நுகர்வு கலாச்சாரம் என்ற முகமூடி போட்டு ..........

  நம் விருப்பங்களை நாம் முடிவு செய்ய முடியா வாழ்க்கை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருகிறோம் ......... நுகர்வு  கலாச்சாரம்  என்ற முகமூடி போட்டு .......... 

நம் எப்படி இருக்கவேண்டும் என்பது இன்று நம் கையில் இல்லை எதை வாங்க வேண்டும் அதுவும் நம்மிடமில்லை ,

நம் எதிர்கால கனவு வாழ்க்கைத்  துணை எல்லாமே இன்று யாரோ எங்கிருந்தோ டிசைன் செய்துக்கொண்டிருக்கிறனர் ........

 போலியான முகவேஷங்கள், ஆடம்பர அணிகலன்கள், ஆடைகள் வாகனங்கள் , கட்டிடங்கள் எல்லாமே நம் தகுதிக்கு மீறியவை. 

சதுரங்கவேட்டை படத்துல வரும் வசனம் எவ்வளவு எதார்த்தம் ஒருத்தன ஏமாத்துனன்னா அவன் ஆசைய முதல்ல தூண்டனும் . இதுவே இன்றைய வணிக நுகர்வு கலாச்சாரம் என்ற பெயரில் நம்மல ஆட்டிப்படச்சிட்டு இருக்கு. .

இன்று  மனிதன் எலக்ரானிக்ஸ் பொருட்கள் .காசுக் குடுத்து சுமக்கும் சுமையாளியா  மாறிட்டான்.அதை  அவன் சுமக்கலனா பைத்தியம் பிடிச்சி செத்துடுவான். இப்படி அடிவமைச்சது .யார் . தான் தான் என்று தன்  தேவையை மட்டுமே யோசிக்க வைத்தது யாரு கொஞ்சம் யோசிங்க.

 அப்பாக்கு ஆப்புரேசன்னா கூட ஆபர்ல ஸ்மார்ட் போன் வாங்க துடிக்கும் மகன்களை உருவாகியது யார்?. எங்கே போச்சி மனிதம் , சகமனிதன மதிக்க தெரியாதா பந்தா கலாசாராம் எங்க
இருந்து வந்தது .........

வளர்ச்சி தேவை நவீனம் தேவை இன்று அப்படியா? இருக்கு...தேவைக்கு மீறி தான் எல்லாமே என்னையும் சேர்த்துதான் சொல்றேன் .........

பதில் எங்க இருந்து வரும் யார்? சொல்லுவார்கள் ....
.புரியாமலே நாட்களை கடத்தும்  கடக்கோடி இந்தியன் .....

- கவிதை பூக்கள் பாலா

கருத்துகள்