உள்ளாட்சி மன்ற தேர்தல் அழிசாட்டியம்


ள்ளாட்சி மன்ற தேர்தல் ஐயோ நினச்சாலே பயமா இருக்குங்க . காரணம் ரொம்ப சிம்பிள் தான் ஒட்டு போட்டாலும் தப்பு போடலையனாலும் தப்பு , என்ன பண்ணலாமுன்னு யோசிச்சா மண்ட காய்துங்க சாமீ . என்ன ஒரே குழப்பமா இருக்க ?     எனக்கு அப்படி தான் இருக்கு காரணம் , மாமா , மச்சான் , தம்பி , அண்ணே , ஐயா , அம்மா , நண்பா, தலைவரே , நம்ம தம்பி , அட நம்ம கட்சி தாம்பா அவரு ( கொய்யால யாரு சொன்னது அவனுங்க கட்சின்னு) , நம்ம ஆளு தாம்பா இப்படி நம்மள பார்த்து கூப்பாடு போட்ட  அரசியல் வியாதிகள் மட்டு மில்லாம அரசியல தொழிலா பாவிக்கும் கொஞ்சம் பேர் , ஆதங்கத்துல கொஞ்சம் பேர் , போட்டு தான் பார்ப்போம் வந்த மலை இல்ல ...........( ப்பில் இந்த பிளாங்க்ஸ் )   அப்படின்னு கொஞ்ச பேரு , ஒரு விளம்பரம் அப்படின்னு கொஞ்ச பேரு அப்படின்னு தமிழ்நாடு  முழுக்க 5 லட்சத்துக்கும் அதிகமா வேட்பாளர் நிக்குறாங்க சாமி .

வங்க அவங்க பட்டுக்கும் நின்னுகிட்டு போகட்டும் இவனுக்கு ஏன் ஜெலிசில் ( வைதெரிச்சல் ) அப்படின்னு பாக்கிறீங்களா ? .  அவங்க நின்ன என்னகென்ன உக்காந்த என்னகென்ன வெண்ணைகளா ? யாரு வந்தாலும் முதல்ல அடிப்படை சுகாதாரத்தை பாருங்க. அது ஒரு புறம் இருக்கட்டும் . தினமும்   வீட்டுக்கு ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் அப்படின்னு வருசையா ? வந்து குடுக்கற அளப்பர இருக்கே சாமீ தாங்கல. தூங்க  விட மாட்டேங்கறாங்க , வெளியில போக விட  மாட்டேங்கறாங்க . ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்க வேண்டி இருக்கு கண்டிப்பா உங்களுக்கே போட்டுறோம் தேய்ந்து போன ரெக்காடு மாதிரி புலம்பிக்கிட்டு  இருக்கோம் . இது நம்ம கஷ்டம் .  

 

டுத்து யாரு யாரு தேர்தல்ல நிக்குறாங்க அப்படின்னு தெரிஞ்சிக்கிறது இருக்கே,  அது அதை விட கொடுமை .  என்ன ஒவ்வொரு கட்சியிலையும் ரெண்டு ரெண்டு வேட்பாளர் இது தமிழ்நாடு முழுக்க அனேக இடங்கள்ல இப்படித்தான் இருக்கு . காரணம் தலைமைக்கு யாரும் கண்ரோல் ஆகல அப்படின்னு சொல்றாங்க . அத விட தலைமைக்கு அவங்க சின்னதுல நிக்குற நகராட்சி , ஒன்றிய கவுன்சிலர் , மாவட்ட கவுன்சிலர் , மேயர் அப்படின்னு தான் கவலை படுறாங்க . அடிமட்ட தொண்டனை பற்றியோ அல்லது அடிநிலை பதவிகள் ஆனா வார்டு   மெம்பர் , ஊராட்சி தலைவர் பதவி இப்படி கட்சி சின்ன ஒத்துக்காத வேட்பாளர பற்றி யாரும் ( அரசியல் தலைங்க கவலை படல ) . அதிலையும் சின்னம் ஒத்துக்கறாங்க பாருங்க பெண் வேட்பாளருக்கு கட்டில் சின்னமாம் ........... என்ன ஒரு மாதிரி இருக்குல்ல ...
படிச்சவங்களே சின்னத்த பார்த்து குழம்பி போகும் போது கிராம பஞ்சாயத்துல  4 ஓட்டு போடணுமாம் எப்படி இருக்கும் பாருங்க ....... 

ன்னொரு பிரச்சனை என்ன வென்றால் இதுல நாம தினமும் பார்க்கும் முகம் தான் அதிகமா வார்டு , கவுன்சிலர் பதவிக்கு நிக்குறாங்க . மக்கள் இங்கேயும் பாவம் யாருக்கு  ஒட்டு போடறது அப்படின்னு குழப்பம் ஒரு சிலரை தவிர அனைவரையும் பற்றியும் தெரியாது தெரிஞ்சாலும் சொல்ல முடியாது . நண்பன், தெரிஞ்சவன் , சொந்தம் , பண பலம் , ரொம்ப நல்லவன் அப்படின்னு யாரை நாம தேர்ந்தெடுத்தாலும் ஜெயச்சதுக்கு பிறகு பண்ற அழிசாட்டியம்  தாங்கல . இதுவரைக்கும் நமக்கு  தலை தரையில தொடுற அளவுக்கு கும்பிடு போடும் இவ்வங்க அப்புறம் என்னமோ வானத்துல இருந்து நேரே குதிச்ச ரேஞ்சிக்கு ஒரு பில்டப்பு , எதுகெடுத்தாலும்  லஞ்சம் அரசு நல திட்டங்கள் வாங்கி தரனுன்னா கூட ஈவு இரக்கமே இல்லாம வயசானவங்க , ஏழைங்க கிட்ட லஞ்சம் கேக்கறது மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம் . பணக்காரனுக்கு அனுரசித்து போகறதும் சாதாரணமா நடக்குது . புதுசா வர போற நம்ம கெளன்சிலர்களை  வார்டு மெம்பர்களையும் வரவேற்று  காத்திருப்போம் . அடுத்த சுரண்டலுக்கு .

( அட மேயர் , தலைவரை  ஒன்னும் சொல்லலையா ! அட அவங்கல சொல்ல என்ன இருக்கு ஜெயச்ச பிறகு   எப்படியும் அவங்கல நம்மால பார்க்க முடியாது . அதுவும் இல்லாம அவங்க எல்லாம் கோடி கோடி ( கேடிங்கோ ) கோ ! )
எல்லாம் சரி படிச்சிட்டு போயிட்டே இருக்கிங்க தவறாம ஒட்டு போட்டுட்டு போங்கையா சாமிங்களா !. என்ன பிச்ச எடுக்குறேன்னு பாக்குறீங்களா? பிரபல பதிவரா  வளர்த்து விடுங்க என்ன ,அப்புறம் பாருங்க நான் பண்ற  அழிசாட்டியம் உங்களுக்கே விளங்கும் ........
(அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க தெரிஞ்சிருதால் பிரபலம் எப்பவோ ஆகி இருப்பேனுங்கோ !)

   

கருத்துகள்