தொடை நடுங்கும் மத்திய காங்கிரஸ் அரசு . வீறு கொள்ளும் அன்னா ஹசாரே

நாம ஊர்ல பேச்சி வழக்குல தொடைநடுங்கி பயலுகளா அப்படின்னு கேலி பேசுவதை கேட்டிருகின்றோம் . ஆம் இன்று மத்திய காங்கிரஸ் அரசின் நிலையும் இதுதான் . மக்கள் வாய்விட்டு கைகொட்டி கேலி செய்கின்றனர் மத்திய அரசின் செயல் பாடுகளை நினைத்து .

அன்னா ஹசாரே என்றாலே அனைத்து காங்கிரஸ் காரனுகளுக்கும் உச்ச போவதாக கேள்வி . எதுக்கையா இப்படி நடுங்குகின்றீர்கள் மடியில் கனமிருந்தால் தானே உங்களுக்கு பயம் வரும் . மடியில் இல்ல தலையில் வைத்து கூட சுமக்க முடியாத அளவுக்கு ஊழல் ஊழல் எதை எடுத்தாலும் ஊழல் .

என்னய்யா உங்க கிட்ட கேட்டாங்க நீங்க கொண்டு வர மசோதா எங்களுக்கு உடன் பாடு இல்லை என்று பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் முடியாமல் போகவே உண்ணாவிரம் என்ற அகிம்சை வழியை கடை பிடித்தார்கள் . அதற்கு முறைப்படி அனுமதியும் கேட்டார்கள் . நீங்கள் அதை அனுமதிக்காமல் நிபந்தனை என்ற பெயரில் தடுக்க பாக்கிறீங்க .... எதற்கு பயம் மக்கள் விழித்து கொண்டார்கள் எங்கே நமது லப்பா டான்ஸ் ஆடுமோ ! என்ற பயத்தில் என்ன வெல்லாம் செய்றீங்க .. யாரவது ஊழல எதிர்த்தால் உடனே அவங்கள எப்படியாவது ஊழல் வாதியாக சித்தரிக்க முயல்வது . அது உங்களால் முடியாது என்பது வேரு கதை .

காங்கிரஸ் அரசே ஒரு எச்சரிக்கை உங்களுக்கு . நீங்கள் போடும் ஒவ்வொரு முட்டு கட்டையும் மிக பெரிய எழுச்சியை தான் கொடுக்க போகின்றது . நாடு தெருவில் இறங்க இன்னும் பல பேர் தயங்குகின்றனர் . அவர்கள் தாயகத்தை நீங்கள் விரைவில் போக்கி அவர்களையும் நாடு தெருவில் இரங்கி உங்களை அடியோடு இல்லாமல் செய்ய போகின்றதா இல்லையா பாருங்கள் .

இன்று தொடங்கும் உன்ன விரதம் ஏதோ அன்னா ஹசாரே அவருக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கும் இடையில் நடக்கும் தெரு சண்டை அல்ல . நமது நாட்டை அடியோடு சுரண்ட துடிக்கும் காங்கிரஸ்சுக்கும் அதை எதிர் கொண்டு தடுக்க முயலும் இந்தியர்களின் முயற்சி உங்கள்ளல் முடியாததை ஒருவர் முன்னின்று நடத்துகின்றார் என்றால் அதற்கு நீங்கள் கை கோர்த்து வலு சேர்த்து . ஊழலிலே மலிந்து நாட்டை தவறான திசையில் கொண்டு செண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் சுக்கு அடிக்கும் எச்சரிக்கை ஒலியாகவும் . மக்களின் குரல் வலையை நெரிக்க துடிக்கும் கரங்களை ஒடிக்கும் இயக்கமாகவும் வீறு கொண்டு எழ அன்னா ஹசாரே அவர்கள் கரங்களோடு இணைந்து நாட்டை காப்பாற்ற முயல்வோம் துடித்து துள்ளல் போட்டு வாரீர் வாரீர் !!! .


அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு :
நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டதால், அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு டெல்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வற்புறுத்தி காந்தியவாதியும்,சமூக ஆர்வலருமான அண்ணா ஹசாரே நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்.

டெல்லியில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஹசாரேவின் இந்த போராட்டம் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியதால், இந்த போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் 3 நாட்கள் மட்டுமே அனுமதி என்பது உள்பட 22 நிபந்தனைகளை டெல்லி காவல்துறையினர் அன்னா ஹசாரே குழுவிற்கு விதித்த னர்.

5
ஆயிரம் பேர் மட்டுமே உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும்; 3 நாட்கள் மட்டும்தான் அனுமதி அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனைகளை ஹசாரே குழுவினர் ஏற்கவில்லை.

இந்த 6 நிபந்தனைகளை ஏற்காததால் டெல்லி காவல்துறையினர் உண்ணா விரத போராட்டத்துக்கு இன்று அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் தடையை மீறி அன்னா ஹசாரே குழுவினர் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஹசாரே குழுவினர் ஏற்கனவே டெல்லியில் குவிந்துள்ளனர்.

இதனிடையே இன்று டெல்லியில் சுதந்திர தினக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மன்மோகன் சிங்,ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் தீர்வாகாது என்றும், அதனால் ஊழல் ஒழிந்து விடாது என்றும் கூறினார்.

இதற்கு ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள கிரண்பேடி பலடி கொடுத்துள்ளார்.

"
பிரதமர் உணர்வற்றவர் என்று தாக்கியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகிறது.ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை கொண்டு வர இந்த அரசு தவறிவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வாய்ப்பை செய்ய தவறிவிட்டது. இனியும் இந்த அரசை நம்ப நாங்கள் தயாரில்லை.

இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.பிரதமரின் பேச்சு இறுதியான தீர்ப்பு போல் இருக்கிறது.அவரது லோக்பால் மசோதா மக்களுக்கு எதிரானது. பிரதமர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர். அரசின் லோக்பால் மசோதாவை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை" என்றார்.

கருத்துகள்

  1. இந்தியாவுக்கு விடிவு காலமே கிடையாது.

    பதிலளிநீக்கு
  2. கிரி @
    நன்றி நண்பா ! , அப்படி எல்லாம் சொல்லிட முடியாது மக்கள் தெருவுக்கு வரவில்லை அவ்வளவே ! எதிர்ப்பு கோபங்களும், இயலாமையும் மக்களை மனதில் வெறுப்பையும் உண்டாக்கி உள்ளது . தேர்தல் வரடும் என்ற அளவிலே தான் மக்கள் என்ன ஓட்டங்கள் போராட்ட குணங்கள் இருக்கு . அப்படி மீறி தெருவில் இரங்கி போராட துணிந்தால் என்ன நடகின்றது . அடிந்து விரட்டுகின்றனர். அல்லது சிறை என்ற அளவுக்கு அரசு அடக்கு முறையை கையாளுகின்றது . அடி வாங்கி போராட துணிந்தாலும் குடும்பம் வாழ்க்கை எதார்த்தம் அனைவரையும் தடுகின்றது . இன்றைய நிலை இதுவே ! . மன்மோகன் தெளிவாக சொல்லி விட்டார் நீங்கள் யாரும் போரட்ட தேவை இல்லை . நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று , சட்டம் இயற்று பவர்களே நாங்கள் தான் என் உண்ணா விரதம் என்று கேலி செய்கின்றார் விடுதலை நாள் உரையில் என்றால் காங்கிரஸ் அரசின் கர்வம் எந்த அளவிற்கு சென்றிருகின்றது பாருங்கள் ......... விடிவு வரும் விரைவில் , வரவேண்டும் . .....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக