news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

வியாழன், 5 டிசம்பர், 2013

இரண்டாவது டேட்டிங்கின் போது காதலியை ஈர்ப்பதற்கான 10 வழிகள்!!!

இவ்வுலகில் பிறந்த அனைவருமே ஒரு காலகட்டத்தில் காதல் வயப்படுவது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். அப்படி காதலில் விழுந்து உங்களுக்கென ஒரு பெண்ணை நீங்கள் தேர்வு செய்து விட்டீர்கள் என்றால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. உங்கள் காதலியுடனான ஒவ்வொரு சந்திப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, முதல் மற்றும் அடுத்து வரும் சில சந்திப்புகள் உங்களைப்பற்றி அவர் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைய வேண்டும்.
பொதுவாக முதல் டேட்டிங்கின்போது உங்களது கவனம் இருவரது தோற்றத்திலும் இயல்புகளிலும் மட்டுமே இருக்கக்கூடும். ஆனால் இரண்டாவது டேட்டிங் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் விதமாக அமையும். இந்நிலையில் நீங்கள் இருவரும் உங்களைப் பற்றிய விவரங்களை பரிமாறி வெளிப்படையாக பேசத் தொடங்கி இருப்பீர்கள். இந்த இரண்டாவது டேட்டிங் உங்கள் இருவரிடையே உருவாகி இருக்கும் உறவை தொடர்வதற்கோ அல்லது முடிவதற்கோ வாய்ப்பாக இருப்பதால், இது ஒரு முக்கிய சந்திப்பாக இருக்கும். உங்களின் உண்மையான அன்பையும் குணத்தையும் உங்கள் காதலியிடம் வெளிப்படுத்தி அவளை ஈர்க்க இந்த இரண்டாவது டேட்டிங் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இந்த இரண்டாவது டேட்டிங்கின்போது உங்கள் காதலி உங்களது இயல்பு குணம், தனிப்பட்ட சொந்த விவரங்கள், மற்றும் உங்கள் எண்ணங்களை பற்றி தெரிந்து கொள்ள எதிர்பார்ப்பார். இரண்டாவது டேட்டிங் மட்டும் வெற்றிகரகமாக முடிந்தால், உங்கள் இருவரிடையே இருக்கும் உறவு வலுவடையும் வாய்ப்பு அதிகரிக்கும். நீங்கள் முதல் டேட்டிங்கின்போது திட்டமிட்டு உபயோகித்த வரிகள், கவிதைகள் போன்றவற்றை பற்றிய கவலை இனி தேவையில்லை.
இரண்டாவது டேட்டிங்கின் போது காதலியை ஈர்ப்பதற்கான 10 வழிகள்!!!
ADVERTISEMENT
உங்கள் காதலியை இம்ப்ரெஸ் செய்வதற்கு நீங்கள் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவரிடம் செயற்கையாக நடந்து கொண்டு அவரை ஏமாற்றாமல் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். ஒரு பெண்ணை ஈர்ப்பதற்கு முக்கியமாக விளங்குவது நேர்மையே. நீங்கள் நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனமாக பேசுபவராக இருந்தால் பிரச்சனை இல்லை, அப்படியே தொடருங்கள். இதுவே நீங்கள் அமைதியான நபர் என்றால் சிறிது நகைச்சுவை உணர்வுடன் , செயற்கைதனம் இல்லாமல் உங்கள் பாணியிலேயே பேசுங்கள்.
இரண்டாவது டேட்டிங்கின் போது உங்கள் காதலியை ஈர்க்க இதோ சில வழிகள்...
* உங்கள் இரண்டாவது டேட்டிங்கிற்கு நேர்த்தியாகவும் அழகாகவும் உடை அணியுங்கள். இடத்திற்கு தகுந்தாற்போல் உடை அணிவது இப்பொழுதும் அவசியமான ஒன்றாகும். அவர் விரும்பத்தக்க வகையில் அழகாக உடை அணிந்து அவரை இம்ப்ரெஸ் செய்யுங்கள்.
* இரண்டாவது டேட்டிங்கை சற்று தனிமையான முறையில் இருக்குமாறு திட்டமிடுங்கள். இது இரண்டாவது டேட்டிங் என்பதால், உங்கள் காதலிக்கு உங்கள் மேல் சிறிது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். அதனால், ஒரு வார இறுதியில் அவரை மதிய உணவிற்கோ அல்லது இரவு உணவிற்கோ அழைத்து நீங்களே சமைத்து பரிமாறலாம்.
* இந்த இரண்டாவது டேட்டிங் உங்கள் காதலிக்கு சவுகரியமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.. அவரை சிரிக்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்த நகைச்சுவை என்ற பெயரில் எல்லையை தாண்ட வேண்டாம். அதனை விடுத்து, அவரை பற்றி அடிப்படையான விஷயங்கள் மற்றும் சற்று தனிப்பட்ட சொந்த விஷயங்களை தெரிந்து கொண்டு உங்கள் உறவை வலுபடுத்துங்கள். சொந்த விஷயங்களை பற்றி கேட்கும் போது வரம்பு மீறக் கூடாது.
* அவசரப்பட்டு எதையும் செய்யாமல் ஒரு நல்ல பண்பாளராக இருங்கள். உங்கள் காதலியே தானாக முன் வந்து உங்களை தொட அனுமதிக்கும் வரை பொறுமையாக இருங்கள்.
* முதல் டேட்டிங்கின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது டேட்டிங் நிகழ்ந்துள்ளதால் அவருக்கு ஒரு பரிசு கொடுக்க திட்டமிடுங்கள். அதிக விலை உயர்ந்த பொருளாக இல்லாமல் அவர் விரும்பத்தக்க வகையில் அர்த்தமுள்ள பொருளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய பூங்கொத்து கூட அவரை இம்ப்ரெஸ் செய்யலாம்.
* உங்கள் இரண்டாவது டேட்டிங் நல்ல முறையில் இருந்தால், உங்கள் காதலி உங்களை தொட அனுமதித்தால் ஒரு மென்மையான முத்தத்தை கொடுங்கள். பிரெஞ்சு முத்தம் போன்றவற்றை தவிர்த்து மென்மையான முத்தத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
* இது உங்கள் இரண்டாவது டேட்டிங் என்பதால், சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் அவளது கண்களை பார்க்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக அவரிடம் நீங்கள் வைத்துள்ள ஈடுபாடு வெளிப்பட்டு உங்கள் தன்னம்பிக்கையால் அவரை ஈர்க்கலாம்.
* நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை பாராட்டுங்கள். அதிகமாகவோ பொய் புகழ்ச்சியாகவோ இல்லாமல் நீங்கள் அவரிடம் கொண்டுள்ள நேர்மையான அபிப்ராயங்களையும் கருத்துக்களையும் பாராட்டுங்கள். உங்கள் நேர்மையான கருத்துக்களை அவர் கண்டிப்பாக மதிப்பார்.
* வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருங்கள். உங்களது வேலையைப் பற்றியும் சொந்த விவரங்கள் பற்றியும் பொய் சொல்லாதீர்கள். ஒரு பெண்ணை இம்ப்ரெஸ் செய்ய உங்களின் வெளிப்படையான தன்மை மற்றும் நேர்மையை தவிர சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.
இந்த டேட்டிங்கின் முடிவு உங்களின் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்கான தருணமாக இருக்கும். நீங்களே முன்வந்து அடுத்த நடவடிக்கை குறித்து பேசினால் அவர்களை இம்ப்ரெஸ் செய்யும் விதமாக இருக்கும்.

சின்னதாக ஒரு கவிதை.. கொஞ்சம் போல பூ.. கூடவே காதலையும் சொல்லுங்க!

இம்மண்ணில் பிறந்த அனைவருக்குமே என்றாவது ஒரு நாள் காதல் வயப்படும் சூழ்நிலை உருவாகும். அந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கை துணைவியை தேர்வு செய்து அவர்களிடம் உங்கள் காதலை தெரிவிக்க பல வழிகள் உள்ளது. ஆகவே, உங்கள் காதலியிடம் காதலை தெரிவிக்க சிறந்த முறையை தேர்வு செய்து காதலில் வெற்றியடையுங்கள். அதிமேதாவிகள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.
அவர்கள் தங்களுக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி அதில் வாழ்ந்து வரவே ஆசைப்படுவார்கள். இவர்கள் சாதாரண மனிதர்களிடம் இருந்து பெரும் அளவில் மாறுபட்டு இருப்பார்கள். அவர்களுக்கென்று வித்தியாசமான வாழ்க்கை முறை, வித்தியாசமான உடை அலங்காரங்கள்,மற்றவருக்கு புரியாத தத்துவ பேச்சுக்களும் உடையவர்கள். அதேபோல், காதலை தெரிவிக்க அவர்களுக்கென்று தனி வழியை கொண்டவர்கள்.
ADVERTISEMENT
நமக்கு வித்தியாசமாக இருக்கும் சில விஷயங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடும். உதாரணமாக, தன் காதலியிடம் காதலை தெரிவிக்கும்போது அவருக்கு பிடித்தமான ஹீரோ போல் உடையணிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். இது சாதாரண நபருக்கு சற்று வித்தியாசமான காட்சியளிக்கும். இதுபோல் காதலை தெரிவிப்பதற்கு அவர்கள் பல வித்தியாசமான மற்றும் அதிமேதாவித்தனமான முறைகளை உபயோகிப்பார்கள்.
இப்பொழுது மேதாவித்தனமான முறையில் காதலை தெரிவிக்கும் சில வழிகளை படிக்கலாம்.
சின்னதாக ஒரு கவிதை.. கொஞ்சம் போல பூ.. கூடவே காதலையும் சொல்லுங்க!
1. சூப்பர் ஹீரோ
அதிமேதாவிகள் மற்றும் கற்றுக்குட்டிகள் சூப்பர் ஹீரோ படங்கள் மற்றும் நகைச்சுவை படங்களை விரும்பி ரசித்து பார்ப்பார்கள். இந்தவகை படங்களை தொடர்ந்து பார்ப்பதற்கு அவர்களுக்கு சலிப்பு ஏற்படாது. மாறாக, இவ்வகை படங்கள் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தச் செய்யும்.உங்கள் காதலியின் விருப்பமான ஹீரோவை போல் உடையணிந்து காதலை தெரிவிப்பது அதிமேதாவித்தனமான முறையில் தெரிவிக்கும் வழிகளில் ஒன்றாகும். அந்த படத்தில் வரும் ஹீரோவின் வசனத்தை பேசி அவர்களிடம் காதலை தெரிவிக்கலாம்.
2. மோதிரங்கள்
சினிமா ஹீரோக்கள் முகம் பதித்த மோதிரங்களை உபயோகித்து உங்கள் காதலை மேதாவித்தனமாக தெரிவிக்கலாம். மேலும், இன்று கடைகளில் ஹீரோக்கள் முகம் அல்லது சுப்பர் மென் முகம் பதித்த மோதிரங்கள் விற்கப்படுகின்றன. இவ்வகை மோதிரங்கள் இப்பொழுது மக்களிடையே பிரபலமாகி வருகின்றது. காதலை தெரிவிக்க இது ஒரு வித்தியாசமான முறை என்றாலும் புதிய முறையாகவும் இருக்கும்.
3. ஆராய்ச்சிகள்
தனது காதலை தெரிவிக்க இவர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தயங்க மாட்டார்கள். இது வித்தியாசமான முறையாக இருந்தாலும், இதனை மிகுந்த கவனம் ஏற்று முயற்சி செய்வார்கள். காதலை தெரிவிப்பதற்கு முன் இவர்கள் ஜோசியம் மற்றும் மரபணு போன்ற ஆராய்ச்சிகளை மிகுந்த கவனம் ஏற்று செய்து வருவார்கள். இது போன்ற வழிகளை நம்மை போன்ற சாதாரண நபர்களால் கற்பனை பண்ணிகூட பார்க்க முடியாது.
4. கவிதைகள்
காதல் கவிதைகள் எழுதுவது என்பது எல்லா அதிமேதாவிகளும் சிறந்த முறையாக நினைக்கும் வழிகளில் ஒன்றாகும். இதனை சாதாரண மனிதர்களும் செய்வார்கள். ஆனால், அவர்கள் அதில் உபயோகிக்கும் வார்த்தைகள் சாதாரண நபர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் இருந்து மாறுபட்டே இருக்கும். உதாரணமாக, "உங்கள் மனம் ஒரு குழி அதில் நான் விழுந்து விட்டேன்" அல்லது "நீ ஒரு மரபணு உன்னை என் உடலில் செலுத்தி ஒரு புதிய காதல் கதையை உருவாக்கலாம்" போன்றவை புத்திசாலிகள் உபயோகிக்கும் வித்தியாசமான வரிகள் ஆகும்.
5. வித்தியாசமான பரிசுகள்
காதலை தெரிவிக்க பூக்கள், பரிசுகள் மற்றும் மோதிரங்கள் போன்றவை மிகவும் முக்கியமானவை. இதனை கத்துகுட்டிகளும் சாதாரண நபர்களும் காதலை தெரிவிக்கும்போது பயன்படுத்துவார்கள். ஆனால் அவை எப்படிப்பட்டவை என்பதில் வித்தியாசம் இருக்கும். கத்துக்குட்டிகள் தத்துவப் புத்தகங்கள், ப்ளே ஸ்டேஷன் அல்லது மொபைல் போன்றவற்றை தேர்ந்தெடுப்பார்கள். இது காதலை தெரிவிக்க பயன்படுத்தும் வித்தியாசமான முறையாகும். இது நமக்கு வேறுப்பட்டு இருந்தாலும், அதிமேதாவிகளும் கத்துக்குட்டிகளும் இந்தவகை பரிசுப்பொருட்களை பெரிதும் விரும்புவார்கள்.
அதிமேதாவிகள் வித்தியாசமான முறையில் காதலை தெரிவித்தாலும் நம்மை போலவே காதலை அடைவதற்கே முயற்சி செய்கின்றனர். அவர்களின் காதலை தெரிவிக்கும் முறைதான் சற்று வித்தியாசமாகவும் முறையற்ற வழியில் இருக்கும். ஆனால், அவர்களுக்கென்று வித்தியாசமான வழியை பின்பற்றி வருவார்கள்.

12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 12 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3 முதல் 25 வரை நடைபெறும் எனவும் 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும் எனவும் 10ஆம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு தேர்வினை சுமார் 7.5 லட்சம் மாணவ, மாணவியரும், பத்தாம் வகுப்பு தேர்வினை சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியரும் எழுத உள்ளனர்.

பிளஸ் 2  தேர்வு அட்டவணை:

மார்ச் 3: தமிழ் முதல் தாள்
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 10: இயற்பியல், பொருளியல்
மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்
மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல், சத்துணவியல்
மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியியல்
மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல்
மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்
மார்ச் 25: இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், நுண்வேதியியல், தகவல் பரிமாற்று ஆங்கிலம், தட்டச்சு, சிறப்பு மொழி தேர்வு


பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

மார்ச் 26: தமிழ் முதல் தாள்
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1: ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2: ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4: கணிதம்
ஏப்ரல் 7: அறிவியல்
ஏப்ரல் 9: சமூக அறிவியல்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

எலுமிச்சையில் உள்ள வியக்க வைக்கும் 15 அழகு நன்மைகள்!!!

1 , வெண்மையான சருமத்தை இயற்கையாக பெற... 
எலுமிச்சை சாற்றில் இயற்கையாக வெளுக்க வைக்கும் குணங்கள் உள்ளது. சருமத்தை இயற்கையாக வெளுக்க வைப்பதால், அது நம் சருமத்திற்கு மிகவும் பயன் அளிப்பதாக விளங்குகிறது. அதனால் தான் வீட்டில் தயார் செய்யப்படும் அழகு பொருட்களிலும் சரி, சந்தையில் கிடைக்கும் அழகு பொருட்களிலும் சரி,
எலுமிச்சை சேர்க்கப்படுகிறது. இத்தகைய எலுமிச்சையை நேரடியாக சருமத்தின் மீது தேய்க்கலாம் அல்லது எலுமிச்சை அடங்கியுள்ள பேஸ் பேக்கை தடவலாம். இது கரும்புள்ளிகளையும் நாளடைவில் நீக்கும்.
2. இளமையுடன் இருக்க...
  உடம்பில் முதுமை தெரியும் பகுதிகளை எலுமிச்சையை வைத்து நீக்கலாம். எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அது சருமத்தில் உள்ள சுருக்கங்களை எதிர்த்து போராடும். சரும சுருக்கங்களை நீக்க நல்லதொரு பேஸ் பேக் வேண்டுமா? அப்படியெனில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை எடுத்து, இனிக்கும் பாதாம் எண்ணெயில் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். இல்லையெனில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சிடர் வினீகரை சமமான அளவில் கலந்து, இளமை தொலையும் இடங்களில் தடவுங்கள்.

3. எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரிக்க...
எண்ணெய் வழியும் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளி என பல சரும பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எண்ணெய் பசையான சருமத்திற்கு நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின் எண்ணெய் மூலக்கூறுகளை உடைத்தெறியும். அதனால் சருமம் மென்மையாக விளங்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை தண்ணீருடன் கலந்து, அந்த கலவையை பஞ்சுருண்டையை பயன்படுத்தி முகத்தில் தடவுங்கள். அதிலும் எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்கள், இதனை தினசரி செய்ய வேண்டும்.

4. சருமம் புத்துணர்வும், மென்மையும் அடைய...
நற்பதமான எலுமிச்சை சாறு, சருமத்தை மென்மையாக வைக்க உதவும். அதிலும் முகத்தில், முட்டியில், முழங்கையில் எலுமிச்சை சாற்றை தடவினால், அவைகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். குறிப்பாக எலுமிச்சையின் தோலை முகத்தில் தேய்த்தால் அது இயற்கை தெம்பூட்டியாகவும், இறந்த செல்களை அகற்றவும் செய்யும். மேலும் பொலிவிழந்த வறண்ட சருமத்திற்கு எலுமிச்சை கலந்த எண்ணெயை உபயோகப்படுத்தலாம்.

5.அழகிய இதழ்கள்
எலுமிச்சை பானம் இதழ்களுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. வறட்சி, வெடிப்பு மற்றும் வெம்புண் போன்றவைகளால் உதடு பாதிக்கப்பட்டிருந்தால், உதட்டில் எலுமிச்சை சாற்றினை தடவுங்கள். எலுமிச்சை சாற்றை பாலின் நுரை மற்றும் தேனுடன் கலந்து உதட்டின் மீது தடவலாம். அது உதட்டு பிரச்சனைகளை தீர்க்கும்.
6.அக்குள்களைப் பராமரிக்க...
நண்பர்களை சந்திக்க அல்லது பார்ட்டிக்கு செல்ல வெளியே கிளம்புகிறீர்களா? அப்போது அக்குள் அசிங்கமாகவும், துர்நாற்றம் வீசுவதையும் பின்னர் தான் உணர்ந்தீர்களா? வியர்வை, வெப்பம் மற்றும் தூய்மை கேடு இவை அனைத்தும் அக்குளை கருமையடையச் செய்து துர்நாற்றத்தை கொடுக்கும். எனவே எலுமிச்சை சாற்றில் சிறிய பஞ்சுருண்டையை முக்கி, அக்குளுக்குள் தடவுங்கள். வேண்டுமெனில் எலுமிச்சையை அப்படியே தடவலாம். இனி என்ன, நீங்கள் பயமில்லாமல் ஸ்லீவ்லெஸ் சட்டையை அணியலாம்.

7. திடமான அழகிய நகங்கள்
எளிதில் உடையக்கூடிய மஞ்சள் நிற நகங்களை கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் அழகு சாதனங்களில் எலுமிச்சை இருக்கும் வரை கவலைப்பட தேவையில்லை. எப்படியெனில், எலுமிச்சை சாற்றில் நகங்களை ஊற வைத்தால், நகங்கள் திடமாக இருக்கும். மேலும் இது நகங்களின் பழுப்பு நிறத்தையும் நீக்கி, அழகாக ஜொலிக்கச் செய்யும்.

8.முகப்பருவுக்கு விடை கொடுங்கள் :
முகப்பரு மற்றும் இதர சரும புண்களுக்கு எலுமிச்சை சாறு நல்ல மருந்தாக விளங்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி அடங்கியுள்ளதால், சருமத்தை அது ஆரோக்கியமாகவும் பளப்பளப்பாகவும் வைத்திருக்க உதவும். மேலும் அதில் உள்ள ஆல்கலைன் சருமத்தை, பருக்கள் மற்றும் இதர பிரச்சனைகளை ஏற்படுத்தும் பாக்டீரியாவிடம் இருந்து பாதுகாக்கும். 

9. அழகிய கரங்களுக்கு எலுமிச்சை

முகத்தை போல கைகளும் அதிக அளவில் வெளிப்படும் ஒரு பாகமாகும். அதனால் அதனையும் நன்றாக பராமரிக்க வேண்டும். எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து, கைகளை மசாஜ் செய்யுங்கள். இது கைகளை சுத்தமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். அதிலும் இது முழங்கையில் காணப்படும் கரு நிறத்தை வெளுப்பாக்கவும் செய்யும்.

10.உடல் எடை மெலிவதற்கு...
எலுமிச்சையில் அதிக அளவு பெக்டின் பைபர் உள்ளது. அது பசியை போக்க உதவும். பெக்டின் உள்ள உணவுகளில் கலோரி மற்றும் கொழுப்பு குறைந்த அளவில் உள்ளதால், அது உடலுக்கு நன்மையை விளைவிக்கும். மேலும் இவ்வகை உணவுகள், உடம்பில் உள்ள இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால், உடம்பும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இது கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்கச் செய்யும்.

11.வாயை நற்பதத்துடனும் பற்களை சுத்தமாகவும் வைக்க...
வாயில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை பெரிதும் உதவி புரிகிறது. மேலும் இது பல் வலி மற்றும் ஈறு வீக்கத்திற்கு நிவாரணியாக விளங்கும். வெண்ணிற மற்றும் பளிச்சிடும் பற்களுக்கு, எலுமிச்சை பழத்தை சிறிது உப்பு அல்லது பேக்கிங் சோடாவில் தொட்டு, பற்களில் தேய்க்க வேண்டும்.

12.பொடுகுகளை நீக்க...
 
அரிக்கும் தலை அல்லது பொடுகு நிறைந்த தலை முடியுடன் வெளியில் செல்ல சங்கடமாக உள்ளதா? கவலை வேண்டாம்! தொந்தரவு அளிக்கும் இந்த பொடுகுகளில் இருந்து எலுமிச்சை காக்கும். அதற்கு தலையில் எலுமிச்சையை தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்தால், நல்ல பலன் கிடைக்கும்.

13.அழகான கூந்தலுக்கு...
தலைமுடி தனிப்பட்டு தெரிய அல்லது தலைக்கு பயன்படுத்திய சாயங்களை நீக்க, ஏன் எலுமிச்சை போன்ற இயற்கையான வழிமுறைகளை நாடக் கூடாது? ஏனெனில் எலுமிச்சையை தலை முடியில் தேவையான பகுதியில் தடவி, சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்று காய வையுங்கள். இதனால் தடவிய பகுதி மட்டும் தனித்து தெரிவது உறுதி. மேலும் எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் அமிலம், தலை முடியில் பூசிய சாயத்தை இயற்கையான முறையில் நீக்கும்.

14. செரிமானத்திற்கு...

செரிமான பிரச்சனை அடிக்கடி வந்து செல்கிறதா? அப்படியானால் எலுமிச்சை செரிமானத்திற்கு பெரிதும் உதவி புரிகிறது என்பது உங்களுக்கு நல்ல செய்தியாக விளங்கப் போவது உறுதி. அதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து, சிறிது தேனையும் கலந்து பருகலாம். இது உடலில் தேவையற்ற நச்சுத்தன்மையுள்ள பொருட்களை வெளியேற்ற உதவும். அழகுக்கு சருமம் மிகவும் முக்கியமாக உள்ளதால், மின்னும் சருமத்தை பெற ஆரோக்கியமான செரிமான அமைப்பு அவசியமான ஒன்று.

15.எலுமிச்சையின் உடல்நல பயன்கள்...
எலுமிச்சையில் வேறு பல உடல்நல பயன்களும் அடங்கியுள்ளது. அதில் செரிமான அமைப்பை நன்றாக வைக்க உதவுவதோடு மட்டும் நின்று விடாமல், புண்ணான தொண்டை, நெஞ்சு எரிச்சல் மற்றும் சரும அரிப்புக்கும் நிவாரணியாக விளங்குகிறது. மேலும் புண்களை குணப்படுத்தவும் எலும்புகள் மற்றும் இணைப்பு தசைகளை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும். உடலின் திறன் அதிகரிக்க எலுமிச்சை மிகவும் உறுதுணையாக நிற்கிறது. மேலும் எலுமிச்சை எண்ணெயின் மனம் மன நிலையை ஊக்கப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும்.

வியாழன், 11 ஏப்ரல், 2013

NET - இல் PHOTO PUBLISH பண்ணப் போறீங்களா? ஒரு நிமிஷம் ...

NET - இல் PHOTO PUBLISH பண்ணப் போறீங்களா? ஒரு நிமிஷம் ...

இணையத்தில் வெளியிடப்படும் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் ரொம்ப நல்லவர்கள் தான் என்பதற்குச் சிறிதும் உத்தரவாதமில்லை. சில வில்லங்கமான ஆசாமிகள் இப்படத்தைப் பார்த்தால் இந்தப் படம் நிக்கான் D300 புகைப்படக் கருவி மூலம் 11-06-2009 தேதியில் இரவு 12 மணி 10 வது வினாடியில், ஜே.டி. லெப்பெட் என்பவரால் எடுக்கப்பட்டது, எடுக்கும் போது புகைப்படக்கருவியில் ப்ளாஷ் அடித்திருக்கிறது. மறுநாள், அதாவது 12-06-2009 அன்று மாலை 4 மணி, 9 நிமிடம், 55வது வினாடியில் புகைப்படக்கருவியில் இருந்து தன்னோட கணினிக்கு தரவிறக்கம் செய்திருக்கிறார். முதல் நாள் கொண்டாட்டத்தில் சரக்கடிக்கும் பாக்கியம் பெற்றிருந்து, ஹாங் ஓவரால் பாதிக்கப்பட்டு இந்தத் தாமதம் நிகழ்ந்திருக்க அதிக சாத்தியம் இருக்கிறதென்று சொல்வார்கள். வெறும் படத்திலிருந்து எப்படி இவர்களால் இவ்வளவு தகவல்களைத் தர முடிகிறது?

மேலே இருப்பவர் அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலம், பெயர் கேதரின். இவருக்கும் நம்மைப் போலவே வீட்டில் கணினியும், இணைய இணைப்பும் கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டு தாங்கொனாத் துயரமடைந்து பதிவுகள் எழுத ஆரம்பித்தார். பிரபலம் என்பதால் பெரும்பாலும் தன்னைப் பற்றியப் பதிவுகளாகவே இருக்கும், கூட்டமும் களை கட்டும். இப்படி இன்பமயமாக இணைய அனுபவம் போய்க் கொண்டிருக்கையில், நானும் ரவுடிதான், எனக்கும் தம்மடிக்கத் தெரியும் என்று கீழே இருக்கும் சிகரெட் புடிக்கும் புகைப்படத்தைத் தனது பதிவில் வெளியிட்டார்.

பாவம், கேதரினுக்குப் புகைப்படம் எடுத்த இடத்தில் நல்ல காற்றோட்ட வசிதியில்லாத காரணத்தால் மேலாடை இல்லாமலே எடுத்தவர், கழுத்து வரைக்கும் புகைப்படத்தை வெட்டி, ஒரு நள்ளிரவில் தனது பதிவில் வெளியிட்டு விட்டு, தூங்கிப்போனார். ஆனால் இணையத்தில் அப்புகைப்படத்தைப் பார்த்தவர்கள் யாருமே அன்றிரவு சரியாகத் தூங்கவில்லை. காரணம், அவர் வெளியிட்ட புகைப்படத்தை தங்கள் கணினியில் தரவிறக்கம் செய்தவர்கள் அனைவருக்கும் அப்படத்தை thumbnail ஆக பார்க்கும் போது கேதரினின் காற்றோட்டமான படத்தைக் கண்டு காற்றுப்போன பலூன் ஆனார்கள் (இங்கே வெளியிடப்பட்டுள்ள படத்தில் அவ்வசதி இல்லை :D). கேதரின் இது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையென்றாலும் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இச்சம்பவத்திற்குப் பின் கொஞ்சம் உஷாரானார்கள்.

