நீதி துறையின் நேர்கொண்ட நடை, நம்பிக்கையின் பிடிப்பில் இந்தியர்

  வாழ்க நீதித்துறை , வீழ்ந்த மரியாதையை மீட்டெடுக்கும் இந்தியா என்ற நம்பிக்கை கொஞ்சம் பிறந்திருக்கின்றது . அனைவரும் ஆவலாக எதிர் பார்த்திருந்த 2 ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்ட அனைவருக்குமோ அல்லது கனிமொழிக்காவது ஜாமீன் கிடைத்து விடும் என்ற மிக பெரிய நம்பிக்கையில் தி.மு.க . வும் , கலைஞ்சர்  குடும்பமும்  காத்திருந்தனர் . முடிவு வேறு விதமாக அமைந்ததுள்ளது . ஆம் அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது . தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் மிக முக்கியமானது . 

தேச துரோகம் என்று கூறப்பட்டு இருக்கும் இவர்கள் நம்பிக்கை துரோகம் செய்துள்ள இவர்களுக்கு யார் எதிர்காவிட்டாலும் ஜாமீன் தர இயலாது என கூறிய சிறப்பு நீதி மன்றத்திற்கு தலை வணங்கியே தீர வேண்டும் .
தவறு செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் , பாடமாகவும் இருக்க வேண்டும் . அதே போல் விசாரணையை  விரைந்து முடித்து அவர்கள் சொத்துக்கள் முடக்கப்பட்டு இழந்த இழப்பீட்டை வசூலிப்பது மட்டு அல்லாமல் தகுந்த கடுமையான தண்டனை தரவேண்டும் .

அரசியல் வாதிகள் இதில் அனைவருமே ஒன்றாகத்தான் இருகின்றனர் . எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க . விசாரணை என்று வந்தால் அது முடியறதுக்குள்ள ஆயசும் முடிஞ்சிடும் , தியாகி பட்டம் எல்லாம் அதற்குள்ள கொடுத்துடுவாங்க . நம் குடும்பம் அதுக்குள்ள உலகத்துல பணக்காரர்கள் லிஸ்ட்ல வந்டுதுவாங்க. அப்புறம் என்ன ரெண்டு தலைமுறை மாறினா எவனுக்கு தெரியும் கொள்ளைகார குடும்பன்னு . பரம்பரை பணகாரன்னு அல்லவா சொல்லுவானுங்க . யோசிச்சி பாருங்க கணக்கு சரியாய் வரும் . நீயும் நானும் எந்தனை தலைமுறை மாறினாலும் இப்படியே ஏங்கியே சாகவேண்டியது தான்.       

கனிமொழி தாய் கண் கலங்கினார் என்று செய்திகள் வேறு என்ன தியாக  செம்மலையா  சீரில போட்டாங்க . இங்க பேட்டரி வாங்கி கொடுத்தான்னு   தூக்குல போடா சொல்லுறாங்க . ஆயுள் போதாதாம் . அப்புறம் இவங்களுக்கு என்ன கொடுக்கலாம் 121 மக்களுக்கு அல்வா ( நம்பிக்கை துரோகம் ) செய்த இவங்களுக்கு வெண்சாமரமா வீச முடியும் . லட்ச கனக தமிழன் சேத்துகிட்டு இருந்தப்ப கலங்காத உங்க மனசு இப்ப மட்டும் எப்படி கலங்குது . லாஜிக் உதைக்குதே !.

வாழ்க    நீதித் துறை     ஒளிரட்டும் இந்தியனின் மானம் உலக அரங்கில் , ஒழியட்டும் அரக்க குணம் கொண்ட அரசியல் வாதிகளின் கொட்டங்கள்.  

கருத்துகள்