மனச்சாட்சி யோடு யோசித்து பார்த்திருப்பீர்கள் என்றால்

இது இட்லி வடை இருந்து எடுத்த மேட்டர் தான் மக்களே ! நான் நினைக்கும் நிலைபாடும் இதுதான் , காரணம் காலக்காலமா இப்படி மத சாயம் பூசி வெக்கமே இல்லாம முழுக்க மததத்தையே சார்ந்து  அரசியல் நடத்தும் அறிவிலிகள் கிருத்துவத்தையும் , முஸ்லிம்களின் வாக்குகளை ஏமாற்றி வாரி சுருட்டி எப்பமிட்டது தானே  மிச்சம் நண்பர்களே ! உண்மையான மனச்சாட்சி யோடு யோசித்து பார்த்திருப்பீர்கள் என்றால் காங்கிரஸ், தி மு க. கமினிஷ்டுகள் , இன்னும் சில கட்சிகள் அவர்களை வைத்து அரசியல் மட்டுமே நடத்துகின்றனர் , உண்மையில் அவர்களுக்கு எந்த முன்னேற்ற வழிகளையும் செய்தது கிடையாது . எல்லாம் ஏமாற்று வேலைகள் தான் . தமிழ்கள் நிலையிலும் கூட பி ஜே பி க்கு இருந்த அளவுக்கு கூட இந்த கேடு  கெட்ட காங்கிரஸ் காரனுகளுக்கு இருந்ததில்லை .   
உண்மையைச் சொல்லுங்க சார். பிரதமருக்கு உங்க சாய்ஸ் யார்? இது என்ன கேள்வி?

இட்லிவடை வாசகர்கள் கிட்டத்தட்ட 87% பேர் ( பார்க்க ஓட்டு பெட்டி) மோதி தான் பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மோதி ஹிந்துத்துவா வெறியர் ஆச்சே? அவர் வந்தால் உருப்படுமா?

எல்லோருக்கும் ஒரு மதம், ஜாதி இருக்க தான் செய்கிறது. அதை எல்லாம் கடந்தவன் என்று சொல்லுகிறவர்கள் எல்லாம் கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள். "செக்யூலரிஸம் - அதாவது மதச்சார்பின்மை" என்று பிதற்றுபவர்கள் கூட அந்த அந்த தொகுதிக்கு அந்த மதம்/ஜாதியை வேட்பாளர்களை தான் நிற்க வைக்கிறார்கள்!. நிதீஷ் இன்று ஆரம்பித்திருக்கும் இந்த "செக்யூலரிஸம்" பஜனை பிஹாரில் இருக்கும் முஸ்லீம், கிறுத்துவ ஓட்டுக்களை நம்பி தான்.


உண்மையான "செக்யூலரிஸம் - மதச்சார்பின்மை" என்றால் என்ன சார்? புரியும்படி விளக்கவும். ?

தச்சம்யோ ராவ்ருணீ மஹே! காதும் யஞ்யாய!
காதும் யஞ்ய பதயே: தைவீ ஸ்வஸ்திரஸ்துந:
ஸ்வஸ்திர் மானுஷ்யேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்:
சந்நோ அஸ்துத்விபதே: சம்சதுஷ்பதே!
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி!



மனித சமுதாயம் நன்மை பெற வேண்டும்; செடி கொடிகளும், மூலிகைகளும் நன்கு வளர வேண்டும்; மரங்கள் ஆகாய மார்க்கமாக நெடிந்துயர்ந்து வளர வேண்டும்; இரண்டு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும்; நான்கு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும், எங்கும் அமைதி, அமைதி அமைதி என்பதே நிலவ வேண்டும்.

இதுவே மேற்கூறிய புருஷ ஸுக்த ஸ்லோகத்தின் தமிழாக்கம். ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால், “செக்யூலரிஸம்” அதாவது “மதச்சார்பின்மை” என்பதுதான் இதன் அர்த்தம்.

அப்படி என்றால் மதச்சார்பின்மை என்றால் மதவெறியர்கள் கிடையாதா ?

மேன்மையுடைய விஷயங்களை போதிக்கும் ஹிந்து ஸநாதன தர்மத்தைப் போற்றுபவர்களும், பரப்புபவர்களுக்கும் இன்றைய யுகத்தில் மதவெறியர்கள் என்றும் மதச்சார்புடையவர்கள் என்றும் பெயர் சூட்டப்படுகிறது. இத்தகைய திருப்பணியைச் செய்யும் மஹாகணம் பொருந்தியவர்கள் சாக்ஷாத் நமது அரசியல்வாதிகள்; இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திருப்பணியைச் செய்பவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் மீடியாக்கள். சுருக்கமாக மைனாரிட்டி மதங்களை (முஸ்லீம், கிறுஸ்துவர்களை) சப்போர்ட் செய்தால் அதுக்கு பெயர் மதசார்பின்மை.

நிதீஷ் குமார் - நரேந்திர மோதி பற்றி ஐந்து மார்க்கு ஒரு சிறு குறிப்பு?

இந்தியாவின் இரு ஆகச் சிறந்த அரசியல்வாதிகள் என்று போற்றப்படுபவர்கள் இவ்விருவரும். ஆட்சி செலுத்தும் தத்தமது மாநிலத்தின் அபிவிருத்திக்காக அயராது உழைக்கும் நேர்மையான அரசியல்வாதிகள் என்று பெயரெடுத்திருப்பவர்கள். இந்திய அரசியல் பற்றித் தெரியாதவர்கள் கூட மேற்கூறிய இரு முதல்வர்களையும், அவர்களிடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒரு தலைபட்சமான பனிப்போரையும் அறிவார்கள். நிதீஷ் குமார் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் பெரும் தலைவர், பிஹார் மாநில முதல்வர்; நரேந்திர மோதி பாஜகவின் பெரும் தலைவர்களுள் ஒருவர், குஜராத் மாநில முதல்வர். மத்தியில் இவ்விரு கட்சிகளுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. வருகின்ற 2014 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இவ்விருவரில் யார் பிரதம வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணியால் முன்னிறுத்தப்படுவார்கள் என்று மீடியாக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளன. இது பற்றி அந்தந்தக் கட்சிகளே இன்னும் கவலைப்பட ஆரம்பிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

நிதிஷ் குமார் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்?
நிதிஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதச்சார்பற்ற மற்றும் க்ளீன் இமேஜுடைய” ஒருவரே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார், மேலும் தேர்தலுக்கு முன்னரே பிரதமர் வேட்பாளர் யாரென்று அறிவிக்க வேண்டுமென்றும் கருத்து கூறியுள்ளார். இதற்கு பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தரப்பிலிருந்து கடும் ஆட்சேபங்கள் கிளம்பியுள்ளன. இன்னும் ஒரு படி மேலே சென்று, மோதி பிரதமர் வேட்பாளரென்றால், தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயார் என்று அறிவித்துள்ளார். இதற்கு காரணம் தான் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, மோடி வர கூடாது என்று தமிழர்களிடம் உள்ள நல்ல குணம் போன்று இவரிடமும் இருப்பது தான் காரணம். இதற்கு இன்னொரு பெயர் வயிற்றிரிச்சல்.

மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ள நிதிஷ் பற்றி இப்படி கூறலாமா?
பிஜேபியுடன் கூட்டணி அமைத்து சென்ற பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தொண்ணூருக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றார். ஆனால் பிறகு மோதி பிரசாரத்திற்கு வரக் கூடாது என்று வெளிப்படையாகவே நிதிஷ் குமார் பாஜகவிற்கு நெருக்கடி கொடுத்தது. பிஹார் வெள்ள நிவாரணத்திற்கென்று குஜராத் அரசாங்கம் சார்பில் வழங்கிய நிதியுதவியையும் திருப்பியனுப்பிய ஈனத்தனமான வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு தரந்தாழ்ந்த அரசியல் நடத்தியவர் நிதிஷ் குமார். மக்களுக்கு அனுப்பிய பணத்தை இவர் யார் வேண்டாம் என்று சொல்லுவது?

பிஜேபி என்ன செய்ய வேண்டும்?
நிதிஷ் மற்றும் பாஜகவில் உள்ளிருப்பவர்களின் கருத்துகளுக்கும் மோதியின் கருத்து வெறும் மெளனம் மட்டுமே. இன்று செய்தியாளர்கள் இதனை வருந்தி வருந்தி கேட்ட பிறகும், நிதிஷ் பற்றிய கேள்விகளைத் தவிர்த்து விட்டார் மோதி. ஏமாந்த மீடியாக்கள், அவர் பதில் கூறாமல் தவிர்த்ததையே தலைப்புச் செய்தியாக்கிவிட்டனர், வேறு வழியில்லை பாவம்.

அப்படிச் செய்தால் பிஜேபிக்கு பிரச்னை வராதா?
பிஜேபிக்கு தைரியம் இருந்தால், எங்கள் வேட்பாளர் மோதிதான். ஹித்துதுவா சார்பு இருந்தால் தப்பில்லை. ஹிந்துத்துவா தீண்டத்தகாத விஷயம் இல்லை. ஹிந்துக்களுக்கு இருக்கும் சகிப்பு தன்மை மற்ற மதங்களில் கிடையாது. பார்க்கப்போனால் இவர்கள் தான் அதிக செக்யூலர் என்று சொல்லி மோடியை அறிவிக்க வேண்டும். தேச நலம் முக்கியம் என்றால் இதைச்செய்தாக வேண்டும்.
காங்கிரஸ் பிரணாப் தான் குடியரசு தலைவர் என்று சொன்ன மாதிரி மோதிதான் அடுத்த பிரதமர் என்று அறிவிக்க வேண்டும்.

பிஜேபிக்கு இப்போது இருக்கும் சப்போர்ட்டை விட இன்னும் அதிக சப்போர்ட் கிடைக்கும்.

கருத்துகள்