பேரணி நிகழ்வில் நண்பர்கள் பகிந்து கொண்டது:






சகாயம் ஐஏஎஸ் தலைமை ஏற்று முதல்வராக முன்னிறுத்தி நடந்த பேரணியில் இருந்து...
1. மிக குறுகிய காலம் நண்பர்களிடம் நிகழ்வுக்குறித்து செய்திகளை சேர்க்கமுடியவிலை
2. இது உண்மையான செய்திதானா ? என்று கேட்ட நண்பர்கள் பலர் ..
3. விபரீதம் ஏதும் நிகழுமோ என்ற தயக்கம் பலரிடம், ஆனால் மிக அருமையாக கட்டுப்பாடாக நடந்தது இதுதான் நமக்கு சொல்லும் இக பெரிய மாற்றதின் தொடக்கம்..
4. அமைப்புகளிடம் சரியான அறிமுகமில்லாமை இருந்தாலும் தன்னிச்சையாக திரண்ட தோழர்கள், தோழிகள்..
5. ஒருகிணைப்பு செய்ய நேரம் குறைவு என்னமாதிரியான நிகழ்வை கொண்டு செல்ல போகின்றோம் என்று இனி சரியான திசையை நோக்கி இருக்கும் .இன்று தான் அமைப்புகள் ஒருகினைக்க பதிவே செய்யப்பட்டது...
6. ஆர்வமாய் தோழமைகள் நான் உள்பட வெளிப்படுத்திய பதிவுகள், ஷேர் செய்த நண்பர்கள் பண்கேர்க்கமுடியவில்லையே என்று வருந்திய பலர் அடுத்த நிகழ்வு மிக பெரிய அளவில் தயக்கங்களை உடைத்தெறியும் நிகழ்வாக இருக்கும்...
7. திருநெல்வேலி, மதுரை,கடலூர் என்று மிக பெரிய அளவில் அணைத்து மாவட்டகளிலும் இருந்து வருவது நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது.. இதற்கு உன் காணாத முகங்கள், இணையாக அமைப்புகள் சகாயம் என்ற ஒற்றை மனிதர் நமை இணைதிருக்கின்றார்..
8. கலத்துக்க முடியாத தோழர்கள் தோழிகள் உங்கள் நபர்களிடம் பேசுங்கள், வீட்டில் விவாதியுங்கள், கூடும் இடங்களில் செய்திகளை கொண்டு சேருங்கள்.. மக்கள் மாற்றத்தை நோக்கியே இருகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை அளித்து நம்மோடு இணைய வைத்துக்கொள்ளுங்கள்..
9. பெண்கள் நினைத்தால் மிக பெரிய மாற்றம் நிகழும் அவர்களிடம் கொண்டுக்செல்லுங்கள் தோழிகளே. தயக்கத்தை உடைத்தெரியுங்கள் மாற்ற முடியுமா என்ற தயக்கம் வேண்டாம் நாம் இணைத்தால் முடியாதது எதுவும் இல்லை..
10. ஊடகங்கள் நம்மை ஆதரிக்க தயங்குகின்றன , நமக்கு இருப்பதோ நம் வாய் மிக பெரிய ஊடகமாக அதை பெரிய அளவில் பயன்படுத்துங்கள். நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இணைய சக்திமட்டுமே முகநூல், ட்வீட்டர், வாட்ஸ்அப் அதை முழுவதும் பயன்படுத்திக்கொள்வோம் ..
மாற்றம் மிக பெரிய அளவில் நடந்துக்கொண்டிருக்கின்றனர்..

கருத்துகள்