பள்ளி உண்டு பாடம் இல்லை .....

அட நம்ம சன் நியூஸ் சானலில் பிளாஷ் நியூஸ் இது தாங்க .............
என்னடான்னு பார்த்தா , உச்ச நீதிமன்ற தீர்ப்பதான் இப்படி போட்டிருக்காங்க .....
ஏற்கனவே எரிசல்ல இருக்கும் பெற்றோர்கள் . நியூஸ் பார்த்து மேலும் கடுப்பாய் இருபாங்க ....

செய்தி இந்தாங்க :

நீ‌திப‌திக‌ள் ‌பிற‌ப்‌பி‌‌த்உ‌த்தர‌வி‌ல், 1ஆ‌மவகு‌ப்பு, 6ஆ‌மவகு‌ப்புகளு‌க்கசம‌ச்‌சீ‌ரக‌‌‌ல்‌வியதொடவே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

ம‌ற்வகு‌ப்புகளு‌க்கசம‌ச்‌சீ‌ரக‌ல்‌வி தேவையஎ‌ன்பதப‌ற்‌றி ஆராய ‌நிபுண‌ரகுழஅமை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌நிபுண‌ரகுழு 3 வாரத‌்‌தி‌லஅ‌றி‌க்கையசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ளஉ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

நிபுண‌ரகுழஅ‌றி‌க்கையசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தினமு‌ம் ‌விசா‌ரி‌க்வே‌ண்டு‌‌மஎ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ளஉ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

த‌மிழக தலைமை‌ச் செயல‌ர் தலைமை‌‌யி‌ல் ‌நிபுண‌ர் குழு அமை‌‌க்க‌ப்ப‌ட வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், இ‌ந்த குழு‌வி‌ல் தே‌சிய க‌ல்‌வி ஆரா‌ய்‌ச்‌‌சி கவு‌ன்‌சி‌ல் சா‌ர்‌பி‌ல் 2 அ‌திகா‌ரிகளு‌‌ம், ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை சா‌ர்‌பி‌ல் 2 அ‌திகா‌ரிகளு‌ம், க‌ல்‌வி‌த்துறை செயலரு‌ம், ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை செயலரு‌ம் இட‌ம் பெற வே‌ண்‌டு‌ம் எ‌ன்று‌ உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

இன்னும் ஒரு மாசத்துக்கு எந்த கல்வி முறை அமல் படுத்த போறங்கன்னு மீண்டும் பெற்றோர்கள் மண்ட காஞ்சிடும் ......... அதுக்கு அப்புறம் இவங்க தீர்ப்பு சொல்லி பின்னாடி புக் எல்லாம் பிரிண்ட் பண்ணி பள்ளிகள் பாடம் இந்த வருடம் படிச்சா மாதிரிதான் . ரெண்டு வருசமா தமிழ் நாட்டுல கல்வில நடக்குற கூத்து தாங்கலடா சாமி .

ஒரு பக்கம் பள்ளி கட்டணம் ஒழுங்கு படுத்துர்ரூமுன்னுபடுத்துறாங்க பாருங்க சாமி , சாமியே ஆனாலும் இரத்த கண்ணீர் வடிக்கும் . காரணம் இந்த அரசியல் விளையாட்டில் பிள்ளைகளும் , பெற்றோர்களும் படும் மன அழுத்தம், உளைச்சல் அதிகம் .

ஆட்சியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு கூர்ந்து உங்களால் கொள்கைய அமுல் படுத்த முடிஞ்ச, உங்களுக்கு நெஞ்சில மஞ்ச சோறு இருந்த , தைரியம் இருந்தா அதை அறிவிப்பு செய்யுங்க. இல்ல பேசாம இருந்துடுங்க எதுக்கு உங்க அரசியல விளையாட்டை பிள்ளைங்க கல்வியில புகுத்தி விளையாடுறீங்க .........

நான் சமச் சீர் கல்வியை ஆதரிக்கின்றேன் அதே நேரத்தில் தரமான உலக தரத்தோடு போட்டி போடும் கல்வியை அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் . அதுவே சமசீர் கல்வி ..... அதற்காக உடனே எடுத்தோம் கவுத்தோம் என்று அமுல் படுத்துவதும் தவறு ஒரே அடியாக தரம் உயர்த்துகின்றோம் என்று பிள்ளைகளை முழி பிதுங்க வைக்க கூடாது என்பது என் வாதம் . எந்த கல்வியாக இருந்தாலும் அது புரிந்து கேள்விகள் தொடுக்கும் அறிவை வளர்க்கும் கல்வியாக இருக்க வேண்டும் . வெறுமனே மனப்பாடம் செய்யும் தரத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் . ஒரு செயல் முறை கல்வி கொடுத்து பாருங்கள் அதன் தரம் மாணவனின் அறிவு திறன் எப்படி இருக்கும் என்று .

எந்த கல்வியே இந்த கல்வி ஆண்டை உடனடியாக தொடங்குங்கள் . நன்றாக ஆராய்ந்து நல்ல பாட திட்டத்தை அடுத்த ஆண்டாவது அமுல் படுத்துங்கள் . அல்லது இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை சில பாடங்களை நீக்கி விட்டு அமுல்படுத்துங்கள் அடுத்த ஆண்டு திருத்திய பாட திட்டத்தை அமுல்படுத்துங்கள் .

எனக்கு ஒரு அசைக்க முடியாத சந்தேகம் முதல்வர் ஜெயலலித்தாவிடம் இருக்கின்றது . அது அவருக்கு சமச்சீர் கல்வி அமுல்படுத்துவதில் ஆர்வம் இல்லை, அதை எப்படியாவது நீர்த்து போக செய்ய அவர் செய்யும் வேலைகள் அதிகம் . ஆகவே அவருடைய ஆட்சியில் சமச்சீர் கல்வியும் வராது .
பள்ளிகளின் கட்டண கொள்ளையையும் தடுக்காது இந்த அரசு . இந்த விசயமாக ஜெயலலித்தாவிடம் ஒரு மர்ம முடிச்சே இருக்கு . காரணம் அவர் முன்பு போல யாரையும் மதிக்காமல் தோணுவதைமுன்பு உடனடியாக அதே நேரத்தில் தீவிரமாக அமுல் படுத்துவார் அந்த அசத்திய தைரியம் இருந்தது .

மக்கள் அவருக்கு கொடுத்த பாடம் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார் .
தான் நினைப்பதை அமுல்படுத்த முடியாமல் கொஞ்சம் அவகாசம் எடுத்து கொள்ளுகின்றார். காரணம் மக்களை இப்போது கொஞ்சம் மதிக்க கற்றுக் கொண்டது போல் காட்டி கொள்கின்றார் . அவர் என்றும் மாற மாட்டார் . என்பதற்கு இந்த கல்வி முறையே சான்று . அதே போல் கல்வி கட்டணம் அமுல் படுத்துவதிலும் அவருக்கு அக்கறை இல்லை .

அது அவருடைய பேட்டிகளின் வாயலாகவே தெரியும் . எதற்கும் நேரடியான பதில் இல்லை . கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கும் பள்ளிகளின் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை என்றும் , தனியார் பள்ளிகள் கேட்டு கொண்டால் கட்டண உயர்வு பற்றி பரிசீலிப்பதாகவும் சொல்லுகின்றார் ......
. என்ன ஒரு முரண் பாடு

இரண்டு முறை குழு அமைத்து கல்வி கட்டணம் நிர்ணையத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதை கொஞ்சமும் சட்டை செய்ய வில்லை . தான்தோன்றிய தனமாக சர்வாதிகாரிகளை போல் நடந்து கட்டணங்களை வசூலிக்கின்றன .
அரசு சரியான படி நடவடிக்கை இல்லாததே அவர்களின் இந்த போக்கிற்கு முழு காரணம் .

இப்போதும் சொல்கின்றனர் எங்களுக்கு கட்டண நிர்ணயம் போத வில்லை என்று .ஆனாலும் பள்ளிகளிலும் ஏற்கனவே கட்டண கொள்ளை நடந்தாகி விட்டது . பெற்றோர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்களாம் . எப்படி தட்டி கேட்பவர்களையும் மறியல் செய்பவர்களையும் கைது செய்து உள்ள போடுவீங்க . அதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்துக்கு வெண்சாமரம் வீசுவீங்க......... நல்ல இருக்கு உங்க நாயம் ......

தமிழ் நாட்டோட தலைவிதி அவ்வளவே என்ன பண்றது . ஐந்தாண்டு சகித்து போக வேண்டி உள்ளது . அப்புறம் அடுத்த கொள்ளைகாரனுக்கு நாட்ட டெண்டர் விட வேண்டி இருக்கு .

தமிழ் நாட்டு மக்களின் மனம் அறிந்து ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் என்று தான் வருவார்களோ .........................

அடுத்து காங்கிரஸ் எதிர்த்து தான் நாம அ.தி.மு.க.விற்கு ஓட்டு போட்டோம் . டெல்லி போய் அம்மா, காங்கிரஸ் கூட கூட்டணி அவங்க கேட்டா வைப்பாங்களாம் . ஊழல் முதலாளியே காங்கிரஸ் தான் அனைத்து துறைகளிலும் ஊழல் . தமிழனுக்கு எதிரானது தான் இன்றைய சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி . நீங்கள் அவர்களோடு கூட்டணி என்று நினைத்தாலும் கூட அது தமிழ் நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் .

கருத்துகள்