பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

   பயபுள்ள கடைசி வரை எவ்வளவு  பரிசோதனை கட்டணனு சொல்லவே இல்ல அப்புறம் என்னத்த புகார் தராது அப்படியே தந்துட்டாலும் நடவடிக்கை எடுக்காம தூங்க மாட்டாங்க வெங்காயங்களா ? ,
வர வர தமிழ் மக்களுக்கு காமெடிக்கு பஞ்சம் இல்லமா பாத்துகிறாங்க அரசியல் வியாதிங்க !!!!.
இந்த மாதிரி அறிவிப்பு வந்தாலே நீங்க எவ்வளவு வீனா கொள்ளை அடிச்சிகீங்க , மகனே பெட்டி மட்டும் வரலே எங்க கை புள்ளைங்கள வச்சி கேசு போட்டு வசூல் பண்ணிடிவோம் அப்படின்ற மிரட்டல் தான்னு அவங்களுக்கு தெரியாதா ?, இல்ல பாவம் எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் மக்களுக்கு தெரியாத ?.  அட பொய் பொழப்ப பாருக சார் அப்படின்னு நீங்க என் காத்து கிழிய சொல்றது கேக்குது . என்ன பண்ண மனசுன்னு சொன்னு இருக்கே அதற்கு கொஞ்சம் ஆறுதல் தேவைப்படுது எழுதியாவது தனிச்சிக்குவோம் . கோவப்பட்டு கோவப்பட்டு ரணகளம் ஆனது போதாதா ?...



சென்னை: பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி இருந்தால் வழக்கமாக பாராசிட்டாமல் மாத்திரை சாப்பிடுவார்கள். அதில் குணமாகாமல் காய்ச்சல் இருந்தால் டாக்டரை பார்க்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பதாக டாக்டர் சந்தேகப்பட்டால் உடனே சம்பந்தப்பட்ட நபர் சளி மாதிரி எடுத்து ஆர்.டி.-பிசிஆர் என்ற பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கிண்டியில் உள்ள கிங் நிறுவனம் மற்றும் சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.

இதுதவிர தமிழ்நாடு முழுவதும் 12 தனியார் ஆய்வுக் கூடங்களில் இந்த பரிசோதனையை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 7 ஆய்வுக்கூடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தனியார் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்ய பணம் இல்லாதவர்கள் அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு அங்கீகாரம் அளிக்காத தனியார் ஆய்வுக் கூடங்களுக்கு பொதுமக்கள் சென்று பரிசோதனை செய்யக் கூடாது.

அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வுக்கூடங்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. இதில் சென்னையில்தான் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்