இணைய தளங்களுக்கு ஒரு ஆபத்து .......


கருத்து கட்டு பாடு என்பது கண்டிப்பாக துதி பாடாக தான் இருக்கும் இனி , பத்திரிகைகளும் இனி ஆவர்களை எதிர்க்கும் அல்லது விமர்சிக்கும் கருத்துக்களை அகற்றி விடலாம் . அரசை விமர்சிக்க முடியாது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தான் இது சாதகமாக அமையும் . அருவருக்க தக்க வாசகங்கள் ஒரு சிலர் மட்டுமே பயன் படுத்துகின்றனர் . அதை தடுக்குறோம் என்ற பெயரில் கருத்து சுதந்திரத்தை நெரிக்க முயல்கின்றனரோ என்ற ஐயம் தோன்றுகின்றது .

அரசை எதிர்த்து எழுதினால் எதாவது சப்பகட்டு ( உப்புக்கு பெறாத) காரணம் சொல்லி இனி தடுக்கலாம் , என்னே மக்களாட்சி . அரசுக்கு எதிராக உண்மையை வெளிபடுத்தும் திரை படங்களை சென்சார் என்ற ஆயுதம் கொண்டு ஒடுக்குகின்றனர் . விரசமான , ரத்த ஆறு ஓடும் மசாலா படங்களுக்கு அனுமதி என்னே மக்களாட்சி . கொசுவ அழிக்கிரோமுன்னு சொல்லி மக்களை அழிக்கற மாதிரி தான். இன்னொரு உதாரணம் பிரபாகரன அழிக்கிரோமுன்னு சொல்லியே தமிழினத்தையே அழிக்க துணிந்த அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்க முடியாது இனி கண்காணிக்க படுவர் . என்ன கொடுமை !

உடனே தீவிரவாதி ஆதரவு என்று சொல்லி முடக்க பார்ப்பது . மக்களின் மனசாட்சியை இனி எங்கே பார்ப்பது . தான் நினைக்கும் அல்லது அவன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க இணைய தளம் இருக்கிறது என்ற நம்பிக்கை பொய்த்து போகின்றது . இனி வாய் மூடி கைகட்டி அரசு சொல்வதையே வேத வாக்காக எடுத்து கொள்ள வேண்டும் அதை தானே விரும்புகின்றது இந்த சட்ட திருத்தம் .

இன்றைய நிலையில் மிக விரைவில் காட்சி ஊடகங்களை தவிர்த்து மிக விரைவாக முடிந்த வரை உண்மையை வெளி வருவதற்கு இணைய தளங்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர் . படித்தவர்கள் மத்தியில் அரசியல் பரவ அல்லது ஈடுபாடு காட்டுவதற்கு இணைய தளங்களே முக்கிய காரணங்கள் இதை எல்லாம் கணக்கில் கொண்டுதான் கருத்து சுதந்திரம் முடக்கம் நடத்த பார்கின்றனர் . ஆபாச வசனம் என்ற நோக்கில் ஒரு சிலரே ஈடு படுகின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் . இது நீங்கள் என்ன சட்டம் போட்டாலும் நடந்து கொண்டுதான் இருக்கும் .கொஞ்சம் குறைய வாய்ப்புண்டு தவிர முழுக்க தடுக்க முடியாது .

ஆனால் மிக மிக அதிகமானவர்களின் கருத்து சுதந்திரம் பயம் காரணமாக (அனைவரும் வேலை செய்து பிழைப்பை ஓட்டுகின்றவர்கள் ) எதற்கு நமக்கு வம்பு எதையாவது எழுதி அது நம்மை பாதித்தால் என்ற மன போக்கு ஏற்படும் . யாரும் தனிமனித விமர்சனங்கள் அதிகளவில் பதிவிடுவதில்லை , பொது மேடைகளை விட இங்கே குறைவு தான் என்பதை ஆணித்தரமாக சொல்ல முடியும் . இந்த போக்கு அரசியல்வாதிகளிடமே அதிகம் காணப்படுகின்றது அதற்கு கட்டுபாடு போடுங்கள் , அல்லது எப்படி பொது மேடையில் பேசவேண்டும் என்ற நாகரீகத்தை அரசியவாதிகளுக்கும் ,மேடை பேச்சாளர்களுக்கும் சொல்லி கொடுங்கள் அதை விடுத்தது .

காமெடி என்ற பெயரில் சினிமாவில் நடத்தும் கொடுமைகளை , சின்ன திரையில் மெகா தொடர்கள் என்ற போர்வையில் பெண்களை சிந்தரிக்கும் விதங்களையும் , தவறான உறவு முறைகளை அரகேற்றி கொண்டிருக்கும் அவர்களுக்கு வேண்டும் தணிக்கை , கண்காணிப்பு , ஒருதலை பட்சமாக செய்து வெளியிடும் செய்தி ஊடகங்களை கண்காணியுங்கள் , விளம்பரம் என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்கள் ஆன்லைன் வியாபாரம், வன்கொடுமை ,ஆபாச காட்சிகள், தவறான விளம்பர யுக்தி , தவறான பொருள்கள் மற்றும் நம்பக தன்மை அற்ற பெருட்களை கூவி கூவி விளம்பரம் என்ற பெயரில் நடக்கும் அட்டூழியத்தை கண்காணியுங்கள் , தடை செய்யுங்கள் , சோதிடம் மருத்துவம் , கடவுள் என்ற பெயரில் நம்பிக்கையை தகர்த்து மக்களை பயமுறுத்தி சம்பாதிக்கும் கொடியவர்களை தடை செய்யுங்கள் . நாட்டிற்கு ஊரு விளைவிக்கும் தேச நலளில் அக்கறை இல்லாமல் பாதுகாப்பு துறையில் அந்நியனையும் தனியாரையும் அனுமதிக்கும் போக்கை நிறுத்துங்கள் , அல்லது தொடர்ச்சியாக கண்காணியுங்கள் . தொலை தொடர்பு துறையை அன்னியதுக்கு விலை போசுவது அடிய்யோடு நிறுத்துங்கள் குறித்த பட்சம் இந்தியனுக்காவது டெண்டர் விடுங்கள் நேர்மையாக .

இதை எல்லாம் கோட்டை விட்டு விட்டு இணைய தளங்களில் பதியும் கருத்துக்களுக்கு தடை போட்டீர்கள் ( கண்கநிக்கின்றோம் என்ற பெயரில் மிரட்டினீர்கள்) என்று சொன்னால் , நாங்கள் சொல்லுவது தான் செய்தி என்று கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் ஊடகங்கள் போல் ஆகிவிடும் நாட்டில் கருத்து சுதந்திராம் . இப்பொழுதே கிராமங்களிலும் , இணைய இணைப்பு இல்லாத வர்களிடமும் பேசிப் பாருங்கள் ஊடகங்களின் தாக்கம் தான் தெரியும் உண்மைகளை அறிய முடிவதில்லை . ஊழலுக்கு எதிரா எதையும் சொல்ல முடியாது , அவர்கள் அடிக்கும் கொள்ளையை யாரும் தட்டி கேக்க முடியாது .

உதாரனத்திற்க்கு விக்கி லீக்ஸ் என்ற இணைய தளம் ஒரு முன்னுதாரணம் , பல இணைய தளங்களில் கருத்துக்களை வெளியிட முடிகின்றது புரட்சி வெடிக்கின்றது என்ற பயம் தான் ஆட்சி ஆளர்களிடம் இன்று மேலோங்கி விட்டது அதன் வெளிபாடே இந்த சட்ட திருத்தம் ............

தீவிரவாத இணைய தளங்களை மட்டும் அல்லது அனைத்து இணைய தளங்களையும் கூட கண்காணியுங்கள் அது தவறில்லை . ஆனால் கருத்திடுவதை கண்கானிக்கின்றோம், நடவடிக்கை எடுக்கின்றோம் என்ற ரீதில் ஆரபித்தீர்கள் என்றால் நாட்டில் கருத்து சுதந்திரம் பறிபோகும் ... என்ற ஆதங்கத்தின் வெளிபாடே இந்த பதிவு .
டிஸ்கி :
குறுகிய காலகட்டத்தில் மக்கள் அரசியல் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும்கூட பரபரப்பாக இணையத்தளம் மூலமாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.உதாரணம் அன்னா ஹசரேக்குஆதரவும் எழுச்சியும்.இதை தடுக்க அரசு முயற்சிக்கிறது என்று கூட சொல்ல தோன்றுகிறது .

தலையங்கம்:நமக்கும் தேவை அக்கறை - தின மணி ( நன்றி )

இணையதளப் பயன்பாடு தொடர்பாக அரசு விதித்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது எதிர்பார்த்ததே. ஆனால், இந்த விஷயத்தில் தவறு முழுக்க முழுக்க அரசின் தரப்பில் மட்டும் அல்ல என்பது தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர். சந்திரசேகரின் விளக்கத்திலிருந்து தெரிகிறது. மக்களாகிய நாம் உரிய காலத்தில் அரசின் உத்தேச யோசனைகளைப் படித்துப்பார்த்து கருத்துத் தெரிவிக்கத் தவறிவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்திரிகை வாசகர்கள் எண்ணிக்கைக்கு நிகராக உயர்ந்து வருவதாக சமீபத்திய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளைக் கண்காணிப்பதும், பொது நலனுக்கும் சில வேளைகளில் தனி நபர்களுக்கும் எதிராக ஒருதலைப்பட்சமாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளைப் படித்துப் பார்த்து உடனுக்குடன் அகற்ற வேண்டியதும் சமுதாயக் கடமையாகும். ஆபாசமான, அருவருக்கத்தக்க வர்ணனைகள், உரையாடல்கள், கருத்துகள் போன்றவற்றையும் அழிக்க வேண்டியது அவசியம். எனவே இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டும் இந்த விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்துவிட்டதாக அரசைக் குற்றம்சாட்டுவது ஒருதலைப்பட்சமானது என்பதில் சந்தேகமே இல்லை. அதே வேளையில் அரசின் சில கட்டுப்பாடுகள் தேவைக்கு அதிகமாகவோ, அதன் உள்நோக்கத்தைச் சந்தேகிப்பதாகவோ இருப்பதை மறுக்க முடியாது. ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு எப்படிக் கையாள்கிறது என்று பார்த்து எதிர்காலத்தில் அவற்றைத் திருத்துவதும் மேம்படுத்துவதும் சாத்தியமே. எனவே, ஒரேயடியாக இதை எதிர்ப்பதும் கண்டிப்பதும் இப்போதைக்கு அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. அதற்கும் முன்னதாக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ள சில கருத்துகள் அனைவரும் கவனிக்கத்தக்கவை. இணையதளப் பயன்பாட்டாளர்களைக் கண்காணிக்கவும், சட்டவிரோதமான செயல்களுக்கு அதைப் பயன்படுத்துகிறவர்களை அடையாளம் காணவும், அவர்கள் மீது நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் அவசியமானவை என்பதால் இதைச் சட்டத்தின் மூலமாகவே அமல்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அரசின் ஒப்புதலுடனோ அல்லது நீதிமன்றங்களிடம் தெரிவித்து அவற்றின் ஆணைப்படியோதான் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிடுகிறார். இணையதளத்தைத் தவறான செயல்களுக்கு அல்லது தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவோர் யார், அவர்களுடைய பாஸ்வேர்டு, பாலினம், கல்வி, வயது, தொழில், முகவரி போன்ற தகவல்களைத் திரட்டவும் அவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவும், அவர்களுடைய செய்கை தேச விரோதமாகவோ சமூகத்தில் பதற்றத்தையும் பகைமையையும் ஏற்படுத்தும் விதத்திலோ இருந்தால் உரிய போலீஸ் அமைப்புகள் மூலம் விசாரிக்கவும் இந்த விதிகளும் வழிகாட்டு நெறிகளும் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். புதிய விதிகளை அமல் செய்வதற்கு முன்னால் நாடு முழுவதும் உள்ள மக்கள் அறியவும், அதைப்பற்றி விவாதிக்கவும், உரிய திருத்தங்களைக் கூறவும், ஆட்சேபங்கள் இருந்தால் உரிய வகையில் தெரிவிக்கவும் வரைவு வாசகங்களை வெளியிட்டிருந்ததாகவும், 2 மாதங்கள் கால அவகாசம் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கிறார் சந்திரசேகர். இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் நம் நாட்டில் படித்தவர்களும் அமைப்பு ரீதியாகத் திரண்டவர்களும் பொது விஷயத்தில் அக்கறையோடு செயல்படுவது இல்லை என்பதில் உண்மை இருக்கிறது என்பதுதான். எல்லோருமே சுயநலவாதிகளாக இல்லை என்றாலும் பொதுநலன் பேசுகிறவர்களும் செயல்பாடு என்று வரும்போது சோம்பல் மிகுந்தவர்களாகவோ, அதிகாரிகளிடம் பேச அச்சமோ, கூச்சமோ உள்ளவர்களாகவோ இருந்து விடுகிறார்கள். இப்படி ""திண்ணைப் பேச்சு வீரர்களாகவே'' பெரும்பாலானவர்கள் இருப்பதால் மக்களைப் பாதிக்கும் பல சட்டங்கள் போதுமான விவாதம் இல்லாமல் - மாற்றுக்கருத்துகள் கூறப்படாமல் - அரசின் நோக்கத்துக்கேற்பவே தயாராகின்றன. சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள ஆய்வுக்குழுக்கள் அல்லது ஆலோசனைக் குழுக்கள் இந்தச் சட்டங்களை உரிய வகையில் ஆய்வு செய்கின்றனவா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் நடைபெறும் விவாதங்களைக் கவனிக்கும்போது முக்கியமான அம்சங்கள் குறித்து ஆளும் தரப்பிலும் எதிர் தரப்பிலும் ஆழ்ந்த கவனத்துடன் விவாதிப்பது இல்லை என்பதை நேரிலேயே பார்க்கிறோம். இன்னும் பல சந்தர்ப்பங்களில் விவாதமே இல்லாமல் ""கில்லட்டின்'' என்ற முறையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 40 அல்லது 50 மசோதாக்களை மின்னல் வேகத்தில் நிறைவேற்றுவதையும் பார்க்கிறோம். அவ்வளவு ஏன், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜயந்தி போன்ற நாள்களில் எல்லா ஊர்களிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அரசியல் கட்சி அதிலும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்பதையும், அதிகாரிகள் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் தீர்மானங்களை வாசித்து, உரிய விவாதம் இன்றி ஏற்பதையும் பெரும்பாலான ஊர்களில் பார்க்கிறோம். இதெல்லாம் அரசியல்வாதிகளின் வேலை என்று விட்டுவிடாமல் நமக்குள் ஓர் அமைப்பை உருவாக்கி விவாதித்து, அரசுக்கு ஆலோசனை கூறி, கண்காணிப்பதையும் ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். தவறான சட்டங்கள் அமலுக்கு வராமல் தடுப்பதில் நமக்கல்லவோ அக்கறை தேவை? அதற்குப் பெயர்தானே மக்களாட்சி?

கருத்துகள்