எல்லாத்தையும் கண்டு பிடிச்சா, அட நாம தான் வல்லரசு.

இன்று நமது நாட்டில் நடக்கும் அரசியல் சீர்ழழிவு , இத விட சுருக்கமா சொல்வது கடினமே ! எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் ஆனால் அதை தொகுத்து பார்த்தால் தெரியும் நடக்கும் அநியாயம் , அக்கிரமம் . அரசு அதிகாரிகளும் , அரசியல் வாதிகளும் ஐந்து நச்சத்திர ஹோட்டல்ல ஏ.சி . ரூம்ல இளம் பொண்ணுகளோட ஜல்சா (விபசாரம்) பண்ணுவாங்களாம். அதே வைத்து பிழைப்புக்கு செய்தால் அழகிகள் கைது துன்னு ஹெட் லைன் நியூ போடுவாங்களாம் . என்ன கொடும சார் இது.

நான் எதற்கும் வக்காலத்து வாங்க வில்லை நீதி சட்டம் பணத்துக்கு ஒரு விதமாகவும் , ஏழ்மைக்கு ஒரு விதமாகவுமா எழுதி இருக்காங்க ....... சமன்னு எட்டுல தான் இருக்கு . நாட்டுல நடக்கு இன்று வெளிச்சத்துக்கு வரும் ஒரு சில விஷயங்களுக்கே நமக்கு தலைய சுத்துதே ! . எல்லாத்தையும் கண்டு பிடிச்சா, அட நாம தான் வல்லரசு .............

அந்த காலத்தில் நமது முன்னோர்கள் நமது நாட்டை சேர்க்க பூமியாக தான் வைத்து விட்டு போய் இருக்காங்க . இடையில வந்தா சில அரசர்கள் கையாகலாத தனத்தால முகலாயர் , ஆங்கிலேயார் என பலரும் கொள்ளை அடித்தும் இந்த பாரத நாடு நல்லாத்தான் இருக்கு . கோயில்களில் , அரண்மனைகளில் எவ்வளவு பொக்கிசங்கள் அடைந்து கிடைக்கிறதே தெரிய வில்லை . எல்லாம் எதற்கும் பயன் படாமல் எதற்காக வீணடிக்க படுகின்றன என்று விளங்க வில்லை . இதையும் கருப்பு பணம் அப்படின்னு சொல்லலான்னு தோனுது .......... ( யாருக்கு பயன்படாம இருந்தா என்னத சொல்றது )


ஒரு நண்பர் அனுப்பிய மெயில் இது :

அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!
ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

கருத்துகள்