மறு பிறவி எடுத்த சமச்சீர் கல்வி


ஒரு வழியாக சமச்சீர் பல பாடுபட்டு மிதிபட்டு வெற்றிகரமாக வென்றிருகின்றது.

மாற்று கருத்தில்லாமல் அரசியல் காரணத்தால் தான் இவ்வளவு இழுபறி நடைபெற்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது

ஜெயலலிதாவின் பிடிவாதம் அரசுக்கு நிறைய கெட்ட பெயரை வாங்கி கொடுத்தது . அதை மேலும் கெடுத்து கொள்ளாமல் ஜெயலலித்தா சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல் படுத்துவதாக அறிவித்துள்ளது கொஞ்சம் நிம்மதியை கொடுக்கின்றது .

இனியும் இதை போன்ற இக்கட்டான விசயங்களில் நிதானமாக யோசித்து நல்ல நடுநிலையாளர்களின் ஆலோசனை பெற்று தலை இடவேண்டும் . எவ்வளவு இழப்பு . எவ்வளவு நேர, பணம் விரையம் .

கலைஞ்சர் இதை தனக்கு கிடைத்த வெற்றியாக பாவித்து ,அவர்கள் கட்சிகாரகள்

அரசியல் பண்ணி கொண்டிருகின்றனர் . பாவம் அவர்களும் என்ன செய்வார்கள் . தினம் தினம் யார் யாரு உள்ள போவோமோ என்ற பீதியிலையே காலத்தை ஓட்டுகின்றனர் .

அரசு இதுவரை ஏற்பட்ட கால தாமதத்தை எப்படி ஈடு செய்ய போகின்றது என்று தெரியவில்லை . சிலர் சொல்வதை போல் கால நாட்களை நீட்டிப்பதால் அடுத்த கல்வி ஆண்டு வழக்கங்கள் பாதிப்படையும் . அதை விட சிலபஸ் சில குறைத்து மாணவர்களுக்கும் சுமை ஏற்றாமல் முடிந்த வரை இந்த ஆண்டு காலத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் .

இதை போலவே . தனியார் கல்வி கட்டண கொள்ளை தடுக்கவும் பொது நல வழக்குதான் போட வேண்டும் போல . அதை எந்த அரசும் கண்டு கொள்வதாக தெரிய வில்லை . அதேபோல் தனியார் பள்ளிகள் சில மத்திய பட திட்டத்திற்கு கட்டாய படுத்து பெற்றவர்களை ஏமாற்றி மாற்றுகின்றனர் . இதையும் கருத்தில் கொள்ள வேண்டும் . முக்கியமாக கல்வி தரத்தை மேன்படுத்தி . பள்ளிக்கூடங்களின் தரங்களை சீர் படுத்தி . ஆசிரியர்களையும் , பள்ளிக்கூடங்கள் நடக்கும் முறைகளையும் முறையாக கண்காணித்து . ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் அதிகமாக மேன்பட்ட தரத்தில் கட்டிட வசதிகளை ஏற்ப்படுத்தி , அரசு கல்வியில் தனது கவனத்தை முறையாக செலுத்தினால் முதல்வரை மக்கள் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் .


தமிழ்நாட்டில் உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், பி.எஸ். செளஹான் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் கொண்ட பெஞ்ச் செவ்வாய்க்கிழமை இதுதொடர்பான தீர்ப்பை வழங்கியது.

தமிழக அரசு இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

25 காரணங்கள்

மூன்று நீதிபதிகளின் சார்பில், தீர்ப்பை வாசித்த நீதிபதி பி.எஸ். செளஹான், உயர்நீதிமன்ற உத்தரவு சரியானதுதான் என்பதை விளக்கி, 25 காரணங்களை தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிமன்றம், இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

"மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது அடிப்படைக் கல்வி. இன்று அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அதில் தலையிடுவது தவறு"

இந்திய உச்சநீதிமன்றம்

நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 25 காரணங்களில், எந்தச் சட்டத்தையும், அதன் விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல், வெறும் ஆட்சி மாற்றம் காரணமாக மாற்றக் கூடாது என்றும்,

அரசியல் கட்சிகள் விருப்பு, வெறுப்புடன் செயல்படக்கூடாது என்றும் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது அடிப்படைக் கல்வி. இன்று அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அதில் தலையிடுவது தவறு என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேல்முறையீடுகள்

முந்தை திமுக அரசால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றதாக இருப்பதால், அதை இந்த ஆண்டு அமல்படுத்துவதை ஒத்திவைக்கும் வகையில், புதிதாகப் பொறுப்பேற்ற அதிமுக அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது.

அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக, தனியார் பள்ளிகளும் முறையீடு செய்தன. அதற்கு எதிராக, மாணவர் மற்றும் பெற்றோர் சார்பில் பல்வேறு கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அரசியல் போட்டி

சமச்சீர் கல்வித் திட்டம் அவசர கோலத்தில் கொண்டுவரப்பட்டிருப்பதால், அதில் பல குளறுபடிகள் உள்ளதாகவும், பாடங்களில் தரமில்லை என்றும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத்தான் அந்தச் சட்டமே கொண்டுவரப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த அரசு சமச்சீர் கல்விக்கு எதிரானதல்ல என்றும், அதில் உள்ள தவறுகளைக் களைந்து அமல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், சமச்சீர் கல்வித் திட்டத்தில், 9 கோடி பாடப்புத்தகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, அரசுக் கிடங்குகளில் கிடப்பதாகவும், முந்தைய அரசால் கொண்டுவரப்படது என்ற அரசியல் காரணத்துக்காகவே அரசு அந்தத் திட்டத்தை எதிர்ப்பதாகவும் மாணவர் மற்றும் பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாட்டில், மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிகுலேஷன் உள்பட நான்கு வகையான கல்வித் திட்டங்கள் உள்ளன. அவரை அனைத்தையும் ஒரே பாடத்திட்டமாக்கி, அதன் தரத்தை உயர்த்தி, சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டதாக, முந்தைய அரசு அறிவித்திருந்தது.

ஜெயலலிதா அறிவி்ப்பு

<span title=

தீர்ப்பை ஏற்கிறோம்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, இந்தக் கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு, இடதுசாரிக் கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளன. பல இடங்களில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்ததாக செய்திகள் வந்துள்ளன.

கருத்துகள்

  1. ஐயா பெரியவர்களே, முதியவர்களே, அறிவாளிகளே, எல்லோருக்கும் என் முதற்கண் வணக்கம்.
    சபாஷ், நான் சின்னப்பையன். உங்களுடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.

    நீங்கள் ‘சமச்சீர் கல்வி’ வேண்டுமா, வேண்டாமா என்று நாடளாவில் நாட்கணக்கில் பட்டிமன்றம் நடத்தி நீதிமன்றம் வரை சென்று வந்ததைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ‘சமச்சீர்’ என்ற சொல்லுக்கு ஒருவனுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்று கேவலப்படுத்தத்தான் தோன்றுகிறது. மன்னிக்கவும். போட்டி என்று ஆன பின், வயது வித்தியாசமில்லாமல் தான் பேசவேண்டிருக்கிறது.

    நான் இங்கு சொல்ல போகும் கருத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ‘அறிவாளிகள்’ வயிற்றிலும் புளியைக் கரைக்கலாம். ‘சமசீர்கல்விக்கும்’ கருணாநிதியின் ‘சமச்சீர் கல்விக்கும்’ ஏகப்பட்ட வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் பல காலங்களுக்கு முன் நான் எழுதியதை திருப்பி எழுதும் நிலைக்கு உங்களின் அறிவிலித்தனமான பேச்சுக்கள் தள்ளிவிட்டது.
    ‘சமச்சீர் கல்வி’ என்பதின் உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் காணலாம்.
    1. http://www.kelvi.tk
    2. http://arivuu.files.wordpress.com/2011/08/sivavidya.pdf
    மேலுள்ளவைகளைப் படித்து விட்டு வாரும். சமச்சீர் கல்வி பற்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார், முதலில் ‘சமச்சீர் கல்வி’ என்றால் என்ன என்பதை அறியும். கல்வித்துறையில் பணிபுரியும் முட்டாள்களே மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். கருத்துக்களைத் திரிக்காதீர்கள். திரித்தால், என்போன்றவர்களிடம் கேவலப்பபட்டுப் போவீர்கள். செய்யுமுன் சிந்தித்து செயல்படுங்கள். கால் செருப்பு தூக்கப்போனால் பிறகு செருப்படி வாங்கவேண்டியதுதான்.
    ———————————————————

