news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

திங்கள், 27 ஜூன், 2011

காங்கிரஸுக்குக் கொடுத்த ஆதரவு முடிந்து விட்டது, இப்போது கிடையாது-ஜெயலலிதா

நம்பித்தான் ஆகனும் . இவ்வளவு நாள் கழிச்சாவது சொல்லி இருக்காரே !
இப்படியும் வச்சிக்கலாம் அவங்களுக்கு கடந்த கால படிப்பினை இருக்கும் , அதே நேரத்தில் நம்ம கலைஞ்சர் மாதிரி எல்லாம் ஜெயலலித்தா இருக்கமாட்டார் . என்பதும் காங்கிரஸ்சுக்கு நல்லாவே தெரியும் . எதிர் பார்த்து அது நடக்காது என்பது கொஞ்சம் தெளிவானதால தான், எங்க கம்பெனி சலுகை முடிஞ்சி போச்சி அப்படின்னு அறிவிச்சிருக்காரு . தானா வரும் என்று நினைத்த கனி வராததால இப்ப சீசி இந்த பழம் புளிக்கும் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலித்தா . எப்படியே நமக்கு கொஞ்சம் நிம்மதி தான் ...........

அடுத்து பிரதமரை லூக்பால் சட்ட வரையறைகுள் கொண்டு வர கூடாதாம் , நம்பக தன்மை குறைஞ்சிடுமாம் . என்ன காமெடியா இல்ல என்னைக்கு பிரதமர் மேல மக்களுக்கு நம்பிக்கை இருந்தது, புதுசா எதையோ சொல்றாங்க . நம்பிக்கை இல்லை என்பதால தானே அவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் கொண்டு வரனும்முன்னு
சொல்றாங்க . இவங்க எல்லாம் ஊழல் செய்யாமல் இருந்திருந்தால் இந்த பேச்சுக்கே இடமில்லை . எதற்கு பயம் தவறு செய்தால் தானே பயப்படனும் மக்களுக்கு அப்பதான் அவங்க மேல கொஞ்சமாவது நம்பிக்கை வரும் . எப்படியும் ஊழல் முற்றிலுமாக ஒழியாது தான் , ஆனால் கொஞ்சமாவது குறைய வாய்ப்பு அதிகம் உண்டு . முயற்சி செய்து தான் பார்க்கனும் , குழைந்தை பிறக்காமலே கருவிலேயே இது ஆனா , இல்லை பெண்ணா என்று பார்ப்பது போல் உள்ளது . கரு குறை இல்லாமல் அனைத்து அவையங்களும் நன்றாக இருந்தால் தான் அது நல்ல படியாக பிறக்கும் . பிறக்கும் போதே அது எப்படி இருக்கும் என்று எப்படி தீர்மானிக்க முடியும் . நல்ல பிள்ளையை பெற்றெடுப்பது மட்டுமே கடமை இப்போதைக்கு . அதை நல்லவிதமாக கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் மிக முக்கியம் என்பதையும் மறுபதற்கில்லை .

டெல்லி: காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பதாக நான் 2010ம் ஆண்டு கூறிய நிலை இப்போது இல்லை. அந்த வாய்ப்பு அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட ஒன்று. இப்போது நிலைமை வெகுவாக மாறி விட்டது. அந்த ஆதரவு வாய்ப்பு இப்போது இல்லை என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

காங்கிரஸுக்கு இப்போதும் உங்களது ஆதரவு உள்ளதா?

காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக நான் கூறியது 2010ம் ஆண்டு இருந்த சூழ்நிலையின் அடிப்படையில்தான். அது ஒருமுறை கூறப்பட்ட வாய்ப்புதான். இப்போது அது இல்லை. 2010க்குப் பிறகு நிலைமை வெகுவாக மாறி விட்டது. அது அப்போது தரப்பட்ட ஒரு உறுதிமொழி, அவ்வளவுதான்.

நான் தருவதாக கூறிய ஆதரவை காங்கிரஸ் கட்சி ஏன் ஏற்கவில்லை என்பதை காங்கிரஸிடம்தான் கேட்க வேண்டும்.

மேலும், திமுகவுடன் தனது கூட்டணி உறுதியுடன் இருப்பதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கூறி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லோக்சபா தேர்தலில் கூட்டணிகள் மாறுமா?

அரசியலில் எதுவும் நடக்கலாம். லோக்சபா தேர்தலுக்கு முன்பு கூட்டணிகள் மாற வாய்ப்பில்லை என்று கூற முடியாது. அரசியல் கணக்குகள் மாறிக் கொண்டேதான் இருக்கும். அந்தந்த சூழ்நிலையில் உள்ளவற்றைப் பொறுத்துதான் அரசியல் கூட்டணிகள் ஏற்படும்.

அரசியலில் இறுக்கமாக இருப்பது சரிவராது. எங்களைப் பொறுத்தவரை எந்த சூழல் ஏற்பட்டாலும் அதை நாங்கள் சமாளிக்கக் கூடிய வகையில் தயாராகவே இருக்கிறோம்.

3வது அணி ஏற்படுமா?

எதிர்கால அரசியல் சூழ்நிலை குறித்து இப்போதே கூற முடியாது. அரசியல் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படுவது சகஜம். பொறுத்திருந்து பார்ப்போம்.

பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா?

எனக்கு அனைத்துக் கட்சிகளிலும் நல்ல நண்பர்கள் உள்ளனர்.

லோக்பாலில் பிரதமரைச் சேர்க்கலாமா?

நிச்சயம் சேர்க்கக் கூடாது. ஏற்கனவே பிரதமர் ஊழல் பதவி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருகிறது. லோக்பாலில் பிரதமர் பதவியைச் சேர்த்தால் பிரதமர் அலுவலகம் மீதான நம்பகத்தன்மை போய் விடும். அப்படிப்பட்ட செயலை செய்ய அனுமதிக்கக் கூடாது.

மத்தியில் மீண்டும் தனிக்கட்சி ஆட்சி வரும் என கருதுகிறீர்களா?

அதற்கான வாய்ப்பே இல்லை. ஒரு கட்சி ஆட்சி முறை முடிந்து போய் விட்டது. எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறும் என நான் கருதவில்லை. எதிர்காலத்திலும் கூட்டணி ஆட்சிகள்தான் வரும்.

மத்திய அரசியலுக்கு வருவீர்களா?

அப்படி எந்த எண்ணமும், லட்சியமும் எனக்கு இல்லை. எனக்கென்று நான் லட்சியங்களை வகுப்பதில்லை. நாட்டுக்காகத்தான் லட்சியங்களை வகுத்து செயல்படுகிறேன்.

தயாநிதி மாறன் நீக்கப்பட வேண்டுமா?

அதை பிரதமர்தான் சொல்ல வேண்டும். ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டியது, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது பிரதமரின் கடமையும், பொறுப்புமாகும். அதை அவர் செய்ய வேண்டும்.

ப.சிதம்பரம்?

ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் வெல்லவே இல்லை. அவர் மோசடியான முறையில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இது நாட்டுக்கே தெரியும். நாட்டை அவர் மோசடி செய்து விட்டு பதவியில் அமர்ந்துள்ளார். அவர் பதவியில் நீடிப்பது சரியல்ல, பொருத்தமானதல்ல, நியாயமானதல்ல என்றார் ஜெயலலிதா.

ஞாயிறு, 26 ஜூன், 2011

லோக்பால் மசோதாவுக்காக குண்டுகளை எதிர்கொள்ளத் தயார்: அண்ணா ஹசாரே


இனிவரும் காலங்களில் லோக்பால் சட்ட மசோதா தயாரிப்பு பணியில் சமூக ஆர்வலர்கள் இடம்பெற மாட்டார்கள் என மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார்.

ஆமாம் சும்மா எங்கள குடைஞ்சா இப்பவே இப்படி, உங்களை வளர விட்ட எங்களுக்கு வியாபாரம் (அரசியல் ) நடக்காது . அரசியல் என்றால் உழல் இருக்கத்தான் செய்யும் அதை எல்லாம் கேட்க நீங்க யாரு அப்படீன்னு அடிச்சி விட்டிருக்காங்க . அதாவது பயமுறுத்தி இருக்காங்க பாவம் அவங்களுக்கு தெரியல மக்களை பற்றி எங்களால தினமும் அறிக்கை விட முடியாது , ஆனால் ஒன்று முடியும் உங்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்ப என்பதை மறந்து, தான் தோன்றி தனமாக நடந்து கொள்ளும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு . பொம்மைக்கு (மன்மோகன் சிங் ) அடுத்து இளவரசர் ரெடி ஆயிட்டாராம் பட்டாபிசேகம் சூட்ட என்ன கொடுமை .

ஒரு உறுதியான அறிக்கையை அன்னா ஹசாரே வெளிட்டிருன்கின்றார் . அது உங்கள் மிரட்டல் எல்லாம் எங்க கிட்ட வேணாம் எதற்கும் நாங்கள் தயார் என்று . உண்ணா விரதம் இருந்தால் அதை தக்க முறையில் எதிர்க்கொள்வார்கலாம். எப்படி என்று தான் சமீபத்துல பார்த்தோமே !. தப்பா கணக்கு போட்டுட்டீங்க தம்பிங்களா !. ராம்தேவ் மீது மக்களுக்கு நல்ல விதமான அபிராயம் இல்லை .
காரணம் ஆடம்பரம். ஆனால் கொள்கை ஒன்று தான் ஊழல் எதிர்ப்பு . அவர் மீது இதுவரை இல்லாத வருமான வரி சோதணை, பல வேதணை , இவ்வளவு நாளா என்ன --------- (கழட்டிக்கிட்டு ) இருந்தீங்க . இல்ல என்னத்த கிழுச்சிகிட்டு இருந்தீங்க வெட்கமா இல்லை உங்களுக்கு . எல்லாவற்றையும் மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டு தான் இருகின்றனர் . உங்கள் ஆராஜகம் கையாலாகாத பிரதமர் . ஊழல் போருச்சாளிகளின் கூடாரம் காங்கிரஸ் . திமுகாவை பலமாக சாடும் ஜெயலலித்தா அவர்கள் காங்கிரஸ்சை எதிர்க்காதது வேடிக்கையே !.

மற்ற தலைவர்கள் போல் அல்லாமல் அன்னா ஹசாரே மீது மக்களுக்கு இரண்டு பட்ட கருத்து இல்லை என்பது நிதர்சனம் . இது அன்னா ஹசாரே அவர்களின் பாலம் .

புணே, ஜூன் 23: லோக்பால் மசோதாவுக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சமூக சேவகர் அண்ணா ஹசாரே கூறினார். மகாராஷ்டிர மாநிலம், புணேவில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய அவர், மரணத்துக்கு நான் பயப்பட மாட்டேன் என்றும் மத்திய அரசை எச்சரித்தார். வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி ஆகஸ்ட் 16 முதல் தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டால் பாபா ராம்தேவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் நேரிடும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து அண்ணா ஹசாரேவிடம் கேட்டபோது, மத்திய அரசைக் கண்டித்து கடுமையாகப் பதிலளித்தார். "எங்களது போராட்டத்தை ஒடுக்க தடியடி மட்டுமல்ல, துப்பாக்கிசூடும் நடத்துவார்கள் என்பது தெரியும். துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொள்ளத் நான் தயாராக இருக்கிறேன். மகாத்மா காந்தி, காமராஜர் ஆகியோர் தலைவர்களாக இருந்த காங்கிரஸ் கட்சியில் அவர்கள் போன்ற தலைவர்கள் இப்போது இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. எங்களது போராட்டம் அண்ணா ஹசாரே என்ற தனிமனிதனின் போராட்டம் அல்ல. நாட்டு மக்களின் போராட்டம். அனைத்து மாநில மக்களும் எங்களது போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஆட்சியாளர்களுக்கு அவர்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்' என்று அவர் கூறினார்.
திக்விஜய் சிங் மறுப்பு:
இந்த விவகாரம் குறித்து போபாலில் இருந்த திக்விஜய் சிங்கிடம் கேட்டபோது, நாளிதழ் செய்திகளை மறுத்தார். "அண்ணா ஹசாரே அல்லது பாபா ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. போராட்டங்களின்போது அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் காங்கிரஸýக்கு தொடர்பில்லை. ஒவ்வொரு போராட்டங்களின்போதும், அவற்றின் போக்கைக் கண்காணித்து உள்ளூர் நிர்வாகங்கள்தான் நடவடிக்கை எடுக்கின்றன. இதைத்தான் நான் செய்தியாளர்களிடம் கூறினேன். ஆனால், நாளிதழ்களில் வேறுவிதமாக செய்திகள் வெளிவந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. வயதில் மூத்தவரான அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பது அவரது உடல்நலத்துக்கு உகந்தது அல்ல. அவருக்குப் பதிலாக அவர்கள் குழுவில் உள்ள அரவிந்த் கேஜரிவால், பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம்' என்று திக்விஜய் சிங் தெரிவித்தார்.
ஹசாரே குழு அறிக்கை:
லோக்பால் மசோதா விவகாரம் குறித்து அண்ணா ஹசாரே குழு சார்பில் தில்லியில் வியாழக்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அரசு வரையறுத்துள்ள லோக்பால் மசோதா ஊழல்வாதிகளை தண்டிக்கும்விதமாக இல்லை, மாறாக ஊழலுக்கு எதிராக புகார் அளிக்கும் மனுதாரர்களை தண்டிக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசின் 40 லட்சம் ஊழியர்களையும், மாநில அரசுகளின் 80 லட்சம் ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் சேர்க்க முடியாது. இணைச் செயலர் அந்தஸ்துக்கு மேற்பட்ட 65,000 அதிகாரிகளை மட்டுமே லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர முடியும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அப்படியென்றால், கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் ஊழல்களை எப்படித் தடுக்க முடியும். நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. அந்த அமைப்புகளில் சிறியவை, பெரியவை என்று வித்தியாசம் பார்ப்பது இல்லை. துர்கை பூஜை விழாவுக்கு நிதி திரட்டும் அமைப்புகளை கூட மத்திய அரசு விடுவதில்லை. அரசு ஊழியர்கள் விவகாரத்தில் மட்டும் எல்லோரையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று கூறுவதை ஏற்கமுடியாது. எந்தவித விசாரணையும் இன்றி பொதுமக்கள் மீது அரசு ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். அப்போது, அரசு சார்பில் வழக்கறிஞரும் நியமிக்கப்படுகிறார். பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் பொதுமக்கள் மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக 6 மாதங்கள் மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம் என்று அண்ணா ஹசாரே குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சனி, 25 ஜூன், 2011

ஜூன் 26 நினைவேந்தல்

ஜூன் 26 நினைவேந்தல்இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதால் என்ன நடந்துவிடப்போகிறது...? ஒருவேளை அப்படி செய்தால்தான் இறந்தவர்களின் ஆத்மா "சாந்தி" அடையுமோ...? இதென்ன கருமம் மெழுகுவர்த்தி பிடித்துக்கொண்டு ஜெபக்கூட்டம் மாதிரி... என்றெல்லாம் எண்ணிப்பார்த்தேன். இது சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் அஞ்சலிக்கூட்டம் அல்ல. நமது தமிழ் உறவுகள் இலங்கை அரசால் சித்திரவதை செய்யப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை சர்வதேச சமூகத்திற்கும், ஊடகங்களுக்கும் உணர்த்தவிருக்கும் அடையாளக்கூட்டம். தூங்கிக்கொண்டிருக்கும் (அ) தூங்குவதுபோல நடித்துக்கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு "நாங்க இருக்கோம்டா..." என்று சொல்லி செவிட்டில் அறையும் கூட்டம்.


சாதாரண பொதுமக்களாகிய நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணும் லட்சம் தமிழர்களும், ஜூன் 26 மாலையில் மெரீனா கடற்கரைக்கு வாருங்கள். வரலாற்றை நம் பக்கம் திருப்புவோம்.

ஐ.நாவின் மனித உரிமை தினத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மாலையில், தமது பாதுகாவலர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டு பின் ஒவ்வொரு பதுங்கு குழியாய் நின்று சிங்கள விலங்குகள் வேட்டையாடியதால் மாண்டுபோன நமது தமிழ் உறவுகளை நினைவு கூறுவோம். நமது சொந்தங்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து வந்து அந்த வீரர்களுக்காகவும், போராளி மக்களுக்காகவும் மரியாதை செலுத்துவோம். பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களை மெரினாவிற்கு அழைத்து வருவோம். ஒரு மாபெரும் அஞ்சலி நிகழ்வை நிகழ்த்தி அதன் மூலமாக தமிழர்களின் ஒற்றுமையை இந்திய அரசுக்கும், நமது கோரிக்கையான “தமிழீழத்தை விடுதலை செய்” என்பதை சர்வதேசச் சமூகத்திற்கும் முகத்தில் அறைந்து சொல்லுவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள்.


மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.

ஞாயிறு, 19 ஜூன், 2011

இறங்கமற்ற ஜடங்களின் உச்ச கட்டம்.........

மன குமுறல் காரணமாக இத்தனை நாட்களாக யோசித்துப்போது தான் வெளியிடுகின்றேன் . தயவு செய்து இளகிய மனம் படைத்தவர்கள், இருதைய நேயாளி , குழந்தைகள் , பெண்கள் தய செய்து பார்க்க வேண்டாம் என்று கேட்டு கொள்கின்றேன். கொடுமைகளை யூகித்து மட்டும் கொள்ளுங்கள் வீடியோ வை பார்க்க வேண்டாம் உங்களுக்காக போடோஸ் கொஞ்சம் போட்டிருக்கேன் . என் மன குமுறல் என்ன செய்வது இந்த மிருகங்களை என்று தெரிய வில்லை ........


நண்பர் கிரியும் இதை பற்றி எழுதி இருக்கின்றார் படிக்க ஆதங்க படுபவர்கள் இங்கே சொடுக்கவும்

ஹாரர் படங்களை நினைவுப்படுத்திய இலங்கை போர்க்குற்றங்கள்


bala June 19, 2011 at 11:54 PM

என்னை, உங்களை போன்ற உண்மையான உணர்வு உள்ளவர்கள் இரத்த கண்ணீர் மட்டுமே விட முடிகின்றது …………. இதை வைத்தும் அரசியல் செய்ய துடிக்கும் மக்கள்( மாக்கள் ) இருக்கத்தான் செய்கின்றனர் . என்னுடைய ப்ளோக்ல பல முறை மன குமுறல்களை எழுதி இருக்கேன் . பச்சை பச்சைய வில வருது தயவு செய்து யாரும் அந்த —————– தமிழின தலைவருன்னு உங்க கால தெட்டு கேட்டுகிறேன் சொல்லாதீங்க நா கூசுது , வாய்(வார்த்தை ) தடிக்குது , ஒரு விஷயம் மறந்துடீங்க கிரி இதோட தமிழ் மிடியாக்களையும் சேர்த்து எழுதினா தான் முழுமை பெறும் அவர்கள் (கொன்றதில் அவர்கள் பங்கும் உண்டு ) . எல்லாமே பணம் (பிணம் )தின்னிங்க கிரி . ஜெயாலலிதாவ பற்றி குறிப்பிட்டிருக்கிறதுல ஒரு 40 % நானும் ஒத்து போகின்றேன். ஆனால் கருணாநிதி அளவுக்கு மோசம் ஆகி இருக்காது …….. அதுவும் உண்மை . இப்போது இயற்றி இருக்கும் தீர்மானம் அதை தொடர்ந்து செயல் பாடு பாராட்டுதலுக்குரியது தான் . ஆனால் இது தொடர்ச்சியாக இருக்கவேண்டுமே என்ற எண்ணமும் எழுகின்றது . இப்ப கப்பலு வேற விட்டிருக்கானுங்க இந்த காங்கிரஸ்காரனுங்களா என்ன செஞ்சா தகும் கிரி . முதல்ல சோனியாவ நாட்ட விட்டே துரத்தனும் காரணம் பெருசா ஒண்ணுமில்ல , இந்தியா உறுப்படும் , கொஞ்சம் காங்கிரசும் , நாட்டு பற்று இருக்கனும் முதல்ல தன்னால இன பற்று மக்கள் பற்று எல்லாம் வரும் அவங்க கிட்ட அத எதிர் பாக்கறது தப்புதான் , வெக்கமே இல்லாத காங்கிரஸ் காரனுங்க வேற எவனுக்கும் தகுதியே இல்லையா அந்த கட்சில தருதல கட்சி பா அது . நாடு எங்க இருந்து விளங்கும் . உங்கள் பதிவு ஆதங்கத்தின் வெளிபாடு ஆதங்கம் நல்ல இருந்தது என்று சொல்ல கூடாது அது தவறு . என்ன பண்றது நாம எல்லாம் கொஞ்சம் மனசாட்சியோட பிறந்து தொலைச்சிட்டோம் கிரி அது மட்டுமே என்னால சொல்ல முடிகின்றது …

வீடியோ பார்க்க: கொடுமைகள் 1 , கொடுமைகள் 2, கொடுமைகள் 3, கொடுமைகள் 4

சனி, 18 ஜூன், 2011

தமிழ்நாடு அனைத்து மாவட்ட பள்ளிகட்டணம் விவரம்

முழு விவரம் அறிய இங்கே சொடுக்கவும்

பள்ளி கட்டண விவரம் (லிஸ்ட் ) திருவள்ளுவர் மாவட்டம் ( செங்குன்றம் சுற்று புறம் )

கிழ் காணும் இந்த வருசையில் கணக்கிட்டு கொள்ளவும்
I STD , II STD, III STD, IV STD, V STD, VI STD, VII STD, VIII STD, IX STD, X STD, +1, + 2

CHILD JESUS NURUSERY & PRIMARY SCHOOL, 1/348 THIRUPPUR KUMARAN ST, PADIYANALLUR, CHENNAI-52.
1400, 1400, 1850, 1850, 1850, 1850, 1850.


