கேள்வி கேக்கும் துணிச்சல் வந்து விட்டாலே பெண்ணியம் தானாக வளரும் !

  கேள்வி கேக்க தயக்கம் ஏன்? வருகிறது  , ஒன்று இயலாமை , இல்ல சோம்பேரித் தனம் , சுயநலம், சுயமாய் சிந்திக்க முடியாதவர்களும் , பயந்தவர்களும் , கோழைகளின் உச்சக் கட்டம் ..... யாரவது ஓட்டும் வண்டில வசதியா உக்காந்துகலாம்  என்ற எண்ணம் , இல்ல புட் போடு அடிச்சிட்டு பிடிக்கலன்னா  வேற வண்டிய பாத்துக்கலாம் என்ற எண்ணம, இதை சொல்லிகிட்டேன் போகலாம் , சுயமாக சிந்தித்து சுயக்  காலில் பயணிக்க கற்றுக் கொடுக்காததின் விளைவே இந்த அவலத்திற்கு காரணம், யாராவது நம்மள பாத்துக்கணும் அப்படிங்கிற பொறுப்பற்றத்  தனம் .......
 
அப்பா , அம்மா , கணவன் பெயரை தன்  பெயருடன் சேர்த்து கொள்வதும் விடுவதும் அவர்களாய் யோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் , இதில் பெண்ணை இதை செய்யாதே நீ அடிமைப்  பட்டு போய்விடுவாய் என்று திணிப்பது எப்படி நாயம் ? ........... கல்வி , அரசியல் , சமூக பொறுப்பு சுயசம்பாத்தியம் , தனித்து முடிவெடுக்கும் அறிவை பெண்களிடம் விதைக்க வேண்டுமே ஒழிய .. மீண்டும் வேறு விதத்தில் இதை செய், அதை செய் என்று மூளை சலவை செய்வது ஞாயமா ?... சிந்தித்து  செயல் பட விடுங்கள்.

 அணைத்து பெண்களும் , ஏன் மனித இனமே ஒரே மாதிரி பயணிப்பதில்லை ..... அவரவர் விருப்பதிற்கு வசதிக்கு ... மட்டுமே பயணிக்க முடியும் ....
ஒடுக்கப்படும் போதும் , அடிமை தனத்தில் இருந்து விடுபட உதவி மட்டுமே நாம்  செய்ய வேண்டும் , அவர்களுக்கும் சேர்த்து எப்படி நீங்கள்  யோசிப்பீர்கள்  , மீண்டும் நான் சொல்வதை கேள் என்ற எண்ணமே இன்று மேலோங்கி வருகின்றது வருதற்குரியது. தைரியம் , கேள்வி கேக்கும் துணிச்சல் வந்து விட்டாலே பெண்ணியம் தானாக வளரும் ..... ...
. பொருளாதாரம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது இதில் என்பது குறிப்பிடத் தக்கது
கவிதை பூக்கள் பாலா

கருத்துகள்