news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

திங்கள், 31 ஜனவரி, 2011

மகிந்த ராஜபக்ச, கருணாநிதி இரகசிய தொடர்பு - உறவுப் பாலமாக ஆறுமுகம் தொண்டமான்!

கலைஞ்சரின் தமிழின துரோகம் , மன்னிக்குமா ? தமிழினம் உலகில் வாழும் வரை

மகிந்த ராஜபக்சவுடன் கருணாநிதி நெருங்கிய நட்பைப் பேணுவதாகவும், இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வதாகவும் டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெற்றிருக்கிறன. தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான இந்த உறவினை கலைஞரின் மகள் கனிமொழி ஊடாகவே தொண்டமான் சாத்தியமாக்கியுள்ளதாகவும் டெய்லி மிரர் கூறியுள்ளது.

போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் மகிந்த ராஜபக்ச என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் கோபத்தினை வெளிப்படுத்தும் ஒரு தன்மையே தமிழ்நாட்டில் காணப்பட்டது. ஆனால் இன்று அதிபர் ராஜபக்சவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டிகளைப் பாடசாலைகளில் விநியோகிக்கும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.

அண்மைய காலங்களில் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு பயணம் செய்த தொண்டமான் கருணாநிதியினைச் சந்தித்து அதிபர் ராஜபக்சவின் தகவல்களைப் பரிமாறியிருக்கிறார். இப்படித்தான் இவர்களுக்கிடையிலான உறவு ஆரம்பமானது.

குறிப்பிட்ட சில அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெற்றிருக்கிறன. தனது அரசியல் சாணக்கியத்தைப் பயன்படுத்தியே மகிந்த ராஜபக்ச கருணாநிதியினை வென்றிருக்கிறார். அதே சாணக்கியத்தினையே அதிபர் ராஜபக்ச ஐ.நாவினது செயலாளர் நாயகம் பன் கீ மூனுக்கும் பிரயோகித்திருந்தார்.

மகிந்தவினது இராசதந்திர முனைப்புக்களின் விளைவாகவே பன் கீ மூம் தான் அமைத்த வல்லுநர்கள் குழுவினைச் சிறிலங்காவிற்கு அனுப்பமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் எனச் சிலர் கூறுகிறார்கள். மகிந்தவின் சாணக்கியத்திற்குப் பலிக்கடாவான அடுத்த நபர் கருணாநிதியா அல்லது இல்லையா என்பது தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள மாநிலத் தேர்தல்களின் பின்னர்தான் தெரியவரும் என்றும் டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.

நன்றி :Pathivu News


கொதிப்பு :
தமிழன் உயிர் மண்ணோட போனாலும் பரவா இல்ல , கடிதம் எழுதியே முதல்வர் சீட்ட தேய்ப்போம் . ஆனால் ஸ்டிச்சர்ல படுத்துகிட்டே போயாவது சீட்டு பேரம் பேச டெல்லி போய் இருக்கும் கலைஞ்சரே ! என்னே உங்கள் தமிழினப் பற்று .

..

சனி, 29 ஜனவரி, 2011

மீனவர்களுக்காக குரல் கொடுப்போம்...!!!

எதை செஞ்சாலும் செவிடன் காதுல கூட ஒரு நாள் கருவி வைத்து கேட்டு விடும் என்று நினைக்கிறேன். இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகள் காதுகளுக்கு மட்டும் கேக்க மாட்டேங்குதே . எங்கேயாவது கமுசன்(கில்மா பெட்டி ) தறாங்கன்னா மட்டும் எப்படி தான் மூக்கு வேர்க்குமோ தெரியல... சொரனக்கெட்ட தமிழக அரசியல்வாதிகளுக்கு, என்னத சொல்றது.
கொஞ்சம் மக்கள் போராடி, பிரச்சணை பெருசாச்சுனா உடனே கலைஞ்சர் ஒரு கடிதம் எழுதிடுவாரு , அங்கே இருந்து இவருடைய பங்காளி பதில் கடிதம் எழுதுவாரு( இவனுங்க என்ன ஆட்சி நடத்துரானுங்களா இல்ல, மந்திரி பதவி கிடைக்கலன்னா அடுத்த பிளைட்டுள பறந்து உருண்டுகிட்டாவது போய் வாங்காம திரும்ப மாட்டாரு ) . சவகாசமா ஒரு கை தடிய பிளைட்டுள இலங்கைக்கு அனுப்பிட வேண்டியது , அவன் குடுக்கற டி, பன்ன நக்கிட்டு வந்துடவேண்டியது ( பச்ச பச்சைய வருது வாயில ) . தமிழன் என்றாலே ஒரு எலக்காரம் தான் எல்லாருக்கும்.......

எல்லாருக்கும் வரும் ஒரு சந்தேகம். ஒரு வலைப்பதிவனால் என்ன செய்துவிட முடியுமென்று. ஒரு வலைப்பதிவனால் முடியாததாக இருக்கலாம். பத்து பதிவர்கள், நூறு பதிவர்கள், ஆயிரம் பதிவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால்... முடியாதது எதுவுமில்லை. டுவிட்டர், பேஸ்புக், ஆர்குட் என்று இணையவெளி எங்கும் குரல் கொடுத்தால்... கோட்டை கதவுகளும் திறக்கும்.

டுவிட்டரில் ஒரு உணர்வுத்தீ...
இந்த இணைப்பை கிளிக்கி தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

உங்கள் கருத்துகளுக்குப் பின்னால் #tnfisherman #indianfisherman #worldfisherman இவற்றை காப்பி பேஸ்ட் செய்து அனுப்புங்கள்.

உதாரணம்:
- மானாட மயிலாட . அங்கே உயிரோடு ஊசலாட. நேவிக்காரன் விளையாட.. கண்டும் நாடகமாட..STOP THE KILLING! #tnfisherman #indianfisherman #worldfisherman
- we are counting the death , and you can start counting the days in power.STOP THE KILLING! #tnfisherman #indianfisherman #worldfisherman

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற சில இணையதளங்கள்:

இது மட்டுமில்லாமல் இது சம்பந்தமான எழுதப்படும் தமிழ் இடுகைகள் http://savetnfisherman.blogspot.com என்ற வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக் பயனாளர்களுக்கு:
பேஸ்புக் பயனாளர்கள் உங்களுடைய ஆதரவை தெரிவிக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்:-

உங்கள் வலைப்பூவின் ஓரத்தில்:
டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலைதளத்தில் இணைக்க விரும்பினால் [இந்த வலைப்பூவின் வலதுபுறம் போல] Dashboard --> design --> page template --> add a gadget --> HTML/Java script என்ற விட்ஜெட்டில் கோடிங்கை சேர்த்து சேமிக்கவும்.

கோடிங்குக்கு:
http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html
ஒரு விண்ணப்பம்:
இந்த துயரை இந்தியா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இணைய படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை படித்து நீங்களும் கையெழுத்துயிடலாம். http://www.petitiononline.com/TNfisher/petition.html கூடுதலான கோரிக்கைவைக்க விரும்பினாலும் அங்கே கருத்துரையில் தெரிவிக்கலாம். முன்னுரிமை தரப்படும். தற்போதைய குறைந்த பட்ச இலக்கு 1000 கையெழுத்து. இந்த படிவத்தை முக்கிய செய்தி நிறுவனங்களுக்கும் அரசுக்கும் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. முந்துங்கள்!

மின்னஞ்சல் சங்கிலி:
பிடித்த விஷயங்கள், பிடித்த கருத்துகள் பிடித்த கேலி சித்திரங்கள் என கட்டி தவறவிட்ட இணையவாசிகளுக்கு வழங்கலாம். தவறான அணுகுமுறைகளை களைய அற்புதமான ஐடியாகளை சொல்லலாம். கீழுள்ள படிவத்தையும் மின்னஞ்சலில் சுற்றிவிடலாம்.

உணர்விருந்தும் என்னிடம் வலைப்பூவோ, டுவிட்டர் பேஸ்புக் கணக்குகளோ இல்லையே என்று வருந்துபவர்களுக்காக கீழே இரண்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:-
http://164.100.47.132/LssNew/members/membershomepage.aspx
மக்களவை உறுப்பினர்கள் விவரம்
http://164.100.47.5/Newmembers/memberlist.aspx
மாநிலங்களவை உறுப்பினர் விபரம்
அப்பெயர்களை சொடிக்கி ஒவ்வொருவரின் மின்னஞ்சல் முகவரிகளைப் பெறலாம். யாருக்கு எப்படி அனுப்பினால் மீனவர்கள் அப்படி பாதிக்கப்படமாட்டர்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு முறைப்படி
ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிடுங்கள்.
இதை வலைப்பூ, டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் வைத்திருப்போரும் செய்யலாம்.

இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இறந்தவர்களை சகோதர உணர்வுடன் பார்ப்பவர்களாக இருந்தாலே போதும்.


நன்றி:
நீச்சல்காரன்
வந்தே மாதரம்

புதன், 26 ஜனவரி, 2011

பிரச்சனை தீர்ந்து போச்சி .......

இந்த கார்டூன்னுக்கு விமர்சனம் எழத தேவையே இல்ல . இதை விட கலைஞ்சருக்கு தமிழர் வாழ்வின் மீதிருக்கும் தன்னலமற்ற அக்கறையை தெளிவா புரிய வைக்க முடியுமா ?
வாழ்க கலைஞ்சர் தமிழர் பற்று ,
வளர்க அவர்கள் குடும்ப சொத்து .......

இந்த கார்டூன் வரைந்தவர் தி அவர்களை வாழ்த்த(பாராட்ட) வார்த்தைகளே இல்லை தமிழ் தாய் படும் வேதனையை வெளிப்படுத்தியதற்க்காக என்றும் தமிழ் தாயின் ஆசி பெற்றிடுவார் . மேலும் முத்தமிழ் காவலர் வாழ்த்த கலைஞ்சரிடமே வார்த்தைகளை இலவசமா கேட்போம், ஆனால் கொடுக்க தான் மாட்டார் அது அவர் எழுதுவதாச்சே, அத வச்சி அடுத்த படம் எடுத்து அடிச்ச கருப்ப வெளுத்துட மாட்டோம்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

வேறு தொழில்களுக்கு..............

"என்னவளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில் , ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் , உயரும் உன் மதிப்பு வெளி நாட்டில் " இது எம். ஜி. ஆர். படத்துல வாயசச்சி நடிச்ச பாடல் வரிகள் ... பார்த்துட்டு நம்மளும் ஆஆ ஓஒ அப்படின்னு வாய பிளந்துட்டு இருந்துட்டான் .

இந்த வரிகளில் இருந்த உண்மையை ஏனோ நடிகர்கள் மீதிருந்த மோகத்தில் மறந்து போனதாகவே தெரிகின்றது . படிக்காத கிராமத்து விவசாயி வேர்வை சிந்தி வயலில் வேலை செய்து விளைவிக்கும் எந்த பொருளுக்கும் அவன் விலை வைக்க முடிவதில்லை முதற் காரணம் , அதனால் கிடைக்க வேண்டிய நாயமான வருமானம் கிடைக்க வில்லை . இன்னும் காரணங்கள் பல உண்டு.

இன்று இதன் காரணமாக, தான் படிக்காததால் தான் இந்த நிலை என்று நினைத்து தன் வாரிசுகளாவது படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று விவசாயத்தை தவிர்க்கின்றனர் . இதற்கு முழு பொறுபேற்பது யார் ? , அரசாங்கமா , அப்படி ஒன்று நம் நாட்டில் இருந்தால் தானே சொல்வதற்கு . தன் மக்களை கொன்று அதன் மீதி தொழில்சாலை அமைத்து வெளிநாட்டவன் சம்பாதிக்க விலை நிலங்களை தாரை வாக்கும் அரசாங்கங்கள் அல்லவா நம்மை ஆண்டுக்கொண்டிருகின்றது .

உழவன் சேற்றில் கால்வைத்தால் தான் நமக்கு உணவு என்று தெரிந்தும்
மெத்தன போக்கு , அம்பானிக்கு தலை முடி ஒன்று விழுந்து விடுவது போல் கனவு கண்டாலே அலறி அடித்து கொண்டு ஓடும் நிதித்துறை அமைச்சகம் , விவசாயி வாங்கின பயிர் கடன் வட்டி காட்ட முடியாமல் தற்கொலை செய்யும் போது வேடிக்கை பார்ப்பது வினோதமே வேதனையே !.

அதன் பலனை இன்று நாம் அனுபவித்து கொண்டிருக்கின்றோம் , ஒவ்வொரு உணவு பொருள்களுக்கும் அண்டை மாநிலம் , அண்டை நாடுகளிடம் கை ஏந்தும் அவலம் . இந்த போக்கு தொடருமேயானால் உணவு புரட்சி வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை . நீங்கள் பணத்தை தான் (காகிதம் ) தின்ன வேண்டும் கழுதைய போல .......

அப்போதும் அரசியல்வாதியும் , பெரும் பண முதலைகளும் தப்பித்து கொள்கின்றனா பணத்தை காட்டி சாதித்து கொள்கின்றனர் . பாதிப்பு என்னவோ ஏழை நடுத்தர பாவப்பட்ட மக்களுக்கே ( காரணம் மான, அவமானம் எல்லாம் இவர்களுக்காகவே பிறந்தைவை ) . கோடிகளை கொள்ளை அடிச்சவன் கொக்கரிக்கரன் வெளியில, டி .வி லா வெக்கமே இல்லமா பேட்டி கொடுக்கறான்.வாங்கின பயிர் கடன் வட்டி காட்ட முடியாம தூக்குல தொங்குறான் விவசாயி.

இந்த நாட்டுல எப்படி விவசாயி பிழிப்பான் . அதான் வந்த வரை லாபன்னு ரியல் எஸ்டேட் காரன்னுங்க விரிக்கிற வலையில மாட்டிக்கறான் விவசாயி . எந்த ஒரு விவசாயியும் விரும்பி நிலங்களை விக்கறதில்ல. தொடரும் கொடுமைகள் தான் காரணம் . போதுமான விழிப்புணர்வு அரசிடமோ , அல்லது அதை வழி நடத்தும் அரசு அதிகாரிகளிடமோ இல்லை மாறாக அலைச்சியமே நீடிப்பதால் இந்த தொடர் தற்கொலைகளும் , விலை ஏற்றமும் தவிர்க்க முடியாததாகி விடும் என்பதை இறுகிய மன வருத்ததோடு இங்கே பதியம் போடுகிறேன் .

செய்தி : விவசாய தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மழை வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் கொடுத்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டதாகவும், கடன் தொல்லையால் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களையே நம்பி உள்ளனர். இதனாலேயே, சுதந்திரம் அடைந்ததில் இருந்து, விவசாய தொழிலை முன்னேற்ற ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும், மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.மாநில அரசுகளும், விவசாயிகளுக்கு பயிர் செய்யவும், உழவு கருவிகள் வாங்கவும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றன. உரம், பூச்சி மருந்து பொருட்கள் மானிய விலையில் கொடுக்கின்றன. வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் கடன் ரத்து செய்யப்படுகின்றன.கடன் உதவிகள், மானியம் போன்றவை கிடைத்தாலும் விவசாயம் செய்வது எளிதான செயலாக இல்லை. எதிர்பாராமல் திடீரென பெய்யும் பெரும் மழை, பயிர் செய்ய முடியாத அளவிற்கு கடும் வறட்சி, பனி போன்றவை விவசாயிகளை அவ்வப்போது பதம்பார்த்து வருகின்றன. இதனால், இந்த ஆண்டு சிறப்பான மகசூல் கிடைக்கும் என்று, எந்த விவசாயியும் எதிர்பார்ப்புடன் இருக்க முடியாத நிலை உள்ளது.


இதனால், வாங்கிய கடனையும் சரியான தவணைகளில் கட்ட முடிவதில்லை. விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கினாலும், அதை பெறுவதற்கு சிபாரிசு, கடன் வழங்கும் அதிகாரிக்கு லஞ்சம் என்று கொடுக்க வேண்டியுள்ளதால், கடன் தொகை முழுவதும் விவசாயிக்கு கிடைக்க முடியாத நிலை உள்ளது.இதனால், தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், கடன் சுமை அதிகரித்து ஏராளமான விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடனை கட்ட முடியாமல் தன்மானம், கவுரவம் கருதி தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் அதிகம்.விவசாய தொழிலில் கூலி குறைவாக இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர்.


இது குறித்து விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை கேட்டபோது, "விவசாய பட்டப்படிப்பு படித்து வேலை இல்லாத விவசாய பட்டதாரிகளை கிராமங்களுக்கு அனுப்பி, விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன விவசாய தொழில் முன்னேற்றங்கள் குறித்து, விவசாயிகளிடம் எடுத்துக்கூறி விவசாயத்தை வளர்க்க அரசு உதவ வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில், உலகில் விவசாய உற்பத்தி குறையும் என்று வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர்.கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணாக வெங்காயம், தக்காளி போன்ற பொருட்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து விட்டன. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


"கடன் தள்ளுபடி' திட்டம் கண்துடைப்பு : மத்திய, மாநில அரசுகள் விவசாய கடனை தள்ளுபடி செய்து வந்தாலும் அதன் பலன், ஏராளமான ஏழை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. கடன் தள்ளுபடியை விட, பயிர் காப்பீடு திட்டத்தை அதிகரித்தால் பலன் கிடைக்கும். இந்த திட்டம் வெகுவாக நடைமுறையில் இல்லாததால், அதிக மழை, வறட்சி, பனிப்பொழிவு, புயல், பூச்சி தாக்குதல், நோய் போன்ற காரணங்களால் நஷ்டம் ஏற்பட்டு, விவசாய தொழில் முடங்கிப் போய் விடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் நாட்டிற்கும் நஷ்டம் ஏற்படுகிறது.பயிர் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எளிதாக நிவாரணம் கிடைக்கும். இதனால், விவசாயி தொடர்ந்து நம்பிக்கையுடன் விவசாயத்தை மேற்கொள்ள வழி ஏற்படும். - என்ன கொடும சார் இது என்று புலம்பும் ஒரு பாமர மனிதன்

வெள்ளி, 21 ஜனவரி, 2011

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்!?

விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், "பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது'' என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.Image

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், "பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள். இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர... உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

"சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்த ஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள். பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற்கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா' அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணிகளின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித்தது'' என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தினோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது. ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடைபெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார். அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப்பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன்... "நான் தமிழீழக் கனவை நினைவாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தப்பித்துச் சென்று கொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்'' என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். "அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார்' என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை. கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும்போது தலைவர் வெளியே வருவார்' என ரூபன் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்கள். அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின்போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.


நன்றி : நக்கீரன்

திங்கள், 17 ஜனவரி, 2011

அரசியல் வாக்குறுதிகள் :


இயற்கையே ! என்னை தலைவனாக ஏற்றுக்கொள்வாயானால் ........
 • கடற்கரையே ! உனை சீண்டி பார்க்கும் கடலலையை கடாவில் காவல் வைப்பேன்
 • கடலே ! உன்னை கரிக்கும் உப்பை வடித்து உனை வான்வெளியில் மீட்டு வைப்பேன்
 • மலரே உன்னை வண்டுகள் மெயக்காமல் இருக்க மலர்கொடுமை சட்டம் அமைப்பேன்
 • வண்டுகளே உங்கள் காம மயக்கம் தெளியாமல் இருக்க காமசூத்திர பயிற்றுவிப்பேன்.
 • காகமே உங்களை வெண்மையாக்க, இலவச அழகு நிலையம் அமைத்து தருவேன்,
 • நிலவே உன் சூரிய காதலை பிரிக்கும் பூமியை விரட்டி, அதற்கு வேற்று பாதை அமைத்து தருவேன்.
 • பிரிந்திருக்கும் நட்சத்திரங்களே ! உங்களை இணைத்து கூட்டணிக்கு தலைவனாவேன் !
 • பனியே உன்னை கொல்லும் சூரியனிலிருந்து காக்க ஆளுக்கொரு இலவசமாய் குடையளிப்பேன்
 • இயற்கையே நீங்கள் கண்டு களிக்க, வானில் அகன்ற திரையில் தினம் மானட மயிலாட தொடர் நடத்திடுவேன்
 • கண்டங்களே உங்களை ஒன்றிணைக்க மானுட வங்கியில் கடன் வாங்கி கான்கிரிட் பாலமமைப்பேன்
 • மலைகளே உங்கள் அழகு மங்காமல் இருக்க, ரேசன் மூலம் இலவச அழகு பொருட்கள் வழங்குவேன்
 • வற்றிய நதிகளே உங்களின் நிலை அறிவேன் , ஆதலால் நீங்கள் வற்றாமல் இருக்க கடல் நீரை மெகா மோட்டர் அமைத்து நிரப்பிடுவேன் .
 • வானமே உன் கூடாரத்தை இடித்து விட்டு அழகிய கலைநயம் மிக்க பல மாடி கட்டிடம் அமைப்பேன்
 • மரங்களே உங்கள் பேயாட்டம் நிறுத்த மாந்திரீகம் செய்து ஆளுக்கொரு தாயத்து கட்டி விடுவேன்
 • காற்றே நீ மாசு படாமல் இருக்க மனித இனத்தை செவ்வாய்க்கு நாடு கடத்துவேன்
 • ஐம்பூதங்காலே உங்கள் துறைகளை நவீனமாக்க இணையம் மூலம் ஒன்றிணைப்பேன் .
 • பிரம்மனே எனக்கு ஆதரவு கொடுத்தால், நிரந்தர படைக்கும் துறை மந்திரியாக்குவேன் .
 • விஷ்ணுவே என்னுடன் சேர்ந்தால் காக்கும் துறை உன் தலைமுறைக்கும் காணிக்கயாக்குவேன்
 • சிவனே ! நீ மட்டும் என்னை ஆதரித்தால் உன் துறைக்கு முடிவில்லா தலைவனாக்கி , நவீன ஆயுதங்களை அண்டை யுகத்தில் வாங்கி உடன் பெருத்த சன்மானம்மும் தருவேன்
 • இவை போதாதென்றால் தட்டுபாடின்றி சோமபானம் விற்று, அனைத்தும் இலவசமாக தருவேன்
 • ஆதரவளியுங்கள் என் டுபாகூர் . தூள் .டக்கர் கட்சிக்கே .
 • வாக்களியுங்கள் எங்கள் மண்டை ஓடு சின்னத்திற்கே !
 • மறந்தும் பிறந்து விடாதீர்கள் , இறந்த பின்னும் மரத்து விடாதீர்கள் , வாக்களியுங்கள் மண்டை ஓடு சின்னத்திற்கே !...

 • இயற்கை, கொய்யல எங்க கிட்டவேவா , நாங்க என்ன மனிதர்கள் மாதிரி முட்டாளுங்களா ? , இதை எல்லாம் தேர்தலுக்கு முன்னாடி செய்வியா இல்ல , அல்வா மாதிரி வேற எதையாவது கிண்டி குடுப்பியா........
 • தலைய பிச்சிகினு, இதுங்களும் இப்படியான்னு நினைக்கும் போது தான் தெரிஞ்சது , சனியன் புடிச்ச எலைக்சன் நினைச்சி படுத்துட்டேன் போல , கெட்ட கெட்ட கனவா வருது . யாரவது நல்ல டாக்டர் (டிவி லா வராத இருந்த சொல்லுங்க எலைக்சன் பீவர் வரா மாதிரி இருக்கு ..........
 • நீங்க தலைய பிச்சிகாதீங்க எனக்கு வந்த கனவு தான் ...............
 • கேப்புல எனக்கு வோட்டு போடறத மறந்துடாதீங்கோ .... நா...... வரட்டுங்கலான்னா .........விட்ரா சாமீ எங்கேயோ கேட்ட குரல் ............

சனி, 15 ஜனவரி, 2011

உதட்டு புன்னகையில் பொங்கலோ! பொங்கல் !வேர்வை சிந்தி உழுவோனை
காக்கும் கடவுள் கதிரோனே !
பச்சை சேலைக் கட்டிய காடு எல்லாம்
தரிசா போச்சே கொடிய மருந்தாலே
மிச்ச மீதி இருந்ததெல்லாம்
கட்டிடமா களவுபோச்சி பணத்தாலே !
நெல்லு வெளைஞ்ச பூமில இன்று,
நெஞ்சை பிளக்கும் அழுகுரலே !
உழுது உழைத்த காளை எல்லாம்
இப்ப அடிமாட போகும் நிலைதானே!
நிலத்து நெல்ல பொங்கல் வச்சி,
கருப்பு ரெண்டு அழக நிறுத்தி,
மஞ்சள் செடிய சாட்சி வச்சி ,
தலைகளிலே கிரிடம் கட்டி ,
சுற்றத்தையும் கூட வச்சி ,
பொங்கி வரும் மகிழ்ச்சியாலே
பொங்கலோ பொங்கல் என்ற
பொங்கல் எங்கே ?
ஒத்த ரூபா அரிசி போட்டு ,
புத்தாடைக்கட்டி , பொங்கல் வைக்க,
பொருளெல்லாம் ஓசி வாங்க
வருச நின்னு கூனி குறுகி
வைத்த பொங்கல் நன்றோ தமிழா ?,
உழைச்ச காசு வீடு வராம,
வழி நெடுக மதுக்கடைய நட்டு ,
வழிபறிதான் நடக்குது இன்று.
வயித்து பசி போக்குறவன் ,
வயித்துக்குதான் ஈரத்துணி,
வாய் கிழிய பேசுறவன் ,
தொந்தி சுமக்க வரிபணமோ .
வறியவனின் வாழ்க்கை இப்போ,
நாதியற்று போச்சுது,
தமிழனுக்கு வந்த விதி
இப்படியா ஆகானும் .
தானியங்கள் விளையாம
கையேந்தி நிக்குறோம் .
டாஷ்மார்க்க குடிச்சிபுட்டு
அகல் விளக்கேற்ற சொன்னதெல்லாம்
தலைக்கி வச்சி ,
படையில படுக்கதானோ ? ,
எதுக்குன்னு விளங்காம,
விக்கிதான் நிக்குறோம் .
தனமானம் போச்சி இப்போ ,
தமிழனுடைய வாழ்க்கையில,
உள்ளுக்குள்ள எரிஞ்சாலும்
உதட்டு புன்னகையில்
பொங்கலோ! பொங்கல் !
- கவிதை பூக்கள் பாலா

வெள்ளி, 14 ஜனவரி, 2011

இந்திய ஏன் இன்னும் முன்னேறாம இருக்கு தெரியுமா ? கொஞ்சம் ரிலாக்ஸ் பாஸ் ....

மக்கள் தொகை 130 கோடிகள் :

அதுல 15 கோடி ஓய்வு பெற்றவர்கள் ......


Visit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.Org

35
கோடி மாநில,
மத்திய அரசாங்க வேலையில , ( யாரும் ஒழங்கா வேலை செய்யறதில்ல )
Visit Us @ www.MumbaiHangOut.Org Visit Us @ www.MumbaiHangOut.Org

3 கோடி I T வேலையில யாரும் நாட்டுக்காக உழைக்கறதில்லை.......

Visit Us @ www.MumbaiHangOut.Org Visit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.Org

35 கோடி படிக்கறாங்க ( ஸ்கூல் & காலேஜ் )


Visit Us @ www.MumbaiHangOut.Org Visit Us @ www.MumbaiHangOut.Org


5
கோடி ஐந்து வயசுக்கு கீழே இருக்குற குழந்தைங்க .......

Visit Us @ www.MumbaiHangOut.Org Visit Us @ www.MumbaiHangOut.Org

25
கோடி படிச்சிட்டு வேலை இல்லாதவங்க .........
Visit Us @ www.MumbaiHangOut.Org Visit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.Org

5 கோடி என்ன நேரமும் மருத்தவமனையில
நோயாளியா இருக்காங்க .......
Visit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.Org

ஒரு புள்ளி விவரம் சொல்லுது, எப்பவுமே ஜெயில்ல கைதிய இருக்கறவங்க 69999999 http://www.angelfire.com/oh/chelle26/joprison.gifhttp://www.angelfire.com/oh/chelle26/joprison.gif

மீதி இருக்கிறது நீங்களும் நானும்தான், ரொம்ப பிஸியா மெயில் அனுப்புறது , பாக்கறதுமா இருக்கோம்
Visit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.Org
எப்படி நான் மட்டும் தனியா இந்தியாவை கையாளறது சொல்லுங்க ரொம்ப குஷ்டமப்பா, சாரி கஷ்டமப்பா ......
சொல்லும்
போது களைச்சி போச்சிடா சாமீ .............

