அரசியல் நிலவரம் எப்படி :


கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிருக்கும் கடிதராணியாய் அவதாரம்.. கடிதம் மட்டும் எழுதினால் போதுமா ? என்ற அதே வாய்தான் இன்று.. மக்களை வாக்காளராய் மட்டுமே நினைக்கும் மமதை, அடிமைகளின் கூட்டமாய் மக்களை நினைக்கும் மனபாங்கு...
வரிபணத்தில்வழங்குவதற்கும் நன்றி சொல்லசொல்லி கேட்டுவாங்கும் அடிமைகளின் துதிப்பாடும் புகழ்ப்பாடல்கள்..,
அடுத்தவன் செயலுக்கெல்லாம் தன்னை முன்னிருத்திக்கொள்ளும் அக்கபோரு,அரசு அதிகாரிகளையும் புகழ்ப்பாட வைத்த தலைமை...
நடிகராக வலம் இன்னொரு அவதாரம்..
கூட்டணிக்கு வலைவீசிக்கொண்டிருக்கும் நிலையில் காட்சிகள்,
சொல்வதை மக்கள் நம்பாத நம்பிக்கையின்மையோடு ...
நான் மட்டுமே முதல்வர் அடுத்து அவதாரம்
நான்கு மாடுகள் கதையாய் நால்வர் அணி ஒருபக்கம்
ஒத்து ஊதிய பாவம் அனைவருக்கும்...
இதில் எதற்கும் சம்பந்தம் இல்லாதற்போல் இன்னொருவர்
மதில்மேல் நின்றுக்கொண்டு... வேடிக்கை பார்த்துக்கொண்டு
ஆதாய நோக்கோடு அரசியல் வியாபாரம்...
ஆகா கடமையை மறந்து உழலில் யார் பெரியவர்
என்ற போட்டி மட்டுமே நடக்கின்றது....
இதில் எங்கே போவது, எங்கு இருக்கின்றோம் என்று தெரியாமல்
மயக்கத்திலே உளறிக்கொண்டிருக்கும் தேசிய கட்சிகள்..
மக்கள் உங்கள் அனைவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்... அடிச்சிக்கோங்கடா... எதையும் மறக்கல...
எரியும் கனலோடு காத்திருக்கின்றனர் 2016 தேர்தலை நோக்கி...
- கவிதை பூக்கள் பாலா

கருத்துகள்