சமச்சீர் பாட‌ப்பு‌த்தக‌ங்க‌ளி‌ன் ‌‌வி‌நியோக‌ம் த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.


சம‌ச்‌‌சீ‌ர் க‌ல்‌வி பாட‌‌‌த்‌தி‌ட்ட த‌மி‌ழ் பு‌த்தக‌ங்க‌ளி‌ல் சில ப‌க்க‌ங்களை ‌‌நீ‌க்க த‌‌‌மிழக அரசு முடிவு செ‌ய்து‌ள்ளது. இதனா‌ல் பாட‌ப்பு‌த்தக‌ங்க‌ளி‌ன் ‌‌வி‌நியோக‌ம் த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

திமுக அரசு கடந்த ஆண்டு 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. இணையதளங்களிலும் புத்தகங்கள் வெளியாகி உள்ளன.

6 முத‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு வரை‌யிலான த‌மி‌ழ் பாடநூ‌ல் பு‌த்த‌க‌ங்க‌ளி‌ல் இட‌‌ம் பெ‌ற்று‌ள்ள செ‌ம்மொ‌ழி வா‌ழ்‌த்து‌ப்பாட‌ல் உ‌ள்‌‌ளி‌ட்ட ‌சில பாட‌ங்களை ‌நீ‌க்குவத‌ற்கு ப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறை முடிவு செ‌ய்து‌ள்ளது.

கு‌றி‌ப்‌பி‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ள் ‌( தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் செம்மொழி மாநாடு மற்றும் முதல் அமைச்சராக இருந்த கலைஞரின் வாழ்க்கை வரலாறு ) நீ‌க்க‌ப்ப‌ட்ட‌ ‌‌பி‌ன்ன‌ர் பு‌த்தக‌ம் ‌‌வி‌நியோக‌ம் தொட‌ங்க உ‌ள்ளது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ப‌ள்‌ளி க‌ல்‌வி‌‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌சி.‌வி.ச‌ண்முக‌ம், செ‌ன்னை‌‌யி‌ல் பாடநூ‌ல் கழக அலுவலக‌த்‌தி‌ற்கு வ‌ந்த அ‌திகா‌ரிக‌ளிட‌ம் ஆலோசனை நட‌த்‌தின‌ா‌ர்.

பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ப‌ள்‌ளி‌க் கூட‌ம் ‌‌திற‌க்க‌ப்படுவத‌ற்கு மு‌ன் சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி பாட‌த்‌தி‌ட்ட‌ பு‌த்தக‌ங்க‌ள் ‌‌வி‌நியோ‌கி‌க்க‌ப்ப‌ட்டு ‌விடு‌ம் எ‌ன்றா‌ர்.

கருத்துகள்