கேதரின் படத்தினை வெட்டி வெளியிட்டாலும், அப்படத்தின் thumbnail மாறவில்லை. ஏன்?

அனேகமாக இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் படங்கள் jpg வகை புகைப்படங்களே. இப்புகைப்படங்கள் டிஜிட்டல் புகைப்படக்கருவிகள் மூலமாகவோ அல்லது செல்பேசிகள் மூலமாக எடுக்கப்படும் போது மேலே சொல்லப்பட்டத் தகவல்கள் மற்றும் thumbnail சமாச்சாரங்கள் அனைத்தும் jpg கோப்பின் தலைப்பகுதியில் (jpg file header) இருக்கும் exif meta data என்ற பகுதியில் சேமிக்கப்படும். இவ்வாறு மறைமுகத் தகவல்கள் அடங்கிய புகைப்படத்தினை நாம் இணையத்தில் பகிரும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த exif meta data மூலம் புகைப்படக் கருவியின் தகவல்கள், படம் எடுக்கப்பட்ட நேரம், என்ன resolutionல் எடுக்கப்பட்டது, ப்ளாஷ் ஒளி அடித்ததா, இல்லையா, focal length எவ்வளவு, இன்னும் பல நுணுக்கமானத் தகவல்கள் அனைத்தயும் அறியலாம். தொழில்முறைப் புகைப்படக்காரர்கள் எளிதில் பகிர்ந்து கொள்ளாத புகைப்படம் குறித்தான தொழில்நுட்பத் தகவல்களை எளிதாக
அறிந்து கொள்ள முடியும்.


நாம் பயன்படுத்துவது டிஜிட்டல் புகைப்படக் கருவிகளோ, செல்பேசிகளோ எதுவாக இருந்தாலும் அதது தங்கள் சக்திகேற்ப எடுக்கப்படும் புகைப்படங்களில் அனைத்து விவரங்களையும் exif metadata பகுதியில் விதைத்துவிடும். சில உயர்ரகக் கருவிகளில் GPS வசதியிருப்பின் புகைப்படம் எடுக்கப்படும் இடத்தின் விவரங்கள் கூட இலவச இணைப்பாக வழங்கப்படும்.

பிரபலமான வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தங்கள் இணையதளத்தில் ஹேக்கிங் (hacking) குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரைக்காக அனுபவமிக்க ஒருவரிடம் பேட்டிக்குச் சென்ற போது அவர் தனது இருப்பிடம், பெயர் குறித்தான தகவல்கள் இன்றி வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையோடு பேட்டியளித்தார், சில முகம் தெரியாத புகைப்படங்களும் எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டன. ஆர்வக்கோளாரில் அப்படங்களின் exif metadata பகுதியினைப் பிரித்து மேய்ந்த சில வாசகர்கள் அந்த ஹேக்கரின் இருப்பிடத்தை வெளியிட்டு மகிழ்ந்தனர். இப்படிப் பல சம்பவங்களின் மூலம் புகைப்படங்களை இணையத்தில் பயன்படுத்தும் போது ரகசியத்தன்மையைப் பாதிக்கும் ஒரு தவறான கண்ணோட்டத்திலேயே இவை பார்க்கப்பட்டாலும் ஒரு சிலருக்கு இது மிகமிக உதவியாக இருக்கிறது. அவர்கள் தொழில்முறை புகைப்படக்காரர்கள். ஒரே காட்சியைப் பலவிதமான தொழில்நுட்ப நிலைகளில் (technical settings) படமெடுக்கும் இவர்களுக்கு, அவற்றைப் பின்னர் ஆராயும் போது மிக நன்றாக வந்திருக்கும் படங்களை எடுக்கும் போது என்னென்ன தொழில்நுட்ப நிலைகளைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வது மிக எளிது.

சரி, exif metadata பகுதியினைப் பார்வையிட பல மென்பொருட்கள் இணையமெங்கும் நீக்கமற நிறைந்த்திருக்கின்றன. கூகுளாடி தங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இத்தொடரில் irfanview என்ற இலவச மென்பொருள் மூலம் எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் கீழே இருக்கும் சுட்டிகளின் மூலம் irfanview மென்பொருளினையும், தேவையான கூடுதல் வசதிக்கான நிரல்களையும் (plugins) உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.




இப்பொழுது எந்தப் படத்தின் exif metadata பகுதியினைப் பார்வையிட வேண்டுமோ அப்படத்தை ifranview மென்பொருள் மூலம் திறக்கவும். பின்னர், image-> information -> EXIF info* என்ற இடத்திற்கு சென்றால் exif meta data பகுதியின் தரிசனம் கிடைக்கும் ( படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்).

இப்பொழுது பார்த்தாயிற்று, இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் முன் இவற்றை எப்படி அகற்றுவது?. புகைப்படங்கள் வெட்டுவதற்கு, சிறிதாக்குவதற்கு, பெரிதாக்குவதற்குப் பயன்படுத்தும் image processing வகை மென்பொருட்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். சில மென்பொருட்கள் தாமாகவே exif metadata பகுதியினை நீக்கிவிடும். நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் அவ்வாறு நிக்குகிறதா என்பதனை மேலே சொல்லப்பட்டிருக்கும் முறைப்படி அவற்றை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். நீக்கப்படாமல் இருப்பின் irfanview மென்பொருள் மூலமே அகற்றிவிடலாம். தேவையானப் புகைப்படத்தை irfanview மென்பொருளில் திறக்கவும். பின்னர் file->save as என்ற இடத்திற்கு சென்றால் சேமிக்கும் படிவத்திற்கு அருகில் சில வசதிகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் 'reset exif orientation tag' என்ற வசதியினைத் தேர்வு செய்து பின் சேமிக்கவும். அவ்வளவுதான் உங்கள் படம் இப்போது இணையத்தில் பகிர்ந்து கொள்ள தயார். கேதரின் நிலை ஏற்படாமலிருக்க ஒருமுறை thumbnail படத்தையும் சரிபார்த்துக் கொள்வது மிக்க நன்று.

இதுவரை சொன்னவை அனைத்தும் ஒரு பொதுவான பாதுகாப்பிற்கு மட்டுமே. தொழில்நுட்பங்கள் கண்டபடி வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் எப்பொழுதுமே தங்கள் சொந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் முன் ரூம் போட்டு ஒரு முறைக்கு நாலு முறை யோசித்து கொள்வது அறிவுறுத்தப்படுகிறது, முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள். இது தவிர புகைப்படங்கள் தவறான கைகளுக்கு சென்றால் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்

என்ன கார் வாங்கலாம் டீசலா? பெட்ரோலா?


புதியதாய் கார் வாங்க முடிவு செய்தபின் எந்த கார் வாங்குவது பெட்ரோலா? டீசலா? நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை கூறி குழப்புகிறார்களா? குழம்ப வேண்டிய அவசியமில்லை. சில குறிப்புகளை தெரிந்துக் கொண்டால் நம் தேவைக்கேற்ற வாகனத்தை தேர்ந்தெடுக்கலாம். நகரப் போக்குவரத்தில் நெரிசலில் கார் ஓட்ட வேண்டி இருக்கும். அப்படியென்றால் க்ளட்சை அதிகம் உபயோகிக்க வேண்டியிருக்கும். நிறுத்தி நிறுத்தி ஓட்டுகையில் அதிக பிக்அப் தேவைப்படும். இந்நிலையில் பெட்ரோல் காரே சிறந்தது. ஹைவேயில் அதிக தூரம் ஓட்ட வேண்டியிருக்கும் என்றால் பிக்அப் குறைவாக இருந்தாலும் அதிக வேகத்தில் அதிக நேரத்திற்கு ஓட்டினால் என்ஜின் சூடாகும் வாய்ப்பு இல்லாததாலும் டீசல் காரே சிறந்தது.
பெட்ரோல் கார்களின் ஆயுள் டீசல் கார்களை விட அதிகம் என்பதும் உண்மை. பல வருடங்கள் காரை வைத்திருக்க விரும்புவோர் பெட்ரோல் காரை வாங்கலாம். ஏனென்றால் டீசல் கார்கள் ஐந்தாறு வருடங்களுக்கு பிறகு அதிக பராமரிப்பு செலவை உண்டாக்கும். நான்கு வருடங்களுக்கு மேல் காரை மாற்றிவிட விரும்புபவர்கள் தாராளமாக டீசல் கார்களை வாங்கிக் கொள்ளலாம். ஒரு மாதத்தில் சில நூறு கிலோமீட்டர் மட்டுமே ஓட்டுபவர்கள் பெட்ரோல் கார் வாங்கலாம். ஆனால் ஒரு மாதத்தில் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் ஓட்டுபவர்கள் டீசல் கார் வாங்குவது நல்லது. டீசல் விலை குறைவு என்பது மட்டுமல்ல டீசல் கார்கள் அதிக மைலேஜ் கொடுக்கிறது என்பதாலும் டீசல் கார் சிறந்தது. இன்றைய டீசல் தொழில்நுட்பம் சத்தம் மற்றும் அதிர்வுகள் குறைவான என்ஜின்களை உருவாக்கினாலும் பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடுகையில் டீசல் கார்களில் சொகுசும் வசதியும் சற்றே குறைவு என்றே கூற வேண்டும். சிறிய தூரத்திற்கு சொகுசாய் செல்ல விரும்புபவர்கள் பெட்ரோல் கார் வாங்கிக் கொள்ளலாம்.

பாஸ்போர்ட்டில் மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் !

   பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள்,

வழக்கமாக, பாஸ் போர்ட்டின் இடது பக்க உள் அட்டையில், பாஸ் போர்ட் வைத்திருப்பவரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிறந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் அமைந்திருக்கும். அதே போல், வலது பக்க உள் அட்டையில், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்புகளும் அடங்கி இருக்கும். ஆனால், தற்போதைய புதிய நடைமுறைப்படி, இடது உள்பக்கத்தில் இருக்கும் அனைத்து குறிப்புகளும், புகைப்படமும், 2வது தாளில், "லேமினேட்' செய்யப்படும். அதேபோல், வலது பக்க உள் அட்டையில், காணப்படும் அனைத்து குறிப்புகளும், 35வது பக்கத்தில், லேமினேட் செய்யப்படும்.

இது குறித்து, மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன் கூறியதாவது: பழைய முறையில், பாஸ்போர்ட்டை அடிக்கடி பயன்படுத்துவதால், அதன், இடது உள் பக்கத்தில் உள்ள புகைப்படம் அழுக்காகிறது. மேலும், பாஸ்போர்ட் வைத்திருப்பவர் பற்றிய குறிப்புகள், தெளிவாக தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது. பாஸ்போர்ட்டின் உள் அட்டையை பிரித்து, புதிய புகைப்படத்தை ஒட்டும் அபாயமும் உள்ளது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இம்மாற்றங்கள், நாளை முதல், அமலுக்கு வருவதால், புதிய மாற்றங்கள் அடங்கிய, 50 ஆயிரம் பாஸ்போர்ட்கள், நாசிக்கிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் அமலுக்கு வரும் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழன், 21 மார்ச், 2013

தீயின் பிள்ளைகள் நாங்கள்...!

தீயின் பிள்ளைகள் நாங்கள்...!
வெடித்துச் சிதறும் ஒவ்வொரு கங்கிலும்...
ஓராயிரம் தீச்சுவாளைகள் உருவாகும்...!!

தகப்பனுக்கு முன்பு நிர்வாணமாக பெண்பிள்ளைகளும்...
பெற்ற பிள்ளைகளுக்கு முன்பு நிர்வாணமாக தாய்களையும்...
நடந்து வந்து சரணடையச் சொன்ன இலங்கை நட்பு நாடா?

ஏய் காங்கிரஸ்-ஸே ஒன்றைப்புரிந்து கொள்... உலகை உலுக்கிய ஹிட்லரையும் இந்த காலம் கெட்டவன் என்று தான் கிரகித்து வைத்து இருக்கின்றது.

மானுட வரலாற்றிலே மண்ணிக்க இயலாத தவறிழைக்க ராசபக்சேவுக்கு உதவிய நீங்கள் வீழும் காலம் விரைவில் வரும்....!

நெஞ்சை உறைய வைக்கும் இது போன்ற படங்களைப்பார்தபின்னும் தி.மு.க வின் தலைமைக்கு எதுவும் வரவேண்டாம்... கோகுல் போன்ற இளைஞர்களுக்குமா எதுவும் வரவில்லை...

அய்யகோ... பேருந்துப்பயணத்தின் போது பாதிக்கப்படுவர்களுக்காககூட நெஞ்சு கனத்து கண்ணீர் வடிக்கும் தமிழா... நம் ரத்த சொந்தங்களுக்கு ஈழத்தில் நடத்ததைப் பார்த்த பின்புமா அமைதி. காக்கின்றாய்?

காங்கிரஸ்ஸையும் அதன் கூட்டணிகளையும் தமிழகத்தில் வேரருப்போம்...!

செவ்வாய், 5 மார்ச், 2013

ஆண்கள் ஏன் அடிக்கடி "ஐ லவ் யூ" சொல்லமாட்ராங்க

* ஆண்களுக்கு பெண்களைப் போன்று எதையும் சரியாக வெளிப்படுத்த தெரியாது. உண்மையில் சில ஆண்களுக்கு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது. ஆனால் பெண்கள் கேட்காமலேயே நிறைய வெளிப்படுத்துவதால், அவர்கள் ஆண்களிடம் நிறைய எதிர்பார்ப்பதோடு, அவை நடக்கவில்லை என்றதும், உடனே கோபப்பட்டு சண்டைப் போடுகிறார்கள். * ஆண்களைப் பொறுத்த வரை, அடிக்கடி "ஐ லவ் யூ" என்று சொன்னால் மட்டும் தான், காதல் உள்ளதாக அர்த்தமா என்று எண்ணுவார்கள். ஆண்களைப் பொறுத்த வரை, ஒரு முறை அந்த மூன்று வார்த்தையை சொன்னாலும், இதயத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே தான் அவர்கள் அடிக்கடி சொல்வதில்லை. * அடிக்கடி "ஐ லவ் யூ" என்று சொல்வது எரிச்சலை உண்டாக்கும். உதாரணமாக, ஆண்கள் குடும்பத்தை நல்லப்படியாக பார்த்துக் கொள்ளவும், எதிர்காலம் நன்கு சந்தோஷமாக அமையவும் வேலைக்கு செல்கிறார்கள். அவ்வாறு வேலை செய்யும் இடத்தில் அளவுக்கு அதிகமாக வேலைப் பளுவினால், டென்சனாக இருக்கும் போது, எப்படி "ஐ லவ் யூ" என்று சொல்லத் தோன்றும். அவ்வாறு சொன்னாலும், அது வெறும் வார்த்தையாகத் தான் இருக்கும். எனவே இதனைப் புரிந்து கொண்டு, பெண்கள் நடப்பது, உறவை மேலும் வலுப்படுத்தும். * ஒருவேளை உங்கள் துணை அடிக்கடி, இந்த மூன்று வார்த்தையை சொல்லாவிட்டால், அவர்களுக்கு உணர்ச்சியை சரியாக வெளிப்படுத்த தெரியவில்லை என்று அர்த்தம். மேலும் அவர்கள் காதலை சொன்னால், "அத்திப் பூத்தாற் போல்" எப்போதாவது ஒரு முறை மட்டும் தான், மனிதல் இருக்கும் அனைத்து உணர்ச்சிகளும் சரியாக வெளிப்படும் படி சொல்வார்கள். * சில ஆண்களுக்கு ஈகோ அதிகம் இருக்கும். அதிலும் அடிக்கடி "ஐ லவ் யூ" சொன்னால், எங்கு பெண்கள் தம்மை இழிவாக நினைப்பார்களோ என்று நினைத்து, தன்னை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு, சொல்லாமல் மறுப்பார்கள். அத்தகைய ஈகோவானது, அவர்களது நடவடிக்கைகளிலேயே நன்கு தெரியும். பெரும்பாலான காதல், இந்த ஒரு காரணத்திற்கு தான் பிரிகிறது. எனவே காதலில் ஈகோ இல்லாமல் இருந்தால், காதலானது நீண்ட நாட்கள் நிலைக்கும். இவையே ஆண்கள் அடிக்கடி "ஐ லவ் யூ" என்று சொல்லாமல் இருப்பதற்கான காரணம். என்ன நண்பர்களே! ஒப்புக் கொள்கிறீர்களா?

இதில் பெண்களே முதலிடத்தில் இருப்பது வியப்பான ஒன்று

அழகான பெண் எதிரே வந்தால் அவர்களை ஆண்கள் பார்ப்பது சகஜம்தான். அதேபோலத்தான் பெண்களும். ஆனால் தங்களது ஜோடிகளுடன் போகும்போது எதிர்பாலினர் மீது பார்வையை ஓட விடுவதில் பெண்கள்தான் லீடிங்கில் இருக்கிறார்களாம்.
இதை ஒரு ஆய்வு நடத்திக் கண்டுபிடித்துள்ளனர் – வேற யாரு, வழக்கம் போல வெளிநாட்டுக்காரங்கதான். சுற்றுலாத் தலங்களுக்கு ஜாலியாக டிரிப் வந்த ஜோடிகளைப் பிடித்து கருத்துக் கேட்டுள்ளனர். அதில் 56 சதவீத ஆண்கள், தங்களை கிராஸ் செய்த, தங்கள் கண்ணில் பட்ட அழகான பெண்களை சைட் அடித்ததாக ஒத்துக் கொண்டனராம்.
அதேசமயம், கிட்டத்தட்ட 74 சதவீத பெண்கள், ஆமா, சைட் அடிச்சேன் என்று ஒத்துக் கொண்டார்களாம்.
இப்படி சைட் அடித்ததாக ஒத்துக் கொண்ட பெண்களில் 77 சதவீத பெண்கள், தாங்கள் அடுத்த ஆணை சைட் அடித்ததை கணவர் பார்த்து விடாதவாறு மறைக்க முயற்சி செய்ததாக கூறினராம். இவர்கள் இதற்காக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ‘பாதுகாப்பாக’ சைட் அடித்தார்களாம். அதேபோல கணவர் ஏதாவது பொருள் வாங்க ‘அந்தாண்டை’ நகர்ந்ததும், இவர்கள் ‘இந்தாண்டை’ சைட் அடித்தார்களாம்.
சில பெண்கள், தங்களை விட அழகாக இருந்த பெண்கள் மீது பார்வையை ஓட விட்டனராம். நம்ம ஆள் அவளைப் பார்த்தாரா என்றும் வேவு பார்த்துக் கொண்டார்களாம்.
இந்த கருத்துக் கணிப்பு குறித்து அதை நடத்தி நிறுவனத்தின் இணை உரிமையாளர் கிறிஸ் கிளார்க்சன் கூறுகையில், ஆணோ, பெண்ணோ, வெளியிடத்திற்குச் ஜோடியாக போகும்போது இருவருமே எதிர்பாலினரைப் பார்க்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் இதில் பெண்களே முதலிடத்தில் இருப்பது வியப்பான ஒன்று என்றார்.
இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது. இரு பாலினருக்கும் உணர்வுகள் ஒன்றுதானே…!

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு


இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டினை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினரை பொலிஸார் கைது செய்தனர்.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ நேற்று  பீகாரில் புத்தகயாவிற்கும் திருப்பதிக்கும் வழிபாடு செய்வதற்காக வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் பிரதமர் வீட்டினை முற்றுகையிட டில்லி சென்றனர். 08.02.2013 காலை ஜந்தர் மந்தரில் இருந்து பிரதமர் வீட்டை நோக்கி பேரணி சென்ற  போது பாராளுமன்ற சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தி.மு.க. தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான ‘டெசோ‘ வின் சார்பில் கறுப்பு உடையுடன் ஆப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிரக்கணக்கானோர் கறுப்பு உடையில் குவிந்தனர்.

டெசோ அமைப்பைச் சேர்ந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி,  திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சு.ப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர்  கறுப்பு உடையில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

அந்த பழைய சட்டமன்ற கட்டிடத்திற்குள் நான் உட்கார இடம் இல்லை. மூன்று சக்கர வண்டி உள்ளே செல்ல முடியவில்லை. டெல்லி ராஜ்யசபையில் 2, 3 உறுப்பினர்கள் இதே போல் சென்று பேசுவதற்கு வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
 
இலங்கை தமிழர்களின் நிலை பற்றி நமது கவலையை உலகுக்கு உணர்த்தி இருக்கிறோம். டெசோ அமைப்பின் மூலம் உலக நாடுகளுக்கும் தெரியப் படுத்தி வருகிறோம். அவர்களது நலவாழ்வுக்காக கோரிக்கை வைத்து இருக்கிறோம். 56 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி வரும் நம்மை பார்த்து சிலர், நாம் ஈழத் தமிழர்களுக்கு விரோதி போல் பேசுகிறார்கள்.
 
இலங்கையிலே போர் நடந்த போது நாம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று சொல்கிறார்கள், ஏதோ அவர்கள் கடற்கரையில் நின்று கொண்டு கையில் துப்பாக்கியுடன் சண்டையிட்டு தடுத்ததை போல் பேசுகிறார்கள். எனவே ஈழத்தமிழர்களுக்காக நாம் நடத்திய போராட்டங்களை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
 
தலைவர்களே ! நீங்க சொல்ற செய்ற அனைத்து   செயல்களும் அப்படியே புல்லரிக்குது ........ அச்சச்சோ ........ அய்யையோ ... அப்பப்ப்பா ......... முடியலாடா  சாமி .............. எல்லா அந்த இறந்த இலங்கை தமிழர்களுக்கே வெளிச்சம் .........
எல்லாத்தையும் முடிச்சிட்டு என்ன கூப்பாடு வேண்டி கிடக்கு .......... அரசியலு ..............

என்னடா இந்த குஷ்புக்கு வந்த சோதனையா ( இல்ல வேதனையா )


சென்னை: திமுகவின் முக்கிய பிரமுகராக வளைய வந்த குஷ்புவின் வீடு மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அப்படி என்னதான் சொல்லிவிட்டார் குஷ்பு? இதோ... அவர் இந்த வார ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்: ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, திமுகவில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு. ''திமுகவுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?'' ''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். திமுக தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக்கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்'னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.'' ''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?'' 'நான் இதை ஏத்துக்க மாட்டேன்'னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்சனைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.'' ''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... திமுக தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?'' ''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும். தலைவர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப்பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். திமுகவில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப்பாங்க. ஆனா, என்வழி தலைவர் வழிதான்!'' ''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்'தான்னு திமுக தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?'' ''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனா இருப்பவங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டாரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமா இருப்பாங்களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுப்பாங்க.'' ''சமீப காலமா திமுகவில் இருந்து உங்களை ஒதுக்கிவெச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே?'' ''சம்பந்தம் இல்லாம யாரோ பேசுற பேச்சுக்குஎல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்? இந்தப் பேச்சு எப்படி வந்திருக்கும்னு நான் சொல்லவா? திமுகவின் வீர வணக்க நாள் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. அன்னிக்கு எங்க வீட்ல முக்கியமான விசேஷம் ஒண்ணு இருந்துச்சு. இந்த விஷயத்தைத் தலைவர்கிட்டயும் தளபதிகிட்டயும் நேர்லயே சொல்லிட்டு வந்துட்டேன். உலகத்துக்கே தெரியும்... எனக்குக் கட்சி, சினிமாவைவிடக் குடும்பம்தான் முக்கியம்னு. அன்னிக்கு என் பொண்ணுக்கு ஒரு விசேஷம். அதனால, அந்தக் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. இதை மட்டுமே வெச்சு என்னைக் கட்சியில ஒதுக்கிட்டாங்கன்னு சொன்னா, அதை ஏத்துக்கவே முடியாது. முன்னாடி வள்ளுவர் கோட்டத்துல மின்வெட்டுக்கு எதிரா நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துல தலைவர் முன்னிலையில் பேசினப்ப, சிறப்பு முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னு பேசுனாங்க. இப்ப, ஒரே ஒரு கூட்டத்துக்குப் போகாததால், ஒதுக்கிவெச்சுட்டாங்கன்னு சொல்றாங்க. குட் ஜோக்!'' ''நீங்க கோபாலபுரத்துக்கே வரக் கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கறதா...'' (கேள்வி முடிவதற்குள்ளாகவே) ''இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரம் இல்லை.'' ''நாடாளுமன்றத் தேர்தலுக்காக விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வரப்போறதா பேச்சு அடிபடுதே?'' ''எதிர்காலத்துல நடக்கப்போறதைப் பத்தி இப்பவே ஏன் பேசணும்? வரட்டும். அப்புறம் பார்க்கலாம். தலைவரோ, விஜயகாந்தோ அதிகாரப்பூர்வமா அறிவிக்கிற வரை பொறுமையா இருப்போம். விஜயகாந்துடனான கூட்டணி பத்தி தளபதி எதுவுமே பேசலை. ஜனநாயகரீதியாக எதிர்க் கட்சித் தலைவருக்குத் துணையா இருப்போம்னு மட்டும்தான் சொன்னார்.'' ''நாடாளுமன்றத் தேர்தலில் நீங்க போட்டியிடுவீங்களா?'' ''தெரியலையே! இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கே. கட்சித் தலைமைதான் இதை முடிவு பண்ணணும். ஒருவேளை நான் போட்டியிடலைன்னா, 'குஷ்பு கேட்டாங்க... ஆனா, தலைமை மறுத்திடுச்சு'னு எழுதுவாங்க. போன சட்டமன்றத் தேர்தல் சமயமே எல்லாமே பார்த்துட்டேன். சேலம், ஆயிரம் விளக்குனு பல தொகுதிகளில் நான் போட்டியிடப் போறதாச் சொன்னாங்க. நான் தேர்தல்ல நிக்கணும்னு கட்சியில் சேரலை. யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தா சரியா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும்.'' ''உட்கட்சிப் பூசல் பழிவாங்கும் கொலைகளில் முடியும் விபரீதப்போக்கு திமுகவில் அதிகரிச்சுட்டே இருக்கே?'' ''சும்மா... பரபரப்புக்காக அப்படி வர்ற செய்திகள் உண்மை ஆகிடாது. ஒன் ப்ளஸ் ஒன்... பதினொண்ணுனு எழுதுவாங்க. ஆனா, எனக்கு ஒன் ப்ளஸ் ஒன் ரெண்டுனு நல்லாவே தெரியும். உட்கட்சிப் பிரச்னை ஏன் வருது? திமுக ஜனநாயகரீதியில் செயல்படும் கட்சி. மத்த இடங்களில் கட்சித் தலைமைக்குப் பயந்துகிட்டே செயல்பட வேண்டிய கட்டாயம். ஜன நாயக மரபுகளைக் கடைப் பிடிக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரியுது. இதை விட அதிகமான உட்கட்சிப் பூசல்கள் மத்த கட்சிகளில் இருக்கும். ஆனா, அதெல்லாம் வெளியே தெரியாது. ஏன்னா பயம்! இன்னொரு விஷயம், உட் கட்சிப் பூசல்கள் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு மைனஸ் கிடையாது. ஒரு குடும்பமா செயல்படும்போது, அதுல இருக்கிறவங்க தங்களோட வருத்தங்கள், கோபங்களை உள்ளேயே வெச்சுட்டு இருக் கிறது நல்லது இல்லையே. ஓப்பனாப் பேசினாத்தானே பிரச்னைக்கு ஒரு முடிவு வரும்.'' இவ்வாறு பேட்டியளித்துள்ள குஷ்பு, விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவையும் தாக்கியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/07/tamilnadu-kushboo-controversial-interview-169368.html