திருமண உதவி திட்டம் யாருக்கொல்லம் கிடைக்கும்

|
திருமண உதவி திட்டம் யாருக்கொல்லம் கிடைக்கும் :

இரண்டு குழந்தைகள்
என்ற நிபந்தனையுடன் அரசு பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு அளித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நாளிலே ரேஷனில் 20 கிலோ அரிசி இலவசம் உள்பட 7 திட்டங்களை நிறைவேற்றும் வகையில் அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதில், ரேஷனில் 20 கிலோ இலவச அரிசி மற்றும் அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு சலுகை 6 மாதமாக உயர்வு ஆகிய திட்டங்களுக்கான அரசாணைகள் நேற்று வெளியிடப்பட்டன.

அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாதம் காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து 2 குழந்தைகள் என்ற நிபந்தனையுடன் அரசு பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவதாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன் நேற்று வெளியிட்ட அரசாணையில் தெரிவித்துள்ளார்.


படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இந்த திட்டத்தின்படி படித்த ஏழைப் பெண்களைப் பொருத்தவரை, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5-ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும்.

மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். இவர்களின் தந்தைக்கு ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்தைத் தாண்டக்கூடாது. இந்த தகுதியுடைய ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம் நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.


இதுபோல இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரின் ஆண்டு வருமானமும் ரூ.24 ஆயிரத்திற்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு திருமண உதவித் திட்டங்களின் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள். அதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.290 கோடி கூடுதலாக செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.















கருத்துகள்