இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு


இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டினை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினரை பொலிஸார் கைது செய்தனர்.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ நேற்று  பீகாரில் புத்தகயாவிற்கும் திருப்பதிக்கும் வழிபாடு செய்வதற்காக வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் பிரதமர் வீட்டினை முற்றுகையிட டில்லி சென்றனர். 08.02.2013 காலை ஜந்தர் மந்தரில் இருந்து பிரதமர் வீட்டை நோக்கி பேரணி சென்ற  போது பாராளுமன்ற சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தி.மு.க. தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான ‘டெசோ‘ வின் சார்பில் கறுப்பு உடையுடன் ஆப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிரக்கணக்கானோர் கறுப்பு உடையில் குவிந்தனர்.

டெசோ அமைப்பைச் சேர்ந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி,  திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சு.ப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர்  கறுப்பு உடையில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

அந்த பழைய சட்டமன்ற கட்டிடத்திற்குள் நான் உட்கார இடம் இல்லை. மூன்று சக்கர வண்டி உள்ளே செல்ல முடியவில்லை. டெல்லி ராஜ்யசபையில் 2, 3 உறுப்பினர்கள் இதே போல் சென்று பேசுவதற்கு வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
 
இலங்கை தமிழர்களின் நிலை பற்றி நமது கவலையை உலகுக்கு உணர்த்தி இருக்கிறோம். டெசோ அமைப்பின் மூலம் உலக நாடுகளுக்கும் தெரியப் படுத்தி வருகிறோம். அவர்களது நலவாழ்வுக்காக கோரிக்கை வைத்து இருக்கிறோம். 56 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி வரும் நம்மை பார்த்து சிலர், நாம் ஈழத் தமிழர்களுக்கு விரோதி போல் பேசுகிறார்கள்.
 
இலங்கையிலே போர் நடந்த போது நாம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று சொல்கிறார்கள், ஏதோ அவர்கள் கடற்கரையில் நின்று கொண்டு கையில் துப்பாக்கியுடன் சண்டையிட்டு தடுத்ததை போல் பேசுகிறார்கள். எனவே ஈழத்தமிழர்களுக்காக நாம் நடத்திய போராட்டங்களை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
 
தலைவர்களே ! நீங்க சொல்ற செய்ற அனைத்து   செயல்களும் அப்படியே புல்லரிக்குது ........ அச்சச்சோ ........ அய்யையோ ... அப்பப்ப்பா ......... முடியலாடா  சாமி .............. எல்லா அந்த இறந்த இலங்கை தமிழர்களுக்கே வெளிச்சம் .........
எல்லாத்தையும் முடிச்சிட்டு என்ன கூப்பாடு வேண்டி கிடக்கு .......... அரசியலு ..............

கருத்துகள்