news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

வெள்ளி, 14 நவம்பர், 2014

கேள்வி கேக்கும் துணிச்சல் வந்து விட்டாலே பெண்ணியம் தானாக வளரும் !

  கேள்வி கேக்க தயக்கம் ஏன்? வருகிறது  , ஒன்று இயலாமை , இல்ல சோம்பேரித் தனம் , சுயநலம், சுயமாய் சிந்திக்க முடியாதவர்களும் , பயந்தவர்களும் , கோழைகளின் உச்சக் கட்டம் ..... யாரவது ஓட்டும் வண்டில வசதியா உக்காந்துகலாம்  என்ற எண்ணம் , இல்ல புட் போடு அடிச்சிட்டு பிடிக்கலன்னா  வேற வண்டிய பாத்துக்கலாம் என்ற எண்ணம, இதை சொல்லிகிட்டேன் போகலாம் , சுயமாக சிந்தித்து சுயக்  காலில் பயணிக்க கற்றுக் கொடுக்காததின் விளைவே இந்த அவலத்திற்கு காரணம், யாராவது நம்மள பாத்துக்கணும் அப்படிங்கிற பொறுப்பற்றத்  தனம் .......
 
அப்பா , அம்மா , கணவன் பெயரை தன்  பெயருடன் சேர்த்து கொள்வதும் விடுவதும் அவர்களாய் யோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் , இதில் பெண்ணை இதை செய்யாதே நீ அடிமைப்  பட்டு போய்விடுவாய் என்று திணிப்பது எப்படி நாயம் ? ........... கல்வி , அரசியல் , சமூக பொறுப்பு சுயசம்பாத்தியம் , தனித்து முடிவெடுக்கும் அறிவை பெண்களிடம் விதைக்க வேண்டுமே ஒழிய .. மீண்டும் வேறு விதத்தில் இதை செய், அதை செய் என்று மூளை சலவை செய்வது ஞாயமா ?... சிந்தித்து  செயல் பட விடுங்கள்.

 அணைத்து பெண்களும் , ஏன் மனித இனமே ஒரே மாதிரி பயணிப்பதில்லை ..... அவரவர் விருப்பதிற்கு வசதிக்கு ... மட்டுமே பயணிக்க முடியும் ....
ஒடுக்கப்படும் போதும் , அடிமை தனத்தில் இருந்து விடுபட உதவி மட்டுமே நாம்  செய்ய வேண்டும் , அவர்களுக்கும் சேர்த்து எப்படி நீங்கள்  யோசிப்பீர்கள்  , மீண்டும் நான் சொல்வதை கேள் என்ற எண்ணமே இன்று மேலோங்கி வருகின்றது வருதற்குரியது. தைரியம் , கேள்வி கேக்கும் துணிச்சல் வந்து விட்டாலே பெண்ணியம் தானாக வளரும் ..... ...
. பொருளாதாரம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது இதில் என்பது குறிப்பிடத் தக்கது
கவிதை பூக்கள் பாலா

வியாழன், 13 நவம்பர், 2014

கொஞ்சம் புரிஞ்சி போராடுங்க


நேற்று தினத்தந்தி டி வி ல இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரர் பேட்டி கொடுத்திருந்தார் . அதை பார்த்திருந்த தமிழக மக்களுக்கு அங்கு என்ன நிலைமை என்று தெரியும் ...... உண்மைகளை  இன்றைய தேவை என்ன என்றும் எதார்த்தத்தின் உண்மைகளை மேலோட்டமாக சொல்லி சென்றார்கள் தமிழக அரசியல் வியாதிகள் இனிமேலாவது கொஞ்சம் புரிஞ்சி போராடுங்க ... மீனவர் பிரச்சனைக்கு தீர்வும் இருக்குனு அதை நடைமுறை படுத்த இரண்டு அரசாங்கங்கள் குறிப்பாக இலங்கைஅரசு முட்டு கட்டை போடுகின்றது என்பதையும் புரிஞ்சிக்க முடியுது . அதை விட மிக பெரிய பணமுதளைகள் கைவரிசையும் மீனவர்கள் பிரச்னையில் முக்கிய காரணம் என்று புரிகிறது ... உண்மையை புரிந்து கொண்டு தமிழக அரசியல் வியாதிங்க அரசியல் மட்டும் பண்ணாம அவங்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து உதவுங்கள் ..............

தைரியம் மட்டுமே சொல்ல முடிந்தது........

வேண்ட பட்டவங்க சொன்னாங்க ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா கூட அதுல ஆபத்தான நிலையில இருக்குறவங்களுக்காக கடவுளிடம் வேண்டுவேன் அவங்க நல்ல படியா இருக்கனுன்னு , ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது நான் என்ன பாவம் பண்னேன்னு  மனசு உடஞ்சி போய் சொன்னாங்க.
மனசு இறுக்கமாயிடுச்சி . கொஞ்சம் யோசிச்சி பிறகு சொன்னேன்.
 நீங்க அப்படி இருக்குறதால தான் உங்களுக்கு இப்படி இந்த நிலைமையின்னு சொன்னேன் என்னனு கேள்வி கேக்குற பார்வை பாத்தாங்க ....... பதில் சொன்னேன் உங்க இரக்க குனத்தை தான் அவர்கள் தப்பா அவங்களுக்கு சாதகமா மாத்திகிட்டாங்க . அது உங்களுக்கு இப்பதான் முழுமையா புரிய ஆரம்பிசிருக்கு... ஆனால் உங்களால அதுல இருந்து அவ்வளவு சீக்கிரமா வெளிய  வர வாய்ப்பு மிக குறைவு.. அதனால இனிமேலாது யாரிடமும் இறக்கம் காட்டுறதற்கு முன்னாடி எதற்காக இரக்கம் காட்டுறோமுனு  காரணம் அறிந்து இரக்கம் காட்டுங்க உதவி செய்யுங்க என்றேன் ..... தப்பானவங்களுக்கு தப்பா உதவி  செய்தா  கடவுள் என்ன செய்வார் என்றேன் ....... மறுபடியும் நீங்க தப்பு பண்ண மாட்டீங்க எல்லாம் சரி ஆய்டும் என்று
தைரியம் மட்டுமே சொல்ல முடிந்தது ..... சில காரியங்களில் ஆறுதலும், தைரியமும் கூடவே  இருக்கிறோம் பயப்படதே என்பதை மட்டுமே
 நம்மால் சொல்ல முடிகின்றது ...

வியாழன், 6 நவம்பர், 2014

நுகர்வு கலாச்சாரம் என்ற முகமூடி போட்டு ..........

  நம் விருப்பங்களை நாம் முடிவு செய்ய முடியா வாழ்க்கை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருகிறோம் ......... நுகர்வு  கலாச்சாரம்  என்ற முகமூடி போட்டு .......... 

நம் எப்படி இருக்கவேண்டும் என்பது இன்று நம் கையில் இல்லை எதை வாங்க வேண்டும் அதுவும் நம்மிடமில்லை ,

நம் எதிர்கால கனவு வாழ்க்கைத்  துணை எல்லாமே இன்று யாரோ எங்கிருந்தோ டிசைன் செய்துக்கொண்டிருக்கிறனர் ........

 போலியான முகவேஷங்கள், ஆடம்பர அணிகலன்கள், ஆடைகள் வாகனங்கள் , கட்டிடங்கள் எல்லாமே நம் தகுதிக்கு மீறியவை. 

சதுரங்கவேட்டை படத்துல வரும் வசனம் எவ்வளவு எதார்த்தம் ஒருத்தன ஏமாத்துனன்னா அவன் ஆசைய முதல்ல தூண்டனும் . இதுவே இன்றைய வணிக நுகர்வு கலாச்சாரம் என்ற பெயரில் நம்மல ஆட்டிப்படச்சிட்டு இருக்கு. .

இன்று  மனிதன் எலக்ரானிக்ஸ் பொருட்கள் .காசுக் குடுத்து சுமக்கும் சுமையாளியா  மாறிட்டான்.அதை  அவன் சுமக்கலனா பைத்தியம் பிடிச்சி செத்துடுவான். இப்படி அடிவமைச்சது .யார் . தான் தான் என்று தன்  தேவையை மட்டுமே யோசிக்க வைத்தது யாரு கொஞ்சம் யோசிங்க.

 அப்பாக்கு ஆப்புரேசன்னா கூட ஆபர்ல ஸ்மார்ட் போன் வாங்க துடிக்கும் மகன்களை உருவாகியது யார்?. எங்கே போச்சி மனிதம் , சகமனிதன மதிக்க தெரியாதா பந்தா கலாசாராம் எங்க
இருந்து வந்தது .........

வளர்ச்சி தேவை நவீனம் தேவை இன்று அப்படியா? இருக்கு...தேவைக்கு மீறி தான் எல்லாமே என்னையும் சேர்த்துதான் சொல்றேன் .........

பதில் எங்க இருந்து வரும் யார்? சொல்லுவார்கள் ....
.புரியாமலே நாட்களை கடத்தும்  கடக்கோடி இந்தியன் .....

- கவிதை பூக்கள் பாலா

சனி, 1 நவம்பர், 2014

நாம ரெய்டு நடத்த முடியுமா ????????

இந்த முகநூல்ல எல்லாத்துக்கும் பாயரானுங்க ....... என்னமோ நாட்டுல இவனுகள தவிர எல்லாமே கெட்டவங்க மாதிரியும் ......... இவனுக மட்டுமே என்னமோ நல்லவங்க மாதிரியும் .......... போங்கடா போய் வேற எங்கயாவது கொடி  தூக்குங்க .......... அப்படி கொடிய பிடிக்குபோது இருக்கமா பிடிங்க ( இந்த படை போதுமா அஞ்சி ரூபா  தருவியா ......... இன்னு கொஞ்சம் வேணுமா? ) ...  சரியான நோக்கதுகாக சரியாய் கொடிய தூக்கி பிடிங்க ............. எதோ நானும் அடுக்கடுக்க ஸ்டேட்டஸ் போட்டேன்னு அரசியல் (வி )வாதிங்க மாதிரி கிளம்பி குளிர் காயாதீங்க ..........

திருட்டு டி. வி. டி. என்பது மன்னிக்க கூடாத தவறு தான் ......... அதை யாரும் திருட்டு DVD வாங்குறவன் கூட எதித்துட்டு தான்  இருக்காங்க, ( உள்ளுக்குள்ள மொக்க படாத எப்படி தான்  பாக்குறதுன்னு சிலர் புலம்புறது கேக்குது ) ..
இப்ப  அது இல்ல விஷயம் ....... எதேர்ச்சையாக திருட்டு கண்டு பிடித்தால் அதை தடுப்பதும் பிறகு போலீஸ் போகுறது ஓகே ........ ஆனால் களத்துல நானே இறங்குவேன் கடைகளை சோதனை போடுவேன்   துள்ளுறது தான் விஷயமே ? யாருகிட்ட அனுமதி வாங்கினீங்க ........ போலீஸ் துணையோடுதான் ரெய்டு நடத்தனும் ........ அது தான்  சட்டம் ....... உங்களுக்குன  ஒரு நாயமா ?...
திரையரங்க டிக்கெட் விலை அனுமதித்த விட அதிகமா விக்குறானுங்க அது தெரியல ?, உள்ள இருக்குற கடைகளில் விக்குற எதும் எம் .ஆர் .பி . ரேட்ல இல்ல ........ அரசாங்கம் வரிவிலக்கு கொடுத்தாலும் அதை குறைச்சி டிக்கெட் கட்டணம் வாங்குறதில்லை .......... பார்கிங் என்ற பேருல பன்ற அட்டகாசம் தெரியல .......... திரைல  வசணம்  பேசுவானுங்க ........ ஆனா அவங்களுக்கு எது சாதகமோ அதுக்கு கொடி  தூக்குவானுக ........
இது தெரியாம அவனுகளுக்கு இங்க ஜால்ராவும் வேகமா தட்டுவானுங்க ......நல்ல இருக்குடா உங்க நாயம் , அநியாயம் .....

போலீஸ் துணையோட ரெய்டு பண்ணுங்க உங்கள யாரும் வேணான்னு சொல்லல ........ இதை நானே நீயோ செய்திட முடியுமா ? யோசிச்சி பாருங்க ...
( சீக்கிரம் திருட்டு DVD ஒழிச்சிட்டு குறைந்த  விலையில் ஒரிஜினல் DVD கிடைக்க வழி பண்ணுக ......... DTH ல படாத ரிலீஸ் பண்ணுக நிறைய படங்க சிறிய பஜ்ஜெட் படங்களும் வெளிய வரும் ,,,,,,,,, ஒரு நாயமா ?
இது மாதிரி அனுமதி இல்லாம
சினிமாகாரங்க ஆபீஸ் ஆபீஸ்( எல்லா இடத்தையும் ) போய்

நாம ரெய்டு நடத்த முடியுமா ????????