பல கோடி தமிழர்களில் நானும் ஒருவன் .....

ஐயா நீதிபதி ரவிராஜ் பாண்டியன் அவர்களே !
ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் , நீங்களும் பிள்ளை பெற்றிருப்பீர்கள் பள்ளிக்கு அனுப்பி இருப்பீர்கள் , தனியார் பள்ளிகள் செய்யும் கொள்ளை கட்டணம் கட்டி இருப்பீர்கள் . நான் அதை பற்றி எல்லாம் சொல்ல வரலை .

முன்பு கல்வியின் முக்கியத்தோம் தெரிந்து பணக்காரரங்க ( கொடை உள்ளம் படைத்தவர்கள் சேர்ந்து அன்ன தானம் மற்ற தானத்தை போல் கல்வி தானம் என்று குழுவாக ஆரபித்தார்கள் . பின்பு அது படி படியாக தனியார் வசம் வந்து இன்று கல்வியிலும் ஏற்ற தாழ்வு , மாணவன் கற்கும் திறனில் மாறுபட்டால் ஏற்று கொள்ளலாம் . பயிற்று விக்கும் கல்வி முறைகள் மாறு படுவதுடன் . பணம் படைந்தவன் நல்ல கல்வி படிக்கலாம் . இல்லாவிட்டால் என்றும் அடிமைபட்டே வாழலாம் என்று வளரும் பருவத்திலேயே பிள்ளைகள் மனதில் நஞ்சு விதைக்கப்படுகின்றது .

இது நாளடைவில் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நல்ல பள்ளி , பிறகு அதுவே ஒரு கௌரவமாக பார்க்கப்பட்டது குறிப்பிட்ட பள்ளியில் படித்தால் அவர்கள் நாகரீகமானவர்கள் என்ற தவறான எண்ணத்தை கொள்ளை அடிக்கும் எண்ணம் கொண்ட பள்ளி முதலாளிகளும் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இன்றுவரை கொள்ளை கொள்ளையாய் அடித்து தனது செல்வங்களை ( சொத்துக்களை )பெருக்கிக்கொண்டு செல்வா சீமான்களாக மாறி உள்ளனர் .


இது ஒரு எல்லை இல்லாமல் போன போதும் தட்டி கேட்க ஆளில்லாமல் நூல் அறுந்த பட்டம் போல் வானில் பறந்து கொண்டிருக்கின்றது . மக்களும் தனக்கு ஏற்ற கொள்ளைக் கூட்டத்தை தேர்ந்தெடுத்து அடுத்த தலைமுறையை இப்போதே கொள்ள அடிக்கும் கூட்டங்களாக மாற்றிக்கொண்டிருகின்றோம் . இன்னும் ஒரு படி மேலே சென்று இன்று பள்ளி கூடங்கள் சிறைச்சாலைகளை போல ( சீர்திருத்த பள்ளிகளை போல) மாணவர்களை நடத்துகின்றனர் . பெற்றவர்களிடம் பலமுனை தாக்குதல் நடத்தி தனது கல்வி கட்டம் என்ற பெயரில் வசூல்வேட்டை நடத்திகொண்டிருகின்றனர் .

இவர்களை யாருமே கேட்க ஆளில்லையே என்று நினைத்த போது சென்ற ஆண்டு தனது சுயநலத்திற்காக மக்கள் நலம் என்ற பெயரில் கல்வி கட்டண முறைபடுத்தும் திட்டத்தை கையில் எடுத்தது அன்றைய தி.மு.க அரசு . மக்கள் எல்லாம் சந்தோஷ பட்டனர் நமது துயர் தீரப்போகிறது என்று நினைத்த நேரத்தில் அரசு திட்டத்தில் தீவிரம் காட்டாமல் , பள்ளிகளின் பக்கம் திரும்பியது . அந்த நேரத்தில் கொதித்த ஒரு சில மக்கள் நீதி மன்றம் சென்றனர் . நீதி மன்றமும் மக்களுக்கு சாதகமாகவே தீர்பளித்தது . ஆனால் அதை நடை முறை படுத்த வேண்டிய அரசு வேடிக்கை பார்த்தது . பதிலாக போராடும் மக்களை களைத்தும் மிரட்டியும் மேலும் போராட்டம் தீவிரம் அடையாமல் காவல் துறையும் பார்த்துகொண்டது அரசின் மறைமுக ஆணையை பெற்று .

பள்ளி நிர்வாகத்தை பற்றி சொல்லவே வேண்டாம் ஒரு சில பள்ளிகளை தவிர மற்ற அனைத்து தனியார் பள்ளிகளுமே நீதிபதி கோவிந்த ராஜன் கமுட்டி நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வில்லை . பள்ளிகள் மேல் முறையிடு செய்யலாம் என்று அரசு அறிவித்த உடன் 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்தனர் . இதில் மனவருத்தம் அடைந்த நீதிபதி தனது உடல்நிலையை காரணம் காட்டி ராஜினமா செய்தார் . பின்பு தான் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.


ஏப்ரல் 30 குள் மாற்றி அமைத்த புதிய கட்டணத்தை அறிவிக்க வேண்டும் என்று நீதி துறை சொல்லியது . ஆனால் இதுவரை அறிவிக்கவில்லை . இன்னும் ஒருசில நாட்களில் பள்ளிகள் துவங்க இருக்கும் நிலையில் மானவ்வர்களும் பெற்றவர்களும் முழி பிதிங்கி நிற்கின்றனர் என்ன செய்வது என்று . பள்ளி நிர்வாகங்களோ பழைய படி அதே திமிரோடு ( ஆணவத்தோடு ) பெற்றவர்களிடம் நடந்து கொண்டு வருகின்றனர் அவர்கள் சொல்லும் கட்டணத்தை காட்டும் படி வற்புறுத்தி வருகின்றனர் .

ஏன் இந்த குளறு படி எதற்காக மக்களை தண்டிக்கிண்றீர்கள் . முடிந்தால் சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்துங்கள் , இல்லை என்றால் மக்கள் எப்பாடு பட்டாலும் பராவா இல்லை எங்களுக்கு முதலிகள் தான் முக்கியம் என்றால் திட்டம் ரத்து செய்யப்பட்டது என்ற ஒற்றை வரி அறிவிப்பை அறிவித்து விடுங்கள் தனியார் பள்ளிகளின் கொள்ளை வெகு விமர்சியாக நடக்கட்டும் .......

மக்கள் எப்படி போன உங்களுகென்ன . புதியதாக பொருபேற்றிருக்கும் அ.தி.மு.க. அரசு . பாட புத்தகங்களில் வேகம் கட்டியது போல் , பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பலாம் . கட்டண விவரம் அறிவித்த பின்பு தான் கல்வி கட்டம் வசூலிக்க வேண்டும் என்றும் . நீதிபதி ரவிராஜ் பாண்டியன் அவர்களையும் விரைந்து வெளியிட செய்தால் மக்கள் நிம்மதி பெருமூச்சி விடுவார்கள் .

பிறகு அறிவித்த கட்டணத்தை தான் பள்ளிகள் வசூளிக்கின்றனர்ரா என்று ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் . செய்யுமா முதல்வர் ஜெயலலிதா அரசு ......... செய்வார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் பல கோடி தமிழர்களில் நானும் ஒருவன் .....


தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளிடம் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே கல்விக்கட்டணம் நிர்ணயித்து அரசுக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணம் போதாது என்று சொல்லி சுமார் 6,400 பள்ளிகள் கோவிந்தராஜன் கமிட்டியிடம் மேல்முறையீடு செய்தன. இதைத்தொடர்ந்து, ஐகோர்ட்டு உத்தரவின்படி, மேல்முறையீடு செய்த பள்ளிகளில் ஆய்வு செய்து புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். ரவிராஜபாண்டியன் கமிட்டி கடந்த 3 மாதங்களாக 6,400 பள்ளிகளின் நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தியது.
இந்த சூழ்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பழைய கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுமா? அல்லது புதிய கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுமா? என்பது தெரியாமல் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகிகளும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், கல்விக்கட்டணம் குறித்து நீதிபதி ரவிராஜபாண்டியனிடம் கேட்டதற்கு, பள்ளி நிர்வாகிகளுடன் நடத்தப்பட்டு வந்த விசாரணை கடந்த 5-ந் தேதி முடிவடைந்தது.
புதிய கல்விக்கட்டணம் எவ்வளவு என்பது பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பாக எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

கருத்துகள்