ஹயோ ....... ஹயோ ......... ............
அடிக்க வரவங்க வோட்டு போட்டுட்டு லைன்ல வாங்க மை வச்சி அடிக்கலாம் .....

...

புதன், 12 ஜனவரி, 2011

எழுத்துலகம் தழைக்க, பதிவாளர்கள் கவனிப்பார்களா ? இந்த சிறியவனின் சிறிய கருத்தை....

"முதலில் எழுத்துலக நண்பர் பிரபாவிற்கு நன்றி காரணம் நிறைய நாள் முயன்று எழுத முடியாத போன பதிவு இப்போது எழுத தூண்டுதலாக இருந்ததமைக்காக ......."


"ஆரம்ப காலத்தில் சில நல்ல சிந்தனைகளை எழுதி வந்த நான்

காலப்போக்கில் சினிமா, நடிகை என்று தடம் மாறியிருக்கிறேன். மேலும் எனது பழைய நகைச்சுவை உணர்வு இப்போது என்னிடம் பெரிதளவு குறைந்துள்ளது. மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப முயல்கிறேன்." உங்கள் சுய பரிசோதனை பாராட்டுதலுக்குரியது . எழுத்தாளனுக்குஎப்பொழுதும் சுய பரிசோதனை ( தன்ஆழ்முகத்தை பார்க்கும் ) என்பது அவசியம் . இந்த சிறிய வயதில் மெச்ச கூடியகுணாதிசயம் கொண்ட எழுத்துலக நண்பன்பிரபாகரன் அவர்களை மனதார பாராட்டுகிறேன் .....எழுத்துலகில் இரு க்கும் அனைவரும் செய்ய வேண்டிய, செய்துக் கொள்ளவேண்டிய சுய பரிசோதனை. இரத்த பரிசோதனை மாதிரித்தான் ஏதாவது கொடிய எழுத்து கிருமி இருக்கான்னு பார்த்துக்கறது நல்லது தான். இப்போதைய பலருடைய செயல்கள்( எழத்துக்கள் ) வருத்த பட வேண்டியவைளாக தான் இருக்கின்றது .


எழுதுவது
எந்த விதமான எழுத்தாக இருந்தாலும் அதில் நகைச் சுவை, கொஞ்சம் இளமை கலந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வாசகர்கள் அதிகம் இன்றைய நாட்களில். அதுதான் அவர்களை படிக்கும் ஆர்வத்தையும் தூண்டும் ஓய்வு நேரத்தில் உலாவரும் வாசகனை வஞ்சிக்க கூடாது என்பதும் உண்மை. ஆனால் நாம் எழதும் எழுத்தில் கொண்டு சேர்க் கவேண்டிய கருத்தை அல்லது செய்தியை மறைத்து அல்லது மறந்து விட கூடாது என்பதே என் வாதம்.வாசகர்களை
ஒரு போதும் குறை சொல்ல மாட்டேன், இந்த நவீன உலகில் காட்சி ஊடமாக அனைத்தும் ( கல்வி உள்பட ) வீட்டு மைய பகுதியில் மையம் கொண்டு விட்டது . அதில் வெறுப்படை தோறும், அதில் திருப்பி அடையாதவரும் , தேடுதலை விரும்புகிறவர்களும் , கொஞ்சம் அசைய பிரியர்களும் தான் இன்று பதிவுலகை ( எழுத்துல கை ) காத்து வருகின்றனர்.....

எல்லாருமே நல்ல விசயங்களா எழதனுன்னு தான் எழுதறோம் , ஆனால் காலபோக்கில் அது ஒரு மாயை உலகில் மாட்டி தவிக்கின்றது . காரணம் இந்த வேகமான உலகில் எல்லாமே ஷாட் & ஸ்வீட் ஹ எதிர் பாக்கறாங்க. அதோடு, நாம் எழுதும் எழுத்து முதலில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற கலைக்கே உண்டான பாராட்டுதலுக்கு ( கைதட்டல் ) ஏங்கும் மனது, ஒவ்வொரு எழுத்தாளனின ஆழ் மனதில் எப்போதும் வாடகை கொடுக்காமல் , விரட்டினாலும் போகாத செல்ல நாய்க்குட்டி போல் மனதை சுற்றிக்கொண்டே இருக்கின்றது.

இல்லை இல்லை , நான் என் மன வடிகாலுக்கு தான் எழுதுகிறேன் என்று

சொன்னால் அது ரகசிய டைரியாகவே தான் இருக்க முடியும் . எப்பொழுது நாம் எழதும் எழத்தை அடுத்தவர் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறதோ, அப்போதே பாராட்டுதலுக்கு , விமர்சனத்திற்கு ஏங்குகின்றது நம் மனம் என்று தான் அர்த்தம் . பாராட்டுதல் , விமர்சனம் மட்டுமே ஒரு நல்ல எழுத்தாளனை உருவாக்கமுடியும். அதற்காக ஊரே கூடி நின்று பாராட்ட வேண்டும் என்ற அர்த்தம் இல்லை , நேசிக்கும் அல்லது நேசிக்கபடும் ஒரே ஒரு ஜீவன் பாராட்டினாலே உற்சாகம் கொள்ளும். ஏன் காதலித்த ஒருவளுக்காகவே காவியம் படைத்தோர் உலகில் அதிகம் .

எழுத்து ஆரம்பம் நம் மனதிற்காக எழுதுகிறோம், பிறகும் நேசிக் கும் அன்பிற்காக , கானும் சமூக கொடுமைக்காக , தன் ரசித்ததை மேலும் அழகாய், நகைச் சுவையாக சொல்வதற்காக , அல்லது சமூகத்தின் வளர்ச்சிக்காக, இப்படி கணக்கில்லா என்ன ஓட்டங்களுக்காக எழதப்படுகின்றது.

ஒரு கால கட்டம் வரை தான் எழுதுவதின் நோக்கம் தெரிகின்றது. பின்பு அந்த எழுத்து அவனை கொண்டு சேர்க்கும் இடமே அவன் எழுத்தை திசையை நிர்ணயம் செய்கிறது. எண்ண ஓட்டங்க எழுதியதை அல்லது அவன் வலிகளை எழுத்துகளாக வடித்ததை கொண்டு சேர்ப்பதற்கு அவன் படும் பாடு பெரிது என்று சொல்வதை விட , அந்த எழுத்துக்கள் படும் பாடுதான் மிக கொடூரமானது கொடுமையானது. எத்தனை வளைவுகள், நெளிவுகள், நெருடல்கள் வலிகளைத் தாண்டி தன் படைப்புகள் சவாரி செய்ய வேண்டி உள்ளது.

தன் எழுத்தை படிக்க வேண்டும் அல்லது தன் கலையை ரசித்து பாராட்ட வேண்டும் என்று தன் தடங்களை மாற்றி செல்ல வேண்டி இருக்கின்றது என்பது எதார்த்த உண்மை . ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் ஒரு குறிப்பிட்ட இலக்கு எட்டும் வரை அப்படி சிறிது தடம் மாறி அல்லது அதற்குள்ளாகவே சிறு சிறு வளைவுகளை புகுத்துவது தவறாக கருத முடியாது தவிர்க்கமுடியாததும் கூட , பிரபலம் ஆனபின்பும் தன் சுய முகத்தை மறந்தோ அல்லது கொன்றோ புகழ் மயக்கத்திலேயே எழுத்தை தொடர்வது தான் தவறு என்பது என் கருத்து.

ன் கருத்துக்கள் தேனில் குழைத்து தரும் மருந்தாகவே இருக்க வேண்டுமே தவிர, தேனை மட்டுமே சுவைக்கும் இனிப்பாக மாறி விட கூடாது . அது ஒரு நாள் வியாதி முற்றி பாடையில் படுத்துவிடும் என்பதை யாரும் (கலையை நேசிப்பவர்கள்) மறந்தது விட கூடாது என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.

நண்பர்களே! சக எழுத்தாளரை மனம் விட்டு பாராட்டுங்கள், நல்ல படைப்புகளுக்கு ஊக்கம் கொடுங்கள் , குறை இருந்தால் நாசுக்காக சுட்டி காட்ட தவறாதீர்கள் . பொறாமை என்ற நோய் பீடித்து நல்ல எழத்துக்களை, எழுத்தா ளர்களை புறம் தள்ளிவிடாதீர்கள். அது எழுத்துலகிற்கு என்றுமே நல்லதல்ல. பிரச்சனை இருந்தால் தனிப்பட்ட முறையில் பேசி ( சாட்டிங் , மெயில், மொபைல் , நேரில் அல்லது நண்பர்கள் மூலம் ) தீர்த்துகொள்ளுங்கள் . ஒன்றாக செயல் படுங்கள் . இல்லை என்றால் காட்சி ஊடகங்களா ன சன் டிவி யும் - கலைஞர் டிவி யும் போட்ட சண்டை மாதிரி ஊர் உலகம் சிரிப்பாய் சிரிக்கும் நினைவுல வச்சுகோங்க அம்புட்டுதேன் .......

பொறாமை விட்டு ஆரோகியமான போட்டியை எழுத்தில் காட்டுங்க எழுத்துலகம் பிழைக்கும் . என்றும் வளரட்டும் பதிவுலகம் , எழுத்துலகம் முடிவில்லா ஆயுளோடு . கலைகள் போற்றப்படட்டும் தரணியில் உயிரினங்கள் வாழும் மட்டும் .
- உங்கள் நண்பன் பாலா

குறிப்பு
: நக்கல் நையாண்டி செய்பவர்களும் செய்யலாம் அன்போடு உங்கள் கருத்துகளை குத்திட்டு போங்க தல , தளபதிகளே வணங்கி வரவேற்கின்றேன் ....... தாராளமா வோட்டு குத்திட்டு போங்க...
.....