தமிழ் நடுநிலை ஊடகங்கள் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் ஊடகங்களே :


ஊடகங்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பாக மாற்றம் நோக்கிய போராட்டம்... இன்றைய பேரணியை கடைசி நிமிஷத்தில் பதிவு செய்து செய்தி சேகரித்த ஊடகங்கள் . கூட்டம் கூடாது என்று நினைத்தவர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம்.. அழைத்த ஊடகங்கள் வராமல் இருந்தது கூடிய தோழர்கள் கோசங்கள் அவர்களை ஒருவர் பின் ஒருவராக வரவழைத்தது ஆனால் நிகழ்வை பதிவு செய்த ஊடகங்கள் ஒட்டுமொத்தமாய் ஒளிபரப்பாமல் நிராகரித்துள்ளன..
இதில் சத்தியம் தொலைக்காட்சி மட்டுமே இந்த தொடக்க நிகழ்வை செய்தியாகவே வெளியிட்டு கொண்டுள்ளனர்... அவர்களுக்கு நன்றிகள்.. தமிழ் நடுநிலை ஊடகங்கள் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் ஊடகங்களே உங்களை எது தடுகின்றது செய்தி வெளியிட பயமா ? இல்லை தயக்கமா ?...
மாற்றம் மாற்றம் என்று மேடைகளை வாய் கிழியபேசி என்ன பயன் , உங்களின் பயம் அல்லது தயக்கம் எதனால் .. வெள்ள பாதிப்புகள் எதனால் என்ற விவாதம் எல்லாம் இன்று எங்கே காணாம போனது.. ஊடகங்களே ! உங்களையும் மீறி மக்கள் சக்தி பெரியது... நீங்கள் தேடிவரும் காலம் வரும்.. உங்கள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.. கரம் கொடுத்தால் மாற்றம் மிக விரைவில் தமிழகத்தில்..

கருத்துகள்