன்
144. தூத்துக்குடி - ஜெனிபர் சந்திரன்
145. திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்
146. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்
147. ஒட்டபிடாரம்(தனி) - என்.சின்னதுரை
148. கோவில்பட்டி - கடம்பூர் சே.ராஜூ
149. சங்கரன்கோவில்(தனி) - சோ.கருப்புசாமி
150. வாசுதேவநல்லூர்(தனி) - டாக்டர் எஸ். துரையப்பா
151. கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்
152. தென்காசி - கே.அண்ணாமலை
153. ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்
154. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
155. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
156. நாங்குனேரி - ஆர்.எஸ். முருகன்
157. ராதாபுரம் - எல்.சசிகலா புஷ்பா
158. கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்
159. நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
160. குளச்சல் - பி.லாரன்ஸ்

கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., - இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குழுவினரிடம், காலை முதல், மாலை வரை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நடந்தது. ம.தி.மு.க.,வுடன் தொகுதி உடன்பாடு குறித்த முடிவும் எடுக்காத நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டது. இதனால், ம.தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., கூட்டணியில் இடம் இல்லை என்பது உறுதியாகி விட்டது. ம.தி.மு.க., வரும் 19ம் தேதி மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை அறிவிக்கும் என தெரிகிறது.

பிரசாரம்: ஜெயலலிதா, 18ம் தேதி காலை, விமானம் மூலம் மதுரை செல்கிறார். மதுரையில், மாலையில் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.