news

/ படிக்க வந்த சனங்களுக்கும் , படிச்சி நொந்த சனங்களுக்கும் , அடிக்க வரும் விரும்பாண்டிகளுக்கும் வணக்கமுங்கோ !!! !!! / / / / , , .

வியாழன், 30 அக்டோபர், 2014

இந்தியனே உன் கடமை அல்லவா ? பிரஜை அல்லவா ? ............

உங்கள் ஆட்டம அடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ,
உலக அடுத்த முதலாளியாக துடிக்கும் சீனா நாட்டை முன் நிறுத்தும் சிங்களவனே , உன்னை வீழ்த்தி வீதியில் விடுவான் என்பதை மறந்துவிடாதே ! தன் நாட்டு மக்களையும்(இலங்கை தமிழன)  கொல்கின்றாய்..... இந்தியனையும் பதம் பார்க்கின்றாய் . ஏன் தமிழனை அடித்தால் மத்தியில் எவனும் கேக்க மாட்டான் என்ற அகந்தையா ? இல்லை .. அவர்களின் கை கூலியா சிங்கள வெறி பிடித்த தமிழன் பிணம் தின்னும் பேயா ?? ...... எவன் மறந்தாலும் தமிழன் தலை சாயாது உங்களின் கொட்டம் அடங்கும் நாளும் வெகு தொலைவில் இல்லை ...... அறிக்கை விட்டே ஆனந்தம் கொள்ளும் அதிகார வர்க்கங்களே ! வாய் சொல்லில் வீரனாய் இருந்தால் போதுமா ?
மத்தியில் யார் வந்தாலும் காட்சிகள் மட்டுமே மாறுகின்றது தமிழனின் மனமும் மீனவனின் மீது ஏவப்படும் கொடுமைகளும் மாற்றமில்லை ..........
யாரை நிந்திப்பது ..... மரணத்தில் இருந்து மீட்டெடுப்பது இந்தியனே உன் கடமை அல்லவா ?  பிரஜை அல்லவா ? ............

திங்கள், 27 அக்டோபர், 2014

பணம் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பதும் , அதற்கும் மதிப்பு குடுக்கணும்  என்பதும்,

அப்பதான் இன்றைய  உலகம் மனிதனை மதிக்கும் ......
பணமிருநத என்னவேனா பண்ணலாம் என்ற காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருகிறோம் ..........என்பதும் சமீப நாட்களாய் தான் புரிய ஆரம்பிச்சிருக்கு ............

சனி, 25 அக்டோபர், 2014

ஆபாசம் என்பதும் , கவாச்சி என்பதும்...........

பாசம் என்பதும் , கவாச்சி என்பதும் வித்தியாசமான பொருள் கொண்டவையே ! . பெண்கள் , ஆண்கள் உடுத்தும் உடைகளை
யார் நிர்ணயம் செய்வது, அது அவர் அவர் மனதையும், குடும்ப
சூழ்நிலைகளும், சமூக சூழலுமே ஆகும்......

டுத்தவர் முகம் சுழிகாத வண்ணம் இருந்தால் நலமே !...
ஆனால், அதை நாம் முடிவு செய்ய முடியாது. அறிவுரை சொன்னதற்கே பொங்கும் உலகில் , என்னவென்பது பிடிக்கவில்லை என்றால் விட்டு விடவேண்டியது தான் , அவரை அவமானபடுத்துவது யாரையும் கோபப்பட வைப்பது சகஜமே !... அதை நாகரீகமாக சொல்லி இருந்தால் இன்றைய முகநூலில் நடத்து கொண்டிருக்கும் தனி நபர் தாக்குதல் ஒருவேளை இல்லாமல் போய் இருக்குகலாம் ...........

பெண்கள் உடுத்தும் உடை அடுத்தவர்கள் பார்ப்பார்கள் என்பது அறிந்தே, இடம் பொருள் அறிந்தும், அதனால்  அவர்களுக்கும், அந்த உடையால் அவர்கள் மீதான மதிப்பீடு என்ன என்பதும்  அவர்கள் புரிதலோடான விருப்பம் சம்பந்தப் பட்டது , அதை கேட்பதும், இல்லை தடுப்பதும், அவர்களுக்கு  உரிமையான உறவுகள் பார்த்துக்கொள்வார்கள்........... அதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது .

இதுவே ! ஆண்களுக்கும் பொருந்தும் ............

பெண்ணியம் என்பதும் பெண் விடுதலை என்ன என்பதும், பெண் சுதந்திரம் எது என்பதும் இன்றைய பெண்களிடமே ஒருமித்த கருத்து இல்லை.....
கருத்து விவாதங்கள் வரவேற்கலாம் ......

தனி மனித சுதந்திரதிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது தவறு , மனித உரிமைமீறல் ஆகும்..... இது ஆணாக இருக்கும் பச்சத்தில் உடை சம்பந்தமான தாக்குதல் வந்திருக்குமா ? ....... விவாததிற்க்குரியதே!......

இன்று தாக்குதலுக்கும், வன்புணர்ச்சி, வன்கொடுமை இப்படி பாதிக்கப்படும் பெண்கள் பெருபான்மையானவர்கள் (ஒரு சில தவிர ) தைரியம் இல்ல முழுதாக மூடி இருக்கும் பள்ளி சிறுமிகளும், மனநலம் பதிக்கப் பட்டவர்கள், எதிர்க்க முடியா பலகீனமானவர்கள் தான் அவர்கள் இலக்ககாகின்றனர்.

பாசத்தை அருவருப்பை எதிர்க்க நினைபவர்கள் முதலில் நம் இல்லங்களுக்குள் புகுந்துவிட்ட டெலி சாப்பிங் என்ற பெயரில் நடக்கும் வியாபார விளம்பரங்களை எதிர்ப்போம் ........ அனைவரும் கைக்கோர்ப்போம்

அடிமைப் பட்டுகிடநத பெண்ணினம் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் சமூக சூழல் கல்வியால் சுய மரியாதையோடு கட்டுகளை உடைத்து சிறிது சிறிதாக விடுபட்டு கொண்டிருக்கும் காலம் ......... மாற்றங்கள் நிகழும்போதெல்லாம்
சில சகிப்பு தன்மைகள் தேவைப்படுகின்றது ......

நம் தாய், சகோதரியும், சக தோழிகள் என்ற பெண்ணினத்தோடே வாழ்க்கை பயணிக்கின்றோம் .......

பெண்களும் ஆண்களை எதிரியாய் எண்ணாமல் நாகரீகமான விவாதங்களோடே பயணிப்போம்..
- கவிதை பூக்கள் பாலா

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீபாவளி நாட்கள் ஞாபகத்துக்கு வந்துடுது .......

குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கி தரும்போது ஏனோ  நம்ம குழந்தை பருவ தீபாவளி நாட்கள் ஞாபகத்துக்கு வந்துடுது ...........
அப்பாவ எதிர் பார்த்து காத்து கிடக்கறது வந்த பிறகு என்ன வங்கி வந்திருப்பாங்க பக்கத்துக்கு வீடு எதிர் வீடு விட அதிகமா வெடி போடணும் .....
நைட் எல்லாம் தூக்கம் வரமா அந்த வெடிகளை பாத்துடே  இருந்தது .......
காலைல பட்டாசு வெடிச்சி வீட்டுக்கு முன்னாடி குப்பைய யாரு அதிகமா போட்டோமுனு  கணக்கெடுப்பு   நடத்தினது ........
ஒரு பக்கம் அப்பா.... காச கரியாகினதுக்கு பதிலா இன்னொரு நல்ல துணி எடுதிருக்கலாமுன்னு புலம்பினது எல்லாம் மன திரையில் தீபாவளி ரிலீச ஓடுது ... நாம குழந்தைகளை பார்க்கும் போது ........... சந்தோசமும் சின்னக் கவலையும் கலந்துதான் இப்போதைய அப்ப்க்களின் நிலை ( எங்க மனைவிய விட்டுடீங்கனு நீங்க புலம்புறது எனக்கு புரியுது இதை எல்லாமா வெளிய சொல்லிக்கிட்டு போங்க நீங்க .....)

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

குறட்டையை நிறுத்த வழி இருக்கு !

kurattai,thookkam,thokkai,saththam

   இந்த வேலை சீராக நடந்துகொண்டு இருந்தால்தான் நாம் ‘இருக்கிறோம்’ என்று அர்த்தம். பஞ்ச பூதங்களுள் ஒன்றான காற்று, நம் உடலுக்குள் ஊடுருவி உலாவுவதும் பின் வெளிவருவதும் மிகமிக சிக்கலான - லாவகமான தொழில்நுட்பம். உணவின்றி, நீரின்றி சில பல நாட்கள் வரை வாழலாம். காற்றின்றி சில நிமிடங்களாவது தாக்குப் பிடிக்க முடியுமா? மனித உடலில் காற்றைக் கையாள்வது நுரையீரலே. காற்றின் உதவியோடு ரத்தத்தைச் சுத்திகரித்து அனுப்பும் நுரையீரலின் ஆரோக்கியமும் சுவாசப் பிரச்னைகளுக்குத் தீர்வு!

ஆயிரத்தெட்டு ஸ்பேர் பார்ட்ஸோடு நாம் அம்மாவின் வயிற்றிலிருந்து பிறக்கிறோம். அவற்றில் முதன்முதலாக இயங்கத் தொடங்குபவை சுவாச உறுப்புகள்தான். அதுவரையில் தாயிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை தொப்புள் கொடி மூலமாகப் பெற்று வந்த குழந்தை, தானே சுயமாக மூக்கு வழியே சுவாசித்து, நுரையீரலால் ரத்தத்தை சுத்திகரிக்கத் தொடங்கும்போதுதான் அது தனி மனிதனாகிறது.

உள்ளே நுழைவது ஒரே காற்றுதான். அதில் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு, அவசியமானது, வெளியேற்றப்பட வேண்டியது எனப் பிரித்துப் போட்டு வேலை பார்க்கிறது நம் நுரையீரல். மூக்கில் காற்று நுழைந்தவுடன் அங்குள்ள ரத்தத் தந்துகிகள் காற்றிலுள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி, கார்பன் டை ஆக்ஸைடு போன்ற மாசுகளை வெளியேற்றுகின்றன. காற்று உள்ளே நுழைகிற பாதை, மற்றும் மாசுகள் வெளியேறுகிற பாதை என அந்த இருவழிப்பாதை சீராக இருக்க வேண்டியது அவசியம். அது பாதிப்புக்கு உள்ளாகிறபோதே மூக்கடைப்பு ஏற்படுகிறது. சுவாசப் பாதையில் ஏற்படும் இந்தத் தொற்று, நாள்பட்ட பாதிப்பாகி நுரையீரலை அடையும்போது ஆஸ்துமாவாக மாறுகிறது.

சுவாசக் கோளாறுகள் பெரியவர்களைவிடக் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுவது சகஜம். வெளிக்காற்றில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்க்கும் திறன் குழந்தைகளிடம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்தக் காலத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்மாமன் மோதிரத்தால் தேனைத் தொட்டு நாக்கில் தடவும் பழக்கம் இருந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தண்ணீருக்குள் தள்ளி விட்டால்தான் நீச்சல் வரும் என்பது போல, பாக்டீரியாக்களை அறிமுகம் செய்தே நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் முறை இது. வெளிச்சூழலில் இருக்கும் பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் தேனுடன் சேர்ந்து பல்கிப் பெருகி குழந்தையின் ரத்தத்தில் கலக்கும்போது, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டிவிடப் படுகிறது.

அந்நியர்களை எதிர்க்கும் படைவீரர்கள் போல இந்த சக்தி அணிவகுத்து நிற்கிறது. இப்படி அடிக்கடி வெளிக்கிருமிகள் உடலுக்குள் நுழைவதும், அவற்றுக்கு உடல் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக நடைபெறும் இந்த நிகழ்வுகளே குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வீரியம் மிகுந்ததாக ஆக்குகிறது. இப்படி அடிக்கடி என்ட்ரி கொடுக்கும் கிருமிகளை ‘நல்லது செய்யும் பாக்டீரியாக்கள்’ என்றே சொல்லலாம். அவைதானே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகக் காரணம்! இன்றோ, பிறந்தவுடனேயே ஆன்டிபயாடிக் மருந்துகளைச் செலுத்துவதால் இந்த ‘நல்லது செய்யும் பாக்டீரியாக்கள்’ அழிக்கப்பட்டு விடுகின்றன. விளைவு... சளி, இருமல், ஜுரம் என்று அடிக்கடி அவதிப்படுவதுதான்.

இதைத் தடுக்க குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை பலமாக்க வேண்டியது அவசியம். எதிர்ப்பு சக்தி இல்லாத மனிதர்கள் எறும்புக்கடிக்குக் கூட பயந்துதான் ஆக வேண்டும். நம் முன்னோர்கள் இயற்கையோடு கை குலுக்கி வாழ்ந்த வாழ்க்கைக்குக் காரணம் அவர்களின் மிதமிஞ்சிய எதிர்ப்பு சக்திதான். நம் உடலில் எதிர்ப்பு சக்திக்காகவே இயங்கும் ‘நல்ல’ உறுப்பு ஒன்று உண்டு. தைமஸ் சுரப்பி என்பார்கள் அதை. நோய்க்கிருமிகள் என்னும் தீவிரவாதிகளுக்கு எதிராக வெள்ளையணுக்களை அனுப்பி போர் செய்யும் கேப்டன் இந்த தைமஸ்தான்.

24 மணிநேரமும் இடை விடாமல் வெளிக்காற்றை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் நுரையீரலுக்குத்தானே கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம். அதை உணர்ந்துதானோ என்னவோ இயற்கையே இந்த தைமஸ் கேப்டனை நுரையீரலுக்கு அருகே அமைத்துள்ளது. இந்த தைமஸ் சுரப்பியைத் தூண்டுவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிறது அக்கு மருத்துவம். பிற்காலத்தில் ஆஸ்துமா தாக்காத வண்ணம் இன்றைக்கே நம் குழந்தைகளிடம் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும் முறை இது.

குழந்தைகளின் உள்ளங்கை, உள்ளங்கால்களில் நடு விரல் மற்றும் மோதிர விரல்களுக்குக் கீழே உள்ள அக்கு புள்ளிகள், தைமஸ் சுரப்பியைத் தூண்டக் கூடியவை. இந்தப் புள்ளிகளில் தினமும் லேசான அழுத்தம் கொடுத்துவந்தால், பின்னாளில் ஆஸ்துமா தொல்லை ஏற் படாமல் நம் குழந்தைகளை முழுவதுமாகக் காக்கலாம். ஏற்கனவே ஆஸ்துமாவால் அவதிப்படுகிற பெரியவர்களுக்கு உள்ளங்கையிலுள்ள நுரையீரல் புள்ளிகளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால், கொஞ்ச நாளில் காணாமல் போகும் பிரச்னை.

சுவாசம் தொடர்பான மற்றொரு பரவலான பிரச்னை, குறட்டை. கணவர் குறட்டை விடுகிறார் என்பதற்காக மனைவி விவாகரத்து வாங்குவதெல்லாம் வெளிநாடுகளில் நடக்கிறது. நுரையீரலின் இயக்க சக்தி குறைவதே குறட்டைக்கான முக்கியக் காரணம். அக்குபிரஷரில் நிமிடங்களில் குறட்டையை நிறுத்தி விடலாம். குறட்டை விடுபவர் தூங்கும்போது அவருடைய மூக்கின் கீழுள்ள அக்குப் புள்ளியை லேசாக அழுத்தினால் போதும்... சட்டென நிற்கும் குறட்டை. தொடர்ச்சியாக இப்படிச் செய்து வந்தால் நிரந்தரமாகவே குறட்டையை விரட்டி விடலாம்!