லோக்பால் மசோதாவுக்காக குண்டுகளை எதிர்கொள்ளத் தயார்: அண்ணா ஹசாரே


இனிவரும் காலங்களில் லோக்பால் சட்ட மசோதா தயாரிப்பு பணியில் சமூக ஆர்வலர்கள் இடம்பெற மாட்டார்கள் என மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார்.

ஆமாம் சும்மா எங்கள குடைஞ்சா இப்பவே இப்படி, உங்களை வளர விட்ட எங்களுக்கு வியாபாரம் (அரசியல் ) நடக்காது . அரசியல் என்றால் உழல் இருக்கத்தான் செய்யும் அதை எல்லாம் கேட்க நீங்க யாரு அப்படீன்னு அடிச்சி விட்டிருக்காங்க . அதாவது பயமுறுத்தி இருக்காங்க பாவம் அவங்களுக்கு தெரியல மக்களை பற்றி எங்களால தினமும் அறிக்கை விட முடியாது , ஆனால் ஒன்று முடியும் உங்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்ப என்பதை மறந்து, தான் தோன்றி தனமாக நடந்து கொள்ளும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு . பொம்மைக்கு (மன்மோகன் சிங் ) அடுத்து இளவரசர் ரெடி ஆயிட்டாராம் பட்டாபிசேகம் சூட்ட என்ன கொடுமை .

ஒரு உறுதியான அறிக்கையை அன்னா ஹசாரே வெளிட்டிருன்கின்றார் . அது உங்கள் மிரட்டல் எல்லாம் எங்க கிட்ட வேணாம் எதற்கும் நாங்கள் தயார் என்று . உண்ணா விரதம் இருந்தால் அதை தக்க முறையில் எதிர்க்கொள்வார்கலாம். எப்படி என்று தான் சமீபத்துல பார்த்தோமே !. தப்பா கணக்கு போட்டுட்டீங்க தம்பிங்களா !. ராம்தேவ் மீது மக்களுக்கு நல்ல விதமான அபிராயம் இல்லை .
காரணம் ஆடம்பரம். ஆனால் கொள்கை ஒன்று தான் ஊழல் எதிர்ப்பு . அவர் மீது இதுவரை இல்லாத வருமான வரி சோதணை, பல வேதணை , இவ்வளவு நாளா என்ன --------- (கழட்டிக்கிட்டு ) இருந்தீங்க . இல்ல என்னத்த கிழுச்சிகிட்டு இருந்தீங்க வெட்கமா இல்லை உங்களுக்கு . எல்லாவற்றையும் மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டு தான் இருகின்றனர் . உங்கள் ஆராஜகம் கையாலாகாத பிரதமர் . ஊழல் போருச்சாளிகளின் கூடாரம் காங்கிரஸ் . திமுகாவை பலமாக சாடும் ஜெயலலித்தா அவர்கள் காங்கிரஸ்சை எதிர்க்காதது வேடிக்கையே !.

மற்ற தலைவர்கள் போல் அல்லாமல் அன்னா ஹசாரே மீது மக்களுக்கு இரண்டு பட்ட கருத்து இல்லை என்பது நிதர்சனம் . இது அன்னா ஹசாரே அவர்களின் பாலம் .

புணே, ஜூன் 23: லோக்பால் மசோதாவுக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சமூக சேவகர் அண்ணா ஹசாரே கூறினார். மகாராஷ்டிர மாநிலம், புணேவில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய அவர், மரணத்துக்கு நான் பயப்பட மாட்டேன் என்றும் மத்திய அரசை எச்சரித்தார். வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி ஆகஸ்ட் 16 முதல் தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டால் பாபா ராம்தேவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் நேரிடும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து அண்ணா ஹசாரேவிடம் கேட்டபோது, மத்திய அரசைக் கண்டித்து கடுமையாகப் பதிலளித்தார். "எங்களது போராட்டத்தை ஒடுக்க தடியடி மட்டுமல்ல, துப்பாக்கிசூடும் நடத்துவார்கள் என்பது தெரியும். துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொள்ளத் நான் தயாராக இருக்கிறேன். மகாத்மா காந்தி, காமராஜர் ஆகியோர் தலைவர்களாக இருந்த காங்கிரஸ் கட்சியில் அவர்கள் போன்ற தலைவர்கள் இப்போது இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. எங்களது போராட்டம் அண்ணா ஹசாரே என்ற தனிமனிதனின் போராட்டம் அல்ல. நாட்டு மக்களின் போராட்டம். அனைத்து மாநில மக்களும் எங்களது போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஆட்சியாளர்களுக்கு அவர்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்' என்று அவர் கூறினார்.
திக்விஜய் சிங் மறுப்பு:
இந்த விவகாரம் குறித்து போபாலில் இருந்த திக்விஜய் சிங்கிடம் கேட்டபோது, நாளிதழ் செய்திகளை மறுத்தார். "அண்ணா ஹசாரே அல்லது பாபா ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. போராட்டங்களின்போது அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் காங்கிரஸýக்கு தொடர்பில்லை. ஒவ்வொரு போராட்டங்களின்போதும், அவற்றின் போக்கைக் கண்காணித்து உள்ளூர் நிர்வாகங்கள்தான் நடவடிக்கை எடுக்கின்றன. இதைத்தான் நான் செய்தியாளர்களிடம் கூறினேன். ஆனால், நாளிதழ்களில் வேறுவிதமாக செய்திகள் வெளிவந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. வயதில் மூத்தவரான அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பது அவரது உடல்நலத்துக்கு உகந்தது அல்ல. அவருக்குப் பதிலாக அவர்கள் குழுவில் உள்ள அரவிந்த் கேஜரிவால், பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம்' என்று திக்விஜய் சிங் தெரிவித்தார்.
ஹசாரே குழு அறிக்கை:
லோக்பால் மசோதா விவகாரம் குறித்து அண்ணா ஹசாரே குழு சார்பில் தில்லியில் வியாழக்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அரசு வரையறுத்துள்ள லோக்பால் மசோதா ஊழல்வாதிகளை தண்டிக்கும்விதமாக இல்லை, மாறாக ஊழலுக்கு எதிராக புகார் அளிக்கும் மனுதாரர்களை தண்டிக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசின் 40 லட்சம் ஊழியர்களையும், மாநில அரசுகளின் 80 லட்சம் ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் சேர்க்க முடியாது. இணைச் செயலர் அந்தஸ்துக்கு மேற்பட்ட 65,000 அதிகாரிகளை மட்டுமே லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர முடியும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அப்படியென்றால், கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் ஊழல்களை எப்படித் தடுக்க முடியும். நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. அந்த அமைப்புகளில் சிறியவை, பெரியவை என்று வித்தியாசம் பார்ப்பது இல்லை. துர்கை பூஜை விழாவுக்கு நிதி திரட்டும் அமைப்புகளை கூட மத்திய அரசு விடுவதில்லை. அரசு ஊழியர்கள் விவகாரத்தில் மட்டும் எல்லோரையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று கூறுவதை ஏற்கமுடியாது. எந்தவித விசாரணையும் இன்றி பொதுமக்கள் மீது அரசு ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். அப்போது, அரசு சார்பில் வழக்கறிஞரும் நியமிக்கப்படுகிறார். பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் பொதுமக்கள் மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக 6 மாதங்கள் மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம் என்று அண்ணா ஹசாரே குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள்