இத இத தான் எதிர் பார்த்தோம் ........

இத இத தான் எதிர் பார்த்தோம் ..................
ரௌடி யாராக இருந்தாலும் , அடங்குங்க இல்லாவிட்டால் ,
அடக்கப்படுவீர்கள் அல்லது அடைக்கப்படுவீர்கள் என்பது தான் இதன் அர்த்தம் ........
ஆரம்பமே அமர்களமா தான் இருக்கு .

ரௌடிகளுக்கு நேற்றிலிருந்து வைத்தால போறதா கேள்வி .........
நாய் சேகர் மாதிரியான ரௌடிகள் எல்லாம் குகைக்குள்ள போய் பதுங்குவதை கேள்வி படுறோம் ....
ஆள் கடத்துறவங்களை பற்றி முதல்ல ஒரு சர்வே பண்ணி டாப் லிஸ்ட்ல இருக்கறவன முதல்ல போட்டா , அடுத்தவனுங்க தன்னால அடங்குவானுங்க ...

ஜெயின் அறுக்குறதுல , மொபைல் திருடறது சொல்லவே கூச்சமா இருக்கு, நாம வெட்கப்பட்டே ஆகனும் , காரணம் கல்லூரி பசங்க கொஞ்ச பேர் ஜாலியா வாழ்க்கைய அனுபவிக்க இந்த வேலைகல செய்யறதா கேள்வி பட்டோம் .......
காவலர்கள் சரியாக நடந்து கொண்டால் இந்த சின்ன பயலுங்க எல்லாம் ஏன் தைரியமா இப்படி இறங்குறானுங்க ..............

உடனே மனித உரிமை மீறல் அப்படின்னு யாராவது ஆரபிச்சீங்கன்னா !
அவங்க அவங்க வீட்டுல அல்லது அவங்களுக்கு நடந்தா என்ன பேசுவாங்க அப்படின்னு தான் கேட்க சொல்லுது என் மனசு .............
நல்லவன எதுக்கையா என்கவுண்டர்ல போட போறாங்க .........
இருந்தாலும் கொஞ்சம் கவனமா தான் காவல் துறை செயல் படனும் .
அதை விட முக்கியம் காவல் துறைக்குள்லாற இருக்குற கருப்பாடுகளை முதல்ல பல்ல புடுங்கி வைக்கனும் .

மக்கள் நிம்மதியா வெளியில போக முடியல ..............
அறிவிப்பே மனதிற்கு கொஞ்சம் நம்பிக்கை பிறக்கின்றது ....
நல்லது நடக்க என்றும் வாழ்த்தி துணை இருப்போம் .....


சென்னை: சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.கே.திரிபாதி 3 ஆண்டுகள் தென் சென்னை இணை போலீஸ் கமிஷனராக பணியாற்றியபோது தான் பிரபல தாதா அயோத்திகுப்பம் வீரமணி உள்பட 12 ரெளடிகள் `என்கெளண்டரில்' போலீசாரால் போட்டுத் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இவரே கமிஷ்னராகியுள்ளதால் சென்னை ரெளடிக் கும்பல்களிடையே பெரும் அச்சம் நிலவுவதாகத் தெரிகிறது.

அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமாரின் பக்கபலத்தோடு ரெளடிகளை வேட்டையாடினார் திரிபாதி. இதனால் பல ரெளடிகள் சென்னை நகரை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்ததும் நடந்தது.

இந் நிலையில் சென்னை போலீஸ் கமிஷ்னராக பதவியேற்ற திரிபாதி அளித்த பேட்டி:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து அரசு கடமையாற்றும் என்று முதல்வர் கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, சென்னை நகரில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து போலீசார் பணியாற்றுவார்கள்.

ரெளடிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அனைத்து குற்றங்களையும் குறைப்பதற்கு உரிய வழிவகை காணப்படும். செயின் பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி, திருட்டு போன்ற எல்லாவித குற்றங்களையும் தடுப்பதற்கும், நடந்தவற்றை கண்டுபிடிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 10 ரூபாய் கூட மக்களுக்கு இழப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் சென்னை போலீசாரின் செயல்பாடு இருக்கும்.

மக்கள் இரவு நிம்மதியாக தூங்கிவிட்டு, காலையில் நல்லபடியாக எழுந்து சூரிய உதயத்தை பார்க்கவேண்டும். அதற்கேற்ற வகையில் போலீசாரின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அது நிறைவேற்றப்படும். குழந்தைகள் நல்லபடியாக பள்ளிக்கு போய்விட்டு சந்தோஷமாக பயமில்லாமல் வீடு திரும்பிவர வேண்டும். பெற்றோர்களுக்கு, நமது குழந்தைக்கு என்ன ஆனதோ? என்ற பயம் இருக்கக்கூடாது.
அதுபோல வீடுகளில் பெண்களும், முதியோர்களும் தனியாக பயமில்லாமல் இருக்கும் வகையில் ஒரு நல்ல சூழ்நிலை உருவாக வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னை போலீசார் இதை ஒரு சவாலாக ஏற்று வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

ரவுடிகள் மீது `என்கெளண்டர்' நடவடிக்கைகள் மீண்டும் எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, `என்கெளண்டர்' என்பது போலீசாரின் கொள்கையல்ல. குற்றவாளிகளை பிடிக்கும்போது மோதல் ஏற்பட்டால், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள போலீசார் பயன்படுத்தும் கடைசி ஆயுதம்தான் அது என்றார்.

புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாரங்கியைப் போல இவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவரே என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

  1. என்னமோ நல்லது நடந்தா சரிதான்

    பதிலளிநீக்கு
  2. என்கவுண்டர் என்ற வார்த்தைக்கு தப்பான ஒரு அர்த்தத்தை கற்பித்துவிட்டார்கள் நம்மாட்கள். ரொம்ப அடாவடி பண்றவனுங்களை கோர்ட்டுக்கு கொண்டு செல்லாமல் போட்டுத் தள்ளுவதற்குப் பெயர் என்கவுண்டர்!! அதற்க்கு கமிஷனர் கொடுத்திருக்கும் விளக்கம் சரியானதே!

    பதிலளிநீக்கு
  3. இரவு வானம் @
    நன்றி நண்பரே , சட்ட ஒழுங்குல இருண்டு போய் இருந்த தமிழகம் மீண்டு வரணும் வரும் என்று நம்புவோம்

    பதிலளிநீக்கு
  4. Jayadev Das @
    வருகைக்கு நன்றி , உங்கள் கருத்து உண்மைதான்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா18 மே, 2011 அன்று AM 4:26

    Aattam pottaa DUMEEL.........>

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக