திருந்தாத ஜெயாவுக்கு வாக்களித்ததை நினைத்து.....

ஜெயாவின் பிடிவாத உச்சகட்டம் :
யாரு என்ன சொன்னாலும் என்னகொன்ன தான் நினச்சத சாதிக்கணும் என்ற அடாவடி தனமான போக்கு இன்னும் ஜெயாவிடம் குறைய வில்லை .
அப்படி என்ன உங்களுக்கு திடீர்னு குழந்தைங்க கல்வி மேல அவ்வளவு கரிசனம் என்று யாரவது முட்டாள் தனமா கேள்வி எல்லாம் கேட்கபடாது .
இதுல ஒரு படி மேல போய் விஜய காந்த் சொல்லி இருக்காரு பாருங்க . இவரு என்னமோ படிச்சி கிழிச்சா மாதிரி . கழுதை தான் இப்ப கிடச்சி இருக்காம் . குதிரை கிடைக்கும் வரை கழுதைய மேய்க்கலாம் என்று அறிவுரை எல்லாம் சொல்லி இருக்காரு இந்த ஆண்டாள் அழகர் கல்வி வியாபாரி . யாரை கழுதை என்று சொல்லுறாரு படித்து பட்டம் வாங்கி ஆராய்ந்து சமச்சீர் கல்வியை கொடுத்த கல்வியாளர்களையா ? . அதை சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டாமா ?
உங்களுக்கு என்ன தகுதி இருக்கு கேப்டன் என்ற உடன், என்ன என்று நினைச்சீங்க கேப்டன் . போய் பொழப்ப பாருங்க . கல்விய கூறு பூட்டு வித்து கிட்டு இருக்காங்க அதை பற்றி எல்லாம் சொல்ல துப்பு இல்லை, இதை பற்றி சொல்ல வந்துட்டாரு . அட இவராவது பரவாஇல்லை சமச்சீர் கல்விய அமல் படுத்தலாமுன்னு சொல்றாரு . ஆனால் ஜெயா நான் முடிவெடுத்த பிறகு எவன் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று குழந்தை தனமா அடம் பிடிக்கும் போக்கு இன்னும் நீ எல்லாம் திருந்தலையா என்று தான் கேட்க தோனுது . பெற்றோர்களின் வைதெரிச்ச்சலை மொத்தமாக வாங்கி கட்டி கொண்டிருக்கும் ஜெயா இதன் பலனை என்று விரைவில் அறிவார் .

அறிவு ஜீவிகள் என்று சொல்லி கொள்ளும் மெட்ரிக் பள்ளிகூடங்கள் எல்லாம் உண்மையில் ஒரு மனபாட கூடங்கள் . பாடங்களை அதிகமாக கொடுத்து விட்டால் அது சரியான கல்வி முறையா ? , எதையும் புரிந்து படிக்கவேண்டும் யோசிக்கும் திறன் வேண்டும் . அப்பா எப்படா இந்த வேலைய முடிப்போம் என்று செய்யும் வேலைக்கும் , சரியான கால நேரத்தோடு செய்யும் வேலைக்கும் வித்தியாசம் இருக்கு . இன்றைய மெட்ரிக் பள்ளி கல்வி முறை இப்படி தான் இருக்கு . நிறைய புத்தகத்தை மட்டும் கொடுத்துட்டா போதாது , அதை புரிந்து தான் படிகின்றனரா என்று ஆராயவேண்டும் . அதற்காக கல்வின் தரத்தை குறைக்க சொல்லவில்லை . தரத்தை உயர்த்தி எளிமையாக புரிந்து படிக்கு சூழலை உருவாக்க வேண்டும் . ஜெயா செய்யும் கல்வி அட்டூழியம் தாங்களா சத்தியமா அவங்களுக்கு குழந்தைகள் கல்வியில் அக்கறை இல்லை மாறாக தான் என்ற அகங்காரம் மட்டுமே தெரிகின்றது . அதான் கல்வி தரத்தை உயர்த்தி சமமாக சமசீர் கல்வி அமல் படுத்துங்கள் என்று சொன்ன பிறகும் . வீண் பிடிவாதம் பிடித்துகொண்டு குழந்தைகளின் கல்வியோடு விளையாடி கொண்டிருகின்றனர் . இதில் கல்வி வியாபாரிகள் வேறு வரிந்து கட்டி கொண்டு என்னமோ இவர்களுக்கு குழந்தைகள் கல்வி மீது என்னமோ அக்கறை பொத்து கொண்டு வந்ததை போல் சீன் போடுராங்கோ . கல்வி கட்டணத்தை குறையுங்கன்ன்னு சொன்ன அதை செய்ய மாட்டாங்களாம் வந்துட்டாங்க . திருந்தாத ஜெயாவுக்கு வாக்களித்ததை நினைத்து கொஞ்சம் வருத்தம் தான் .இருந்தாலும் கலைஞ்சர் அப்படின்னு நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம் குறைவாதான் இருக்கு . நல்ல தலைவர்கள் கிடைக்காதது நாம் செய்த பாவமோ தெரியவில்லை . சட்டை பிடித்து கேள்வி கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது என் கருத்து .

கருத்துகள்

  1. ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்களே பாஸ்..கலக்கல்.

    பதிலளிநீக்கு
  2. செங்கோவி @
    வாங்க நண்பரே ! நன்றி , எதால அடிச்சாலும் ஒன்னும் நடக்காது போல

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக