news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

புதன், 18 ஜனவரி, 2012

காதலில் உறுதி இருந்தால் ......

நாளை திருமணம் நடக்க இருந்த சென்னை கல்லூரி ஆசிரியையின் என்ஜினீயர் மாப்பிள்ளை கைது

இது மாதிரியான செய்திகள் நாம் அடிக்கடி படிப்பதும் , காண்பதும் , கேள்விபடுவதும் இப்போது சகஜமாகிவிட்டது . இப்ப ஒரு கலாசாரம் பெருகி போச்சி , அதாவது யாரையாவது காதலிக்க வேண்டியது அப்புறம் யாருகூடவாவது நிச்சயம் பண்ண வேண்டியது , அப்புறம் ஏதாவது கரணம் சொல்லி திருமணத்தை நிறுத்தவேண்டியது , இதில் ஒன்று பையனோ , பொண்ணோ மட்டும் பாதிக்கிறதில்லை , குடும்பம் , சுற்றம் , சகோதரர்கள் , சகோதரிகள் , இப்படி எதுக்கு உங்களுக்கு இந்த கோல வெறி , காதலிக்கிறீங்க சரி ஒன்னு தைரியமா பெத்தவங்க சம்மதத்தோடு பேசி திருமணம் முடிக்கலாம் , இல்ல துணிஞ்சி எதிர்த்தும் திருமணம் செய்யலாம் அது அவர்கள் காதலில் ஆழத்தை பொறுத்தது . எதற்கு இப்படி சம்பந்தம் இல்லாத பையனையோ , பொண்ணையோ பதிக்க நீங்க காரணமா இருக்கீங்க . 

உங்கள பெத்து வளர்த்த பாவத்துக்காக உங்க பெற்றோர் வருத்த படுவதோ அல்லது பாதிக்க படுவதையோ கூட ஒரு விதத்துல ஏத்துக்கலாம். ஆனால் உங்க குடுபத்துக்கு சம்பந்தம்  இல்லாத , ஒரு குடும்பம்  அது பையனோ , பொண்ணோ , உங்க கூட சம்பந்தம் வச்சிக்க நினச்ச பாவம் மட்டுமே.  இதில் அவர்களும் பாதிப்புக்குள்ளாவது எந்த விதத்தில் நாயம்    என்று விளங்க வில்லை. எதையும் முன்பே முடிவு செய்து விட்டால் எதற்கு இந்த வீண் வேலைகள் , அவமானங்கள் . 

பெத்தவங்களும் கொஞ்சம் காலத்துக்கு தகுந்தா மாதிரி உங்கள மாத்திக்க முயற்சி பண்ணுங்க . பிள்ளைங்க என்ன செய்யறாங்க அப்படின்னு கவனிங்க , இன்றைய நாட்களில் காதல் என்பது பெரிய குற்றம்  எதுவும் இல்ல அவமான செயலும் இல்ல, நல்ல விதமா இரண்டு வீட்டாரும் பேசி  நீங்களாகவே முன்வந்து திருமணம் செய்து வைத்தால் இந்த மாதிரியான நிகழ்வுகள் குறையும். நாளடைவில் எல்லாம் சரியாக விடும் . பிள்ளைகளின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைத்து எந்த போலியான   கெளரவத்தை  காப்பத்த போறீங்க என்று விளங்க வில்லை . நீங்க பார்த்து பார்த்து வர்த்த பிள்ளைகளின் கனவுகளை ஆசைகளை சரியாக இருந்தால் தயவு செய்து நிறைவேற்றி வையுங்கள். 

பிள்ளைகளும் பெத்தவங்க சம்மதம் யாரு வாங்கிட்டு காதலிக்க முடியாது தான். ஆனால் காதலில் உறுதி இருந்தால் பெற்றவர்களுக்கு புரிய வையுங்கள் முடியாத பச்சத்தல் அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் பதிவு திருமாணம் செய்து கொள்ளுங்கள் . பெற்றவர்களுக்காக செய்கின்றோம் என்ற தவறான எண்ணத்தில் உங்களுக்கும் , உங்கள் நம்பி திருமண ஏற்பாடுகளை செய்யும் மாப்பிள்ளை, பெண் வீட்டார்களை சோதிக்காதீர்கள். அது பாவம் .

உண்மையில் பெண்ணை பாராட்டியே தீர வேண்டும் . என்ன ஒரு துணிவு ,   இந்த திருமணம் நடந்திருந்தால் இரண்டு பேருக்குமே சங்கடங்கள் , சந்தோசமான வாழ்கை   வீணடிக்க பட்டிருக்கும் . இப்போது நிறைய ஆண்களும் இதுபோல பாதிப்புககுள்ளாகி கொண்டிருகின்றார்கள்  என்பதும் கவனிக்கவேண்டிய விசயமே !

நிச்சயிக்க பட்ட பின்பு திருமணம் நின்று விட்டால் எப்படியும் காதலனுக்கோ , அல்லது காதலிக்கே தான்  மறுபடியும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அல்லது கைகழுவி விடுவார்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் ஒன்று சேர்ந்து விடலாம் என்ற சுயநலத்தோடு கூடிய குறுக்கு புத்திகள் இப்போது மலிந்து விட்டது என்பது வருத்ததுதோடு கூடிய உண்மை ...............

செய்தி :

 ஸ்ரீரங்கம், ஜன. 18-

சென்னை கல்லூரி ஆசிரியையுடன் நாளை திருமணம் நடக்க இருந்த என்ஜினீயர் மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். ஆசிரியையுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு தனது காதலியை அவர் பதிவுத்திருமணம் செய்து கொண்டதால் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வாசுதேவன். தனியார் நிறுவன மேலாளர். இவரது மகள் சுபா (வயது 24). எம்.இ. படித்து உள்ள சுபா சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
மதுரை வடக்கு ஆவணி மூலவீதி ராமன் செட்டி சந்து தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் ராஜேஷ் (28). என்ஜினீயர் ஆன இவர் சென்னையில் உள்ள ஒரு காற்றாலை மின் நிலையத்தில் முது நிலை பொறியாளராக வேலை செய்து வருகிறார். ராஜேசுக்கும் - சுபாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த 11-9-2011 அன்று 'நிச்சயம்' செய்யப்பட்டது.
சுபாவின் சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் என்பதாலும், அவரது சித்தப்பா உள்பட உறவினர்கள் ஸ்ரீரங்கத்தில் வசிப்பதாலும் திருமணத்தை ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) நடத்துவது என முடிவு செய்து இருந்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் இருந்தே ராஜேசும், சுபாவும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
மணமகன் ராஜேசும் இடையில் ஒரு முறை திருச்சிக்கு வந்து, தங்களுக்கு தேவையான கட்டில், மெத்தை உள்பட சீர்வரிசை பொருட்களை தேர்வு செய்து மணமகள் வீட்டாரிடம் வாங்கி கொடுக்கும்படி கூறி இருக்கிறார்.
இந்நிலையில் சுபா நேற்று முன்தினம் இரவு திடீர் என ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
"எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராஜேஷ் போனில் பேசும்போது, தான் சென்னையை சேர்ந்த சுஜிதா என்ற பெண்ணை கடந்த 31-10-2011 அன்று சாலவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வியாழக்கிழமை (நாளை) ராஜேசுடன் எனக்கு நடைபெற இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும், என்னை திருமணம் செய்துகொள்வதாக நிச்சயம் செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து மோசடி செய்த அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரகதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ராஜேஷ் சென்னையை சேர்ந்த சுஜிதாவை 6 ஆண்டுகளாக பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து வந்ததும், காதலியை மறக்க முடியாமல், பின்னர் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
சுபாவுடன் திருமண நிச்சயம் நடந்த பின்னர் தான் அவர் சுஜிதாவை திருமணம் செய்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து ராஜேசை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை திருச்சி 3-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த புகார் தொடர்பாக ராஜேசின் தம்பி யஷ்வந்த் (24), தந்தை ராமசாமி (60), தாயார் கண்ணம்மாள் (56) ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.