மதப்பித்தை அழிப்போம்! அறவழியில் நடப்போம்! :


நண்பர்களே ஒரு சந்தோகம் விவாதம் நடக்குது( ரொம்ப நாளாவே)...
எல்லோருடைய பார்வையும் ஒரே விதமாய் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. உணர்ந்து விரும்பிதான் ஒருவன் ஒரு மதத்தை தழுவ வேண்டுமே ஒழிய அது எந்த மதமாக இருக்கட்டும்... இது என்ன வியாபாரமா ? உணர்வு எதற்கு விளம்பரம் விரட்டி விரட்டி மதபிரசங்க விளம்பரங்கள் ஏமாற்று வேலைகள்.

மாற்று மதத்தை சீண்டும் கொடுமை, என் அனுமதி இல்லாமலே என் புத்திக்குள் உன்கருத்தை(மதத்தை) திணிக்கிறாய்... யார் உங்களுக்குஅனுமதி கொடுத்தார்கள்.. ஏழ்மையையும் , அறியாமையும், கவலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தன்சுயலாபத்திற்கு( சம்பாதியதுக்காக) இன்று மதம் பயன்படுத்தப் படுகிறது....

தன் மதத்தின் கொள்கையின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், அரைகுறையாய் தெரிந்தவர்களும், எதற்கு மாறினோம், மாற்றுகிறோம் என்று அறியாமலும் வாத பிடிவதங்களாலே இன்று மதங்கள் வளர்க்கப்படுகின்றது..
மதங்கள் சாதியத்தை ஒழிக்காது, காதல் சாதியத்தை ஒருநாள் ஒழிக்கும் , ஆனால் காதலை எந்த மதமும் ஆதரிக்கவில்லை, மாறாக எதிர்கின்றன. எல்லா மதங்களும் வேதங்களும் அன்பை மட்டுமே சொல்லுகின்றது, அறத்தை மட்டுமே வளர்கின்றது.

ஆனால் இன்று நடப்பதென்ன? இங்கே, எல்லாம் தலைக்கீழ் பாடம் தான். தான்பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற மூர்க்கதனங்களே நடக்கின்றது. பிரிவினைகளை மறப்போம் அன்பை வளர்ப்போம்... சமத்துவம் வளர்ப்போம். பிரிவினைவாதிகளையும், மதபித்து பிடித்தவர்களையும் அகற்றி சுயசிந்தனையில் வாழ்வோம். ஏன் ? எதற்கு? என்ற கேள்வியை கேட்போம், தெளிந்த சிந்தனையில் பயணிப்போம்....

- கவிதை பூக்கள் பாலா

கருத்துகள்