    அறிவை வ‌ள‌ர்த்துக் கொள். இது ஒவ்வொருவ‌ரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கூறும் அறிவுரை. உங்க‌ள் குழந்தைக‌ளை எங்க‌ள் ப‌ள்ளிக்கு, க‌ல்லூரிக்கு அனுப்புங்க‌ள். நாங்க‌ள் அவ‌ர்க‌ளின் அறிவை வ‌ள‌ர்த்து விடுகிறோம். இது திருட்டுக் க‌ய‌வாளி ஆசிரிய‌ கொள்ளைக்கூட்ட‌ங்க‌ளின் பொய்யுரை. அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ஒருவ‌ன் ப‌ல‌ ஆண்டுக‌ள் ப‌ள்ளி சென்று, புத்த‌க‌ங்க‌ள் ப‌ல ப‌டித்து, பாட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌யின்று, தேர்வுக‌ள் ப‌ல எழுதி, ப‌ட்ட‌ங்க‌ள் ப‌ல பெற‌வேண்டுமா? தேவையில்லை. உன்னிட‌ம் சிந்திக்கும் திற‌னிருக்கிறதா? அது போதும். நான் காட்டும் வ‌ழியில் சிந்தித்துப் பார். வ‌ள‌ரும் உன் அறிவு.

    கேள்வி: ஒன்றைப்ப‌ற்றி என் அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?

    ப‌தில்: ஒன்றைப்ப‌ற்றி அறிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌வைக‌ளை அறியும்போது அதைப்ப‌ற்றிய‌ உன் அறிவு வ‌ள‌ரும்.
    ஒன்றைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    .
    .
    .
    விதிப்ப‌டி பொருளா? பொருட்ப‌டி விதியா? எதுவும் விதிப்ப‌டிதான் என்கிறது அறிவிய‌ல். விதிப்ப‌டிதான் விமான‌ங்க‌ள் உருவாக்கப்ப‌டுகின்ற‌ன‌. விதிப்ப‌டிதான் ஏவுக‌ணைக‌ளும், ராக்கெட்டுக‌ளும் உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன. விதிப்ப‌டிதான் ர‌யில் என்ஜினும், உன் இத‌ய‌மும் இய‌ங்குகிற‌து. நீ உண்ணுவ‌து செரிப்ப‌தும் விதிப்ப‌டிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரிய‌னைச் சுற்றுவ‌தும் விதிப்ப‌டிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்ப‌டிதான் இய‌ங்குகிற‌து. விதிப்ப‌டிதான் எதுவும் தோன்றி ம‌றைகிற‌து. விதிப்ப‌டிதான் உன் பிற‌ப்பும், இற‌ப்பும். விதிப்ப‌டிதான் திட்ட‌ங்க‌ள் உருவாக்க‌ப்படுகின்ற‌ன‌. விதிய‌றியாத‌வ‌ன் திட்ட‌மிட்டு ஏவுக‌ணைக‌ளையும், விமானங்க‌ளையும், ராக்கெட்டுக‌ளையும், ர‌யில் என்ஜின்க‌ளையும், க‌ணிணிக‌ளையும் உருவாக்குவ‌தில்லை.

    பொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியாகாது. விதி நேரத்திற்கு நேரம் மாறுபடக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் மாறுபடுவதும் விதியல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்றும் பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.

    பதிலளிநீக்கு
  2. தன்னை முழு அறிவு உள்ளவராக கட்டி கொள்வதில் தவறில்லை , அதற்காக நீங்கள் மட்டும் தான் அறிவாளி என்று நினைப்பது தான் தவறு . கர்வம் தலைகேறினால் இப்படித்தான் . என்ன செய்வது ............... விதியே என் செய்வாய் ............ இவர்களை ..........
    பொது பட திட்டம் தான் வேண்டும் என்று விரும்புகின்றோம் ........ உங்களை போல வீண் பிடிவாதம் பிடித்து குழந்தைகளின் மனதிலே விதைக்கும் பலதரப்பட்ட கல்வி முறையை தான் எதிர்கின்றோம் முட்டாள்களே ! தரமற்ற படங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க வில்லை . தரமான பாடத்திட்டத்தை சமமாக அனைவருக்கும் கிடைக்கவே விரும்புகின்றோம் ........ உங்களை போல் வீண் பிடிவாதம் நபர்கள் எல்லாம் பணம் பண்ணும் கல்வி வியாபாரிகளே ! .........

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக