எழுத்துலகம் தழைக்க, பதிவாளர்கள் கவனிப்பார்களா ? இந்த சிறியவனின் சிறிய கருத்தை....

"முதலில் எழுத்துலக நண்பர் பிரபாவிற்கு நன்றி காரணம் நிறைய நாள் முயன்று எழுத முடியாத போன பதிவு இப்போது எழுத தூண்டுதலாக இருந்ததமைக்காக ......."


"ஆரம்ப காலத்தில் சில நல்ல சிந்தனைகளை எழுதி வந்த நான்

காலப்போக்கில் சினிமா, நடிகை என்று தடம் மாறியிருக்கிறேன். மேலும் எனது பழைய நகைச்சுவை உணர்வு இப்போது என்னிடம் பெரிதளவு குறைந்துள்ளது. மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப முயல்கிறேன்." உங்கள் சுய பரிசோதனை பாராட்டுதலுக்குரியது . எழுத்தாளனுக்குஎப்பொழுதும் சுய பரிசோதனை ( தன்ஆழ்முகத்தை பார்க்கும் ) என்பது அவசியம் . இந்த சிறிய வயதில் மெச்ச கூடியகுணாதிசயம் கொண்ட எழுத்துலக நண்பன்பிரபாகரன் அவர்களை மனதார பாராட்டுகிறேன் .....



எழுத்துலகில் இரு க்கும் அனைவரும் செய்ய வேண்டிய, செய்துக் கொள்ளவேண்டிய சுய பரிசோதனை. இரத்த பரிசோதனை மாதிரித்தான் ஏதாவது கொடிய எழுத்து கிருமி இருக்கான்னு பார்த்துக்கறது நல்லது தான். இப்போதைய பலருடைய செயல்கள்( எழத்துக்கள் ) வருத்த பட வேண்டியவைளாக தான் இருக்கின்றது .


எழுதுவது
எந்த விதமான எழுத்தாக இருந்தாலும் அதில் நகைச் சுவை, கொஞ்சம் இளமை கலந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வாசகர்கள் அதிகம் இன்றைய நாட்களில். அதுதான் அவர்களை படிக்கும் ஆர்வத்தையும் தூண்டும் ஓய்வு நேரத்தில் உலாவரும் வாசகனை வஞ்சிக்க கூடாது என்பதும் உண்மை. ஆனால் நாம் எழதும் எழுத்தில் கொண்டு சேர்க் கவேண்டிய கருத்தை அல்லது செய்தியை மறைத்து அல்லது மறந்து விட கூடாது என்பதே என் வாதம்.



வாசகர்களை
ஒரு போதும் குறை சொல்ல மாட்டேன், இந்த நவீன உலகில் காட்சி ஊடமாக அனைத்தும் ( கல்வி உள்பட ) வீட்டு மைய பகுதியில் மையம் கொண்டு விட்டது . அதில் வெறுப்படை தோறும், அதில் திருப்பி அடையாதவரும் , தேடுதலை விரும்புகிறவர்களும் , கொஞ்சம் அசைய பிரியர்களும் தான் இன்று பதிவுலகை ( எழுத்துல கை ) காத்து வருகின்றனர்.....

எல்லாருமே நல்ல விசயங்களா எழதனுன்னு தான் எழுதறோம் , ஆனால் காலபோக்கில் அது ஒரு மாயை உலகில் மாட்டி தவிக்கின்றது . காரணம் இந்த வேகமான உலகில் எல்லாமே ஷாட் & ஸ்வீட் ஹ எதிர் பாக்கறாங்க. அதோடு, நாம் எழுதும் எழுத்து முதலில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற கலைக்கே உண்டான பாராட்டுதலுக்கு ( கைதட்டல் ) ஏங்கும் மனது, ஒவ்வொரு எழுத்தாளனின ஆழ் மனதில் எப்போதும் வாடகை கொடுக்காமல் , விரட்டினாலும் போகாத செல்ல நாய்க்குட்டி போல் மனதை சுற்றிக்கொண்டே இருக்கின்றது.

இல்லை இல்லை , நான் என் மன வடிகாலுக்கு தான் எழுதுகிறேன் என்று

சொன்னால் அது ரகசிய டைரியாகவே தான் இருக்க முடியும் . எப்பொழுது நாம் எழதும் எழத்தை அடுத்தவர் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறதோ, அப்போதே பாராட்டுதலுக்கு , விமர்சனத்திற்கு ஏங்குகின்றது நம் மனம் என்று தான் அர்த்தம் . பாராட்டுதல் , விமர்சனம் மட்டுமே ஒரு நல்ல எழுத்தாளனை உருவாக்கமுடியும். அதற்காக ஊரே கூடி நின்று பாராட்ட வேண்டும் என்ற அர்த்தம் இல்லை , நேசிக்கும் அல்லது நேசிக்கபடும் ஒரே ஒரு ஜீவன் பாராட்டினாலே உற்சாகம் கொள்ளும். ஏன் காதலித்த ஒருவளுக்காகவே காவியம் படைத்தோர் உலகில் அதிகம் .

எழுத்து ஆரம்பம் நம் மனதிற்காக எழுதுகிறோம், பிறகும் நேசிக் கும் அன்பிற்காக , கானும் சமூக கொடுமைக்காக , தன் ரசித்ததை மேலும் அழகாய், நகைச் சுவையாக சொல்வதற்காக , அல்லது சமூகத்தின் வளர்ச்சிக்காக, இப்படி கணக்கில்லா என்ன ஓட்டங்களுக்காக எழதப்படுகின்றது.

ஒரு கால கட்டம் வரை தான் எழுதுவதின் நோக்கம் தெரிகின்றது. பின்பு அந்த எழுத்து அவனை கொண்டு சேர்க்கும் இடமே அவன் எழுத்தை திசையை நிர்ணயம் செய்கிறது. எண்ண ஓட்டங்க எழுதியதை அல்லது அவன் வலிகளை எழுத்துகளாக வடித்ததை கொண்டு சேர்ப்பதற்கு அவன் படும் பாடு பெரிது என்று சொல்வதை விட , அந்த எழுத்துக்கள் படும் பாடுதான் மிக கொடூரமானது கொடுமையானது. எத்தனை வளைவுகள், நெளிவுகள், நெருடல்கள் வலிகளைத் தாண்டி தன் படைப்புகள் சவாரி செய்ய வேண்டி உள்ளது.

தன் எழுத்தை படிக்க வேண்டும் அல்லது தன் கலையை ரசித்து பாராட்ட வேண்டும் என்று தன் தடங்களை மாற்றி செல்ல வேண்டி இருக்கின்றது என்பது எதார்த்த உண்மை . ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் ஒரு குறிப்பிட்ட இலக்கு எட்டும் வரை அப்படி சிறிது தடம் மாறி அல்லது அதற்குள்ளாகவே சிறு சிறு வளைவுகளை புகுத்துவது தவறாக கருத முடியாது தவிர்க்கமுடியாததும் கூட , பிரபலம் ஆனபின்பும் தன் சுய முகத்தை மறந்தோ அல்லது கொன்றோ புகழ் மயக்கத்திலேயே எழுத்தை தொடர்வது தான் தவறு என்பது என் கருத்து.

ன் கருத்துக்கள் தேனில் குழைத்து தரும் மருந்தாகவே இருக்க வேண்டுமே தவிர, தேனை மட்டுமே சுவைக்கும் இனிப்பாக மாறி விட கூடாது . அது ஒரு நாள் வியாதி முற்றி பாடையில் படுத்துவிடும் என்பதை யாரும் (கலையை நேசிப்பவர்கள்) மறந்தது விட கூடாது என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.

நண்பர்களே! சக எழுத்தாளரை மனம் விட்டு பாராட்டுங்கள், நல்ல படைப்புகளுக்கு ஊக்கம் கொடுங்கள் , குறை இருந்தால் நாசுக்காக சுட்டி காட்ட தவறாதீர்கள் . பொறாமை என்ற நோய் பீடித்து நல்ல எழத்துக்களை, எழுத்தா ளர்களை புறம் தள்ளிவிடாதீர்கள். அது எழுத்துலகிற்கு என்றுமே நல்லதல்ல. பிரச்சனை இருந்தால் தனிப்பட்ட முறையில் பேசி ( சாட்டிங் , மெயில், மொபைல் , நேரில் அல்லது நண்பர்கள் மூலம் ) தீர்த்துகொள்ளுங்கள் . ஒன்றாக செயல் படுங்கள் . இல்லை என்றால் காட்சி ஊடகங்களா ன சன் டிவி யும் - கலைஞர் டிவி யும் போட்ட சண்டை மாதிரி ஊர் உலகம் சிரிப்பாய் சிரிக்கும் நினைவுல வச்சுகோங்க அம்புட்டுதேன் .......

பொறாமை விட்டு ஆரோகியமான போட்டியை எழுத்தில் காட்டுங்க எழுத்துலகம் பிழைக்கும் . என்றும் வளரட்டும் பதிவுலகம் , எழுத்துலகம் முடிவில்லா ஆயுளோடு . கலைகள் போற்றப்படட்டும் தரணியில் உயிரினங்கள் வாழும் மட்டும் .
- உங்கள் நண்பன் பாலா

குறிப்பு
: நக்கல் நையாண்டி செய்பவர்களும் செய்யலாம் அன்போடு உங்கள் கருத்துகளை குத்திட்டு போங்க தல , தளபதிகளே வணங்கி வரவேற்கின்றேன் ....... தாராளமா வோட்டு குத்திட்டு போங்க...
.....

கருத்துகள்

  1. // குறை இருந்தால் நாசுக்காக சுட்டி காட்ட தவறாதீர்கள் //

    இங்கே இதுதான் மிக முக்கியம்... நிறைய பேர் பாராட்ட மட்டுமே செய்கிறார்கள்... அது மிகப்பெரிய சீரழிவிற்கு நம்மை அழைத்துச் செல்லும்...

    பதிலளிநீக்கு
  2. இன்னொன்றை குறிப்பிட வேண்டும்... நான் ஆரம்பத்தில் சில சமூக சிந்தனைகளை எழுதியபோது படிப்பாரற்று கிடந்தேன்... எனவே நானும் என் இஷ்டத்துக்கு எழுதிக்கொண்டிருந்தேன்... சமீபத்தில் காந்தியைப் பற்றி எழுதி அது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக என் மீது தனி மனித தாக்குதல்கள் கூட நடந்தது... இதனால் மன உளைச்சல் அடைந்து மீண்டும் கமர்ஷியல் பாதைக்கே திரும்பிவிட்டேன்...

    பதிலளிநீக்கு
  3. தொடர்ந்து எழுதுங்க நாங்க இருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  4. ம.தி.சுதா @
    உங்கள் வருைகக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. Philosophy Prabhakaran @ "நான் ஆரம்பத்தில் சில சமூக சிந்தனைகளை எழுதியபோது படிப்பாரற்று கிடந்தேன்... எனவே நானும் என் இஷ்டத்துக்கு எழுதிக்கொண்டிருந்தேன்... சமீபத்தில் காந்தியைப் பற்றி எழுதி அது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக என் மீது தனி மனித தாக்குதல்கள் கூட நடந்தது... இதனால் மன உளைச்சல் அடைந்து மீண்டும் கமர்ஷியல் பாதைக்கே திரும்பிவிட்டேன்... "

    ஆம் நண்பரே, உண்மை தான் ,எனக்கும் நண்பர்கள் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  6. >>> இளம் வயதில் பதிவுலகில் தான் செய்யும் தவறுகளை வெளிப்படையாக சொல்லி திருத்தி கொள்ளும் பிரபாகரனை ஊக்குவித்ததற்கு நன்றி பாலா!!

    பதிலளிநீக்கு
  7. சரியாகத்தான் சொல்லி இருக்கிரீர்கள் நண்பா

    பதிலளிநீக்கு
  8. ! சிவகுமார் !
    வருகைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  9. இரவு வானம் @
    வருகைக்கு நன்றி நண்பரே ,

    உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக