தலையில குண்ட துக்கி போட்டுட்டாங்க சாமியோ !


  ஏறி போச்சி ஏறிபோச்சி, எல்லா விலையும் ஏறி போச்சி , அதான் ஒட்டு  போட்டுட்டீங்க இல்ல இனி நாங்க எல்லாம் பாத்துகிறோம்,    நீங்க போய் உங்க பொழப்ப பாருங்க என்று அறிவித்து விட்டது ஜெயா அரசு.  இது எதிர் பார்த்தது தான் என்றாலும், என்ன இப்ப மத்திய அரசை கை நீட்டி காரணம் சொல்ல முடிகின்றது . அவ்வளவே ! தி.மு.க . அரசு நிர்வாக சீர்கேடு என்பது முற்றிலும் உண்மைதான் ஏற்று கொள்கின்றோம் . இந்த நிலையில் இருக்கும் அரசுக்கு எதற்கு வேண்டாத வேலை அத மாத்துறேன் இத மாத்துறேன் என்று . சும்மா இருக்க முடியாதா, இப்படியா ?அரசு மக்கள் பணத்தை சீர்ழழிக்க  வேண்டும்.

உண்மையில் உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் நிர்வாக  சீர்கேட்டை சரி செய்து நிர்வாகத்தை  சரி செய்தாலே பல ஆயிரம்  கோடி மிச்ச படுத்தலாம் . புதிதாக கட்டிடம் கட்டி அதில் நீங்க என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் . அதை விடுத்து  இருக்கும் நூலகம் , அரசு கட்டிடங்களை மாற்றுகிறேன் அன்று ஆரம்பித்து வீண் செலவுகளை செய்து பெயரை மீண்டும் கொடுத்துக்கொள்ள ஆரம்பித்து  விட்டார் ஜெயா (அவருடைய குணாதிசயம் எவன் என்ன சொல்ல என்ன எக்கேடு கேட்ட என்ன தான் நினைத்ததை முடிக்க வேண்டும் ) .

 இவனுங்க பண்ண அனைத்து கொள்ளை சீர்கேடுகள் விளைவு  இப்போது மக்கள் தலையில் தான் எல்லாம் விடிகின்றது. ஏன்டா?  எங்களுக்கு  சம்பளம் உயரல, கூலி உயரல , விவசாயிக்கு உரிய விலை கிடைக்கல  ஆனால் தினமும்  பொருட்கள் விலை மட்டும்  ஏறிகிட்டே போகுது . எங்க தான்  போகுது பணமெல்லாம் . அடிச்ச பணத்தை கொண்டு வாங்கடா  மட பயலுங்களா !. அரசு அதிகாரிகள் அடிச்ச கொள்ளை , அரசியல் வாதிகள் அடிச்ச கொள்ளை , பெரும்  முதலாளிகள் அடிச்ச வரி ஏயப்பு கொள்ளை . மின்சார திருட்டு , டெண்டர்  விட்டு அடிச்ச கொள்ளை எல்லாத்தை வசூலிச்சா  நாம மத்திய அரசுக்கு கடன் கொடுக்கலாம் . நடக்குமா ? அதுதான் நடக்காதே ! . இளிச்ச வாயன் மக்கள் தானே ! . அடுத்து யாருகிட்ட கடன் வாங்குறது என்று யோசிக்க ஆரபித்து விட்டனர் தமிழ் நாட்டு மக்கள் . இலவசம் எவன் கேட்டான் உங்ககிட்ட நீங்களா போட்டி போட்டு அறிவிச்சிட்டு , இப்ப நீங்க  தான்   பணம் கொடுக்கணும் அப்படின்னு சொன்ன என்ன அர்த்தம் ஜெயலலிதா அவர்களே !

மானங்கெட்ட மத்திய அரசு எதையும் தரமா ட்டான்னு தான் உங்களுக்கு தெரியுமே ! அப்புறம் எப்படி அறிவிச்சீங்க மேடம் . மக்கள் மீது இருக்கும் அபரிதமான நம்பிக்கை, எத செஞ்சாலும் கேக்க மாட்டான் அப்படின்னு தானே ! .
பெரிய தலைங்க கிட்ட கை வையுங்க . வருமான வரிய ஒழுங்க வசுல்பன்னுங்க. முதலாளிங்க அடிக்கும் கொள்ளைய தடுத்து நிறுத்துங்க . ஏன்? மீண்டும் மீண்டும்  அடிமட்ட நடுத்தர மக்களின் வைத்துலயே மாறி மாறி அடிக்கிறீங்க .இப்ப
 எதிர் கட்சிகளுக்கு அல்வாவ மொத்தமா சாப்பிட்ட திருப்தி . இவனுங்க பண்ண கொள்ளை தான், இதற்க்கு முதற்காரணம்  என்பது  மக்களுக்கு தெரியும் . இருந்தாலும் வெட்கமே  இல்லாம அரசியல்  பண்ண போறான்னுங்க .........    மாட்டிகிட்டு முழிக்கிறது என்னமோ மக்கள் தான் ........ஐயோ தாங்கல தாங்கல தலை பாரம் தாங்கல    
         
 சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து  24 ரூபாயாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 42 பைசா என்றும்; விரைவு, மற்றும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 32 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 56 பைசா என்றும்; சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 38 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 60 பைசா என்றும்; அல்ட்ரா டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 52 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 70 பைசா என்றும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக, இதர பகுதிகளில் தற்போதுள்ள குறைந்த பட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும்; சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 


மிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரையில், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியமே மின்சார உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை மாற்றியமைப்பது பற்றி ஆய்வு செய்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை வைத்து, அந்த ஆணையம் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து முடிவுகளை அறிவிக்கும்.

இவ்வாறாக தலையில குண்ட துக்கி போட்டுட்டாங்க சாமியோ !!!!!! 



கருத்துகள்

  1. ஏழை, நடுத்தர மக்கள் மடியில் கை வைத்துவிட்டார்... இதற்கான பரிசை கண்டிப்பாக ஜெயலலிதா பெறுவார்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி பிரபா கண்டிப்பா இதன் பலனை அனுபவிப்பார். அட எலக்சன் வேற இப்ப இல்ல , அதனால தைரியமா ஏத்திட்டாங்க . இதுக்காகவே அடிக்கடி எலக்சன் வரணும் போல

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக