மக்கள் வைதேரிச்சலை சம்பாதிக்கும் காஸ் நேரடி மான்னிய திட்டம் :


   நடுத்தர, ஏழைமக்களை ஏமாற்றும் மோசடியான திட்டம். முந்தய காங்கிரஸ் அரசு கொண்டுவந்து, இப்போதைய ப.ஜ.க அரசு செயல்ப்படுத்த துடியாய் துடிக்கும் மர்மம் என்ன.. மக்களின் மீது தணியாத பாசம் அக்கறையா?....
மானியத்தை முற்றிலுமாக அகற்ற நடக்கும் மறைமுக அரசியல் இது.
மக்களை மண்ணியம் இல்லாமல் வாங்க பழக்கப் படுத்த கொண்டுவரப்படும் மிக கொடூரமான திட்டம். நேரடியாக மான்னியம் உங்கட்டையே குடுக்கிறாங்களாம்....... எதால சிரிக்கிரதுனே தெரியலடா சாமி அதயும் சு.சாமிகிட்டதான் கேக்கணும் போல.  


மறைமுக வஞ்சகம் நடத்தும் ஆட்சியாளர்கள். விளக்கமாக சொல்லுகிறேன், ஒருவனுக்கு வாங்க வசதி இல்லை என்றபோது நண்பனோ, இல்லை உறவினரோ... நான் கொஞ்சம் காசு தரேன் நீ கொஞ்சம் காசு போட்டு வாங்கிகொள் என்று இரக்கம் கருணை கொண்டோ முடியாதவர்களுக்கு செய்வது தான் வழக்கம் .. இதுவே அதிகமானவர்களுக்கு என்றால் என்ன பண்ணுவாக அந்த கம்பெனிகரகிட்ட பேசி , இத்தன சதவீதம் நான் தரேன் மீதி குறைச்சி கொடுக்க சொல்றது தான் மரபு... ஏன் என்றால் வாங்க பணம் இல்லாத காரணத்தாலே தான் வாங்க முடியாம தவிக்கிறாங்க... காசு இருந்தா உங்ககிட்ட எதுக்குடா எதிர்ப்பாக்குறாங்க.. நாங்க முழுபணமும் குடுத்து
வாங்கனுமாம் அப்புறம் எங்க ஒவ்வொரு பாக்கெட்டுளையும் தனி தனியா காசு போட்டு போனவங்களாம்.

'' யாரைடா ஏமாத்த இந்த வேலை பாக்குறீங்க..''
நேரடியா மன்னியத்த காஸ் கம்பெனிக்கு ஒரு அக்கௌன்ட் கு குடுக்குறதா விட்டுட்டு, எல்லாரு அக்கௌன்ட் தனி தனியா போய் போடுவாங்களாம்... இதுல இன்னொரு மோசடியும் இருக்கு பேங்க் அக்கௌன்ட் எல்லாரையும் ஓபன் பன்னவச்சது.( மேலோட்டமா பார்த்தா நல்ல திட்டமா தான் இருக்கும்) அதுலையும் ஒரு பெரிய தொகைய வசுலிச்சாச்சு.. பவம் எத்தன பேர் தெரியுமா காசு இல்லாம அக்கௌன்ட் ஓபன் பண்ண முடியாம தவிக்கிறாங்க( பொய்யான வாக்குறுதிகள் ஓபன் பண்ண பணம் தேவை இல்லைன்னு விளம்பரம் மட்டுமே மினிமம் அம்மௌன்ட் கட்ட சொல்லி பேங்க் காரனுங்க ஒரு பக்கம் தொல்ல).
இந்த நேரடி திட்டங்கள் மோசடி நடக்கும் திட்டங்களுக்கு குடுங்க, விதவைகள், முதியவர்கள், கல்வி, மாற்றுதிறானளிகள்.. இப்படி எண்ணற்ற கொள்ளையடிக்கும் திட்டங்களுக்கு ஓகே...
இப்ப கேஸ்சுக்கு மானியத்தை முற்றிலுமாக தடைப்பன்னவே இந்த திட்டத்தில் செர்த்திருகிறார்கள்... மக்களை மொத்த பணம் குடுத்து வாங்க பழக்க படுத்தி( கொடுமைப் படுத்தி) ஒரு நாள் மொத்த விலைக்கு வாங்க வைக்க நடக்கும் மறைமுக ஏற்பாடு..

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு,பஸ்கட்டணம், மின்சார கட்டணம், அரிசி, பருப்புக்கு மொத்தமா ஒரு கிலோ அரிசி 600 ருபாய் குடுத்து 20 கிலோ அரிசி வாங்கிடுங்க... நாங்க அப்புறமா உங்களுக்கு 600ருபாய் பாங்குல உன் பாக்கெட்டுல போட்டுடுவோமுனு சொன்னா வேடிக்கைய இல்ல.. அந்த காசு இருந்தா எதுக்கு உங்ககிட்ட மாண்ணியம் எதிர்பாக்குறாங்க மக்கள்..........
கோடில மிதக்குறனுக்கு நிலம், தண்ணி, வரி,எல்லாம் இலவசம், தடை இல்லா மின்சாரம், கடன்பட்டு தன் காலுல சுயமா நிக்கனுன்னு ஆசைபடும் சிறுகுறுந்தொழிளுக்கு ஆரம்பிக்கிறவங்களுக்கு மின்சாரம் கட்டுப்பாடு, லோன் கிடைபதில்லை எந்த சலுகையுமில்லை........
இப்படியே போங்க ஏமாற்றும் அரசியல் வியாதிகளே உங்களை ஓட ஓட விரட்டும் நாள் வெகு விரைவில் ...

மக்களுக்கு வேலையும், சம்பாதிக்கும் திறணையும் வளர்த்து விட்டீர்கள் என்றால் மக்கள் எதுக்கு மான்னியத்த எதிர்பாக்குறாங்க...
அதுக்கான வேலைய பாருங்கள் அப்பா ஆள்பவர்களே!......
- பாமரனாக கவிதை பூக்கள் பாலா

கருத்துகள்