தைரியம் மட்டுமே சொல்ல முடிந்தது........

வேண்ட பட்டவங்க சொன்னாங்க ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா கூட அதுல ஆபத்தான நிலையில இருக்குறவங்களுக்காக கடவுளிடம் வேண்டுவேன் அவங்க நல்ல படியா இருக்கனுன்னு , ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது நான் என்ன பாவம் பண்னேன்னு  மனசு உடஞ்சி போய் சொன்னாங்க.
மனசு இறுக்கமாயிடுச்சி . கொஞ்சம் யோசிச்சி பிறகு சொன்னேன்.
 நீங்க அப்படி இருக்குறதால தான் உங்களுக்கு இப்படி இந்த நிலைமையின்னு சொன்னேன் என்னனு கேள்வி கேக்குற பார்வை பாத்தாங்க ....... பதில் சொன்னேன் உங்க இரக்க குனத்தை தான் அவர்கள் தப்பா அவங்களுக்கு சாதகமா மாத்திகிட்டாங்க . அது உங்களுக்கு இப்பதான் முழுமையா புரிய ஆரம்பிசிருக்கு... ஆனால் உங்களால அதுல இருந்து அவ்வளவு சீக்கிரமா வெளிய  வர வாய்ப்பு மிக குறைவு.. அதனால இனிமேலாது யாரிடமும் இறக்கம் காட்டுறதற்கு முன்னாடி எதற்காக இரக்கம் காட்டுறோமுனு  காரணம் அறிந்து இரக்கம் காட்டுங்க உதவி செய்யுங்க என்றேன் ..... தப்பானவங்களுக்கு தப்பா உதவி  செய்தா  கடவுள் என்ன செய்வார் என்றேன் ....... மறுபடியும் நீங்க தப்பு பண்ண மாட்டீங்க எல்லாம் சரி ஆய்டும் என்று
தைரியம் மட்டுமே சொல்ல முடிந்தது ..... சில காரியங்களில் ஆறுதலும், தைரியமும் கூடவே  இருக்கிறோம் பயப்படதே என்பதை மட்டுமே
 நம்மால் சொல்ல முடிகின்றது ...

கருத்துகள்