பாஸ்போர்ட்டில் மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் !

   பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள்,

வழக்கமாக, பாஸ் போர்ட்டின் இடது பக்க உள் அட்டையில், பாஸ் போர்ட் வைத்திருப்பவரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிறந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் அமைந்திருக்கும். அதே போல், வலது பக்க உள் அட்டையில், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்புகளும் அடங்கி இருக்கும். ஆனால், தற்போதைய புதிய நடைமுறைப்படி, இடது உள்பக்கத்தில் இருக்கும் அனைத்து குறிப்புகளும், புகைப்படமும், 2வது தாளில், "லேமினேட்' செய்யப்படும். அதேபோல், வலது பக்க உள் அட்டையில், காணப்படும் அனைத்து குறிப்புகளும், 35வது பக்கத்தில், லேமினேட் செய்யப்படும்.

இது குறித்து, மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன் கூறியதாவது: பழைய முறையில், பாஸ்போர்ட்டை அடிக்கடி பயன்படுத்துவதால், அதன், இடது உள் பக்கத்தில் உள்ள புகைப்படம் அழுக்காகிறது. மேலும், பாஸ்போர்ட் வைத்திருப்பவர் பற்றிய குறிப்புகள், தெளிவாக தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது. பாஸ்போர்ட்டின் உள் அட்டையை பிரித்து, புதிய புகைப்படத்தை ஒட்டும் அபாயமும் உள்ளது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இம்மாற்றங்கள், நாளை முதல், அமலுக்கு வருவதால், புதிய மாற்றங்கள் அடங்கிய, 50 ஆயிரம் பாஸ்போர்ட்கள், நாசிக்கிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் அமலுக்கு வரும் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள்