news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

காதலில் காமத்தை கலக்காதீர்கள்

 படித்ததில் பிடித்ததும் , தெரிந்துகொள்ள வேண்டியதும் , ஆம் வேண்டும் பல காலம் என் நினைக்கும் உறவுகள் மேன்பட கட்டு பாடுகள் மிக அவசியம்.........
 எதிர் பார்ப்பில்  கிடைக்கும் சுகம் மடியில் விழ்வதில் கிடைப்பதில்லை  ,  அருகில் இருப்பது பிடிப்பதில்லை( சுவைத்த அனைத்தும் அருமையாய் அமைவதில்லை )   , அதனால் மக்களே ! கொஞ்சம் அவசர படாதீங்க என்ன ? . அதிக நாள் உறவு நிலைக்க வேண்டுமானால் ..............காதலில் காமத்தை கலக்காதீர்கள் முழமையாக .......... ( கிளைமாக்ஸ் வரை ) ஓகே வா ........
  
திருமணமான தம்பதியரிடையே செக்ஸ் உறவு என்பது அவசியமான, மகிழ்ச்சி தரக்கூடிய விசயம்.ஆனால் காதல் பருவத்தில் காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது அவசியம் என்கின்றனர் காதல் பற்றிய ஆய்வாளர்கள். காதலிக்கும் போது உறவு அனுபவித்த உடன், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும்.
திருமணத்திற்கு முன் உறவில் ஈடுபடுவதில் தவறொன்றுமில்லை என்று கூறுபவர்கள் மேற்கொண்டு படித்து முடிவு செய்யுங்கள். வித்தியாசம் அதிகம் காதல் என்பது உணவை கண்டு ரசிப்பது. ஆனால் காமம் என்பது அந்த உணவை அனுபவித்து உண்பது என்கின்றனர் காதல் ஆய்வாளர்கள்.


ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது. தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.
பிரச்சினைகள் உருவாகும்
காதலர்கள் ஒருமுறை தவறு செய்துவிட்டால் அதுவே ஒரு தைரியத்தை ஏற்படுத்திவிடும். பின்னர் அடிக்கடி தவறு செய்யத் தூண்டும். மீண்டும் ஒருமுறை சம்மதிக்காவிட்டால், புதுசா என்ன என்பது போன்ற பேச்சுக்கள் வந்துவிட்டால் காதலில் மரியாதையும், அன்பும் காணாமல் போய்விடும்.
காதல் முறிந்து விடும்
காதலர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வருவது இயல்பானதுதான் அப்படிப்பட்ட நேரத்தில் உறவுக்கு சம்மதித்தது பற்றி கேவலமாக பேசப்பட்டுவிட்டால் காதல் முறிந்துபோய்விடும். பெண் யார் கேட்டாலும் உறவுக்க சம்மதிப்பவராக இருப்பார் என்ற எண்ணம் ஆணுக்கு வந்துவிடும்.
பிளாக்மெயில்
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம். ஒருவேளை காதலரை கைப்பிடிக்க முடியாமல் போய்விட்டால், வேறொருவரை திருமணம் செய்ய நேரும் பட்சத்தில் அந்த குற்ற உணர்வு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். பெண்ணை பிளாக்மெயில் செய்வதற்கு இந்த சம்பவம் வழிவகுத்துவிடும்.
குற்ற உணர்வு
திருமணத்திற்கு முன் உறவில் ஈடுபட்டவர்கள் ஏதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும். காதலர்கள் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும். ஆண், பெண் இருவரிடமும் ஒரு அவநம்பிக்கை வந்துவிடும். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். தேவையில்லாமல் அவசரப்பட்டுவிட்டோமே என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.
உறவுச் சிக்கல் ஏற்படும்
திருமணம் முடித்த பின்னர் அவர்களுக்குள் புதிதாக ஒன்றுமில்லை என்பதால் அதற்காக அவசரப்படுதல் நின்றுபோய்விடும். பெண் அதற்குப் பின் அதிகமாக அவசரப்படுபவளாகவும், ஆண் நழுவுபவனாகவும் இருப்பான். உறவு முழுமையானதாக இல்லாத பட்சத்தில் இருவருக்கும் பிறர் மீது சந்தேகம் வந்துவிடும்.
செக்ஸ் திருப்தி தர முடியாத இவருடன் எப்படி வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும். காதலிக்கும் போது காமத்தின் மீது ஆசை வைத்து உறவில் ஈடுபட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது பெரும் ஆர்வமும் இருக்காது. எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் அறிவுறுத்தலாகும்.

பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

   பயபுள்ள கடைசி வரை எவ்வளவு  பரிசோதனை கட்டணனு சொல்லவே இல்ல அப்புறம் என்னத்த புகார் தராது அப்படியே தந்துட்டாலும் நடவடிக்கை எடுக்காம தூங்க மாட்டாங்க வெங்காயங்களா ? ,
வர வர தமிழ் மக்களுக்கு காமெடிக்கு பஞ்சம் இல்லமா பாத்துகிறாங்க அரசியல் வியாதிங்க !!!!.
இந்த மாதிரி அறிவிப்பு வந்தாலே நீங்க எவ்வளவு வீனா கொள்ளை அடிச்சிகீங்க , மகனே பெட்டி மட்டும் வரலே எங்க கை புள்ளைங்கள வச்சி கேசு போட்டு வசூல் பண்ணிடிவோம் அப்படின்ற மிரட்டல் தான்னு அவங்களுக்கு தெரியாதா ?, இல்ல பாவம் எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் மக்களுக்கு தெரியாத ?.  அட பொய் பொழப்ப பாருக சார் அப்படின்னு நீங்க என் காத்து கிழிய சொல்றது கேக்குது . என்ன பண்ண மனசுன்னு சொன்னு இருக்கே அதற்கு கொஞ்சம் ஆறுதல் தேவைப்படுது எழுதியாவது தனிச்சிக்குவோம் . கோவப்பட்டு கோவப்பட்டு ரணகளம் ஆனது போதாதா ?...சென்னை: பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி இருந்தால் வழக்கமாக பாராசிட்டாமல் மாத்திரை சாப்பிடுவார்கள். அதில் குணமாகாமல் காய்ச்சல் இருந்தால் டாக்டரை பார்க்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பதாக டாக்டர் சந்தேகப்பட்டால் உடனே சம்பந்தப்பட்ட நபர் சளி மாதிரி எடுத்து ஆர்.டி.-பிசிஆர் என்ற பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கிண்டியில் உள்ள கிங் நிறுவனம் மற்றும் சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.

இதுதவிர தமிழ்நாடு முழுவதும் 12 தனியார் ஆய்வுக் கூடங்களில் இந்த பரிசோதனையை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 7 ஆய்வுக்கூடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தனியார் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்ய பணம் இல்லாதவர்கள் அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு அங்கீகாரம் அளிக்காத தனியார் ஆய்வுக் கூடங்களுக்கு பொதுமக்கள் சென்று பரிசோதனை செய்யக் கூடாது.

அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வுக்கூடங்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. இதில் சென்னையில்தான் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.