TRINITY NURSERY & PRIMARY SCHOOL, 1/1353 EZHUMALAI NAICKER ST, GANDHI NAGAR, CHENNAI-52.
1900
1900
3000
3000
3000
3000
3000

BHARATHI NURSERY & PRIMARY SCHOOL, 1/421 PILLAIYAR KOIL ST,PADIYANALLUR, REHILLS, CHENNAI-52.
2850
2850
3900
3900
3900
3900
3900

ST PAULS NURSERY & PRIMARY SCHOOL, 3/104 KARUMARIAMMAN KOIL ST, CHINNA MATHUR, MANALI, CHENNAI-68.
2000
2000
2400
2400
2400
2400
2400

SRI KALAIVANI VIDYALAYA NURSERY & PRIMARY SCHOOL,
5/225 PAMMADUKULAM ROAD, K.K.NAGAR ATTANTHANGAL, REDHILLS,CHENNAI-52.
3000
3000
5000
5000
5000
5000
5000

-SRI KALAIVANI VIDYALAYA NURSERY & PRIMARY SCHOOL, 1/1725A T.H.ROAD, ATTANTHANGAL REDHILLS, CHENNAI - 52.
3500
3500
6050
6050
6050
6050
6050

ALMIGHTY NURSERY & PRIMARY SCHOOL, A/42AMBETHKAR NAGAR SHOLAVARAM, CHENNAI-67.
2150
2150
2800
2800
2800
2800
2800

ELITE MATRICULATION HIGHER SECONDARY SCHOOL,2/220, THILAGAR STREET,M.A. NAGAR,REDHILLS,CHENNAI - 600 052.
1950
1950
3900
3900
3900
3900
3900
5750
5750
5750
8150
8150
10350
10350

CHILDREN'S PARADISE MATRICULATION HIGHER SECONDARY SCHOOL,3/127-A, KAMBAR STREET,M.A. NAGAR,CHENNAI - 600 052.
2950
2950
3750
3750
3750
3750
3750
4800
4800
4800
6200
6200
6000
6000

ALPHA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL,JEEVA STREET,M.A. NAGAR,REDHILLS,CHENNAI - 600 052.
3050
3050
4300
4300
4300
4300
4300
5500
5500
5500
6650
6650
8750
8750

ST. MARY'S MATRICULATION HIGHER SECONDARY SCHOOL,THIRUVALLUR KOOTU ROAD,REDHILLS,CHENNAI - 600 052.
8500
8500
11000
11000
11000
11000
11000
13300
13300
13300
14350
14350
19300
19300

AYISHA MATRICULATION SCHOOL, 8, BAJANAI KOIL STREET, REDHILLS, CHENNAI - 52.
1850
1850
1700
1700
1700
1700
1700
2200
2200
2200

ST. PAUL'S MATRICULATION HIGHER SECONDARY SCHOOL,NO. 16, DR. AMBEDKAR STREET,PUZHAL (CAMP),CHENNAI - 600 066.
-
-
-
-
-
-
-
4350
4350
4350
4950
4950
6600
6600

ILAHI MATRICULATION SCHOOL,124, T.V.K. STREET,REDHILLS,CHENNAI - 600 052.
1850
1850
1650
1650
1650
1650
1650
2150
2150
2150
2850
2850

ST. ANTHONY'S MATRICULATION HIGHER SECONDARY SCHOOL,ANTHONIYAR NAGAR,PUZHAL,CHENNAI - 600 066.
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF

M.S. MATRICULATION SCHOOL, EDAPALAYAM,C.C.B.F. POST, CHENNAI - 52.
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF
NF

NATIONAL LOTUS MATRICULATION HIGHER SECONDARY SCHOOL,10, MUTHURAMALINGAM STREET,KAMARAJ NAGAR,REDHILLS,
2500
2500
3700
3700
3700
3700
3700
4800
4800
4800
6650
6650
8150
8150

GREEN FIELD CONVENT MATRICULATION SCHOOL,PUDHUPAKKAM,(NEAR ARUMANDHAI JUNCTION),BOODHUR POST,CHENNAI - 600 067.
3350
3350
4950
4950
4950
4950
4950
6450
6450
6450
7000
7000
-
-

DON BOSCO MATRICULATION SCHOOL,G.N.T. ROAD,KARANODAI,CHENNAI - 600 067.
3900
3900
4050
4050
4050
4050
4050
4950
4950
4950
5600
5600
-

KING MAKER VIDYALAYA NURSERY & PRIMARY SCHOOL, MADAVARAM HIGH ROAD, VADAKARAI, REDHILLS,CHENNAI - 600 052.
2900
2900
4050
4050
4050
4050
4050

வியாழன், 16 ஜூன், 2011

கொள்ளை கூட்டத்தின் கொள்ளை போதவில்லை என்று புகார் ( புதுமையான கோரிக்கை )

தனியார் பள்ளிகளுக்கு ஒரே ஒரு கேள்வி (மக்களின் சார்பாக ) நீங்க எல்லாம் எதுக்கு பள்ளி ஆரபிச்சீங்க ........ கொள்ளை அடிக்கவ ....... ஏதாவது கொள்ளை அடிக்கிற தொழில் ( லாபம் கொழிக்கும் ) ஆரபித்து , கோடிகளை அல்லவேண்டியது தானே ! . எதுக்கு இப்படி சேவை செய்ய வேண்டிய கல்வி துறையில் நுழைந்து மக்களை பாடாய் படுத்துறீங்க .....

உடனே முந்திகிட்டு வந்துடுவாங்க தனியார் பள்ளி நிர்வாகிகள் ஏன் இங்க வரீங்க அரசு பள்ளியில் சேர்க்கவேண்டியது தானே ! . உங்க கொள்ளை தொடர்ந்தால் ஒரு நாள் அதுவும் நடக்கும் . கல்லூரி படிக்க ( தொழில் நுட்ப படிப்பு ) 32500 ரூபாய் ஆனால் பள்ளிகளில் என்ன வசூலிக்கின்றார்கள் என்று அனைவருக்கும் தெரியும் ........ . பணம் பண்ணும் தொழிலாக மாற்றி விட்ட நிர்வாகிகள் மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுகிறார்களோ இல்லையோ !

முதலில் கல்வி கட்டணம் , பிற அனைத்து வியாபாரங்களும் , புத்தக விற்பனை , போக்குவரத்து வாகனம் , சிற்றுண்டி , பள்ளி சீருடை என்று ஆரபித்து இன்று அனைத்தையும் விற்கும் பல்பொருள் அங்காடியாக பள்ளி கூடங்களை மாற்றி விட்டனர் .

இவர்களுக்கு எவ்வளவு நீங்க உயர்த்தி கொடுத்தாலும் போதாது , காரணம் அரசு சாரி இல்லாத காரணமே , அரசு அவர்களுக்கே ஜால்ரா அடிப்பதால் இன்னும் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கின்றது . மக்கள் தான் பாவம் இவனுங்க பேச்ச கேட்டு சண்ட போட்டதால பல பேரோட நிம்மதி போச்சி . நிர்வாகம் கட்டம் கட்டி குழந்தைகளை பாடாய் படுத்துகின்றனர் . இது தீராத ஒரு தொடர் கதையாக இந்த வருடமும் தொடரும் , வழக்கம் போல் அரசு கட்டுகிறது , தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளை இன்னும் சருராக நடக்கும் . இதில் இடையில் மாட்டி நசுங்கி வீனா போக போறது என்னமோ பெற்றோர்கள் தான் .......

சென்னை : "ரவிராஜ பாண்டியன் குழு அறிவித்துள்ள கட்டணம் மிகவும் குறைவு. இந்த பிரச்னையில் முதல்வர் தலையிட்டு, நியாயமான கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் பொதுச் செயலர் வெங்கடாசல பாண்டியன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சமச்சீர் கல்வி வழக்கில், சென்னை ஐகோர்ட் வழங்கும் தீர்ப்பை ஏற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்பது தான், எங்களின் கொள்கை. தமிழக அரசு, அந்த நோக்கத்திற்காகவே செயல்பட்டு வருகிறது. எனவே, கல்வி திட்டத்தில் எங்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், கட்டணம் நிர்ணயிப்பதில் தொடர் குளறுபடி ஏற்பட்டு வருகிறது.

முதலில் நியமிக்கப்பட்ட கோவிந்தராஜன் குழுவும், தனியார் பள்ளிகளை சரியான முறையில் ஆய்வு செய்து கட்டணம் நிர்ணயிக்கவில்லை. குழுவின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்ற ரவிராஜ பாண்டியனும், நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. மேல் முறையீடு செய்த, 6,355 பள்ளிகளுக்கு, 14ம் தேதி புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டது. இதில், பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்த்தபடி கட்டணம் நிர்ணயிக்கவில்லை. மிகக் குறைவாகவே கட்டண உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பல பள்ளிகளுக்கு, ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை குறைத்தும், ரவிராஜ பாண்டியன் உத்தரவிட்டிருக்கிறார். தற்போதுள்ள கட்டணத்தை வைத்துக்கொண்டு, பள்ளியை நடத்த முடியாது. அதுவும், மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து, ஒரே விதமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என கூறுவது, எந்த வகையிலும் நியாயமில்லை. மூன்று ஆண்டுகளிலும், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்; நிர்வாகச் செலவும் கூடும். இதையெல்லாம், குழு கருத்தில் கொள்ளவில்லை.

இந்த விவகாரத்தில், முதல்வர் தலையிட்டு, பள்ளி நிர்வாகிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், அதே நேரத்தில் பெற்றோர் பாதிக்காத வகையிலும், நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வெங்கடாசல பாண்டியன் கூறினார்.

செவ்வாய், 14 ஜூன், 2011

பள்ளி உண்டு பாடம் இல்லை .....

அட நம்ம சன் நியூஸ் சானலில் பிளாஷ் நியூஸ் இது தாங்க .............
என்னடான்னு பார்த்தா , உச்ச நீதிமன்ற தீர்ப்பதான் இப்படி போட்டிருக்காங்க .....
ஏற்கனவே எரிசல்ல இருக்கும் பெற்றோர்கள் . நியூஸ் பார்த்து மேலும் கடுப்பாய் இருபாங்க ....

செய்தி இந்தாங்க :

நீ‌திப‌திக‌ள் ‌பிற‌ப்‌பி‌‌த்உ‌த்தர‌வி‌ல், 1ஆ‌மவகு‌ப்பு, 6ஆ‌மவகு‌ப்புகளு‌க்கசம‌ச்‌சீ‌ரக‌‌‌ல்‌வியதொடவே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

ம‌ற்வகு‌ப்புகளு‌க்கசம‌ச்‌சீ‌ரக‌ல்‌வி தேவையஎ‌ன்பதப‌ற்‌றி ஆராய ‌நிபுண‌ரகுழஅமை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌நிபுண‌ரகுழு 3 வாரத‌்‌தி‌லஅ‌றி‌க்கையசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ளஉ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

நிபுண‌ரகுழஅ‌றி‌க்கையசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தினமு‌ம் ‌விசா‌ரி‌க்வே‌ண்டு‌‌மஎ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ளஉ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

த‌மிழக தலைமை‌ச் செயல‌ர் தலைமை‌‌யி‌ல் ‌நிபுண‌ர் குழு அமை‌‌க்க‌ப்ப‌ட வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், இ‌ந்த குழு‌வி‌ல் தே‌சிய க‌ல்‌வி ஆரா‌ய்‌ச்‌‌சி கவு‌ன்‌சி‌ல் சா‌ர்‌பி‌ல் 2 அ‌திகா‌ரிகளு‌‌ம், ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை சா‌ர்‌பி‌ல் 2 அ‌திகா‌ரிகளு‌ம், க‌ல்‌வி‌த்துறை செயலரு‌ம், ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை செயலரு‌ம் இட‌ம் பெற வே‌ண்‌டு‌ம் எ‌ன்று‌ உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

இன்னும் ஒரு மாசத்துக்கு எந்த கல்வி முறை அமல் படுத்த போறங்கன்னு மீண்டும் பெற்றோர்கள் மண்ட காஞ்சிடும் ......... அதுக்கு அப்புறம் இவங்க தீர்ப்பு சொல்லி பின்னாடி புக் எல்லாம் பிரிண்ட் பண்ணி பள்ளிகள் பாடம் இந்த வருடம் படிச்சா மாதிரிதான் . ரெண்டு வருசமா தமிழ் நாட்டுல கல்வில நடக்குற கூத்து தாங்கலடா சாமி .

ஒரு பக்கம் பள்ளி கட்டணம் ஒழுங்கு படுத்துர்ரூமுன்னுபடுத்துறாங்க பாருங்க சாமி , சாமியே ஆனாலும் இரத்த கண்ணீர் வடிக்கும் . காரணம் இந்த அரசியல் விளையாட்டில் பிள்ளைகளும் , பெற்றோர்களும் படும் மன அழுத்தம், உளைச்சல் அதிகம் .

ஆட்சியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு கூர்ந்து உங்களால் கொள்கைய அமுல் படுத்த முடிஞ்ச, உங்களுக்கு நெஞ்சில மஞ்ச சோறு இருந்த , தைரியம் இருந்தா அதை அறிவிப்பு செய்யுங்க. இல்ல பேசாம இருந்துடுங்க எதுக்கு உங்க அரசியல விளையாட்டை பிள்ளைங்க கல்வியில புகுத்தி விளையாடுறீங்க .........

நான் சமச் சீர் கல்வியை ஆதரிக்கின்றேன் அதே நேரத்தில் தரமான உலக தரத்தோடு போட்டி போடும் கல்வியை அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் . அதுவே சமசீர் கல்வி ..... அதற்காக உடனே எடுத்தோம் கவுத்தோம் என்று அமுல் படுத்துவதும் தவறு ஒரே அடியாக தரம் உயர்த்துகின்றோம் என்று பிள்ளைகளை முழி பிதுங்க வைக்க கூடாது என்பது என் வாதம் . எந்த கல்வியாக இருந்தாலும் அது புரிந்து கேள்விகள் தொடுக்கும் அறிவை வளர்க்கும் கல்வியாக இருக்க வேண்டும் . வெறுமனே மனப்பாடம் செய்யும் தரத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் . ஒரு செயல் முறை கல்வி கொடுத்து பாருங்கள் அதன் தரம் மாணவனின் அறிவு திறன் எப்படி இருக்கும் என்று .

எந்த கல்வியே இந்த கல்வி ஆண்டை உடனடியாக தொடங்குங்கள் . நன்றாக ஆராய்ந்து நல்ல பாட திட்டத்தை அடுத்த ஆண்டாவது அமுல் படுத்துங்கள் . அல்லது இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை சில பாடங்களை நீக்கி விட்டு அமுல்படுத்துங்கள் அடுத்த ஆண்டு திருத்திய பாட திட்டத்தை அமுல்படுத்துங்கள் .

எனக்கு ஒரு அசைக்க முடியாத சந்தேகம் முதல்வர் ஜெயலலித்தாவிடம் இருக்கின்றது . அது அவருக்கு சமச்சீர் கல்வி அமுல்படுத்துவதில் ஆர்வம் இல்லை, அதை எப்படியாவது நீர்த்து போக செய்ய அவர் செய்யும் வேலைகள் அதிகம் . ஆகவே அவருடைய ஆட்சியில் சமச்சீர் கல்வியும் வராது .
பள்ளிகளின் கட்டண கொள்ளையையும் தடுக்காது இந்த அரசு . இந்த விசயமாக ஜெயலலித்தாவிடம் ஒரு மர்ம முடிச்சே இருக்கு . காரணம் அவர் முன்பு போல யாரையும் மதிக்காமல் தோணுவதைமுன்பு உடனடியாக அதே நேரத்தில் தீவிரமாக அமுல் படுத்துவார் அந்த அசத்திய தைரியம் இருந்தது .

மக்கள் அவருக்கு கொடுத்த பாடம் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார் .
தான் நினைப்பதை அமுல்படுத்த முடியாமல் கொஞ்சம் அவகாசம் எடுத்து கொள்ளுகின்றார். காரணம் மக்களை இப்போது கொஞ்சம் மதிக்க கற்றுக் கொண்டது போல் காட்டி கொள்கின்றார் . அவர் என்றும் மாற மாட்டார் . என்பதற்கு இந்த கல்வி முறையே சான்று . அதே போல் கல்வி கட்டணம் அமுல் படுத்துவதிலும் அவருக்கு அக்கறை இல்லை .

அது அவருடைய பேட்டிகளின் வாயலாகவே தெரியும் . எதற்கும் நேரடியான பதில் இல்லை . கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கும் பள்ளிகளின் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை என்றும் , தனியார் பள்ளிகள் கேட்டு கொண்டால் கட்டண உயர்வு பற்றி பரிசீலிப்பதாகவும் சொல்லுகின்றார் ......
. என்ன ஒரு முரண் பாடு

இரண்டு முறை குழு அமைத்து கல்வி கட்டணம் நிர்ணையத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதை கொஞ்சமும் சட்டை செய்ய வில்லை . தான்தோன்றிய தனமாக சர்வாதிகாரிகளை போல் நடந்து கட்டணங்களை வசூலிக்கின்றன .
அரசு சரியான படி நடவடிக்கை இல்லாததே அவர்களின் இந்த போக்கிற்கு முழு காரணம் .

இப்போதும் சொல்கின்றனர் எங்களுக்கு கட்டண நிர்ணயம் போத வில்லை என்று .ஆனாலும் பள்ளிகளிலும் ஏற்கனவே கட்டண கொள்ளை நடந்தாகி விட்டது . பெற்றோர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்களாம் . எப்படி தட்டி கேட்பவர்களையும் மறியல் செய்பவர்களையும் கைது செய்து உள்ள போடுவீங்க . அதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்துக்கு வெண்சாமரம் வீசுவீங்க......... நல்ல இருக்கு உங்க நாயம் ......

தமிழ் நாட்டோட தலைவிதி அவ்வளவே என்ன பண்றது . ஐந்தாண்டு சகித்து போக வேண்டி உள்ளது . அப்புறம் அடுத்த கொள்ளைகாரனுக்கு நாட்ட டெண்டர் விட வேண்டி இருக்கு .

தமிழ் நாட்டு மக்களின் மனம் அறிந்து ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் என்று தான் வருவார்களோ .........................

அடுத்து காங்கிரஸ் எதிர்த்து தான் நாம அ.தி.மு.க.விற்கு ஓட்டு போட்டோம் . டெல்லி போய் அம்மா, காங்கிரஸ் கூட கூட்டணி அவங்க கேட்டா வைப்பாங்களாம் . ஊழல் முதலாளியே காங்கிரஸ் தான் அனைத்து துறைகளிலும் ஊழல் . தமிழனுக்கு எதிரானது தான் இன்றைய சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி . நீங்கள் அவர்களோடு கூட்டணி என்று நினைத்தாலும் கூட அது தமிழ் நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் .

100 குழந்தைகளை கடத்தி விற்பனை


மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி விற்றுள்ளதாக கைதான புரோக்கர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களும், இதற்கான புரோக்கர்களும் அதிகரித்தனர். அண்ணா நகர் உதவி கமிஷனர் வெள்ளத்துரை உத்தரவில் போலீசார் மப்டியில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் சுடுதண்ணீர் வாய்க்காலை சேர்ந்த சுப்பிரமணி (67) சிக்கினார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தைகளை கடத்தி தொடர்ந்து விற்று வந்தது தெரிந்தது. சென்னையை சேர்ந்தவர் கற்பகம்(42). இவரது கணவர் சுப்பையா. சென்னை தலைமைச்செயலகத்தில் எஸ்ஐ,யாக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை ஏக்கத்தில் இருந்த கற்பகம், மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை விற்கப்படும் தகவல் கிடைத்து மதுரை வந்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனை பணியாளர் அமுதவள்ளி, புரோக்கர் சுப்பிரமணி ஆகியோர் சேர்ந்து ஸீ7,000 வாங்கிக் கொண்டு குழந்தை தருவதாக கூறியுள்ளனர். தாமதமாவது குறித்து கேட்ட கற்பகத்தை இருவரும் தாக்கி மேலும் ஸீ1000 பணத்தை பறித்துள்ளனர். இதுகுறித்த கற்பகம் புகாரில் சுப்பிரமணியுடன், அமுதவள்ளியையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுப்பிரமணி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம்:

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை கடத்தி பணத்துக்காக விற்பனை செய்துள்ளேன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்றிருப்பேன். கள்ளக்காதல், திருமணத்துக்கு முன்பு என கர்ப்பம் அடைந்த பெண்கள் பலரும் இங்கு பிரசவத்துக்கு வருவர். அவர்களை குறி வைத்து கவனித்துக் கொள்வேன். பெரும்பாலும் அவர்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புவது இல்லை. அவர்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வேன். அவசரத்துக்கு தேவைப்படும் போது குழந்தைகளை திருடி விற்கவும் செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணி மதுரை மத்திய சிறையிலும், அமுதவள்ளி திருச்சி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். குழந்தை திருட்டு தொடர்பாக மேலும் சில ஊழியர்கள் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர்.ஆல்பம் ........