கொசுக்கள் கூடி மாநாடு நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றின !!
எந்திரன்
படம் புகழ் ரோபோட் கொசு தலைமையில் கொசுக்கள் கூடி மாநாடு நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றின !!
சென்னை கூவம் ஆற்றில் பிரமாண்ட மேடை அமைத்து ( சென்னை வாசிகளின் உதவியால் ) நல்ல திகட்ட திகட்ட பல விதமான ரத்தம் குடித்து மயக்கத்திலேயே தீர்மானங்கள் நிறைவேற்றினர் .

தீர்மானங்கள் :
1. எங்கள் வாழ்விடங்கள் ஆனா கூவம் , சாக்கடை , சாலையோர குப்பை , குட்டைகள் , கழிவிடங்கள் அனைத்தும் தற்போது உள்ளது போலவே எப்போதும் இருக்க வேண்டும் . கூவத்தை சுத்தபடுத்துறோம் , அழகு படுத்துரோமுன்னு எங்களை வாழ்விடங்களை காலி செய்ய சொல்ல கூடாது . மீறினால் சென்னை முற்றுகை இட்டு போராட்டம் நடத்துவோம் .
2. முதல் காரியமா எங்கள் உயிரை குடிக்கும் all out , martin , goodnight இன்னும் பல தொழிச்சாலைகளை மூடி , அவர்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் .
3. எங்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்க வேண்டும் . எங்கள் ஆயுளை அதிகரிக்க எங்கள் தலைவர்கள் தலைமையில் ஆராச்சி குழு அமைக்க வேண்டும் .
4. எங்களின் சில இடங்கள் சுத்தம் என்ற பெயரில் அழித்து மனித இனங்கள் ஆட்டைய போடுறாங்க அதை தடுக்க வேண்டும் .

5. எங்களுக்கு எதிரான கழிவு நீர் அகற்று வாரியத்தை உடனடியாக கலைக்க வேண்டும் .
6.எங்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும்
7. பிறக்க இடம் , குடிக்க( மனித இரத்தம்) , நோய் பரப்ப நல்ல போக்குவரத்து வசதி ( எங்கும் கூவம் , கிளை கூவம்) ஊர் முழுக்க அமைத்தது, தவிக்கும் எங்கள் கொசு இனத்தை காப்பற்ற வழி செய்ய வேண்டும் .
8. எங்கள் இனத்திற்கு தனியாக அனைத்து ( துறைகளிலும் ) இடங்களிலும் இட ஒதுக்கீடு தரவேண்டும்

9. எங்கள் இனம் காக்க நலவாரியம் அமைக்க வேண்டும் .
10. மனிதர்களுக்கு அளிக்கும் நோய் எதிர்ப்பு மாதிரிகளை தடை செய்ய வேண்டும் .
முக்கிய குறிப்பு : தேர்தலுக்குள் எங்கள் கோரிக்கையை நிறைவேறாவிட்டால்
தற்கொலை படைகளை உருவாக்கி மனிதர்களை கூட்டம் கூடமாக கொல்லுவோம் . எங்களுக்கு நேசக்கரம் நீட்ட பல வல்லரசுகள் காத்திருகின்றன ,
என்று மிகவும் கண்டிப்புடன் செய்தியாளர்களிடம் ரோபோட் கொசு

கருத்துகள்