news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

மக்கள் வைதேரிச்சலை சம்பாதிக்கும் காஸ் நேரடி மான்னிய திட்டம் :


   நடுத்தர, ஏழைமக்களை ஏமாற்றும் மோசடியான திட்டம். முந்தய காங்கிரஸ் அரசு கொண்டுவந்து, இப்போதைய ப.ஜ.க அரசு செயல்ப்படுத்த துடியாய் துடிக்கும் மர்மம் என்ன.. மக்களின் மீது தணியாத பாசம் அக்கறையா?....
மானியத்தை முற்றிலுமாக அகற்ற நடக்கும் மறைமுக அரசியல் இது.
மக்களை மண்ணியம் இல்லாமல் வாங்க பழக்கப் படுத்த கொண்டுவரப்படும் மிக கொடூரமான திட்டம். நேரடியாக மான்னியம் உங்கட்டையே குடுக்கிறாங்களாம்....... எதால சிரிக்கிரதுனே தெரியலடா சாமி அதயும் சு.சாமிகிட்டதான் கேக்கணும் போல.  


மறைமுக வஞ்சகம் நடத்தும் ஆட்சியாளர்கள். விளக்கமாக சொல்லுகிறேன், ஒருவனுக்கு வாங்க வசதி இல்லை என்றபோது நண்பனோ, இல்லை உறவினரோ... நான் கொஞ்சம் காசு தரேன் நீ கொஞ்சம் காசு போட்டு வாங்கிகொள் என்று இரக்கம் கருணை கொண்டோ முடியாதவர்களுக்கு செய்வது தான் வழக்கம் .. இதுவே அதிகமானவர்களுக்கு என்றால் என்ன பண்ணுவாக அந்த கம்பெனிகரகிட்ட பேசி , இத்தன சதவீதம் நான் தரேன் மீதி குறைச்சி கொடுக்க சொல்றது தான் மரபு... ஏன் என்றால் வாங்க பணம் இல்லாத காரணத்தாலே தான் வாங்க முடியாம தவிக்கிறாங்க... காசு இருந்தா உங்ககிட்ட எதுக்குடா எதிர்ப்பாக்குறாங்க.. நாங்க முழுபணமும் குடுத்து
வாங்கனுமாம் அப்புறம் எங்க ஒவ்வொரு பாக்கெட்டுளையும் தனி தனியா காசு போட்டு போனவங்களாம்.

'' யாரைடா ஏமாத்த இந்த வேலை பாக்குறீங்க..''
நேரடியா மன்னியத்த காஸ் கம்பெனிக்கு ஒரு அக்கௌன்ட் கு குடுக்குறதா விட்டுட்டு, எல்லாரு அக்கௌன்ட் தனி தனியா போய் போடுவாங்களாம்... இதுல இன்னொரு மோசடியும் இருக்கு பேங்க் அக்கௌன்ட் எல்லாரையும் ஓபன் பன்னவச்சது.( மேலோட்டமா பார்த்தா நல்ல திட்டமா தான் இருக்கும்) அதுலையும் ஒரு பெரிய தொகைய வசுலிச்சாச்சு.. பவம் எத்தன பேர் தெரியுமா காசு இல்லாம அக்கௌன்ட் ஓபன் பண்ண முடியாம தவிக்கிறாங்க( பொய்யான வாக்குறுதிகள் ஓபன் பண்ண பணம் தேவை இல்லைன்னு விளம்பரம் மட்டுமே மினிமம் அம்மௌன்ட் கட்ட சொல்லி பேங்க் காரனுங்க ஒரு பக்கம் தொல்ல).
இந்த நேரடி திட்டங்கள் மோசடி நடக்கும் திட்டங்களுக்கு குடுங்க, விதவைகள், முதியவர்கள், கல்வி, மாற்றுதிறானளிகள்.. இப்படி எண்ணற்ற கொள்ளையடிக்கும் திட்டங்களுக்கு ஓகே...
இப்ப கேஸ்சுக்கு மானியத்தை முற்றிலுமாக தடைப்பன்னவே இந்த திட்டத்தில் செர்த்திருகிறார்கள்... மக்களை மொத்த பணம் குடுத்து வாங்க பழக்க படுத்தி( கொடுமைப் படுத்தி) ஒரு நாள் மொத்த விலைக்கு வாங்க வைக்க நடக்கும் மறைமுக ஏற்பாடு..

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு,பஸ்கட்டணம், மின்சார கட்டணம், அரிசி, பருப்புக்கு மொத்தமா ஒரு கிலோ அரிசி 600 ருபாய் குடுத்து 20 கிலோ அரிசி வாங்கிடுங்க... நாங்க அப்புறமா உங்களுக்கு 600ருபாய் பாங்குல உன் பாக்கெட்டுல போட்டுடுவோமுனு சொன்னா வேடிக்கைய இல்ல.. அந்த காசு இருந்தா எதுக்கு உங்ககிட்ட மாண்ணியம் எதிர்பாக்குறாங்க மக்கள்..........
கோடில மிதக்குறனுக்கு நிலம், தண்ணி, வரி,எல்லாம் இலவசம், தடை இல்லா மின்சாரம், கடன்பட்டு தன் காலுல சுயமா நிக்கனுன்னு ஆசைபடும் சிறுகுறுந்தொழிளுக்கு ஆரம்பிக்கிறவங்களுக்கு மின்சாரம் கட்டுப்பாடு, லோன் கிடைபதில்லை எந்த சலுகையுமில்லை........
இப்படியே போங்க ஏமாற்றும் அரசியல் வியாதிகளே உங்களை ஓட ஓட விரட்டும் நாள் வெகு விரைவில் ...

மக்களுக்கு வேலையும், சம்பாதிக்கும் திறணையும் வளர்த்து விட்டீர்கள் என்றால் மக்கள் எதுக்கு மான்னியத்த எதிர்பாக்குறாங்க...
அதுக்கான வேலைய பாருங்கள் அப்பா ஆள்பவர்களே!......
- பாமரனாக கவிதை பூக்கள் பாலா

செவ்வாய், 2 டிசம்பர், 2014

தற்கொலை தோல்வியின் முடிவல்ல....

தோழமைகளே!
எனக்காய் வேண்டாம் தற்கொலைகளை எதிர்ப்பதற்காக வேண்டி கொஞ்சம் நேரம் எடுத்து படித்து உங்கள் விவாதங்களை, கருத்துகளை வைக்கலாம்..நான் சிரம் தாழ்த்தி ஏற்பேன்.
ஒரு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்குறேன் தோழமைகளே !
இது ஒரு நண்பருக்கானதும், தோழமைகளும் என் நிலையை அறிந்து கொள்ளவும் இந்த பதிவு தேவைப்பட்டது.
முடிந்த வரை சுருக்கமா முடிச்சிடுறேன். ஒரு நண்பர் பெயர் வெளியிட விரும்பவில்லை, என் உள்டப்பாவில் வந்து நான் காதலில் தோல்வி அடைத்து மனவருத்தத்தில் இருக்கிறேன் எனக்காய் ஒரு கவிதை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டார் .
நானும் சரி என்று தோல்விக்கான காரணம் கேட்டேன்.. காதலியின் பெற்றோர் சம்மதிக்க வில்லை அதனால் அவள் தற்கொலை செய்து கொண்டாள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்றுரைத்தார். எனக்கு மனம் பதப்பதைதது அந்த நண்பரை நினைத்து இரண்டாண்டுகள் கடந்து மறக்க இயலா இதய வலியை போக்க வேண்டும் என்று உடனே சரி என்று சொல்லிவிட்டேன் பெறுங்கள் , இரவுக்குள் கவிதை வடிப்பேன் என்றுசொன்னேன். முயன்று முயன்று இன்று வரை இயல வில்லை.......
காரணம் ஒன்றுதான் அவருக்கான முதல் கவிதை எழுதி பதிவிட்டேன் நீங்களும் படித்திருக்கலாம்
'' நான் நீயாகவேண்டும்,
தீயில் வீழ்ந்து எழ்வேன்
உனக்காய் தினமும்...
காச்சிய ஆயுதம் ஏந்தி
கடைந்து வடிப்பேன்
காவியம் ஒன்று காயம் கொள்ளாதே!
தோழமையே சாய்ந்துக்கொள்
உன்ரணங்கள் என் இதயம் படிக்கும்........
- கவிதை பூக்கள் பாலா'' இது தான் அந்த கவிதை...
பிறகு நான் முயன்று பாக்குறேன் வார்தைகள் அக்கினி குளியல் செய்கின்றது, எரிமலையாய் வெடிக்கிறது, வார்த்தைகள் கொடுங்கோல் செய்கிறது.... கூரியா ஆயுதம் ஏந்துகின்றது..... ஆறுதலாய் கவிதை கேட்டார், ஆனால் வந்து விழுவதோ அக்ரோசமாய் கோவத்தின் உச்சம் தொடுகின்றது.
நான் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணமில்லாதவன்...
கோவம் ,தன்னபிக்கை, ரோசம் அதிகம், ஆனால் வீந்து கிடப்போரை அணைத்து ஆறுதல் சொல்லவே விழைவேன். காயத்திற்கு மமருந்திடவே எண்ணுவேன் வேடிக்கை பார்க்க மாட்டேன் என்னிடம் கேட்டு விட்டால்.
என்ன நடந்ததுன்னு கேக்குறீங்களா?
அந்த நண்பருக்கும் இதை படிப்பவர்களுக்கும் , இனி காதலிக்கும் எண்ணமிருபவர்களுக்கும், காதலித்து கொண்டிருபவர்களுக்கும்.. சொல்லி கொள்வது..........
அந்த சகோதரி தற்கொலை செய்து கொண்டார் என்பது என் கோவதிற்கான காரணம் என்றுணர்ந்தேன். உண்மை முற்றிலும் உண்மை....
தற்கொலை கோழைகளின் கடைசி ஆயுதம்........... அவைகளை என் மனம் ஒருநாளும் மன்னிக்காது, ஏற்காது.
அந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்லவேண்டுமென்றால் முதலில் நான் அந்த பெண்ணை வாயார வசவுபாட வேண்டி இருக்கும். உண்மையாய் பாசம் வைத்த காதலன் மனம் அதை ஏற்குமா? .,
தன்னால் உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரம் செய்ய கூடாது, இதுவே என்னிலைப்பாடு.
நண்பரே! என் மனமறிந்து நான் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்டதில்லை இது வரை. அது எப்போதும் அப்படிதான் .. நான் திமிர் பிடித்தவன் என்றும் கூட சிலர் சொல்லுகிறனர் . நான் கவலை கொள்ளேன்.
ஆனால் உன்னிடம் மனம் முவந்து மன்னிப்பு கேக்கிறேன் என்னை மன்னித்து விடு....... எனக்கு கவிதை வடிக்க தெரியவில்லை என்றும் நீ நினைத்திருக்கலாம் இல்லை உன்னை அவமதிக்கிறேன் என்றும் நினைத்திரிருக்கலாம். நான் உன்னை நன்றாங்க அந்த நிமிடமே உணர்ந்து கொண்டேன் .. வலிகளுக்கு மருந்தாக என் கவிதை இருக்கும் என்றால் ஓகே.. உன்னை காய படுத்திடுமோ என்ற தாயகத்திலேயே ....... மனதில் எழுதி எழுதி கிழித்தேரிந்தேன்....
காதல் செய்யுங்கள், கனிவோடு வாழுங்கள், ஒருபோதும் தயக்கத்தோடும், தன்னபிக்கை இல்லாமலும் , எதிர்த்து வெல்லும் திரனற்றும் போகாதீர்கள். பெற்றோர் சம்மதம் கொண்டா காதலித்தீர்கள்?, காதலித்த பிறகு பெற்றோரை சம்மதிக்க வைப்பதை பற்றி யோசிக்ககாமல் ஏன் இருக்குகின்றீர்கள்.
முயன்று சம்மதம் வாங்குங்கள், முதலில் உங்கள் காதலை யாரும் ஏற்க மறுக்கத்தான் செய்வார்கள் தனகொன்று வரும்போது அவரவர் நிலைப்பாடு மாறும். முதலில் உங்கள் காதலைபலப்படுத்துங்கள், உங்கள் இதயங்கள் இரண்டானாலும் உணர்வுகள் ஒன்றாய் இருக்கடும், ஒன்றாய் போராடுங்கள்....முடிவில் வெற்றியும் கிடைக்கும்.
அப்படி ஒரு வேலை முயன்று முடியவில்லை என்றால் உங்கள் கோழைத்தனத்தை நினைத்து வெக்கப்படுங்கள், முடிவெடுங்கள் பிரிந்திடுங்கள்.. வேவ்வேறு திசைகளை நோக்கி உங்கள் கோழைத் தனத்திற்கு நீங்கள் ஏற்கும் தண்டனையாய் நினைத்து வாழத்தொடங்குங்கள்.
இல்லை தனியாய் இருந்து கடைசி வரை போராடுங்கள். உயிருடன் இருந்து சாதித்தது காட்டுங்கள் நீங்கள் கோழைகளாகி.. எதிர்போரை வெற்றி கொள்ளவைக்கின்றீர்கள். வாழ பல வழிகள் உண்டு. வேறு திறமைகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் வாழ்த்து காட்டுங்கள். அடுத்தவர்களுக்கு உதவியாய் மாற்றி கொள்ளுங்கள்.
தற்கொலை என்றும் முடிவல்ல அது ஒரு முட்டாள் தனம் ஒரு நிமிடம் வீரனாய் சக துணியும் நீங்கள், ஏன்? வாழ முயலவில்லை.. அந்த சகோதரிக்கு தன்னபிக்கை கொடுக்காமல் போனதில் நண்பருக்கும் மிகபெரியப்பங்குண்டு. உங்கள் மீதான நம்பிக்கையை வளர்க்க தவறிவிட்டீர்கள். உங்கள் காதலுக்கு தடையை இருந்ததை காலிட்டு மிதியுங்கள். உங்கள் வாழ்வை உயர்த்தி காட்டுங்கள், எதிர்த்தவர்கள் வெட்கித் தலைக்குனிவார்கள். விடுத்தது வாழ்க்கையை தொலைப்பது எவ்வகையில் நியாயம்.
வருவதும் போவதும் நம்மிடம் இல்லை.
''வந்ததும் போவதும் நம்மிடம் இல்லை ,
வாழும் இடமும் நமக்கு நிரந்தரமில்லை ,
உறவுகள் எல்லாம் காலத்தின் பகுதிகள் ,
அதில் உண்மையும் பொய்மையும்,
யாதென்று அறிய முடிவதும்மில்லை ,
நம்பிக்கை மட்டுமே வாழ்வின் உச்சம் ,
அப்படி அனைத்திலும் இருந்தால்,
சந்தோசம் என்றும் வாழ்வில் நிச்சயம் ..........
- கவிதை பூக்கள் பாலா ''
இதுவும் என் வரிகளே! நான் எப்பொழதும் நம்பிக்கை அளிப்பவனாய் இருப்பேனே ஒழிய, வீழ்த்துபவனாய், வீழ்பவனாய் இருப்பதில்லை.
என் நட்பில் இருக்கும் என் தோழமைகளும் சகோதரிகளும் , உறவுகளும் நம்பிக்கையோடு இருக்கவே விழைகின்றேன், முடிந்த வரை என்னால் மனம் வெறுத்தவரை நம்பிக்கை அளிக்கவே விரும்புகின்றேன்.
நீங்கள் இப்போது சாதித்தது என்ன ?
இரண்டாண்டுகள் ஆனா பின்பும் இப்படி தினம்தினம் செத்து மடிகின்றீர்கள் இதற்கு முயன்று வாழ்திருக்கலமே! ... சிந்தியுங்கள் இனியாவது உங்கள் வாழ்க்கை மாற்றங்களில் ஈடுபடுங்கள்....நண்பர்களே!
ஏன்?அப்படி கவிதை எழுத முடியாதா? நீங்கள் கவிதை எழுத தெரியாதவரா ? என்று வீண் விவாதம் செய்ய துணியும் நண்பர்களுக்கும் ஒன்ரைச் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
நான் உங்கள் மனக்காயத்திற்கு மருந்தாகவும் சந்தோசத்திற்கு சாமரம் வீசுபவனாகவும், வலிகளுக்கு ஆறுதலாகவும் இருக்கவே விரும்புகின்றேன். தற்கொலையை ஆதரித்தே , இல்லை தோல்விகளை முதன்மை படுத்தியோ எழுத மாட்டேன். வலிகளை உணர்த்துவேன், வழிகளையும் உணர்த்துவேன் அது தான் "கவிதை பூக்கள் பாலா" இங்கே என் மலர்கள் பல அவதாரம் எடுத்திருக்கும். தொடர்ந்து படிப்பவர்கள் உணர முடியும்..
நான் உணர்வுகளை மதிப்பவன் என் உணர்வுகள என்னை எழுதத் துண்டுகின்றது. என் சுற்றம் என் பார்வைகள் சுழன்றுகொண்டே இருக்கும் என் மனம் ரசிக்கும் வெறுக்கும், துடிக்கும், கண்டிக்கும் அனைத்தையும் பதிவிடுவேன் இங்கே.
ஆனால் நான் சினிமா, கற்பனை என்றால் அங்கே அந்த கதாபாத்திரம் உணர்வுகளை மட்டுமே உணர்த்த வேண்டும் அங்கே நான் எழுதினால் நிச்சயம் எல்லா விதமான எழுத்துகளும் எழுதுவேன் காரணம் அங்கே ஒரு உணர்வு காட்ட படுகின்றதுஅதில் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால் அதிலும் நான் என் நம்பிகைகளை மட்டுமே விதைப்பேன் மீண்டு வருவதை மட்டுமே திரையிடுவேன். அதில் உறுதியாய் இருக்குறேன்.
நண்பர்களுக்காக இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கேன்.. அவர்களிடம் கருவை அறிந்த பிறகே எழுதுகிறேன். அதனாலேயே இந்த தன்னிலை விளக்கப்பதிவு எனக்கு தேவைப் பட்டது.
தற்கொலை முடிவல்ல.. அது ஒரு கொடுமையின் தொடக்கமே.
வீழ்வது உடல்மட்டுமே.உன் உணர்வுகள் இங்கே பலரிடம் பலவிதமாய் பத்திரத்து போய் இருக்கும் அது உன்னை நாளும் வசப்பாடும், உயிரோடு இருந்தால் இன்று வீழ்தாலும் பின் எழுந்து நீயே அந்த காயங்களுக்கும் மருந்திடலாம்.
தற்கொலைகளை வெறுப்போம் , தலைநிமிர்ந்து வாழ்வோம். வாழ்க்கை நம் கையில்... ( அணைத்து தற்கொலைகளுக்கும் சேர்த்தே இந்த பதிவு)
- கவிதை பூக்கள் பாலா .

வெள்ளி, 14 நவம்பர், 2014

கேள்வி கேக்கும் துணிச்சல் வந்து விட்டாலே பெண்ணியம் தானாக வளரும் !

  கேள்வி கேக்க தயக்கம் ஏன்? வருகிறது  , ஒன்று இயலாமை , இல்ல சோம்பேரித் தனம் , சுயநலம், சுயமாய் சிந்திக்க முடியாதவர்களும் , பயந்தவர்களும் , கோழைகளின் உச்சக் கட்டம் ..... யாரவது ஓட்டும் வண்டில வசதியா உக்காந்துகலாம்  என்ற எண்ணம் , இல்ல புட் போடு அடிச்சிட்டு பிடிக்கலன்னா  வேற வண்டிய பாத்துக்கலாம் என்ற எண்ணம, இதை சொல்லிகிட்டேன் போகலாம் , சுயமாக சிந்தித்து சுயக்  காலில் பயணிக்க கற்றுக் கொடுக்காததின் விளைவே இந்த அவலத்திற்கு காரணம், யாராவது நம்மள பாத்துக்கணும் அப்படிங்கிற பொறுப்பற்றத்  தனம் .......
 
அப்பா , அம்மா , கணவன் பெயரை தன்  பெயருடன் சேர்த்து கொள்வதும் விடுவதும் அவர்களாய் யோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் , இதில் பெண்ணை இதை செய்யாதே நீ அடிமைப்  பட்டு போய்விடுவாய் என்று திணிப்பது எப்படி நாயம் ? ........... கல்வி , அரசியல் , சமூக பொறுப்பு சுயசம்பாத்தியம் , தனித்து முடிவெடுக்கும் அறிவை பெண்களிடம் விதைக்க வேண்டுமே ஒழிய .. மீண்டும் வேறு விதத்தில் இதை செய், அதை செய் என்று மூளை சலவை செய்வது ஞாயமா ?... சிந்தித்து  செயல் பட விடுங்கள்.

 அணைத்து பெண்களும் , ஏன் மனித இனமே ஒரே மாதிரி பயணிப்பதில்லை ..... அவரவர் விருப்பதிற்கு வசதிக்கு ... மட்டுமே பயணிக்க முடியும் ....
ஒடுக்கப்படும் போதும் , அடிமை தனத்தில் இருந்து விடுபட உதவி மட்டுமே நாம்  செய்ய வேண்டும் , அவர்களுக்கும் சேர்த்து எப்படி நீங்கள்  யோசிப்பீர்கள்  , மீண்டும் நான் சொல்வதை கேள் என்ற எண்ணமே இன்று மேலோங்கி வருகின்றது வருதற்குரியது. தைரியம் , கேள்வி கேக்கும் துணிச்சல் வந்து விட்டாலே பெண்ணியம் தானாக வளரும் ..... ...
. பொருளாதாரம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது இதில் என்பது குறிப்பிடத் தக்கது
கவிதை பூக்கள் பாலா

வியாழன், 13 நவம்பர், 2014

கொஞ்சம் புரிஞ்சி போராடுங்க


நேற்று தினத்தந்தி டி வி ல இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரர் பேட்டி கொடுத்திருந்தார் . அதை பார்த்திருந்த தமிழக மக்களுக்கு அங்கு என்ன நிலைமை என்று தெரியும் ...... உண்மைகளை  இன்றைய தேவை என்ன என்றும் எதார்த்தத்தின் உண்மைகளை மேலோட்டமாக சொல்லி சென்றார்கள் தமிழக அரசியல் வியாதிகள் இனிமேலாவது கொஞ்சம் புரிஞ்சி போராடுங்க ... மீனவர் பிரச்சனைக்கு தீர்வும் இருக்குனு அதை நடைமுறை படுத்த இரண்டு அரசாங்கங்கள் குறிப்பாக இலங்கைஅரசு முட்டு கட்டை போடுகின்றது என்பதையும் புரிஞ்சிக்க முடியுது . அதை விட மிக பெரிய பணமுதளைகள் கைவரிசையும் மீனவர்கள் பிரச்னையில் முக்கிய காரணம் என்று புரிகிறது ... உண்மையை புரிந்து கொண்டு தமிழக அரசியல் வியாதிங்க அரசியல் மட்டும் பண்ணாம அவங்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து உதவுங்கள் ..............

தைரியம் மட்டுமே சொல்ல முடிந்தது........

வேண்ட பட்டவங்க சொன்னாங்க ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா கூட அதுல ஆபத்தான நிலையில இருக்குறவங்களுக்காக கடவுளிடம் வேண்டுவேன் அவங்க நல்ல படியா இருக்கனுன்னு , ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது நான் என்ன பாவம் பண்னேன்னு  மனசு உடஞ்சி போய் சொன்னாங்க.
மனசு இறுக்கமாயிடுச்சி . கொஞ்சம் யோசிச்சி பிறகு சொன்னேன்.
 நீங்க அப்படி இருக்குறதால தான் உங்களுக்கு இப்படி இந்த நிலைமையின்னு சொன்னேன் என்னனு கேள்வி கேக்குற பார்வை பாத்தாங்க ....... பதில் சொன்னேன் உங்க இரக்க குனத்தை தான் அவர்கள் தப்பா அவங்களுக்கு சாதகமா மாத்திகிட்டாங்க . அது உங்களுக்கு இப்பதான் முழுமையா புரிய ஆரம்பிசிருக்கு... ஆனால் உங்களால அதுல இருந்து அவ்வளவு சீக்கிரமா வெளிய  வர வாய்ப்பு மிக குறைவு.. அதனால இனிமேலாது யாரிடமும் இறக்கம் காட்டுறதற்கு முன்னாடி எதற்காக இரக்கம் காட்டுறோமுனு  காரணம் அறிந்து இரக்கம் காட்டுங்க உதவி செய்யுங்க என்றேன் ..... தப்பானவங்களுக்கு தப்பா உதவி  செய்தா  கடவுள் என்ன செய்வார் என்றேன் ....... மறுபடியும் நீங்க தப்பு பண்ண மாட்டீங்க எல்லாம் சரி ஆய்டும் என்று
தைரியம் மட்டுமே சொல்ல முடிந்தது ..... சில காரியங்களில் ஆறுதலும், தைரியமும் கூடவே  இருக்கிறோம் பயப்படதே என்பதை மட்டுமே
 நம்மால் சொல்ல முடிகின்றது ...

வியாழன், 6 நவம்பர், 2014

நுகர்வு கலாச்சாரம் என்ற முகமூடி போட்டு ..........

  நம் விருப்பங்களை நாம் முடிவு செய்ய முடியா வாழ்க்கை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருகிறோம் ......... நுகர்வு  கலாச்சாரம்  என்ற முகமூடி போட்டு .......... 

நம் எப்படி இருக்கவேண்டும் என்பது இன்று நம் கையில் இல்லை எதை வாங்க வேண்டும் அதுவும் நம்மிடமில்லை ,

நம் எதிர்கால கனவு வாழ்க்கைத்  துணை எல்லாமே இன்று யாரோ எங்கிருந்தோ டிசைன் செய்துக்கொண்டிருக்கிறனர் ........

 போலியான முகவேஷங்கள், ஆடம்பர அணிகலன்கள், ஆடைகள் வாகனங்கள் , கட்டிடங்கள் எல்லாமே நம் தகுதிக்கு மீறியவை. 

சதுரங்கவேட்டை படத்துல வரும் வசனம் எவ்வளவு எதார்த்தம் ஒருத்தன ஏமாத்துனன்னா அவன் ஆசைய முதல்ல தூண்டனும் . இதுவே இன்றைய வணிக நுகர்வு கலாச்சாரம் என்ற பெயரில் நம்மல ஆட்டிப்படச்சிட்டு இருக்கு. .

இன்று  மனிதன் எலக்ரானிக்ஸ் பொருட்கள் .காசுக் குடுத்து சுமக்கும் சுமையாளியா  மாறிட்டான்.அதை  அவன் சுமக்கலனா பைத்தியம் பிடிச்சி செத்துடுவான். இப்படி அடிவமைச்சது .யார் . தான் தான் என்று தன்  தேவையை மட்டுமே யோசிக்க வைத்தது யாரு கொஞ்சம் யோசிங்க.

 அப்பாக்கு ஆப்புரேசன்னா கூட ஆபர்ல ஸ்மார்ட் போன் வாங்க துடிக்கும் மகன்களை உருவாகியது யார்?. எங்கே போச்சி மனிதம் , சகமனிதன மதிக்க தெரியாதா பந்தா கலாசாராம் எங்க
இருந்து வந்தது .........

வளர்ச்சி தேவை நவீனம் தேவை இன்று அப்படியா? இருக்கு...தேவைக்கு மீறி தான் எல்லாமே என்னையும் சேர்த்துதான் சொல்றேன் .........

பதில் எங்க இருந்து வரும் யார்? சொல்லுவார்கள் ....
.புரியாமலே நாட்களை கடத்தும்  கடக்கோடி இந்தியன் .....

- கவிதை பூக்கள் பாலா

சனி, 1 நவம்பர், 2014

நாம ரெய்டு நடத்த முடியுமா ????????

இந்த முகநூல்ல எல்லாத்துக்கும் பாயரானுங்க ....... என்னமோ நாட்டுல இவனுகள தவிர எல்லாமே கெட்டவங்க மாதிரியும் ......... இவனுக மட்டுமே என்னமோ நல்லவங்க மாதிரியும் .......... போங்கடா போய் வேற எங்கயாவது கொடி  தூக்குங்க .......... அப்படி கொடிய பிடிக்குபோது இருக்கமா பிடிங்க ( இந்த படை போதுமா அஞ்சி ரூபா  தருவியா ......... இன்னு கொஞ்சம் வேணுமா? ) ...  சரியான நோக்கதுகாக சரியாய் கொடிய தூக்கி பிடிங்க ............. எதோ நானும் அடுக்கடுக்க ஸ்டேட்டஸ் போட்டேன்னு அரசியல் (வி )வாதிங்க மாதிரி கிளம்பி குளிர் காயாதீங்க ..........

திருட்டு டி. வி. டி. என்பது மன்னிக்க கூடாத தவறு தான் ......... அதை யாரும் திருட்டு DVD வாங்குறவன் கூட எதித்துட்டு தான்  இருக்காங்க, ( உள்ளுக்குள்ள மொக்க படாத எப்படி தான்  பாக்குறதுன்னு சிலர் புலம்புறது கேக்குது ) ..
இப்ப  அது இல்ல விஷயம் ....... எதேர்ச்சையாக திருட்டு கண்டு பிடித்தால் அதை தடுப்பதும் பிறகு போலீஸ் போகுறது ஓகே ........ ஆனால் களத்துல நானே இறங்குவேன் கடைகளை சோதனை போடுவேன்   துள்ளுறது தான் விஷயமே ? யாருகிட்ட அனுமதி வாங்கினீங்க ........ போலீஸ் துணையோடுதான் ரெய்டு நடத்தனும் ........ அது தான்  சட்டம் ....... உங்களுக்குன  ஒரு நாயமா ?...
திரையரங்க டிக்கெட் விலை அனுமதித்த விட அதிகமா விக்குறானுங்க அது தெரியல ?, உள்ள இருக்குற கடைகளில் விக்குற எதும் எம் .ஆர் .பி . ரேட்ல இல்ல ........ அரசாங்கம் வரிவிலக்கு கொடுத்தாலும் அதை குறைச்சி டிக்கெட் கட்டணம் வாங்குறதில்லை .......... பார்கிங் என்ற பேருல பன்ற அட்டகாசம் தெரியல .......... திரைல  வசணம்  பேசுவானுங்க ........ ஆனா அவங்களுக்கு எது சாதகமோ அதுக்கு கொடி  தூக்குவானுக ........
இது தெரியாம அவனுகளுக்கு இங்க ஜால்ராவும் வேகமா தட்டுவானுங்க ......நல்ல இருக்குடா உங்க நாயம் , அநியாயம் .....

போலீஸ் துணையோட ரெய்டு பண்ணுங்க உங்கள யாரும் வேணான்னு சொல்லல ........ இதை நானே நீயோ செய்திட முடியுமா ? யோசிச்சி பாருங்க ...
( சீக்கிரம் திருட்டு DVD ஒழிச்சிட்டு குறைந்த  விலையில் ஒரிஜினல் DVD கிடைக்க வழி பண்ணுக ......... DTH ல படாத ரிலீஸ் பண்ணுக நிறைய படங்க சிறிய பஜ்ஜெட் படங்களும் வெளிய வரும் ,,,,,,,,, ஒரு நாயமா ?
இது மாதிரி அனுமதி இல்லாம
சினிமாகாரங்க ஆபீஸ் ஆபீஸ்( எல்லா இடத்தையும் ) போய்

நாம ரெய்டு நடத்த முடியுமா ????????

வியாழன், 30 அக்டோபர், 2014

இந்தியனே உன் கடமை அல்லவா ? பிரஜை அல்லவா ? ............

உங்கள் ஆட்டம அடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ,
உலக அடுத்த முதலாளியாக துடிக்கும் சீனா நாட்டை முன் நிறுத்தும் சிங்களவனே , உன்னை வீழ்த்தி வீதியில் விடுவான் என்பதை மறந்துவிடாதே ! தன் நாட்டு மக்களையும்(இலங்கை தமிழன)  கொல்கின்றாய்..... இந்தியனையும் பதம் பார்க்கின்றாய் . ஏன் தமிழனை அடித்தால் மத்தியில் எவனும் கேக்க மாட்டான் என்ற அகந்தையா ? இல்லை .. அவர்களின் கை கூலியா சிங்கள வெறி பிடித்த தமிழன் பிணம் தின்னும் பேயா ?? ...... எவன் மறந்தாலும் தமிழன் தலை சாயாது உங்களின் கொட்டம் அடங்கும் நாளும் வெகு தொலைவில் இல்லை ...... அறிக்கை விட்டே ஆனந்தம் கொள்ளும் அதிகார வர்க்கங்களே ! வாய் சொல்லில் வீரனாய் இருந்தால் போதுமா ?
மத்தியில் யார் வந்தாலும் காட்சிகள் மட்டுமே மாறுகின்றது தமிழனின் மனமும் மீனவனின் மீது ஏவப்படும் கொடுமைகளும் மாற்றமில்லை ..........
யாரை நிந்திப்பது ..... மரணத்தில் இருந்து மீட்டெடுப்பது இந்தியனே உன் கடமை அல்லவா ?  பிரஜை அல்லவா ? ............

திங்கள், 27 அக்டோபர், 2014

பணம் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பதும் , அதற்கும் மதிப்பு குடுக்கணும்  என்பதும்,

அப்பதான் இன்றைய  உலகம் மனிதனை மதிக்கும் ......
பணமிருநத என்னவேனா பண்ணலாம் என்ற காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருகிறோம் ..........என்பதும் சமீப நாட்களாய் தான் புரிய ஆரம்பிச்சிருக்கு ............

சனி, 25 அக்டோபர், 2014

ஆபாசம் என்பதும் , கவாச்சி என்பதும்...........

பாசம் என்பதும் , கவாச்சி என்பதும் வித்தியாசமான பொருள் கொண்டவையே ! . பெண்கள் , ஆண்கள் உடுத்தும் உடைகளை
யார் நிர்ணயம் செய்வது, அது அவர் அவர் மனதையும், குடும்ப
சூழ்நிலைகளும், சமூக சூழலுமே ஆகும்......

டுத்தவர் முகம் சுழிகாத வண்ணம் இருந்தால் நலமே !...
ஆனால், அதை நாம் முடிவு செய்ய முடியாது. அறிவுரை சொன்னதற்கே பொங்கும் உலகில் , என்னவென்பது பிடிக்கவில்லை என்றால் விட்டு விடவேண்டியது தான் , அவரை அவமானபடுத்துவது யாரையும் கோபப்பட வைப்பது சகஜமே !... அதை நாகரீகமாக சொல்லி இருந்தால் இன்றைய முகநூலில் நடத்து கொண்டிருக்கும் தனி நபர் தாக்குதல் ஒருவேளை இல்லாமல் போய் இருக்குகலாம் ...........

பெண்கள் உடுத்தும் உடை அடுத்தவர்கள் பார்ப்பார்கள் என்பது அறிந்தே, இடம் பொருள் அறிந்தும், அதனால்  அவர்களுக்கும், அந்த உடையால் அவர்கள் மீதான மதிப்பீடு என்ன என்பதும்  அவர்கள் புரிதலோடான விருப்பம் சம்பந்தப் பட்டது , அதை கேட்பதும், இல்லை தடுப்பதும், அவர்களுக்கு  உரிமையான உறவுகள் பார்த்துக்கொள்வார்கள்........... அதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது .

இதுவே ! ஆண்களுக்கும் பொருந்தும் ............

பெண்ணியம் என்பதும் பெண் விடுதலை என்ன என்பதும், பெண் சுதந்திரம் எது என்பதும் இன்றைய பெண்களிடமே ஒருமித்த கருத்து இல்லை.....
கருத்து விவாதங்கள் வரவேற்கலாம் ......

தனி மனித சுதந்திரதிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது தவறு , மனித உரிமைமீறல் ஆகும்..... இது ஆணாக இருக்கும் பச்சத்தில் உடை சம்பந்தமான தாக்குதல் வந்திருக்குமா ? ....... விவாததிற்க்குரியதே!......

இன்று தாக்குதலுக்கும், வன்புணர்ச்சி, வன்கொடுமை இப்படி பாதிக்கப்படும் பெண்கள் பெருபான்மையானவர்கள் (ஒரு சில தவிர ) தைரியம் இல்ல முழுதாக மூடி இருக்கும் பள்ளி சிறுமிகளும், மனநலம் பதிக்கப் பட்டவர்கள், எதிர்க்க முடியா பலகீனமானவர்கள் தான் அவர்கள் இலக்ககாகின்றனர்.

பாசத்தை அருவருப்பை எதிர்க்க நினைபவர்கள் முதலில் நம் இல்லங்களுக்குள் புகுந்துவிட்ட டெலி சாப்பிங் என்ற பெயரில் நடக்கும் வியாபார விளம்பரங்களை எதிர்ப்போம் ........ அனைவரும் கைக்கோர்ப்போம்

அடிமைப் பட்டுகிடநத பெண்ணினம் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் சமூக சூழல் கல்வியால் சுய மரியாதையோடு கட்டுகளை உடைத்து சிறிது சிறிதாக விடுபட்டு கொண்டிருக்கும் காலம் ......... மாற்றங்கள் நிகழும்போதெல்லாம்
சில சகிப்பு தன்மைகள் தேவைப்படுகின்றது ......

நம் தாய், சகோதரியும், சக தோழிகள் என்ற பெண்ணினத்தோடே வாழ்க்கை பயணிக்கின்றோம் .......

பெண்களும் ஆண்களை எதிரியாய் எண்ணாமல் நாகரீகமான விவாதங்களோடே பயணிப்போம்..
- கவிதை பூக்கள் பாலா

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீபாவளி நாட்கள் ஞாபகத்துக்கு வந்துடுது .......

குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கி தரும்போது ஏனோ  நம்ம குழந்தை பருவ தீபாவளி நாட்கள் ஞாபகத்துக்கு வந்துடுது ...........
அப்பாவ எதிர் பார்த்து காத்து கிடக்கறது வந்த பிறகு என்ன வங்கி வந்திருப்பாங்க பக்கத்துக்கு வீடு எதிர் வீடு விட அதிகமா வெடி போடணும் .....
நைட் எல்லாம் தூக்கம் வரமா அந்த வெடிகளை பாத்துடே  இருந்தது .......
காலைல பட்டாசு வெடிச்சி வீட்டுக்கு முன்னாடி குப்பைய யாரு அதிகமா போட்டோமுனு  கணக்கெடுப்பு   நடத்தினது ........
ஒரு பக்கம் அப்பா.... காச கரியாகினதுக்கு பதிலா இன்னொரு நல்ல துணி எடுதிருக்கலாமுன்னு புலம்பினது எல்லாம் மன திரையில் தீபாவளி ரிலீச ஓடுது ... நாம குழந்தைகளை பார்க்கும் போது ........... சந்தோசமும் சின்னக் கவலையும் கலந்துதான் இப்போதைய அப்ப்க்களின் நிலை ( எங்க மனைவிய விட்டுடீங்கனு நீங்க புலம்புறது எனக்கு புரியுது இதை எல்லாமா வெளிய சொல்லிக்கிட்டு போங்க நீங்க .....)

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

குறட்டையை நிறுத்த வழி இருக்கு !

kurattai,thookkam,thokkai,saththam

   இந்த வேலை சீராக நடந்துகொண்டு இருந்தால்தான் நாம் ‘இருக்கிறோம்’ என்று அர்த்தம். பஞ்ச பூதங்களுள் ஒன்றான காற்று, நம் உடலுக்குள் ஊடுருவி உலாவுவதும் பின் வெளிவருவதும் மிகமிக சிக்கலான - லாவகமான தொழில்நுட்பம். உணவின்றி, நீரின்றி சில பல நாட்கள் வரை வாழலாம். காற்றின்றி சில நிமிடங்களாவது தாக்குப் பிடிக்க முடியுமா? மனித உடலில் காற்றைக் கையாள்வது நுரையீரலே. காற்றின் உதவியோடு ரத்தத்தைச் சுத்திகரித்து அனுப்பும் நுரையீரலின் ஆரோக்கியமும் சுவாசப் பிரச்னைகளுக்குத் தீர்வு!

ஆயிரத்தெட்டு ஸ்பேர் பார்ட்ஸோடு நாம் அம்மாவின் வயிற்றிலிருந்து பிறக்கிறோம். அவற்றில் முதன்முதலாக இயங்கத் தொடங்குபவை சுவாச உறுப்புகள்தான். அதுவரையில் தாயிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை தொப்புள் கொடி மூலமாகப் பெற்று வந்த குழந்தை, தானே சுயமாக மூக்கு வழியே சுவாசித்து, நுரையீரலால் ரத்தத்தை சுத்திகரிக்கத் தொடங்கும்போதுதான் அது தனி மனிதனாகிறது.

உள்ளே நுழைவது ஒரே காற்றுதான். அதில் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு, அவசியமானது, வெளியேற்றப்பட வேண்டியது எனப் பிரித்துப் போட்டு வேலை பார்க்கிறது நம் நுரையீரல். மூக்கில் காற்று நுழைந்தவுடன் அங்குள்ள ரத்தத் தந்துகிகள் காற்றிலுள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி, கார்பன் டை ஆக்ஸைடு போன்ற மாசுகளை வெளியேற்றுகின்றன. காற்று உள்ளே நுழைகிற பாதை, மற்றும் மாசுகள் வெளியேறுகிற பாதை என அந்த இருவழிப்பாதை சீராக இருக்க வேண்டியது அவசியம். அது பாதிப்புக்கு உள்ளாகிறபோதே மூக்கடைப்பு ஏற்படுகிறது. சுவாசப் பாதையில் ஏற்படும் இந்தத் தொற்று, நாள்பட்ட பாதிப்பாகி நுரையீரலை அடையும்போது ஆஸ்துமாவாக மாறுகிறது.

சுவாசக் கோளாறுகள் பெரியவர்களைவிடக் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுவது சகஜம். வெளிக்காற்றில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்க்கும் திறன் குழந்தைகளிடம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்தக் காலத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்மாமன் மோதிரத்தால் தேனைத் தொட்டு நாக்கில் தடவும் பழக்கம் இருந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தண்ணீருக்குள் தள்ளி விட்டால்தான் நீச்சல் வரும் என்பது போல, பாக்டீரியாக்களை அறிமுகம் செய்தே நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் முறை இது. வெளிச்சூழலில் இருக்கும் பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் தேனுடன் சேர்ந்து பல்கிப் பெருகி குழந்தையின் ரத்தத்தில் கலக்கும்போது, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டிவிடப் படுகிறது.

அந்நியர்களை எதிர்க்கும் படைவீரர்கள் போல இந்த சக்தி அணிவகுத்து நிற்கிறது. இப்படி அடிக்கடி வெளிக்கிருமிகள் உடலுக்குள் நுழைவதும், அவற்றுக்கு உடல் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக நடைபெறும் இந்த நிகழ்வுகளே குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வீரியம் மிகுந்ததாக ஆக்குகிறது. இப்படி அடிக்கடி என்ட்ரி கொடுக்கும் கிருமிகளை ‘நல்லது செய்யும் பாக்டீரியாக்கள்’ என்றே சொல்லலாம். அவைதானே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகக் காரணம்! இன்றோ, பிறந்தவுடனேயே ஆன்டிபயாடிக் மருந்துகளைச் செலுத்துவதால் இந்த ‘நல்லது செய்யும் பாக்டீரியாக்கள்’ அழிக்கப்பட்டு விடுகின்றன. விளைவு... சளி, இருமல், ஜுரம் என்று அடிக்கடி அவதிப்படுவதுதான்.

இதைத் தடுக்க குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை பலமாக்க வேண்டியது அவசியம். எதிர்ப்பு சக்தி இல்லாத மனிதர்கள் எறும்புக்கடிக்குக் கூட பயந்துதான் ஆக வேண்டும். நம் முன்னோர்கள் இயற்கையோடு கை குலுக்கி வாழ்ந்த வாழ்க்கைக்குக் காரணம் அவர்களின் மிதமிஞ்சிய எதிர்ப்பு சக்திதான். நம் உடலில் எதிர்ப்பு சக்திக்காகவே இயங்கும் ‘நல்ல’ உறுப்பு ஒன்று உண்டு. தைமஸ் சுரப்பி என்பார்கள் அதை. நோய்க்கிருமிகள் என்னும் தீவிரவாதிகளுக்கு எதிராக வெள்ளையணுக்களை அனுப்பி போர் செய்யும் கேப்டன் இந்த தைமஸ்தான்.

24 மணிநேரமும் இடை விடாமல் வெளிக்காற்றை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் நுரையீரலுக்குத்தானே கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம். அதை உணர்ந்துதானோ என்னவோ இயற்கையே இந்த தைமஸ் கேப்டனை நுரையீரலுக்கு அருகே அமைத்துள்ளது. இந்த தைமஸ் சுரப்பியைத் தூண்டுவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிறது அக்கு மருத்துவம். பிற்காலத்தில் ஆஸ்துமா தாக்காத வண்ணம் இன்றைக்கே நம் குழந்தைகளிடம் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும் முறை இது.

குழந்தைகளின் உள்ளங்கை, உள்ளங்கால்களில் நடு விரல் மற்றும் மோதிர விரல்களுக்குக் கீழே உள்ள அக்கு புள்ளிகள், தைமஸ் சுரப்பியைத் தூண்டக் கூடியவை. இந்தப் புள்ளிகளில் தினமும் லேசான அழுத்தம் கொடுத்துவந்தால், பின்னாளில் ஆஸ்துமா தொல்லை ஏற் படாமல் நம் குழந்தைகளை முழுவதுமாகக் காக்கலாம். ஏற்கனவே ஆஸ்துமாவால் அவதிப்படுகிற பெரியவர்களுக்கு உள்ளங்கையிலுள்ள நுரையீரல் புள்ளிகளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால், கொஞ்ச நாளில் காணாமல் போகும் பிரச்னை.

சுவாசம் தொடர்பான மற்றொரு பரவலான பிரச்னை, குறட்டை. கணவர் குறட்டை விடுகிறார் என்பதற்காக மனைவி விவாகரத்து வாங்குவதெல்லாம் வெளிநாடுகளில் நடக்கிறது. நுரையீரலின் இயக்க சக்தி குறைவதே குறட்டைக்கான முக்கியக் காரணம். அக்குபிரஷரில் நிமிடங்களில் குறட்டையை நிறுத்தி விடலாம். குறட்டை விடுபவர் தூங்கும்போது அவருடைய மூக்கின் கீழுள்ள அக்குப் புள்ளியை லேசாக அழுத்தினால் போதும்... சட்டென நிற்கும் குறட்டை. தொடர்ச்சியாக இப்படிச் செய்து வந்தால் நிரந்தரமாகவே குறட்டையை விரட்டி விடலாம்!

சனி, 30 ஆகஸ்ட், 2014

ஒரு டவ்ட் தான் .

நடிகர் பார்த்திபன்  மீடியாவுல அடிப்பேன் உதைப்பேன்னு பே ட்டி எல்லாம் குடுக்கிறாரு இத எப்படி அரசாங்கம் கண்டுகமா இருக்கு !!!!!!!!
திருட்டு டிவிடி பத்தி புகார் குடுக்காம இவரே ! களத்துல இறங்கிட்டறாம்.........
பாவம் ........... இவர நினச்சா ......இதுவே வேற யாரும் பேசினா எப்படி விட்டுடுவாங்களா ? ஒரு டவ்ட் தான் .. ஹி ...ஹி ..ஹி ..

சனி, 9 ஆகஸ்ட், 2014

சிறு நீரகக் கல்......... ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!

Photo: சிறு நீரகக் கல்
ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!

   இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர். தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை. இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான். பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம். சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்? சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், "கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம். இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது. கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன. இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும். "திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர். அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்!


இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர். தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை. இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான். பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம். சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்? சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், "கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம். இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது. கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன. இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும். "திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர். அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்!

திங்கள், 30 ஜூன், 2014

திருமணத்திற்கு முன் ஒவ்வொரு ஆணும் தவறாமல் செய்ய வேண்டிய 15 விஷயங்கள்!!!

1. வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் 
உங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குங்கள். ஏனெனில், உங்களுக்கு வரப்போகும் துணைவியார் இவற்றை வாங்குமளவிற்கு, உங்களை சுதந்திரமாக விட்டு விடுவார் என்று சொல்லுவதற்கில்லை.
2.பிடித்த படங்களை பார்த்துக் கொள்ளுங்கள் 
உங்களுக்குப் பிடித்த ஆக்ஷன் திரைப்படங்களை பாருங்கள். திருமணத்திற்குப் பிறகு, நீங்கள் பார்க்கக் கூடிய திரைப்படங்களின் சுவையில் 'மாற்றங்கள்' திணிக்கப்படலாம்.
3.சத்தியம் வேண்டாம்
 எப்பொழுதும் இந்த பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாக இருந்தால், பின் நாட்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். எந்தப் பெண்ணும், ஆபத்தில்லாத சத்தியங்களைக் கூட ஏற்றுக் கொள்ள மாட்டாள்.

4.நண்பர்களை சந்தித்துக் கொள்ளுங்கள் 
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த நண்பர்கள் அனைவரையும் அழைத்து சந்தியுங்கள். சந்திப்பு முடிவதற்கு முன்னதாக உங்களுடைய திருமணத்தைப் பற்றிய தகவலை அவர்களுக்கு கொடுத்து, முறையாக அனைவருக்கும் திருமண அழைப்பிதழைக் கொடுங்கள்.
5.பேசுதல் மற்றும் உணர்வை வெளிப்படுத்துதல் 
ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது மற்றும் உங்களுடைய உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாமலிருந்தால், உங்களுடைய திருமணம் மரண அடியாகவே இருக்கும். எனவே, முடிந்த வரை முன்பே பழகிக் கொண்டு, துன்பத்தை விரட்டுங்கள்.
6.எப்படி நடக்க வேண்டும் என்பதை கற்கவும் பழகுங்க! பழகுங்க! 
பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியமாலிருந்தால், உங்களுடைய திருமண வாழ்க்கை கடினமாகி விடும். எனவே, இதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
7.சமைக்கத் தெரிந்து கொள்ளவும் 
உங்களுடைய எதிர்கால மனைவியிடம் நல்ல பெயரை வாங்கிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்பாராத சூழல்களில் வாழ்க்கையை காப்பாற்றும் அம்சமாகவும் சயைமல் இருக்கும்.
8.நிதிநிலைய ஒழுங்குபடுத்துதல்
 இதுவரையிலும் நீங்கள் எப்படித் தான் கடினமாக வாழ்க்கையை நடத்தியிருந்தாலும், எதிர்வரும் காலத்தில் உங்களுடைய வங்கிக் கணக்குகள் வெயிட்டாக மாற வேண்டிய அவசியம் உருவாகும். எனவே தயாராகுங்கள்.

9.குடும்பத்தை எப்படி நிர்வகிப்பது என்று தெரிந்து கொள்ளவும்
 உங்களுடைய பணத்தை, துணைவியாருடன் சேர்ந்து எப்படி நிர்வகிப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை மனைவி சேமிக்க வேண்டும் என்று நினைக்கும் போது, நீங்கள் ஊதாரித்தனமாக சூறையாட வேண்டாம். எனவே, பணத்தை எப்படி செலவு செய்வது என்று திட்டமிட்டு விட்டால் தான், மற்ற விஷயங்கள் எல்லாம் வேகமாக நடக்கும்.

10.தனியாக பயணம் செய்யுங்கள்
 ஏதாவதொரு இடத்திற்கு தனியாக சென்று, இதுவரை நீங்கள் பெறாத அனுபவங்களை உங்களுக்குள் தேடுங்கள். இந்த அனுபவம் உங்களுக்கு மிகவும் மறக்க முடியாததாக இருக்கும்.


11.படிப்பு 
நீங்கள் விரும்பியதையெல்லாம் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அது கிடார் வாசிக்கக் கற்றுக் கொள்வதாகவோ அல்லது ஸ்பானிய மொழியாகவோ கூட இருக்கலாம். ஏனெனில், இது போன்ற பயனுள்ள பொழுதுபோக்குகளுக்கு திருமண வாழ்வில் இடம் கிடைப்பது அரிது.

12.உங்களுடைய விருப்பத்தை தொடருங்கள் 
ஏனெனில், நம்மில் பெரும்பாலானவர்கள் உண்மையில் செய்ய விரும்புவதும் மற்றும் செய்து கொண்டிருப்பதும் வெவ்வேறான பணிகளே! எனவே உங்களுக்கு விருப்பமானதை கண்டு பிடியுங்கள், அதை செய்வதில் சில மணிநேரங்களை செலவிடுங்கள். அது நீங்கள் கிப்புட்ஸ்களில் வாழ வேண்டும் என்ற விருப்பமாக இருந்தால் கூட செய்யலாம்.

13.குழந்தைகள் பற்றிய எண்ணம் எப்பொழுது? 
எத்தனை குழந்தைகள் என்பதை நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள். அதே போல குழந்தையை பெற்றுக் கொள்ளும் முன்னதாக, நிதி நிலையையும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த விஷயங்களை முதல்படியாக யோசித்து, திருமண வாழ்க்கையின் வசந்தத்திற்கு தாயாராகுங்கள்.

14.ஒழுக்கமான மனிதராக வாழத் தொடங்குங்கள் 
உங்களுடைய வீட்டில் சிகரெட் பிடித்த துண்டுகளுக்கும், ஒயின் குடித்த பாட்டில்களுக்கு இடம் கொடுத்திருந்தால், இனிமேலாவது சாதாரணமான, ஒழுக்கமான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். ஏனெனில், திருமணத்திற்கு பின்னர் விடுதியிலோ அல்லது பேயிங் கெஸ்ட்-ஆகவோ நீங்கள் இருக்கப்போவதில்லை.

15.நான் எதுவரை செல்ல முடியும்? 
திருமணத்திற்கான பணிகளை செய்யும் முன்னதாக, உங்களால் எந்த அளவிற்கு சமாளிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். இந்த முடிவின் போது, பல்வேறு விதமான தொடக்கங்கள் மற்றும் முடிவுகளுக்கான சூழல்களை கணக்கில் கொள்ளவும், இவற்றை தான் நீங்கள் ஒவ்வொரு நாளும் திருமணத்திற்குப் பின்னர் செய்ய வேண்டியிருக்கும். மேலும், உங்களைப் பொறுத்த வரையிலும் மற்றும் உங்களுடைய விருப்பத்தைப் விருப்பத்தைப் பொறுத்த வரையிலும் முழுவதும் நேர்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

ஏதோ  நான் சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் உங்க விருப்பம் . வாழ்த்துக்கள்  நண்பர்களே ! நிறைய பேருக்கு இப்பவே கண்ண கட்டுதுதா !!!!!

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

ஒன்னு  சொல்லட்டுமா என் மக்களே !    vaal ithai unmaiyakae nadaimurai padithi kondiruntha oru ilanjar electionla enga areala ninnaru , ellarum ethe etho kuduthanga , bt ivar kettathu ennala ethu kudukka mudiyathu aanal ennaku vottu podunga ippa seiyaratha vida athigamaa urimaiyoda seivenu sonnaru , appuram nadanthathu than vera athu miga kodumai avar  than jeika porarnu oru level vanthuduchi udane pirabala katchiya sernthavangala avar oru kuraintha amount kuduthu avara sarkattitanga appuram avar antha election la velaiye seiyama othinkittaru apuram nadanthu ungalukke theriyum athe than yaaru athigam kuduthangalo avanga than jeichchanga , ithula irunthu sollavarathu nallaanga irunthalum onnu avangaezhmaiya payanpaduthikiranga illa miratta paduranga athai meeri inga velai seiya vendum enraal miga periya pana palam illa periya makkal pinnali irukka vendum appa than nama ninaikirathula 10 % aavathu seiya mudiyum . ithu thanga namma sananaayagam .vaiga sananayagam pana nayagam

சனி, 5 ஏப்ரல், 2014

கவனிப்பார்களா தமிழக பெரிய கட்சிகள் ..........

H Umar Farook நடமாடும் டாஸ்மாக் வண்டி வந்தால் தனியாக டாஸ்மாக் இடம் தேவையில்லை ! அதற்க்கு மின்சாரம் தேவை இல்லை ! இதனால் மின் தடை குறையும் !!
ஒவ்வொரு வார்டிற்க்கும் ஒரு நடமாடும் டாஸ்மாக் வண்டி வைத்துகொண்டால் ஒரே ஊழியர் போதும் ! அரசுக்கான செலவு குறையும் !
வீட்டிற்க்கே டாஸ்மார்க் வண்டி வருவதால் வீட்டிலே இருந்தபடி குடிக்கலாம் ! குடித்து விட்டு அவர்கள் வண்டி ஒட்டிக்கொண்டு வீட்டுக்கு வரத் தேவை இல்லை !
இதனால் Drunken and Drive இனி இருக்காது ! அதனால் விபத்துக்கள் குறையும் !

குடித்து விட்டு நடு ரோட்டிலே விழுந்து கிடக்க வேண்டியது இல்லை !
ஒரே தெருவில் நான்கைந்து முறை டாஸ்மார்க் வண்டி வந்தாலே டாஸ்மாக் போக சோம்பேறித் தனப் பட்டுக் கொண்டு
நாளைக்கு குடிக்கலாம் என யாரும் இருந்து , (அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தி)
விட முடியாது !
வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்துவிட்டால்
இனி யாரும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்க மாட்டார்கள் !
குடும்பத்தோடு குடிக்க பேம்லி பேக் கொண்டு வரலாம் !
அதனால் இன்னும் வருமானம் உயரும் !
திருவிழா , திருமண மண்டபங்கள் , கட்சி மீட்டிங் குகள் நடக்கும் இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நடமாடும் டாஸ்மாக் வண்டிகளை அனுப்பி வருமானத்தை பெருக்கலாம்!
பள்ளி வளாகங்களில் ஐஸ் விற்பது போல் , சரக்கு விற்று
மாணவர்களுக்கு இப் பழக்கத்தை பள்ளி பருவத்திலே கொண்டு வரலாம் ! இதனால் வருமானம் அதிகரிக்கும் !
இப்படி ஒரு கமெண்ட் போட்டிருக்காரு படிக்கும் போது சிரிப்பு வந்தாலும் அதுக்குள்ள இருக்குற ஆபத்துக்கள் உங்களுக்கே புரியும் . அவர் என்ன நினச்சி இன்ன கமெண்ட் போட்டாரோ எனக்கு தெரியல ஆனால் இந்த அரசியவாதிகள் இந்த கொண்டுவராம பாத்துகோங்க . ஒரு விருப்பம் எல்லாத்துக்கும் தன் பெயர வைத்து கொள்ளும் திராவிட (ADMK, DMK) அரசியல் வியாதிகளே!! . இந்த மது சரக்குகளுக்கும் உங்க தான தலைவி தலைவர் பெற வச்சி சந்தோஷ படுங்கோ . அத மட்டும் என் செய்யறதில்ல . உங்க இலவசங்கள் எங்களுக்கு வேணா ஐந்து வருசத்துல சில ஆயிரங்கள குடுத்துட்டு ( அதுவும் நம்ம வரி பணத்துல ) குடுத்துட்டு . ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்தில் குடிக்க வச்சி உறிஞ்சிடுறீங்க . எதுக்கு இந்த கோல வெறி இந்த தமிழக மக்களிடம் . பாவம் எங்கள விட்டுடுங்க குறை பட்சம் இந்த ஒய்ன் சாப்ப மூடிடுவோமுனு வாக்குறுதி குடுத்து பாருங்களேன் . இது ஸ்டேட் சம்பந்த பட்டத இருந்தாலும் கண்டிப்பா அதிகமான தமிழக மக்கள் உங்களுக்கு ஒட்டு போட்டு அதிக சீட்டு குடுப்பாங்க இந்த வெயில்ல அலைய வேண்டியதில்ல ............. கவனிப்பார்களா தமிழக பெரிய கட்சிகள் .....................

செவ்வாய், 14 ஜனவரி, 2014

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு"

Photoநூடுல்ஸ் ஒரு குப்பை உணவு"

ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு.

யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.

'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப
்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும்.

ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.

ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது.

ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.

நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.

இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!