விலகுவதாக திரிணாமூல் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அப்பாடி ஒரு வழியாக மம்தா அறிவித்து விட்டார் . இது முடிவா இல்ல மறுபடியும் கல்லா  போட்டு   பாக்குறாங்களா ?. மத்திய அரசுக்கு ஊழல் அரசியல் வாதிகள் இருக்கும் வரை அவர்களை சிபி ஐ வச்சி மிரட்டியே ஆட்சிக்கு ஆதரவு தரத்துக்கு  பணிய வச்சிடுவாங்க. முலாம் சிங் யாதவ் , லல்லு பிரசாத் யாதவ் , மாயாவதி, திமுக போன்றோர் இருக்கும் வரை  காங்கிரஸ் கட்சி சில்றையா கொஞ்சத்த  கண்டுக்காம விட்டுட்டு கோடி கோடியா கொள்ளை அடிச்சிகிட்டே  தான்  இருக்க போறாங்க . எந்த காலத்திலையும் திமுக வெளிய  வர போறதில்லை . தன்மானம் உள்ள கட்சி அது . அடிச்சி துரத்தினாலும் வெளிய வரமாட்டோம் ஆ ஆ நாங்கெல்லாம்  யாரு ?. ஹி ஹி ஹி ......................

     மத்திய அரசு சமீபத்தில் டீசல் விலையேற்றம், சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்தது போன்ற முடிவுகளை எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசில் இருந்து விலகுவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மத்திய அரசில் இருந்து தமது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வெள்ளிக் கிழமை ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
டிசல் பொருட்களின் விலையேற்றம், சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது போன்ற முடிவுகளை மத்திய அரசு திரும்பப் பெறுவதுடன், மானிய விலையில் அளிக்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கைக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பை 6 இல் இருந்து 24 ஆக உயர்த்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
தனது கட்சி வெளியில் இருந்து மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடுமையான பொருளாதார சூழலை சமாளிக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று பிரதமரும், கடந்த வாரம் எடுக்கப்பட்ட முடிவுகளை திரும்பப் பெறும் உத்தேசம் இல்லை என்று நிதி அமைச்சரும் கூறியிருந்தனர்.

கருத்துகள்